மதச்சார்பின்மை - தேசிய முரசு - Desiya Murasu

இந்திய முஸ்லிம் தலைமுறையினரின் முடிந்து போன ஜனநாயக வாய்ப்புகள்: யோகேந்திர யாதவ்
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது, வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் கலவரம் மூண்டது.  பாஜக தலைவர் கபில் மிஸ்ரா உள்ளிட்ட சிலரின் வன்முறைப் பேச்சுக்களே இந்த கலவரத்துக்கு காரணமாக அமைந்தன. இந்த கலவரத்துக்குப் பிறகு, இதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்காமல், விசாரணை ஏனோ தானோவென்று போய்க் கொண்டிருக்கிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது, நானாவதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அதனை விசாரிக்க லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று வரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றும், அதன் பிறகு கலவரம் நடக்கவில்லை என்றும் நாமே முடிவு செய்ய வேண்டியுள்ளது.

2002 ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது, முஸ்லிம்களுக்கு எதிரான கலவர வழக்குகளில் சிலருக்கு தண்டனை கூட கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கிலும் சிலருக்கு தண்டனை கிடைத்தது.

டெல்லி கலவரத்தை பொருத்தவரை நேரிடையாக கலவரத்தைத் தூண்டிய பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு ஏதும் பதியவில்லை. மாறாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மனித உரிமை ஆர்வலர்களை சிறைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது  இந்த அரசு.

இதுகுறித்து அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான யோகேந்திர யாதவ், ‘தி பிரிண்ட்’ இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில், “டெல்லி வன்முறைக்காக உமர் காலித் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், இந்திய  முஸ்லிம்கள் தலைமுறையின் ஜனநாயக விருப்பத்துக்கு தடை போடப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.

யோகேந்திர யாதவ் கட்டுரையின் முழுப் பகுதி:

‘தி பிரிண்ட்’ இணையத்தில் கட்டுரையாளரான எனது நண்பர் ஹிலால் அகமது. அவருக்கு ஏராளமான அடையாளங்கள் உள்ளன.  தர்காவில் 5 முறை தொழுவார். மார்க்சிய கோட்பாடுகளைப் பற்றிக் கொண்டு சேகுவாராவை பின் தொடர்வார். அரசியல் பார்வை மற்றும் செயல்பாடுகளில் காந்தியடிகளை பின் தொடர்வார். அவர் தன்னை ஒருபோதும் முஸ்லீமாக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை.

அவரது செயல்கள் விசித்திரமாக இருப்பதை சில ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். ஒரு வங்காளி வீட்டில் ராமகிருஷ்ண பரமஹம்சர் படமும் லெனின் படமும் இருப்பதை பார்த்திருக்கிறேன். மற்றவர்களை ஒப்பிடும்போது முஸ்லீம் என்பதற்கு குறுகிய அடையாளங்களே உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக தற்போது டெல்லி போலீசாரால் உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, இந்த அடையாளம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

நீங்கள் இளைஞர். நீங்கள் கிளர்ச்சியாளர். நீங்கள் இந்தியர். இருந்தாலும்  நீங்கள் முஸ்லீம். உங்கள் மனசாட்சியை தவறாகப் புரிந்து கொள்ளலாமலோ அல்லது நீங்கள் சிறையில் அடைக்கப்படாமலோ,  இருந்திட முடியுமா? இது உமர் காலித்துக்கு மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. லட்சக்கணக்கான படித்த இந்திய முஸ்லிம் இளைஞர்கள் இதனை சந்தித்து வருகிறார்கள். நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ​​பல இளம் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக  நடக்கிறார்களா? என்பது குறித்து அவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டதுண்டு. அவர்களுக்குள் உள்ள முஸ்லிம் உணர்வை மறக்கடிக்கச் செய்வது அல்லது  கிளர்ச்சியைத் தடுப்பது அவர்களது நோக்கமாக இருந்தது.  எனக்குத் தெரிந்த பெரும்பாலான இடதுசாரிகள் முதல் பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.

உமர் காலித் மற்றும் கன்யா குமார் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை 2016 ஆம் ஆண்டு சுமத்தினர். பின்னர், இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் லட்சியவாதமும் தியாகமும் என்னைக் கவர்ந்தன. இவர்கள் எந்த மாதிரியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் அவ்வப்போது ஆச்சரியப்பட்டதுண்டு.

உமர் காலித்தை அறிந்து கொள்வது ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியமாக இருந்தது. அவர் இந்திய அரசை வன்முறையில் தூக்கியெறியும் புரட்சிகர கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர். சாதி மற்றும் பாலினம் தொடர்பான கேள்விகளைக் கையாளுவதில் கைதேர்ந்த உமர் காலித் தான், எதிர்காலத்தில் நான் காண விரும்பும் இடது சாரி தலைவன்.

ஒரு முஸ்லீமாக மாற மறுத்ததும். அவரது தந்தை ஜமாத்-இ-இஸ்லாமியைச் சேர்ந்தவர் என்பதால், உமர் ஒரு முஸ்லீம் அடிப்படைவாதி அல்லது முஸ்லீம் அடையாளத்தை முற்றிலுமாக விலக்கிக் கொண்டதும் என்னை மிகவும் கவர்ந்தது. இங்கே இளைஞர்களின் அடையாளமாக உமர் காலித் இன்று உருவெடுத்திருக்கிறார்.

மோசமான தீவிரவாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இன்று உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் உமர் காலித், டெல்லி கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் ஒருவன் எங்கேயோ போயி சரி செய்ய முடியும்?.

இடதுசாரிகள் மீது நீங்கள் எந்த குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்துங்கள். ஆனால் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டினார்கள் என்று மட்டும் குற்றம் காட்டாதீர்கள்.  உமர் காலித் முஸ்லிம் என்பதற்காக டெல்லி போலீசார் கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை உமர் காலித், நானாகவோ, யெச்சூரியாகவோ இருந்திருந்தால் அவர் மீது இதுபோன்ற வழக்கு தொடரப்பட்டு இருக்காது.

இதில் பெரும் சோகம் என்னவென்றால், இந்திய முஸ்லிம் தலைமுறையினரின் ஜனநாயக வாய்ப்புகள் முற்றிலும் தடை பட்டுள்ளன என்பதுதான்.

