ஏவுகணைகள் - தேசிய முரசு - Desiya Murasu

எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும் – தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை (21.05.2021)
குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது சமூகத்தில் தவறான பிரதிபலிப்பையும், முன்னுதாரணத்தையும் உருவாக்கி விடும். எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு மேல் முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேருக்கு மட்டுமே தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனைக் காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை. ஏனெனில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உண்டு. அந்த 19 பேரைப் போல இந்த 7 பேரையும் குற்றமற்றவர்கள் என்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருந்தால் அதனை யாரும் எதிர்க்கப் போவதில்லை.

ஆனால், இந்த 7 பேரும் குற்றவாளிகள் என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அவர்கள் சட்ட ரீதியாகப் போராடி நீதிமன்ற தீர்ப்பு மூலம் விடுதலை பெற்றால் அதனைக் காங்கிரஸ் கட்சி எதிர்க்காது. ஆனால், 7 பேர் விடுதலைக்காக அரசியல் அழுத்தம் கொடுப்பதை ஏற்க முடியாது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ பேர் சிறைகளில் இருக்கும்போது, இந்த 7 பேருக்காக மட்டும் அமைச்சரவை தீர்மானம், ஆளுநரிடம் கோரிக்கை, போராட்டங்கள் என்று அரசியல் அழுத்தம் கொடுப்பது ஏன்? சிறையில் இருப்பவர்களில் இந்த 7 பேர் மட்டும்தான் தமிழர்களா?

தமிழக சிறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு ஆதரவளிக்கக் காங்கிரஸ் தயாராக உள்ளது. இந்த 7 பேருக்கும் மட்டும் சிறப்புக் கருணை காட்டுவதை ஏற்க முடியாது.

நீதிமன்ற தீர்ப்புக்குப் புறம்பாக சில குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது, வருங்காலங்களில் பல்வேறு குழுக்கள் அல்லது விரும்பத் தகாத சக்திகள், கொலைக் குற்றவாளிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்க வழி ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. காவல் துறை போன்ற விசாரணை அமைப்புகளும், நீதிமன்றங்களும் தேவையில்லை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி விடும்.

சட்டப்படி குற்றவாளிகள் என்று எந்த நீதிமன்றம் தண்டித்ததோ, அதே நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எனவே, 7 பேர் விடுதலையைச் சட்ட ரீதியாக அணுக வேண்டுமே தவிர, அரசியல் ரீதியாக அணுகக் கூடாது என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.

The post எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும் – தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை (21.05.2021) appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் மனப்பூர்வமாக வாழ்த்துகிறது – தலைவர் கே.எஸ்.அழகிரி
கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றி, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியை தி.மு. கழகத் தலைவரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவருமான தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்திட தமிழக மக்கள் அமோக ஆதரவுடன் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று கட்சியிலும், ஆட்சியிலும் நிர்வாக முத்திரைகளைப் பதித்த பெருமை அவருக்கு உண்டு. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றத்தை உறுதி செய்கிற வகையில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைத்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

இத்தகைய வெற்றியை ஈட்டுவதற்காகத் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிக மிக வித்தியாசமான, எவரும் இதுவரை செய்யாத வகையில் புரட்சிகரமான முறையில் பரப்புரை மேற்கொண்டதற்கு இன்றைக்குப் பலன் கிடைத்திருக்கிறது. தமிழக மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஈடு கொடுக்கிற வகையில் மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்குக் காங்கிரஸ் கட்சி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தை வழிநடத்திய முதுபெரும் தலைவர்களான பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில் இன்றைக்கு ஆறாவது முறையாக தி.மு.க. தலைமையில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சி அமைக்க இருக்கிறார். அவர் எதிர்கொள்ள இருக்கிற சவால் மிக்க பணிகளை மிகச் சிறப்பான முறையில் தீர்வு கண்டு மிகப் பெரிய வெற்றியை பெறுவார் என்ற   நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.

கடந்த மக்களவை தேர்தலில் இந்தியாவின் பிரதமராக திரு. ராகுல்காந்தி அவர்களை முன்மொழிந்து தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய பெருமை திரு. ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. அதேபோல, சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேண்டும் என வலியுறுத்திக் கூறியது, இன்றைக்குத் தமிழக மக்களின் பேராதரவோடு நிறைவேறியிருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாக அமைந்ததாலும், நீண்டகாலமாக நல்லிணக்கமும், சரியான புரிதலோடும் செயல்பட்ட காரணத்தாலும் இன்றைக்கு 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

தமிழகத்திற்கான  விடியல் இன்று தொடங்கியிருக்கிறது. இந்த விடியலின் மூலம் தமிழக மக்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கிற அனைத்து பின்னடைவுகளுக்கும் தீர்வு காண்கிற வகையில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியில் ஈடுபட வேண்டிய பொறுப்பும், கடமையும் அவருக்கு இருக்கிறது.  அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிற ஆற்றலும், அனுபவமும் மிக்க  திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழகம் தலைநிமிர்ந்து பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறத் தோளோடு தோள் நின்று செயல்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பாக மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் மனப்பூர்வமாக வாழ்த்துகிறது – தலைவர் கே.எஸ்.அழகிரி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மத்திய அரசே! 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடு! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
முக்கிய அம்சங்கள்:

மத்திய அரசே 100 சதவிகித தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு சரிசமமாக விநியோகம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு உரிய தீர்வாக அமையும்.

45 வயது மேற்பட்ட 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போட 60 கோடி டோஸ்கள் தேவைப்படுகின்றன. இதில் 12 கோடி டோஸ்கள் ஏற்கனவே போடப்பட்டுள்ளன. மேலும் ஏறக்குறை 50 கோடி டோஸ் தேவைப்படுகின்றன.

