காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த தந்தை பெரியார் சுமார் ஒன்பதரையாண்டு காலம் காமராஜர் ஆட்சியை தம் தோள்மீது சுமந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார்.
1961 இல் தேவகோட்டையில் பேசும்பொழுது, மரண வாக்குமூலம்போல தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில்,
“தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சி காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.”
“தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”
பெரியாரின் மரண வாக்குமூலம், வரலாற்றில் கல்வெட்டு சொற்களாக பதிந்துவிட்டன. இதை எவரும் அழித்துவிடமுடியாது. பெரியாரின் பாராட்டுரைகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்று மின்னிக் கொண்டிருக்கின்றன. இன்றைய தமிழகத்திற்கு அடித்தளமே காமராஜரின் ஆட்சிதான் என்பதை எவரேனும் மறுத்துரைக்க முடியுமா?
மறுக்கமுடியாத உண்மை.. நம் பெருந்தலைவர் போன்று ஒரு தொலை நோக்கு கொண்ட சமுக மக்கள் தலைவர் இல்லை.. என்றும் ஐயா வின் வழியில் நான்..
இவன்
சைதை K விஜய்..