The post இந்திய முஸ்லிம்  தலைமுறையினரின் முடிந்து போன ஜனநாயக வாய்ப்புகள்: யோகேந்திர யாதவ் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சுவாமி அக்னிவேஷ் மரணத்தை கொண்டாடிய சிபிஐ முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவ்: எதிர்ப்பு குவிகிறது
சுவாமி அக்னிவேஷின் மரணத்தை கொண்டாடி ட்விட்டரில் பதிவிட்ட சிபிஐ புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு  நாடு முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆரிய சமாஜ கொள்கையை பின்பற்றி ஆரிய சபா என்ற கட்சியை சுவாமி அக்னிவேஷ் தொடங்கினார். கொத்தடிமைகளாக நடத்தப்படும் தொழிலாளர்களை மீட்டதன் மூலம் அவர் பிரபலமானார்.

கடந்த 1977 ஆம் ஆண்டு ஹரியானாவில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அடுத்த 2 ஆண்டுகளில் கல்வி அமைச்சரானார். கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த அக்னிவேஷ், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சபரிமலை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவித்த அவர். ”மோடியின் கருத்து அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது” என்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா இளைஞர் அமைப்பினரால் அக்னிவேஸ் தாக்கப்பட்டார். அதன்பின்னர், 2011 ஆம் ஆண்டு, அமர்நாத் யாத்திரை குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் விமர்சித்த அக்னிவேஷை, மதத்தலைவர் நித்யானந்த் தாஸ் தாக்கினார். அமர்நாத் யாத்திரையை பாசாங்குத்தனம் என்று அக்னிவேஷ் விமர்சித்ததை உச்ச நீதிமன்றமும் கண்டித்தது.

இந்நிலையில் தமது 80 ஆவது வயதில்,  கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் டெல்லி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சிபிஐ புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவ், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தார்மீகத்தை மீறியுள்ளதாக பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவரது ட்விட்டர் பதிவில், நீங்கள்  காவி உடை அணிந்த இந்து மதத்துக்கு எதிரானவர். இந்து மதத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் புலித் தோல் போர்த்திய ஆடு. இவரை இவ்வளவு நாள் இந்த உலகில் ஏன் வாழ வைத்தாய் என எமராஜனிடம் கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு இந்தியன் போலீஸ் பவுன்டேஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசாங்கத்தை திருப்திப் படுத்துவதற்காக இதுபோன்ற வெறுக்கத்தக்க கருத்துகளை வெளியிடுவது ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அகாரிக்கு அழகல்ல. நீங்கள் நாடு முழுவதும் உள்ள காவல் படையை சீர்குலைப்பதோடு, குறிப்பாக இளம் அதிகாரிகளை தவறாக வழி நடத்த காரணமாகிவிட்டீர்கள் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தது.

இதன்பின்னரும்,  ”காட்டுமிராண்டி இறந்ததை, சமூகத்தை அழிக்கும் பூச்சி இறந்ததை ஏன் கொண்டாடுகிறோம் ” என்று நாகேஸ்வர ராவ் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார். நாகேஸ்வர ராவின் கருத்துக்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, நாகேஸ்வர ராவை முட்டாள்தனமான வெறுப்பாளர் என்று விமர்சித்துள்ளார்.  ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை ஆரிய சமாஜம் மூலம் தடுத்து நிறுத்தியவர் சுவாமி அக்னிவேஷ் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது மனிதர்களை அவமதிக்கும் செயல் என ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே விஜி கூறியுள்ளார்.

The post சுவாமி அக்னிவேஷ் மரணத்தை கொண்டாடிய சிபிஐ முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவ்: எதிர்ப்பு குவிகிறது appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இந்தியாவில் கிறிஸ்தவம் தோல்வியடைந்ததா?: ஊடக விமர்சனத்துக்கு ஆராய்ச்சியாளர் பதிலடி
‘இந்தியாவில் கிறிஸ்தவம் ஏன் தோல்வியடைந்தது?’ என்ற கேள்வியுடன் முக்கிய ஊடகங்களின் நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் திலிப் மண்டல் கூறும்போது, ‘கிறிஸ்தவ மதத்துக்கு இந்தியாவில் எதிர்காலம் இல்லை’ என்ற விவாதத்தை முன்னெடுத்துள்ளார். ”கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மதமாற்றம் செய்வதாக ஆர்எஸ்எஸ் அமைப்போ அல்லது விஸ்வ இந்து பரிசத் அமைப்போ தவறான எச்சரிக்கை அல்லது பதற்றத்தை பரப்பியதை காரணமாக கூற முடியாது” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் கிறிஸ்தவ மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் மண்டல் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி, மருத்துவம், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சமூகப் பணி மூலம் மதமாற்றம் பிரதானமாக நடைபெறுவது அல்ல என்பதை வெளிப்படையாக அங்கீகரிக்க மண்டல் மறுக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள கிறிஸ்தவ அமைப்பான கம்பேஷன் இன்டர்நேஷனலின் ஒரே நோக்கம் இந்தியாவில் சமூகப் பணியில் ஈடுபடுவதுதான். கம்பேஷன் இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் மீது மதமாற்றம் செய்ததாக இதுவரை எந்த புகாரும் இல்லை.

இந்தியாவில் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் பணி, பிராமணர்களுக்கும் உயர் சாதியினருக்கும் ஒரு கருவியாக மாறியது என்ற திலீப் மண்டலின் கடுமையான விமர்சனம் ஆதாரமற்றது. கடந்த நூற்றாண்டில் கேரளாவில் கிறிஸ்தவம் தோல்வியுற்றதால், பலர் பிராமணர்களாக மாறிவிட்டதாக கூறுகிறார். அவர் சொல்லும் காலத்தில்  கேரளாவில்(செயின்ட் தாமஸ் கேரளாவுக்கு வந்ததாக நம்பப்படும் காலத்தில்) பிரமாணர்கள் இருந்தார்களா? என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. 8 ஆவது நூற்றாண்டில் பிராமணர்களே இல்லை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்ததாக, கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறித்தும் மண்டல் கேள்வி எழுப்புகிறார். இந்த பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால், உயர் சாதியினர் மற்றும் சாதி அடிப்படையிலான கல்வியாக மாறியிருப்பதாகவும், தலித்கள் வடநாட்டு மொழியை கற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாகவும் திலீப் மண்டல் தெரிவித்துள்ளார். எப்போதாவது அவர் தலித்துகளையோ அல்லது பழங்குடியின கிறிஸ்தவர்களையோ சந்தித்து இருக்கிறாரா?

