ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் அசாதாரண சூழல் குறித்தும், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ‘தி இந்து’ சிறப்பு செய்தியாளர் வர்கீஸ் கே. ஜார்ஜுக்கு, மூத்த காங்கிரஸ் தலைவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் கவுடா, ராஜ்யசபா உறுப்பினர் குமார் கெட்கர் ஆகியோர் அளித்த பேட்டி:

கேள்வி: நேரு – காந்தி பாரம்பரிய அரசியலால், காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு என்ற கருத்து உள்ளதே?
ராஜீவ் கவுடா: அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல நேரு&காந்தி குடும்பம் மிகப் பெரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் கட்சியின் உயர்வு மற்றும் வீழ்ச்சியில் அவர்களே வழிநடத்திச் சென்றுள்ளார்கள். இரண்டு விசயங்களை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நாடு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் மக்கள் ஆதரவு உண்டு. மற்றொன்று, நேரு- காந்தி குடும்பத்தின் மீது மக்கள் உண்மையான அன்பும், அபரிமிதமான நம்பிக்கையும் வைத்துள்ளார்கள். இது வாரிசு தொடர்பானது அல்ல. சமூக நீதி, இரக்கம் மற்றும் மத சார்பின்மையை பேசுவதோடு, அதன்படி நடந்தும் காட்டியதால் இந்த குடும்பத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இக்கட்டான சூழ்நிலையை கடந்து கட்சி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். இந்த நிலையில் தத்தளிக்கும் கப்பலில் இருந்து தப்பியோடுவது போல் இல்லாமல், அவர்களது கரத்தை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கமாக இருக்கும்

கேள்வி: நீங்கள் சொல்வது எல்லாம் ஒரு காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பயன்பட்டது. ஆனால், இன்றைய நிலைமை சாதகமாக இல்லை என்ற விமர்சனம் உள்ளதே?
குமார் கெட்கர்: காங்கிரஸ் கட்சிக்கு மக்களின் நம்பிக்கை இன்று சாதகமாக இல்லை என்று கூறுவது பொத்தாம் பொதுவாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை யார் முடிவு செய்வது? சுதந்திரமான அறிவு ஜீவிகளா? அல்லது ஊடக விமர்சகர்களா? கடந்த 1998-99 ஆம் ஆண்டு காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதன்பின்னர் 2004 ஆம் ஆண்டு இந்தி தெரியாத சோனியா காந்தி எப்படி பிரதமராக முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள். இப்போதைய விமர்சனங்களும் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளன. இத்தகைய யூகங்கள் எல்லாம் தவறு என்றே நான் கருதுகிறேன். களத்தில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. வெற்றி, தோல்வி என்ற கேள்விக்கு இடமில்லை. அதையும் மீறி காந்தி குடும்பத்துக்கு அபரிதமான அனுதாபமும், அன்பும், நேசமும் உண்டு. நேரு-காந்தி குடும்பத்தினர் மீதான அன்பு என்பது, இருதயம், மனம் மற்றும் ஆன்மா சார்ந்த விசயமாக இருக்கிறது. இந்த மூன்று விசயங்களுடன் நேரு- காந்தி குடும்பத்தினர் பின்னிப் பிணைந்துள்ளனர்.
கேள்வி: நேரு-காந்தி பாரம்பரியம் இப்போது செல்வாக்காக இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் தருவது கடினமாக இல்லையா?
ராஜீவ் கவுடா: எல்லாமே நேரு-காந்தி குடும்பம் தான் என்று நான் சொல்ல மாட்டேன். ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பின்னரும், கட்சி அதன் பணியை தொடர்ந்து கொண்டிருந்தது. பின்னர், தற்காலிகமாக இடைக்காலத் தலைவரை தேர்ந்தெடுத்தோம். இதனையடுத்து, ஊரடங்கு காரணமாக கட்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது அவ்வளவுதான்.
குமார் கெட்கார்: தேர்தல் முடிவுகளால் மட்டும் ஒரு கட்சியின் திறனை மதிப்பீடு செய்ய முடியாது. நேரு-காந்தி குடும்பத்தாரை விட, மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத் தன்மை போன்ற நிலைபாட்டில் சிறந்த குடும்பத்தினர் வேறு யாரும் இல்லை. அடிப்படை உண்மை என்னவென்றால், மதசார்பின்மைக்காக போராடும் ஒரே கட்சி காங்கிரஸ் தான். மதசார்பின்மை மற்றும் அடிப்படை ஜனநாயகத்தின் அடையாளமாக நேரு-காந்தி குடும்பம் திகழ்கிறது.
