விடுதலை வேள்வியில் - தேசிய முரசு - Desiya Murasu

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!
முன்னுரை:

ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்கு முன்பு மகாகவி பாரதி பிறந்த நாளான 11 செப்டம்பர் 1986 இல் அன்று நான் எழுதிய இதே கட்டுரையை தினமணி நாளேட்டின் இரண்டாவது பக்கத்தில் தலையங்கத்திற்கு அருகில் வெளியிட்டு, என்னை எழுத்தாளனாக அங்கீகரித்தவர் பத்திரிகையுலக ஜாம்பவான் திரு. ஏ.என்.சிவராமன். தினமணியில் மொத்தம்  53 ஆண்டுகள் பணியாற்றி, அதில் 43 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து சாதனை படைத்தவர். இவரது எழுத்துச் சுதந்திரத்தில் தினமணி அதிபர் திரு. ராம்நாத் கோயங்கா தலையிட்டதே இல்லை. எப்பொழுதும் கதர் ஜிப்பா அணிவார். மூக்குப்பொடி போடுகிற பழக்கமுடையவர்.

தினமணியில் இரண்டாவது பக்கத்தில் தமது பெயரில் எழுதாமல் ‘கணக்கன், குமாஸ்தா’ என்கிற புனைப் பெயரில் ஆழமான, தெளிவான கட்டுரைகளை எழுதி பத்திரிகை உலகில் தகவல் புரட்சியை செய்தவர் திரு. ஏ.என்.சிவராமன். மிக மிக சிக்கலான விஷயங்களை வாசகர்களுக்கு புரியும் வகையில் மிக, மிக எளிமையாக எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவர்.சுதந்திரப் போராட்ட தியாகி, அப்பழுக்கற்ற தேசப் பக்தர்.

பத்திரிக்கை உலகின் பிதாமகனாக கருதப்படுகிற திரு. ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த அக்காலங்களில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட தேசிய வாதிகள் அனைவரும் தினமணி நாளேட்டை தான் வாசிப்பார்கள். பெருந்தலைவருக்கு பக்கபலமாக இருந்தவர். தமிழகத்தில் தேசிய சக்திகள் வளர உறுதுணையாக இருந்தவர். “மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நமது கொடியின் தோற்றமும் வளர்ச்சியும், மகாகவி பாரதி, நாடு போற்றும் நாமக்கல் கவிஞர்” போன்ற எனது கட்டுரைகளை, அவர் கட்டுரை எழுதுகிற இரண்டாவது பக்கத்தில்  வெளியிட்டு என்னை பெருமைப்படுத்தியவர்.  என் வாழ்க்கையில் ஏன்றும் மறக்க முடியாத ஆசானாக, குருவாக அவர் விளங்கினார் என்பதை நினைவுகூர்வதில் பெருமைப்படுகிறேன்.

– ஆ.கோபண்ணா

1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் எட்டையபுரத்தில் தோன்றி 1921 செப்டம்பர் 11-ஆம் நாள் இரவு சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு. 67-ஆம் எண்ணுள்ள வீட்டில் மகாகவி சுப்ரமணிய பாரதி தன் இன்னுயிரை நீத்தார். 39 வயது நிறைவு பெறுவதற்கு முன்பே அமரரான மாபெரும் கவிஞரின் நினைவு நாளைத் தான் இன்று நாம் நாடு முழுவதும் கொண்டாடுகிறோம்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப தன்னுடைய ஏழாம் வயதிலேயே அருமையான தமிழ்க் கவிதைகளை விளையாட்டாக புனைந்து பாடினார்.  11-ஆம் வயதில் இவருக்கிருந்த கவித்திறனை எட்டையபுர மன்னர் வியந்து பாராட்டி ‘பாரதி’ என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்.

1897-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் நாள் கல்வி கற்கும் வயதிலேயே சிறுமி செல்லம்மாளை திருமணம் செய்து கொண்டார். அப்போது பாரதிக்கு 14 வயதும், சிறுமி செல்லம்மாவுக்கு 7 வயதும் ஆகும்.

ஏற்கனவே தந்தையை இழந்த பாரதி திருமணமான இரண்டு வருடங்களில் தாயையும் இழந்தார். பெருந்துயரமான சூழலில்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆரம்பத்திலிருந்து வாழ்வின் முடிவு வரை வறுமையை எதிர்த்துப் போர்ப் பரணி பாடியவர்தான் பாரதியார்.

1904-ஆம் ஆண்டு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக தற்காலிக வேலையில் சேர்ந்தார். இரண்டு மாதங்களில் அதிலிருந்து விலகி சென்னை ‘சுதேசமித்திரனில்’ துணையாசிரியராக வேலையில் அமர்ந்தார். சுதேசமித்திரனில் பத்திரிகையாளராகச் சேர்ந்த அவர், இந்தியா, பாலபாரதம், ஆங்கிலத்தில் வெளிவந்த ‘யங் இந்தியா’, சக்கரவர்த்தினி. விஜயா, சூரியோதயம், சித்ராவளி, அமிர்தம், ஆகிய பத்திரிகைகள் மூலமாக கனல் தெறிக்கும் அரசியல் கட்டுரைகளையும், உயர்வான இலக்கியக் கட்டுரைகளையும் எழுதிப் புதுமைகளைப் படைத்தார்.

1905-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு தான் பாரதி கலந்து கொண்ட முதல் மாநாடாகும். அங்கு, ஆன்மிக உலகில் ஒளி வீசித் திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் தலைமை மாணாக்கியான நிவேதிதா தேவியை தரிசித்து, அவரை தமது ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். அது முதல் தேவியின் உபாசகராக மாறி விட்டார். இந்திய தேசத்தையே பாரத மாதாவின் உருவத்தில் தமக்கு காட்டியது நிவேதிதா தேவிதான் என்கிறார் பாரதியார்.

1904-லிருந்து 1921- வரை 17 ஆண்டுகளில் பாரதி வெளிப்படுத்தியிருக்கிற உலக ஞானம் எப்படி வளர்ந்தது என்பது இன்றும் மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தகவல்கள் தெரிய நவீன சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்தில், தன் பரந்த அறிவை சரியான பாதையில் தெளிவாக வகுத்துக் கொண்டது மிகவும் வியப்புக்குரியதாகும்.

கவிதைகளை எளிய முறையில் எழுதி சாதாரண மக்களுக்கும் புரியும்படி எட்டச் செய்த சமூக இலக்கியவாதியாகவும், இந்திய விடுதலைக்காக எழுதியும், பேசியும்  வந்த  ஒரு தேசிய விடுதலைப் போராட்ட வீரராகவும் பாரதி திகழ்ந்தார்.

குறிக்கோள்:

மேலும் தம்முடைய கவிதைகளின் சிறப்பைப் பற்றி கூறும்போது,

“சுவை புதிது; பொருள் புதிது,
சொற் புதிது சோதிமிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மாக்கவிதை ” என்கிறார்.

உயர்வான சிந்தனையும், குறிக்கோளும் உடையவன்தான் ஒரு சிறந்த கவிஞனாகத் திகழ முடியும் என்பதற்கு பாரதி ஓர் எடுத்துக்காட்டாகும்.

நாட்டுப்பற்று:

நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட பாரதியார், தமது கவிதையில் இரண்டையும் இணைத்துப் பாடினார்.

“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு “
“பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்! “
“மண்ணும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற் பிறி திலையே! “

என்று தாய்த் திருநாட்டைப் பெருமையுடன் உயர்த்தி அதற்கு ஈடு இணை எதுவுமில்லை என்று பாடி பூரிப்படைகிறார்.

இவ்வளவு வளம் பொழியும் பாரத நாட்டில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டு, எல்லோரையும் ஒன்றாக இணைத்துப் பாடுகிறார்.

“எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லாம் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ” என்கிறார்.

சர்வதேசப் பார்வை:

தான் பிறந்து நேசித்த பாரத நாட்டை மட்டும் பாடாமல் தனக்குத் தெளிவான சர்வதேசப் பார்வை உண்டு என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டி சரித்திரம் படைத்தார் பாரதி .

இத்தாலியில் மாஜீனி செய்த சபதத்தைக் கவிதையாகப் பாடினார்.

முதல் உலகப் போரில் ஜெர்மனியிடம் தோற்றுவிட்ட நாடான பெல்ஜியத்திற்கு வாழ்த்துப்பாடி, புது நெறி கலந்த புதுமையைப் படைத்தார்.

“அறத்தினால் தோற்றுவிட்டோம்!
வீரத்தால் வீழ்ந்து விட்டாய்
துணிவினால் வீழ்ந்து விட்டாய்! “

பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்திலே கண்ணீர் சிந்தும் பெண்களைப் பற்றி மனம் நொந்து பாடும்போது,

“கரும்புத் தோட்டத்திலே – அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே! ” என்று வருந்துகிறார்.

1917-இல் நடைபெற்ற புரட்சியில் ருஷ்ய நாடு விடுதலை பெற்றது. ருஷ்ய நாட்டில் நடைபெற்ற புரட்சி ஒரு நாட்டில் நடைபெற்ற புரட்சியாக மட்டும் இல்லாமல் ‘யுகப்புரட்சி’ யாகப் பாடினார்.

“பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டான்
ஜாரரசன் என்று அறுதியிட்டு” மகாகவி
பாடினார்.

மகாத்மாவின் தலைமையும்
பாரதியின் தீர்க்கதரிசனமும்

ரவீந்திரநாத் தாகூர் அழைத்த ‘மகாத்மா’ என்ற சொல்லை  தமிழ்ப்படுத்தி ‘மனிதர்க்கெல்லாம் தலைப்படு மனிதன்’ என்று பாரதி பாடுகிறார்.

“வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு
பாழ்ப்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க! வாழ்க!
மகாத்மா காந்தி தலைமையில் சத்யாக்கிரகப் போராட்டத்துக்கு
ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள் “ என்று பாடி சங்கு முழங்கினார்.

‘மகாத்மா காந்தியின் தலைமை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத காலத்திலேயே அவரது தலைமையை நாட்டு மக்களுக்கு முன் கூட்டியே அடையாளம் காட்டி நம்பிக்கையோடு பாடிய பாரதியின் தீர்க்கதரிசனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மாவின் தலைமையை பாரதி அடையாளம் காட்டியது அரசியல் தீர்க்கதரிசனம், தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் முழுமையான வெளிப்பாடாகும் என்று சொன்னால் மிகையாகாது.

பாரதியின் மொழிப்பற்று

பாரதியின் கவிதையில் மொழிப்பற்று இருந்ததேயொழிய ‘வேற்று மொழி மீது மொழிப் பகைமையோ மொழித் துவேஷமோ இருந்தது கிடையாது.
நாட்டைத் தெய்வமாக நினைத்தது போலவே மொழியையும் தெய்வமாகக் கருதி சிறுவர்களுக்குப் பாடும் பாப்பா பாட்டில்,

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
வடக்கில் இமயமலை பாப்பா! தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!  “ என்று பாடியதிலிருந்து அவரது உணர்வைப் புரிந்து கொள்ளலாம்.

தேச ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக மதம், மொழி, இன, பிராந்திய உணர்வுகளைத் தூண்டிவிடும் சக்திகளை எதிர்த்துப் போராட, ஒவ்வொரு தேச பக்தனும் இத்தருணத்தில்  உறுதி எடுத்துக் கொள்வது மிக, மிக அவசியமாகும

The post நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

செப்டம்பர் 11: இன்றும் வாழும் தியாகி இமானுவேல் சேகரன்: அடக்குமுறையை எதிர்த்த மாவீரர்!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் ஆசிரியர் வேதநாயகம் மற்றும் ஞானசுந்தரி தம்பதிகளுக்கு  1924 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி மகனாக பிறந்தார் இமானுவேல் சேகரன்.அடக்குமுறைக்கு ஆளான சமூகத்தில் பிறந்ததால், சிறு வயதில் இருந்தே இன விடுதலையை கையில் எடுத்து போர்க் குணத்தோடு வளர்ந்ததோடு, இந்திய தேசத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயேர்கள் மீதும் ஆவேசப்பட்டார்.

தந்தை வேதநாயகத்தோடு சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். வெள்ளையனே வெளியேறு போராட்டம் தான் இமானுவேல் சேகரனை எதிர்காலத்தில் தேசமே திரும்பிப் பார்க்கும் களமாக அமைந்தது.  சுதந்திரப் போராட்டக்  காலத்தில் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சொல்லொண்ணா துயரம் அடைந்தார். அப்போதும், தன் சமூகத்தின் மீதான அடக்குமுறை சங்கிலியை தகர்த்தெறிய வேண்டும் என்ற வெறி, அவருள் வளர்ந்து கொண்டிருந்தது.

தமது 19 ஆவது வயதில், அருப்புக்கோட்டையில் தலித்துகளுக்காக உருவாக் கப்பட்ட இரட்டைக்  குவளை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த முறையை அகற்ற மாநாடு நடத்தி பிற சமூக மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனையடுத்து, தமது சமுதாய மக்கள் மத்தியில் மாபெரும் தலைவராக வலம் வரத் தொடங்கினார்.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தியாகி இமானுவேல் சேகரன், கல்லூரி வாழ்க்கையிலிருந்தே தம்மை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக்  கொண்டவர். 1943 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்து தேசத்திற்கான தன் சேவையையும் வழங்கியிருக்கிறார். ராணுவத்தில் அவில்தாராக பொறுப்பேற்ற அவர், இதன்மூலம் ஆங்கிலம், இந்தி, உருது உள்ளிட்ட 7  மொழிகளைக் கற்றறிந்தார். 1950 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விடுப்பில் வந்தவர், ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு வெகுண்டெழுந்தார். இதனையடுத்து, ஒடுக் கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன்பின்னர், காமராசரின் அழைப்பை  ஏற்று காங்கிரஸில் இணைந்து இமானுவேல் சேகரன் பணியாற்றினார்.
1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி முதுகுளத்தூர் தொகுதி இடைத் தேர்தலுக்குப் பின், அந்த தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிக்  கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மறுநாள் செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சாதிய மோதலில் கொலை செய்யப்பட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து தமது 33 ஆவது வயதில் இந்த உலகை விட்டு இமானுவேல் சேகரன் மறைந்தாலும், அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். ஒப்பற்ற தலைவனின் சேவையை நினைவுகூறும் வகையில், அவரது நினைவாக கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்திய அஞ்சல் துறை சார்பாக அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவிக்கப்பட்டது.

The post செப்டம்பர் 11:  இன்றும் வாழும் தியாகி இமானுவேல் சேகரன்: அடக்குமுறையை எதிர்த்த மாவீரர்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கப்பலோட்டிய தமிழரின் கடைசிக் காலம் – சின்னக்குத்தூசி
(செப்டம்பர் 5: இன்று செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 வது பிறந்த நாள்)

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமை வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களுக்கு உண்டு. விடுதலைக்கு முதல் முழக்கம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆகியோரது தியாகமும், வீரமும் நிறைந்த வரலாறுகளை, தமது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் என்பதுபோல மேடைக்கு மேடை பேசி, புத்தகங்கள் எழுதி, நாடகங்கள் நடத்த செய்து, திரைப்படமாக எடுக்க சொல்லி நாடறியச்செய்ய ஓய்வறியாமல் உழைத்தவர் சிலம்பு செல்வர் ம.பொ.சி.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவி, செயல்படவேண்டும் என்பதில் வ.உ.சிதம்பரனார் மிகவும் உறுதியாக இருந்தார். இந்த முயற்சிக்கு ஆங்கிலேயர்கள் பல தடைகளை உருவாக்கினார்கள். அவற்றையெல்லாம் முறியடித்து 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி சுதேசி கப்பல் நிறுவனம் 10 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இவரது கடும் முயற்சியால் ‘காலியா’ மற்றும் ‘லாவோ’ என்ற இரண்டு கப்பல்கள் 1907 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன. இவை கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையே பயணக்கப்பல்கள் ஆயின. இந்த சுதேசி கப்பல் இயங்குவதற்கு ஆங்கிலேயர்கள் செய்த இடையூறுகள் ஏராளம்.

பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கடைசியாக கட்டணத்தை அடியோடு குறைத்தார்கள். கட்டணமே இல்லை. இலவச பயணம் செய்யலாம் வாருங்கள் என்று அழைத்தார்கள். இப்படி எத்தனையோ தந்திரங்களைக் கடைப்பிடித்தும் ஆங்கிலக் கப்பல் கம்பெனியின் சரிவை அவர்களால் தடுத்த நிறுத்த முடியவில்லை. சிதம்பரனாரை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சுதேசி கம்பெனியிலிருந்து விலகச் செய்து விட்டால், அத்தோடு அந்த கம்பெனி முழுகிப் போய்விடும் என்று போட்ட திட்டத்தையும் சிதம்பரனார் தகர்த்து விட்டார்.

இனி ஒரே வழி, சிதம்பரனார் மீது ஏதாவது ஒரு பொய் வழக்குப் போட்டு அவரை சிறையில் தள்ளி, சுதேசி கம்பெனி வளர்ச்சியில் பங்கு கொள்ளாமல் தடுப்பது தான் என்ற முடிவுக்கே அவர்களால் வர முடிந்தது. சிதம்பரனாரைச் சிறையில் தள்ளுவது எப்படி ?

அதற்கான பொன்னான வாய்ப்பு ஒன்று, அவர்கள் எதிர்பாராத விதத்தில் விரைந்து வந்தது. கப்பல் கம்பெனியாரின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது போல், பிரிட்டிஷ் அரசு, சிதம்பரனார் மீது ராஜ துரோகக் குற்றம் சாட்டி வழக்குப் போட்டது.

1908-ம் ஆண்டு , பிப்ரவரி மாதம் 23, 26 ஆகிய தேதிகளிலும், மார்ச் 1, 3 ஆகிய தேதிகளிலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கலகம் செய்யத் தூண்டிவிடும் வகையில் சிதம்பரனார் பேசினார் – இது முதல் குற்றம் சுப்பிரமணிய சிவா என்ற ராஜ துரோகியுடன் ஆங்கிலேயர் அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி, சதி – இது இரண்டாவது குற்றம்.

இந்த இரு குற்றச்சாட்டுகளின் மீது நீதிபதி பின்ஹே என்பவர் முன்னிலையில் நடந்த வழக்கின் முடிவில் சிதம்பரனாருக்கு ராஜ துவேஷப் பேச்சுக்காக இருபது வருடத் தீவாந்திர தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுடன் சேர்ந்து ஆங்கில அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததற்காக இன்னொரு 20 வருடத் தீவாந்திர தண்டனையும் விதிக்கப்பட்டது. இரண்டு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 40 வருடங்கள் சிதம்பரனார் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

தண்டனையை எதிர்த்து சிதம்பரனார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை தலா பத்து ஆண்டுகள் சிறை வாசம் என்று குறைத்தது. இரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் 10 வருடங்கள் மட்டும் அனுபவித்தால் போதும் என்று அது உத்தரவிட்டது.

இன்றைக்கு கடைசி நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் இருப்பது போல அன்று லண்டனில் பிரிவீக் கவுன்சில் என்ற நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. சிதம்பரனார் பிரிவீக் கவுன்சிலில் அப்பில் செய்தார். லண்டன் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தலா பத்தாண்டுகள் என்பதை தலா ஆறு வருடங்கள் என்றாக்கி, அதையும் ஒரே சமயத்தில் அனுபவித்தால் போதுமென்று தீர்ப்பு வழங்கியது.

36 வயதில் சிறை புகுந்த சிதம்பரனார் – திருநெல்வேலி, பாளையங்கோட்டை கடலூர், கோவை – கண்ணனூர் ஆகிய ஊர்களில் சிறை வாசம் அனுபவித்தார். திருடர்களும், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் அடைக்கப்பட்டிருந்த இடங்களில் அவர்களோடு சேர்த்து சிதம்பரனாரை சிறையிலடைத்தது வெள்ளை அரசு. கல்லுடைக்க வேண்டும், கழிப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று சிறையில் அவர் மீது கொடுமைகள் வரிசையாக ஏவிவிடப்பட்டன. சிறிது தவறினாலும் சாட்டையால் அடிப்பார்கள். எண்ணெய் ஆட்டும் செக்கில் அவரை மாடுபோலப் பிணைத்து, செக்கு இழுக்கச் செய்தார்கள். 190 பவுண்டுகள் எடையுடன் சிறை புகுந்த அவரது உடல் எடை ஆறே மாதங்களில் 27 பவுண்டாகக் குறைந்தது.
இத்தனை கொடுமைகளையும் சித்திரவதைகளையும் அனுபவித்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையாகி சிதம்பரனார் வெளியே வந்தபோது – அவரால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் கம்பெனி, இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது.

அவரது சுதேசி கம்பெனியின் பங்குதாரர்கள் – தங்கள் பங்குகளை ஆங்கிலக் கப்பல் கம்பெனிக்கே விற்றார்கள். பயம் காரணமாக கம்பெனியையே கலைத்துவிட்டார்கள். எல்லாவற்றையும் விட சிதம்பரனாரின் நெஞ்சைக் குமுற வைப்பது போல வடநாட்டிலிருந்து அவர் வாங்கி வந்த கப்பல்களையும் ஆங்கில கம்பெனிக்கே அவர்கள் விற்று விட்டார்கள்.

‘சிதம்பரம், மானம் பெரிது; மானம் பெரிது! ஒருசில ஓட்டைக் காசுகளுக்காக எதிரியிடமே கப்பலை விற்றுவிட்டார்களே… பாவிகள்! அதைவிட அந்தக் கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்காள வளைகுடாக் கடலில் மிதக்கவிட்டாலாவது என் மனம் ஆறுமே! இந்த சில காசுகள் போய்விட்டால் தமிழ்நாடு அழிந்துவிடுமா? பேடிகள்’ என்று சிதம்பரனாரிடம் பாரதியார் வருத்தப்பட்டதாக தமது நூலில் ம.பொ.சி. சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சுதேசிக் கப்பல் கம்பெனியைக் கலைத்து விட்டதோடு நின்றுவிடவில்லை அந்தப் பாவிகள். ‘கம்பெனி மூழ்கியதற்கு சிதம்பரனார் தான் காரணம். ஆகவே, எங்களுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்தை சிதம்பரனாரே தர வேண்டும்’ என்று அவர் மீது வழக்கும் போட்டார்கள்.

அந்நியர் ஆட்சியை அகற்ற – நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக சொத்தை எல்லாம் சுதேசிக் கப்பல் கம்பெனி மூலம் இழந்து, சிறையில் சித்திரவதைகளை அனுபவித்த சிதம்பரனாரின் இறுதிக்கால வாழ்க்கை எப்படி இருந்தது?

1912-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிதம்பரனார் விடுதலையாகி சிறை மீண்டபோது, சுப்பிரமணிய சிவாவைத் தவிர, அவரை ‘வா’ என்று அழைப்பார் எவருமிலர்.

ராஜ துவேஷக் குற்றத்துக்கு தண்டனை பெற்றதன் காரணமாக வ.உ.சி-யின் வக்கீல் தொழிலுக்கான சன்னத்து பறிமுதல் ஆகிவிட்டது. வக்கீலாகவும் பணியாற்ற முடியாத அவர், வருவாய்க்கு வேறு வழியின்றித் திண்டாடினார். அந்நாளில் தமக்குற்ற கஷ்டத்தைக் குறித்து தம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதமொன்றில்,

‘வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப் பல் பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று – சந்தமில் வெண்
பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து’!

எனக் கூறியிருந்தார். சிறைக்கஞ்சாத அவர் நெஞ்சம் வறுமையை நினைத்து வாடியது’ என்று உள்ளம் உருக எழுதியிருக்கிறார் சிலம்புச் செல்வர்.

வ.உ.சி-யின் பேரன் வ.உசி. இளங்கோ . இவர் ‘துக்ளக்’ ஏட்டின் ஆரம்ப காலத்தில் ‘வானவன்’ என்ற பெயரில் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார். சிறந்த கவிஞரும் புகைப்பட நிபுணருமான இவர், சில காலம் குமுதத்திலும் பணிபுரிந்திருக்கிறார். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு – தமது தாத்தாவைப் பற்றி ஒரு நாள் நெஞ்சம் நெகிழ்ந்து சில தகவல்களைக் கூறினார்!

அவர் மிகச் சிறந்த வக்கீல் என்பது மட்டுமல்ல, அவருக்குத் தெரிந்த தொழில் அதுதான். வெள்ளையராட்சி, அவர் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காட முடியாதபடிக்கு அவரது வக்கீல் தொழிலுக்கான சன்னத்தைப் பறிமுதல் செய்துவிட்டது. தெரியாத தொழில்களான எண்ணெய்க் கடை, மளிகைக் கடை என்றெல்லாம் வைத்துப் பார்த்தார். எல்லாமே அவரது கையைக் கடித்தன.

சென்னைக்கு வந்தார். அப்போது அவரது தொழிற்சங்க நண்பர்களான சர்க்கரைச் செட்டியார், கஜபதி செட்டியார் போன்றவர்கள் அவருக்கு உதவிட முன்வந்தார்கள். ஒரு அரிசிக் கடை வைத்துக் கொடுத்தார்கள். அவர்களே கடையைப் பிடித்து, அவர்களே அரிசி மூட்டைகள் வாங்கித் தந்து, வியாபாரம் செய்ய உதவினார்கள். அரிசிக் கடையையும் அவரால் லாபகரமாக நடத்த முடியவில்லை. கடையை நண்பர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

அப்போது தமிழ்நாடு காங்கிரஸின் மிகப்பெரிய தலைவராக இருந்தவர் ஸ்ரீனிவாச அய்யங்கார். அவர் சென்னையின் மிகப்பெரிய வக்கீலாகவும் புகழோடு விளங்கி வந்தார். ஏதாவது வேலை தேட வேண்டும் என்ற நிலையில், தனக்குத் தெரிந்த வேலையை ஸ்ரீனிவாச அய்யங்கார் தருவார். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்க்கையை ஓட்டி விடலாம்; என்று நினைத்தார் அவர்.

நம்பிக்கையோடு மைலாப்பூர் போனார். ஸ்ரீனிவாச அய்யங்காரைச் சந்தித்தார்.

‘வாங்கோ- வாங்கோ’ என்று மகிழ்ச்சி பொங்கிட அய்யங்கார், அவருக்கு காபி கொடுத்து உபசரித்தார்.

‘வராதவர் வந்திருக்கிறீர்களே.. என்ன விசேஷம்’ என்று விசாரித்தார். மெதுவாக, தயக்கத்துடன் ‘உங்களிடம் வேலை தேடி வந்தேன்’ என்றார் சிதம்பரனார்.

வேலையா… என்னிடமா? உங்களுக்குப் போய் நான் வேலை தர முடியுமா?’ என்றார் ஸ்ரீனிவாச அய்யங்கார்.

‘எனக்குத் தெரிந்த தொழில் வக்கீல் தொழில்தான். அந்தத் தொழிலை நான் செய்ய முடியாமல் அரசாங்கம் தடை விதித்துவிட்டது. நீங்கள் இப்போது சிறந்த வக்கீலாக இருக்கிறீர்கள், உங்களுக்கு ஏராளமான வழக்குகள் கிடைத்திருக்கின்றன. உங்களிடம் வரும் வழக்குகளுக்கான கேஸ் கட்டுகளை என்னிடம் கொடுங்கள். நீங்கள் கோர்ட்டில் வாதாட வசதியாக நான் சட்டரீதியான விஷயங்களை – பாயிண்ட்டுகளை உங்களுக்குத் தயாரித்துத் தருகிறேன். அதற்காக மாதம் ஒரு தொகையை நீங்கள் எனக்குத் தந்தால் அது பேருதவியாக இருக்கும்’ என்றார்.

சிதம்பரனார் சொல்லி முடிக்கும் வரையில் காத்திருந்த ஸ்ரீனிவாச அய்யங்கார், ‘கொஞ்சம் இருங்கோ பிள்ளைவாள், இதோ நொடியில் வந்துவிடுகிறேன்’ என்று சொல்லி விட்டு மாடிக்குப் போனார்.

மாடியிலிருந்து அவர் இறங்கி வந்தபோது, அவரது கையில் ஒரு கவர் இருந்தது. அதில் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்று இருந்தது.

பிள்ளைவாள்… நீங்க ரொம்பவும் பெரியவாள். உங்களுக்கு நான் வேலை கொடுப்பது என்பது, என்னால் நினைத்தும் பார்க்க முடியாத காரியம். என்னாலே முடிந்த உதவி இது. இதை நீங்கள் பெற்றுக்கொண்டால் நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்’ என்றார்.

அந்தப் பணத்தைக் கையால் தொடவே இல்லை சிதம்பரனார்.

‘ரொம்ப நன்றிங்க. நான் உங்களிடம் வேலை தேடித்தான் வந்தேன். வேலை செய்து சம்பாதித்துத்தான் எனக்குப் பழக்கம். யாசகம் வாங்கிப் பழக்கமில்லை என்று உணர்ச்சிப் பொங்கிடக் கூறிவிட்டு, வக்கீல் ஸ்ரீனிவாச அய்யங்காரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டார். வறுமையிலும் செம்மை என்பதின் அடையாளமாக நடந்து கொண்டார் அவர்.

அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈ.செ.வாலேஸ் என்பவர் நீதிபதியாக இருந்தார். இவர், சிதம்பரனார் மீது ராஜ துவேஷ வழக்கு நடந்து கொண்டிருந்த போது – திருநெல்வேலி மாவட்டத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். சிதம்பரனார் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்றபோதிலும் நேர்மை மிகுந்தவர், எல்லோருக்கும் உதவிடும் உதாரண குணம் படைத்தவர், வழக்காட வசதியற்றவர்களுக்காகத் தாமே முன் வந்து வழக்காடி உதவி செய்பவர் என்பதையெல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்தார். நெல்லை மாவட்டத்தின் தலை சிறந்த வக்கீலாக இருந்த சிதம்பரனார், சென்னையில் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்து வருந்தினார் அவர்.

தனது கோர்ட் குமாஸ்தாவைக் கூப்பிட்டு, ‘உனக்கு சிதம்பரம் பிள்ளையைத் தெரியுமா?’ என்று கேட்டார்.

அவரைத் தெரியுமாவாவது – அவரைத் தெரியாதவர் என்று யாராவது இருக்க முடியுமோ?’ என்றார் அந்த குமாஸ்தா. அடுத்து நீதிபதி கேட்ட கேள்வி, அந்த – ஊழியரை அதிசயத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

‘அவரை என்னிடம் அழைத்து வர முடியுமா என்று கேட்டார். நீதிபதி.

கோர்ட் குமாஸ்தா ஒரு பிராமண இளைஞர்தான். சிதம்பரனாரிடம் ஓரளவு பழக்கமும் உண்டு , அரசாங்கத்துக்கு விரோதமானவருடன் பழக்கம் வைத்திருப்பது தெரிந்தால் வேலை போய்விடுமோ என்ற பயமும் உள்ளூர உண்டு.

எங்கே சிதம்பரனாரைக் கண்டாலும் கைகூப்பி வணங்கி, அவரிடம் நலம் விசாரிக்க மட்டும் பயப்பட்டதில்லை அவர்.

‘சிதம்பரனாரிடம் பழகினால் கோர்ட் குமாஸ்தா வேலையே போய்விடும் என்று பயப்படுகிறோம் நாம். இந்த நீதிபதிக்கு எதற்கு இந்த வம்பு? சிதம்பரனார் வந்து இவரைப் பார்த்தார் என்று அரசாங்கத்திற்கு தெரிந்தால் இவரது நீதிபதி பதவிக்கு ஆபத்து வருமே ..’ என்பது தான் அந்த இளைஞரது அதிசயமும், அதிர்ச்சியும். தயங்கி, தயங்கி தனது பயத்தை நீதிபதியிடம் அவர் தெரிவித்தபோது, பயப்படாதே… ஒன்றும் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று தைரியம் சொன்னார் அவர்.

சிதம்பரனாரை நீதிபதியிடம் அழைத்து வருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

காரணம், சிதம்பரனார் குடியிருந்த வீட்டுத் திண்ணையில் ஒரு போலீஸ்காரர் எப்போதும் இருப்பார். சிதம்பரனார் நடவடிக்கைகளைக் கவனிக்க பிரிட்டிஷ் அரசு செய்த ஏற்பாடு அது.

சிதம்பரனார் இருந்த தெரு வழியாக அந்த குமாஸ்தா, எப்போது போனாலும் ஒரு போலீஸ்காரர், திண்ணையிலோ – எதிர்ப்பக்கத்திலோ – டீக்கடையிலோ – பெட்டிக் கடையிலோ நின்றுகொண்டு சிதம்பரனார் வீட்டுக்கு யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று கண்காணித்துக் கொண்டிருப்பார்.

ஒரு நாள் அந்த குமாஸ்தா நீதிபதியின் விருப்பத்தை நிறைவேற்ற அந்தத் தெருவுக்குப் போனபோது, என்ன காரணத்தினாலோ அந்த வீட்டருகே எந்த போலீஸ்காரரையும் காணோம்.

போலீஸ்காரர் யாரும் இல்லை என்பதை நன்கு ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகு வீட்டினுள்ளே நுழைந்தார் அந்த இளைஞர். சிதம்பரனாரைச் சந்தித்து நீதிபதி வாலேஸ் அவரைப் பார்க்க விரும்புவது குறித்துத் தெரிவித்தார்.

சிதம்பரனார் நீதிபதியைச் சந்திக்க மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு அந்த குமாஸ்தா – இப்படியும் கூட நல்லெண்ணம் படைத்த நல்ல மனிதர்கள் இருக்கிறார்களே…’ என்று நெஞ்சம் நெகிழ்ந்தார்.

‘நான் அரசாங்கத்துக்கு விரோதமானவன். என்னை அந்த நீதிபதி சந்தித்தார் என்பது அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டினால், பாவம்…. என்னைச் சந்தித்த ஒரே குற்றத்துக்காக அந்த நீதிபதியின் வேலை போய்விடும்’ என்றார் சிதம்பரனார். அவரது இந்த உறுதி கலந்த மறுப்பைக் கேட்டு அந்த குமாஸ்தா மனம் தளர்ந்துவிடவில்லை. அய்யா. இதுபற்றியெல்லாம் நான் நீதிபதியிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன் அய்யா. ‘ஒன்றும் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று பிடிவாதமாக அவர் என்னை வலியுறுத்தியதால்தான் நான் உங்களை அழைத்து வருவதாக அவரிடம் சம்மதம் அளித்தேன்’ என்று கூறி, நீதிபதிக்கும் தனக்குமிடையே நடந்த உரையாடலை அப்படியே வரி பிறழாது சிதம்பரனாரிடம் தெரிவித்தார்.

நீதிபதி வாலேசை சிதம்பரனார் சந்தித்த அங்கே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

நீங்கள் சென்னைக்கே வந்துவிட்டதாகவும் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுவதாகவும் கேள்விபட்டேன். உங்களுக்கு தெரிந்த வேலையான வக்கீல் தொழில் நடத்த உங்களுக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைக்குமானால், அது உங்களுக்கு உதவியாய் இருக்கும் என்பதோடு, எத்தனையோ பேருக்கு – அதிக செலவு செய்து வழக்காட வசதி இல்லாதவர்களுக்கெல்லாம் உதவியாக இருக்குமே என்று தோன்றியது. உங்களது வக்கீல் சனனத்து மீண்டும் உங்களுக்கு கிடைக்க நான் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்திருக்கிறேன்.

எதிர்பாராத இடத்திலிருந்து, எதிர்பாராத நிலையில் இந்த உதவிக் குரல், சிதம்பரனாரை மகிழ்ச்சியில் மட்டுமல்ல. நன்றிக் கடலிலும் ஆழ்த்தியது.

உடுக்கையிழந்தவன் கைபோல இடுக்கண் களைய, யாரும் கேட்க வேண்டும் என்று காத்திராமல் – தாமாகவே முன்வந்து வக்கீலுக்கான சன்னத்தை மீண்டும் வாங்கித் தந்த நீதிபதி வாலேஸ், காலத்தினாற் செய்த அந்த உதவியை வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவேயில்லை சிதம்பரனார்.

கோவில்பட்டிக்குத் திரும்பி வந்து மீண்டும் வக்கீலாகப் பணியாற்றத் தொடங்கிய அவர், தமது இரண்டு மகன்களில் ஒருவருக்கு வாலேஸ் துரையின் நினைவாக ‘வாலீஸ்வரன் என்றே பெயரிட்டார்’ என்று சொல்லிக்கொண்டே போன வ.உ.சி-யின் பேரன் வ.உசி. இளங்கோவன் குரலும் இந்த இடத்தில் நன்றியுணர்வால் தழுதழுத்தது.

கோவில்பட்டி சென்று மீண்டும் வக்கீல் தொழிலைத் தொடங்கிய பிறகும் சிதம்பரனாரின் சிரமங்கள் பெரிய அளவில் தீர்ந்து போய்விடவில்லை.

1928-ம் வருடம் ஜூன் மாதம், 1-ம் தேதி – சுயமரியாதை இயக்கத் தலைவரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான பெரியாருக்கு சிதம்பரனார் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் என்ன எழுதியிருந்தார் என்பதைவிட நாட்டின் சுதந்திரத்துக்காக தமது சொத்து சுகங்களையெல்லாம் இழந்து, சிறையில் செக்கிழுத்து சித்திரவதை அனுபவித்த ஒரு தியாக புருஷனின் இறுதிக்கால வாழ்வு எந்த அளவுக்கு இருந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது இதோ அந்த கடிதம்…

அன்பார்ந்த சகோதரர் அவர்களே,                                                           ஷேமம், ஷேமத்துக்குக் கோருகிறேன்.

நாகப்பட்டினத்திலும் கும்பகோணத்திலும் நீங்களில்லாமை எல்லோருக்கும் அசந்தோஷத்தை உண்டு பண்ணிற்று. ஒருவாறு இரண்டு இடங்களிலும் எங்கள் வேலைகளைச் செய்து முடித்தோம்.

இப்போது உங்கள் உடம்பு பூரண சௌக்கியம் அடைந்து விட்டதா? ஆம் என்றால், நீங்கள் எப்போது சென்னைக்குச் செல்லுதல் கூடும்?

என் மகன் School Final Examination-ல் தேறி விட்டான். இனிமேல் என்னால் அவனைப் படிக்க வைக்க முடியாது. போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு அவனை அனுப்பலாமென்று நினைக்கிறேன். தகுதியான சிபாரிசு இருந்தால் முதலிலேயே Circle-Inspector ஆகலாம். சாதாரண சிபாரிசு இருந்தால் Sub-Inspector ஆகலாம். தகுதியான சிபாரிசு நமக்குக் கிடைக்குமா என்பதைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள். கடவுள் துணை.

அன்புள்ள,
வ.உ.சிதம்பரம்

( கட்டுரையாளர் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மறைந்த திருவாரூர் இரா.தியாகராஜன் என்கிற திரு. சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய ‘எத்தனை மனிதர்கள்’ என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் வெளியிட்ட நூலில் இருந்து இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இவர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் முத்தமிழறிஞர் கலைஞர் பாதையில் பயணித்தவர். அப்பழுக்கற்ற சுயமரியாதைக்காரர். )

The post கப்பலோட்டிய தமிழரின் கடைசிக் காலம் – சின்னக்குத்தூசி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தேசியக் கொடி உருவாக்கம் − 1947
1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு, அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை 1947 ஜூன் 23 இல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில், மெளலானா அபுல்கலாம் ஆஸாத், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரியார், கே.எம்.முன்ஷி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தனிக் குழு ஒன்றைச் சுதந்திர இந்தியாவிற்கான கொடியைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைத்தது. அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 இல் இந்தியாவிற்கான புதிய மூவண்ணக்கொடியாகக் கொடியின் வெள்ளைப்பகுதியின் மத்தியில் ராட்டை சின்னத்திற்குப் பதிலாக, தர்மசக்கரத்துடன் கூடிய (அசோகப் பேரரசின் சட்டம், நீதிக்கான சக்கரச் சின்னம்) கொடியை ஏற்றுக்கொண்டது. ஜவஹர்லால் நேரு புதிய கொடியை முறைப்படி ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை அரசியல் நிர்ணய சபையில் கொண்டுவந்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் மூவண்ணக் கொடியின் முக்கியத்துவம் பற்றி, என்றும் நினைவில் இருக்கக் கூடிய வகையில் உரை ஒன்றை வழங்கினார்.

நேரு ஆற்றிய உரை:

“இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருமாறு என்னை பணித்திருப்பது பெருமிதம் தரும் தனிச் சிறப்பு என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். இப்போது இந்தக் கொடியைப் பற்றி நான் சில வார்த்தைகள் கூறலாமா?

“கடந்த காலங்களில் நம்மில் பலரும் பயன்படுத்தி வந்த கொடியிலிருந்து இந்தக் கொடி சிறிது மாறுபாட்டு இருப்பது நமக்குத் தெரிகிறது. இதில் உள்ள வண்ணங்களில் மாற்றமில்லை − அடர்குங்குமப்பூ நிறம், வெள்ளை, கரும்பச்சை. முன்பு கொடியின் வெள்ளை நிறப்பகுதியில் இந்தியாவின் சராசரி குடிமகனைக் குறிக்கும் விதத்திலும், மக்களின் பெருங்கூட்டத்தைக் குறிக்கும் வகையிலும் அவர்களின் தொழில்களைக் குறிக்கும் விதத்திலும் மகாத்மா காந்தி வழங்கிய போதனையிலிருந்து கிடைத்த ராட்டைச் சின்னம் இருந்தது. தற்போது, இந்த ராட்டைச் சின்னம நீக்கப்படாமல், இந்தக் கொடியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்த மாற்றம்? சாதாரணமாகப் பார்க்கும்போது, கொடியின் ஒருபக்கம் இருக்கும் சின்னம் மறுபக்கத்திலும் அதேவிதமாகத் தெரியவேண்டும். அப்படி இல்லாவிடில் அது நடைமுறை விதிகளுக்குப் புறம்பானதாகப் போய்விடும்.

“முன்பு, இந்தக் கொடியின் ஒரு முனையில் ராட்டையின் சக்கரமும், மறுமுனையில் நூல் நூற்கும் பகுதியும் இருக்கும். இதைப் பார்க்கும்போது கொடியில் ஒருபக்கத்தில் இருப்பதைப்போன்றே மறுபக்கத்திலும் தெரிவதில்லை. இதில் நடைமுறைச் சிக்கல் இருந்தது. ஆகவே, தீவிரமான சிந்தனைக்குப் பிறகு, மக்களுக்கு உற்சாகம் அளித்து வந்த ராட்டைச்சின்னம் தொடர்ந்து சற்று மாறுபட்ட வடிவத்தில் இடம்பெற்றாக வேண்டும். ராட்டையின் நூல் நூற்கும் பகுதிகளைத் தவிர்த்துவிட்டு முக்கியமான சக்கரத்தை மட்டும் இடம்பெறச் செய்வதற்கு ஒப்புக்கொண்டோம். இவ்வகையில், ராட்டை, சக்கரம் ஆகியவற்றோடான நமது பழமையான பாரம்பரியம் தொடரும்.

“ஆனால், எந்த விதமான சக்கரம் நமக்கு இருக்கவேண்டும்? எங்களது சிந்தனை பலவிதமான சக்கரங்களை நாடியது. ஆனால், குறிப்பாகப் பல பகுதிகளிலும் காணப்படும், நாம் அனைவருமே பார்த்திருக்கும், அசோக ஸ்தூபியில் உள்ள புகழ்வாய்ந்த சக்கரத்தின்மீது எங்கள் அனைவரின் சிந்தனையும் மையம் கொண்டது. இந்தச் சக்கரம் இந்தியாவின் பழம்பெரும் பண்பாட்டின் சின்னம்; இந்தியா காலம்காலமாக எவற்றுக்காகவெல்லாம்  பாடுபட்டதோ அவற்றையெல்லாம் சித்தரிக்கும் சின்னம். ஆகவே, இந்த அசோகச் சக்கரம், கொடியில் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். அவ்வாறே சக்கரம் இடம் பெற்றிருக்கிறது.

“என்னைப் பொருத்தவரை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நம்முடைய கொடியின் உருவாக்கத்தில் இந்தச் சின்னத்தை நாம் இணைத்துள்ளோம். இந்தச் சின்னத்தை மட்டுமல்லாமல், இந்திய வரலாற்றின் மிக அற்புதமான பெயர்களுள் ஒன்றாகிய அசோகரின் பெயரையும் ஒரு விதத்தில் மறைமுகமாக இணைத்திருக்கிறோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, செங்கோட்டையில் 1947 ஆகஸ்ட் 16 அன்று தேசியக்கொடியை முதல்முறையாக ஏற்றி பட்டொளி வீசிப் பறக்க வைத்தார். அன்று தொடங்கி, தேசியக்கொடியை நேரு செங்கோட்டையில் 17 முறை ஏற்றினார். இதுவரை இந்தியாவின் எந்தப் பிரதமரும் ஏற்றி இராத அதிகபட்சமான எண்ணிக்கையாகும் இது.

The post தேசியக் கொடி உருவாக்கம் − 1947 appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பிரதமர் நேருவின் நள்ளிரவு முழக்கம்!
ஒன்றின் முடிவு, இன்னொன்றின் தொடக்கம்; புதிய வெற்றிகளைக் கொண்டாடும் நிகழ்வுகள்; இதைத் தெளிவாகப் புலப்படுத்தும் நோக்கு, சரித்திரத்தை உருவாக்கும், மற்றும் அழிக்கும் மக்களின் நம்பிக்கையைப் புதுப்பிக்கவல்ல பேரார்வம், உறுதிப்பாடு ஆகியவை வரலாற்றின் உன்னதமான தருணங்கள் ஆகும்.

மிகவும் நினைவில் கொள்ளத்தக்க, பரவலாக போற்றப்படுகிற ஜவஹர்லால் நேருவின் உரை, 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றதைக் குறிப்பிட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற கணத்தை உலகுக்கு அறிவிப்பதற்காக அரசியல் நிர்ணய சபை அந்த நள்ளிரவு நேரத்தில் டில்லியில் கூடியது.

‘நள்ளிரவு நேரத்தில், உலகம் உறங்கிகொண்டிருந்த வேளையில் தனது வாழ்வையும், சுதந்திரத்தையும் அமைத்துக்கொள்வதற்காக இந்தியா விழித்தெழுந்தது’. உயரமான கவிகை மாடத்தைக் கொண்டிருந்த சட்டமியற்றும் மத்தியப் பேரவை மண்டபத்தில் இரவு 11 மணிக்குத் தொடங்கிய விழாவில் உணர்ச்சி பொதிந்த தமது உரையில் நேரு இப்படிப் பொருத்தமாக அறிவித்தார்.

பேசக்கூடிய வாய்ப்பு வந்தபோது, நேருவின் சொற்கள் ஒரு கவிதையைப்போன்று உணர்ச்சி மிக்கதாகப் பிரவாகமெடுத்தன. அந்த காலகட்டத்தின் மிக உயரிய தேசியத் தலைவராக இருந்த அவருக்கு, கொந்தளிப்பான காலத்தில் விதியின் குழந்தையாக இருந்த அவருக்கு, செயல்படும் வாய்ப்பு சரித்திர முக்கியத்துவம் நிறைந்த அந்த இரவில் தரப்பட்டது. பண்டைய நாகரிகத்தின் உந்துதல்கள், பிரிட்டிசாரிடம் இருந்து விடுதலை பெற்று புதிய அமைப்பில் இந்தியா மலர முனைவது ஆகியவை பற்றி தங்குதடையின்றி ஒரே வீச்சில் அவர் மடை திறந்தாற்போல பேசினார்.

ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் வருகைக்காக வைஸ்ராய் மாளிகையில் மெளண்ட்பேட்டன் காத்திருந்தார். நள்ளிரவைத் தொட்டதும் வைஸ்ராய் மாளிகை கவர்னர் ஜெனரல் மாளிகையாக மாற்றம் கண்டது. ராஜேந்திர பிரசாத்தும், ஜவஹர்லால் நேருவும் அந்த அரங்கத்தில் இருந்து வெளியே கிளம்பியபோது தங்களின் வாகனங்களை சென்றடைவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அரசியல் நிர்ணய சபை வாயிலில் மக்கள் திரள் அப்படி அலைமோதிக்கொண்டிருந்தது.அந்தக் கூட்டம் மகிழ்சியாகவும் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் இருந்தது.

கிழக்கிந்திய கம்பெனி காலம் முதற்கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலம் வரை ஏறக்குறைய 200 ஆண்டுகளில் தேசம் முழுவதும் நடந்த போராட்டங்களில் ஏராளமான பொதுமக்களும், விடுதலைப் போராட்ட வீரர்களும் துன்பங்களைத் தாங்கிகொண்டு தியாகங்களைச் செய்திருந்தனர். 1857இல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து, சுதந்திரத்தை விரும்பிய அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்த ஒரு அமைப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியது. இந்தச் சிப்பாய்க் கலகத்தின் துன்பங்களையடுத்து, ராணி விக்டோரியா ஆட்சியின்கீழ் இந்தியா வந்துவிட்டதாக செய்யப்பட்ட பிரகடனம் தேசத்தை முழுமையாக ஆட்டுவித்தது.

1947 ஆகஸ்ட் 15 அன்று காலையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு மெளண்ட்பேட்டனால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட இருந்தநிலையில், அரசியல் நிர்ணய சபையில் ‘விதியினை எதிர்கொள்வோம்’ என்று உரையாற்றினார். தேசத்தின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி ஒரு வரலாற்று  மாணவனாலும், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், சி.ராஜகோபாலாச்சாரியார் ஆகியோருடன் தோளொடு தோள் நின்று விடுதலைக்குப் போராடிய ஒருவராலும் மட்டுமே இத்தகைய அரிய சொல்வன்மையோடு கூடிய உரையை நிகழ்த்த முடியும்.

வகுப்புவாத கலவரத்தை அடக்குவதற்காக காந்தியடிகள் கல்கத்தாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். இந்த மிக முக்கியமான அந்தத் தருணத்தில் காந்தியடிகள் டில்லியில் இல்லை. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆகியிருந்த பெளண்ட்பேட்டன், ஆகஸ்ட் 15 தமது வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத் தகுந்த, உற்சாகம் மிகுந்த நாளாக மாறியிருப்பதாகக் கூறினார்.

அரசியல் நிர்ணய சபைக்கு வெளியிலும், நாடு முழுவதிலுமாக மக்களின் கொண்டாட்டங்கள் தன்னெழுச்சியாக நடைபெற்றன. செங்கோட்டையில் நேரு தேசியக்கொடியை ஏற்றிய உடனேயே கொண்டாட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன.

வீதிகள் தோறும் மக்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவி, சுதந்திரம், சகோதரத்துவத்தின் பிணைப்பை வெளிப்படுத்தினர். ‘சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ (ஆசாத் ஹை) என்று பொது இடங்களில் உற்சாக முழக்கமிட்டனர்.

இந்த நாள், சின்னஞ்சிறு குதூகல கொண்டாட்டங்களுடன் வரலாற்றில் போதுமான அளவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குக்கிராமங்கள், நகரங்கள், மாகாணத் தலைநகரங்களிலிருந்து டெல்லி வரை இதற்குமுன் இல்லாத அளவுக்குக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதற்கு இது சான்று கூறுகிறது.

இந்தியாவும், நேருவும் இந்த இலக்கை அடைவதற்கான கடினமான பணியை மேற்கொண்டனர். சுதந்திரம் கிடைத்தபோது நேருவுக்கு வயது 58. அந்த 58 ஆண்டுகால வாழ்க்கையில் 27 ஆண்டுகள் அரசியலில் கடும் உழைப்பிலும், போராட்டங்களிலும் செலவாயின. பத்து ஆண்டுகளுக்குமேல் சிறைவாசத்தில் கழிந்தன.

உலகம் உறங்கிக்கொண்டிருந்தபோது…

டில்லி அரசமைப்புச் சட்ட அரங்கில் (Constitution Hall) அரசியல் நிர்ணய சபை 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடியது.

தலைவர்: நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடல். (திருமதி கிருபளானி பாடினார்)

தலைவர்: இந்தியாவிலும், பிற பகுதிகளிலும் சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாம் அனைவரும் அமைதியாக எழுந்து நிற்கவேண்டும்.

தலைவர்: இப்போது, பண்டித ஜவஹர்லால் நேரு, உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் தீர்மானத்தைக் கொண்டுவருவார்.

நேரு பேசியபோது அவருடைய முகம் மாற்றம் அடைந்தது. சோர்வான வார்த்தைகள் அகன்றிருந்தன. ஆரம்பத்தில் கீழ் ஸ்தாயியிலும், கரகரப்புடனும் இருந்த அவரது குரல், உரத்து ஒலிக்க ஆரம்பித்தது. திடீரென துடிப்புடன் மிதக்கும் நிலைக்குச் சென்றது. நேருவின் மந்திரம் போன்ற மொழி வியக்கத்தக்க வகையில் எழுச்சியூட்டுவதாக இருந்தது. அதை அவருடைய வார்த்தைகளிலேயே சுவைத்து அனுபவிப்பதே சிறந்தது:

“நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் விதியுடன் சந்தித்துக் கொண்டோம், நம்முடைய வாக்குறுதியை முழுமையாகவோ, முழுவீச்சிலோ அல்லாமல் மிகவும் கணிசமான அளவில் மீட்டெடுத்தாகவேண்டிய தருணம் வந்திருக்கிறது. நள்ளிரவு 12 மணி அளவில், உலகம் உறங்கிகொண்டிருக்கிற வேளையில் இந்தியா விழித்தெழுந்து உயிர்ப்பையும் விடுதலையையும் பெறுகிறது. ஒரு காலகட்டம் நிறைவடைந்து பழையதிலிருந்து புதுமைக்கு மாறும் நிலையில், நீண்ட நெடிய காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தின் ஆன்மா பேசத் தொடங்கும் போதுதான் வரலாற்றில் அரிதான ஒரு தருணம் வருகிறது. இந்திய தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் இன்னும் விரிவான நிலையில் மனிதகுலம் அனைத்திற்குமான சேவைபுரிவதற்கு இத்தகைய புனிதமான ஒரு தருணத்தில் நம்மை நாமே அர்ப்பணித்துக்கொள்ளும் உறுதிமொழியை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது ஆகும்.

“வரலாற்றின் விடியலில், இந்தியா தனது முடிவற்ற தேடலைத் தொடங்கியுள்ளது. திக்கு தெரியாத பல நூற்றாண்டுகள், இந்தியாவின் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் சார்ந்த அதன் தீவிர முயற்சிகளினாலும், தோற்றப் பொலிவினாலும் நிரம்பியுள்ளன. நல்லது, கெட்டது எது நடந்திருந்தபோதிலும் இந்தியா தனது தேடலின் பார்வையை ஒருபோதும் இழந்ததில்லை. அதற்கு வலுட்டியிருக்கும் லட்சியங்களையும் மறந்துவிடவில்லை. துரதிருஷ்டமான ஒரு காலகட்டத்தை நாம் இன்றுமுடித்து வைத்திருக்கிறோம். இந்தியா தன்னைத் தானே மீண்டும் கண்டறிந்துகொள்ளும். நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் சாதனை ஒரு தொடக்கம்தான். நமக்காகக் காத்திருக்கும் மகத்தான வெற்றிகள், சாதனைகள் ஆகியவற்றிற்கான சந்தர்ப்பம் ஒன்றின் தொடக்கம் தான். இந்த சந்தர்ப்பத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வதற்கும்,வரும் காலத்தின் சவால்களை ஏற்றுக் கொள்வதற்குமான துணிவும், விவேகமும் உள்ளவர்களாக நாம் இருக்கிறோமா?

“சுதந்திரமும், அதிகாரமும் பொறுப்புணர்வைக் கொண்டுவருகிறது. இந்தப் பொறுப்புணர்வு இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், இறையாண்மைகொண்ட அமைப்பான இந்த சபையிடமே இருக்கிறது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்புவரை உழைப்பின் அத்தனை வலிகளையும் நாம் தாங்கிக்கொண்டோம். இந்தத் துயரத்தின் நினைவுகளில் நமது இதயங்கள் கனத்துக் கிடக்கின்றன. இவற்றில் சில வலிகள் இன்னமும் கூட தொடர்கின்றன. இருந்தபோதிலும், கடந்தகாலம் முடிந்துவிட்டது, எதிர்காலம்தான் இப்போது நமக்கு கண்முன் தெரிகிறது.

“எதிர்காலம் என்பது தொல்லையில்லாததோ, ஓய்வாக இருக்கவேண்டியதோ அல்ல. இடைவிடாத முயற்சியுடன் இருக்கவேண்டியது. அப்போதுதான் நாம் அடிக்கடி மேற்கொண்டிருக்கும் உறுதிமொழிகளையும், நாம் இன்று மேற்கொள்ளவிருக்கும் உறுதிமொழியையும் நிறைவேற்றமுடியும். இந்தியாவிற்கான சேவை என்பது கோடிக்கணக்கான துன்புறும் மக்களுக்கான சேவை. வறுமை, அறியாமை, நோய், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்பையே இது குறிக்கிறது.

“நம்முடைய தலைமுறையைச் சேர்ந்த மிக உயரிய மனிதரின் லட்சியம், ஒவ்வொருவரின் கண்களிலிருந்தும் வழிந்தோடும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் துடைப்பதே ஆகும். இது நமக்கு எட்டாததாகக் கூட இருக்கலாம். ஆனால் கண்ணீரும், வேதனைகளும் இருக்கும் வரையிலும் நம்முடைய வேலை முடியப்போவதில்லை.

“ஆகவே நாம் உழைத்தாக வேண்டும். வேலை செய்தாக வேண்டும். நம்முடைய கனவுகளை மெய்ப்பிக்கும் வகையில் கடினமாக உழைக்கவேண்டும். இந்தக் கனவுகள் இந்தியாவிற்கானவை. ஆயினும், நாம் தனித்து வாழ்ந்துவிட முடியுமென்று ஒருவரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு எல்லா தேசங்களும், மக்களும் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து இருப்பதால், இந்தக் கனவுகள் உலகம் முழுவதிற்கும் ஆனவையும் கூட. அமைதி என்பது பிரிக்க முடியாதது. சுதந்திரமும் அப்படியே. வளமும், பேரழிவும் கூட இந்த உலகிற்குத் தொடர்பில்லாத தனித்தனித் துண்டுகளாகப் பிளவுபடுத்த முடியாதவை.

“இந்திய மக்களை அவர்களின் பிரதிநிதிகளாகிய நாம், இந்த மாபெரும் வீரச் செயல்களுக்குத் திடமான நம்பிக்கையுடன் எங்களுடன் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். அழிவுக்கு இட்டுச்செல்லும் அற்பமான விமர்சனங்களுக்கு இது உகந்த நேரமல்ல. பகைமை பாராட்டுவதற்கோ ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதற்கோ இது சமயமல்ல. இந்தியாவின் குழந்தைகள் அனைவரும் வாசம் செய்யக்கூடிய சுதந்திர இந்தியா என்ற உன்னதமான மாளிகையை நாம் கட்டி எழுப்பவேண்டும்.                        ( 1947ஆகஸ்ட் 14 அன்று, அரசியல் நிர்ணய சபையில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை – தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள், தொகுதி−1, பக்கம் 25 )

இவ்வுரை அந்த நேரத்திற்குரிய பொருத்தமான பேச்சாக இருந்தது. ஜவஹர்லால் நேரு இதுவரை ஆற்றியிருக்கும் உரைகளிலேயே மிகவும் சிறப்பானது. இது விடுதலைச் சாசனம் என்பதைவிடவும், நம்பிக்கை ஒப்பந்தமாக இருந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க, உணர்ச்சிமிகுந்த உரையை நிகழ்த்தியபிறகு, நேரு கொண்டுவந்த தீர்மானம்:

ஐயா, இந்தத் தீர்மானத்தை நான் பணிந்து முன்வைக்கிறேன். இப்படி தீர்மாணிக்கப்படுகிறது :

நள்ளிரவு முடிவுறும்போது அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கூடி பின்வரும் உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம்.

‘புனிதமான இந்தத் தருணத்தில், இந்திய மக்கள் தங்கள் தியாகத்தினாலும், துன்பங்களின் மூலமும் சுதந்திரத்தை அடைந்திருக்கும் வேளையில், நான்…,இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகிய நான், பழமையான இந்த தேசம் உலகில் தனக்கு உரிமையுள்ள இடத்தை அடையும் வரையிலும், உலக அமைதியையும், மனிதகுல நன்மையையும் மேம்படுத்துவதில் தனது முழுமையான, மனமுவந்த பங்களிப்பை நல்கும் வகையிலும் இந்திய தேசத்திற்கும் அதன் மக்களுக்குமான சேவையில் என்னை நானே அர்ப்பணித்துக்கொள்கிறேன்.’

The post பிரதமர் நேருவின் நள்ளிரவு முழக்கம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மகாத்மாவுக்கு 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம்; சாவர்கருக்கு பாரத் ரத்னா விருது: பா.ஜ.க.வின் உச்சகட்ட நகைச்சுவை
இந்துத்வாவின் தந்தை என வலதுசாரிகளால் அழைக்கப்படும் வினாயக் சாவர்கரை பாரத் ரத்னா விருதால் அபிஷேகம் செய்ய பா.ஜ.க விரும்புகிறது. இதற்கு அவர் தகுதியானவர்தானா?. பிரிட்டிஷ் கைக்கூலியாகவா? ஹிட்லரின் அபிமானியாகவா? எந்த அடிப்படையில் அவர் பாரத் ரத்னா விருது பெற தகுதியானவர்?

சாவர்கரின் உண்மை முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இந்த கட்டுரை தொடங்குகிறது…

சுதந்திரப்  போராட்ட காலத்தில் அந்தமான் சிறையில் பிரிட்டிஷாரால் அடைக்கப்பட்டிருந்த சாவர்கர்,  பிரிட்டிஷாரிடம் கெஞ்சிக் கூத்தாடி விடுதலையானார். அதன்பிறகு கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதிக் கொ டுத்தார். இதனையடுத்து அந்தமான் சிறையிலிருந்து  புனே சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு, 1924 ஆம் ஆண்டு, அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.

மற்ற கைதிகள் எல்லாம் நாட்டின் சுதந்திரத்துக்காக சிறையில் வாடியபோது, தான் சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிய பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக்  கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தவர்தான் இந்த சாவர்கர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைமையிலான பெரிய இயக்கத்தை புறக்கணித்துவிட்டு, கடைசி வரை பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தவர்தான் இந்த சாவர்கர்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை, இரு நாடு கோட்பாடாக முகமது அலி ஜின்னா முன்வைத்த நேரம் அது.  இந்த கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி சியாமா பிரசாத்தைப் போல், சாவர்கரும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் இரு நாடு கோட்பாட்டை வெறுக்கவில்லை. 1937 ஆம் ஆண்டு இந்து மகாசபையின் தலைவராக சாவர்கர் இருந்தபோதே, இந்துக்கள் ஒரு பிரிவாகவும், முஸ்லீம்கள் மற்றொரு பிரிவாகவும் இந்தியாவுக்குள்ளேயே இரண்டு நாடுகள் இருப்பதாக கூறியுள்ளார். இரு நாட்டுக் கொள்கையை சில ஆண்டுகளில் முகமது அலி ஜின்னாவே கைவிட்டுவிட்டார். இது குறித்து சாவர்கர் ”ஜின்னாவுடன் எனக்கு சண்டை ஏதும் இல்லை. நாங்கள் இந்துக்கள். இந்த நாடு எங்களுடையது. இருந்தாலும், இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனித்தனியே நாடுகள் இருப்பதுதான் வரலாற்று உண்மையாக இருக்கும்” என்றார்.

பிரிட்டிஷாரிடம் சரணடைந்த, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத, இரு நாட்டு கொள்கையை வெளிப்படுத்திய சாவர்கருக்குத்தான் பாரத ரத்னா விருது அளிக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.

சுதந்திரம் அடைந்தபிறகு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் அரசியல் அமைப்பான பாரதிய ஜனசங்கமும் சாவர்கரிடம் இருந்து விலகியே இருந்தன. (ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ அல்லது ஜனசங்கத்திலோ சாவர்கர் உறுப்பினராக இருந்ததில்லை.)

1990 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் இந்துத்வாவை அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க. பயன்படுத்தத் தொடங்கியபோது, இந்துத்வா அடையாளத்தைப் பெறுவதற்காக, சாவர்கரை பா.ஜக. பயன்படுத்தத் தொடங்கியது.

பாசிச மற்றும் நாஜிசத்தின் ரசிகராக இருப்பவருக்கு, இந்தியாவின் பாரத ரத்னா விருதை வழங்க விரும்புகிறார்கள். நேரு எதிர்த்த அடாஃப் ஹிட்லரையும், பெனிடோ முசோலினியையும் ஆதரித்த சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க விரும்புகிறார்கள்.

தனது வாழ்நாளின் இறுதியில் மதப் பெரும்பான்மை குறித்து சாவர்கர் பேச ஆரம்பித்தார். ‘தந்தை பூமி’ என்றும், ‘புனித பூமி’ என்று இரண்டாகப் பிரித்தார். இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள் மற்றும் புத்த மதத்தினர் மட்டும் இந்தியர்கள் என்று புத்திசாலித்தனமாக கூறிவிட்டு, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புனித பூமி மத்திய கிழக்கு நாட்டில் இருப்பதாக குறிப்பிட்டார். அதாவது, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வெளியாட்கள் என்பதை சாவர்கர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இதன்படி, தற்போது பெரும்பான்மை அரசியலை நோக்கி நாட்டை பா.ஜ.க. வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

1969 ஆம் ஆண்டு நீதிபதி ஜீவன் லால் கபூர் அளித்த அறிக்கையில், மகாத்மா காந்தி படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவர் என சாவர்கரை அடையாளம் கண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த அறிக்கை மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. இதை உறுதி செய்த அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல்,  பிரதமராக இருந்த நேருவுக்கு எழுதிய கடிதத்தில், ”சாவர்கரின் தலைமையின் கீழ் இருந்த இந்து மகாசபையின் வெறித்தனமான பிரிவுதான் மகாத்மா காந்தியை படுகொலை செய்வதற்கான சதித் திட்டத்தை தீட்டியது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நாடு ஈடுபட்டு வரும் நிலையில், இப்பேற்பட்ட சாவர்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸிடம் இருந்து சர்தார் வல்லபாய் பட்டேலை திருடிக் கொண்டு, அவருக்கு சிலை வைத்துள்ளது பா.ஜ.க.  சிலை வடிவாக இருக்கும் பட்டேல், பா.ஜ.க. தலைமையிலான இந்தியாவின் ஒற்றுமை குறித்து நினைத்து சிரிப்பார். அதோடு, மகாத்மா காந்திக்கு 150 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நேரத்தில், சாவர்கருக்கு பாரத் ரத்னா விருது அளிக்கப்படுவது குறித்தும் நிச்சயம் விழுந்து, விழுந்து சிரிப்பார்.

The post மகாத்மாவுக்கு 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம்; சாவர்கருக்கு பாரத் ரத்னா விருது: பா.ஜ.க.வின் உச்சகட்ட நகைச்சுவை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மகாத்மா காந்தி, கோட்சேவின் மரபுரிமை கோரும் ஆர்.எஸ்.எஸ்: உச்சகட்ட கேலிக்கூத்து
மகாத்மா காந்தி மற்றும் அவரை படுகொலை செய்தவனின் மரபுரிமையை ஆர்.எஸ்.எஸ். கோருவது வேடிக்கையாகவும், மூர்க்கத்தனமாகவும் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைஷரில் எழுதப்பட்ட தலையங்கத்தில், மகாத்மா காந்தியை தங்கள் மரபுரிமையாக காங்கிரஸ் கட்சி கோர முடியாது என்றும், சங்பரிவாருக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் எழுதியுள்ள கட்டுரையில், மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதைப்  படிக்கும் அப்பாவி வாசகர்ளுக்கு மகாத்மா காந்தி மீது மதிப்பும் பக்தியும் ஏற்படும். அதேசமயம், மகாத்மா
காந்தியை நாதுராம் கோட்ஸே படுகொலை செய்ததை நியாயப்படுத்திய பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யாவை கட்சியிலிருந்து வெளியேற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை அப்பாவி வாசகர்கள் கேட்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரும், பிரதமரும் மகாத்மா காந்தியை புகழ்ந்து எழுதுகிறார்கள். ஆனால், சாத்வி பிரக்யா மீது மட்டும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். இப்படி இருக்கும் போது, மகாத்மா காந்தியையும், அவரை படுகொலை செய்த நாதுரான் கோட்சேவையும் நீங்கள் எப்படி மரபுரிமை கோர முடியும். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இரண்டு நாக்குகள் இருப்பது தெரியும். இப்போது 3 ஆவது நாக்கு முளைத்துள்ளதா?

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு மகாத்மா காந்தி வந்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வாழ்த்தியதாகவும் பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும்  அடிக்கடி சொல்வது வழக்கமாகியிருக்கிறது. மகாத்மா காந்தியுடன் இணைந்து பணியாற்றியதற்கான ஆதாரத்தை இவர்களால் வெளியிட முடியுமா?

1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவானது.  1925 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை, இரு மாபெரும் போராட்டத்தை காந்தி நடத்தினார். 1930 முதல் 1932 வரை நடந்த ஒத்துழையாமை இயக்கம் மற்றும் 1942 ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பங்கேற்றது உண்டா? அப்போது தலைவராக இருந்த ஹெட்கேவார் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவும் இல்லை, சிறைக்குச் செல்லவும் இல்லை என்பதுதான் வரலாறு. சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

சுதந்திரப் போராட்டதின்போது, பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவான நிலையையே இந்து மகா சபை தலைவர் வி.டி. சாவர்கர் எடுத்தார். இதனைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகி நிற்குமாறு தன் தொண்டர்களை கேட்டுக் கொண்டதற்கான ஆவணங்கள் உள்ளன.  இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருமாறும், சிந்து மாகாணத்தில் முஸ்லீம் லீக்குடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்குமாறும் சாவர்கர் கேட்டுக் கொண்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.

அந்த சமயத்தில் மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், நேரு, மவுலானா ஆஜாத் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் சிறையில் இருந்தனர். இப்போது மரபுரிமை கோரும் ஆர்.எஸ்.எஸ், மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து ஒரு போராட்டமாவது நடத்தியிருக்குமா?

ஆர்.எஸ்.எஸ். குறித்து மகாத்மா காந்தி  தெரிவித்த கருத்துகளை வசதியாக மறந்துவிடுகிறார்கள், அல்லது மறைத்துவிடுகிறார்கள்.

டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகாத்மா காந்திக்கு அனுப்பிய புகாரில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லத்தி பயிற்சியில் ஈடுபட்டதாகவும், இந்தியா இந்துக்களுக்கே சொந்தம் என்று கோஷமிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த பயிற்சி முகாமில் பேசியவர்கள், ”முதலில் ஆங்கிலேயர்கள் வெளியேறட்டும், அதன்பின்னர் முஸ்லீம்களை அடிபணிய வைப்போம். நாம் சொல்வதை அவர்கள் கேட்காவிட்டால், அவர்களை கொல்லுவோம்” என்று சூளுரைத்தனர். இதனையும் காந்தியடிகள் பார்வைக்கு டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கொண்டு சென்றார்.

இது குறித்து தமது ஹரிஜன் பத்திரிகையில் எழுதிய மகாத்மா காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோஷங்கள் தவறானவை. இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன். இந்தியாவில் பிறந்த எல்லோருக்கும் இந்த நாடு சொந்தமானதே.  சுதந்திர இந்தியாவில் இந்து ராஜ்யத்துக்கு வாய்ப்பு இல்லை. மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். இதனை அரசியல் ஆக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

“இந்த முழக்கங்கள் தவறானதும் அபத்தமானதும் ஆகும். இங்கு பிறந்து வளர்ந்த அனைவருக்கும் இந்தியா  சொந்தமானது. அவர்களைப் பார்த்துக்கொள்ள வேறு எந்த நாடும் இல்லை. எனவே, பார்சிகள், இந்திய கிறிஸ்தவர்களாக மாறிய பெனி இஸ்ரேலியர்கள், முஸ்லீம்கள் மற்றும் மற்ற இந்து மதத்தை சாராத அனைவரும் இந்துக்களைப் போன்றவர்கள் தான்.  சுதந்திர இந்தியா இந்து ராஜ்யமாக இருக்காது. அது, பெரும்பான்மை கொண்ட எந்த மதத்தின் பிரிவாகவோ, சமூகத்தின் அடிப்படையிலோ இல்லாமல் இந்திய ராஜ்யமாக இருக்கும். ஆனால்,  அனைத்து மக்களின் பிரதிநிதிகள் மத வேறுபாடு இல்லாதவர்களாக இருப்பர்… மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். அதற்கு அரசியலில் இடம் இல்லை.”

எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உண்மை முகத்தை மகாத்மா காந்தி  நன்கு அறிந்திருந்தார். 1946 ஆம் ஆண்டு நடந்த வகுப்புவாத கலவரம் குறித்து மகாத்மா காந்தியின்  சிஷ்யர் ஒருவர் கூறும்போது, “ஹிட்லர் தலைமையின் கீழ் பணியாற்றிய  நாஜிக்களாகவும், முசோலினி தலைமையின் கீழ் பணியாற்றிய பாசிசவாதிகள் போல  ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மாறுவார்கள்” என்றார்.

ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைஷர் தலையங்கத்தில், சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸை கலைத்துவிட மகாத்மா காந்தி விரும்பினார் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்துத்தான் காந்தியடிகளின் மரபுரிமையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோருகிறார்கள்.

‘கடைசி விருப்பமும் ஏற்பாடும்’ என்ற தலைப்பில் மகாத்மா காந்தி எழுதிய கட்டுரை, 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ம் தேதி, அதாவது அவர் படுகொலை செய்யப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன் ஹரிஜன் பத்திரிகையில் வெளியானது. இதில், சுதந்திரத்துக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னாரா? என்பதற்கு விடை உள்ளது.

இறக்கப் போகிறோம் என்று தெரியாமலேயே 1949 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி எழுதிய தமது கட்டுரைக்கு ‘கடைசி விருப்பமும் ஏற்பாடும்’ என மகாத்மா காந்தி தலைப்பு வைத்திருக்கிறார். சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாமா என்ற கருத்து, 1946 இல் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்ட, சுதந்திர இந்தியாவில் காங்கிரஸின் பங்கு என்ற விவாதத்தின் ஒரு பகுதியாகும். பல தலைவர்கள் தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். மகாத்மா காந்தியும் அந்த விவாதத்தில் தன் பங்களிப்பை அளித்தார்.

இந்த விவாதத்தில் தெரிவித்த கருத்துகளைத்தான் பிப்ரவரி 2, 1948 ஆம் ஆண்டு தமது ஹரிஜன் பத்திரிகையில் இந்த கட்டுரை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இது மகாத்மா காந்தியின் மற்றொரு பிரகடனமாக இருந்தது. அதில் அவர் கூறும்போது:

” இந்திய தேசிய காங்கிரஸ் பழமையான அரசியல் அமைப்பு. உயிரிழப்புகள் இல்லாமல் வன்முறை இல்லாத பல போராட்டங்களை விடுதலைக்காக நடத்திய காங்கிரஸ் கட்சி மரிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த கட்சி தேசத்தோடு மட்டுமே மரிக்கும்.”

‘செய் அல்லது செத்து மடி’ என்ற முழக்கத்துடன் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடியபோது மகாத்மா காந்தி இந்திய மக்களுக்கு அளித்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அவரது மரபுரிமை கோரட்டும்.
இதோ அந்த வாக்குறுதி:

”இந்தியாவில் பிறந்து வளர்ந்த எல்லோருக்கும் இந்தியா சொந்தமானது. அவர்களைப் பார்த்துக்கொள்ள வேறு நாடு இல்லை.. சுதந்திர இந்தியாவில் இந்து ராஜ்யம் இருக்காது…”

இந்த வாக்குறுதியை பா.ஜ.கவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நிறைவேற்றுவார்களா?

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தப்போவதாக ஒட்டுமொத்த நாட்டையே மிரட்டவில்லையா? இதுதான் மகாத்மா காந்தியின் உண்மையான வாக்குறுதியா?  இதயத்தில் கை வைத்து பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இதற்கு பதில் தரட்டும்.

தண்ணீரைப் போன்ற வாழ்க்கையில் எதையும் கலந்துவிடக் கூடாது என்று கூறியவர் மகாத்மா காந்தி. ஆனால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை மீறுவது, அம்மாநில மக்களின் சிவில் உரிமைகளை மறுப்பது போன்ற செயல்கள் மகாத்மா காந்தியின் மரபுரிமையுடன் ஒத்துப் போகிறதா?

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று மிரட்டுவது, மகாத்மா காந்தியின் வாக்குறுதிக்கு எதிரானது அல்லவா?

”வாழ்க்கை தண்ணீர் போன்றது. அதில் எதையும் கலந்துவிடக் கூடாது”  என்று காந்தியடிகள் சொன்னார். ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பது மகாத்மா காந்தியின் வாக்குறுதியை மீறுவது ஆகாதா?

மகாத்மா காந்தியின் அனைத்து வாக்குறுதிகளையும் மீறிவிட்டு,   அவரின் மரபுரிமையை கோர ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு என்ன தகுதி இருக்கிறது?

The post மகாத்மா காந்தி, கோட்சேவின்  மரபுரிமை கோரும் ஆர்.எஸ்.எஸ்: உச்சகட்ட கேலிக்கூத்து appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சொன்னால் நம்பமாட்டீர்கள்… சின்ன அண்ணாமலை
மகாத்மாவின் ஆசி

ஹரிஜன்  பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு ஓர் இளைஞரை ராஜாஜி அவர்கள் சென்னை  இந்தி பிரசார சபையில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த இளைஞர் பெயர் ஸ்ரீ சின்ன அண்ணாமலை என்று ராஜாஜி சொன்னார். அதன் பின் சின்ன அண்ணாமலையைப் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். சுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றவரென்றும், குறிப்பாக 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் இவர் இருந்த திருவாடானை சிறையை உடைத்து மக்கள் இவரை விடுதலை செய்தனர் என்றும் அறிந்து ஆச்சரியமடைந்தேன். அந்தப் போராட்டத்தில் பலபேர் உயிர் இழந்தனரென்றும் ஸ்ரீ சின்ன அண்ணாமலை கையில் குண்டு பாய்ந்து உயிர் தப்பியவர் என்றும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்துப் பெருமை அடைகிறேன்.

ராஜாஜி சாதாரணமாக யாரையும் சிபாரிசு செய்யமாட்டார். ஸ்ரீ சின்ன அண்ணாமலையை  சிபாரிசு செய்திருப்பது ஒன்றே அவர் ரொம்ப பொருத்தமானவர் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவே ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்த ஸ்ரீ சின்ன அண்ணாமலைக்கு நான் அனுமதி வழங்கி என் வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

எம். கே. காந்தி

ஹரிஜன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை

ராஜாஜியின் ஆசி

எனக்கு மிகவும் பிடித்தமானவர்களின் சின்ன அண்ணாமலை முக்கியமானவர். தெய்வபக்தியும், தேசபக்தியும், தமிழ்  பக்தியும் நிறைந்தவர். இவருடைய வாழ்க்கை வீரம் நிறைந்தது. காந்தீய வழியில் தொண்டு செய்யும் உள்ளம் கொண்டவர்.

பெரிய விஷயங்களை எளிய முறையில் நகைச் சுவையாகச் சொல்லும் திறன் படைத்தவர். சிறைச்சாலையில் கூட இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் மிகவும் ஆவேசமாகப் பேசுவார்; செயல்படுவார். அதனால் இவரை நான் ‘உற்சாக எரிமலை’ என்று பாராட்டிப் பேசியிருக்கிறேன். இவருடைய குணம் விசேஷமானது. இவர் மற்றவர்களுக்காகவே உழைப்பவர். தனக்கென்று எதுவும் செய்து கொள்ளமாட்டார். இதுவரையில் என்னிடம் இவர் தனக்கென்று எதையும் கேட்டது கிடையாது. தமிழுக்கு நிறையத் தொண்டு செய்திருக்கிறார்.

‘தமிழ்ப் பண்ணை’ என்ற புத்தகப் பிரசுரம் மூலம் பல நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மிக அழகாக அதிகச் செலவில் லாபம் கருதாமல் வெளியிட்டிருக்கிறார். என்னுடைய நூல்களை வெளியிட்டு அதற்கு ஒரு மகத்துவம் ஏற்படுத்தியிருக்கிறார். எனது பிரியமுள்ள சின்ன அண்ணாமலை அவர்களுக்கு எனது ஆசி.

சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி

‘கண்டிறியாதன கண்டேன்’ நூல் வெளியீட்டு விழாவில்

ராஜாஜியுடன் சின்ன அண்ணாமலை, திருவிகடம் கிருஷ்ணமூர்த்தி, கல்கியின் அருகில் சின்ன அண்ணாமலையின் முத்த மகன் சிறுவனாக..

காமராசரின் ஆசி

நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை.

இவரைக் கைது செய்ய முடியாமல் இவரது பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் சொல்லொணாக் கொடுமைகள் செய்தது ஆங்கில ஏகாதிபத்தியம். போலீசாரின் துப்பாக்கி முன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று வந்தேமாதரம் என்று முழங்கியவர் சின்ன அண்ணாமலை.

ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடானை சிறையில் அடைத்தது. 24 மணிநேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்துவிட்டார்கள்.

இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது உலக சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை. இன்றும் இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடத்தில் தழும்பு இருப்பதைக் காணலாம்.

இவர் நான்கு முறை சிறை சென்றிருக்கிறார். பல ஆண்டுகள் சிறைவாசம் செய்திருக்கிறார். தனிப்பட்ட நபர் சத்யாக்கிரகத்தின் போது மகாத்மா காந்தி அவர்களால் சத்யாக்கிரகியாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று தேவகோட்டையில் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். இவரை அங்கு கைது செய்யாததால் அங்கிருந்து சென்னை வரை நடந்தே வந்து வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்து கொண்டு வந்தார். சென்னையில் கைது செய்யப்பட்டார். நாட்டுக்குச் சுதந்திரம் வந்த பின்னும் இவர் போராட்ட மனப்பான்மையை விடவில்லை.

தமிழ்நாடு தனி மாநிலமாக அமையவும், தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்றும், திருப்பதி, கன்னியாகுமரி தமிழ்நாட்டோடு சேர தலைநகராகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், ஆந்திராவுக்குப் பங்கு பிரித்துக் கொடுக்கக் கூடாதென்றும் நடந்த போராட்டத்தில் முக்கிய பங்கேற்று, அதற்காகவும் சிறை சென்றார். இப்படி வாழ்க்கையில் பெரும்பகுதி போராட்டம், சிறை என்றே கழித்துவிட்டார். இவ்வளவு தியாகம் செய்தும் கட்சியிலோ அரசாங்கத்திலோ எந்தப் பதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

இவருடைய தியாகத்தையும், பட்டம் பதவியில் ஆசையில்லாத இவருடைய மனப் பக்குவத்தையும் ஒவ்வொரு காங்கிரஸ் ஊழியரும் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

திரு. சின்ன அண்ணாமலை எழுதிய ‘தியாகச் சுடர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பேசியதில் ஒரு பகுதி.

பேராசிரியர் கல்கி அவர்களின் வாழ்த்து

நண்பர் ஸ்ரீ சின்ன அண்ணாமலை பெரும்பாக்யசாலி. ராஜாஜி அவர்களின் திருவாக்கினால் சின்ன அண்ணாமலை என்ற சிறப்புப் பெயரை அடைந்தவர். அவரை என் சிறந்த நண்பராகக் கருதி வருகிறேன். பல இடங்களுக்கு அவருடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அவரது தேச சேவை மகத்தானது. அதை எழுதினால் ஒரு வீரசரித்திரமாக இருக்கும்.

ஸ்ரீ சின்ன அண்ணாமலை அபூர்வமான பல ஆற்றல்கள் படைத்தவர். பதினாயிரம் இருபதினாயிரம் ஜனங்கள் அடங்கிய சபையில் மணிக்கணக்கில் பிரசங்க மாரி பொழியக் கூடியவர். ஆவேசமாகப் பேசுவார்; அழவைக்கும்படி பேசுவார்; சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார். இவருடைய பேச்சாற்றலைப் பார்க்கும் போது இவரைப் போன்றவர்கள் நமது சட்டசபையில் இருந்தால் எவ்வளவு கலகலப்பாக இருக்கும் என்று நான் எண்ணுவது உண்டு.

பேசும் ஆற்றலைப்போல் எழுதும் ஆற்றல் படைத்தவர் ஸ்ரீ சின்ன அண்ணாமலை. அழகிய சிறு கதைகள் எழுதியிருக்கிறார். சிறந்த நாவல்கள் எழுதியிருக்கிறார். ரஸமான பிரயாணக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக இவருடைய செயல்திறன் வியக்கத்தக்கது. எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் செயல் வீரர் இவர். ராஜாஜி அவர்களுக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். ராஜாஜியின் நெருங்கிய நண்பர்கள் இவரை ‘சின்ன திருவடி’ என்று செல்லமாக அழைப்பார்கள். ராஜாஜியின் நூல்களை இவர் ‘தமிழ்ப் பண்ணை’யின் மூலம் பிரசுரித்த விதமே ஒரு பக்தியானது.

ரஸிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் சொன்னது போல, சின்ன ‘அண்ணாமலையைப் போல ஒரு நண்பர் கிடைப்பதற்கு எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்.’

அவருடைய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

சின்ன அண்ணாமலை எழுதிய ‘காணக் கண்கோடி வேண்டும்’ என்ற நூலின் முன்னுரையில் கல்கி – ரா. கிருஷ்ணமூர்த்தி எழுதியது.

என்னுரை

இந்நூலை நான் எழுதுவதற்குத் துண்டுகோலாக இருந்தது ‘குமுதம்’ பத்திரிகையே.

‘குமுதம்’ பத்திரிகை ‘போனஸ்’ வெளியீடாகச் சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டபோது, என் வாழ்க்கையில் நடைபெற்ற நம்பமுடியாத சில சம்பவங்களைத் தொகுத்து எழுதும்படி பணித்தார்கள். அதற்காகச் சில சம்பவங்களை எழுதிக்கொடுத்தேன். ‘குமுதம்’ போனஸ் வெளியீடாக வந்தபோது பலரும் படித்துப் பாராட்டினார்கள்.

அதைப்போல இன்னும் பல சம்பவங்கள் என்வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. அவைகள் பலவற்றையும் தொகுத்து எழுதியபோது அது ஒரு பெரிய நூலாக வடிவெடுத்து உங்கள் பார்வைக்கு வந்திருக்கிறது.

ஓர் எளிய தொண்டனின் வாழ்க்கையில் நடைபெற்ற சில விசித்திரச் சம்பவங்களின் தொகுப்புதான் இந்நூல். படிக்க சுவாரஸ்யமாக   இருந்தால் அது போதும். அச்சாகும்போதே படித்துப் பார்த்த சில மேதைகள், மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

அது முகஸ்துதி அல்ல, உண்மை என்றே நான் நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

அன்பன்

சின்ன அண்ணாமலை

பிப்ரவரி, 1978

The post சொன்னால் நம்பமாட்டீர்கள்… சின்ன அண்ணாமலை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தியாகி சின்ன அண்ணாமலை நூற்றாண்டு விழா! புகழ் ஓங்கட்டும்! ஒளிரட்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி புகழ்மாலை!
விடுதலைப் போராட்ட வீரரும் பதிப்புலகின் பிதாமகன் எனப் போற்றப்படும் நகைச்சுவை மன்னன் திரு. சின்ன அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டு விழா, வெள்ளையனே வெளியேறு மற்றும் ஆகஸ்டுப் புரட்சி நடைபெற்ற 9ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழின்படி இன்று 9.8.2020 மாலை 5 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

அன்றைய இராமநாதபுரம் மாவட்டம், காரைக்குடி அருகில் உள்ள உய்யக்கொண்டான் சிறுவயல் என்னும் சிற்றூரில் 1920ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று, சின்ன அண்ணாமலை அவர்கள் பிறந்தார். பெற்றோர் இவருக்கு முதலில் வைத்த பெயர் நாகப்பன். சுவிகாரம் விடுவது செட்டிநாட்டின் பரம்பரை வழக்கம். அதன்படி இவரது 12ஆவது வயதில் தேவக்கோட்டையில் வசித்து வந்த திரு. நாச்சியப்பன் செட்டியார், -மீனாட்சி ஆச்சி தம்பதியருக்குச் சுவிகாரமாகக் கொடுக்கப்பட்டார். இவர்கள்தான் அண்ணாமலை என்று பெயர் சூட்டினார்கள். இதில் அதிசயம் என்னவென்றால், இவரைப் பெற்றவர்கள் பெயரும் தத்துப்பெற்றவர்கள் பெயரும் ஒன்றே ஆகும்.

1944இல் சென்னை கோகிலே மண்டபத்தில் தேசியக்கவி நாமக்கல் கவிஞர் அவர்களுக்குப் பணம் முடிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதறிஞர் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற அந்த விழாக் குழுவில் பெருந்தலைவர் காமராஜ், எழுத்தாளர் வ.ரா. போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். ரூபாய் 20 ஆயிரம் நிதி திரட்டி தேசியக்கவிக்குப் பொற்கிழி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தான் அண்ணாமலையை சின்ன அண்ணாமலை என்று இராஜாஜி அழைத்தார். அதற்குக் காரணம், திருவண்ணாமலையில் என்.அண்ணாமலைப்பிள்ளை என்றொரு தியாகி இருந்தார். அவர் பிரபலமான காங்கிரஸ் தலைவர். பெயர் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக “சின்ன அண்ணாமலை” என்று இராஜாஜி அழைத்தார். அந்தப் பெயரே இவருக்கு நிரந்தரமாகிவிட்டது.

சின்ன அண்ணாமலை தமது இளமைப்பருவம் முதல் விடுதலைப் போராட்ட இயக்கங்களில் தீவிரமாகப் பங்குகொண்டார். மகாத்மா காந்தி காரைக்குடிக்கு வந்தபோது அவரைத் தரிசித்து அவரிடமிருந்து ஆப்பிள் பழத்தை பெறுகிற வாய்ப்பை பெற்றார். அன்றுமுதல் காந்தி பக்தரானார்.

சின்ன அண்ணாமலை எப்போதும் காவிநிறச் சட்டையைத்தான் அணிவார். தமது இறுதிக்காலம் வரை அதை அவர் மாற்றிக்கொண்டதே இல்லை. காரைக்குடியைச் சேர்ந்தவராக இருந்ததால், தமிழ்மொழி மீது அளவற்ற பற்றுக்கொண்டவராக இருந்தார். அதேபோல் தமிழிசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில், முதல் தமிழிசை மாநாடு சிதம்பரத்தில் நடைபெறுவதாகப் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்தன. அந்த வகையில், தியாகி டி.ஆர் அருணாசலம் அவர்களுடன் இராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர்களைச் சந்தித்து நிதி கேட்டார். இராஜா சர். இவர்களை அன்பாக உபசரித்து ரூபாய் பத்தாயிரம் நிதி கொடுத்தனுப்பினார். அதை வைத்துக்கொண்டு சிதம்பரத்தில் முதல் தமிழிசை மாநாடு நடத்தினார்கள்.

1942 ஆகஸ்டு மாதம் முதல் தேதியிலிருந்தே நாட்டின் விடுதலைக்கான செயல் திட்டங்களை காந்தியடிகள் வகுத்தார். ஆகஸ்டு 9ஆம் தேதி மும்பையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. ஆனால், 8ஆம் தேதியே காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்தி காட்டுத் தீபோல் பரவியது. அதனால் ”வெள்ளையனே வெளியேறு” என்னும் முழக்கம் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.

இதில் சின்ன அண்ணாமலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த செய்தி தீயாக பரவியதும் தேவகோட்டையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் சின்ன அண்ணாமலையை அடைத்து வைத்திருந்த திருவாடனை சிறையை உடைத்து விடுதலை செய்து அவரை தூளில் தூக்கி அமர்த்திக் கொண்டு வெள்ளையனே வெளியேறு முழக்கங்களுடன் தேவகோட்டையில் ஊர்வலமாக சென்றதை எவரும் மறந்திட இயலாது. இதைத்தான் ‘தேவகோட்டைப் புரட்சி’ என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, ம.பொ.சி., நடிகர் திலகம் சிவாஜி ஆகியோரிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.

சென்னை, தியாகராய நகர் பகுதியில் சின்ன அண்ணாமலையின் தமிழ் பண்ணை பதிப்பகம் இலக்கியவாதிகளின் புகலிடமாக விளங்கியது. அது தமிழ் எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக மாற்றம் பெற்றது. ராஜாஜி, சத்தியமூர்த்தி, டி.கே.சி., கல்கி, வ.ரா, டி.எஸ்.சொக்கலிங்கம், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, கண்ணதாசன், நாடோடி போன்ற மாபெரும் தமிழ் எழுத்துலக வேந்தர்களின் புத்தகங்களை வெளியிட்ட பெருமை தமிழ் பண்ணைக்கு உண்டு. தமிழகப் பதிப்புலகிற்கு முன்னோடியாக விளங்கியவர் சின்ன அண்ணாமலை.

திரைப்படத்துறையில் நிறைய  படங்களுக்கு கதை, வசனம் எழுதி தயாரித்து வெளியிட்டவர். தேசிய செல்வராகவும், தியாகச் செம்மலாகவும், தமிழ் தொண்டராகவும், தமிழ் பதிப்பகத்தின் பிதாமகராகவும் விளங்கி பல அரிய சாதனைகளை படைத்த தியாகி சின்ன அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டு விழாவை, தேசிய எழுச்சி விழாவாக கொண்டாடுவது காங்கிரஸ் கட்சி தமது கடமையாக கருதுகிறது.

அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற தலைவராகப் பொறுப்பேற்று, தமது நகைச்சுவையான பேச்சாற்றல் மூலம் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை காங்கிரஸில் சேர்த்த பெருமை தியாகி சின்ன அண்ணாமலைக்கு உண்டு. எனவே, தேசியம் வளர்த்த தியாகி சின்ன அண்ணாமலைக்கு பெருமையும், புகழும் சேர்க்கிற வகையில் தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post தியாகி சின்ன அண்ணாமலை நூற்றாண்டு விழா! புகழ் ஓங்கட்டும்! ஒளிரட்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி புகழ்மாலை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை உலுக்கிய ஆகஸ்ட் புரட்சி – 1942!
மகாத்மா காந்தி தமது ‘ஹரிஜன்’ ஏட்டில், “இந்தியாவைவிட்டு வெளியேறு – QUIT INDIA’ என்ற தலைப்பில் முக்கியமான கட்டுரைகள் எழுதி, வெகுஜன அபிப்பிராயத்தைத் திரட்டினார்.

1942 ஜூலை 14இல், வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி, மகாத்மாவின் கட்டுரைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

1942 ஆகஸ்டு 8இல், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவை விட்டு வெளியேறு – QUIT INDIA’ தீர்மானத்தை நிறை வேற்றியது.

பிரிட்டிஷ் அரசாங்கம், ஆகஸ்டு 9ஆம் தேதி விடியற்காலை 4 மணிக்கு, மகாத்மா காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பியது. உடனிருந்த அவருடைய செயலாளர் மகாதேவ தேசாயும் கைது செய்யப்பட்டார்.

பம்பாய் நகரில் தடைச் சட்டத்தை மீறியதற்காகத் திருமதி. கஸ்தூரிபாவும் கைது செய்யப் பட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவர்கள் எல்லாரையும் மகாத்மா காந்தி யுடன் ‘தற்காலிகச் சிறை முகாம்’ என்றழைக்கப் பட்ட பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகை யிலேயே சிறை வைத்தனர்.

காங்கிரஸ் கட்சி, சட்ட விரோதமான ஸ்தாபனம் என்றும் அரசு அறிவித்தது. எங்கும் அவசர கால சட்டங்கள் புகுத்தப்பட்டன. நாட்டிலுள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் புகுந்து, சோதனைகள் நடத்தி, தஸ்தாவேஜிகளைப் பறிமுதல் செய்தனர். காங்கிரஸ் ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மிருகத்தனமான அடக்குமுறைகளைப் போலிசார் ஏவி விட்டனர். இதனால் நாடெங்கும் ஆர்பாட்டங்களும் கலகங்களும் ஏற்பட்டன.

போராட்டத் திட்டம் வகுத்து, வழிகாட்டுவதற்குத் தலைவர்கள் இல்லாத நிலையில், மக்கள் தாங்கள் நினைத்தபடி போலிசையும் ராணுவத்தினரையும் எதிர்த்து வன்முறைகளில் துணிந்து இறங்கினார்கள்.

1942 ஆகஸ்டு புரட்சி!

பம்பாயில் ஆகஸ்டு தீர்மானம் நிறைவேறியவுடன், காங்கிரஸில் உள்ள அனைவரும் அஹிம்சை வழியில் போராடினார்கள் என்று சொல்லமுடியாது! தீர்மானம் நிறைவேறிய மறுநாள் அதிகாலை காந்திஜி உள்பட எல்லாத் தலைவர்களும் கைதானார்கள். இப்படி நடக்கு மென்று ஏற்கெனவே கணித்திருந்த அச்சுத்பட்டவர்த்தனும் லோகியாவும் அருணா ஆசப் அலியும் ஆகஸ்டு 8ஆம் தேதி இரவே தலைமறைவாயினர். 1940இல் கைது செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷ் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வந்தார்.

மிட்னாபூர், சதாரா பகுதிகளில் அச்சுத்பட்டவர்த்தன் போட்டி அரசாங்கம் நிறுவினார். அந்தப் போட்டி அரசாங்கத்திற்கு மக்கள் வரி செலுத்தினார்கள். இவ்வாறு நாட்டில் புரட்சித்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் போது, ஹஜாரிபாக் சிறையில் அடைந்து கிடப்பது ஜெயப் பிரகாஷுக்கு வெறுப் பாக இருந்தது. அங்கிருந்து எப்படியாவது வெளியேறிப் புரட்சியை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டுமென்று அவர் துடித்துக்கொண்டிருந்தார்.

ஒப்பற்ற செயல்வீரரும் விவசாயிகளின் தலைவருமான ரமா நந்தன் மிஸ்ரா, சூரஜ் நாராயண் சிங் ஆகியோரிடம் ரகசியமாக ஆலோசனைகள் நடத்தி, ஒரு திட்டம் தயாரித்தார். 1942 தீபாவளியன்று இரவு, ஜெயப் பிரகாவும் மற்றும் ஐந்து நண்பர்களும், 8 மீட்டர் உயரமுள்ள மதில் சுவர்களைத் தாண்டி சிறையிலிருந்து வெளியேறினர்.

ஜீகல் கிஷோர், லோகியா, கேஸ்கர், திவாகர், சுசேதா கிருபளானி, அருணா ஆசப் அலி, யூசுப் மேகரலி, அச்சுத்பட்டவர்த்தன் போன்றோர், பம்பாயில் தலைமறைவாக இருந்து புரட்சி இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ஜெயப்பிரகாஷ் தொடர்பு கொண்டு, அரசாங்கத்தின் திட்டங்களை முறியடிக்கக் கொரில்லாப்படை ஒன்றைத் திரட்ட முடிவு செய்தார். இதற்காகப் போராட்டத் திட்டம்’ என்ற சிறு வெளியீடு தயாரித்து நாடு முழுவதும் அனுப்பினார்.

பிரிட்டிஷ் வன்முறையின் சின்னங்களான போலிஸ் நிலையங்களுக்குத் தீ வைத்தல், தந்திக் கம்பிகளை அறுத்தல், தண்டவாளங்களைப் பெயர்த்து எறிதல், யுத்த தளவாடங்களை ஏற்றிச் செல்லும் ரயில்களைக் கவிழ்த்தல்’ இவையெல்லாம் கொரில்லாப்படையின் ரகசியத்திட்டங்களாகும். அரசாங்கத்தின் ஈவு இரக்கமற்ற கொடுங்கோன்மைக்கு இந்திய மக்கள் கொடுக்கும் பதிலடி அது!

‘மனித உயிர்களைப் போக்குவதைத் தவிர, மற்ற எல்லா வகையான நாச வேலைகளும் அஹிம்சை தத்துவத்திற்கு ஒப்பானவைதான்’ என்று புது விளக்கம் தரப்பட்டது.

‘கலவரங்களுக்கு யார் பொறுப்பு’ என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட நூலுக்குக் காந்திஜி தெளிவாகவே பதில் சொன்னார்.

“ஜெயப்பிரகாஷ் வன்முறையாளர் என்று அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. அப்படியானால், அந்தக் குற்றவாளிகளின் பட்டியலில் முதலில் இடம் பெறவேண்டியது அரசாங்கமே! கிளைவ், ஹேஸ்டிங்ஸ் முதலியவர்கள் இந்திய மக்களின் ரத்தத்தைச் சிந்தி, ஆட்சியை நிலைநாட்டினர். இந்தியாவில் அவர்களுடைய ஆட்சி வன்முறை ஒன்றையே அடிப்படையாகக் கொண்டது. எனவே, ஜெயப்பிரகாஷை ஒரு வன்முறையாளர் என்று சுட்டிக்காட்டும் உரிமை இந்த வன்முறை அரசுக்கு இல்லை” என்றார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வன்முறை நடந்ததால், ஏராளமான தேசபக்தர்கள் மீது சதி வழக்குகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் போட்டது.

விமான தளம் நாசம்

1942 ஆகஸ்டு மாதம் மகாத்மா காந்தியும் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த கோவை மக்களும் தொழிலாளர் தோழர்களும் கொதிப்படைந்தனர். என். ஜி.ராமசாமி தலைமையில் மாபெரும் தொழிலாளர் பேரணி நடத்தினர். விடுதலைப் போராட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தத் திட்டங்களை வகுத்தனர். இதனால் என். ஜி. ராமசாமியும் ஏனைய தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் செய்தி கேட்டுப் புரட்சி வீரர்கள் ஆத்திரம் கொண்டனர். இரயில் தண்டவாளங்களைத் தகர்த்தெறிந்தனர். போர்த் தளவாடங்களை ஏற்றி வந்த இரயில் கவிழ்ந்தது! தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன!

சூளூர் விமான தளம், புரட்சி வீரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. தலைமறைவானவர்கள் போகப் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைக்குள் அடைக்கப்பட்டவர்கள் அனுபவித்த சித்திரவதைகள் வார்த்தையால் சொல்ல இயலாது!

உப்பள முற்றுகை!

நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்திலுள்ள உப்பளத்திலிருந்த காவலர்களைக் கட்டிப் போட்டு விட்டு, அவர்களது துப்பாக்கிகளைப் புரட்சியாளர்கள் கைப்பற்றிக் கொண்டனர். காவலிலிருந்த துணை இன்ஸ்பெக்டர் ‘லோன்’ என்ற வெள்ளையரை வெட்டி வீழ்த்தினர். புரட்சியாளர்களும் படுகாயமடைந்தனர்.

சீர்காழி சதி!

சீர்காழியிலுள்ள உப்பனாற்றுப் பாலத்தை வெடி வைத்துத் தகர்க்கச் சதி செய்தனர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகள் நடத்தினர்.

தேவகோட்டைப் புரட்சி!

1942 ஆகஸ்டு போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்டதற்காகப் புரட்சி மனப்பான்மை கொண்ட காங்கிரஸ் தொண்டர்களைக் கைது செய்த போலிஸார், திருவாடானை சப்-ஜெயிலில் காவலில் வைத்தனர். அவர்கள் கைது செய்யப் பட்டதைக் கேள்விப்பட்ட மக்கள், தங்கள் எதிர்ப்பைக் காட்ட கடை அடைப்புப் போராட்டம் செய்தனர். கூட்டத்தைக் கலைக்கப் போலிஸார் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் சுட்டதில் மூன்று பேர் இறந்தது கண்டு, மக்கள் மேலும் கொதித்தெழுந்தனர். ஆத்திரம் கொண்ட மக்கள் கோர்ட்டுக்குத் தீ வைத்தனர். மேசை, நாற்காலி, தஸ்தாவேஜிகள் எல்லாம் எரிந்து சாம்பலாயின. ராணுவம் வரவழைக்கப்பட்டது!

திருவாடானை சப்- ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்களை விடுவிக்க, புரட்சி எண்ணம் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து, சிறைக் கதவின் பூட்டை உடைத்து. “விடுதலை!… விடுதலை!…” என முழங்கிக்கொண்டு கைதிகள் எல்லாரையும் விடுவித்தனர். |

தாலுகா அலுவலகம், மாஜிஸ்டிரேட் கோர்ட் ஆகியவற்றையும் புரட்சிக் கூட்டனத்தினர் தீ வைத்துக் கொளுத்தினர். விடுதலைப் போராட்டத்தில் முன்னணியிலிருந்த திருவாடானை, இன்றும் தேசபக்தியை நாட்டுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. திருவாடானை கலவரத்தையொட்டி, 147பேர் களைக் கைது செய்தனர். தேவகோட்டை கலவரத்தில் 110பேர்மீது போலிஸார் கலவர வழக்கு தொடர்ந்தனர்.

1944 பிப்ரவரி 22இல் அன்னை கஸ்தூரிபா சிறையிலேயே மரணம் அடைந்தார். மனித குல வரலாற்றின் ஒப்பற்றத்தலைவர், தமது மனைவியை இருந்தார்! தாம் சிறைப்பட்ட போதெல்லாம் சேர்ந்து சிறைப்பட்ட மனைவியை இழந்ததுயரால் மகாத்மாவின் கண்களில் நீர் ததும்பியது!

மறைந்த மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை, மகன் தேவதாஸ் காந்தி சிறையிலே செய்தார். தேசம் முழுவதும் கடை அடைப்பும் அனுதாபக் கூட்டங்களும் நடந்தன. பிறகு, மகாத்மா காந்தியின் செயலாளர் மகாதேவ தேசாயும் இறந்து போனார். அதைத் தொடர்ந்து மகாத்மாவின் உடல்நிலை கெட்டதால், அவரை விடுதலை செய்யும்படி நாடெங்கும் கிளர்ச்சி எழுந்தது.

1942 ஆகஸ்டு 9இல் ‘தற்காலிகச் சிறை முகாம்’ என்று அழைக்கப்பட்ட பூனா ஆகாகான் மாளிகையில் சிறைப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி, 21 மாதங்களுக்குப் பின்பு, 1944 மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார்!

‘ஆகஸ்டு புரட்சி’யில் ஈடுபட்டு, சிறைக் கொடுமை களை அனுபவித்த தேசபக்தர்களின் நினைவை என்றும் போற்றுவோமாக!

The post பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை உலுக்கிய ஆகஸ்ட் புரட்சி – 1942! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.