அநேகமாக, அம்பேத்காரின்  ‘சாதி ஒழிப்பு’ என்ற புத்தகத்தை மண்டல் படித்திருப்பார் என்று கருதுகிறேன். அதில், ”பழங்குடியினர் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்பதை இந்துக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் நாகரிகம்,மருத்துவ உதவி, சீர்திருத்தம் மற்றும் அவர்கள் நல்ல குடிமக்களாக மாற எந்த முயற்சியும் செய்யவில்லை. பழங்குடியினத்தவருக்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் செய்ததைப் போல், இந்துக்கள் செய்ததுண்டா? சாதியை காப்பாற்றுவதற்காகவே இந்துக்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள்” என்று அம்பேத்கார் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் இருந்தால், கிறிஸ்தவ மக்கள் தொகை 3 சதவிகிதத்துக்குள் இருப்பது ஏன்? என்று திலீப் மண்டல் உள்ளிட்ட பலர் விமர்சிக்கின்றனர். நல்லவேளை, தாய் மதத்துக்கு திரும்புவதால் தான் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று அவர்கள் கூறவில்லை. அநேகமாக அவர்கள் எழுப்பும் கேள்வி, இந்தியாவில் பார்சி மக்கள் தொகை குறைந்ததற்கும் பொருந்தும். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததற்கு, மதமாற்ற செய்ய தவறியதே காரணம் என்று சொல்ல முடியாது.

இந்தியாவில் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்புகிறார் பிலிப் ஜென்கின்ஸ். இந்த கணக்கெடுப்பு உலகிலேயே ‘சிறந்த கற்பனை’ என்கிறார். இந்தியாவில் கிறிஸ்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏதும் இல்லை என்றும், இந்த எண்ணிக்கை என்பது ஆய்வாளர்கள் கணிப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுவதற்கு தீவிர இந்து அமைப்புகளே காரணம் என்று பிலிப் ஜென்கின்ஸ் சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்தவர்களின் வலுவான எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதற்கு, உள்ளூர் அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் உடந்தையாக இருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் அல்பேனியாவிலிருந்து வந்த அன்னை தெரஸா செய்த சேவை மறக்க இயலாது. உடல்நலம் பேணுதல் மூலம் ஏழை மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். மதமாற்றம் குறித்த விவாதங்களில் இருந்து விலகியே நின்றவர். ”உங்களை நல்ல இந்துவாக, நல்ல கிறிஸ்தவராக, நல்ல முஸ்லீமாக மாற்றம் செய்கிறேன்” என்று கூறி மதமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.

1970 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஏதும் செயல்படவில்லை. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ உயரதிகாரிகளின் உத்தரவுப்படியே இந்திய தேவாலயங்களும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் இயங்கின. அதோடு, இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ தலைவர்கள் விடுதலைப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதை வரலாறு சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது.

கட்டுரையாளர்: ஜேசுதாஸ் மாத்யூ அத்யால்

(பாஸ்டன் பல்லைக்கழக உலக கிறிஸ்தவர்கள் மையத்தின் சிறப்பு ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார். கேம்பிரிட்ஜ் ஹார்டுவர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர்.)

The post இந்தியாவில் கிறிஸ்தவம் தோல்வியடைந்ததா?: ஊடக விமர்சனத்துக்கு  ஆராய்ச்சியாளர் பதிலடி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

முஸ்லீம்களின் தியாகத்தை ராமர் கோயில் வெளிப்படுத்தும்: இந்தோஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை
அயோத்தியில் இருந்த 400 ஆண்டுகால பாபர் மசூதி, அப்போதைய பாஜக தலைவர் எல்கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உமா பாரதி உள்ளிட்ட இந்து அமைப்பு தலைவர்கள் முன்னிலையில்  சங்பரிவார்கள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு மதசார்பற்ற இந்தியாவில் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறோமோ? என்ற அச்சம் முஸ்லீம் மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசூதி இடிக்கப்பட்டதை சட்டவிரோதம் என்று கண்டித்தது. அதேசமயம், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கில், பாபர் மசூதியை இடித்தவர்களுக்கே பாபர் மசூதி  இருந்த இடத்தை ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்குப் பதிலாக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிதாக கட்டப்படவுள்ள ராமர் கோவிலின் வரைபடம்.

இந்நிலையில், பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில், இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையை கட்ட முடிவு செய்திருப்பதாக உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியத்தால் அமைக்கப்பட்ட இந்தோஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை அறிவித்தது.

இது குறித்து வக்பு செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் அத்தர் ஹுசைன் கூறும்போது, ” ஏற்கனவே இருந்த பாபர் மசூதியைப் போலவே  புதிதாக மசூதி கட்டவும், பொது மக்கள் பயன்பாட்டுக்காக பல்நோக்கு மருத்துவமனை, தொழில் பயிற்சி மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. கொரோனா பரவலுக்குப் பின்தான், 5 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை கட்டலாம் என்ற திட்டம் உதித்தது. இங்கு இருதய நோய்களுக்கு சிகிச்சையும், புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்படும்.

மருத்துவமனை மற்றும் மசூதி கட்டுவதற்கு ஜாமியா மில்லியா இஸ்லாமியா கட்டிடவியல் கல்லூரி டீன் பேராசிரியர் எஸ்எம். அக்தாரை அணுகினோம். மசூதியை வடிவமைப்பதில்  சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். மருத்துவமனையுடன் மசூதி கட்டினால் மதவெறி என்ற கண்டனம் எழும் என்பதால், மசூதி கட்டும் திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளோம்.

மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் வேறு மசூதி இல்லை. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மசூதிக்கு, புதிதாக கட்டப்படும் மசூதி ஈடாகாது. எனினும், ராமர் கோயிலைப் பார்க்கும் போதெல்லாம், பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய சங்பரிவார்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தும்.  வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியை இடித்தவர்கள், புதிய மசூதியையும் இடித்தால் யாரால் தடுக்க முடியும்?

எனவே, மசூதிக்குப் பதிலாக ராமர் கோயில் அங்கு நிற்கட்டும். உலகின் பார்வையில் பெரும்பான்மையினரின் வலிமை மற்றும் சிறுபான்மை முஸ்லீம்களின் தியாகத்தையும் ராமர் கோயில் வெளிப்படுத்தும். அதே பெயரில் வேறு ஓர் இடத்தில் மசூதியை கட்டுவதைவிட, அழிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பெரிய அஞ்சலி செலுத்துவதே சரியானது.

அதேசமயம், 5 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை, தொழில் பயிற்சி மையம் கட்டினால், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். இதனை அந்த பகுதியில் வாழும் மக்கள் மட்டுமின்றி, உலகமே பாராட்டும்” என்றார்.

