எத்தகைய தேர்தல் நடைமுறைகள் இருந்தாலும், ‘மதச்சார்பற்ற இந்தியா’ என்ற சிந்தனையை தன் சொந்த அடிப்படைத் தத்துவமாக முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். அதன்பிறகு கட்சியில் பெரும் சரிவு இருந்தது. எதிர்பார்த்தது போல நான் தோற்கடிக்கப்பட்டேன். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் இருண்டு போன போது, எனது அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.
அப்போது நான் ஏன் காங்கிரஸில் சேர்ந்தேன்? காங்கிரஸ் மட்டுமே இந்தியாவின் சமகால சிந்தனையின் உருவகமாக இருந்தது. இதைத்தான் மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். மக்களவையில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மதச்சார்பற்ற இந்தியா மட்டுமே நீடித்து நிலைத்து இருக்கும். மதச்சார்பற்ற பாதையில் இருந்து விலகினால், அநேகமாக இந்தியா நிலைத்து நிற்காது. மதச்சார்பை அடைய இந்தியா தொடர்ந்து பெரும் சவால்களை சந்தித்து வந்தது. அதனை நாம் கடந்த 40 ஆண்டுகளாக புரிந்து கொண்டுள்ளோம். மதச்சார்பின்மையை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் நானும் பங்கெடுக்க விரும்பினேன்.
மறைந்துபோன வார்த்தை
எனினும், இந்தியாவின் வரலாற்றில் முன் எப்போதையும்விட மதச்சார்பின்மைக்கான நமது அர்பணிப்பை வலியுறுத்தவேண்டியது இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகிறது. இந்த வார்த்தை கட்சியின் சொற்களஞ்சியத்தில் இல்லாத ஒன்று. ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை கொண்டாட்டத்தில் நாம் மூழ்கலாம். சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தை அழித்துவிட்டு புனிதமான இடத்தில் பூமி பூஜை நடக்கிறது என்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நாம் மட்டுமே கவனித்தோம், நாம் இதை ஏற்கனவே சொல்லிவிட்டோம். இந்த ‘காட்டுமிராண்டித்தனம்’ தான் இன்று பூமி பூஜை நடத்துவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எல்.கே.அத்வானியின் ரத யாத்திரையின்போதும், பாபர் மசூதியை இடித்தபின்னரும் ஆயிரக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் பலியானதை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
இந்தியாவின் யோசனைக்கு மாற்று
‘இந்து ராஷ்ட்ரா’ என்ற இந்தியாவின் மாற்று யோசனையின் அடிப்படையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. முகமது அலி ஜின்னாவின் இரு சித்தாந்த முறையை எதிர்த்ததைப் போல், இதனையும் காங்கிரஸ் கட்சி எப்போதும் எதிர்த்து வந்துள்ளது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபோது, அந்த நாடு தன்னை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டது. அதேபோல், இந்தியாவை இந்து தேசம் என அறிவிக்கலாம் என்ற ஜின்னாவின் வாதத்துக்கு நாங்கள் மதிப்பளிக்கவில்லை. நமது மதசார்பற்ற கொள்கையை நாம் பெருமையுடன் பிரகடனப்படுத்தினோம். ஆயிரம் ஆண்டுகளாக நமது இஸ்லாமிய வாரிசுகளும் இந்தியாவின் ஓர் அங்கமாக இருக்கிறார்கள். அவர்களை சமமாக பாவிப்பதைத் தான் இந்தியாவின் அதிசயமாக பார்க்கிறோம். அதனால் தான் மதச்சார்பற்ற தேசத்தின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, தன் நண்பர் சர்தார் வல்லபாய் பட்டேல் வலியுறுத்தியும், சோம்நாத் கோயில் புனரமைப்பில் அரசை ஈடுபடுத்த மறுத்துவிட்டார். மதச்சார்பற்ற நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற முறையில் ராஜேந்திர பிரசாத்தையும், புனரமைக்கப்பட்ட கோயிலின் திறப்புவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுமதிக்கவில்லை. ஆனால், இப்போது மதச்சார்பற்ற இந்தியாவின் பிரதமர் ராமர் கோயில் கட்ட நடைபெறும் பூமி பூஜையில் கலந்துகொண்டுள்ளதை பார்க்கிறோம். மகாத்மா காந்திக்கு பிடித்த, ‘ ஈஸ்வர் அல்லா தேரே நாம், சப்கோ சன்மதி தே பகவான்’ என்ற பாடலைக் கூட நாம் பரிந்துரைத்தது இல்லை. ஆக்கிரமிக்கப்பட்ட மசூதிகளை எல்லாம் இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் ஒப்படைக்க மகாத்மாக காந்தி நடவடிக்கை மேற்கொண்டபோது, டெல்லியில் நடந்த உச்சகட்ட வன்முறையை நாம் மறந்துவிட முடியாது. எதன் மீது நம்பிக்கை வைத்தோமோ, அதிலிருந்து விலகியே நிற்கின்றோம். ஏனென்றால் எதையும் நாம் நீண்ட காலத்துக்கு நம்புவதில்லை.
