ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிப் புத்தகத்திலிருந்து நேரு குறித்த பாடம் நீக்கப்பட்டுள்ளது. நவீன இந்தியாவின் சிற்பியான பண்டித ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை முற்றிலும் அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேருவை சமன்பாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு, நீங்கள் இந்தியாவைக் குறைவான மதிப்பீட்டுக்கு உட்படுத்துகிறீர்கள்.
ஆனால், நேரு இல்லாத இந்தியா எப்படி இருக்கும் ?
இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்காக போராடியவர்களைத் தனிமைப்படுத்துவது மிகக் கடினம். ஆனால், முக்கிய பிரச்சினைகளில் பெரும்பங்காற்றிய தலைவர்கள் உள்ளனர். அவர்களின் முதன்மையானவர் நேரு.
பின்வரும் 8 அம்சங்களைத் தவிர்த்து நேருவை இந்தியா தவிர்க்க முடியுமா ? :
- கடந்த 1927 ஆம் ஆண்டு பெல்ஜியம் தலைநகர் புரூஷெலில் நடந்த ஒடுக்கப்பட்ட தேசியங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு, சுதந்திர இயக்கத்துக்குச் சர்வதேச தோற்றத்தை ஏற்படுத்தினார் நேரு. அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கு ஒரு நவீன வேட்கையை ஏற்படுத்தியது.
- கடந்த 1928 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஆதிக்க தகுதி பெற மகாத்மா காந்தி முன்மொழிந்தார். ஆனால், முழு சுதந்திரம் என்ற கோரிக்கை நேரு மட்டுமே முன்வைத்தார். இதனையடுத்து, அரசியல் சாசன சபை தேர்வு செய்யும் இந்திய அரசின் 1935 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை நேரு எதிர்த்தார். இதனை மனதில் வைத்தே, இந்தியாவை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என பிரிட்டிஷ் விரும்பியபோதிலும், கடந்த 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி இந்தியாவைச் சுதந்திர இறையாண்மை குடியரசாக முன்மொழிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வர நேரு முடிவு செய்தார்.
- கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் அதிகாரத்தை மேம்படுத்தும் வகையில், பம்பாய், மெட்ராஸ், உத்தரப்பிரதேசம், வங்காளம் என மாகாணங்களை உருவாக்குவது குறித்த திட்டத்தை மவுன்ட்பேட்டன் அனுப்பினார். இதன் மூலம் அதிகாரப் பரவல் சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் பல மாநிலங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் தமது பரிந்துரையில் மவுண்ட் பேட்டன் குறிப்பிட்டிருந்தார். இந்த திட்டத்துக்கு பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியத் தலைவர்களுடன் மவுன்ட் பேட்டனின் சந்திப்பு நடைபெற்றது. நேருவிடமும் இந்த திட்டத்தை மவுன்ட்பேட்டன் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நேரு, இதனைக் காங்கிரஸ் ஏற்பதற்கான சூழல் இல்லை என்று கூறி, மவுன்ட் பேட்டனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த திட்டத்தின் ஒன்றான பலுசிஸ்தானுக்கு சுய நிர்ணய உரிமை அளிப்பதையும் அவர் எதிர்த்தார். அதன் பிறகு தமது முடிவை மவுன்ட் பேட்டன் தள்ளிப்போட்டார். இதனையடுத்து, இந்தியாவைப் பிரித்து 2 ஆதிக்கத்திடம் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை வி.பி.மேனன் உருவாக்கினார்.
- பிரதமர் என்ற நிலையில், அரசியல் சாசனத்தை உருவாக்க நேருவால் முக்கிய பங்காற்ற முடியவில்லை. மத்திய அரசியல் குழுத் தலைவர் என்ற முறையில், வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் வகையில், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கான அதிகாரத்தை மத்திய அதிகாரக் குழு நிர்ணயித்தது. அவரது அரசியல் கண்ணோட்டமும், ஜனநாயகம் மீதான அவரது உயர்ந்த நம்பிக்கை ஆவணங்களிலிருந்து பிரதிபலித்தது. மதச்சார்பின்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், சாதி, சமூகம் மற்றும் மதம் ஆகியவற்றின் சிக்கலைத் தவிர்க்கும் வகையில் அரசியலமைப்பு இருந்தது.
- ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு கையாண்ட விதத்தைப் பலரும் விமர்சித்தனர். நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே இருந்த நட்பு இந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தவில்லை. நேருவின் முயற்சியால் இந்தியாவுடன் கடந்த 1952 ஆம் ஆண்டு காஷ்மீர் இணைந்தது.
- தனியார் மற்றும் பொதுத் துறையை சமநிலைப்படுத்தும் பொருளாதார வடிவத்தை நேரு முன்னெடுத்தார். இது இந்தியத் தொழிலதிபர்களின் மும்பைத் திட்டத்தோடு ஒத்துப்போனது.
- சமுதாயத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்திய 4 முக்கிய இந்து குறியிட்டு சட்டங்களை நிறைவேற்றியதில் நேரு முக்கிய பங்காற்றினார். அரசியல் சபையால் முதலில் உருவாக்கப்பட்ட இதனை, பழமை வாதிகளும் இந்து தேசியவாதிகளும் கடுமையாக எதிர்த்தனர். இருந்தாலும், இந்த சீர்திருத்தத்துக்குப் பின்னே பி.ஆர்.அம்பேத்கர் வலுவாக நின்றார். இந்துயிசத்தை அவர் முற்றிலும் நிராகரித்தார். முதல் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே இந்த சட்டங்களை நிறைவேற்ற நேரு பெரும் உதவியாக இருந்தார். இந்து சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளை அகற்றிய இந்த நவீனமயமாக்கலை, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் கண்மூடித்தனமாக எதிர்த்தன. இந்த சட்டங்கள் கலப்புத் திருமணம்,விவாகரத்தை எளிதாக்குதல், சொத்துக்களில் மகன்களுக்கு இணையாக மகள்களுக்குப் பங்கு தர வழிவகுத்தன.
- நேருவின் தனிப்பட்ட முத்திரை, இந்தியாவின் அணு மற்றும் விண்வெளி திட்டங்களிலும் பிரதிபலித்தது. கடந்த 1939 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து திரும்பிய இந்திய அணு ஆயுத விஞ்ஞானத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹோமி பாபா, நேருவுடன் இணைந்தார். இந்திய அணு ஆயுத திட்டப் பொறுப்பை ஹோமி பாபாவிடம் ஒப்படைத்தார். பிரதமரிடம் மட்டும் அவர் பதில் அளித்தால் போதும் என அறிவிக்கப்பட்டது. அரசியல் சபையில் அணு சக்தி சட்டத்தைக் கொண்டுவந்தார். இதனையடுத்து, பிரதமர் தலைமையிலான அணு சக்தி ஆணையம் உருவாகக் காரணமானது.
நவீன இந்திய மரபணுவின் ஒரு பகுதியாகவும், முத்திரையாகவும் விளங்கும் நேருவின் வரலாற்றை மறைக்க, மறக்கடிக்க, அழிக்க முயற்சி நடக்கிறது. நேருவை சமன்பாட்டிலிருந்து வெளியேற்றி, நீங்கள் இந்தியாவைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறீர்கள்.