The post முஸ்லீம்களின் தியாகத்தை  ராமர் கோயில் வெளிப்படுத்தும்: இந்தோஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பூனைக்கு யார் மணி கட்டுவது?: தே.பா.ச-வுக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள்
2017 ஆம் ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 63 குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பாக டாக்டர் கபீல் கான் மீது உத்தரப்பிரதேச அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த இறப்புகளுக்கு கான் மீது குற்றம் சாட்டடிய உத்தரப்பிரதேச அரசு, இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது.

இக்குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், டாக்டர் கான் மீது தவறில்லை என்றும், அவர் சொந்த பணத்தைப் போட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், டாக்டர் கான் மீது அலட்சியம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்த உத்தரப்பிரதேச அரசு, அவரை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது.

இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அலிகார் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்துப் பேசியதற்காக, டாக்டர் கான் மீது அலிகார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, ஜனவரி 29 ஆம் தேதி மும்பையில் வைத்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் கானை கைது செய்தனர்.

பிப்ரவரி 10 ஆம் தேதி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உத்தரப்பிரதேச அரசு கடுமையாக எதிர்த்தது. இதனையடுத்து, கபீர் கானை  நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இதனையடுத்து, அவரை பிப்ரவரி 13 ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உத்தரப்பிரதேச அரசு கைது செய்து மதுரா சிறையில் அடைத்தது.

இதனையடுத்து, தொடர்ந்து 7 மாதங்கள் சிறையில் இருந்த அவரை, அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஒன்றாம் தேதி விடுதலை செய்தது. பழிவாங்கும் நோக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உத்தரப்பிரேதச அரசு பயன்படுத்தியிருப்பது உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

பசுக்களை இறைச்சிக்காக வெட்டியவர்கள் மீது சமீபத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தையும் எந்த விசாரணையும் இன்றி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உத்தரப்பிரதேச அரசு சிறையில் அடைத்தது.

கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளை மறுத்து, நீண்ட நாள் அவர்களை சிறையில் வைக்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தை காவல் துறையினர் பயன்படுத்துகின்றனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தை அணுகினால், நீதி கிடைப்பதற்கு தாமதமாகிறது. 9 மாதங்கள் கழித்துத்தான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டாக்டர் கான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதுபோன்ற வழக்குகளை அவசர வழக்குகளாக நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு நீதிமன்றங்கள் தண்டனை வழங்கினால் தான், இதுபோன்ற தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கபீல் கானை தன்னிச்சையாக தடுப்புக் காவலில் கைது செய்ததன் மூலம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அதிகாரத்தை ஏன் குறைக்கக் கூடாது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆகவேண்டும்.

The post பூனைக்கு யார் மணி கட்டுவது?: தே.பா.ச-வுக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இது எங்கள் இந்தியா! எங்களை எவரும் வெளியேற்ற முடியாது! சிறையில் தள்ள காரணமான டாக்டர் கஃபீல் கானின் பேச்சு!
கடந்த 2019 ஆம் ஆண்டு அலிகார் பல்கலைக் கழகத்தில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் டாக்டர் கஃபீல் கான் பேசியதால், அவரை கடந்த பிப்ரவரி மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரா சிறையில் அடைத்தது உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசு.

7 மாதங்களுக்குப் பிறகு, கடந்த ஒன்றாம் தேதி அவரை விடுதலை செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அலிகார் பல்கலைக்கழகத்தில் அவர் பேசிய பேச்சில் எந்த தவறும் இல்லை என்று தீர்ப்பளித்தது.

அலிகார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் கஃபீல் கான் ஆற்றிய உரை இதுதான்:

”ஒட்டுமொத்த உலகமே நம்மை எதிர்த்து நின்றாலும். நாம் இன்னும் சிறப்புடன் இருக்க வேண்டும்” என்ற கவிஞர் அல்லாமா இக்பால் சாஹபின் கவிதை வரிகளுடன் இந்த உரையை தொடங்குகின்றேன்…(மாணவர்கள் கரகோஷம்)

அலிகார் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் முன்பு, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ”உள்ளே செல்லாதீர்கள், மீறிச் சென்றால் கம்பிகளுக்கு பின்னால் வைக்கப்படுவீர்கள்” என்று மிரட்டினர். (வெட்கக்கேடு…வெட்கக்கேடு என மாணவர்கள் கோஷம்)

நமது குழந்தைப் பருவத்தில் இருந்தே, நாம் இந்துக்கள் என்றோ, முஸ்லீம்கள் என்றோ சொல்லி வளரவில்லை. ஆனால், மனிதநேயம் குறித்து நமக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் அமித்ஷாவோ, நாம் மனிதர்களாக வேண்டாம், இந்துக்களாக, முஸ்லீம்களாக மாற வேண்டும் என நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தன் உடையில் படிந்த ரத்தத்தை மறைக்க கொலைகாரன் எப்படி முயற்சிப்பானோ, அதுபோன்றுதான் இவர்களது செயல்பாடுகளும் அமைந்துள்ளன.  கடந்த 1928 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே, அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தனர். அதனால் தான் நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை சட்டவிரோதம் என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றோம். அவரது சட்டம் இந்தியாவின் பன்முகத்தன்மை, மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்துக்கு எதிராக உள்ளது.

நாம் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பாபா சாகேப் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தை நம்பாதவர்கள் மற்றும் அதனை இதுவரை படிக்காதவர்களுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த 90 ஆண்டுகளாக, நாட்டைப் பிளவுபடுத்துவதே அவர்களது முக்கிய நோக்கமாக இருக்கிறது.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தியதால், 19 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 90 சதவிகித்தினர், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்களை உட்படுத்த விரும்பியவர்கள். எதை முதலில் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு புரியவில்லை.

நம்மைச் சுற்றி சிறிய சுவரை  எழுப்ப அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் முழுக் கட்டுமானத்தையும் முடித்துவிடுவார்கள். கடந்த 90 ஆண்டுகளாக நம் இளைஞர்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையினத்தவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி வருகின்றனர்.

