டெல்லியைத் தொடர்ந்து முற்றுகையிட்டு ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார்கள் விவசாயிகள். தங்களைச் சூழ்ந்துள்ள பிரச்சினையை நன்கு அறிந்துள்ளனர். பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு தெளிவாகப் பேசுகிறார்கள். ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடு, உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளோடு முன்னேற்பாட்டோடு வந்துள்ளார்கள்.
நாட்டை கார்பரேட்களிடம் விற்பதைத் தடுப்பதே அவர்களின் ஒட்டுமொத்த சபதமாக இருக்கிறது. அங்குள்ள சிலரிடம் பேசியபோது, களத்தில் அவர்கள் நின்று போராடுவதற்கான காரணமும் புரிந்தது.
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவிலிருந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் தல்ஜித் சிங் கூறும்போது, டெல்லி எல்லையிலிருந்து 15 கி.மீ தொலைவுக்குப் பாரதிய ஜனதா கட்சியினரையே காணவில்லை. இந்த விவசாயச் சட்டங்கள் எங்களை ஒன்றாக இணைத்ததற்கு நரேந்திர மோடி அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கார்பரேட் நிறுவனங்களுக்கு இந்தியாவை விற்கும்போது விவசாயிகளாகிய நாங்கள் உறங்கிக் கொண்டிருந்தோம். இப்போது நாங்கள் விழித்தெழுந்து விட்டோம். இனி நாங்கள் உங்கள் எல்லோரையும் காப்பாற்றுவோம் என்றார்.
டெல்லியைச் சுற்றி முற்றுகையிட்டுள்ள விவசாயிகளிடமிருந்து வரும் ‘பஞ்ச்’ டயலாக்குகளுக்கு பஞ்சமில்லை. புதிய பண்ணைச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரவேண்டும் அல்லது அவற்றை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று அரசாங்கத்துக்கு தெரியும் என்பதில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள்.
சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய அரசு ஏற்கனவே சம்மதித்துள்ளது. நரேந்திர மோடி நிர்வாகத்தை விவசாயிகளின் எழுச்சி யோசிக்க வைத்திருக்கிறது. பஞ்சாபிலிருந்து சீக்கியர்கள் தலைமையிலான விவசாயிகளை ஒன்றிணைப்பதற்காகக் கிளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் ஒளிவிளக்காகப் பஞ்சாப் விவசாயிகள் திகழ்கின்றனர்.
பல மாதங்கள் டெல்லியில் தங்கிப் போராடுவதற்கு ஏற்ப, ட்ராக்டர்கள், ஜீப்கள், பேருந்துகள் மற்றும் கார்களில் விவசாயிகள் வந்து குவிந்துள்ளனர். கடந்த கால இடைக்காலப் படைகளைப் போலவே, பஞ்சாப் மற்றும் பிற பகுதிகளிலிருந்து குருத்வாரக்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குர்தாஸ்பூரில் குருத்வாரா நடத்தும் செல்வாக்குள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் தரஜித் சிங். விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தானியர்களால் நடத்தப்படுவதாக பாஜகவினர் கூறுவதற்குக் கோபப்படுகிறார்.
இந்தியாவைத் துண்டாட வந்தவர்கள் என்று எங்களை அவர்கள் அழைக்கிறார்கள். எங்கள் விவசாயிகளின் பிரச்சினையைப் பற்றிப் பேசினால், காலிஸ்தான் இயக்கத்தோடு ஒப்பிட்டு இழிவுபடுத்துகிறார்கள். பத்திரிக்கையாளர்களுடன் பேசக் கூட நான் மறுத்துவிட்டேன். அவர்கள் ஆரம்பிக்கும்போதே, 1980 ஆம் ஆண்டு பிரிவினைவாதத் தலைவர் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே பற்றிய கேள்விகளுடனேயே ஆரம்பிக்கிறார்கள் என்றார்.
தற்போது பாரம்பரிய சீக்கியர்கள் மற்றும் நீண்டகால சமூக செயற்பாட்டாளர்களில் சிலர், இடதுசாரி கட்சிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் விவசாயத் தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கார்பரேட்களின் நலனுக்காக நாடு விற்கப்படுகிறது என்பதை அனைவரும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர்.
கிஸான் மஜ்தூர் சங்கர்ஸ் சமிதியின் துணைத் தலைவர் ஜபீர் சிங் பிட்டி கூறும்போது, போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளைப் பிரிக்க அரசு முயல்கிறது. விவசாயிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
2004 ஆம் ஆண்டு சுவாமிநாதன் ஆணைய அறிக்கையை மத்திய அரசு அமல்படுத்தாது ஏன் என்ற கேள்வியையே போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் எழுப்புகிறார்கள். எதற்காகப் போராடுகிறோம் என்பதில் விவசாயிகள் தெளிவாக இருக்கிறார்கள்.
தெரியாத கார்பரேட்டுகளோடு பணியாற்றுவதைவிட, தெரிந்த இடைத்தரகர்களோடு பணியாற்றுவது பரவாயில்லை என்ற மன நிலையில் விவசாயிகள் உள்ளனர். தொலைக்காட்சியில் வரும் தாடியுடன் காட்டப்படும் அற்புதமான மனிதர்களைத் தவிர, டெல்லி சோனிபட், ஹரியானா, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் இளம் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.
புதிய விவசாயச் சட்டங்களைத் தடுப்பதற்கான போராட்டத்தில், மோடி, அம்பானி, அதானி ஆகியோர் ஒரே சமயத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள்.