18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் கடந்தகால அரசுகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல, இன்றைய மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடிக்குக் கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே, அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போட முடியும். மாநில அரசுகளின் தலையில் சுமையை ஏற்றாமல், மத்திய அரசே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச தடுப்பூசி போட வேண்டும்.

கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து ஜனநாயக செயல்பாடுகள் முடங்கிய நிலையில், மத்திய அரசுக்குத் தெளிவு ஏற்படுத்துகிற வகையில் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்திலும், பீதியிலும் இருக்கும் போது சரியான வழிகாட்டுதலை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உணர்த்தியிருக்கிறது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு 50 சதவிகிதமும், மாநில அரசுகள் 50 சதவிகிதமும் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தவிர்த்து, மத்திய அரசே 100 சதவிகித தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்குச் சரிசமமாக விநியோகம் செய்யலாம் என்று கூறியிருப்பது, இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு உரிய தீர்வாக அமையும்.

ஒரு தடுப்பூசிக்கு மூன்று விலைகள் நிர்ணயம் செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தடுப்பூசி ரூ.185 விலையில் விற்கும் போது, இந்தியாவில் ரூ.400, ரூ.600, ரூ.1,200 என்று விற்பது எந்த வகையில் நியாயம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. அதேபோல, தடுப்பூசி விலையை நிர்ணயிக்கிற உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏன் வழங்கியது என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. ‘இதற்கெல்லாம் என்னால் உடனடியாக பதிலளிக்க முடியாது, கால அவகாசம் தேவை’ என்று மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியிருக்கிறார். இதன்மூலம் இந்திய மக்களை அச்சுறுத்துகிற கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு எத்தகைய தடுமாற்றத்துடன், தெளிவான அணுகுமுறை இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

கொரோனா என்பதைப் பேரிடராகக் கருதி, போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு உரிய முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே 4 மாதங்கள் விரயமாகி உள்ளன. தடுப்பூசி உற்பத்தியை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதோடு, கூடுதலாகப் பல நிறுவனங்களுக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம். அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கியிருக்கலாம். இன்றைக்கு சீரம் நிறுவனம் மாதம் 6 கோடி தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனம் 1 கோடி தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்கின்றன. ஜூலை முதல் உற்பத்தியைக் கூட்டுவதாக உறுதி செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறது. இந்நிலையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

45 வயது மேற்பட்டவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதென மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போட 60 கோடி டோஸ்கள் தேவைப்படுகின்றன. இதில் 12 கோடி ஏற்கனவே போடப்பட்டுள்ளன. மேலும் ஏறக்குறை 50 கோடி டோஸ் தேவைப்படுகின்றன. இந்நிலையில், புதிய தடுப்பூசி கொள்கையின்படி 18 வயதிற்கு மேற்பட்ட 63 கோடி பேருக்குத் தடுப்பூசி போட வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் இரண்டு டோஸ்கள் போட 120 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உடனடியாக தேவைப்படுகின்றன.

மத்திய அரசு கொள்முதல் விலையான ரூ.150 விலையில் கூட, தயாரிப்பு நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச லாபம் இருக்கிறது. தற்போது தடுப்பூசி கொள்கையின்படி மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.34,400 கோடியும் செலவாகும். இதன்மூலம் மொத்தம் ரூ.42,000 கோடி தான் செலவாகும். ஏற்கனவே, 2020-21 பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் கடந்தகால அரசுகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல, இன்றைய மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும். தனியார் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து இதற்கான நிதியை ஏற்றுக் கொண்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி உடனடியாக தடுப்பூசி போட்டு கொரோனாவின் பிடியில் சிக்கி உயிருக்காகப் போராடுகிற மக்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை பிரதமர் மோடி புரிந்து கொண்டு ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடிக்குக் கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே அனைத்து மக்களுக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி போட முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. பிரதமர் மோடி நினைத்தால், அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போட முடியும். இதை செய்வதன் மூலம், இந்திய மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

The post மத்திய அரசே! 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடு! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
முக்கிய அம்சங்கள்:

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் 25 பேரும், ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருப்பது காலம் கடந்த நடவடிக்கை.

காணொலிக் கூட்டத்தை நேரலையாக ஒளிபரப்பிய தில்லி முதலமைச்சரைக் கண்டித்ததில் காட்டிய வேகத்தை, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதில் பிரதமர் மோடி காட்டவில்லை.

கொரோனா பிடியில் சிக்கியிருக்கும் மக்களைக் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு இணைந்து செயல்பட வேண்டும்.

கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடுகிற முதன்மை பொறுப்பு மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பலமுறை வலியுறுத்தி வந்தன. இந்த அழுத்தத்தின் காரணமாக அனைத்து மக்களுக்கும் இலவசமாக மாநில அரசுகளின் மூலம் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இது காலம் தாழ்ந்த அறிவிப்பாகவே கருத வேண்டியிருக்கிறது.

