• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

சுவீடன் நிறுவனத்திடம் சொகுசுப் பேருந்தை லஞ்சமாக பெற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி : தணிக்கை அறிக்கையில் அம்பலம்

by Admin
15/04/2021
in தேசிய அரசியல்
0
சுவீடன் நிறுவனத்திடம் சொகுசுப் பேருந்தை லஞ்சமாக பெற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி : தணிக்கை அறிக்கையில் அம்பலம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இந்தியாவின் 7 மாநிலங்களில் சுவீடனின் சொகுசுப் பேருந்து நிறுவனமான ஸ்கேனியா வணிகம் செய்ய, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு பல கோடி மதிப்புள்ள சொகுசுப் பேருந்தை அந்த நிறுவனம் லஞ்சமாகக் கொடுத்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்த குற்றச்சாட்டை கடந்த மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறுத்த நிலையில், சொகுசுப் பேருந்தை அவர் லஞ்சமாக வாங்கியது உண்மைதான் என்பதை, ஸ்கேனியாவின் தணிக்கை அறிக்கை உறுதி செய்துள்ளது.

2014 முதல் 2016 வரை, இந்தியாவில் 7 மாநிலங்களில் பேருந்து ஒப்பந்தத்தைப் பெற, சொகுசுப் பேருந்தை அவர் லஞ்சமாகப் பெற்றதை, சுவீடனின் எஸ்விடி, ஜெர்மனியில் இசட்டிஎஃப் மற்றும இந்தியாவின் தி வயர், காரவன் மற்றும் நியூஸ் லாண்டரி போன்ற இணையதள ஊடகங்கள் ஆதாரத்துடன் செய்திகளாக வெளியிட்டன.

இந்த லஞ்ச பேரத்தில் கட்கரியின் மகன்கள் நிகில் கட்கரி மற்றும் சரங் கட்கரி ஆகியோரது ஈடுபாடு குறித்தும் ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவீடன் அரசு தொலைக்காட்சியான எஸ்விடி வெளியிட்ட செய்தியில், ”நிதின் கட்கரி தொடர்புடைய நிறுவனத்துக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய சொகுசுப் பேருந்தை சுவீடனின் ஸ்கேனியா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியாவின் 7 மாநிலங்களில் தங்களுக்குப் பேருந்து ஒப்பந்தம் பெறுவதற்காக, இந்த சொகுசுப் பேருந்து லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சொகுசுப் பேருந்து கட்கரியின் மகள் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்டது” என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்கேனியா மோட்டார்ஸின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இது குறித்துக் கூறும்போது, ” இந்த விவகாரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு உள்விசாரணை நடைபெற்றது. லஞ்சம் உள்ளிட்ட தவறான செயல்கள் நடைபெற்றுள்ளன. வணிக பங்குதாரர்கள் மற்றும் சட்டவிரோத பிரதிநிதிகள் மூலம் இந்த லஞ்சம் தரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். எனினும், இந்த விசாரணை அறிக்கை குறித்த முழு விவரத்தை அவர் வெளியிடவில்லை.

இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சுவீடனின் ஸ்கேனியா மோட்டார்ஸின் தணிக்கை அறிக்கை இடம்பெற்றுள்ளது. ஸ்கேனியா இந்தியா அதிகாரிகளுக்கும், சுவீடனின் ஸ்கேனியா மோட்டார்சுக்கும் இடையே இது குறித்து நடந்த இமெயில் பரிமாற்றங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு, நாக்பூரில் நடந்த நிதின் கட்கரியின் மகள் கெட்கியின் திருமணத்துக்காக இந்த சொகுசுப் பேருந்து வாங்கப்பட்டதாக ஸ்கேனியாவின் தலைமை செயல் அதிகாரி ஹென்ரிக் ஹென்ட்ரிக்ஸன் உள்ளிட்ட ஸ்கேனியாவின் உயரதிகாரிகள் 3 ஊடகங்களுக்கும் உறுதிப்படுத்தினர்.

ஸ்கேனியாவின் தணிக்கை அறிக்கையில், இந்த சொகுசுப் பேருந்தை நிதின் கட்கரி மற்றும் அவரது மகன்கள் சரங் மற்றும் நிகில் ஆகியோர் கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கட்காரி குடும்பத்தினர் மற்றும் அவர்களது நிறுவனத்துடனான தங்களது நட்பு குறித்தும், பேரம் குறித்தும் ஸ்கேனியா அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

ஸ்கேன் இந்தியாவும் கட்கரி குடும்பமும் :

சொகுசுப் பேருந்து தொடர்பான பேச்சுவார்த்தை, கட்கரியின் 2 மகன்கள் மற்றும் ஸ்கேனியா இந்தியாவின் விற்பனை இயக்குநர் சிவக்குமார் விஸ்வம் ஆகியோரிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இதனையடுத்து, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கட்கரி மகள் திருமணத்துக்காக நாக்பூரில் சொகுசுப் பேருந்து டெலிவரி செய்யப்பட்டது.

இடைப்பட்ட 18 மாதங்களில், பெங்களூருவில் உள்ள ஸ்கேனியா தொழிற்சாலைக்கு சரங் கட்கரி சென்று, அந்தப் பேருந்தை ஆய்வு செய்திருக்கிறார். இதற்கிடையே, அவரது சகோதரர் நிகில் கட்கரி, விஸ்வத்துடன் நேரடியாக பேரம் பேசி முடித்துள்ளார்.

