சமூகநீதி - தேசிய முரசு - Desiya Murasu

தமிழகத்தில் மட்டும் நீட் தற்கொலைகள் ஏன்?: கல்வியாளர்கள் விளக்கம்
”நான் நன்றாகப் படிக்கிறேன். ஆனால், நான் தேர்ச்சி பெறாமல் போய்விடுவேனா என்று பயமாக இருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?”

தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் மன உளைச்சலை ஏற்படுத்தும் இந்த எண்ணம் தான், இதுவரை 13 மாணவர்களின் உயிர்களைப் பறித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

ஒரே மாதத்தில் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டபின், நீட் பிரச்சினை தமிழகம் முழுவதும் உணர்வுப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

மாணவர்கள் டாக்டராகி பல உயிர்களைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். நீட் தேர்வை நிறுத்தி அவர்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று வேதனையுடன் கோரிக்கை வைக்கிறார், சமீபத்தில் நாமக்கல்லில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உறவினர்.

”கடுமையாக உழைத்து படித்து,இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவன் கோழையல்ல. நம்பிக்கை அதிகம் உள்ளவன். நீட் தேர்வால் ஏற்பட்ட மன அழுத்தத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

தற்கொலை செய்து கொண்ட மதுரை மாணவி அரசுப் பள்ளியில் படித்துவிட்டு, கடந்த ஆண்டுதான் வேலம்மாள் பள்ளியில் சேர்ந்தார். பிளஸ் டூ தேர்வில் 600க்கு 550 மதிப்பெண்கள் பெற்ற அவர், நீட் தேர்வு பயத்திலேயே இருந்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏன் பிரச்சினையாக இருக்கிறது?

1. மற்ற பாடத் திட்டங்களோடு, தமிழ்நாடு பாடத்திட்டத்தை ஒப்பிட முடியாதா?

”பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட விசயம் இல்லை. எல்லோருக்குமான சமமான கற்றல் அணுகுமுறை இல்லாததே காரணம். சிபிஎஸ்இ அல்லது ஐசிஎஸ்இ பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் நீட் பயிற்சி மையங்களில் படிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

ஆரோ கல்விச் சேவைகள் நிறுவனர் டாக்டர் கே.ஆர். மாலதி கூறும்போது, ”பிரச்சினை பாடத் திட்டத்தில் இல்லை. நம் மாணவர்கள் திறனறிவை வளர்த்துக் கொள்ளவில்லை. இன்னும் மனப்பாட முறையையே பின்பற்றுகிறார்கள்” என்றார்.

2. நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா?

”நீட் தேர்வால் சந்தைப்படுத்துதல் முடிவுக்கு வரவில்லை. தமிழ்நாடு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்காக தயார்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை தமிழக அரசு எவ்வாறு இழந்தது?” என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்புகிறார்.

”நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு, ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 150 இடங்கள் இருந்தன. இதில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 42.5 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கும், மீதமுள்ள 42.5 சதவீத இடங்களுக்கு அந்த கல்லூரிகள் நன்கொடை வசூலித்தன. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு அப்படியே இருக்கிறது. ஆனால், நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் 85 சதவீத இடங்கள் நிரப்பப்படுகின்றன” என்று சுட்டிக் காட்டுகிறார் மாலதி.

3. சமமான அணுகுதல் குறைபாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்களா? அல்லது அரசியலாகிவிட்டதா?

”தேர்வு பயம் மட்டுமல்ல. சரியான அணுகுதல் குறித்து எடுத்துரைக்க முறையான நீட் பயிற்சி மையங்கள் இல்லாததும், தரமான கல்வி முறை இல்லாததும் ஒரு காரணம்” என்கிறார்கள் சில கல்வியாளர்கள்.

கஜேந்திர பாபு கூறும்போது, ”வசதிபடைத்தவர்களாக இருந்தால், தனியார் கல்லூரிக்கு சென்றுவிடுவார்கள். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு உதவ வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள்” என்றார்.

மாலதி கூறும்போது, ”நீட் தேர்வு அரசியலாக்கப்பட்டுள்ளது. இதனை வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கிறார்கள். குழந்தைகளின் மன நிலையோடு அவர்கள் விளையாடுகிறார்கள்” என்றார்.