கேள்வி: வட மாநிலங்களை விட, நேரு- காந்தி குடும்பத்தினரின் செல்வாக்கு தென் மாநிலங்களில் அதிகம் உள்ளதா?
ராஜீவ் கவுடா: இந்தியாவின் எந்த ஒரு கிராமத்துக்கு நீங்கள் சென்றாலும், அங்கு காங்கிரஸ் தொண்டர்களை காணலாம். இருந்தாலும், நீங்கள் சொல்வதும் சரிதான். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை எடுத்துக் கொண்டால், காங்கிரஸ் கட்சி வலுவாகவும், சில மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் உள்ளது. அதேசமயம், தென்மாநிலங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பலவீனமாகத்தான் இருக்கிறோம். குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் நேரு-காந்தி குடும்பத்தார் மீது அபரிமிதமான பற்று கொண்டவர்கள். ஆனால், அமைப்பு ரீதியாக நாங்கள் வலுவாக இல்லை. இதுபோன்ற சில மாநிலங்களில் அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த பணியை உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி செயல்படுத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.
கேள்வி: நேரு-காந்தி குடும்பத்தாருக்கு விசுவாசமாக இருந்தவர்களே கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களை போதுமான அளவுக்கு கவர்ந்து தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள நேரு-காந்தி பாரம்பரியம் தவறிவிட்டதா?
குமார் கெட்கர்: இது தவறான கருத்து. சச்சின் பைலட் 26 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். தற்போது அவருக்கு 42 வயதாகிறது. இதற்கிடையே, மத்திய அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார். அவர் எப்போதுமே கட்சியின் மரியாதைக்குரிய தலைவராகவே இருந்தார். நேரு-காந்தி குடும்பத்தார் கடைபிடிக்கும் மதசார்பற்ற&சுதந்திர ஜனநாயக கோட்பாட்டை தான் ஏற்கவில்லை என, கட்சியிலிருந்து வெளியேறும் போது கூறுகிறார். கட்சியின் கொள்கையை அவர் எதிர்க்கிறாரா? அல்லது கட்சியின் கட்டமைப்பை அவர் எதிர்க்கிறாரா? ஜ்யோதிராதித்யா சிந்தியாவைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவதில் அவர் பெரும் பங்காற்றியவர். ஆனால், அவர் தன் சொந்த தொகுதியான குணாவில் தோல்வியடைந்தார்
நேரு-காந்தி குடும்பத்தை வாரிசு அரசியல் என்று பாரதிய ஜனதா கட்சி பித்துப்பிடித்ததை போல் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், நான் குடும்பம் என்று குறிப்பிடுகிறேன். பாரதிய ஜனதா சொல்வதைப் போல் வாரிசு ஆட்சியில் பதவி இழப்பதில்லை. நேரு-காந்தி கொள்கைகளுக்கு முடிவு கட்டவே பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது. நேருவின் சித்தாத்தங்களும், அவரது குடும்பத்தாரின் பங்கெடுப்புமே காங்கிரஸின் பலம் என்பது அவர்களுக்குத் தெரியும்
கேள்வி: ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏராளமானோர் விலகுகிறார்களே ஏன்?
குமார் கெட்கர்: கட்சியை அல்லது கொள்கையை விட தங்கள் சொந்த நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களே கட்சியை விட்டு விலகுகிறார்கள். அவர்கள் பின்னால் பெருங்கூட்டம் போய்விடவில்லை.
ராஜீவ் கவுடா: சச்சின் பைலட் கட்சியை விட்டு வெளியேறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். வெளியேற்றப்பட்டார்கள். சச்சின் பைலட் மற்றும் சிந்தியா ஆகியோர் இல்லாவிட்டாலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாகத்தான் உள்ளது. இங்கு மீண்டும் ஆட்சிக்கு வரவும் வாய்ப்புள்ளது. 60 முதல் 70 வயது வரையுள்ளவர்கள் இப்போதுதான் பதவிக்கு வந்துள்ளார்கள் என்பதை 40 வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு புரிந்து காள்ளவேண்டும்.
