உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று சென்றனர். ஆனால், அவர்களது வாகனத்தை யமுனா விரைவுச் சாலையில் போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். அதனால் இருவரும் கீழே இறங்கி நடந்து சென்றார்கள். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் நீங்கள் செல்லக்கூடாது என்று ராகுல்காந்தியை தடுத்து காவல்துறையினர் பலாத்காரமாக பிடித்து கீழே தள்ளிய காட்சிகள் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆக்கியுள்ளது. அதனுடைய புகைப்படக் காட்சிகள் கீழே வெளியிடப்பட்டுள்ளன.
உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. சர்வாதிகார முறையில் தலித்கள், சிறுபான்மையினருக்கு எதிராக அடக்குமுறைகளை ஏவி விடுகிற, காட்டாட்சி தான் நடைபெறுகிறது என்பதற்கு தலைவர் ராகுல்காந்தி தாக்கப்படுகிற காட்சிகளே சான்றுகளாகவுள்ளன. சர்வாதிகார ஆட்சி நடத்துகிற நரேந்திரமோடியை, பேராண்மையுடன் எதிர்கொள்கிற துணிவு மிக்க தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டதை நாட்டு மக்கள் பாராட்டுகிறார்கள்; போற்றுகிறார்கள்.