The post தமிழகத்தில் மட்டும் நீட் தற்கொலைகள் ஏன்?: கல்வியாளர்கள் விளக்கம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நீட் திணிப்பால் தமிழகத்தில் தற்கொலைகள் தொடர்வதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு: தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் – தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் 19 வயது நிரம்பிய விக்னேஷ் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விற்கு கேரளாவில் உள்ள பயிற்சி மையம் மற்றும் துறையூரில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பயிற்சி பெற்று வந்தார். செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடித்த விக்னேஷ் பொதுத் தேர்வில் 1006 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். அதன்பின் மருத்துவராக வேண்டுமென்று கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி, ஒருமுறை தோல்வியும், ஒருமுறை தேர்ச்சியும் பெற்ற நிலையிலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மூன்றாவது முறையாக வருகிற செப்டம்பர் 13 அன்று நடைபெறவுள்ள நீட் தேர்வில் பங்கேற்க கடுமையாக தயார்படுத்திக் கொண்டு வந்தார்.

இந்நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா என்கிற சந்தேகத்தில் மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று அதிகாலை 4 மணி அளவில் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் செய்தி அந்தப் பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. அதைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவரது தந்தை அந்த கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிற ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே இதே பகுதியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நீட் நுழைவுத் தேர்வு அனிதா என்ற இளம் மாணவியை பலிவாங்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் அனிதா பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வரை நீதி கேட்டு போராடினார். ஆனால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவிக்கு நீட் தேர்வு மூலமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரது தந்தை கூலித் தொழிலாளியாக இருந்த நிலையில், கஷ்டப்பட்டு படித்த அனிதாவின் மருத்துவர் கனவு தகர்ந்து போனது. இந்த துயரம் தாங்காமல் அன்று அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, தற்போது விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வினால் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்கு பதியப்பட்டு இதுவரை அந்த வழக்குகள் தமிழக காவல் துறையினரால் திரும்பப் பெறப்படவில்லை. இதனால் அந்த இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பையும், வேலை வாய்ப்பையும் இழந்துள்ளது குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை.

வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. கொரோனா தொற்று கடுமையாக இருக்கிற சூழலில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மருத்துவப் படிப்பில் சேர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், எந்த கோரிக்கையையும் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொள்ளாமல் நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்திருக்கிறது. இதை எதிர்கொள்ள முடியாத ஏழை, எளிய கிராமப்புற மக்கள், பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு தடையாக இருக்கிறதே என்ற மன உளைச்சலின் காரணமாக அனிதா, விக்னேஷ் போன்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வை தடுத்து நிறுத்த தீவிரமான முயற்சிகளை அ.இ.அ.தி.மு.க. அரசு எடுக்கவில்லை. நீட் தேர்வை எதிர்ப்பதை போல கண்துடைப்பு நாடகத்தை நடத்தி விட்டு, இந்த ஆண்டிலும் நீட் தேர்வு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எனவே, அனிதா, விக்னேஷ் போன்றவர்களின் தற்கொலை சாவுகளுக்கு மத்திய – மாநில அரசுகளே பொறுப்பாகும். இதற்குரிய பாடத்தை தமிழக மக்கள் விரைவில் வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் என்ற மாணவரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மறைந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post நீட் திணிப்பால் தமிழகத்தில் தற்கொலைகள் தொடர்வதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு: தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அனிதாவை காவு வாங்கிய ‘நீட்’ : நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
‘நீட்’ நுழைவுத் தேர்வு அனிதாவை காவு வாங்கி 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அப்போது அனிதாவுக்காக நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இவருக்கு கைக்கு எட்டும் தொலைவில் இருந்தது. ஆனால், நீட் தேர்வை அந்த ஆண்டு அமல்படுத்தியதால், மருத்துவம் படிக்கும் வாய்ப்பை அனிதா இழந்தார். தந்தை கூலித் தொழிலாளியாக இருந்த நிலையில், கஷ்டப்பட்டு படித்த அனிதாவின் மருத்துவக் கனவு தகர்ந்து போனது. இந்த துயரம் தாங்காமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களது எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது காவல்துறை.