கேள்வி: மூத்த தலைவர்கள் மற்றும் இளம் தலைவர்களுக்கிடையே நிலவும் மோதலால் கட்சி செயலற்றுப் போய்விட்டதா?
ராஜீவ் கவுடா: அப்படி நான் நினைக்கவில்லை. அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் நமக்கு எதிரிகள் இருக்கலாம். ஆனால், கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருப்பது தேவையற்றது. சில சமயங்களில் மற்றவர்களை முன்னே செல்ல நீங்கள் வழிவிட வேண்டும். நீங்கள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பவராக இருக்கவேண்டும்.
கேள்வி: பாரதிய ஜனதாவைப் போல கொள்கை இன்றி ஒரு குடும்பத்தையே சார்ந்து இருப்பதாலேயே கட்சி பலவீனப்பட்டுப் போயிருக்கிறது என்ற வாதம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
குமார் கெட்கர்: பாரதிய ஜனதாவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் பெரிய அளவில் அமைப்பு ரீதியான அடித்தளம் இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை. இது ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு தங்கள் அரசியல் நிலையை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும்.
கேள்வி: ஆனால் அவர்களுக்கு கொள்கை இருக்கிறது அல்லவா?
குமார் கெட்கர்: அரசியல் சூழல் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்றவாறு அவர்களது கொள்கை மாறும் என்றே நினைக்கிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பு வலுவான அமைப்பு இருப்பதாக கூறுவது கட்டுக்கதை. அது ஒரு அமைப்பு மட்டுமே, அவ்வளவுதான். அந்த அமைப்பை காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிட முடியாது. ஆர்எஸ்எஸ் அமைப்பு இயற்கையாகவே பாசிச கொள்கையை உடையது. காங்கிரஸ் கட்சி சுதந்திர ஜனநாயக கொள்கையுடையது.
கேள்வி: தளர்வான அமைப்பாக இருப்பதே சில சமயங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. அதுவே தற்போதைய பாதிப்புக்கும் காரணம் என்று நினைக்கிறீர்களா?
ராஜீவ் கவுடா: காங்கிரஸ் கட்சியின் கொள்கை குறுகிய நோக்கம் கொண்டது அல்ல. எங்கள் கட்சி பெரிய கூடாரம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு அமைதியாக பல குரல்கள் ஒலிக்கும். பல்வேறு கொள்கைகள் இருந்தாலும், அதில் உண்மை இருந்தால் நாங்கள் மதிக்கிறோம். இந்தியர்களை பிளவுபடுத்தும், குறிப்பாக பாரதிய ஜனதாவின் நிலையைப் போல் மத ரீதியாக பிளவுபடுத்தும் கொள்கையை நாங்கள் நிராகரித்து வந்துள்ளோம். சகிப்புத்தன்மை மற்றும் பெருந்தன்மையான அணுகுமுறை போன்றவையே காங்கிரஸ் கட்சியின் தளர்வான கொள்கைக்கான வரலாற்று சிறப்புமிக்க காரணமாக அமைந்துள்ளது. இதுவே இந்தியாவுக்கு தேவையான ஒன்றாகும்.
கேள்வி: வாரிசு அரசியலுக்கு ராகுல் காந்தி தயக்கம் காட்டுகிறாரா? அரசியல் போரில் தொடர்ந்து ஈடுபடுவதில் அவர் தயக்கம் காட்டுகிறார் என்று நினைக்கவில்லையா?
குமார் கெட்கர்: மோடியைப் போலவும், மற்றவர்களைப் போலவும் ராகுல்காந்தி முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை என்ற அர்த்தத்தில் கேட்கிறீர்கள். அவர் ஒரு மாறுபட்ட மனிதர். மாறுபட்ட அணுகுமுறை கொண்டவர். இதுவே அவரது உச்சபட்ச தகுதியாக கருதுகிறேன். இந்திரா காந்தி அல்லது சோனியா காந்தியைப் போல் ராகுல் காந்தி மக்களை நேரில் சந்திக்கவில்லை. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களை நேரில் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
ராஜீவ் கவுடா: ராகுல் காந்தி மற்றவர்களைப் போல் பதவி வெறி பிடித்தவர் அல்ல. பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட்ட கோவா, மத்திய பிரதேசம், கர்நாடக மாநிலங்களில், அக்கட்சி ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்ததை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இதுபோன்ற எதிர்மறையான குணங்கள் ராகுல் காந்தியிடம் கிடையாது. அவரது மதிப்பை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எந்த பலனையும் எதிர்பார்க்காமல் நாங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறோம்.