அதேபோல, தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் 510 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தான் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, நேற்று இரவு தலைநகர் டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 20 பேர் பலியாகி இருக்கிற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களின் நேரடி பார்வையில் இருக்கும்போதே இத்தகைய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடியிடம் காணொலி கூட்டத்தில் ஆக்சிஜன் கேட்டுக் கெஞ்சிப் பேசியதைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்த கோரிக்கையைப் பரிவுடன் பரிசீலிக்காமல் காணொலி கூட்டத்தை ஒளிபரப்பியது குறித்து அவர்மீது கடும் கண்டனத்தைப் பிரதமர் மோடி வெளிப்படுத்துவதில் தான் கவனம் செலுத்தினார். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறைக்குப் பரிகாரம் காண எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் தில்லியில் 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பாகும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு 15 மாத காலத்தில் பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ளச் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை. இந்திய மக்கள் அனைவரும் அச்சத்திலும், பீதியிலும் இருந்து விடுபட உரிய மருத்துவச் சிகிச்சைகளை வழங்க மத்திய பா.ஜ.க. அரசு தோல்வியடைந்து விட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு, ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலை, விற்பனையைத் தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமே ஒப்படைத்தது, தடுப்பூசியை வாங்குவதற்குச் சந்தையில் ஆரோக்கியமற்ற போட்டி, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்போது ஏற்றுமதி இவை எல்லாமே பா.ஜ.க. அரசு எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவாகும்.

எனவே, கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் மக்களைப் பாதுகாப்பதை தலையாய நோக்கமாகக் கொண்டு, பொறுப்புணர்வோடு இப்பிரச்சினையைக் கையாள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

The post ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இந்தியாவில் 7 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்ட பிரதமர் மோடியே! 7 கோடி தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரேநாளில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது. மராட்டியம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதேபோல, கொரோனாவினால் ஏற்படுகிற உயிர்பலி நேற்று ஆயிரத்து இருபத்தி ஏழு ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதிக்கு பிறகு கொரோனாவுக்கு ஒரேநாளில் இதுதான் அதிகபட்ச உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒரே நாளில் 7 ஆயிரத்து  819 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இதிலிருந்து இந்திய மக்களை பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? இனி எடுக்கப் போகிற நடவடிக்கைகள் என்ன ?

கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு பல்வேறு தீர்வுகள் கூறப்பட்டாலும், முழு அடைப்பு தீர்வாகாது என்பது கடந்த கால அனுபவமாகும். இதனால், மக்கள் பாதிக்கப்பட்டதோடு, பொருளாதார பேரழிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகள் தெளிவான கொள்கைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

137 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் எவ்வித வேறுபாடின்றி கொரோனா தடுப்பூசி போட வேண்டியது மிகமிக முக்கியமான கடமையாகும். அதை முழுமையாக நிறைவேற்றுவதற்கு பதிலாக தடுப்பூசிகளை பா.ஜ.க. அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன் ? இதுவரை 7 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. ஆனால், ஏப்ரல் 14 நிலவரப்படி இந்தியாவில் 11 கோடியே 10 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதம் ஆகும். இதன்மூலம் இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 6 ஆயிரத்து 310 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால், பிரிட்டனில் 54 ஆயிரத்து 680, அமெரிக்காவில் 50 ஆயிரத்து 410 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாசி வீசி, மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிற நிலையில், தமக்கு வாக்களித்து பிரதமராக்கிய மக்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல், சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகவே கருத வேண்டியுள்ளது. ‘யாருக்கு அவசியமோ அவர்களுக்கு தான் தடுப்பூசியே தவிர, தேவைப்படுகிறவர்களுக்கெல்லாம் தடுப்பூசி போட முடியாது. கடுமையான பாதிப்பு யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்கு தான் தடுப்பூசி போட முடியும்’ என்று இவர்கள் கூறுவது மிகுந்த வேதனையை தருகிறது.

அதேபோல, தடுப்பூசியை விநியோகிப்பதிலும் மத்திய பா.ஜ.க. அரசு மிகுந்த பாகுபாட்டினை காட்டி வருகிறது. பா.ஜ.க. ஆட்சி இல்லாத மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்கள் தொகை 12 கோடி. அங்கு ஒருநாள் பாதிப்பு 57 ஆயிரம். இதுவரை 1 கோடியே 4 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.  6 கோடி மக்கள் தொகை கொண்ட பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. ஆனால், குஜராத் மாநிலத்தின் ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்து 21. அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிற மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரு நீதி, பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்திற்கு ஒரு நீதியா ?

உலக அரங்கில் தமது புகழை உயர்த்துவதற்காக இந்தியாவில் தயாராகும் தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற பிரதமர் மோடியின் அணுகுமுறையை எவரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்து   ஏற்றுமதி செய்கிற நிலையில் இந்தியா இருக்கிறதா ? ஆனால், இந்தியாவில் ஒரு நாளைக்கு 1 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. இதை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா ? இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. தற்போது கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிற இரண்டு நிறுவனங்களின் மொத்த உற்பத்தி திறன் 1 கோடியே 20 லட்சம். அந்த முழுமையான திறனை உற்பத்தி செய்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசிடம் நிதி கோரியிருக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவற்கு மத்திய பா.ஜ.க. அரசு தயக்கம் காட்டி, காலம் கடத்தி வருகிறது. அதனால் அந்த நிறுவனங்களால் எதிர்பார்த்த உற்பத்தியை செய்ய முடியவில்லை.

எனவே, கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்கிற இரண்டு நிறுவனங்களுக்கும் நிதியுதவியை அதிகரித்து உற்பத்தியை உயர்த்த வேண்டும். அதேபோல, ரஷ்யாவில் தயாராகும் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்பாட்டிற்கான அனுமதியை விரைவுபடுத்த வேண்டும். மேலும், புதிய நிறுவனங்களில் எவற்றிற்கு தகுதி இருக்கிறதோ, அவற்றிற்கு அனுமதி வழங்குவதில் தீவிரம் காட்ட வேண்டும். இதன்மூலமே இந்திய மக்கள் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடுவதில் வெற்றி பெற முடியும்.

கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி பொது முடக்கம் செய்யப்பட்ட மறுநாள் பிரதமர் மோடி பேசும் போது, ‘பாரதப் போருக்கு 14 நாட்கள் தேவைப்பட்டது. கொரோனா எதிர்ப்பு போருக்கு 21 நாட்கள் கூட தேவைப்படாது’ என்று பேசியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆனால், இந்தியாவில் இன்றைய நிலை என்ன ? இந்தியாவில் இதுவரை 1 கோடியே 38 லட்சம் பேர் கொரோனா  பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் கொரோனா எதிர்ப்பு போரினால் கிடைத்த பலன்களா ? எதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கிற பிரதமர் மோடி, அவற்றையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, இந்திய மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கிற முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இந்தியாவின் பிரதமராக மோடி செயல்பட வேண்டுமே தவிர, பா.ஜ.க.வின் பிரதமராக அவர் செயல்படக் கூடாது.

The post இந்தியாவில் 7 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்ட பிரதமர் மோடியே! 7 கோடி தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இருள் விலகி ஒளி பிறக்க தமிழ் புத்தாண்டை வரவேற்போம் – தலைவர் கே.எஸ்.அழகிரி
சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தைத் திங்களில் பொங்கல் திருநாளுக்கு முன்பு அறுவடை செய்து, மாடுகளுக்கும் நிலத்துக்கும் நன்றி செலுத்தி, மாசி மற்றும் பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில் ஆற்றங்கரையில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.

இளைய வயதினருக்கும் இந்த சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என் இலக்கியம் கூறுகிறது. ‘சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன’ என்றும், ‘இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்’ என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

உழைப்பு மற்றும் கொண்டாட்டத்துடன் சித்திரை திருநாளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சித்திரை திருநாளுக்கு தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முழு நிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும் பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடி வந்துள்ளனர்.

அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் என்பதால், சித்திரை திருநாள் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும்.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானிலை ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலப் பகுதியாகும். சூரியனை, பூமி சுற்றிவர 365 நாட்கள் 6 மணி, 11 நிமிடங்கள், 48 வினாடிகள் ஆகிறது. இதுவே தமிழ் வருடத்தின் கால அளவாகும்.

வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இதனை உணர்த்தும் வகையில், வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடியை தமிழ் புத்தாண்டில் உண்பது தமிழர்களின் வழக்கமாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

வழுக்கு மரம் ஏறுவது, வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக் கூத்து ஆகியவை இன்றைக்கும் இலங்கையில் தமிழர்கள் சித்திரை முதல் நாள் அன்று கொண்டாடுகின்றனர்.

இப்படி சித்திரை மாதத்தை தமிழர்கள் இன்று வரை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். நமது கொண்டாட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியியல் ஆகியவை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதையும் தலைமுறை தலைமுறையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், சமீப காலமாகத் தமிழர்கள் மீது கலாச்சார, பண்பாட்டுப் படையெடுப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருகிறது. இதனை ஜனநாயக ரீதியாக மக்கள் போராடி முறியடித்தும் வருகிறார்கள். அதோடு, தமிழர்களின் எதிரிகள் அடையாளம் காணப்பட்டு, வாக்குரிமை மூலம் ஒதுக்கப்பட்டு வரும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விவசாயிகளுக்கு எதிராக இந்த ஆட்சியாளர்கள் நடத்தும் போர், மனிதநேயமற்றது என்பதை உலக நாடுகளே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழகத்தை ஆண்டவர்களும் 10 ஆண்டுகளாக வாய் மூடி மவுனமாகிப் போனார்கள். தமிழ் மண்ணை அழிக்க முயன்றார்கள். மொழியை அழிக்க முயன்றார்கள். அதன்பின் தமிழர்களையே அழிக்க முயல்கிறார்கள். நீட், உதய் மின் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் மற்றும் 8 வழிச்சாலை என மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து, அதன்மூலம் தமிழக மக்களையும் அழிக்கும் முயற்சியில், அ.தி.மு.க.வுடன் சேர்ந்து பா.ஜ.க.வினர் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதைத் தமிழர்கள் அறிவார்கள்.

தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அத்துனை துன்பங்களுக்கும் இந்த தேர்தல் பதில் தரும் வகையில் மக்கள் மத்தியில் எழுச்சியைப் பார்க்க முடிந்தது. கடந்த 10 ஆண்டுகளாக விடியலைத் தேடி சித்திரை திருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழர்களுக்கான ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையை தமிழக மக்கள் அளித்துள்ளனர். இந்த தமிழ் புத்தாண்டு தமிழர்கள் இழந்த உரிமைகளையும் தன்மானத்தையும் மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும் வழி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்வை சூழ்ந்திருந்த இருள் அகன்று ஒளி பிறக்க, தமிழ் புத்தாண்டை சிரம் தாழ்த்தி வரவேற்போம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

The post இருள் விலகி ஒளி பிறக்க தமிழ் புத்தாண்டை வரவேற்போம் – தலைவர் கே.எஸ்.அழகிரி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தமிழக அரசே! மீன்பிடி தடை காலத்தை மாற்றியமைத்திடு! நிவாரண தொகையாக ரூ.7,500 வழங்கிடு! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்;டம் 1983 விதிகளின்படி ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் துவங்கி, கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் வரை உள்ள மீனவ கிராமங்களில் இருந்து படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மீன்பிடித் தடைகாலம் துவங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதைத் தொடர்ந்து மீன்பிடித் தடை காலத்திலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 135 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனை கருத்தில் கொண்டு நடப்பு 2021 ஆம் ஆண்டு மீன்பிடித் தடை காலத்தை 61 நாட்களிலிருந்து 45 நாட்களாக குறைத்து அறிவிக்க வேண்டும்.