அனிதாவின் 3 ஆவது நினைவுதினத்தையொட்டி, அவரது சகோதரர் மணிரத்னம் கூறும்போது, ”25 இளைஞர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அந்த இளைஞர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பையும் வேலை வாய்ப்பையும் இழந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி என்பவர் கூறும்போது, ”வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்தும், வழக்கு நிலுவையில் உள்ளதால் எனது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பில்லை. என்னோடு போராடிய பல பெண்களுக்கும் இதே நிலை தான்” என தெரிவித்தார்.

ராகுல் ராஜேஸ் என்பவர் கூறும்போது, ”போராட்டம் நடத்தியதாக என் தாயார் மீது வழக்குப் பதிவு செய்தனர். என் தாயார் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யமாட்டோம் என்று உறுதியளித்த காவல் துறையினர், பின்னர் எங்களோடு சேர்த்து என் தாயார் மீதும்  வழக்குப் பதிவு செய்தனர்” என்றார்.

இந்த பிரச்சினை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கவனத்துக்கும் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பாக அரசிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை என்பதால், இறுதியாக, எதிர்கட்சிகளின் உதவியை நாடியுள்ளார் மணிரத்னம்.

The post அனிதாவை காவு வாங்கிய ‘நீட்’ : நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சமூக நீதிக்கு குழி பறிக்கும் புதிய கல்விக் கொள்கை: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு
34 ஆண்டுகளுக்குப் பிறகு  புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய கொள்கை இன்னும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படவில்லை. இது தற்போது கொள்கை மட்டுமே, சட்டமல்ல.  கல்வி மாநில அரசு மற்றும் மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்டு  வருவதால், இதனை அமல்படுத்துவது அந்தந்த அரசுகளை சார்ந்தே உள்ளது

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்று இருமொழிக் கொள்கையே நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பின்பற்றப்படுகிறது. இடையிடையே இந்தி மொழியை திணிக்க முற்படும்போது எல்லாம், கடும் எதிர்ப்பலைகள் எழுந்து, இந்தி திணிப்பு காணாமல் போய்விடுவது வழக்கம். இரு மொழிக் கொள்கையில் தீவிரம் காட்டி, அதில் வெற்றியும் பெற்ற ஒரு மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்க முற்படுவதை பொறுத்துக் கொள்ள முடியுமா? அதனால் தான் தமிழகத்தில்  இருந்து எதிர்ப்புக் குரல் அதிகமாக இருக்கிறது.

தற்போது மும்மொழிக் கொள்கை மூலம் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் விருப்பப் பாடமாக ஏதேனும் ஒரு மொழியை தேர்ந்தெடுத்துக்  கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவிக்கிறது.

விருப்பப் பாடமாக ஒவ்வொரு மொழியை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அந்த பாடத்தை கற்பிக்க ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் கற்பிக்க வைப்பதே மத்திய அரசின் நோக்கம் என்பது தமிழகத்து எதிர்ப்பின் முக்கிய அம்சமாக உள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அமைக்க அனுமதிப்பது. 4 ஆண்டு இளங்கலைப் படிப்புகளில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்துவது. எம் பில் படிப்பை ரத்து செய்வது. இவை எல்லாம் உயர்கல்வி படிப்பு எளிதாக கிடைக்கும் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை ஒதுக்க வேண்டும். எனினும், கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்று கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியால் பயன் ஏதும் ஏற்படவில்லை என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாய்மொழியை கற்பிப்பது மாநில அரசின் வரம்புக்குட்டப்பட்டது. தாய்மொழியை கற்பிப்பது மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் அமல்படுத்தப்படுமா? என்பது பற்றி மத்திய அரசு உறுதி செய்யவில்லை.

3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.  அவர்களது கற்பனை வளம் சிதைந்து போகும். கோச்சிங் சென்டர்கள் என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களிடம் பணம் பறிக்கும் வேலை நடக்கும்.

100 சதவீத தேர்ச்சிக்காக 3 ஆம் வகுப்பிலேயே மாணவர்ளை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படும். இதனால் இடை நிற்றல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இடைநிற்றலை தடுத்து தமிழக அரசு பெற்ற வெற்றி வீணாகிவிடும்.