இந்த அரசு சிறுபான்மையினருக்கானது அல்ல என்பதை தொடர்ந்து  நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் நிற்கும் போது, உண்மையான முகத்தை வெளிப்படுத்துவார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், எதிர்ப்பதற்கும் இதுவே காரணம். குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்துக்காக கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த முயற்சிக்கின்றனர். இதன்படி, 1950 முதல் 1987 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருந்தால் மட்டுமே ஒருவர் இந்திய பிரஜையாகக் கருதப்படுவார். அதற்கான பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்காதவர் இந்தியர் இல்லை என்று கருதப்படுவார். இந்த சட்டத்தைப் பயன்படுத்தி முஸ்லீம்களை இந்திய குடிமக்கள் இல்லை என்று அறிவிப்பதுதான் அவர்களது உள்நோக்கம் என்பது நமக்கு புரியும்.

அவர்கள் எண்ணம் என்ன? என்பதும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் நமக்கு தெரியும். அவர்கள் மனம் முழுவதும் வெறுப்பு நிறைந்துள்ளது. நமது பெற்றோரின் சான்றிதழ், சட்டப்பூர்வ ஆவணங்களைத் தேடி நம்மை அலையவிட வேண்டும் என்பதே அவர்களது உள்நோக்கமாக இருக்கிறது. இவ்வாறு தான் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் அவர்கள் பிரச்சினையை ஏற்படுத்த முனைகிறார்கள்.

அனைவரையும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவிடுவார்கள் என பரவும் வதந்தியை நம்பவேண்டாம். இது சாத்தியமில்லாதது. அசாமில் உள்ள 6 லட்சம் மக்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப வேண்டுமானால், பட்ஜெட்டில் 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.  தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த அசாமில் மட்டும் ரூ. 1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதனை செயல்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

கல்வியை இலவசமாக வழங்குமாறு நாம் கேட்கும் போது, அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.

ஆக்ஸிஜன் வசதி  இல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் மருத்துவ வசதி  இல்லாமல் ஆண்டுதோறும் 8  லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. ஐ.நா., யுனிசெப், உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பிடம் இருந்து பெற்ற தரவுகள் கவலையை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் மக்கள் தொகையில் சரி பாதி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

எய்ட்ஸ் பாதிப்பில் உலகத்திலேயே 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உலக அளவில் இந்தியா 2 ஆம் இடத்தில் உள்ளது. 72 சதவிகித மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், டாக்டரிடம் செல்ல 40 கி.மீ. பயணிக்க வேண்டியுள்ளது.

கும்பலாக தாக்குதல் நடத்துவோர், அதனை வீடியோ எடுத்து முகநூலில் பதிவிடுகிறார்கள். டெல்லியில் உள்ள தங்கள் எஜமானர்கள் இதனை பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள். அவர்கள் பேசும் தேசியம் என்பது, போலி இந்துயிசத்தின் அடிப்படையிலான போலி தேசியம்.

ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த சம்பத்தில், என் மீது கொலைப் பழி சுமத்தவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முயற்சி செய்தார்.

இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையில், ”என் சொந்த பணத்தில் இருந்து மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்ததாக” குறிப்பிட்டிருந்தனர். என்னை எப்படியாவது சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். அதனால் தான் அரசுக்கு எதிராக நான் பேசுவதாகக் கூறுகிறார்கள். என்னை மீண்டும், மீண்டும் சஸ்பெண்ட் செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் கொடுமையைப் பற்றி நான் பேசாவிட்டால், வேறு யார் பேசுவது? இந்த கடுமையான சட்டத்தை எதிர்த்து முஸ்லீம்கள் மட்டுமல்ல, அனைவரும் போராட வேண்டும். மதத்தின் அடிப்படையிலான குடியுரிமை சட்டம் குறித்து, நமது அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ளதா? நாம் இந்த உலகத்தின் குடிமக்கள். அரசியல்வாதிகள் தான் தங்கள் சுயலாபத்துக்காக எல்லையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த நாடு நம்முடையது. இந்தியா குறிப்பிட்ட ஒருவரின் சொத்து அல்ல. எங்களை வெளியேற்றும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. நாங்கள் 25 கோடி பேர் இருக்கிறோம். எங்களை, கும்பலை வைத்து மிரட்டவோ அல்லது இதுபோன்ற சட்டங்களை வைத்து மிரட்டவோ முடியாது. நாங்கள் ஒற்றுமையுடன் உள்ளோம். சுவரைப் போல் நாங்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக இருக்கிறோம். இது எங்கள் இந்தியா. இங்கிருந்து எங்களை எப்படி வெளியேற்ற முடியும்?

இவ்வாறு மருத்துவர் கஃபீல் கான் பேசினார். இந்த பேச்சுக்காகத்தான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை 7 மாதங்கள் சிறையில் அடைத்து அராஜகத்தை நிகழ்த்தியிருக்கிறது உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு.

டாக்டர் கஃபீல் கானுக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த டாக்டர் கஃபீல் கானை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததும், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்தார். அப்போது, நீதியை விரும்பும் மக்களுக்கும், கான் விடுதலைக்கு பாடுபட்ட உத்தரப்பிரதேச காங்கிரஸாருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். கான் விடுதலையானதும் அவரிடம்  தொலைபேசியில் பிரியங்கா காந்தி நலம் விசாரித்தார்.

The post இது எங்கள் இந்தியா! எங்களை எவரும் வெளியேற்ற முடியாது! சிறையில் தள்ள காரணமான டாக்டர் கஃபீல் கானின் பேச்சு! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

7 மாதங்களுக்குப் பிறகு டாக்டர் கஃபீல் கான் விடுதலை: தே.பா.ச. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கஃபீல் கானை மதுரா சிறையில் இருந்து உடனே விடுதலை செய்ய, உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த பேராட்டத்தின் போது, ஆத்திரமூட்டும் வகையிலும், அவதூறாகவும் டாக்டர் கஃபீல் கான் பேசியதாகக் கூறி, கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.

7 மாதங்களுக்கும் மேலாக டாக்டர் கான் சிறையில் இருந்த நிலையில், மகனை மீட்டுத் தரக்கோரி அவரது தாயார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டாக்டர் கஃபீல் கானை கைது செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தனர். அதோடு, மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை உடனே விடுதலை செய்யுமாறும் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ”கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அலிகார் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில், டாக்டர் கான் பேசிய பேச்சில் எந்த தவறும் இல்லை. வெறுப்பூட்டும் வகையிலோ, வன்முறையை தூண்டும் வகையிலோ அல்லது அலிகார் பகுதியில் அமைதியை சீர்குலைப்பதாகவோ அவரது பேச்சு இல்லை. இவற்றை எல்லாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. அவரது பேச்சின் உண்மையான உள்நோக்கத்தை கவனிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தவறிவிட்டது” என்றும் கூறியுள்ளனர்.