இந்த மீன்பிடித் தடைகாலம் பொருத்தமற்ற நேரத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடை காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை என்பதற்கு பதிலாக, அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை என மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில், கடந்த ஆண்டில் 135 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதன்படி, இனவிருத்தி நடைபெறும் நேரத்தில் மீனவர்களை அனுமதித்துவிட்டு, மீன்வகைகள் இனவிருத்தி நடைபெறாத நேரத்தில் மீனவர்களை மீன்பிடிக்கக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் சினைகள், மீன் குஞ்சுகளுடன் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் ஆண்டுதோறும் மீன்வரத்து குறைந்து வருகிறது.

மேலும், நல்ல மழை பொழிவு இருக்கும் மாதங்களான அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் மீன் வகைகளில் சினை முட்டைகள், குஞ்சுகளாக இருப்பதால் அதற்கேற்றவாறு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை திருத்தியமைத்து மீன்பிடி தடை காலத்தை  மாற்றியமைக்க வேண்டும்.

அறிவியலுக்கு அப்பாற்பட்டு மீனவர்களுக்கும், மத்திய – மாநில அரசுகளுக்கும் எந்த விதத்திலும் பயன் தராத, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான தடையை உடனடியாக திருத்தியமைக்க வேண்டும். அதேபோல, மீனவர்களுக்கு மீன்பிடித் தடைகால நிவாரணமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் 5 ஆயிரத்தை ரூபாய் 7500 ஆக உயர்;த்தி வழங்க வேண்டும். அண்டை மாநிலமான ஆந்திராவில் நிவாரணத் தொகை ரூபாய் 4 ஆயிரமாக இருந்ததை, தற்போது ரூ.10 ஆயிரமாக வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  விசைப்படகுகளை பராமரிக்க அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும்.

எனவே, மீன்பிடித் தொழில் என்பது பல்வேறு நெருக்கடிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் இடையே கடலில் சென்று தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இயற்கை சீற்றத்தினாலும், இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதலினாலும் உயிரிழப்புகளையும், உடமை இழப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை மீனவர்களுக்கு இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மனிதாபிமான உணர்வோடு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் நிவாரணத் தொகையை ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் மீன்பிடித் தடை காலத்தை மாற்றியமைக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

The post தமிழக அரசே! மீன்பிடி தடை காலத்தை மாற்றியமைத்திடு! நிவாரண தொகையாக ரூ.7,500 வழங்கிடு! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

வருமான வரி சோதனை நடத்தும் பா.ஜ.க.வே! கடந்த ஐந்தாண்டுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளின் தொடர் நடவடிக்கை என்ன? தலைவர் கே.எஸ். அழகிரி கேள்விக்கணை!
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியே ஒரு ஊழல் ஆட்சி என்பதற்கு நிறைய ஆதாரங்களை கூற முடியும். அந்த கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு,சிறை சென்றவர். இந்தியாவிலேயே ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே, ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, சிறைக்கு சென்ற ஜெயலலிதாவை தவிர வேறு எந்த முதலமைச்சரும் இருக்க முடியாது. அத்தகைய ஊழல் பாரம்பரியத்தில் வந்தவர்தான், இன்றைக்கு அம்மாவின் ஆட்சி நடத்துகிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதாகக் கருதி, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வருமான வரித்துறை, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது என்கிற விவரம் வருமான வரித்துறையால் வெளியிடப்படவில்லை. இவை அனைத்துமே தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை களங்கப்படுத்துகிற முயற்சியாகவே கருதப்படுகிறது. இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தயாராக இருக்கிறது. வெற்றியை நோக்கி பீடுநடை போட்டு வருகிற தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, பா.ஜ.க.வின் அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை.

2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ‘எஸ்.ஆர்.எஸ். மைனிங்’ நிறுவனத்திடமிருந்து, அன்றைய அமைச்சர்கள் வைத்தியலிங்கம் ரூ.227 கோடி, நத்தம் விஸ்வநாதன் ரூ.197 கோடி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் ரூ.217 கோடி என மொத்தம் ரூ.646 கோடி பெற்றிருக்கிறார்கள். இந்த தொகைகள் தேசிய ஊரக சுகாதார இயக்கம் என்று எழுதப்பட்டு, இந்திய அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன. இதை நாம் கூறவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டில் வருமான வரித்துறையின் தலைமை இயக்குநர் இதுகுறித்த ஆதாரங்களை வருமான வரித்துறையின் தலைமை விசாரணை அதிகாரிக்கு ஒரு குறிப்பை அனுப்பியிருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், வருமான வரித்துறை கடந்த 4 ஆண்டுகளாக எடுத்த நடவடிக்கை என்ன ? தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன ?

2016 சட்டமன்றத் தேர்தலில் மேற்கண்ட தொகைகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கிய நிறுவனம் எஸ்.ஆர்.எஸ். மைனிங் கம்பெனி. இதன் இயக்குநர் ஜெ. சேகர் ரெட்டி. தமிழகம் முழுவதும் இந்த தொகையை சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு இந்நிறுவனம் வழங்கியிருக்கிறது. இவர்கள்தான் நெடுஞ்சாலைத்துறையிலும், மணல் கொள்ளையிலும் ஈடுபட்டவர்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ஜெ. சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.140 கோடி ரொக்கம், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை என்ன ? அமலாக்கத்துறை இதுபற்றி விசாரித்ததா ?

அ.தி.மு.க.வின் ஊழல் இத்துடன் நிற்கவில்லை. கடந்த 2017 ஏப்ரல் 7 அன்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்;டில் சோதனை நடத்தியதில், ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. அதைத் தவிர, ரூ.5.5 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இதுகுறித்து வருமான வரித்துறை வழக்கு தொடர, மத்திய புலனாய்வுத்துறைக்கு பரிந்துரை செய்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக மத்திய புலனாய்வுத்துறை இதில் என்ன நடவடிக்கை எடுத்தது ? விசாரணை நடத்தியதா ? வழக்கு பதிவு செய்யப்பட்டதா ?

முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் 2016 செப்டம்பர் 12 அன்று நாற்பது இடங்களில் வருமான வரித்துறை சோதனையிட்டது. இதில் ரூ.200 கோடி கரூர் சி.பி. அன்புநாதன் என்பவர் மூலம் ஹாங்காங்கிற்கு ஹவாலா பண பரிமாற்றம் நடந்ததாக வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதுகுறித்து வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை என்ன ?

இறுதியாக, நேர்மையைப் பற்றியும், யோக்கியதையைப் பற்றியும் பேசுகிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி குற்றம் சாட்ட விரும்புகிறோம். உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று கூறியதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை. மாறாக, குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க 2018 அக்டோபர் 12 இல் ஆணையிட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் தடையாணை பெற்றார். இதற்கு தடை வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இன்றைக்கு பா.ஜ.கவின். தயவால் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு மத்திய புலனாய்வுத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது ? இதுகுறித்து சி.பி.ஐ. பாராமுகமாக இருப்பது ஏன் ? இதன்மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியை பாதுகாத்து வருகிறார் என்று குற்றம்சாட்ட விரும்புகிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சி.பி.ஐ.யின் பிடியில் இருப்பதால், மத்திய பா.ஜ.க. அரசை எதித்து பேசுகிற துணிவற்றவராக இருக்கிறார். இதனால் தமிழகத்தின் நலன்கள், உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிற பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டவும், அ.தி.மு.க.வின். அராஜக ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கவும் மக்கள் தயாராகி விட்டார்கள். அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி முழு தோல்வியடைந்த பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியினர் கடைசி நேரத்தில் எதிர்கட்சிகள் மீது வருமான வரித்துறையை ஏவிவிட்டிருக்கிறார்கள். இதை முறியடித்து மக்களின் பேராதரவோடு தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையில் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைந்து, வளர்ச்சிப் பாதையில் தமிழகம் பீடுநடை போடும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

The post வருமான வரி சோதனை நடத்தும் பா.ஜ.க.வே! கடந்த ஐந்தாண்டுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளின் தொடர் நடவடிக்கை என்ன? தலைவர் கே.எஸ். அழகிரி கேள்விக்கணை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்ட வேண்டாமா? அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டாமா? தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை
தமிழகத்தில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர், மத்திய பா.ஜ.க. அரசின் மூலம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் கூறி வாக்கு கேட்காமல், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 2014 மக்களவைத் தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம், கருப்பு பணம், கள்ளப் பணத்தை ஒழிப்போம், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவோம் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை பிரதமர் மோடி வழங்கினார். ஆனால், 45 ஆண்டுகாலங்களில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில் தலைவிரித்தாடி வருகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளினால் இது பலமடங்கு கூடிவிட்டது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஏழ்மையில் சிக்கிக் கொள்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த 2020 ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் மாத ஊதியம் பெறுகிற 12 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இது 15 கோடியாக தற்போது உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் மொத்த மக்கள் தொகையே 33 கோடி தான். ஆனால், அதில் பாதி அளவிற்கு இந்தியாவில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். பொது முடக்கத்திற்கு பிறகு, இந்தியாவில் ஏழை மக்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்துள்ளது. இதுதான் மோடி ஆட்சியின் சாதனையாகும்.

இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியில் அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களின் சொத்து குவிப்பு தான் நிகழ்ந்துள்ளது. மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 13 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூபாய் 6 லட்சத்து 58 ஆயிரத்து 400 கோடியாக உயர்ந்துள்ளது. பொது முடக்கத்திற்கு பிறகு ஒரு மணி நேரத்தி;ற்கு ரூபாய் 90 கோடியை முகேஷ் அம்பானி சம்பாதித்து வருவதாக 2020 ஆம் ஆண்டிற்கான ஐ.ஐ.எப்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது முறையாக முதலிடத்தை பெற்று வருகிறார். உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரர் என்ற தகுதியையும் பெற்று வருகிறார்.

பிரதமர் மோடியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கௌதம் அதானி. அவரது சொத்து மதிப்பு 2017-2020 வரை 6 மடங்கு உயர்ந்துள்ளது. 34 பில்லியன் டாலராக, அதாவது 5.37 பில்லியன் டாலரில் இருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதேபோல, அம்பானியின் சொத்து மதிப்பு இதே காலத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 26.6 பில்லியன் டாலரிலிருந்து 74.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 39 சதவிகித சொத்துக்கள் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் குவிந்துள்ளன. அம்பானி, அதானி சொத்து குவிப்புகள் மோடி ஆட்சியில் அசுர அளவில் வளர்ந்திருப்பதற்கு யார் காரணம் ? பிரதமர் மோடி இல்லை என்று மறுக்க முடியுமா ?

கார்ப்பரேட் நிறுவனங்களின் நண்பராக பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் இருக்கிற காரணத்தால் தான் அவர்களுக்கு நன்கொடைகள் அதிக அளவில் வழங்கப்படுகின்றன. இதுவரை 3 கட்டங்களாக விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பான ரூபாய் 6,128 கோடியில் 95 சதவிகிதம் பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ரூபாய் 1 கோடி மதிப்பிலானது.

