தமிழக அரசியல் - தேசிய முரசு - Desiya Murasu

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா
தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரையில் ‘திருப்பூர் குமரன் மனைவி இராமாயி அம்மாள் வறுமையில் வாடிய போது காங்கிரஸ் கட்சி உதவி செய்ய முன்வராமல் அவரை மறந்துவிட்டதாக’ குற்றம்சாட்டி எழுதியிருக்கிறார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., திருப்பூர் குமரன் மனைவிக்கு நிதியுதவி செய்ததைப் பற்றிக் குறிப்பிடும் போது, தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை ஏன் சீண்டிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. 1967இல் ஆட்சியை காங்கிரஸ் கட்சி இழந்த பிறகு முதலமைச்சர்களாக இருந்த கலைஞரும், எம்.ஜி.ஆரும் இதுபோன்ற உதவிகளை நிறையச் செய்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் குறிப்பிடும் போது காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மறைந்த எம்.ஜி.ஆருக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செய்த உதவிகளைக் கணக்கிடுகிற போது, எம்.ஜி.ஆர். செய்த இத்தகைய உதவிகள் பொருட்படுத்தக்கூடியது அல்ல. எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரைப் பார்க்க பிரதமர் இந்திரா காந்தி தனி விமானத்தில் அவசர அவசரமாக சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இந்திரா காந்தி பயணித்த காரின் பின்னே அ.தி.மு.க. அமைச்சர்கள் சோகமே உருவாய் அவர்களது கார்களில் அணிவகுத்து வந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்போலோவில் எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து விட்டு அவருக்கு உரிய சிகிச்சைகளை செய்வதோடு, தேவைப்பட்டால் வெளிநாட்டில் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். பிறகு, எம்.ஜி.ஆருக்கு வெளிநாட்டுச் சிகிச்சை தேவைப்பட்டதால் விமானத்தையே மருத்துவமனையாக்கி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அவரை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாகப் பயணிக்க வைத்து, மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

அதைப்போலவே இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற 1984 தேர்தலில் அமெரிக்க மருத்துவமனையிலிருந்தே வேட்புமனு தாக்கலில் கையொப்பமிட்டுத் தேர்தலில் நிற்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்தவர் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி. அத்தகைய நன்றிப் பெருக்கை வெளிப்படுத்துகிற வகையில் தான் சென்னை கத்திப்பாரா சந்திப்பில் பண்டித ஜவஹர்லால் நேரு சிலை திறப்பு விழாவில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தியை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கட்டித் தழுவி கண்ணீர் மல்க உரையாற்றியதை சைதை துரைசாமி மறந்திருக்க முடியாது. தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா படுகொலை செய்யப்பட்டது மருத்துவமனையில் இருந்த போது எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படவில்லை. உடல்நலம் தேறிய சூழலில் ராஜிவ்காந்தி பிரதமராகப் பொறுப்பேற்று முதல் முறையாக சந்திக்கிற போது, எம்.ஜி.ஆர். எந்தளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜிவ்காந்தியுடன் எம்.ஜி.ஆர். சந்தித்த காட்சி அங்கு கூட்டத்தில் திரண்ட மக்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. அத்தகைய நன்றி உணர்ச்சிமிக்க உறவுகளை வைத்திருந்ததை எல்லாம் மறந்துவிட்டு திருப்பூர் குமரன் மனைவிக்கு செய்த நிதியுதவியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்துவது எந்தவகையில் நியாயம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியலில் பெற்ற வெற்றிகள் எந்தளவிற்கு சாத்தியமாகியிருக்கும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். புகழைப் பாடுங்கள். அதற்காக காங்கிரசை இழிவுபடுத்தாதீர்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

The post எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.
மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து நவமவர் 22 முதல் 29 வரை மாபெரும் பிரச்சாரப் பயணம்.

அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனையின்படி தலைவர் கே.எஸ்.அழகிரி வழிகாட்டுதலோடு தமிழகம் முழுவதும் எழுச்சிப்பயணம் நடைபெறுகிறது. விடுதலை போராட்ட காலத்தை நினைவு கூறுகிற வகையில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் கதர் குல்லா அணிந்து, கையில் மூவண்ண ராட்டை கொடியுடன் பொதுமக்களை சந்தித்து மத்திய பாஜக ஆட்சியின் அவலங்களை பட்டியலிடும் கீழ்கண்ட கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்குவார்கள். பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கு மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் முன்னோட்டமாக அமையும்.

அனைவரும் கை கோர்ப்போம்! தேசத்தை காப்போம்!

கடும் விலைவாசி உயர்வால் தவியாய் தவிக்கும் குடும்பங்கள்:

கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை இரு மடங்கு உயர்வு. சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் விலை லிட்டர் ரூ.200-க்கு விற்கப்படுகின்றன.

கடந்த ஓராண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.300 உயர்ந்துள்ளது.

தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படும் நிலையில், அதற்கான மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைத்தது. இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் விலை ஏற்றப்படுகிறது.

சாதாரண மக்களைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரயில்வே நடைமேடை டிக்கெட் ரூ. 5 -லிருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் ரூ. 71- க்கு விற்கப்பட்ட பெட்ரோல், 2021 இல் 105- க்கு விற்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு ரூ.57- க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், 2021 இல் ரூ.96 -க்கு விற்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் ரூ. 60- க்கு விற்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், 2021 இல் ரூ.225- க்கு விற்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு ரூ.30 -க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை, 2021 ஆம் ஆண்டு ரூ. 50- க்கு விற்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு ரூ. 46- க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பால், 2021 இல் ரூ.57 -க்கு விற்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு ரூ. 3- க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை, 2021 ஆம் ஆண்டு ரூ.8- க்கு விற்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு ரூ. 350- க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் நெய், 2021 இல் ரூ. 650- க்கு விற்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு ரூ.15- க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மாவு, 2021 ஆம் ஆண்டு ரூ. 30- க்கு விற்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு ரூ.70- க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தானியங்கள், 2021 ஆம் ஆண்டு ரூ.190- க்கு விற்கப்படுகிறது.

ஒரு சில பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவான மோடி அரசின் போக்கால், பங்குச் சந்தையில் அவர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க வழி ஏற்பட்டுள்ளது.

அதே சமயம், மக்களின் வைப்புத் தொகை, சேமிப்புக் கணக்கு, வருங்கால வைப்பு நிதி மற்றும் ஏனைய சேமிப்புகளின் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் 9 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டதால், வைப்புத் தொகை மூலம் வருவாய் ஈட்டும் லட்சக்கணக்கானோர், குறிப்பாக மூத்த குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்பு 8 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்த சேமிப்புத் தொகை, தற்போது 14 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சாதாரண மக்களிடம் இருந்தும், தொழிலாளர்களிடம் இருந்தும் சேமிப்பைப் பறித்து, ஒரு சில கார்பரேட் நிறுவனங்கள் பயனடைய மத்திய பா.ஜ.க அரசு உதவுகிறது.

மோடி அரசின் தவறான பொருளாதார நிர்வாகம் காரணமாக இந்தியாவின் சாதாரண நிலையில் உள்ள ஆண்களும் பெண்களும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். வருவாய் இழப்பு ஏற்பட்டு சிறு வணிகங்கள் அழிந்து வருகின்றன.

ஏற்கெனவே வருவாயை இழந்து நிற்கும் மக்கள், விலைவாசி உயர்வு காரணமாக கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பா.ஜ.க.வின் பணக்காரர்களுக்கு ஆதரவான போக்கும், மக்கள் விரோதக் கொள்கையுமே விலைவாசி உயர்வில் பிரதிபலிக்கின்றன.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக லாரி, டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவோர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே மோடி அரசால் பெரும் பாதிப்புக்குள்ளான விவசாயிகளை, எரிபொருள் விலை உயர்வும் மேலும் பாதிப்படையச் செய்துள்ளது.

போக்குவரத்து மற்றும் விவசாயத் துறையில் எரிபொருள் விலையேற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஓராண்டாக காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

கிராமப் புறங்களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது. பட்டினி மற்றும் ஊட்டச் சத்துக்குறைபாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஊட்டச்சத்து உணவுகளான பால், தானியங்கள், முட்டைகள் மற்றும் இறைச்சி ஆகியவை, கடும் விலை உயர்வால் குடும்பங்களின் உணவுப் பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டன.

இந்தியாவில் 20 கோடி பேர் பட்டினி கிடக்கிறார்கள். இது உலக அளவிலான பட்டினியில் நான்கில் ஒரு பங்காகும். 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பட்டினி பட்டியலில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101 ஆவது இடத்தில் உள்ளது. 2014 ஆம் ஆண்டு உலகளாவிய பட்டினி பட்டியலில், இந்தியா 55 ஆவது இடத்தில் தான் இருந்தது. 2016 ஆம் ஆண்டிலிருந்தே அதே இடத்திலேயே இந்தியா தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது, மிகவும் மோசமான சூழல் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களுக்காக அதிகம் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிக்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், குடும்பத்தினர் கைகளில் அதிகமான அளவு பணம் புரளும். இந்த பணத்தை பல வகைகளில் அவர்கள் செலவழிக்கும் போது தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான கலால் வரியை 250 சதவிகிதம் (ஒரு லிட்டருக்கு ரூ.9.48 -லிருந்து ரூ. ரூ.32.98 ஆக உயர்வு) வரை பா.ஜ.க. அரசு உயர்த்தியுள்ளது. டீசல் மீதான கலால் வரி 800 சதவிகிதம் (ஒரு லிட்டருக்கு ரூ.3.65 -லிருந்து ரூ. 31.83 ஆக உயர்வு) உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட, கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான வரி 3 மடங்கு அதிகமாகவும், டீசலுக்கான வரி 9 மடங்கு அதிகமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு, அந்த சமயத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 10 -ம், ஒரு லிட்டர் டீசலை ரூ.13- ம் உயர்த்தியது.

இந்த அநியாய வரி உயர்வை மோடி அரசு திரும்பப் பெற்றால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22 குறைவாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 28 குறைவாகவும் கிடைக்கும்.

எரிபொருட்கள் விலையை ஏற்றி சாதாரண மக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் கார்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தபோதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றப்பட்டு வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு ரூ.10 ஆயிரத்து 412 ஆக இருந்தபோதிலும், சாதாரண மக்கள் பாதிக்காத வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டது.

கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது பா.ஜ.க.வுக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இதனைப் பயன்படுத்தி எரிபொருள் விலையைக் குறைத்து, அதன் பலனை மக்கள் அடையச் செய்யலாம். அதற்குப் பதிலாக வரி மற்றும் கலால் வரியை அதிகரித்து சாதாரண மக்களை வாட்டி வதைக்கிறது பா.ஜ.க. அரசு. எரிபொருட்களுக்கு அதிக விலையேற்றி சாதாரண மக்களுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசு தொடர்ந்து அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியின் அவலங்களை பாரீர்!

மத்திய பாஜக ஆட்சியை அகற்ற ஆதரவு தாரீர்!

The post காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம். appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!
1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஆற்றிய பணிகளை நினைவு கூறுகின்ற வகையில் நவம்பர் 2009 தேசிய முரசு இதழில் வெளிவந்த கட்டுரையை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம். உலக வரலாற்றில் சாதனைகளை புரிந்த வங்கதேச விடுதலை குறித்து 50 வது ஆண்டு பொன்விழா நேரத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களை போற்றுகின்ற வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கிறது. இதனை காங்கிரஸ் நண்பர்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். – ஆ.கோபண்ணா

லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்தது. இந்தப் போரில் ரஷ்யா தலையிட்டு ‘தாஷ்கண்ட் ஒப்பந்த’த்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போரில், இந்தியாவின் வெற்றி, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிமீது உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரத்தில் மாரடைப்பால் லால்பகதூர் சாஸ்திரி காலமானார்.

இதையடுத்து இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி பொறுப்பேற்றார். பாகிஸ்தான் ராணுவத்தில், கிழக்குப் பாகிஸ்தானியரின் பங்கு மிகக்குறைவாக இருந்தது. மத்திய அரசு பணிகளில் மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 84 சதவிகிதத்தினரும் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 16 சதவிகிதத்தினரும் இருந்தனர். அதேபோல, ராணுவத்தில் 90 சதவிகிதத்தினர் மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதியில், கிழக்குப் பாகிஸ்தானில் விளைந்த சனல் மூலமாக 70 சதவிகித் வருமானம் கிடைத்து வந்தது. 1950இல் கிழக்குப் பாகிஸ்தானில் தனிநபர் வருமானம் ரூ.288 ஆகவும் மேற்குப் பாகிஸ்தானில் தனிநபர் வருமானம் ரூ.357 ஆகவும் இருந்தது. ஆனால், 1970இல் கிழக்குப் பாகிஸ்தானில் தனிநபர் வருமாளம் ரூ. 331 அளவுக்குத் தான் உயர்ந்தது. ஆனால் மேற்குப் பாகிஸ்தான் மக்களின் தனிநபர் வருமானம் அதிகமாக உயர்ந்திருந்தது. இந்த வகையில், கிழக்குப் பாகிஸ்தான் மக்களைச் சுரண்டுவதன் மூலமாக, ராணுவ அரசுதான் மேற்குப் பாகிஸ்தான் மக்களைக் காப்பாற்றி வந்தது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆயுப்கானின் ஆட்சி மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை, அந்த நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே அந்த நாட்டுமக்கள் கருதினர். இந்தத் தோல்விக்குக் காரணம் ஆயுப்கான் தான் என்று நம்பினர். அங்கு ஏற்பட்ட விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றன மக்களை வாட்டிவதைத்தன ராணுவ ஆட்சியில் அதிருப்தியடைந்த மக்கள், கொந்தளிப்பான மனநிலையில் இருந்தனர், ‘பாகிஸ்தான் மீண்டும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பவேண்டும்’ என்ற உணர்வு மேலோங்கி இருந்தது. இத்தகைய உணர்வு மேற்குப் பாகிஸ்தானில் மிக அதிகமாகக் காணப்பட்டது. பாகிஸ்தான் முழுவதும் மாணவர்கள் தெருக்களில் இறங்கிப் போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள். பாகிஸ்தான் முழுவதும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்தனர்.

பாகிஸ்தான் பிரிவினையை மகாத்மா காந்தி உள்ளிட்ட அளைத்துத் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி ஆட்சி செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமில்லாத பூகோள நிலப்பரப்பைப் பிரிவினையின் மூலம் அந்த நாடு பெற்றது. இந்தியாவிற்கு மேற்கில் ஒரு பகுதியும். கிழக்கில் ஒரு பகுதியும் என 1500 மைல்கள் இடைவெளியில் அந்த நாடு உருவானது. பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் கிழக்குப் பாகிஸ்தானிலும், 40 சதவிகிதம் பேர் மேற்குப் பாகிஸ்தானிலும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அரசு நிர்வாகத்திலும் ராணுவத்திலும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். மக்கள் தொகை விகிதாச்சாரத்தைமீறி அரசு நிர்வாகத்திலும் ராணுவத்திலும் மேற்குப் பாகிஸ்தானியர் ஆதிக்கம் செலுத்தியதை வங்காள முஸ்லிம்களான கிழக்குப் பாகிஸ்தானியர் ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களாக இருந்தாலும், இவர்கள் தாய்மொழி வங்காளமாகும். மேற்குப் பாகிஸ்தானியரின் தாய்மொழியான உருதுமொழியை ஆட்சி மொழியாகக் கிழக்குப் பாகிஸ்தானியர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தப் பின்னணியில், 17.1.1971இல் நடைபெற்ற பொதுத் தேர்தலைக் கிழக்குப் பாகிஸ்தானியர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பாகக் கருதினர். ஷேக் முஜிபூர் ரஹ்மான் தலைமையில் கிழக்குப் பாகிஸ்தானில் போட்டியிட்ட அவாமி லீக் கட்சி, அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.

அதேபோல தேசிய பார்விமெண்ட் தேர்தலில், மொத்தம் இருந்த 313 இடங்களில், 167 இடங்களில் அவாமி லீக் வெற்றி பெற்றது. மேற்குப் பாகிஸ்தானில் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 122 இடங்களில் போட்டியிட்டு 82 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற அரசியல் கட்சிகள் 58 இடங்களில் வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், முஜிபூர் ரஹ்மானே அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துப் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். இதைப் பூட்டோவும் ராணுவ ஆட்சியும் ஏற்க விரும்பவில்லை. அதேபோல, கிழக்குப் பாகிஸ்தான் மாகாண சட்டசபைத் தேர்தலில் ஷேக் முஜிபூர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் மொத்த இடங்களான 310 தொகுதிகளில் போட்டியிட்டு, 298 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு முதலமைச்சராகும் வாய்ப்பு அவாமி லீக் கட்சிக்குத்தான் இருந்தது.

பாகிஸ்தான் மக்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த முஜிபூர் ரஹ்மான், ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் முயற்சிகளை எதிர்த்துக் கிழக்குப் பாகிஸ்தானில் கடுமையான கலவரம் வெடித்தது. இதை அடக்குவதற்குப் பாகிஸ்தான் ராணுவம் பெருமளவில் கிழக்குப் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. முஜிபூர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். பிறகு, மேற்குப் பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்குப் பிறகு, கிழக்குப் பாகிஸ்தானில் ராணுவத்தின் பயங்கரமான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்துக் கிழக்கு வங்க இளைஞர்கள், ஆயுதமேந்தி ‘முக்தி பாஹிணி’ என்ற அமைப்பினை உருவாக்கிப் போர்புரியத் தொடங்கினர். எனவே, கிழக்குப் பாகிஸ்தாளில் பயங்கரமான உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. இந்த உள்நாட்டுப் போரில் இந்தியாவின் ஆதரவும் அனுதாபமும் முஜிபூர் ரஹ்மானுக்கே இருந்தது. தேர்தலில் பெரும்பான்மையான பலத்துடன் வெற்றிபெற்ற கட்சியை ஆட்சி அமைக்கவிடாமல், அடக்கி ஒடுக்கும் ஜனநாயக விரோதச் செயலை இந்தியா கடுமையாகக் கண்டித்தது.

கிழக்குப் பாகிஸ்தானில் ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு ஆளான அப்பாவி மக்கள், அகதிகளாக ஆயிரக்கணக்கில் நாள்தோறும் இந்தியாவுக்கு வரத்தொடங்கினர். இவர்களை மனிதாபிமானத்துடன் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டது. இப்படி அகதியாக வந்தவர்கள் ஒருகோடி பேருக்கும் அதிகமாக இருந்ததால், இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது கிழக்குப் பாகிஸ்தானில் ஆயுதமேந்திப் போராடிய முக்தி பாஹிணி படையினர், கிழக்குப் பாகிஸ்தானைச் ‘சுதந்திரமான பங்களாதேஷ்’ நாடாகப் பிரகடனம் செய்தனர். கிழக்குப் பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி அமைக்கப் போராடுகிறவர்களுக்கு ஆதரவாக இந்தியா தன்னுடைய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்துக் குரல் கொடுத்தன. ஆனால் இது, வேறு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், பல மாதங்கள்வரை பிரதமர் இந்திராகாந்தி பொறுமையைக் கடைப்பிடித்து வந்தார். ஆனால் அதே நேரத்தில், ஒருகோடி அகதிகளைப் பராமரிக்க வேண்டிய பெருஞ் சுமை இந்தியாவிற்கு இருப்பதையும் இந்திரா காந்தி உணர்ந்திருந்தார்.

‘கிழக்குப் பாகிஸ்தானில் நடைபெறுகிற மனிதப் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு உலகம் சும்மா இருக்கக்கூடாது’ என்றும் விடுதலைப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அபிப்பிராயத்தைத் திரட்டுவதற்காக இந்திராகாந்தி 20 நாட்கள் உலகநாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிற சர்வாதிகார ஆட்சியின் நடைமுறைகளை எதிர்கொள்வதற்குத் தொலைநோக்குப் பார்வையுடன் சோவியத் யூனியனுக்குச் சென்று அமைதி, நட்புறவு ஒப்பந்தத்தில் இந்திராகாந்தி கையெழுத்திட்டார். இது, இந்திராகாந்தியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் படையெடுப்பு நடைபெறாமல் தடுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பை இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா பெற்றது.