இது குறித்து கான் கூறும்போது, ” 2017 ஆம் ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்காக, தம்மை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார். 70 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்காக, பெரும் விலையை கொடுத்துள்ளேன். அலிகார் பல்கலைக் கழகத்தில் ஒற்றுமை மற்றும் ஜனநாயக வழியிலான அமைதிப் போராட்டத்தை வலியுறுத்தியே பேசினேன்.

கொரோனா பரவல் குறித்து நான் பேசிவிடுவேன் என்ற காரணத்துக்காக என்னை 2022 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்திருந்தது. உத்தரப்பிரதேசத்தில் சுகாதாரத்துறை செயல் இழந்துவிட்டது. அதைப் பற்றி நான் பேசுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். என் வாயை அடைப்பதற்காகவே அவர்கள் என்னை தொடர்ந்து சிறையில் வைக்க முடிவு செய்தனர்” என்று தெரிவித்தார்.

சட்ட நிபுணர்கள் கருத்து

டாக்டர் கஃபீல் கானை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்குரைஞர் ரிபெக்கா ஜான், ”எந்த கேள்வியும் இல்லாமல், ஒருவரை ஓராண்டுக்கு சிறையில் தள்ளும் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை தண்டிக்கவும் சட்டம் இயற்ற வேண்டும். 90 சதவிகித வழக்குகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இல்லை. கொரோனாவால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நீதிமன்ற பணிகளும் முடங்கியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

உள்துறை முன்னாள் செயலர் ஜி.கே.பிள்ளை கூறும்போது, ”தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது, நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறையும்” என்றார்.

மூத்த வழக்குரைஞர் கொலின் கொன்சால்வே கூறும்போது, ”தவறான உத்தரவுகள் பெரும் அநீதிக்கு வழி வகுத்துவிடும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, உச்ச நீதிமன்றமும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அரசு தரப்பு சமர்ப்பிக்கும் ஆவணங்களே விசாரணைக்கு சாட்சியம் என்றும், விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்டவர் ஜாமீன் கோரினால் இந்த ஆவணங்களின் அடிப்படையில் அதை நிராகரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது. பொருந்தாத மற்றும் தவறான இந்த தீர்ப்பால், நாட்டில் பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது” என்றார்.

The post 7 மாதங்களுக்குப் பிறகு டாக்டர் கஃபீல் கான் விடுதலை: தே.பா.ச. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

விருந்தோம்பலை போற்றும் இந்தியாவில் வெளிநாட்டு முஸ்லீம்களை மோசமாக நடத்துவதா? மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்
தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 29 வெளிநாட்டு முஸ்லீம்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமனறத்தின் அவுரங்காபாத் கிளையில்  மனு தாக்கல் செய்தனர்.தாக்கல் செய்யப்பட்டது.  மனு மீதான விசாரணை நீதிபதிகள் டிவி நளவாடே மற்றும் எம்ஜி ஷெவ்லிகர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்து முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதிகள், கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு முஸ்லீம்கள்  பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த விசயத்தில் இயந்திரத்தனமாகவும் அரசியல் நிர்பந்தத்துடனும் மகாராஷ்ட்ர மாநில அரசு செயல்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற 29 பேர் மீது சுற்றுலா விசா நிபந்தனைகளை மீறியதாக வெளிநாட்டுச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம், நோய் தொற்று தடுப்புச் சட்டம், பேரழிவு மேலாண்மை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என்றும்,  உலக அளவில்  கொரோனா பரவல் இருக்கும்போது, வெளிநாட்டு முஸ்லீம்களை மகாராஷ்ட்ரா அரசு பலிகடா ஆக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தப்லிக் ஜமாத் மாநாட்டின் மத நடவடிக்கைகளில் அவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்தியாவில் கொரோனா தொற்றின் சமீபத்திய எண்ணிக்கையைப் பார்க்கும்போது, வெளிநாட்டு முஸ்லீம்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்திருக்கக் கூடாது.

இதுபோன்ற தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்க நேர்மறையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், தப்லிக் ஜமாத்தின் சீர்திருத்த இயக்கத்தால் கவரப்பட்டு உலகம் முழுவதும் இருந்து  முஸ்லீம்கள் வருவதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளிநாட்டு முஸ்லீம்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மசூதிகளுக்குச் செல்ல எந்த தடையும் இல்லை. இவ்வாறு செல்ல நிரந்தரமாக அரசு தடை விதித்திருப்பதாக எந்த ஆவணத்திலும் இல்லை. பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் வரை, தப்லிக் ஜமாத்தின் மாநாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விருந்தோம்பலை மாபெரும் கலாச்சாரமாகவும் பண்பாடாகவும் இந்திய மக்கள் பின்பற்றி வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாக கூறியுள்ள நீதிபதிகள், கொரோனா பரவிய போது, நமது வெளிநாட்டு விருந்தினர்கள் மீது சகிப்புத்தன்மையையும், உணர்வையும் நாம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, பயண ஆவணங்களில் விதிமீறியதாகவும், கொரோனா தொற்றை   பரப்பியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களை சிறையில் அடைத்துள்ளோம் என்றும் நீதிபதிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

வேறு மதத்தினரையோ அல்லது வேறு நாட்டவரையோ நடத்தும் விதத்தில் அரசு வேறுபாட்டைக் காண்பிக்கக் கூடாது என்று கூறியுள்ள நீதிபதிகள், வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, மசூதிகளின் நிர்வாகிகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 6 முஸ்லீம்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சொந்த நாடுகளுக்கு திரும்ப விமான நிலையங்களுக்கு சென்றவர்களை, கொரோனா சோதனை அறிக்கை இன்றி அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதால் தான், அவர்கள் பல மாநிலங்களில் உள்ள மசூதிகளுக்கு சென்றுள்ளனர். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும் விடுதிகள் மூடப்பட்டதால் அவர்கள் மசூதிகளில் தங்க வைக்கப்பட்டனர் என்று தெரிவித்த நீதிபதிகள், வெளிநாட்டு முஸ்லீம்கள் இந்தியாவில் உள்ள மசூதிகளுக்கு செல்லக் கூடாது என்று ஏதும் தடை இருக்கிறதா? என அரசு தரப்பைப் பார்த்து கேள்வி எழுப்பினர்.