பா.ஜ.க.வை பொறுத்தவரை, கார்ப்பரேட்டுகளின் நலனை பாதுகாப்பதில் காட்டுகிற அக்கறை தமிழகத்தின் வளர்ச்சியில் காட்டியதில்லை. இயற்கை சீற்றம், வறட்சி காரணமாக தமிழகம் பாதிக்கப்பட்ட போது, 2011-12 ஆம் ஆண்டுகளில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா முதல் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரை பலமுறை நிவாரண உதவி கோரியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு, 2016 இல் வார்தா புயல், 2017 இல் ஒக்கி புயல், 2018 இல் கஜா புயல் ஆகிய பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்க அ.தி.மு.க. அரசு கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் 500 கோடி. ஆனால், பா.ஜ.க. அரசு 6 கட்டங்களாக கொடுத்ததோ, ரூபாய் 5778 கோடி. தமிழக அரசு கேட்ட தொகையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகத் தான் நிவாரண நிதியை மத்திய பா.ஜ.க. அரசு வழங்கியது. இதுதான் பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி. தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிற பிரதமர் மோடி, நிதியை ஒதுக்குவதில் தமிழகத்தை வஞ்சிக்கலாமா ? பாரபட்சம் காட்டலாமா ?

உலகில் தொன்மையான மொழி தமிழ் மொழி என்று கூறி திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் ஆகியோரை மேற்கோள் காட்;டுகிறார் பிரதமர் மோடி. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மத்திய பணியாளர் தேர்வுகளில் இந்தி திணிப்பு ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ் மொழிக்காக பாரபட்சமாக நடந்து கொண்டதற்கு நிறைய சான்றுகளைக் கூறலாம். இந்தியாவில் சமஸ்கிருத மொழியை பரப்புவதற்காக கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 644 கோடியை பா.ஜ.க. அரசு செலவழித்திருக்கிறது. ஆனால், செம்மொழித் தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 29 கோடி மட்டும் தான். இதை ஒப்பிடும் போது சமஸ்கிருதத்திற்கு 29 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சமஸ்கிருத மொழி பேசுவோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 821 மட்டுமே. ஆனால், 7 கோடி மக்கள் பேசுகிற தமிழ் மொழி உள்ளிட்ட தென்மாநில மொழிகளுக்கு ஒதுக்கப்பட்;ட தொகை வெறும் ரூபாய் 29 கோடி தான். இதன்மூலம் சமஸ்கிருதம், இந்தி அல்லாத மொழிகளை சமமாக பாவிக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாரபட்சம் காட்டுவது தான் பிரதமர் மோடியின் தமிழ் பற்றாகும்.

தமிழர்களின் அடையாளம், நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை அழிப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. நாம் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், 3 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பெருமை கொண்ட பண்பாடு, நாகரீக அடையாளத்தை எந்த நிலையிலும் இழக்க முடியாது. இதை அழிப்பதற்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதை முறியடிப்பதுதான் தமிழர்களின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். அதன்மூலமே தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

The post பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்ட வேண்டாமா? அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை  அகற்ற வேண்டாமா? தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மக்கள் விரோத பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை ஏன் தோற்கடிக்க வேண்டும்? தலைவர் கே.எஸ். அழகிரி சமர்ப்பித்த குற்றப் பத்திரிகை
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு பாடம் புகட்ட வேண்டும்.

பா.ஜ.க. அரசின் கொள்கைகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கிற அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது.

தமிழகத்தில் நடைபெற்று வருகிற அராஜக ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் வளர்ச்சி இல்லை, முன்னேற்றம் இல்லை. முதலீடு செய்ய தொழில் முனைவோர் முன்வரவில்லை.

10 லட்சம் பேருக்கு வேலை தருவதாக முதலமைச்சர் எடப்பாடி கூறுகிறார். ஆனால், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 66.37 லட்சம் பேர் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கிற 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு காரணமாக 405 மாணவர்களுக்கு தான் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு மூலமாக வாய்ப்பு கிடைக்கிறது. இந்த அவலநிலையிலிருந்து தமிழகத்தை மீட்க கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.

குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களவையில் வாக்களித்து விட்டு, இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பது சிறுபான்மை மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சியாகும்.

தமிழக அரசு ரூபாய் 5.41 லட்சம் கோடி கடன் சுமையில் இருக்கிறது. பொருளாதார நிலையில் அதல பாதாளத்தில் இருக்கும் அ.தி.மு.க. அரசு இலவசங்களை வழங்கப்போவதாக கூறுவது அரசியல் மோசடி.

10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை. தமிழகத்திற்கு விடிவு காலம் ஆட்சி மாற்றமே.

பிரதமர் மோடி இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்த அவர், தமிழக மண்ணில் காலடி எடுத்து வைக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவருக்குக் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் தயாராகிவிட்டார்கள். ‘கோ பேக் மோடி’ என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு இன்றைக்கு ஒலிக்க வேண்டும். ‘தமிழகத்திற்குள் நுழையாமல் திரும்பிப் போ…’ என்று தமிழக மக்கள் கோஷமிடுவது ஏதோ உணர்ச்சி வயப்பட்டு அல்ல.

கடந்த ஆறரை ஆண்டு கால மோடி ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள், மாற்றாந்தாய் மனப்போக்கு, தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்கள், தமிழரின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகள் என, மோடியைத் திரும்பிப் போகச் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், அவரை வரவேற்பதற்கு ஒரு காரணம் கூட இல்லை என்பது தான் எதார்த்தம்.

தமிழகம் வரும் மோடியை ஒட்டுமொத்த தமிழர்களும் ஒரே குரலில் ‘திரும்பிப் போ மோடி’ என்று உரக்கக் கோஷமிடுவதற்கான காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து குடும்பத் தலைவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தாலோ, அல்லது 2014 ஆம் விதிக்கப்பட்ட கலால் வரியை விதித்தாலோ, ஒரு லிட்டர் பெட்ரோலை 44 ரூபாய்க்கு விற்க முடியும். அதேபோல், கலால் வரிக்கு மாற்றாக 28 சதவிகித ஜி.எஸ்.டி. விதித்தால், ஒரு லிட்டர் பெட்ரோலை 38 ரூபாய்க்கு விற்க முடியும். 2014 ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்த கலால் வரி, 2021 ஆம் ஆண்டில் 200 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதுவரை ரூபாய் 21 லட்சம் கோடியை கலால் வரியாக மத்திய பா.ஜ.க. அரசு வசூலித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.