6 ம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வி கற்க மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்ற அறிவிப்பும் தமிழ்நாட்டில் எதிர்ப்பை பெற்றுள்ளது. வர்ணாசிரமப்படி முன்னோர் செய்த தொழிலையே செய்ய வேண்டும் என்ற ராஜாஜியின் குலக்கல்விதான் இது என்பது தமிழகத்தின் குற்றச்சாட்டு.

மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் நீட்சியாக தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது ஏழை, எளியோரை உயர் கல்விக்கு வராமல் தடுக்கும் முயற்சி என்பதே பிரதான குற்றச்சாட்டு.

இது குறித்து கல்வியாளர்கள் கூறும்போது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வடமாநிலங்களில் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். 2018 ஆம் ஆண்டு தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 26.3 சதவீதம். இதனை 2035 ஆம் ஆண்டு 50 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் எப்போதோ 49 சதவீதத்தை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கைகளை பின்பற்றி, இந்தியாவை கல்வியில் முன்னேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பள்ளியில் இருந்து உயர் கல்வி வரை மாணவர்களின் சேர்க்கையை உயர்த்த கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய பொருளாதாரக் கொள்கையில் இடம்பெற்றுள்ள நல்ல அம்சங்கள் ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன.

இந்த நிலையில், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் மட்டுமே முன்னிறுத்தும் இந்த புதிய பொருளாதாரக் கொள்கை தேவையா? என்பதே தமிழகத்தின் கேள்வி.

நீட் என்ற நுழைவுத் தேர்வின் மூலம் நம் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியானது. அதேபோல், அனைத்து உயர்கல்வியிலும் தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வி பெறாமல் செய்வதே மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் நோக்கமாக உள்ளது.

இருப்பதை இழக்கச் சொல்கிறது  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை. தக்க வைக்க போராடுகிறது தமிழகம். சமூக நீதிக்கான போராட்டங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழகம் இதிலிருந்தும் மீண்டு வரும் என்று நம்புவோம்!

The post சமூக நீதிக்கு குழி பறிக்கும் புதிய கல்விக் கொள்கை: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: சட்டம் இயற்றினால் சாத்தியமாகிவிடுமா?
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே அர்ச்சகராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் சமூக நலத் திட்டங்களின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, மருத்துவம், தொழில் துறை என பலவற்றில் பிற மாநிலங்களைவிட முன்னணியில் இருக்கும் தமிழகம் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் முன்மாதிரியாக விளங்குகிறது. பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் சாதி எனும் கொள்ளை நோய் இந்திய சமூகத்தை ஆட்டிபடைத்துவருகிறது. இதிலிருந்து மீண்டுவர எத்தனையோ தலைவர்கள் பாதை அமைத்துக் கொடுத்தாலும் காலப்போக்கில் அதை உதாசீனப்படுத்திவிட்டு மீண்டும் பழையபடி இழி நிலை நோக்கி நகர்ந்துவிடுகிறோம். இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறை நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது. கடவுளுக்கு நாங்கள் மட்டுமே முகவர்களாக இருக்க முடியும் என்று பேசிவந்த நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சட்டம் தமிழ்நாட்டில் 2006ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.

அர்ச்சகர் பயிற்சி மையங்கள்!

அதைத் தொடர்ந்து திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி, மதுரை ஆகிய இடங்களில் சைவ சமயக் கோயில்களுக்கான அர்ச்சகர் பயிற்சி மையங்களும், ஸ்ரீரங்கம், திருவல்லிகேனி ஆகிய இடங்களில் வைணவத்திற்கான அர்ச்சகர் பயிற்சி மையங்களும் தொடங்கப்பட்டன. 2006 – 2007ஆம் ஆண்டில் 207 பேர் இவற்றில் பயிற்சி முடித்து வெளியேறினர். இவர்களில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 205 பேரில் இத்தனை ஆண்டுகளில் இருவர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாரிசாமி என்ற அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் 2018ஆம் ஆண்டு மதுரை தள்ளாகுளம் அய்யப்பன் கோயிலிலும், தியாகராஜன் என்ற அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மதுரை நாகமலை புதுகோட்டை விநாயகர் கோயிலிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

எங்கே பயிற்சி முடித்த அர்ச்சகர்கள்?

