கருத்தாய்வு - தேசிய முரசு - Desiya Murasu

ராஜீவ் தியாகியை காவு வாங்கிய ‘விஷம்’ கலந்த ஊடக விவாதம்: காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசம்
கடந்த புதன்கிழமை தொலைக்காட்சியின் விவாத நேரடி ஒளிபரப்பில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி கலந்து கொண்டார். அப்போது விவாதத்தின் போது உணர்ச்சிவயப்பட்ட அவர்,   ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, உடல்நலம் குன்றி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுபோன்ற காட்சி ஊடகங்களின் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இது அபாயகரமான செயல்பாடு என்றும் அகமது பட்டேல் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விவாதத்தின்போது, ராஜீவ் தியாகிக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய பாஜக செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ராவை கைது செய்யுமாறு சில கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடந்தது என்ன?

பெங்களூரு கலவரம் குறித்து  ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சியில் கடந்த புதன்கிழமை மாலை 5 மணிக்கு ராஜீவ் தியாகி வீட்டிலிருந்தபடி பங்கேற்ற காணொலி விவாதம் தான் அவரது கடைசி நிகழ்ச்சியாக முடிந்தது. தொலைக்காட்சி விவாதத்தின்போது, மாரடைப்பு ஏற்பட்டதால், ராஜீவ் தியாகியை அவரது குடும்பத்தினர் கெய்ஜாபாத்தில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைக்குப் பின்பும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அகமது பட்டேல், ”இத்தகைய விவாதங்களின் அர்த்தமற்ற, நச்சுத் தன்மையுடைய அபாயகரமான செயல்பாட்டை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி  தொலைக்காட்சி ஆசிரியர்களும், நெறியாளர்களும் யோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சில சமயங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை, துப்பாக்கிக் குண்டுக்கு இணையானதாக இருக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல்  தொடர்பு ஒருங்கிணைப்பாளர் கவுரவ் பந்தி தமது ட்விட்டர் பதிவில், ”விவாதத்தில் தியாகியைப் பார்த்து பத்ரா பேசிய வார்த்தைகளை காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். விவாதத்தின்போது, ராஜீவ் தியாகியைப் பார்த்து  பத்ரா  பேசும் மோசமான வார்த்தைகளைப் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

”நெற்றியில் பொட்டு வைப்பதால் ஒருவர் உண்மையான இந்துவாக மாறிவிடமாட்டார். நீங்கள் நெற்றியில் பொட்டு வைக்க விரும்பினால், இதயப்பூர்வமாக வைக்க வேண்டும்” என்று பாஜகவின் பத்ரா  பேசினார். பெங்களூருவில் வீடு எரிப்புக்கு யார் காரணம் என்று கூற உங்களுக்கு தைரியம் உள்ளதா? என கேட்டார்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறும்போது, நோயாளிகள் மற்றும் மிதமான குரலில் உரையாடுவோரின் உயிர்களை, எவ்வளவு காலத்துக்கு நச்சுத் தன்மைவாய்ந்த விவாதங்களும், விஷத்தை கக்கும் நெறியாளர்களும் பறிக்கப்போகிறார்களோ? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகருக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் எழுதியுள்ள கடிதத்தில், அவதூறு, பரபரப்பு மற்றும் நச்சு கலந்த தொலைக்காட்சி விவாதங்களை கட்டுப்படுத்த ஊடகங்களுக்கு நடத்தை விதிகளை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

”பார்ப்போரின் காதுகளின் ஜவ்வு கிழியும் அளவுக்கு விவாதங்களில் பங்கேற்போரை சூடாக்கி கத்தவிடும் விளையாட்டை காட்சி ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், குறிப்பாக, பாஜகவின் பத்ரா போன்றவர்களை ஊக்குவிப்பதையும் தவிர்க்க வேண்டும்” என்று இளைஞர் காங்கிரஸின் தேசிய பிரச்சாரக் குழு பொறுப்பாளர் ஒய்.பி. ஸ்ரீவத்சவா கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துமீறி போய்க் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் விவாதங்களுக்கு, ராஜீவ் தியாகியின் மரணமாவது முற்றுப்புள்ளி வைக்குமா?

The post ராஜீவ் தியாகியை காவு வாங்கிய ‘விஷம்’ கலந்த ஊடக விவாதம்: காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஊனமாகிப் போன இந்திய ஊடகங்கள்: வருவாய் இழப்பால் வழி தவறிய பரிதாபம்
லடாக்கில் சீன ஊடுருவல் குறித்த மவுனம், 5 ரபேல் விமானங்கள் வந்ததற்காக கோஷங்கள், நடிகரின் தற்கொலை ஆகியவை தான் அரசியலிலும் பிரதான தேசிய ஊடகங்களிலும் முக்கிய செய்திகளாக உள்ளன.

