”எனக்கு ஒரு நண்பர் இருந்தார். மிகவும் இனியவர். பல கண்ணாடிகளை சிதறடிக்கும் வகையில் அவரது முகம் கோரமாக இருந்தது. இருந்தாலும், அழகு ராணியை மட்டுமே திருமணம் செய்ய அவர் விரும்பினார். அவருக்குள்ள குறைபாட்டைச் சொல்ல குடும்பத்தாரும் நண்பர்களும் முயன்றனர். அதை ஏற்க மறுத்த அவர், தன் அழகு தேவதையை தேடத் தொடங்கினார். அவரது நலன் விரும்பிகள் எதிர்பார்த்ததைப் போல், 40 வயது பிரம்மச்சாரியான அவருக்கு தலையில் வழுக்கை விழ ஆரம்பித்தது. நிலைமை இப்படி ஆனபிறகும், தன் எதிர்பார்ப்புகளை அவர் குறைத்துக் கொள்ளவில்லை…”
இந்த கதைக்கு அப்படியே நேர்மாறாக ஜீ என்டர்டைன்மென்ட் நிறுவனத்துக்கு முதலாவது கால் நிதியாண்டில் ஏற்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த நிறுவனத்தில் லாபம் 94 சதவிகிதம் சரிந்தது. அதே நாளன்று, இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை 13 சதவிகிதம் ஆனது. பொது முடக்கத்தின்போது, இந்த நிறுவனம் எவ்வளவு லாபம் ஈட்டும் என்பதில், முதலீட்டாளர்கள் ஏற்கனவே குறைவான எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த நிலையில், ஜி நிறுவனத்தின் வருவாய் 50 சதவிகிதம் குறையும் என்று கருதப்பட்டது. ஆனால், அதன் வருவாய் 35 சதவிகிதம் மட்டுமே சரிந்தது. எனவே, ஜி நிறுவனத்துக்கு இந்த முதல் காலாண்டு மோசமானதாக இருந்தாலும், தலால் தெருவின் எதிர்பார்ப்பை வென்றது.

50 நிறுவனங்களில் 48 நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டின. மேலும் தங்களை அதிகபட்ச வருவாய் ஈட்டுவோராக அறிவித்துக் கொண்டன. இதில் 33 நிறுவனங்கள் நிபுணர்களின் கணிப்பை முறியடித்துள்ளன. இருந்தாலும், கடந்த 2019 வரையிலான ஒட்டுமொத்த வருவாயை ஒப்பிடும்போது, 40 சதவிகிதத்துக்கு அதிகமாக வருவாய் குறைந்துள்ளது.
‘சிஎம்ஐஇ’ எனப்படும் இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் தொகுப்பின் முடிவைப் பார்த்தால், 2019-20 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பட்டியலிடப்பட்ட 4 ஆயிரத்து 120 நிறுவனங்களின் மொத்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 46 சதவிகிதம் குறைந்துள்ளது.
பொது முடக்கத்தால் ஏற்கனவே சரி செய்துகொண்டிருந்த அனைத்து தரகர்களின் வருவாய் மதிப்பீட்டை குறைக்கத் தூண்டியுள்ளது. சிஎல்எஸ்ஏ என்ற பெரும் தரகு நிறுவனம், லாபம் ஈட்டும் நிறுவனங்களின் காலாண்டு மதிப்பீட்டை கடந்த 22 காலாண்டுகளாக தொடர்ந்து குறைத்து வருகிறது. தங்கள் விற்பனையில் பெரும் அடி என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் தான் அவர்கள் தங்கள் செலவுகளை வழக்கத்தைவிட அதிகமாக குறைக்கிறார்கள்.
‘சிஎம்ஐஇ’ தொகுப்பு முடிவின்படி, பட்டியலிடப்பட்ட 1,786 நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதாக அறிவித்துக் கொண்டாலும், அவர்களது வருவாய் 25 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேசமயம், செலவுகளும் 26 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன.
‘சிஎம்ஐஇ’ தலைவர் மகேஷ் வியாஸ் கூறும்போது, ”1,560 நிறுவனங்களில் ஊதிய உயர்வு 3 சதவிகிதத்துக்கு குறைவாக உள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இது குறைவான ஊதிய உயர்வாகும். இத்தகைய குறைவான ஊதிய உயர்வால், ஊதிய விகிதம் அதிகரிப்பதற்கு பதில் பெரும்பாலான நிறுவனங்களில் குறைந்துள்ளது” என்றார்.
உண்மையிலேயே எதுவாக இருந்தாலும், பொது முடக்கத்தின் போது இந்தியாவால் சமாளிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும் நுகர்வு சந்தைக்கு இந்திய பொருளாதாரத்தை மோடி அரசு மாற்றியமைக்க வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.
கட்டுரையாளர்: ஆனின்ட்யோ சக்கரவர்த்தி