பாகிஸ்தானின் ராணுவத் தளவாடத் தேவையின் பெரும் பகுதியை அமெரிக்காவும் கணிசமான பகுதியைச் சீனாவும் வழங்கிப் பூர்த்திசெய்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா ராணுவத் தலையீடு செய்தால், அமெரிக்காவும் சீனாவும் அதன் உதவிக்கு வரக்கூடும். இதையெல்லாம் எதிர்பார்த்தே இந்திராகாந்தி சோவியத் யூனியனோடு நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வங்க தேசப் பிரச்சினையில் உலகத்தின் ஆதரவைத் திரட்டுவதற்காகப் பிரதமர் இந்திராகாந்தி மத்திய அமைச்சர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினார். குறிப்பாக, சர்தார் ஸ்வரன் சிங், கே.சி.பந்த், ஒய்.பி.சவான், ஜெகஜீவன்ராம் ஆகியோர் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சரான கிஸ்ஸிங்கர் இந்தியாவிற்குப் பறந்து வந்தார். ‘முஜிபுர் ரஹ்மானை விடுதலை செய்வதும், கிழக்குப் பாகிஸ்தான் பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண்பதுமே நிலைமையைக் கட்டுப்படுத்தும் என்று கிஸ்ஸிங்கரிடம் இந்திரா காந்தி எடுத்துச் சொன்னார். கிழக்கு வங்க மக்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்யும் நிலை உருவாகுமென்றும் இந்திராகாந்தி வாதிட்டார். அதேசமயம், எந்த நேரத்திலும் கிழக்குப் பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டுமெனவும் இந்திராகாந்தி ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்தார்.

1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் திடீரென்று இந்திய விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. அந்தச் சமயம் இந்திராகாந்தி கல்கத்தாவில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். செய்தி கிடைத்தவுடன் பேச்சை முடித்துக் கொண்டு டெல்லிக்கு இந்திய ராணுவ விமானத்தில் பயணமானார். போர் விமானங்கள் பாதுகாப்பளிக்க விமானத்தில் டெல்லிக்கு வந்து சேர்ந்தார். அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டு, பாகிஸ்தான்மீது போர் தொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்திய ராணுவம் கிழக்குப் பாகிஸ்தானுக்குள் புகுந்தது.

இந்தியாவின் கவனத்தை மேற்குப் பக்கம் திருப்ப, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையைத் தாக்கியது. அந்தத் தாக்குதல் இந்தியப் படைகளால் முறியடிக்கப்பட்டது. இந்தியப் படை, கிளர்ச்சிக்காரர்களின் உதவியுடன் கிழக்குப் பாகிஸ்தானின் தலைநகரான டாக்காவை நோக்கி முன்னேறியது. அமெரிக்கா – இந்தியாவிற்குக் கொடுத்துவந்த பொருளாதார ராணுவ உதவி அனைத்தையும் நிறுத்திக்கொண்டது. அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ஏழாவது கடற்படை (7th Fleet), இந்தியப் படையின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் சிட்டகாங் அருகே வங்காள விரிகுடாவில் முகாமிட்டது. அமெரிக்கா ஏழாவது கடற்படையின் அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தி, டாக்கா நகர் நோக்கி முன்னேறும்படி இந்திய ராணுவத்திற்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. சோவியத் யூனியனின் கடற்படை இந்தியாவிற்கு உதவியளிப்பதற்காக வங்காள விரிகுடாவிற்கு விரைந்தது. சோவியத் அமைச்சர் ஒருவர், டெல்லிக்குப் பறந்து வந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கி உறுதுணையாக இருந்தார். சீன – அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவிற்குப் பாதுகாப்பளிக்கும் வாக்குறுதியைச் சோவியத் யூனியன் பகிரங்கமாக அறிவித்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கைக்கு மேஜர் ஜெனரல் மேனக்ஷா தலைமை தாங்கினார். பிரதமர் இந்திராவும், மேனக்ஷவும் அடிக்கடி சந்தித்து போர் வியூகங்களை நடத்தினர். 13 நாளே நடந்த இந்த போரில் பாக்கிஸ்தான் படைகள் சுற்றிவளைக்கப்பட்டன.  சரணாகதி அடைவதற்கு அவர்களுக்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் நாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணாகதி அடைந்தார்கள். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் போர் வீரர்களும் பல்லாயிரக்கணக்கில் போர்க் கைதிகளாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்திராகாந்தியின் ராஜதந்திரத்தாலும் ராணுவ நடவடிக்கையாலும் பங்காளதேஷ் {வங்கதேசம்) என்கிற புதிய நாடு உதயமாயிற்று| அதிபர் யாஹியாகான் ராஜினாமா செய்தார். எஞ்சியிருந்த மேற்குப் பாகிஸ்தானின் நிர்வாகப் பொறுப்பைப் பூட்டோ ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவின் உதவியுடன் கிழக்குப் பாகிஸ்தான், ‘பங்காளதேஷ்’ என்கிற ‘சுதந்திர தேசமாக உருப்பெற்றது.” உணர்ச்சி மட்டும் ஒரு தேசத்தை உருவாக்கப்  போதுமானதன்று என்கிற உண்மை மீண்டும் ஒருமுறை வரலாற்றில் நிருபிக்கப்பட்டது மதவெறியால் உருவான நாடு ஒன்று வன்முறைக்குப் பலியாகி, சுதந்திரம் பெற்ற 24 ஆண்டுகளில் இரண்டு தேசங்களாகப் பிளவுபட்டது! ஜின்னாவின் ராஜதந்திர படுதோல்விக்குப் பங்களாதேஷின் உதயம் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.

இந்திராகாந்தியைப் பொருத்தவரையில் இந்தச் சாதனையை ஒரு மகத்தான சாதனையாகத்தான் கருதவேண்டும் பங்களாதேஷை உருவாக்கியதன்மூலம் பாகிஸ்தானின் பலத்தை அவர் கணிசமாகக் குறைத்தார் என்பது மிகையன்று. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளின் அச்சுறுத்தலுக்கு இந்தியா பணியாது என்பதையும் உலகுக்கு நிருபித்துக் காட்டினார் அவர்! பங்களாதேஷ் விடுதலைப் போருக்குப் பிறகு, சர்வதேச அரங்கில் இந்திராவின் மரியாதை கணிசமாக உயர்ந்தது என்பதில் சந்தேக மில்லை “இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியை அலட்சியப்படுத்திவிட்டு, தெற்கு ஆசியாவில் எதுவும் செய்வது சாத்தியமில்லை” என்கிற கருத்தைக் கிஸ்ஸிங்கர் பகிரங்கமாகவே வெளியிட்டார்.

“பங்களாதேஷ் போருக்குப் பிறகு இந்தியா ஒரு ராணுவ வல்லரசாக உருவாகிவிட்டது என அமெரிக்க நிபுணர்கள் அங்கீகாரம் அளித்தார்கள். அதேசமயம், இந்திய ராணுவம் மகத்தான வெற்றிகளைக் குவிக்கின்ற நிலையிலும் நிதானத்துடன் முழுமையாகக் கட்டுப்பட்டுச் செயல்படக் கூடியது என்பது நிருபணமாயிற்று. இந்திய ராணுவம் விரும்பியிருந்தால், லாகூரைக் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், அரசியல் ரீதியாக இந்திய அரசு இந்தப் பிரச்சினையினை அணுகியதால், லாகூரைக் கைப்பற்றும் நோக்கத்தை விட்டுவிடும்படி பிரதமர் சொன்ன ஆலோசளையை, இந்திய ராணுவத் தளபதிகள் தங்களின் விருப்பத்துக்கு மாறாக ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க முஜிபுர் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டு பங்களாதேஷின் பிரதமராளார்; விடுதலையான முஜிபுர் ரஹ்மானுக்கு டெல்லியில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாளன்று இந்தியக் குடியரசு தினம் புதிய உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. இந்திராகாந்தி, டாக்காவிற்குச் சென்றபோது, ஒரு வீராங்கனைக்குரிய வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே, பாகிஸ்தானிய யுத்தக் கைதிகளை விடுவிப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது. இந்திராகாந்தியும் பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவும் சிம்லாவில் இதுபற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

சிம்லா மாநாடு முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே பங்களாதேஷை ஒரு சுதந்திர நாடாகப் பாகிஸ்தான் அங்கீகரித்தது. பங்களாதேஷ் வெற்றி, இந்திராவின் அரசியல் வரலாற்றில் ஒரு புகழ்மிக்க அத்தியாயத்தைச் சேர்த்திருந்தாலும் பாகிஸ்தானோடு ஏற்பட்ட யுத்தத்தினாலும் 90 லட்சத்திற்கு மேற்பட்ட பங்களாதேஷ் அகதிகள் இந்தியாவிற்கு வந்ததாலும் அது இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவிற்குப் பாதித்தது.

வங்கதேச வெற்றிக்கு பிறகு அன்றைய எதிர்கட்சித் தலைவர் வாஜ்பாய் அவர்களால் அன்னை இந்திரா காந்தி “துர்கா தேவி” என்று அழைக்கப்பட்டார். இந்திய மக்கள் இந்திரா காந்தியை மிகச்சிறந்த வீராங்கனையாக போற்றினர். இதன் மூலம் இந்தியாவின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. வங்கதேச வெற்றியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவில் அன்னை இந்திராவின் புகழ் பாடுவோம்.

The post வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சாதனைகள் படைத்த சரித்திர நாயகர்! தலைவர் கே.எஸ்.அழகிரி 70 வது பிறந்த நாள் விழா – அக்டோபர் 22
அன்னை சோனியா கண்டெடுத்த

ஆற்றல்மிகு வீரரே !

தலைவர் ராகுல் காந்தியின்

போர்ப்படைத் தளபதியே !

சத்தியமூர்த்தி பவனத்தின்

சரித்திர நாயகரே !

தொடர் வெற்றிகளை குவித்திட்ட

தொண்டர்களின் திசைகாட்டியே !!

எட்டுத்திக்கும் உமது பெயர் எதிரொலிக்க…

எக்காலமும் உமது பணி சிறந்தோங்க…

வாஞ்சையுடன் வாழ்த்துகிறோம்…

பல்லாண்டு பல்லாண்டு

பல்லாண்டு வாழ்கவென்று !!!