பொதுத்துறை நிறுவனங்களின் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை, 2022 ஆம் ஆண்டுக்குள் விற்பது என நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, கப்பல்துறை, ரயில்வே, இந்திய காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றின் சொத்துக்களை விற்று, இலக்கை அடைய இருப்பதாக இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் 13 லட்சம் கோடியாக உயர்ந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தொகையில் 1 சதவிகிதத்தை ஒதுக்கினால் ஒவ்வொரு ஏழைக்கும் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முடியும். ஆனால், ஏழை, எளியவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, அதானி – அம்பானியின் சொத்துக்களைப் பெருக்குவதற்குத்தான் முனைப்புக் காட்டுகிறார்.

இந்தியாவில் சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.83 கோடியை பா.ஜ.க. அரசு செலவழித்திருக்கிறது. செம்மொழித் தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.29 கோடி மட்டும் தான். அதேசமயம், சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சமஸ்கிருத மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 821 மட்டுமே. அதாவது, 121 கோடி மக்கள் தொகையில் 0.00198 சதவிகிதம் தான். இதற்குத் தான் மக்கள் வரிப்பணத்திலிருந்து சமஸ்கிருத மொழியை வளர்க்கப் பாரபட்சமாக பா.ஜ.க. அரசு நிதியை ஒதுக்கியுள்ளது.

கடந்த 2011 இல் அன்றைய மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட சுற்றறிக்கைக்குப் பிறகு கூட, தமிழகத்தில் தொடர்ந்து 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 2015 லிருந்து தான் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. அதை நீக்குவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால்,மெரினாவில் தமிழர்களின் புரட்சி நடைபெற்று ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறுகிற சூழல் ஏற்பட்டது.

கடந்த காலங்களில் புயல் சேதங்களுக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட மொத்த நிவாரணத் தொகை 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய். ஆனால், மோடி அரசு 6 கட்டங்களாகக் கொடுத்ததோ வெறும் 5 ஆயிரத்து 778 கோடி ரூபாய். தமிழக அரசு கேட்ட தொகைக்கு 5 சதவிகிதத்துக்குக் குறைவாக நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்திலிருந்தது. கொரோனாவை எதிர்கொள்ள ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய் தருமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. ஆனால், வெறும் 510 கோடி ரூபாயை மட்டுமே மோடி அரசு வழங்கியது.

அமித்ஷாவின் உள்துறை அமைச்சகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஒரே நாடு ஒரே தகுதி’ என்ற அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் 10 சதவிகித இட ஒதுக்கீடு முடிவு, நீட் தேர்வின் சாராம்சத்தையே நீர்த்துப் போகச் செய்துவிடும். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 இட ஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது குறித்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதில் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, மாணவர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார்கள்.

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. இந்தியாவைப் பொருளாதார அழிவை நோக்கி பிரதமர் மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பொது முடக்கம் ஆகியவை பெரிய அடி மட்டுமல்ல… சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்ட பேரழிவு தாக்குதல்கள்.

தமிழகத்தின் மீது புதிய கல்விக் கொள்கையைப் புகுத்தி இந்தி திணிப்பை பா.ஜ.க. அரசு செய்கிறது. தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கிற வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருக்கிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள 12 ஆயிரம் எழுத்தர் பணிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்காக வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் அதற்கான தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தியது. இதில் குறைந்தது 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் தென் மாநிலங்களில் உள்ளது என்ற போதிலும், மாநில மொழிகளில் தேர்வு எழுதுகிற உரிமை மறுக்கப்பட்டது.

அதேபோல், தபால் துறையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இதன்மூலம், தமிழர்களின் அடையாளத்தை அழிக்கிற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு, வகுப்புவாத ஒற்றைக் கலாச்சாரத்தைத் தமிழகத்தின் மீது திணிக்கத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதிலிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், பாஜகவின் பிடியிலிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். அப்படி அகற்றுவதன் மூலமே நமது தனித்தன்மை காப்பாற்றப்படும் என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய புள்ளியியல் ஆய்வக நிறுவனத் தரவுகள் தெரிவிக்கின்றன. வறுமை 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில், திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரம் நிச்சயமாக ரத்து செய்கிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

இப்படித் தொடர்ந்து தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தோடு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளைக் கேட்பார். மோடியின் ஒவ்வொரு அசைவும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதிரானதாகவே உள்ளது. இந்த மண்ணில் மதக்கலவரங்களைக் கட்டவிழ்த்துவிட நினைக்கிறார்கள். இந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க நினைக்கிறார்கள். இதற்கு எதிராக தமிழ் இளைஞர்களும் வீறு கொண்டு எழுந்துள்ளனர். மோடியே திரும்பிப் போ என்ற குரல்கள், தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்த குரல்கள் விண் அதிர ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியை நிராகரித்ததைப் போல, வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகி வருகிறது. பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லை. தமிழகத்துக்கு விடிவு காலம் ஆட்சி மாற்றத்தின் மூலமே ஏற்பட முடியும்.

The post மக்கள் விரோத பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை ஏன் தோற்கடிக்க வேண்டும்? தலைவர் கே.எஸ். அழகிரி சமர்ப்பித்த குற்றப் பத்திரிகை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.