கேள்வி: காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க நேரு-காந்தி பாரம்பரியம் என்ன செய்யப்போகிறது?
ராஜீவ் கவுடா: கொரோனாவை அடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நமக்கு தொழில்நுட்பம் வழியான தொடர்பை கற்றுத் தந்திருக்கிறது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை கட்சி நேரில் தொடர்பு கொள்ளமுடியும். எங்கள் தலைவர் சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் கூட்டங்களை நடத்தி வருகிறார். கர்நாடகா காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற டி.கே. சிவகுமார்,அந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்தார். இவ்வளவு பெரிய நாட்டில் இதுபோன்ற தொழில் நுட்பம் புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்களுடன் நேரடி தொடர்புகொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
குமார் கெட்கர்: காங்கிரஸ் கட்சியில் சேருவோர், பதவிக்காக மட்டுமே வருகிறார்களா என்பதை காங்கிரஸ் கட்சி கவனிக்க வேண்டும். அவ்வாறு வருவோரை அடையாளம் கண்டு, அவர்களை கட்சி அமைப்புகளில் இருந்து தள்ளிவைக்க வேண்டும்.
Nalla pathivu
தேசியமுரசு இணைய இதழ் இந்திய தேசிய காங்கிரஸை வலுப்படுத்தும் என நம்புகிறேன்.
நன்றி மகிழ்ச்சி
மபி யிலும் ராஜஸ்தானிலும் மட்டுமல்ல..ஆந்திரா மே.வங்கத்திலும் நடந்தது.பாண்டிச்சேரியிலும் நடந்திருக்கவேண்டியது.நமச்சிவாயம் பொறுமை காத்தார்.தமிழ்நாட்டில் சிவாஜி மூப்பனார் வாழப்பாடி .தமிழ்நாட்டை திராவிட கட்சிகளுக்கு நிரந்தர குத்தகை.1967லிலிருந்து தமிழக காங்.வாக்குகள் இல்லாமல் எந்த அமைந்ததில்வை.கூட்டணியால் தமிழக காங்கிரசுக்கு எந்த நன்மையுமில்லை.வாரியத்தலைவர் பதவிகூட கிடையாது.டெல்லி எனக்கு சென்னை உனக்கு என்ற கூட்டணி கொள்கை வேண்டாம்.காங்கிரசின் அடித்தளமே தகர்ந்துவிட்டது.ல
தங்களது உணர்வுகளை மதிக்கிறேன்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை பொருத்தவரை தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் கொடுக்கவேண்டும், கோஷ்டி பூசல் இருக்க கூடாது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள், அவர்களை தட்டி எழுப்பும் நல்ல சுரு சுருப்பான தலைவர் தேவை யாருக்கும் பயப்படதா மக்கள் நலனிலும் தொண்டர்கள் நலனிலும்,கட்சியின் நலனிலும், எல்லாரையும் அரனைத்து,எந்தவித ஆதயநோக்கத்தோடும் இல்லாமல் கட்சியினர்களை பாகுபாடு காட்டாமல் ஒழக்கத்தோடும் கண்ணியத்தோடும்,நடக்கும் தலைவரை தேர்ந்தெடுத்து கட்சியை நடத்தினால் காங்கிரஸ் வருங்காலத்தில் ஆட்சி அமைக்கலம் நம்மிடம் தொண்டர்கள் அதிகமாக உள்ளனர் யாரும் கண்டு கொள்வது கிடையாது பல கிராமங்கள் சென்று இருக்கிறேன் காங்கிரஸ் தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக இருக்கிறார்கள். வேதனையுடன் நல்ல தலைவர் வர மாட்டார என்ற ஏக்கத்தோடு, …ஜெய்ஹிந்,.,.வாழ்க காங்கிரஸ்.,.,வளர்க காங்கிரஸ்….நாளை நமதே….
சிறப்பான கேள்வி பதில்கள். தெளிவு பெற பேருதவியாக உள்ளது.
காங்கிரஸின் கொள்கை வாதங்களையூம் எடுத்துரைக்கும்.
விசமதனமான சங்கிகளுக்கு
சரியான பதில் சாட்டையடி கொடுக்க
தேசிய முரசு ஒளிக்கட்டும்