காங்கிரசின் தொண்டராக இளமைப்பருவத்திலேயே தம்மை இணைத்துக் கொண்டு, ஓயாது கட்சி பணியாற்றி, ஊராட்சி ஒன்றிய தலைவர், இருமுறை சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என படிப்படியாக தமது கடும் உழைப்பால் களம்பல கண்டு, உயர்நிலைக்கு வந்த தேசியம் தந்த கொள்கை குன்று, தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் சரித்திரம் படைத்த சாதனைகளின் பட்டியலிலிருந்து சிலவற்றை அவரது 70-வது பிறந்தநாளில் மக்களின் பார்வைக்கு இங்கே படைக்கிறோம்…

அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் வாழ்த்துகளுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் ஒருங்கிணைந்து பணியாற்றி, நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் மகத்தான வெற்றி.

தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தமிழகச் சுற்றுப்பயணத்தை சிறப்பாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து மகத்தான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்.

தலைவர் ராகுல் காந்தி அவர்களின் சுற்றுப்பயணத்தில் மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மற்றும் வரலாற்றில் முதல்முறையாக உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துதரப்பினரையும் சந்தித்து, பிரச்சனைகளை அறிய கலந்துரையாடல்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டி மாபெரும் பாதயாத்திரை.

மகாத்மா காந்தி அவர்களின் 150-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. சத்தியமூர்த்தி பவனில் 150அடி உயர கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்தல்.

கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று உள்ளாட்சி அமைப்புகளில் உரிமைக்குரல் எழுப்புதல்.

ஏரிகளில் தூர்வாரும் திட்டத்தை காங்கிரஸ் சார்பாக தொடங்கி வைத்து புதிய சாதனை படைத்தல்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில், அவரின் பொற்கால ஆட்சி குறித்து கருத்தரங்கம் நடத்தி பரப்புரை செய்தல்.

சேலம் உருக்காலை தனியார்மயமாவதைக் கண்டித்து தொழிலாளர்களுடன் உண்ணாவிரத போராட்டம். தொழிலாளர்களின் உரிமைகளை காத்திட மே தின பொதுக்கூட்டங்கள்.

அரசமைப்பு சட்டத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை பறித்த பா.ஜ.க. அரசை கண்டித்து முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள்.

கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றல்.

பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கை, குடியுரிமை சட்டத்திருத்தம், விவசாயிகள் விரோத வேளாண் கருப்பு சட்டங்களை கண்டித்து பரப்புரை மேற்கொள்ளல். விவசாயிகளுக்கு விதைநெல், மரக்கன்றுகள் வழங்குதல்.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி புதிய சரித்திரம் படைத்தல்.

கடந்த ஓராண்டு காலமாக தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுதல். சத்தியமூர்த்தி பவனில் கொரோனா மருத்துவ உதவி மையம் திறப்பு.

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு குத்தகை வழங்கி, தாரை வார்க்கும் பா.ஜ.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்.

தமிழகத்தில் பத்தாண்டுகாலம் நடைபெற்ற அராஜக அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை அகற்ற, பலமுனைப் போராட்டங்களை நடத்தி மக்கள் ஆதரவை திரட்டுதல்.

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல்.

இந்தி, சமஸ்கிருத மொழிகளை பலவழிகளில் திணித்துவரும் பா.ஜ.க. அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்புதல்.

பா.ஜ.க. ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்.

பத்திரிகையாளர் சந்திப்புகள், அறிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்புதல்.

நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து குரலெழுப்பி பலமுனை போராட்டங்களை முன்னெடுத்தல்.

மத்திய பா.ஜ.க. அரசின் ரஃபேல் ஊழல் மற்றும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்.

தமிழக காங்கிரசின் தலைமை பொறுப்பேற்று கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்து இயக்கத்திற்கு வலிமை கூட்டிய தலைவர் கே.எஸ். அழகிரி, சாதனைகளை புரிந்து சரித்திரம் படைத்து வருகிறார். தமிழக காங்கிரஸ் வரலாற்றில் தலைவர் அழகிரி படைத்த சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு என்றும் மின்னிக்கொண்டிருக்கும். தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் 70-வது பிறந்தநாளில் சாதனைகள் பல புரிந்து, புதிய சகாப்தம் படைக்க உளமாற வாழ்த்துகிறோம் !

The post சாதனைகள் படைத்த சரித்திர நாயகர்! தலைவர் கே.எஸ்.அழகிரி 70 வது பிறந்த நாள் விழா – அக்டோபர் 22 appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பெருந்தகையாளர் பேராசிரியர் பா.ரா.!
தமிழக காங்கிரஸ் வரலாற்றில் பல தலைவர்கள் பல்வேறு சமயங்களில் முக்கியப் பங்கு வசித்திருக்கிறார்கள். பிற்காலத்தில் பேராசிரியர் பா. ரா என்று அழைக்கப்பட்ட திரு பா.ராமச்சந்திரன் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றில் இளமைப் பருவத்திலேயேத் தம்மை இணைத்துக் கொண்டவர். இளைஞர் காங்கிரசில் துடிப்புடன் செயல்பட்ட இவர், பெருந்திரளான இளைஞர்களை திரட்டி காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்தியவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அதன்மூலம் பெருந்தலைவர் காமராஜரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவை சேர்ந்த கொருக்கை கிராமத்தில் 11 ஜூலை 1921 இல் பிறந்தவர் பா. ராமச்சந்திரன். தமது சகோதரர் திரு துரைசாமி நாயுடு வேலூர் ஜில்லா போர்டில் பணியாற்றிய போது பள்ளிப் படிப்பை அங்கு தொடர்ந்தார். பிறகு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) படித்து முடித்த பிறகு கோவை பி. எஸ். ஜி. கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். அரசியலில் மிகுந்த ஈடுபாடு காரணமாக அந்த பணியை உதறிவிட்டு காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவர் பா. ராமச்சந்திரன்.

1952 செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பா. ராமச்சந்திரன், 1957 இல் மீண்டும் போட்டியிட்டு அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

1962 இல் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக 1967 வரை பணியாற்றினார். 1967 இல் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தொடர்ந்து காங்கிரஸ் இயக்கத்தில் ஸ்தாபன பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

1969 இல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டபோது, பெருந்தலைவர் காமராஜரோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1971 திருத்தணி மக்களவை தொகுதியில் போட்டியிட்டுத் வெற்றிவாய்ப்பை இழந்தாலும், 1972 ஜனவரியில் தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக பா. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் மறைகிற வரை அந்த பொறுப்பில் செயல்பட்டார்.

பெருந்தலைவர் காமராஜர் வழிகாட்டுதலோடு செயல்பட்ட திரு பா. ராமச்சந்திரன் அவர்களின் அரசியல் செயல்பாட்டிற்கு சிகரம் வைத்தாற்போல் அமைந்தது அக்டோபர் 1973 இல் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற அறப்போராட்டமாகும். அன்று நடைபெற்ற மறியலுக்கு அணிவகுத்துச் செல்லும் அறப்போர் வீரர்கள் சுதராடையும், தலையில் காந்த குல்லாவும் அணிந்து காங்கிரஸ் பேட்ஜ்களை அணிந்து கம்பீரமாகப் போராட்டத்தில் கைகளில் காங்கிரஸ் கொடியோடு முழக்கங்களை எழுப்பி கைதான காட்சியை எவரும் மறக்க முடியாது. ஒரு போராட்டம் காந்திய வழியில் எப்படி நடக்க வேண்டுமோ, அப்படிக் கட்டுக்கோப்பாக நடத்திய பெருமை பா. ராமச்சந்திரன் அவர்களுக்கு உண்டு. இதை தினமணி நாளேடு மனதாரப் பாராட்டி செய்தி வெளியிட்டது இங்கு நினைவு கூறத்தக்கது.

1976 இல் இரு காங்கிரஸ் இணைப்பில் சேராமல் பா. ராமச்சந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துச் செயல்பட்டது. இந்திய உணவு கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1980 இல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை இழந்த பிறகு அக்கட்சியில் நீடிக்க பா. ராமச்சந்திரன் விரும்பவில்லை.

இந்நிலையில், தேசிய அளவில் அன்னை இந்திரா காந்தியின் தலைமையை வலிமைப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் அவரது அழைப்பை ஏற்று மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக 30.9.1980 இல் சென்னை காமராஜர் அரங்கம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் இந்திரா காந்த கலந்து கொண்டார். அதையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இணைப்பு விழாவில் பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.

1982 இல் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, 1988 வரை அந்த பொறுப்பில் இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக திரு. பா. ராமச்சந்திரன் அவர்கள் தமது இறுதிக் காலம் வரை செயல்பட்டார்.

1969 இல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையையும் கடுமையாக பாதித்தது. இதையொட்டி சென்னை உயர்ந்த மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. செப்டம்பர் 1980 இல்.

பா. ராமச்சந்திரன் அவர்கள் காங்கிரசில் இணைந்த பிறகு அறக்கட்டளை வழக்குகள் முடிவுக்கு வந்து இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமாக இருந்தவர் தலைவர் பா. ராமச்சந்திரன் அவர்கள் என்பதை நன்றியோடு நினைவு கூற வேண்டியது நமது கடமையாகும்.

காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி பெருக்கோடு நூற்றாண்டு விழா எடுப்பது காங்கிரஸ் கட்சியினரின் தலையாய கடமையாகும்.

போற்றுதலுக்குரிய பொது வாழ்க்கையை நிகழ்த்தியவர் பேராசிரியர் பா. ரா. அவர் உடுத்துகிற நேர்த்தியான உடையே ஓர் அழகாகும். குறிப்பாக, கஞ்சி போட்டு சலவை செய்யப்பட்ட பொன்னிறமான முழுக்கை சுதர் ஜிப்பா அணிந்து மடிப்பு கலையாமல் அவர் நடந்து வருகிற காட்சியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. கதர் ஜிப்பாவோ பொன்னிறம்; அவரது முகமும் பொன்னிறம். பழகுவதற்கு இனிமையானவர். மென்மையானவர். கடுஞ்சொல் கூறாதவர். அடக்கமும், நிதானமும் மிக்க அற்புதத் தலைவராக வாழ்ந்த பேராசிரியர் திரு பா. ராமச்சந்திரன் அவர்கள் தமது 79 ஆவது வயதில் 23, மே 2001 இல் நம்மை விட்டுப் பிரிந்தார்.

