• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

இனவாதத்தை காலில் மிதித்து சிகரம் தொட்ட கமலா ஹாரீஸ்: அமெரிக்க தமிழரின் வெற்றிப் பயணம்

by எம்.மலைமோகன்
14/08/2020
in தேசிய அரசியல்
0
இனவாதத்தை காலில் மிதித்து சிகரம் தொட்ட கமலா ஹாரீஸ்: அமெரிக்க தமிழரின் வெற்றிப் பயணம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபரை தேர்வு செய்யும் பணியில் ஜோ பிடன் 2 மாதங்களாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த கமலா ஹாரீஸை பிடன் அறிவித்தார்.

கமலா ஹாரீஸின் தாய் சியாமளா கோபாலன் தமிழகத்தைச் சேர்ந்தவர். மார்பக புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளரான   சியாமளா கோபாலன், மேல்படிப்புக்காக கடந்த 1950 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து  ஜமைக்காவுக்கு சென்றார். அப்போது,   கமலா ஹாரீஸின் தந்தையும் பொருளாதார நிபுணருமான டொனால்டு ஹாரீஸும் சியாமளாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
 
கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாக தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் என்ற பெருமையை கமலா ஹாரீஸ் பெற்றார். தற்போது அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தெற்காசிய பாரம்பர்யத்தைக் கொண்ட முதல் பெண் என்ற பெருமையையும் கமலா ஹாரீஸ் பெற்றுள்ளார்.

17 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் கமலா ஹாரீஸ் படிப்படியாக உயர்ந்து மக்களின் பேராதரவை பெற்றவர். இந்திய வம்சாவளியினர் மட்டுமின்றி, அமெரிக்கர்களையும் கமலா ஹாரீஸ் கவர்ந்துள்ளார்.  

போலீஸ் அதிகாரி ஒருவர் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பினத்தவரின் கழுத்தில் காலை அழுத்தி பொதுமக்கள் முன்னிலையிலேயே படுகொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய இனவெறி கொண்ட அமெரிக்காவில் கறுப்பின பெண் ஒருவர் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கமலா ஹாரீஸை தேர்வு செய்ததன் மூலம் 45 லட்சம் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினரின் கலாச்சாரத்தை மனதில் வைத்து பிடன் எடுத்த முடிவு என  ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

அமெரிக்க தேசிய நீரோட்டத்தில் இந்திய வம்சாளியினர் நீண்டகாலம் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்த குறையை கமலா ஹாரீஸை நியமித்ததன் மூலம் அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் போக்கியுள்ளார்.

அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பெற்றோரின் மகளான கமலா ஹாரீஸ், அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடன் சேர்ந்து, அதிபர் ட்ரம்பை பதவியில் இருந்து அகற்றப் போராடுவது, கமலாவின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நடவடிக்கையே அதிபர் ட்ரம்பின் அடையாளமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்காவில் தன் இரு மகள்களும் கறுப்பினக் குழந்தைகள் என்ற முறையில் நல்லபடி நடத்தப்படுகிறார்களா? அல்லது மோசமாக நடத்தப்படுகிறார்களா ? என்பது பற்றி என் தாயாருக்கு நன்கு தெரியும். இருந்தாலும், எங்களை அவர் நமது இந்திய கலாச்சாரத்தின்படி, பெருமையுடனேயே வளர்த்தார். இதிலிருந்து என் தாயார் ஒருபோதும் விலகிச் சென்றதில்லை…” என சமீபத்தில் நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார் கமலா ஹாரீஸ்.

கமலா ஹாரிஸின் தாத்தா பி.வி.கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோருடன்.

அமெரிக்காவின் உயர் பதவியை நமது தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் பெறுவதில் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்பட்டுள்ளது. இனவாதத்தை முகமாக கொண்ட அமெரிக்காவில், பிறந்து, வளர்ந்து, படித்து, மக்கள் சேவையில் ஈடுபட்டு, துணை அதிபர் வேட்பாளர் என்ற இலக்கை அடைய அவர் சந்தித்த அவமானங்களும், தடைகளும் கணக்கில் அடங்காது.

அத்துனை தடைகளையும் தகர்த்துவிட்டு புன்சிரிப்போடு வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க புயலாக புறப்பட்டுவிட்ட கமலா ஹாரீஸை, இந்தியர், தமிழர் என்ற இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடியபடியே வாழ்த்துவோம்.

Tags: Indian Americankamala harristamil origin
Previous Post

இன்றைய இந்தியாவின் ஒரே எதிர்க்கட்சி ராகுல் காந்தியே!: 'தி சிட்டிஜன்' இணையதளம்

Next Post

தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளைகளை தடுத்து நிறுத்தாத தமிழக அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

எம்.மலைமோகன்

எம்.மலைமோகன்

Next Post
தமிழகத்தை சுடுகாடாக்கும் புதிய சூழலியல் சட்டம்! தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்!

தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளைகளை தடுத்து நிறுத்தாத தமிழக அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp