இந்தியா நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில், இந்திய-பாகிஸ்தான் பற்றியும், காஷ்மீரில் 370 ஆவது பிரிவு ரத்து, இந்து-முஸ்லீம், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, ஷிகீன்பாத் போன்ற விவகாரங்களில் பல ஊடகங்கள் இன்னும் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவுக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிக்க நாம் தவறிவிட்டோம். இதோ அவற்றில் சில…
- இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 557 பில்லியன் அமெரிக்க டாலர்.
- வோடோபோனுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு.
- ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.23,000 கோடி இழப்பு
- பிஎஸ்என்எல் ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு.
- எம்டிஎம்எல் ரூ.755 கோடி.
- பிபிசிஎல் ரூ.750 கோடி இழப்பு
- செயில் நிறுவனத்துக்கு ரூ.280 கோடி இழப்பு.
- ஏர் இண்டியா ரூ.4,600 கோடி இழப்பு.
- ஸ்பைஸ் ஜெட் ரூ.460 கோடி இழப்பு.
- இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1,062 கோடி இழப்பு.
- லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த பெல் நிறுவனத்துக்கு ரூ.219 கோடி இழப்பு.
- இந்தியத் தபால் துறைக்கு ரூ.15,000 கோடி இழப்பு.
- ஜிஎம்ஆர் இன்ஃபரா நிறுவனத்துக்கு ரூ.561 கோடி இழப்பு.
- யெஸ் பேங்க் ரூ.600 கோடி இழப்பு.
- யூனியன் பேங்க் ரூ.1,190 கோடி இழப்பு.
- பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 4,750 கோடி இழப்பு.
- ஆக்ஸிங் பேங்க் ரூ.112 கோடி இழப்பு.
- ஜேபி குரூப் மூடப்பட்டுவிட்டது.
- வீடியோகான் திவால்.
- ஏர்செல் மற்றும் டொக்கோமோ காணாமல் போய்விட்டது.
- ஜெட் ஏர்வேஸ் மூடப்பட்டுவிட்டது.
- அதானிக்கு 5 விமான நிலையங்கள் விற்பனை.
- ரயில்வே விற்பனைக்குத் தயாராக உள்ளது.
- டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட புராதனக் கட்டிடங்கள் வாடைக்கு விடப்பட்டுள்ளன.
- பல தேசிய வங்கிகள் இணைப்பு. பல வங்கிகள் மூடல். ஏடிஎம் மையங்கள் குறைப்பு. பெரும்பாலான வங்கிகளுக்குப் பேரிழப்பு. பெரும் தொகையைக் கடனாகப் பெற்ற 36 பேர் நாட்டிலிருந்து தப்பியோட்டம்.
- சில கார்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.2.4 லட்சம் கோடி வரை கடன் தள்ளுபடி.
- பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 54 ஆயிரம் பேரை வெளியேற்ற நடவடிக்கை.
- மோட்டார் துறையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு.
- பெருமளவில் கார் உற்பத்தி செய்யும் மாருதி கார் நிறுவனம், உற்பத்தியைக் குறைத்தது.
- ரூ. 55 ஆயிரம் கோடி மதிப்புள்ள கார்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- 30 முக்கிய நகரங்களில் 12 லட்சத்து 76 ஆயிரம் வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கட்டப்பட்ட வீடுகளை வாங்குவதற்கு ஆள் இல்லை. 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால் கட்டுமானப் பணிகள் நிறுத்தம்.
- கடன் பிரச்சினையால் காபி டே நிறுவனர் விஜி. சித்தார்த்தா தற்கொலை
- ஹெஏஎல் நிறுவனத்தால் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை.
- இந்தியாவிலேயே அதிக லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த அரசு பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு இழப்பு.
- பார்லே ஜி போன்ற பிஸ்கெட் நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன.
- பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாடு முழுவதும் 50 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
- சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் அதிக அளவிலான வேலை இழப்பு.
- அதிகபட்ச பொருளாதார தேக்கநிலை.
- அதிக முதலீடு செய்தவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறினர்.
இப்படி ஏராளமான பிரச்சினைகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. இவற்றை ஊடகங்கள் ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டார்கள். இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் என்ற விவாதமும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் என்ற விவாதமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பாரத மணிக்கொடியின் நிழலில் யார் அமைதியாக வாழ்கிறார்கள்?
2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளமுள்ள நாடாக மாற்றப்போவதாக பிரதமர் மோடி பலமுறை கூறியிருக்கிறார். ஆனால், மோடி ஆட்சியில் வளம் கொழித்தது யார் ?
கடந்த மார்ச் 2017 முதல் 2020 வரை அதானியின் சொத்து மதிப்பு 5.37 பில்லியன் டாலரில் இருந்து 34 பில்லியன் டாலராக 6 மடங்கு பெருகியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் மூன்றரை மடங்கு அதானி சொத்து வளர்ந்திருக்கிறது. அதேபோல, அம்பானியின் சொத்து 26.6 பில்லியன் டாலரில் இருந்து 74.4 பில்லியன் டாலராக மூன்று மடங்கு கூடியிருக்கிறது. இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில் 39 சதவிகிதம் 1 சதவிகித இந்தியர்களிடம் குவிந்திருக்கிறது. இது தான் மோடியின் சாதனை.
மோடி ஆட்சியில் பயனடைந்தவர்கள் யார் ? குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக கடந்த 10 நாட்களாக விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலைநகர் தில்லியில் போராடி வருகிறார்கள். உழைக்கும் விவசாயிகளுக்கு கருணை காட்டாத பிரதமர் மோடி, அதானிக்கும், அம்பானிக்கும் கருணை காட்டுவதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையா ?
இந்தியாவை உருக்குலைத்த மோடிக்கு நாட்டு மக்கள் எப்போது பாடம் புகட்டப் போகிறார்கள் ?