87 வயது நிரம்பிய, பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்களது துணைவியார் திருமதி. வெங்கடலட்சுமி. அவரது மகன் டாக்டர் ரவிராம் ராமச்சந்திரன் இவ்விழாவில் நன்றியுரை ஆற்றுவது மிக மிகப் பொருத்தமானதாகும். அவரது சகோதரிகள் சசிகலா, சித்ரகலா ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பேராசிரியர் பெருந்தகையைப் போல அவரது குடும்பம் பெரும் புகழுடன் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என்பதே ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ். அழகிரி அவர்கள் நன்றிப் பெருக்கோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவராக இருந்த திரு பா. ராமச்சந்தரன் அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்திருக்கிறார். இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியினரால் மறக்க முடியாத, மறக்கக் கூடாத நன்றியோடு நினைவு கூறப்பட வேண்டிய மாமனிதர் பேராசிரியர் பா.ரா. அவர்களை போற்றுகிற வகையில் இந்த நூற்றாண்டு விழா இங்கே சிறப்பாக நடைபெறுவது குறித்து ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் பெருமையடைய வேண்டும்.

– வெளியீடு : தேசிய முரசு

The post பெருந்தகையாளர் பேராசிரியர் பா.ரா.! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்: இலங்கை மலையக தமிழர்களின் 200 ஆண்டு வலியை 20 கோடி பேரிடம் சேர்த்த பொக்கிஷம்
இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தையும் அவர்களது வலியையும் வெளிப்படுத்தும் வகையில் 2 மாதங்களுக்கு முன்பு யூட்யூப்பில் வெளியான ‘எஞ்சாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த பாடலை எழுதி, பாடிய சென்னையைச் சேர்ந்த இளைஞர் அறிவு இது குறித்து காணொலி விவாதத்தில் பங்கேற்றார். அதில், இலங்கை மலையக சமுதாய இளைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர். அந்த காணொலி விவாதத்தில், அனைவரையும் கட்டிப்போட்ட ஒரே நபர், இலங்கை மலையக சமுதாயத்தினரின் வரலாற்றுடன் தொடர்புடைய அறிவுவின் பாட்டி வள்ளியம்மா.

வள்ளியம்மா பாட்டியை குறிப்பிட்டு அந்த பாடலில் வரி வரும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யூட்யூப்பில் வெளியான இந்த பாடலை உலகம் முழுவதும் இருந்து 20 கோடி பேர் பார்த்ததின் மூலம், வள்ளியம்மா பாட்டியின் கதை 20 கோடி பேரிடம் சென்றடைந்திருக்கிறது.

இலங்கை தேயிலைத் தோட்டங்களில் உழைத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களில் ஒருவராக வள்ளியம்மா இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் நெற்றி வியர்வை சிந்த உழைத்த அந்த பெண்மணி, சொந்தமாக நிலம் கூட இல்லாத நிலையில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். வள்ளியம்மா பாட்டியைப் போன்று ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர். மீதமிருந்த ஆயிரக்கணக்கானோர், அங்கேயே தங்கியிருந்து தேயிலை பறித்து, அதன் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப உதவினர்.

இந்த பாடலுக்கு வள்ளியம்மா என்று பெயரிடப்பட்டாலும், மலையக தமிழர்களின் கதையைச் சொல்லத் தொடங்கும் ஒரு தீப்பொறியாக இருக்கக் கூடும் என்று இந்த விவாதத்தில் பங்கேற்ற தோட்ட உரிமைகள் மற்றும் பாலின பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பணிபுரியும் கண்டியைச் சேர்ந்த ஆர்வலர் சவும்யா விலாஷிணி முத்துலிங்கம் குறிப்பிட்டார். இலங்கை தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி அறிய தமிழகம் என்றுமே ஆர்வமாக இருந்ததில்லை என்பதை அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ”2008 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகள் பெங்களூருவில் படித்தேன். இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, இந்தியாவில் உள்ள தமிழர்கள் அதனை ஆர்வமுடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்திலும், அதற்குப் பின்னரும் மலையக தமிழர்களை இந்தியத் தமிழர்கள் கண்டுகொள்ளாததைக் கவனித்தேன். அவர்களது கவனம் எல்லாம் யாழ்ப்பாண தமிழர்கள் மீதே இருந்தது.

எனது பார்வையில், இது இலங்கைக்குள் காணப்பட்ட சமூக பாகுபாடு மற்றும் அலட்சியத்தின் மற்றொரு வெளிப்பாடாகும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் வாழ்ந்த அந்நாட்டுத் தமிழர்கள், இந்தியத் தமிழர்களை மரியாதைக்குறைவாக நடத்தினார்கள். நில உரிமை மற்றும் வீடுகள் விஷயத்தில் அங்கு குடியேறிய மலையக தமிழர்களை, இலங்கைத் தமிழர்கள் பாகுபாடாக நடத்தினர்.

இலங்கையின் அழகிய மலை நாட்டில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற, தமிழக தமிழர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர் ஆங்கிலேயர்கள். அப்போதிலிருந்து தமிழ் சமூகத்தின் வரலாறு இரண்டு நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது.

மலையகத் தமிழர்கள் நிலையற்றவர்களாக ஆக்கப்பட்டனர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இருந்தபோதிலும், ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைத்துக் கொண்டே, நியாயமான கூலிக்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைத் தீவின் சிறுபான்மை தமிழர்களின் வெவ்வேறு குழுக்களின் சமூகப் பிரச்சினைகள், மலையக தமிழர்களின் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இது ஓர் அரசியல் என்கிறார் சவும்யா விலாஷினி முத்துலிங்கம். இது குறித்து அவர் கூறும்போது, ” இலங்கையிலோ அல்லது தமிழகத்திலோ மக்கள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் வீரப் போராட்டமாகக் கருதப்படுவதில்லை. சுயமரியாதையை இழந்த உங்கள் தட்டில் வைக்கப்படும் உணவை முக்கியமானது என்று என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.

இந்த காணொலி விவாதத்தில் பேசிய அறிவு சாதிய அரசியலைச் சுட்டிக்காட்டினார். தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவில் அவரது படைப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இவை தன் குடும்பத்துடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் விளக்கினார்.

இது குறித்து அவர் கூறும்போது, ” சாதி இல்லை என்று இன்று சொல்பவர் கூட, ஒரு சாதிய நிலையிலிருந்து தான் சொல்ல முடியும். எங்கள் காலடியின் கீழ் கிடக்கும் மண், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையின் வரலாற்றுக்குச் சாட்சியாக இருக்கிறது. சாதிகளுக்கு ஆதரவாக இருக்கப் போகிறோமா? அல்லது சமத்துவத்துடன் வாழப்போகிறோமோ? என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி.

கூத்துக் கலைஞர்களாகவும் தினக்கூலி தொழிலாளர்களாகவும் எங்கள் குடும்பம் நடத்திய போராட்டத்தை மறக்க முடியாது. நாங்கள் வந்த சமுதாயம் எங்களை சாதிய அடையாளப்படுத்துகிறது. இவை அனைத்தும் அரசியல் காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையிலிருந்து எங்களால் அரசியலை வெளியே தூக்கி எறிந்துவிட முடியாது” என்றார்.

மலையக தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினரான மயில்வாகனன் திலகராஜா கூறும்போது,” தமிழர்கள் வாழும் தமிழகம், மலேசியா அல்லது யாழ்ப்பாணத்தை விட, மலையகத்தில் சாதி ரீதியான வன்முறை குறைவாகவே இருந்தது. தோட்டத் தொழிலாளராக இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய வள்ளியம்மாவை, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர் என்று சாதிய குழுவைப் போலவே முத்திரை குத்தப்பட்டுள்ளது. கே.ஏ. குணசேகரன், ரா.வினோத், தமிழ்மகன் மற்றும் முகமது யூசுப் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் மலையகத் தமிழர்கள் பற்றியும் அவர்கள் வாழ்க்கை பற்றியும் எவ்வளவோ எழுதியுள்ளார்கள். எனினும். அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தான் இன்றைக்குக் கோடிக்கணக்கானோரைச் சென்றடைந்திருக்கிறது.

‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த பாடல் மூலம் முற்போக்கு அரசியலை முன்னெடுக்க அறிவு முயன்றிருக்கிறார். இந்த பாடலில் வள்ளியம்மாவை பற்றிக் குறிப்பிட்டது முக்கியமானது. எனினும், வள்ளியம்மாவை போன்றோரின் கதைகளும், இலங்கையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக தமிழர்களின் கதைகளும் விரிவாகப் பேசப்பட வேண்டும். அந்த கதாபாத்திரங்கள் பேசக்கூடிய முழுமையான திரைப்படம் நமக்குத் தேவை.

இலங்கைக்குள்ளும், இந்தியாவுக்குத் திரும்பியோர் மத்தியிலும் சாதி எவ்வாறு விளையாடியது என்ற கதை பெரிதாகச் சொல்லப்பட வேண்டும். எங்கள் மக்களில் சிலர் திரும்பி வந்தது, தோட்டங்களைத் தற்காலிகமாக விட்டு வந்ததாக அர்த்தம். அந்த சமயம் சாதி வேறுபாடுகள் உடைத்தெறியப்பட்டன. மேலும், இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் வரலாற்று ரீதியாக நில உரிமைகள், வீட்டு வசதி மற்றும் நல்ல சம்பளத்துக்காக அணி திரட்டியிருப்பது, சாதி அடையாளத்தை விட வலுவான வர்க்க அடையாளத்தை உருவாக்கியிருப்பதாக அர்த்தம். எங்கள் மக்களின் கதைகளை நீங்கள் சொல்லும்போது, இதையும் சேர்த்துச் சொல்லுங்கள். மலையகத் தமிழர்கள் பற்றிய நல்ல திரைப்படம் வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்” என்றார்.

The post ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்: இலங்கை மலையக தமிழர்களின் 200 ஆண்டு வலியை 20 கோடி பேரிடம் சேர்த்த பொக்கிஷம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மே 21, 1991: நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு, மத்திய புலனாய்வுத்துறை விசாரணை செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, இறுதியாக உச்சநீதிமன்றம் வழங்கிய தண்டனையின் மூலம் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டனர். மலர்ந்த முகத்துடன் எந்நேரமும் சிரித்தவாறு எந்த தமிழ் மக்களை நேசித்தாரோ, அதே இனத்தைச் சேர்ந்த அந்நியர்கள், இந்தியாவின் பகைவர்கள், தமிழகத்தில் ஊடுருவி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் இளகிய மனதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கோழைத்தனமாக, ஒரு பெண்ணைப் பயன்படுத்தி அவரை படுகொலை செய்தார்கள்.

அன்று 85 கோடி மக்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருந்த மாபெரும் தலைவரைப் படுகொலை செய்து இந்திய மக்களின் விருப்பத்தைச் சிதைத்தார்கள். நம்பிக்கையைச் சீர்குலைத்தார்கள். இந்தியாவின் இறையாண்மையைத் தகர்த்தார்கள்.

ராஜிவ்காந்தியை விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள் என்ற பழியைத் துடைக்க முற்பட்டிருப்பவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலில் படுகாயம் அடைந்தவருமான மறைந்த தோழர் தா. பாண்டியன் அவர்கள், ‘ராஜிவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகளைக் கூற விரும்புகிறோம்:

‘ஒருமுறைகூட எல்.டி.டி.ஈ. பற்றி எரிச்சலுடன் அல்லது ஆத்திரத்துடன் அவர் (ராஜிவ்) பேச நான் கண்டதே இல்லை. இவ்வகைத் தமிழ் மக்கள் மீதும் அவருக்கு அளவற்ற அனுதாபம் இருந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் போய் விட்டது குறித்து வருத்தப்படுவது வழக்கம். ‘அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும்’ என்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். எனவே, இவ்வளவு அன்பும், அனுதாபமும் காட்டிய ஒரு நண்பரையே எல்.டி.டி.ஈ.யினர் கொன்று விட்டார்களே என்பதால் எனது கோபம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

அந்த ஒப்பந்தத்தால் இதுவரை இலங்கைத் தமிழர்களுக்கு இல்லாதிருந்த சில உரிமைகள் கிடைத்தன. மேலும் சில உரிமைகள் கிடைக்க வழிவகுத்தன. உடனே கிடைத்துவிட வேண்டுமென எல்.டி.டி.ஈ. தலைமை கருத்தை வெளியிட்டது. பின்னர், நடந்த தேர்தலைப் புறக்கணித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியுடன் ஒத்துழைக்க மறுத்தது. அந்த ஆட்சியைக் கலைக்கவும் சிங்கள அரசுடன் ரகசிய உடன்பாடு செய்து அவர்களிடமிருந்து ஆயுத உதவிகளைப் பெற்று இந்திய அமைதிப் படையைத் தாக்கத் தொடங்கியது.

எனவே, பரம வைரியுடனும் சேர்ந்து கொண்டு சொந்தச் சகோதரர்களையே கொல்வதற்குக் கூசாதவர்கள். இவர்களால் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிக் குழுக்களின் தலைவர்கள் சிறீ சபாரத்தினம், முகுந்தன், அமிர்தலிங்கம், பத்மனாபா என்று பட்டியல் நீளமானது. பல்கலைக் கழகத் துணை வேந்தர், நாடாளுமன்ற உறுப்பினர், இதர அரசியல் வாதிகள் என இவர்களால் கொல்லப்பட்ட பட்டியலும் நீளமானது.

சிங்கள வெறியர்களால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட, இந்த வெறிக் கும்பலால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும்.

செய்நன்றி மறந்த இந்தக் கொலைகாரக் கும்பல்தான் ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்க வேண்டும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். அன்றும், இன்றும் என் கருத்து ஒன்றே தான்.’

நேரடி சாட்சியாக விளங்குகிற தோழர் தா. பாண்டியனை விட, வேறு எவரும் உரிய பதிலைக் கூறிவிட முடியாது. மேலும், 1991 மே 21 அன்று என்ன நடந்தது என்பதை சமர்ப்பிக்க விரும்புகிறோம்:

‘1991 பொதுத் தேர்தலை முன்னிட்டுத் தமிழகத்திற்குப் பிரச்சாரம் செய்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக வருகை புரிந்தார்.

இரவு மணி 10.10 :

ராஜிவ் காந்தி தம் தாய் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பொதுக்கூட்ட மைதானத்தை நோக்கி நடந்தார். அயல்நாட்டுப் பத்திரிகையாளர்களைக் காரில் அனுப்பி விட்டு, வேறு ஒரு ஜீப்பில் பயணம் செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, நேரே மேடைக்கு விரைந்து செல்கிறார்.

அங்கே, ஆண்கள் பகுதியில் தம்மைக் காண்பதற்கும், வாழ்த்துவதற்கும் நின்று கொண்டிருந்தவர்களை ராஜிவ் காந்தி பார்த்துவிட்டு, பெண்கள் பகுதிக்கு விரைந்தார்.

லதா கண்ணனும் அவரது மகள் கோகிலாவும் கவிதையுடன் தயாராக நின்று கொண்டிருந்தனர். கோகிலா தம் கவிதையைப் படித்து முடித்ததும், அவரையடுத்து நின்று கொண்டிருந்த ‘சல்வார் கமிஸ்’ அணிந்த பெண்மணி ராஜிவை நெருங்கினார்.

சப்-இன்ஸ்பெக்டர் அனுசுயா தம் கையை நீட்டி, அவரைத் தடுக்க முயன்றார். ராஜிவ், ‘தடுக்காதீர்கள்’ என்று சைகை காட்டி ‘ரிலாக்ஸ்’ என்று கூற, அனுசுயா சற்றே பின்னோக்கி நகர்ந்தார்.

கண்ணாடி அணிந்த சல்வார் கமிஸ் பெண்மணி வேகமாக முன்னேறி வந்து, ராஜிவ் காந்திக்கு நேர் எதிரில் நின்றார். ராஜிவ் காந்திக்கு சந்தன மாலையை அணிவித்துவிட்டு. அவரது பாதங்களில் பணிகிறார்.

இரவு மணி 10.20 :

அந்தப் பெண்மணி குனிந்த மறுகணம் பெரும் வெடிச் சத்தம். நெருப்பும், புகையும் இருபது அடி உயரத்துக்கு எழுந்தன. ராஜிவ் காந்தி நின்று கொண்டிருந்த இடம், போர்க்களம் போலக் காட்சியளித்தது. ஆங்காங்கே ரத்தமும், சதையும் சிதறிக் கிடந்தன.
ராஜிவ் காந்தி, அவரது பர்சனல் பாதுகாப்பு அதிகாரி, லதா கண்ணன், கோகிலா, ஹரிபாபு, பச்சை ஆரஞ்சு சல்வார் கமிஸ் பெண் அனைவரும் அந்த இடத்திலேயே மரணம் அடைந்திருந்தனர். மாவட்ட போலீஸ் அதிகாரி முகமது இக்பால் உட்பட ஒன்பது போலீஸ்காரர்களும், மொத்தம் 22 பேர் அந்த இடத்திலேயே தம் இன்னுயிர் ஈந்தனர். அவர்களைத் தவிர பலருக்கு காயம். அதில், 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. ஹரிபாபு உபயோகித்த கேமரா, இப்போது அவரது உடல்மீது, சற்றுமுன் நிகழ்ந்த கோரச் சம்பவத்துக்கு சாட்சியாக கிடந்தது.

அந்த மைதானம் முழுவதும் ஒரே கூச்சல், குழப்பம். போலீஸ்காரர்கள் உட்பட பலரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனாலும், கட்சிக்காரர்களும், போலீஸ் அதிகாரிகளும் துணிவுடன் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மூப்பனாரும், வாழப்பாடி ராமமூர்த்தியும் ராஜிவ் காந்தி எங்கே என்று தேட ஆரம்பித்தனர்.

குண்டு வெடிப்பின்போது, மேடை மீது ராஜிவ் காந்திக்காக வாழப்பாடி ராமமூர்த்தி காத்துக் கொண்டிருந்தார். இந்திரா காந்தி சிலையிலிருந்து பொதுக்கூட்ட மைதானத்தை நோக்கி மூப்பனார் நடந்து வந்து கொண்டிருந்தார். எனவே, சம்பவத்தின் போது அவ்விருவருமே ராஜிவ் காந்தியுடன் இல்லை.

ஆங்காங்கே சிதறிக் கிடந்த உடல்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தவர்களால், ராஜிவின் உடலை அத்தனை சீக்கிரம் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் அணிந்திருந்த ‘லோட்டோ’ ஷுக்கள் தான் அவரை அடையாளம் காட்டின.

குப்புறக்கிடந்த ராஜிவ் காந்தியின் உடலை மூப்பனார் புரட்ட முயன்ற போது, ரத்தமும், சதையும் அவரது கைகளுக்குப் புலப்பட்டது. புரட்டிப் போட்ட உடல் மீது ஒரு சால்வையைப் போட்டுவிட்டு, அவசரமாக ஒரு ஸ்டிரெச்சரைக் கொண்டுவரச் சொன்னார். ராஜிவ் உடல் கிடந்த சிவப்புக் கம்பளத்தின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்க, ஐ.ஜி. ராகவன் அதனை அணைக்க முனைந்தார்.

‘ராஜிவைத் தான் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. சம்பவம் நடந்த இடத்தில் கிடக்கும் சாட்சிப் பொருள்கள் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்தே ஆக வேண்டும்’ என்று ஐ.ஜி. ராகவன் முடிவு செய்தார். காரணம், அங்கே கிடக்கும் சின்னஞ்சிறு பொருட்களோ, தகவலோ கூட புலன் விசாரணைக்கு உதவக் கூடுமல்லவா ?

ராஜிவ் காந்தியின் உடல் ஒரு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஹரிபாபுவின் உடல்மீது கிடந்த கேமராவை ஐ.ஜி.ராகவன் எடுத்துப் பத்திரப்படுத்தச் சொன்னார். அடுத்த சில மணி நேரங்களுக்கு அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, ராஜிவ் காந்தியின் உடல் சென்னை விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தகவல் அறிந்து பிரத்யேக விமானப்படை விமானம் மூலம் சோனியா காந்தியும், பிரியங்காவும் சென்னை வந்தனர்.

மே 22 ஆம் தேதி அதிகாலை :

குண்டு வெடிப்பால் சிதறிய ராஜிவ் காந்தியின் உடலின் எஞ்சிய பகுதிகளைப் பெற்றுக் கொண்ட சோனியா காந்தி டெல்லி திரும்பினார்.

ராஜிவ் காந்தி படுகொலை குறித்த புலனாய்வை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் உடனடியாக கேட்டுக் கொண்டார்.
எனவே, அரிதிலும் அரிதான கொலை வழக்குகளில்தான் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கும். அப்படி தண்டனை விதிக்கப்பட்ட பிறகு குற்றவாளிகளை நிரபராதிகள் என்று கூறுவது நீதிமன்றத்தின் மாண்பை சிதைப்பதாகாதா? சட்டத்தின் ஆட்சியைச் சீர்குலைப்பதாகாதா?

உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ராஜிவ் கொலையாளிகள் 27 ஆண்டுகாலமாகச் சிறையில் இருக்கிறார்கள். அவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விடுதலை செய்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எங்களுக்கு அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் எப்போதும் இருந்ததில்லை. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ராஜிவ் கொலையாளிகள் சமர்ப்பித்த கருணை மனு மீது 11 ஆண்டுக்காலம் மத்திய காங்கிரஸ் அரசு முடிவெடுக்காத காரணத்தால்தான், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. எனவே, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளே தவிர நிரபராதிகள் அல்ல.

The post மே 21, 1991: நடந்தது என்ன? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க தடுப்பூசி போடுகிற முதன்மைப் பொறுப்பை மத்திய அரசு ஏற்காமல், மாநிலங்கள் மீது சுமையை ஏற்றலாமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
முக்கிய அம்சங்கள்:

மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?

மருந்து உற்பத்தி அதிகரிக்கும்போது, விலையை குறைக்க வேண்டும். ஆனால், விலையை அதிகரிக்க வேண்டிய காரணம் என்ன?

ஒரு நிறுவனம் குறைவான விலைக்கு மருந்தைத் தரும்போது, அதே மருந்தை மற்றொரு நிறுவனம் அதிக விலைக்கு எப்படி விற்க முடியும்?

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் தடுப்பூசி மருந்துக்கான செலவை மக்கள் மீதும், மாநில அரசுகள் மீதும் சுமத்துவது சரியா?

இதுவரை ஒரு டோஸ் மருந்தை ரூ. 200 என மத்திய அரசு வாங்கி வந்தது. இதன்மூலம், ஒரு டோஸுக்கு ரூ.50 வீதம் சீரம் நிறுவனம் ஏற்கனவே லாபம் அடைந்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய மத்திய பா.ஜ.க. அரசு பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. நாட்டு மக்கள் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் போது, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, தடுப்பூசி, உள்ளிட்ட மருந்துகளை வழங்க வேண்டிய முதன்மை பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழித்து வருகிறது. மே 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறது. அதற்கான தடுப்பூசி உற்பத்தி செய்கிற இரண்டு தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்கிற உரிமையை வழங்கியது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

மே 1 ஆம் தேதி முதல் ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துக்கு மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என, சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இனிமேல், வழக்கம்போல் மாநிலங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசி மருந்தை விநியோகிக்கும். அதற்கு மேல் தேவைப்பட்டால் மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.

மருந்து உற்பத்தி அதிகரிக்கும்போது, அதன் விலையை ஏன் அதிகரிக்க வேண்டும் ? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. அரசுக்கு ரூ.150 க்கு வழங்கப்பட்ட ஒரு டோஸ் மருந்தை ரூ.400 வரை எப்படி உயர்த்த முடியும்? என்பது புரியாத புதிராக இருக்கிறது.

எதை வைத்து விலை உயர்வை சீரம் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் ஆக்ஸ்ஃபோர்டு அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசி மருந்து ரூ.150 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு மருந்தைத் தான் சீரம் நிறுவனமும் தயாரிக்கிறது. 4 கோடி முதல் 5 கோடி வரை தடுப்பூசி மருந்துகள் லாப நோக்கு கருதாமல் வழங்கப்படும் என அஸ்ட்ராஜெனகா ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு நிறுவனம் குறைவான விலைக்கு மருந்தைத் தரும்போது, அதே மருந்தை மற்றொரு நிறுவனம் அதிக விலைக்கு எப்படி விற்க முடியும்?

இந்திய மருத்துக் கட்டுப்பாட்டு ஜெனரலால் அவசரகால மருந்து என அங்கீகரிக்கப்பட்டதை, சீரம் நிறுவனத்தின் இத்தகைய விலை உயர்வு கேள்விக்குள்ளாக்குகிறது. கொரோனா தடுப்பூசி மருந்துகளை அரசுக்கு மட்டுமே வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கும், பொதுச் சந்தையிலும் விற்பதற்கான ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்களா? என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.

உலகின் பல்வேறு நாடுகள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வாங்கி, மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இந்தியா ஒன்றும் பணக்கார நாடு இல்லை. பெரிய மக்கள் தொகை கொண்ட ஏழை, எளியவர்களை அதிகமாக கொண்ட நாடு. தடுப்பூசி மருந்துக்கான செலவை மக்கள் மீதோ, மாநில அரசுகள் மீதோ சுமத்துவது சரியா? இந்திய மக்களை கொரோனாவின் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறதா ? இல்லையா ? இந்த பொறுப்பை மோடி அரசு தட்டிக் கழிக்கலாமா ? இந்த பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது மத்திய அரசின் பொறுப்பற்ற செயலையே காட்டுகிறது.

மத்திய அரசின் புதிய அறிவிப்பால் 18 வயதுக்கு மேற்பட்ட 94 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒரு நபருக்கு 2 டோஸ்கள் என்று கணக்கிட்டால், 188 கோடி டோஸ்கள் தேவை. ஒரு டோஸ் மருந்துக்கு அரசு ரூ.200 செலுத்த வேண்டியிருந்தால், மொத்தமாக ரூ.36 ஆயிரத்து 400 கோடி செலவாகும். மத்திய அரசுக்கு ஒரு டோஸ் மருந்து ரூ. 150 க்கு விற்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம், இதுவரை ஒரு டோஸ் மருந்தை ரூ. 200 என மத்திய அரசு வாங்கி வந்தது. இதன்மூலம், ஒரு டோஸுக்கு ரூ.50 வீதம் சீரம் நிறுவனம் பலனடைய மத்திய அரசு ஏற்கெனவே வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.

ஏற்கனவே மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தடுப்பூசிக்காக ரூபாய் 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. மேலும் பி.எம். கேர்ஸ் நிதியிலும் பணம் இருக்கிறது. இந்த நிதியை பயன்படுத்தி, அனைவருக்கும் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக அளிக்கலாம். மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான ரூபாய் 30 ஆயிரம் கோடி செலவை தற்காலிகமாக நிறுத்தி விட்டு அந்த நிதியை தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்குப் பயன்படுத்தலாம். மனம் இருந்தால் மார்க்கமிருக்கிறது. பிரதமர் மோடிக்கு மக்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க மனம் இருக்கிறதா ?

நாட்டில் தடுப்பூசி தேவை பல மடங்கு உயர்ந்து, உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறைவது தான் உலகெங்கும் உள்ள பொருளாதார சூத்திரம். உயிர்காக்கும் தடுப்பூசி மருந்தின் விலையை ஏற்றிக் கொள்ள மத்திய அரசே அனுமதித்தது, உலகில் வேறெங்கும் நிகழாத மனிதநேயமற்ற செயலாகும். இது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசிடம் என்ன பதில் இருக்கிறது? மக்களின் உயிரை முதலீடாக்கி வியாபாரம் செய்யும் ஓர் அரசை நாம் பெற்றிருப்பது கொடுமையிலும் கொடுமை.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி பிரதமர் மோடி பேசும் போது, ‘கொரோனாவிற்கு எதிரான போரில் கடந்த ஆண்டில் வெற்றி பெற்றதைப் போல, நடப்பாண்டிலும் வெற்றி பெறுவோம்’ என்று கூறினார். கடந்த ஆண்டில் கொரோனா ஒழிப்பு போரில் வெற்றி பெற்றோம் என்று எப்படி கூற முடியும் ? பிரதமர் மோடி கூற்றின்படி வெற்றி பெற்றிருந்தால் இன்று உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் முதன்மை இடத்தை இந்தியா பெற்றிருக்காது. இந்தப் பின்னணியில் கொரோனா ஒழிப்பு போரில் வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி கூறியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

எனவே, கொரோனா ஒழிப்பு என்பது மத்திய பா.ஜ.க. அரசின் முதன்மை பொறுப்பாகும். அதை தட்டிக் கழித்து, மாநில அரசுகளிடமோ, தனியார் துறையிடமோ, பொதுச் சந்தைகளிடமோ பிரதமர் மோடி ஒப்படைப்பாரேயானால் கடும் விளைவுகளை பா.ஜ.க. அரசு சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.

The post கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க தடுப்பூசி போடுகிற முதன்மைப் பொறுப்பை மத்திய அரசு ஏற்காமல், மாநிலங்கள் மீது சுமையை ஏற்றலாமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி
ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அச்செய்தியின் தமிழாக்கம்:

இது குறித்து மறைந்த மாதவ ராவின் மகள் திருமதி திவ்யா ராவுக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ” காங்கிரஸ் கட்சிக்கு அர்ப்பணிப்புடனும் விசுவாசமாகவும் இருந்த உங்கள் தந்தை மாதவ ராவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன். எளிமையானவராகவும் கடினமாக உழைக்கும் காங்கிரஸ்காரராகவும் திகழ்ந்த மாதவ ராவ், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டப்பேரவை தனித் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்காக நீங்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆதரவு திரட்டினீர்கள். நன்கு குணமடைந்து மாதவ ராவ் மருத்துவமனையிலிருந்து வருவார் என்று மட்டுமல்ல, மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கும்போது வெற்றியாளராகவும் வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கொடூரமான விதியோ, வேறு முடிவை எடுத்து, நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த தருணத்தில் என் இதயம் உங்களுடனும், உங்கள் குடும்பத்தாருடனும், ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறது. அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய சேவை என்றென்றும் நினைவுகூரப்படும்.

உங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

வாக்காளப் பெருமக்களே! அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவோம்! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்போம்! வெற்றிபெறச் செய்வோம்!
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது யார்?

ஜல்லிக்கட்டுக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தடை விதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2014 வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததை எவராவது மறுக்க முடியுமா ?