அர்ச்சகராவதற்கான பயிற்சி முடித்த மீதமுள்ள 203 பேர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர், அவர்களது வாழ்வாதாரம் எப்படி உள்ளது, அர்ச்சகராவதற்கு ஏன் இவ்வளவு தாமதம், இதன் பின்னால் நடைபெற்ற சட்டப் போராட்டம், வன்முறை தாக்குதல்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ள ‘சமயம் தமிழ்’ சார்பாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதனை தொடர்பு கொண்டோம். அவர் பகிர்ந்துகொண்ட சம்பவங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூகத்தின் தனி சொத்தாக பாவிக்கப்பட்ட ஒன்று அனைவருக்குமானதாக மாறும்போது எழும் எதிர்வினைகளை, கொந்தளிப்புகளை விளக்குவதாக இருந்தது.

சட்டம் இயற்றுங்கள்; தடை வாங்குகிறோம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றினாலும், உடனடியாக அதற்கு உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கப்பட்டுள்ளது. “மதுரை ஆதி சிவாச்சாரியார் நல சங்கம், தென்னிந்திய கோயில் பிராமணர்கள் நல சங்கம், தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் மேலும் சில பிராமணர் சங்கங்கள் இணைந்து இந்த சட்டத்திற்கு தடை வாங்கினர். அதாவது பிராமணர் அல்லாத பிற சாதியினர் சுவாமி சிலையைத் தொட்டு பூஜை செய்தால் தீட்டு ஏற்பட்டுவிடும் என மக்கள் நினைப்பதாகக் கூறி இந்தத் தடையை வாங்கியுள்ளனர். அர்ச்சகர் பயிற்சி பெறுவதில் சிக்கல் இல்லை. ஆனால் அர்ச்சகராக பணியமர்த்தப்படுவதற்கு தடை வாங்கியுள்ளனர். எங்கள் படிப்பு முடிந்து நாங்கள் தீட்சை பெற்ற பின்னரே எங்களுக்கு இது பற்றி தெரியவந்தது.

வன்முறை வரை சென்று அட்டூழியம்!

பயிற்சி முடிந்தபின்னர் இது என்றால் பயிற்சி பெறும்போதே பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தோம், எங்களுக்கு பயிற்சியளிக்க யாரும் முன்வரக்கூடாது என பிராமணர் சங்கங்கள் காய் நகர்த்தின. இதனால் யாரும் எங்களுக்கு பாடம் நடத்த முன்வரவில்லை. தமிழ் மந்திரங்கள் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இருந்தாலும் சமஸ்கிருத மந்திரங்கள் கற்றுக்கொடுக்க யாரும் முன்வரவில்லை. நான் படித்த திருவண்ணாமலையில் மட்டுமல்ல பிற மையங்களிலும் இதுதான் நிலைமை. நண்பர் ஒருவர் உதவியுடன் அப்போது பெங்களூரிலிருந்த ராமகிருஷ்ணன் ஜீவா என்பவரை தொடர்பு கொண்டோம். இதற்கு உள்ள எதிர்ப்பைக் காட்டி அவர் தயங்கியபோதும் அவருக்கான எல்லா வசதிகளையும் மாணவர்களே செய்துகொடுக்கிறோம் என்று நம்பிக்கை அளித்து அழைத்து வந்தோம். அவருக்கு வயது 90. திருவண்ணாமலையில் தங்கி எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஒவ்வொரு நாளும் பயிற்சி முடித்துவிட்டு வெளியே செல்வார். அப்போது சிலர் அவரை ஆள் வைத்து அடித்தனர். இதனால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார்.

பெரியாருக்கு மாலை அணிவித்த அர்ச்சகர்!

