மோடி அரசை ‘சூட் பூட் கி சர்க்கார்’ (விலை உயர்ந்த கோட் மற்றும் பூட்ஸை மோடி போடுவது வழக்கம்) என்று முத்திரை குத்தினார் ராகுல் காந்தி. சமீபத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர் அரசு’ என்று விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இத்தகைய விமர்சனங்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலை நினைவுபடுத்துகிறது.
இரக்கக் குணம் மற்றும் கருத்தியலில் புகழ்பெற்ற வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஒப்பிடும் அளவுக்கு ராகுல் காந்தி இருக்கிறார். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்பட்ட போதும், அவரது நகைச்சுவை மேலோங்கியிருக்கும்.
மோடியைப் போல் தனிப்பட்ட தாக்குதலை ராகுல் காந்தி நடத்துவதில்லை. தன் அரசியல் எதிரிகளைத் தனிப்பட்ட முறையில் யாரையும் சர்ச்சில் தாக்கியதில்லை. இந்த குணம் ராகுல் காந்தியிடமும் பிரதிபலித்தது.
பிரிட்டிஷ் முதல் பெண் எம்பியான நான்ஸி ஆஸ்டர் ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசும்போது,” சர்ச்சிலை நான் திருமணம் செய்து கொண்டிருந்தால், விஷம் வைத்துக் கொன்றிருப்பேன்” என்றார். அதற்கு உடனே பதில் அளித்த சர்ச்சில், ” நான்ஸி எனக்கு மனைவியாகியிருந்தால் நானே விஷம் குடித்து செத்துருப்பேன்” என்றார்.
மற்றொரு பெண் எம்பி பெஸ்ஸி பிராடோக் பேசும்போது, சர்ச்சிலை குடிகாரன் என்றார். அதற்குப் பதில் அளித்த சர்ச்சில், நான் நாளைக்கே செத்துவிடுவேன், நீங்கள் மட்டும் இன்றைக்கு இருப்பது போலவே அப்போதும் இருப்பீர்கள் என்றார். பெஸ்ஸி அசிங்கமாக இருப்பார். அவரை உடல் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விமர்சிக்காமல், எவ்வளவு நாசூக்காக விமர்சித்துள்ளார்.
சர்ச்சில் அளவுக்கு தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு ராகுல்காந்தி பதிலடி தரவில்லை. எனினும், மோடி அரசாங்கத்தை ‘சூட் பூட் கி சர்க்கார் என்று முத்திரை குத்தினார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சர்க்கார் என்று விமர்சிக்கிறார். வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகளையே ராகுல் காந்தியின் வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.
ராகுல் காந்தியை விமர்சித்த பத்திரிகை ஆசிரியர்கூட, ராகுல் காந்தியை சர்ச்சிலுடன் ஒப்பிடுகிறார்.
ராகுல் காந்தி ஏன் சர்ச்சிலை நினைவுபடுத்துகிறார். சர்ச்சிலைப் போல், எதிரிகளின் அவதூறுகளைத் தவிர்த்து விடுகிறார். ஆனால், பொருத்தமான நேரத்தில் பதிலடி கொடுக்கிறார். அந்த நகைச்சுவை எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கிறது.
தேசிய அரசியலுக்கு வரும் முன்பே சோனியா காந்தியை வெளிநாட்டுக்காரர் என்பதைச் சுட்டிக்காட்டித் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். சசிதரூருக்கும் பெரும் பணக்காரரான சுனந்தாவுக்கும் திருமணமானபோது, சுனந்தாவை சசிதரூரின் 50 கோடி ரூபாய் நண்பர் என்று குறிப்பிட்டார். இத்தனைக்கும் சுனந்தா அப்போது மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகவில்லை.
டொனால்டு ட்ரம்ப் அதிபராகும் முன்பே கெல்லியை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். அதேபோல், தேசிய அரசியலுக்கு வரும் முன்பு, சோனியா காந்தியையும், சுனந்தாவையும் தனிப்பட்ட முறையில் மோடி விமர்சித்தார். பெண்கள் அல்லது ஆண்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலை ராகுல் காந்தி தொடுத்ததே கிடையாது.
சர்ச்சிலுக்கும் ட்ரம்புக்கும் இருந்த வித்தியாசம் தான், மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இருக்கிறது என்பதே, அவரவர் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் உணர்த்துகின்றன