வலுவான நிலையில் இருந்து உளவியல் ரீதியாக நீங்கள் சீனாவை கையாளவேண்டும். நீங்கள் அவர்களை வலிமையான நிலையில் இருந்து சமாளித்தால், அவர்களுடன் இணைந்து பணியாற்றி உங்களுக்குத் தேவையானவற்றை பெறமுடியும். இது உண்மையிலேயே சாத்தியமாகக் கூடியதாக இருக்கலாம்.
முதலாவது விசயம், ஒரு பார்வையில்லாமல் நீங்கள் சீனா மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. தேசிய பார்வை என்ற அர்த்தத்தில் அதை நான் சொல்லவில்லை. அந்த பார்வை சர்வதேச பார்வையாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்.
இந்தியாவுக்கு உலக அளவிலான விரிந்த பார்வை உண்டு. இந்தியாவுக்கு தற்போது யோசனை தோன்றலாம். அது உலகளாவிய யோசனையாக மாறலாம். அதுவே இந்தியாவை பாதுகாக்கப் போகிறது என்ற பெரிய சிந்தனை உண்மையாகவே உள்ளது.
ஒருவேளை நமக்கு இருக்கும் எல்லைப் பிரச்சினைக்கு நாம் தீர்வு காணலாம். ஆனால், நாம் எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதற்கு ஏற்றாற்போல், நமது அணுகுமுறையையும் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த வழியாக சென்றால் நாம் பெரிய அளவில் பங்காற்றக்கூடும். இதே வழியில் சென்றால், பொருத்தமற்றதாகவும் இருக்கலாம்.
பெரிய வாய்ப்புகளை இழந்திருப்பதை நான் பார்க்கிறேன். ஏன்?
ஏனென்றால், நம்மிடம் நீண்ட கால சிந்தனை இல்லை. ஏனென்றால், நாம் பெரிய அளவில் சிந்திக்கவில்லை. நமது உள்நாட்டு சமநிலையை நாம் தொந்தரவு செய்கிறோம்.
நாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறோம். அரசியல் ரீதியாக கொஞ்சம் பாருங்கள், நீண்ட காலமாக; நீண்ட காலமாக; இந்தியர்கள் இந்தியர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம் என்றால், முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான தெளிவான பார்வை இல்லாததே.
பிரதமர் என் எதிர்முகாமில் இருக்கிறார் என்பதை நான் அறிவேன். அவரை கேள்வி கேட்க வேண்டியது என் பொறுப்பு. கேள்வி கேட்டு அவருக்கு அழுத்தம் தர வேண்டியது என் பொறுப்பு. இதனால் சில வேலைகளை அவர் செய்கிறார். சரியான பார்வையே அவரது பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் அது அவரிடம் இல்லை.
அத்தகைய பார்வை பிரதமரிடம் இல்லை என்பதற்கு என்னால் உத்தரவாதம் தரமுடியும். அதனால்தான் சீனா இன்று இந்த இடத்துக்கு வந்துள்ளது.