இதுபோல் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத்தான் நாங்கள் படிப்பை நிறைவு செய்தோம். ஆனால் பயிற்சி முடித்த எங்களுக்கு பணி கிடைக்கக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இதை அறிந்த பின் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைத் தொடங்கி அதன் தலைவராக நான் இந்த வழக்கில் இணைந்தேன். வழக்கை இழுத்தடிக்க வாய்தா வாங்கிக்கொண்டே சென்றனர். இந்நிலையில் 2009ஆம் ஆண்டு நான் திருவண்ணாமலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தேன். பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கே முதல் விதைபோட்ட பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஆனால் இந்து முன்னணியினர், ஆர்எஸ்எஸ்காரர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என்னை தாக்கினர். நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

கருவறை நுழையும் போராட்டம்!

மதுரை, திருவண்ணாமலை, பழனி, சென்னை என பல இடங்களில் எங்கள் அமைப்பு சார்பாக போராட்டம் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம். 2015ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நானும் பாலகுரு என்ற பயிற்சி முடித்த மாணவரும் கருவறை நுழையும் போராட்டத்தை நடத்தினோம். எங்களையும் பூஜை செய்ய அனுமதிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். இதனால் வழக்கமாக 12 மணிக்கு சாத்தப்படும் நடை அன்று மூன்று மணிக்குதான் சாத்தப்பட்டது. காவல்துறையினர் எங்களை அழைத்துச் சென்று இரவு வெகுநேரம் கழித்துத்தான் விடுவித்தனர். இந்தப் போராட்டங்கள் ஒருபக்கம் போய்கொண்டிருக்க, சட்டப் போராட்டமும் தொடர்ந்தது.

தீர்ப்பில் வைத்த ட்விஸ்ட்!

தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பிராமணர்கள் சங்கம் தடை விதிக்கக்கோரிய வழக்கை அரசு தரப்பு வழக்கறிஞர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. முக்கியமான சமயங்களிலும் ஜூனியரை வாதாடவைத்து அவர்களுக்கு சாதகமான தீர்ப்பையே பெற்றுக்கொடுத்தார். 2006லிருந்து இழுத்தடிக்கப்பட்டு வந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது எனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். பயிற்சி முடித்து பணியாற்றச் செல்லும் அர்ச்சகர்கள் அந்தக் கோயிலின் தலைமைக் குருக்களிடம் கட்டாயம் தீட்சை பெற வேண்டும். ஆகம முறைப்படி செயல்படுவதில் தவறிழைக்கும் பட்சத்தில் அந்த அர்ச்சகருக்கு எதிராக கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை எங்கு வேண்டுமானாலும் தடை வாங்கலாம் என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒழியாத தீண்டாமை!

இது முழுக்க ஏற்கனவே இருந்த அச்சகர்களுக்கு சாதகமான தீர்ப்புதான். தமிழ்நாட்டில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆகமம் இருக்கிறது. நான் ஒரு கோயிலில் பணியமர்த்தப்பட்டேன் என்றால் அங்கு நான் ஆகம முறைகளை சரியாக பின்பற்றினாலும், ஆகம முறைப்படி இப்படி நடந்து செல்ல வேண்டும், இப்படி தண்ணீர் கொண்டு வர வேண்டும் என ஏதாவது ஒரு காரணம் சொல்லி எனக்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை நாடமுடியும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தீண்டாமை கடைபிடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் கோயில் கருவறையில் மட்டும் குறிப்பிட்ட சாதியினர்தான் இருக்க முடியும் என்பதும் ஒரு தீண்டாமைதான். அதைப் போக்குவதற்கான வழியாக இந்த தீர்ப்பின் முதல் வரி இருந்தாலும், மீண்டும் அவர்கள் மனது வைத்தால் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும் என்று சொல்வது ஒரு குழப்பமான தீர்ப்பு இல்லாமல் வேறென்ன?

பெரியாரே வழி!

இதனால் இந்த தீர்ப்பு வந்த மறுநாள் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு எனது அர்ச்சகர் கோலத்தை களைத்தேன். வேட்டி, பூணூல், ருத்திராட்சை அனைத்தையும் தீ வைத்து கொளுத்தினேன். இந்த அரசும் நீதிமன்றமும் சாதி தீண்டாமையை கடைபிடிக்கின்றன. இன்றிலிருந்து பெரியார், அம்பேத்கர் கொள்கைப்படி இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த போராடுவேன் என உறுதி மொழி எடுத்துக்கொண்டேன்” என்று கூறினார் ரங்கநாதன்.

இதுதான் ஆகமமா?