சில கருத்துகளில் ஒரு நீதிபதி மாறுபட்டிருந்தாலும், 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை நீதிபதிகள் இணைந்தே ரத்து செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

The post விருந்தோம்பலை போற்றும் இந்தியாவில் வெளிநாட்டு முஸ்லீம்களை மோசமாக நடத்துவதா?  மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அயோத்தி வழக்கில் விமர்சனம்: நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் அனுமதி மறுப்பு
அயோத்தி வழக்கை விமர்சித்த பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீது அவமதிப்பு வழக்கு தொடர, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அனுமதி மறுத்துள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது,  ‘வகுப்புவாதத்துக்கு எதிரான கலைஞர்கள்’ என்ற கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகை ஸ்வரா பாஸ்கெர் பேசும்போது, ‘பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த   நீதிமன்றம், மசூதியை இடித்தவர்களுக்கே சாதகமாக  தீர்ப்பளிக்கிறது. இத்தகைய தீர்ப்பை அளித்த நீதிமன்றம் இருக்கும் நாட்டில் தான் நாம் வாழ்கின்றோம். நமது நீதிமன்றங்கள் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனவா?  இல்லையா? என்று உறுதியாக தெரியாத சூழலில் தான் நாம் இருக்கிறோம்’  என்றார்.

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி பெற்ற மேஹக் மகேஸ்வரி உள்ளிட்ட பா.ஜ.க வை சேர்ந்த வழக்குரைஞர்கள் தான், இந்த வழக்கிலும் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீதும் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் மனு செய்தனர்.

அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால்

1971 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவின் கீழ், ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமானால், அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோரிடம் அனுமதி பெறவேண்டும். அந்த வகையில்,  ஸ்வரா பாஸ்கெருக்கு எதிராக நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு பா.ஜ.க வழக்குரைஞர்கள் குழுவினர் சமர்ப்பித்த மனுவை, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நிராகரித்தார்.

மனு தாக்கல் செய்தவர்களில்  ஒருவரான அனுஜ் சக்சேனா என்பவருக்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ உச்ச நீதிமன்றம் குறித்து ஸ்வரா பாஸ்கெர் கூறிய கருத்துகள் அவதூறானவையோ அல்லது அவதூறு போன்றவையோ அல்ல. நீதிபதிகளை களங்கப்படுத்தியதோ அல்லது நீதிபதிகளை களங்கப்படுத்தியது போன்றதோ அல்ல. இந்த கருத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்றம் மீது அவதூறு பரப்பியதற்கான வழக்கோ அல்லது நீதிபதிகளை களங்கப்படுத்தியதற்கான வழக்கோ இது அல்ல. எனவே, ஸ்வரா பாஸ்கெருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஸ்வரா பாஸ்கெர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, சொலிசிட்டர் ஜெனரலை அணுக பா.ஜ.க ஆதரவு வழக்குரைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

The post அயோத்தி வழக்கில் விமர்சனம்: நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் அனுமதி மறுப்பு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மகாத்மா காந்தியிடம் எத்தகைய இந்துத்வா கோட்பாட்டை கற்க முடியும்? – சுவாமிநாதன் எஸ். அங்ளேஷரிய அய்யர்
அயோத்தியில்  கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடந்த  ராமர் கோயில் கட்டும் பூமி பூஜை விழா என்பது, சில அரசியல் விளைவுகளுடன் சிறிய நிகழ்வாக மாறும் என்று நான் எழுதியது பா.ஜ.கவினருக்கு துஷ்பிரயோகமாக தெரிந்தது. அதனால் அவர்கள் என்னை திட்டித் தீர்த்தனர்.

இந்தியாவில் ஏற்கனவே லட்சக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதோடு சேர்த்து அயோத்தியில் ஒரு ராமர் கோயில், அவ்வளவுதான் என்று நான் சொன்னேன். இந்து மதத்தைப் பற்றி எதுவும் தெரியாத, ஒரு நோய்வாய்ப்பட்ட  நாத்திக, இடதுசாரிகளின் ஏமாற்றமளிக்கும் மோசடி என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதற்கெல்லாம் பதில் அளிக்க என் தாயாரை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் ரிஷிகேஷில் உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் வாழ்ந்தார். அதன்பிறகு சன்னியாசியாக மாறினார். அவர் இந்து பக்தை. இருந்தாலும், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை கும்பல் ஒன்று இடித்ததை அவர் ஆதரித்திருப்பாரா? இல்லை. அவர்களை குண்டர் என்று அழைத்திருப்பார். இது, இந்து மதத்தில் நல்லவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்பட்ட அவமானம்.

ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவை ஏதோ எல்லா இந்துக்களுக்குமான பெரிய நிகழ்வு போன்று ஊடகங்கள் மிகைப்படுத்தின. ஆனால், அந்த விழா இந்துத்வாக்களுக்கானது, இந்துக்களுக்கானது அல்ல. அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டுவதற்கு தரப்படும் பிரம்மாண்ட விளம்பரம் குறித்து என் தாயார் கேள்வி எழுப்பினார். பெருவாரியான இந்துக்களைப் பொறுத்தவரை, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் என்பது, உள்ளூர் கோயில் அவ்வளவுதான். அதனை, இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களான திருப்பதி, வாரணாசி, தஞ்சாவூர், பத்ரிநாத், பூரி. வைஷ்ணவ தேவி அல்லது ஷிர்டி ஆகியவற்றுடன் ஒப்பிடமுடியாது.

இந்து சட்டத்தின்படி கட்டப்படும் கோயில்கள் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளதை என் தாயார் சுட்டிக்காட்டியுள்ளார். புதுடெல்லியில் என் தந்தை விநாயகர் கோயிலை கட்டினார். இதற்கும் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா? நிச்சயமாக இல்லை. கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையால் கலவரம் ஏற்பட்டபோது, எங்கள் குடும்பம் சிம்லாவில் இருந்தது. இந்து கும்பலால் துரத்தி வரப்பட்ட முஸ்லீம் குடும்பம் ஒன்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்தது. விரட்டி வந்த கும்பல் தேடிப் பார்த்துவிட்டு போகும்வரை, அவர்களை என் தாயார் பாதுகாப்பாக அடைத்து வைத்திருந்தார். இப்போது சொல்லுங்கள்..இந்து மதத்தின் பிரதிநிதி யார்? விரட்டி வந்த இந்து கும்பலா அல்லது என் தாயாரா?

