இது சாதாரணமாக எல்லைப் பிரச்சினை மட்டுமல்ல. சீனர்கள் நமது எல்லையில் உட்கார்ந்து கொண்டார்களே என்பதுதான் எனது கவலை. வியூக சிந்தனை இல்லாமல் சீனர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். உலகத்தை தங்கள் இஷ்டப்படி வரைபடத்துக்குள் கொண்டு வருவதும், உலகத்தை தங்களுக்கு ஏற்றாற் போல் வடிவமைப்பதும் தான் அவர்கள் எண்ணத்தில் இருக்கிறது. அவர்களின் செயல்பாட்டின் அளவீடாகவும் அதுதான் உள்ளது. கிரகத்தையே மறுசீரமைப்பது போல் குவாடர் நகரில் அவர்களது செயல்பாடு உள்ளது. அதனால் நீங்கள் சீனர்களைப் பற்றி சிந்திக்கும் போது, அவர்கள் உங்களை விட அதிகம் சிந்திப்பார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்.
தற்போது அவர்களது தந்திரத்தை பார்ப்போம். தங்கள் நிலையை மேம்படுத்த முயற்சி செய்கிறார்கள். கல்வானாக இருந்தாலும், டெம்காக்காக இருந்தாலும் அல்லது பாங்காக் ஏரியாக இருந்தாலும், அவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அவர்கள் எண்ணமாக உள்ளது.
அவர்களுக்கு நமது நெடுஞ்சாலை இடையூறாக இருக்கிறது. நமது நெடுஞ்சாலையை அவர்களது தேவைக்கு ஏற்றாற் போல் உருவாக்க விரும்புகிறார்கள். அவர்கள் பெரிய அளவில் சிந்திக்கிறார்கள் என்றால், காஷ்மீரில் பாகிஸ்தானுடன் சேர்ந்து எதையாவது செய்ய விரும்புவது தான் இருக்கும்.
அதனால், இது வெறும் எல்லை பிரச்சினை இல்லை. இந்திய பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க எல்லை பிரச்சினையாக சித்தரிக்கப்படுகிறது.
இத்தகைய அழுத்தத்தை இப்படித்தான் தர வேண்டும் என அவர்கள் சிந்திக்கிறார்கள். அதன்படி, அவரது செல்வாக்கின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். நரேந்திர மோடி திறமையான அரசியல்வாதி என்றும், நரேந்திர மோடி வலுவான அரசியல்வாதி என்றும் அவர்களுக்கு புரிதல் இருக்கிறது.
நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால், நரேந்திரமோடி வலுவான தலைவர் என்ற தோற்றத்தை தகர்த்துவிடுவோம் என்பதையே அவர்கள் அடிப்படையில் தெரிவிக்கிறார்கள்.
இப்போது நம் முன் இருக்கும் கேள்வி என்னவென்றால், இதற்கு நரேந்திர மோடி எதிர்வினை ஆற்றப்போகிறாரா என்பதே. அவர்களை, நரேந்திர மோடி எதிர்கொள்வாரா? இதனை அவர் சவாலாக ஏற்பாரா? நான் அப்படி எல்லாம் இருக்க மாட்டேன், நான் இந்திய பிரதமர் என்று சொல்வாரா?. எனது செல்வாக்கு பற்றி கவலைப்படமாட்டேன், உங்களை எதிர்கொள்வேன் என்று சொல்வாரா? அல்லது சீனர்களிடம் இணங்கிப் போவாரா?
இதுவரை எனக்கு இருக்கும் கவலை எல்லாம், பிரதமர் இணக்கமாக போய்விட்டார் என்பதும், சீனர்கள் இன்று நம் எல்லையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தான். அவர்கள் நம் எல்லைக்குள் வரவில்லை என்று பிரதமர் பொதுவெளியில் கூறுகிறார். அவரது செல்வாக்கு மீதான கவலையும், செல்வாக்கை காப்பாற்ற அவர் முயற்சிப்பதும் இதன் மூலம் தெரியவருவதாக என் உள் மனது கூறுகிறது.
சீனர்களை பிரதமர் தொடர்ந்து அனுமதித்தால், அவரது செல்வாக்கை முன் நிறுத்தி பிரச்சினையை கையாளுகிறார்கள் என்று அர்த்தம். இந்திய பிரதமரால் இனி இந்தியாவுக்கு எந்த பயனும் இல்லை என்பது மட்டும் புரிகிறது.
Excellent & timely effort. Congratulations.
Thank you!
Thank you