“ஆகம முறைப்படி அர்ச்சகரின் பல் சொத்தையாக இருக்கக் கூடாது, மனைவி இல்லாத அர்ச்சகர் பூஜை செய்யக் கூடாது, குளிக்கக் கூடாது, தீபம் மட்டுமே ஏற்ற வேண்டும், வேறு விளக்குகள் வைத்திருக்க கூடாது என பல்வேறு விஷயங்கள் உள்ளன. இன்று அவையெல்லாம் பின்பற்றப்படுவதில்லையே, எல்லா கோயிலிலும் மின்சார வசதி வந்துவிட்டது. பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இவை எல்லாம் ஆகம முறை மீறல் இல்லையா? ஆனால் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வோம் பிற சாதியினரை மட்டும் அனுமதிக்க மாட்டோம் என்பது என்ன அணுகுமுறை” என்று ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களிடம் வரவேற்பு பெறும் தமிழ் மந்திரங்கள்!

மேலும் அந்தப் பயிற்சி முடித்த மற்ற மாணவர்கள் நிலை பற்றி கேட்டறிந்தோம். “அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்களில் 15 சதவீதம் பேர் வேறு வழியில்லாமல் தங்கள் கோலத்தை களைந்து வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்கள் கணபதி ஹோமம், சிறிய கோயில்களில் கும்பாபிஷேகம் உள்ளிட்டவற்றுக்கு செல்கின்றனர். இந்த காலகட்டத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 1000க்கும் அதிகமானவர்கள் கும்பாபிஷேகங்களை நடத்தியுள்ளனர். தமிழ் மந்திரங்களில் இவர்கள் பூஜை செய்வதும், அதற்கான விளக்கத்தை தெரிவிப்பதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது பணியில் சேர்ந்துள்ள இருவரும் தனியார் கோயில்களுக்காக நாளிதழில் வந்த விளம்பரங்கள் பார்த்து நேர்காணலில் பங்கேற்று பணி வாய்ப்பை பெற்றுள்ளனர். அறநிலையத் துறை மூலம் ஒருவருக்கு கூட இன்னும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று ரங்கநாதன் தெரிவித்தார்.

பெண்களும் அர்ச்சகராக வேண்டும்!

“தமிழ்நாடு அறநிலையத்துறையில் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அவற்றில் 200 கோயிகள் பிரபலமானவை. பயிற்சி பெற்ற அர்ச்சகர்களின் தகுதிக்கு ஏற்ப இந்த கோயில்களில் பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக உள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் இந்தக் கோயில்களில் யாரும் பணியமர்த்தபடவே இல்லையா எனக் கேட்டால் ஒவ்வொரு கோயிலிலும் பணி நியமணம் வழங்கப்பட்டுக் கொண்டேதான் உள்ளது. அப்படியான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது என வெளியில் சொல்லாமல் வாரிசு அடிப்படையில் அவர்களது சமூகத்துக்குள்ளேயே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கப்படும் துறையில் இந்த முறையில் பணியிடங்கள் நிரப்பப்படுவது ஏற்புடையதல்ல. எனவே உடனடியாக பயிற்சி முடித்த அர்ச்சகர்களை பணியில் அமர்த்த வேண்டும். மேலும் அனைத்து சாதி ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் முறைப்படி பயிற்சி பெற்று அர்ச்சகராக பணியமர்த்தப்பட வேண்டும்” என தமது கோரிக்கைகளை தெளிவாகக் கூறி அதற்கான விழிப்புணர்வு மற்றும் போராட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரங்கநாதன். இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் முன்னோர்களின் போராட்டத்தால் விளைந்தவை தானே, அப்படியிருக்க ரங்கநாதன் உள்ளிட்ட அர்ச்சகர்கள் முன்னெடுக்கும் போராட்டமும் இனிவரும் காலங்களில் சமதர்மத்தை கோயிலுக்குள்ளேயும் நிறைவேற்றிட காரணமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

(நன்றி: சமயம்இனையஇதழ்)

(குறிப்பு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தந்தை பெரியாரின் கனவை 1970 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தினார்.)

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: சட்டம் இயற்றினால் சாத்தியமாகிவிடுமா? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.