இதனை உறுதி செய்யும் விதமாக, விடபிள்யூ எஃப்எஸ் (வோல்ஸ்வேகன் நிதிநிறுவனம்) நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ” அமைச்சராக இருக்கும் பெரிய அரசியல்வாதிக்கு ஸ்கேனியா இந்தியா நிறுவனம் சொகுசுப் பேருந்தைப் பரிசாகக் கொடுத்திருப்பதாகவும், இந்தியாவில் முக்கிய ஒப்பந்தங்களைப் பெறும் நோக்கிலேயே இந்த பேரம் நடைபெற்றுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேனியா மோட்டார்ஸிடமிருந்து கட்கரிக்கு அளிக்கப்பட்ட சொகுசுப் பேருந்துக்காக, ஸ்கேனியாவுக்கு ரூ.2.18 கோடி அளவுக்கு வோல்வேகன் நிதி நிறுவனம் கடன் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரத்துக்கு உதவிய 2 நிறுவனங்கள்:

கட்கரி குடும்பத்தினருக்கும் ஸ்கேனியா இந்தியா நிறுவனத்துக்கும் இடையே பேரம் நடத்துவதற்கு 2 நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்கேனியாவின் தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகாவில் உள்ள ஸ்கேனியா இந்தியாவின் உள்ளூர் விற்பனையாளர் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் இந்த சொகுசுப் பேருந்தை முறைப்படி வாங்கி, நாக்பூரைச் சேர்ந்த சுதர்ஷன் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி, இந்த சொகுசுப் பேருந்தை கட்கரியின் மகன்கள் இறுதி செய்து, உள் அலங்கார வேலைகளைச் செய்தனர். ஸ்கேனியா இந்தியா நிறுவனத்திடமிருந்து இந்த சொகுசுப் பேருந்தை வாங்க ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வோல்ஸ்வேகன் நிறுவனம் கடன் வழங்கியது. அதன்பிறகு, 2016 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி சுதர்ஷன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துடன் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் வாடகைக்கு விடுவது போன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, நாக்பூருக்கு அந்த சொகுசுப் பேருந்தை அனுப்பியது.

எனினும், இந்த பேருந்துக்கான முழு வாடகையையோ, டெப்பாசிட் தொகையையோ சுதர்ஷன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனமோ, கட்கரி குடும்பத்தினரோ செலுத்தவில்லை. இதன்காரணமாக, வோல்ஸ்வேகனிடம் வாங்கிய கடனை ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்தால் செலுத்த முடியவில்லை. இதன்விளைவாக, அந்த பேருந்தில் முழு விலைக்கான, கடன் உத்தரவாதத்தை ஸ்கேனியா இந்தியா வழங்கியது. எனினும், இந்த பரிமாற்றம் குறித்த விவரத்தை, ஸ்கேனியா நிறுவனத்தின் சுவீடன் அதிகாரிகளோ அல்லது இந்திய அதிகாரிகளோ தெரிவிக்கவில்லை.

ஸ்கேனியா நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையில், ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸுக்கு வாடகையைச் செலுத்துமாறு கட்கரி மகன்களை ஸ்கேனியா இந்தியா விற்பனை இயக்குநர் பலமுறை கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த சொகுசுப் பேருந்துக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குடும்பத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

சுதர்ஷன் குழுமமும் கட்காரிகளும்:

சுதர்ஷன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆண் வணிகத்தைத் தொடங்கியது. இந்த நிறுவனம் தொடங்கி ஒரு வாரத்தில் சொகுசுப் பேருந்து குறித்து ஸ்கேனியா மற்றும் கட்கரியின் மகன்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அந்த நிதியாண்டில் எந்த விற்பனையும் நடக்கவில்லை. அடுத்த நிதியாண்டில் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸிடம் இந்த சொகுசுப் பேருந்தை வாடகைக்கு எடுத்ததாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

வாடகை ஒப்பந்தத்தின்படி, ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸுக்கு சுதர்ஷன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் வட்டி இல்லாமல் ரூ.1.2 கோடி அளவுக்கு பாதுகாப்பு டெப்பாசிட்டை செலுத்த வேண்டும். குத்தகை முடிவடையும் 36 மாதங்கள் கழித்து அந்த தொகையை, சுதர்ஷன் நிறுவனத்துக்கு ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் திருப்பித் தரும். 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 3 தவணைகளாக தலா ரூ. 40 லட்சத்தை சுதர்ஷன் நிறுவனம் செலுத்த வேண்டும் என்பதே வாடகை ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம்.

அதே ஆண்டு, நிதின் கட்கரியின் மகன் சரங் கட்கரி 2016 ஜுன் 15 ஆம் தேதி முதல் முழுநேர இயக்குநராக இருக்கும் மணாஸ் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து, எந்தவித உத்தரவாதமின்றி ரூ. 35 லட்சத்தை சுதர்ஷன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் பெற்றது. மணாஸ் குழுமத்தின் ஒரு நிறுவனம் தான் மணாஸ் அக்ரோ. மணாஸ் குழுமத்தில் ஆலோசகராகவும், நிர்வாக கவுன்சிலின் உறுப்பினராகவும் நிகில் கட்கரி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Nikhil GadkariNitin GadkariSarang GadkariScania
Previous Post

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி

Next Post

இந்தியாவில் 7 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்ட பிரதமர் மோடியே! 7 கோடி தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

Admin

Admin

Next Post
தமிழகத்தை சுடுகாடாக்கும் புதிய சூழலியல் சட்டம்! தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்!

இந்தியாவில் 7 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்ட பிரதமர் மோடியே! 7 கோடி தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com