பாபர் மசூதி பூட்டுகளை ராஜிவ்காந்தி திறந்துவிட்டார் என நமது காங்கிரஸ் தலைவர்கள் பெருமை பேசுகிறார்கள். அவர் அப்படி செய்யவில்லை. அவருக்குத் தெரியாமல் நடந்த விசயம் இது. மசூதியை திறக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், அரை மணி நேரத்தில் மசூதி திறக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்பட்டது மட்டுமே அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தில் பழைய நிலையே தொடர வேண்டும் என்பதும், காழ்ப்புணர்ச்சியிலிருந்து அந்த நினைவுச் சின்னம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் தான் ராஜிவ்காந்தியின் எண்ணமாக இருந்தது. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, நான் அவருடன் இருந்தேன். மசூதிக்குள் சிலை ஏதும் இல்லை, மசூதி அப்படியே உள்ளது என்பதை, இஸ்லாமிய தலைவர்களை நேரில் அழைத்துச் சென்று காட்டுங்கள் என, அயோத்தியாவுக்கு அருகில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை ராஜிவ்காந்தி கேட்டுக் கொண்டார். இதனை கல்பனாத் ராய் மட்டுமே செய்தார். அமேதியிலிருந்து கொல்கத்தா வரை வெற்றி பெற்ற காங்கிரஸ்காரர் அவர் ஒருவரே.
உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
மசூதி இடிக்கப்பட்டதை கொண்டாடுவது தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பது என்று அர்த்தம் அல்ல. லிபரான் ஆணையத்தின் பரிந்துரையின்படி, மசூதியை இடித்து குற்றம் புரிந்தவர்களுக்கு எதிரான விசாரணையை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமர் கலந்து கொண்டு, ‘சர்வ தர்ம சம்பவா’ என்ற நாட்டின் மதச்சார்பற்ற நம்பிக்கையை நிரூபிப்பாரா? என்று கேட்க விரும்புகின்றோம். பல நிகழ்ச்சிகளில் வகை,வகையான தலைப்பாகைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, ஈத் திருநாளில் கலந்து கொண்டபோது, இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை அணிய மறுத்துவிட்டார்.
பிரச்சினைக்குரிய இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் சிலையை வைத்துக் கொள்ளத் தான் ராஜிவ் காந்தி அனுமதி அளித்தார் என்பதை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் நினைவில் கொள்ள வேண்டும். கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை கொண்டாட்டம் நடைபெறும் இடம் இடிக்கப்பட்ட மசூதி இருந்த இடம். மசூதி இடிக்கப்பட்டதும், அதே இடத்தில் புதிதாக மசூதி கட்டித் தரப்படும் என காங்கிரஸ் பிரதமர் உறுதி அளித்ததை அநேகமாக நாம் மறந்துவிட்டோம். ‘இன்னும் கொஞ்சம் தள்ளு/ பாபர் மசூதியை தகர்த்துவிடு’ என்று அடித் தொண்டையில் இருந்து வந்த பிரிவினை குரல்களுடன் சேராதே என்பது போன்ற பிரச்சினைகளைத் தான் நாம் எழுப்பினோம்.
இஸ்லாமிய சமுதாயம் அமைதியானது, ஆனால் அக்கறை கொண்டது. அவர்களின் அக்கறையைப் பொறுத்தவரை, முறையீட்டாளர்கள் என்ற முத்திரை குத்தப்படும் என்ற அச்சத்தால், மதச்சார்பற்ற நற்சான்றுகளை காங்கிரஸ் கட்சி எப்போதோ இழந்துவிட்டது என்பதாகவே இருந்தது.
தேர்தல் முடிவுகளில் வெற்றியோ, தோல்வியோ எது இருந்தாலும், வகுப்புவாத பைத்தியக்காரத்தனத்துக்குள் தான் ஒருபோதும் செல்லப்போவதில்லை என்று நேரு தெளிவுபட குறிப்பிட்டார். 1951 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று ராம் லீலா மைதானத்தில் நடந்த பேரணியில், ”அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எந்த ஒரு மனிதன் மதத்தின் பெயரால் மற்றொருவருக்கு எதிராக கையை உயர்த்துகிறாரோ, அந்த நபருக்கு எதிராக என் இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவேன்” என்று நேரு பிரகடனம் செய்தார். அவர் தொடர்ந்து பேசும்போது, ‘சிறுபான்மை வகுப்புவாதத்தை விட, பெரும்பான்மை வகுப்புவாதம் மோசமானது’ என்று குறிப்பிட்டார்.
நிலைப்பாட்டை எடுக்கும்போது…
காங்கிரஸிடம் இந்துக்கள் அதிகம் இருக்கிறார்களா? பாரதிய ஜனதா கட்சியிடம் இந்துக்கள் அதிகம் இருக்கிறார்களா? என்ற போட்டியை முடிவு செய்வதை விட, காங்கிரஸ் அல்லது பா.ஜ.கவில் யார் அதிகம் மதச்சார்பற்றவர் என்று காவி சகோதரர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும். அவர்கள் இடத்தை கைப்பற்ற நாம் முயற்சிக்கின்றோம். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், மதச்சார்பற்ற இந்தியாவின் யோசனைப்படி சொந்த கொள்கை ரீதியாக போராட நமக்கு நல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வெளித்தோற்றத்துக்காக இல்லாமல் தேசப் பார்வையில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்றாக நாம் மட்டுமே உள்ளோம் என்பதை நியாயப்படுத்த வேண்டும்.