பா.ஜ.க. ஆட்சி அமைந்த 2014-க்கு பிறகு 2015, 2016 இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது யார் ? உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு மிருகவதை தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பா.ஜ.க. மறுத்தது ஏன் ?

ஜனவரி 2017இல் மெரினாவில் நடந்த எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகுதான் அ.தி.மு.க. அவசர சட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதே தவிர, மத்திய பா.ஜ.க. ஆட்சியினால் அல்ல. எனவே, மோடி அவர்களே, தமிழக மக்களிடம் உங்களது கோயபல்ஸ் பிரச்சாரம் எடுபடாது.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்

தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். தற்போது, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 66.37 லட்சம். தமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையா ?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9,251 பணியிடங்களுக்கு 20 லட்சம் மனுக்கள் குவிந்தன. ஒரு வேலைக்கு 231 பேர் விண்ணப்பித்தனர். 66 டி.எஸ்.பி. பதவிகளுக்கு 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதுதான் அ.தி.மு.க. அரசின் வேலை வாய்ப்பு வழங்கும் லட்சணம்.

தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணியிடங்களுக்கு 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில், பல பொறியியல், எம்.பி.ஏ. பட்டதாரிகள் அடங்குவர். எடப்பாடி அவர்களே, இதைவிட ஒரு அவமானம் தமிழகத்திற்கு இழைக்க முடியுமா ?

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் தொழில் தொடங்கப்பட்டதா? வேலைவாய்ப்பு பெருகியதா?

தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 லட்சம் பட்டதாரிகள், 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து விட்டு வெளியே வருகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க எங்கே தொழில் தொடங்கினீர்கள் ? எங்கே வேலை வழங்கினீர்கள் ? எடப்பாடி அவர்களே, பதில் கூறுவீர்களா ?

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூன்றுமுறை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அ.தி.மு.க. அரசு நடத்தியது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தொழில்கள் தொடங்கப்பட்டு, லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக எடப்பாடி கூறுகிறார். எந்த தொழிற்சாலையில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டது ? எடப்பாடி வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா ?

நீட் தேர்வினால் புறக்கணிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 3.41 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் கடந்த மூன்றாண்டுகளில் 13 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேருகிற கொடுமை நிகழ்ந்தது. உள்ஒதுக்கீடு 7.5 சதவிகிதம் வந்தபிறகு, 405 மாணவர்களுக்குதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுதான் சமூகநீதியா ?

அரசு பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 41 ஆயிரம் மாணவர்களில் 405 பேருக்கு தான் உள்ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 3400 இடங்களில் அரசு பள்ளிகளில் படித்த 405 மாணவர்களுக்கு தான் இடம் கிடைத்தது. மீதி இடங்களை அபகரித்தது யார் ? எடப்பாடி பதில் கூறுவாரா ?

மாநில பாடத் திட்டத்தில் படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வாய்ப்பு கிடைக்காமல் அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம் ? யார் பொறுப்பு ? நீட் தேர்வை தமிழகத்தில் திணித்த பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டாமா ?

குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற யார் காரணம்?

குடியுரிமை சட்டத் திருத்தம் 11 உறுப்பினர்கள் கொண்ட அ.தி.மு.க.வும், அன்புமணி ராமதாசும் ஆதரித்ததால் சட்டமாக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற பா.ஜ.க.வை வலியுறுத்துவோம் என்று கூறுவதை விட இரட்டை வேடம் வேறு என்ன இருக்க முடியும் ?

பா.ஜ.க. அரசின் பொதுமுடக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள்

பா.ஜ.க. அரசின் பொது முடக்கத்தினால் மாத ஊதியம் பெறுகிற 12 கோடி பேர் வேலை இழந்தனர். 7.5 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டனர். வளர்ச்சி மைனஸ் 23 சதவிகிதம். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கிற பிரதமர் மோடியே, தமிழக மக்களிடம் வாக்கு கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி., பொது முடக்கம், தவறான பொருளாதார கொள்கை தான் இதற்கு காரணம் என்பதை பிரதமர் மோடியால் மறுக்க முடியுமா ?

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பா.ஜ.க. அரசு.

2014 இல் கச்சா எண்ணெய் விலை 65 டாலர். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 71. இதில் கலால் வரி ரூ.9.20. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.53. கலால் வரி ரூ.3.36. மார்ச் 2021 இல் கச்சா எண்ணெய் விலை 65 டாலர். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93. இதில் கலால் வரி ரூ.32.90. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.86. கலால் வரி ரூ.31.90. காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிகளின் பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிட்டு பாருங்கள், அநீதிக்கு பாடம் புகட்டுங்கள்.

பா.ஜ.க. அரசு 2014 ஆம் ஆண்டு முதல் 17 முறை கலால் வரி விதித்து ரூ.21 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியது. பா.ஜ.க. ஒரு மக்கள் விரோத அரசு என்று கூறுவதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையா ?

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93. ஆனால், சின்னஞ்சிறிய அண்டை நாடுகளான நேபாளத்தில் ரூ.76, இலங்கையில் ரூ.60, பாகிஸ்தானில் ரூ.51, பூடானில் ரூ.59. பிரதமர் மோடியே இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா ?

2014 இல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410. தற்போது ரூ.875. இதன்மூலம் 25 கோடி தாய்மார்கள் தலைமீது சுமையை ஏற்றிய பிரதமர் மோடிக்கு பாடம் புகட்ட வேண்டாமா ?

மோடி ஆட்சியா? அம்பானி – அதானி ஆட்சியா?

மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 2020 ஆம் ஆண்டில் மட்டும் 13 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மூன்று மடங்காகவும், அதானியின் சொத்து மதிப்பு 6 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சி ஒரு கார்ப்பரேட் ஆதரவு ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் ?

இந்தியாவில் உள்ள காப்பரேட்டுகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக 2020 இல் மொத்தம் வழங்கிய நன்கொடை ரூ.2773 கோடி. இதில் ரூ.1660 கோடி பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வாரி வழங்குவது ஏன் ? மோடி பதில் கூறுவாரா ?

சமஸ்கிருதத்திற்கு ஆதரவு! தமிழுக்கு புறக்கணிப்பு!!

அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டிய பா.ஜ.க. ஆட்சியில் சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை ரூ.644 கோடி. ஆனால், தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து ஒதுக்கிய தொகை வெறும் ரூ.29 கோடி. சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி அவர்களே, உங்களை தமிழர் விரோதி என்று அழைப்பதில் என்ன தவறு ?

இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுபவர்கள் 28,821. ஆனால், சமஸ்கிருதத்திற்கு ரூ.644 கோடி. 7 கோடி மக்கள் பேசுகிற தமிழுக்கு நீங்கள் ஒதுக்கிய தொகை ரூ.4 கோடி. தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடி அவர்களே, தமிழ் மொழியை வஞ்சிப்பது நியாயமா ?

தமிழக அரசுக்கு நிதி வழங்க மறுத்த பாஜக அரசு.!

கடந்த 10 ஆண்டுகளில் நிவாரண நிதியாக பிரதமர் மோடியிடம் கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 கோடி. ஆனால், பிரதமர் மோடி வழங்கியதோ ரூ.5778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவிகிதத்தை மட்டுமே வழங்கிய பிரதமர் மோடி அவர்களே, தமிழக மக்களிடம் வாக்கு கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

சிபிஐ விசாரணையில் சிக்கியிருக்கும் முதலமைச்சர்!

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முதலமைச்சர் எடப்பாடி மீது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சி.பி.ஐ. விசாரணைக்கு தடை உத்தரவை பெற்று, ஆட்சியில் நீடிப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. தடை உத்தரவை நீக்காமல் உங்களை பாதுகாப்பவர் பிரதமர் மோடி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எடப்பாடி சி.பி.ஐ. விசாரணையிலிருந்து தப்ப முடியுமா ?

திவாலா நிலையில் தமிழக அரசு !

அ.தி.மு.க. அரசின் மொத்த கடன் ரூபாய் 5 லட்சம் கோடி. பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3 லட்சம் கோடி. ஆக, 8 லட்சம் கோடி கடனில் திவாலான நிலையில் இருக்கும் போது, இலவச அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வாரி வழங்கலாமா ?

எடப்பாடி முதலமைச்சராகும் போது அறிவிப்புகளை வெளியிடலாம். ஆனால், ஆட்சியிலிருந்து வெளியேறுகிற போது அறிவிப்புகளை வெளியிட என்ன உரிமை இருக்கிறது ? ஆட்சியில் இருக்கும் போது செய்யாததை மூடிமறைக்க இத்தகைய அறிவிப்புகளை வெளியிடலாமா ?

வன்னியர்களை நம்பவைத்து மோசம் செய்த எடப்பாடி.

பா.ம.க.வை கூட்டணியில் சேர்ப்பதற்காக வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசு வழங்கியது. ஆனால், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., இது தற்காலிகமானதுதான். நிரந்தரமானது அல்ல என்கிறார். ஆனால், சட்ட அமைச்சரோ இது நிரந்தரம் என்கிறார். இதில் எதை நம்புவது ? வன்னியர்களை நம்ப வைத்து மோசம் செய்யலாமா ?

ஸ்டாலின் தான் வர்றாரு! நல்லாட்சி தர போறாரு!

10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு நியாயமான காரணங்கள் ஏதாவது இருக்கிறதா ? வாக்காளர்கள் எடப்பாடியையும், தளபதி மு.க. ஸ்டாலினையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, அடுத்த முதலமைச்சராக யாரை தேர்வு செய்வார்கள் என்பதைத் தான் அனைத்து கருத்து கணிப்புகளும் தெளிவாக கூறுகின்றன.

ஐம்பதாண்டு கால அரசியல், நிர்வாக அனுபவம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது இயற்கையின் விதி. இதற்கு மக்களிடையே அமோக ஆதரவு பெருகி வருவதை தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. ஆட்சி மாற்றம் உறுதி என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது.

மத்திய பா.ஜ.க. அரசின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க, அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தின் மூலமே தமிழகத்திற்கு விடிவு காலம்.

வெளியீடு: ஆ. கோபண்ணா, ஆசிரியர், தேசியமுரசு, இணைய இதழ்

The post வாக்காளப் பெருமக்களே! அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவோம்! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்போம்! வெற்றிபெறச் செய்வோம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.