இந்தியா டுடே கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சர்வே, சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.
”நாட்டின் மனநிலை என்று பிரதமரின் மன் கீ பாத் சர்வே முடிவுகளை மட்டும் தான் வானொலியிலும் தூர்தர்ஷனிலும் பிரதமர் அறிவிக்கவில்லை” என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.
”கொரோனாவை பிரதமர் மோடி அணுகிய விதத்தை பெரும்பாலான மக்கள் பாராட்டுவதாகவும், இன்றைக்குத் தேர்தல் வைத்தாலும் பாஜக வெற்றி உறுதி” என்று கூறி, தன் எஜமானர்களுக்கு இந்தியா டுடே சேவகம் செய்திருக்கிறது.
19 மாநிலங்களில் 97 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 194 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 12,232 பேரிடம் கருத்துக் கேட்டதில் பாஜகவுக்கே ஆதரவு அதிகரித்திருப்பதாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது. 74 சதவிகிதம் பேர் மோடியின் செயல் திறனுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 66 சதவிகிதம் பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீது திருப்தி அடைந்துள்ளதாக சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியா டுடேவின் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டதும் ட்விட்டரில் பலரும் தங்கள் கருத்தை நகைச்சுவையாக வெளியிட்டு வருகின்றனர்.
அவற்றில் சில…
- நாட்டின் மனநிலை மற்றும் சர்வே எல்லாம், டிஆர்பி ரேட்டிங் போன்றது தான். தாங்கள் நினைத்ததை சர்வே முடிவுகளாக வெளியிட வேண்டும் என்பதை பாஜக விரும்புவதைச் சுயமரியாதை உள்ள பத்திரிக்கை ஆசிரியர்கள் மறுக்க முடியாது.
- 130 கோடி மக்களின் மனநிலையை 12,232 பேர் பிரதிபலித்துவிட்டார்களா?
- வண்ணமயமான பணமே நாட்டின் மனநிலையை முடிவு செய்கின்றது.
- இந்த போலி சர்வே எடுக்க மோடியும் யோகியும் எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?
- ஊடகங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் விலை போனதால், செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.
- வேலையின்மை, இனவாதம், விவசாயிகள் போராட்டம்,புலம்பெயர்ந்தோர் பிரச்சினை, சிறு, குறு தொழிற்சாலைகள் மூடல், மொத்த உள்நாட்டு உற்பத்தி, எரிபொருள் விலை, பொருளாதாரம் மற்றும் வங்கிகள் மூடல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, மாட்டிறைச்சி விவகாரம், முஸ்லீம் கப்ராஸ்தான் ஆகியவை தான் நாட்டின் மனநிலையாக இருக்கின்றன.
- இந்தியாவின் மக்கள் தொகை: 135 கோடிகள் + ஆக உள்ளது. நாட்டின் மனநிலையை வெறும் 13 ஆயிரம் பேர் முடிவு செய்ய முடியுமா?. இந்த எண்ணிக்கையில் சர்வே எடுத்தால் ஒரு நகரின் மனநிலையைக் கூட நீங்கள் முடிவு செய்ய முடியாது. இந்தியா டுடே-வை நினைத்து வெட்கப்படுகிறேன்.
- ரிபப்ளிக் தொலைக்காட்சியும், ஜீ தொலைக்காட்சியும் அரசின் ஊதுகுழலாக இருக்கின்றன. இந்த சர்வே மூலம், நாங்களும் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறோம் என்று இந்தியா டுடே காட்டியிருக்கிறது.
- மக்களின் மனநிலை : 2 நிமிடங்கள் அமைதியாக இருப்போம்.
- மக்கள் மனநிலை : இது போன்ற சர்வேக்கு இனி வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.
- மக்கள் மனநிலை : இந்த வாரத்தின் சிறந்த நகைச்சுவை
- இந்த சர்வேயில் அர்னாப் கோஸ்வாமியின் சாயலே தெரிகிறது.
- இதுவரை இல்லாத அளவுக்குப் பெருமளவில் பெட்ரோல் விலையை ஏற்றுவதே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்விக்குச் சிறந்த உதாரணம்.
இப்படி…இந்தியா டுடேவின் போலி சர்வேக்கு லட்சக்கணக்கானோர் ட்விட்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
”12,232 பேரிடம் கருத்துக் கேட்டுவிட்டு, பிரதமர் நரேந்திர மோடியை யாரும் அசைக்க முடியாது” என்று ஒரு நகைச்சுவை சர்வேயை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே. இதை 130 கோடி மக்களின் மனநிலை என்று வேறு சொல்கிறது.
அப்படி என்றால், இந்த சர்வேக்கு எதிராக லட்சக்கணக்கானோர் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்களே? இதுவும் நாட்டின் மனநிலை தானே?. இதை என்ன சொல்வது?
ஆயிரங்கள் பெரிதா? லட்சங்கள் பெரிதா என்பதை, தங்கள் எஜமானர்களிடம் கேட்டு இந்தியா டுடே பதில் சொல்லட்டும்.