• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

2021 மார்ச்சில் 6 கோடி பேருக்கு கொரோனா தொற்று: எச்சரிக்கும் ஆய்வு

by ஆ. கோபண்ணா
17/07/2020
in தேசிய அரசியல்
1
2021 மார்ச்சில்  6 கோடி பேருக்கு கொரோனா தொற்று: எச்சரிக்கும் ஆய்வு
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 10 லட்சத்து 202 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25 ஆயிரத்து 553 பேர் உயிரிழந்துள்ளார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா தொற்றுக்கு நேற்று வரை 1 லட்சத்து 59 ஆயிரத்து 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தான், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  6 கோடியே  20 லட்சமாகவும், உயிரிழப்போர்  எண்ணிக்கை  28 லட்சமாகவும் உயரும் என்ற அதிர்ச்சி  தகவல், பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி எனப்படும்  இந்திய அறிவியல்  நிறுவனம்  நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய அறிவியல் நிறுவனம் கடந்த 1909 ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்டது. கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் ஆராய்ச்சியில் இந்திய அறிவியல் நிறுவனம் நாட்டிலேயே முன்னோடியாக திகழ்கிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் அடிப்படை ஆய்வு நடத்தி அதற்கான தீர்வை அளிப்பதை ஆரம்பம் முதலே முக்கிய பணியாக கொண்டுள்ளது.

சமீபகாலமாக, பல தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் இணைந்து உடல் நலம்  தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. பருவநிலை மாற்றம், நீர் மேலாண்மை  நிர்வாகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த ஆய்விலும் இந்திய அறிவியல் நிறுவனம்  ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்திய அறிவியல் நிறுவனம்  கொரோனா பாதிப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வு முடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆய்வு குறித்து, ஐஐஎஸ்சி பேராசிரியர்  ஜி. தீபக்  மற்றும்  அவரது குழுவினர் கூறும்போது, ” செப்டம்பர்  1 ஆம் தேதியில், இந்தியாவில்  கொரோனா  தொற்று எண்ணிக்கை  35 லட்சமாகவும், உயிரிழப்பு  எண்ணிக்கை 88 ஆயிரமாகவும் உயரக்கூடும்.

அதேசமயம், தொற்றின்  வேகம்  அதிகமாகும் பட்சத்தில், செப்டம்பர்  1 ஆம் தேதியில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால்  உயிரிழப்போர்  எண்ணிக்கை  1 லட்சத்து  40 ஆயிரமாக உயரும்.

இதில், மகாராஷ்ட்ராவில்  25 ஆயிரமாகவும், டெல்லியில்  9 ஆயிரத்து 700 ஆகவும், கர்நாடகாவில்  8 ஆயிரத்து 500 ஆகவும், தமிழகத்தில்  6 ஆயிரத்து  300 ஆகவும், குஜராத்தில்  7 ஆயிரத்து  300 ஆகவும் உயிரிழப்போர் எண்ணிக்கை உயரக்கூடும்.

கொரோனா  தொற்று  மோசமான நிலையை எட்டினால், நவம்பர்  1 ஆம் தேதியில்  இந்தியா முழுவதும்  பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  1 கோடியே  20 லட்சமாகவும், உயிரிழப்போர் எண்ணிக்கை  5 லட்சமாகவும் உயரும்.

2021 ஆம் ஆண்டு மார்ச்  இறுதிக்குள்  நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  34.7 லட்சமாகவும், உயிரிழப்பு  1 லட்சத்து  90 ஆயிரமாகவும் உயரக்கூடும். அதேசமயம், கொரோனா தொற்று மிக மோசமான நிலையை அடையும்பட்சத்தில், 2021 மார்ச்  இறுதிக்குள் பாதிப்பு எண்ணிக்கை  6 கோடியே  20 லட்சமாக உயரலாம். உயிரிழப்பு  எண்ணிக்கை  28 லட்சமாக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, கேரளா, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறைவாகவே இருக்கும். அதேசமயம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் மத்திய  பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகும்” என்றனர்.

இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு முடிவுகள் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கொரோனா தொற்றை தடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி என்ன செயல்திட்டம் வைத்துள்ளார்?

கொரோனா தொற்று பரவியதில் இருந்தே, விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளோடு, தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் ஒத்துப் போய்க் கொண்டிருப்பதால், இப்போதைய தேவை போர்க்கால நடவடிக்கையே என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து செயல்பட வேண்டும்.

Previous Post

பாடத்திட்டங்களில் வகுப்புவாத கொள்கைகளை புகுத்தாதே - தலைவர் கே.எஸ். அழகிரி

Next Post

பெருந்தலைவா பிரியமான வாழ்த்து...

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
பெருந்தலைவா  பிரியமான  வாழ்த்து…

பெருந்தலைவா பிரியமான வாழ்த்து...

Comments 1

  1. Anandmurugu says:
    5 years ago

    ஒவ்வொரு கட்டுரையிலும் வாட்ஸ்அப் பகிர்வுக்கான Link ஐயும் சேர்க்கவும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com