பிரதான ஊடகங்கள் என்பது அச்சு ஊடகமாகவும், அதன்பிறகு காட்சி ஊடகங்களாகவும் உள்ளன. தற்போதுள்ள இணைய தளம் அல்லது ஆப் போன்றவை பிரதான ஊடக வரிசைக்கு இன்னும் வரவில்லை. இதில் வயர் மற்றும் ஸ்க்ரோல் போன்ற இணைய தளங்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு வாசகர்களும் அதிகம் உள்ளனர்.

பிரதான ஊடகங்களைப் போல் செய்திகளைப் பெறுவதற்கான சூழல் இணைய தளங்களுக்கு இல்லை. இந்திய ஊடகங்கள் விளம்பரம் மூலமே நடத்தப்படுகின்றன.  எனினும். வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் மூலம் ஊடகங்களுக்கு கிடைக்கும் வருவாய் உலகிலேயே குறைந்த அளவாக உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிஜிட்டல் விளம்பரம் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், அச்சு ஊடகங்களுக்கு 22 சதவீதம் மட்டுமே விளம்பர வருவாய் கிடைத்துள்ளது. 43 சதவீத விளம்பர வருவாய் பெற்று காட்சி ஊடகங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தன. ஆனால் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் வருவாய், 2020 ஆம் ஆண்டு டிஜிட்டலுக்கு பரிமாற்றம் ஆகக்கூடும். இதற்கான வேலையை கொரோனா பிரச்சினைகள் செய்து வருகின்றன.

டிஜிட்டல் என்பது கூகுள் மற்றும் ஃபேஸ்புக் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் டைம்ஸ் ஆஃப் இந்தியா அல்லது இந்துஸ்தான் டைம்ஸ் அல்லது மற்ற இந்திய அச்சு ஊடகங்களுக்கு கிடைக்கும் வருவாயை விட, அதிக விளம்பர வருவாயை இந்த இரு நிறுவனங்களும் பெற்று வருகின்றன. இது நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. இது ஊடகங்கள் மத்தியில் நிகழும் முதல் மாற்றம்.

இரண்டாவது மாற்றமாக,  பெரும்பாலான இந்திய ஊடகங்கள் இந்துத்வா நிலையை எடுத்துள்ளன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிறப்பின் அடிப்படையில் இந்தியர்களை பிளவுபடுத்த முயன்றதில்லை. மக்களை பிரித்தாளுவதில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வின் இந்த நிலையை இன்று ஊடகங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டன. உலகம் முழுவதும்  கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மதத்தினரே பரப்பியதாக கூறியதை ஊடகங்களும் ஏற்றுக் கொண்டதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இதே தொற்று பரவும் ஆபத்து உள்ள நிலையில், மற்றொரு மதம் சார்ந்த நிகழ்ச்சி நடைபெற்றதையும் ஊடகங்கள் கவனிக்க தவறிவிட்டன.

அரசு நிர்வாகத்தின் தோல்விகளை கண்டுகொள்ளாமல் ஊடகங்கள் ஓடுகின்றன. 1962 ஆம் ஆண்டு தங்கள் இன்னுயிரை கொடுத்து ராணுவ வீரர்கள் காப்பாற்றிய நம் நிலப்பரப்பை, எதிரிகள் ஆக்கிரமிப்பதைப் பற்றி பேசவில்லை, மாறாக, ரபேல் விமானம் வந்ததற்கு லாவணி பாடிக் கொண்டிருக்கின்றன நம் ஊடகங்கள்.

பெரு நிறுவனங்கள் வங்கிக் கடனை தாமதமாக செலுத்த வாய்ப்பு தரப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட கடன், வீட்டுக் கடன் மற்றும் மோட்டார் வாகன கடன் கட்டுவதிலும் இத்தகைய வாய்ப்பு தரப்பட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது, இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு நடிகரின் தற்கொலைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

10 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான ஊடகங்கள் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டன. அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கூறுகளை மதித்து, நாம் மாறுபட்ட மற்றும் மதச்சார்பற்ற தேசமாக இருந்தோம்.

அது தற்போது அரசியலிலும் ஊடகங்களிலும் முடிவுக்கு வந்துள்ளது.

The post ஊனமாகிப் போன இந்திய ஊடகங்கள்: வருவாய் இழப்பால் வழி தவறிய பரிதாபம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.