என்னுள்  மதத்தின் மீது  ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்த என் தாயார் விரும்பினார். இன்னும் என்னுள் இருக்கும் நாத்திகத்தைப் பார்த்து புன்னகைத்தேன். இந்து மதத்துக்குள் இருக்கும் சார்வகா தத்துவவியல் பள்ளி போன்ற நாத்திக மரபுகள்  என்னுள் இருப்பது தெரிந்தது. இந்துத்வாவாதிகள் இதனை அறிந்திருக்கவில்லை. எது எப்படியோ, மதச்சார்பற்றவர்களைவிட, சிறிய எண்ணிக்கையிலான நாத்திகர்களைப் பற்றி சிறிதே அவர்கள் கவலைப்படுகிறார்கள். மதச்சார்பின்மை இந்துவுக்கு எதிரானது அல்லது இந்துயிசத்தை வீழ்த்த வந்துள்ளதாக எண்ணுகிறார்கள்.

மகாத்மா காந்தியை இந்து பக்தர் என்ற வகையில், கேள்வி எழுப்ப முடியாது. அவரும் அடிப்படையில் மதச்சார்பற்றவரே. இந்த இரண்டு விசயங்களுக்கும் இடையே எவ்வித முரண்பாட்டையும் காண முடியவில்லை. ”கடவுளை பல பெயர்கள் சொல்லி மக்கள் அழைக்கிறார்கள். அவர்களுக்கு வேறுபட்ட மதங்கள் உள்ளன. ஆனால், அனைவரும் ஒரே பரிசுத்தவானிடம் தான் பிரார்த்தனை செய்கின்றனர்” என்றார் மகாத்மா காந்தி. இதுதான் அவர் கட்டமைத்த மதச்சார்பின்மையும், அனைத்து மதத்தவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுமாகும். மதச்சார்பின்மையால் இந்துயிசத்துக்கு எவ்வித மரியாதைக்குறைவும் ஏற்பட்டு விடாது. ஆனால், எல்லோரையும் மதிக்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மையின் நோக்கமாக உள்ளது.

தனிமனித உரிமைகளுக்கான கோட்பாடுகளிலும், மற்றவர் நம்பிக்கையை மதிக்க வேண்டியது கடமை என்பதிலும், மற்றவர் மீது கருத்துகளை திணிக்கக் கூடாது என்பதிலும் மகாத்மா காந்தி நம்பிக்கை உடையவர். எனினும், இந்து அல்லாதவர்கள் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை அவர் ஆதரித்தார். இந்து என்பதை விட, தினமும் பிரார்த்தனை செய்பவராகவும் மகாத்மா காந்தி இருந்தார். அதிகபட்ச மதச்சார்பற்றவராக இருந்ததால் தான், நாதுராம் கோட்சேவால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதும் அவரது கடைசி வார்த்தை ‘ஹே ராம்…’ என்றே ஒலித்தது. இப்போது சொல்லுங்கள்… பாஜகவினர் வழக்கமாக பயன்படுத்தும் மதச்சார்பற்ற பிணியாளரா அவர்?

தாங்கள் மட்டுமே இந்து மதத்தின் உண்மையான பிரதிநிதிகள் என இந்துத்வா கூட்டம் ஒன்று இன்று சொல்லிக் கொண்டு திரிகிறது. இந்த கும்பலால் மகாத்மா காந்தியின் மதச்சார்பின்மையை நிலைநிறுத்த முடியாது. அதேசமயம், அவர்கள் கருத்து கோட்சேவை வணங்குவதாக உள்ளது. 2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் பிராக்யா தாகூர், கோட்சே தலைசிறந்த தேசியவாதி என்று உரக்கச் சொன்னார். இதனையடுத்து, பிராக்யா தாகூரை   மோடி கண்டித்தார்.  இந்துத்வா கும்பல் கோட்சேவுக்கு பல இடங்களில் சிலை வைத்துள்ளது. குவாலியரில் உள்ள இந்து கோயில் ஒன்றில் அவரை கடவுளாக வணங்குகின்றனர். மீரட் நகருக்கு கோட்சே பெயரை சூட்ட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தேசித்துள்ளார்.

இந்திய நாத்திகவாதிகளைப் பற்றி விக்கிப்பீடியாவில் தேடினேன். அதில், என் பெயரும், இந்துத்வாவை உருவாக்கிய வினாயக் தாமோதர் சாவர்கர் பெயரும் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இந்துக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தவர் சாவர்கர். மத ரீதியான கோட்பாடுகளை விட, அரசியல் கலாச்சார கோட்பாடுகளை கொண்டது இந்துத்வா என்ற கருத்துடையவர். அவரது சில பேச்சுகளில், தம்மை நாத்திகவாதி என்று அறிவித்துக் கொண்டவர்.  இந்துயிசத்தை பெருமளவு நவீனப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்த சந்தான் தர்மாவையும் அவர் நிராகரித்தவர். மாடுகளில் புனிதம் ஏதுமில்லை என்று கூறிய அவர், சைவ உணவை கைவிடுமாறு இந்துக்களை அறிவுறுத்தினார். சாவர்கரின் சுயசரிதையை எழுதிய தனஞ்ஜய் கீர் கூறும்போது, ”தனது மனைவி இறந்தபோது, இந்து முறைப்படி சடங்குகள் செய்யுமாறு ஆதரவாளர்கள் விடுத்த வேண்டுகோளை சாவர்கர் நிராகரித்துவிட்டதாக” குறிப்பிட்டுளார். இதுபோன்ற செயலுக்கு இந்துத்வாவாதிகள் முன்னுரிமை கொடுக்க வாழ்த்துகிறேன்.

”முதலாவதாக, இந்து கும்பலிடம் இருந்து முஸ்லீம்களை பாதுகாப்பவரே இந்துவாக இருக்க முடியும். இரண்டாவதாக, பெரும்பான்மையான இந்துக்கள் தீவிர மதசார்பற்றவர்களாக இருக்க முடியும். மூன்றாவதாக, இந்துத்வா என்பது இந்து மதத்தை வளர்ப்பதாக அல்ல.  இந்து பெரும்பான்மையை வளர்ப்பதற்காகவே…”

என் தாயார், காந்தியடிகள் மற்றும் சாவர்கர் ஆகிய  மூவரின் உதாரணங்களில் இருந்து கற்கவேண்டிய பாடம் இவை.

கட்டுரையாளர்: எகானமிக்ஸ் டைம்ஸ் ஏட்டின் ஆலோசனை ஆசிரியராகவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

The post மகாத்மா காந்தியிடம் எத்தகைய இந்துத்வா கோட்பாட்டை கற்க முடியும்? – சுவாமிநாதன் எஸ். அங்ளேஷரிய அய்யர் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.