ஆதியின் கடிதம் - தேசிய முரசு - Desiya Murasu

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா
இனிய நண்பர்களே,

வணக்கம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்றி அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வாழ்த்துகளோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களது தலைமையில் துணைத் தலைவராக, ஊடகத்துறை தலைவராக உயர் பொறுப்புகளைப் பெற்று பணியாற்றி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, தேர்தல் அரசியலில் இருந்து 1989 தேர்தல் முதல் விலகி, தொடர்ந்து நாள்தோறும் கட்சிப் பணியாற்றுவதில் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.

ஆ.கோபண்ணா அவர்களின் தந்தை திரு ஆதி ராகவ ரெட்டியார் அவர்களின் 80வது பிறந்தநாளில் (2.8.1998)மக்கள் தலைவர் திரு ஜி.கே.மூப்பனார் நேரில் வந்து வாழ்த்தியபோது எடுத்த படம். திரு எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், திரு கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு கிடையாது. என்னை பெற்று, வளர்த்து, எம்.ஏ., பி.எல்., வரை படிக்க வைத்து, வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி கைநிறைய சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு திருமணம் செய்து வைத்து, 91 ஆண்டுகள் முழுமையான வாழ்க்கை வாழ்ந்து, மறைந்த எனது தந்தை ஆதிராகவ ரெட்டியார் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஆண்டுதோறும் இந்து முறைப்படி செய்ய வேண்டிய கடமைகளை இந்நாளில் செய்து வருகிறேன். ஆனாலும், என் தந்தையின் நினைவுகள் மறக்க முடியாத ஒன்றாகும்.

அன்றைய செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, தொழுப்பேட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள புறகால் கிராமம் எனது சொந்த ஊர். எனது தந்தையின் சிறுவயதிலேயே அவரது தந்தை காலமானதால், தாய்மாமன் ஊரான கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூரில் வளர்ந்து வந்தார். கும்பகோணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 18 வயது நிரம்பிய அவர், தனது சொந்த ஊரான புறகால் கிராமத்திற்கு திரும்பி விட்டார். பிறகு திருமணமும் செய்து கொண்டார்.

பரம்பரை இசும்பு உரிமையின் அடிப்படையில் மணியக்காரர் பணியில் சேர்ந்தார். பின்னர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அப்பதவியை பறிக்கிற வரை கீழ்அத்திவாக்கம், களத்தூர் என்ற இரு பெரிய கிராமங்களின் மணியக்காரராக இருந்தார். மன்னராட்சி ஒழிந்தாலும் கிராமங்களில் மணியக்காரர்களின் ஆட்சி நடந்து கொண்டுதான் இருந்தது. மன்னரைப் போல அதிகாரம் செலுத்த முடியாவிட்டாலும் மணியக்காரரான என் தந்தைக்கு அந்த இரண்டு கிராமங்கள் மட்டுமல்லாமல் சுற்றியிருந்த கிராமங்களிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது.

இத்தகைய அரசியல் பின்னணியுள்ள என் தந்தை ஒரு முழு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது திருமணத்திற்கு முன்பு 2 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருந்த அவர், தமது இறுதி காலத்தில் 80 ஏக்கர் நிலமும், 10 பம்ப் செட்டுகளும் சம்பாதித்தது தான் அவரது ‘அபார’ வளர்ச்சி. அவர் வாழ்ந்த பெரும்பகுதியை அரசு மற்றும் வங்கிக் கடனை சமாளிப்பதிலேயே செலவழிக்க வேண்டியிருந்தது. இறுதிகட்டத்தில் குறிப்பிட்ட சில சொத்துகளை விற்று கடனை அடைத்து விடுதலையானார்.

சென்னைக்கு அடிக்கடி செல்கிற பழக்கம் கொண்டிருந்த அவர், சென்னை தியாகராய நகர், சாரி தெருவில் 1950களில் 3 கிரவுண்ட் நிலத்தை 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். (தற்போதுள்ள மலபார் கோல்ட் ஹவுசுக்கு அருகில்). அங்கே ஒரு சிறிய வீடு கட்டினார். கிராமப்புறத்தில் வாழ்ந்த என் தந்தை, தமது நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் நன்றாக படிக்க வேண்டும், தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் சென்னை தியாகராய நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.

பிறகு ஒருசில ஆண்டுகளில் ஒருவரின் ஆலோசனையை கேட்டு இந்த சாரி தெரு வீட்டை விற்றால் ரூபாய் 20 ஆயிரம் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு நமது பக்கத்து கிராமத்தில் 30 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வருகிறது என்ற ஆசை வார்த்தையைக் கேட்டு சென்னையில் உள்ள வீட்டை விற்றார். (இன்றைய அதன் மதிப்பு ரூபாய் 10 கோடி). அதற்குப் பிறகு, கிராமத்தில் நிலத்தை வாங்கிய அவரால், கடைசி வரை சென்னையில் எந்தவொரு சொத்தையும் வாங்க முடியவில்லை.

அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளில் பொறுப்பு வகிக்காமல் செல்வாக்கோடு இருந்தார். 1957, 1962, 1967, 1971, 1977, 1980 ஆகிய பொதுத் தேர்தல்களில் அரசு மணியக்காரராக இருந்தும் காங்கிரஸ் கொடி கட்டிய காரில் பயணித்து சுற்றியிருந்த 20 கிராமங்களில் மக்கள் செல்வாக்கின் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிப்பார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்றைய முதலமைச்சர் எம். பக்தவச்சலம், மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன், செய்யூர் வி.கே. ராமசாமி முதலியார், தமிழக அமைச்சாக இருந்த பி.ஆர். பரமேஸ்வரன் ஆகியோருடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். அச்சரப்பாக்கம் ஒன்றிய பகுதியில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பு என் தந்தையிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவதும், உணவு அருந்துவதும் அடிக்கடி நடைபெறுகிற நிகழ்வுகளாகும். தேர்தல் நேரங்களில் எண்ணற்ற காங்கிரஸ் கட்சியினருக்கு நேரம், காலம் பாராமல் என் தாயார் உள்ளிட்டவர்கள்

கடுமையாக பணியாற்றி உணவு சமைத்து அனைவருக்கும் பரிமாறுவது அடிக்கடி நடைபெறுவதை பார்த்திருக்கிறேன். இவற்றையெல்லாம் நான்கு சகோதரர்களோடு பிறந்த நான், சிறுவயது முதற்கொண்டு ஈடுபாட்டுடன் கவனித்து வருவேன்.

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தவரை, என் தந்தையின் செல்வாக்கில் 12 முதல் 15 பஞ்சாயத்து தலைவர்கள் வெற்றி பெறுகிற நிலை 1980 ஆம் ஆண்டு வரை இருந்தது. அந்த வகையில் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களாக வருபவர்கள் என் தந்தையின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுபவர்களாகவே இருந்தார்கள். அதனால், என் கிராமத்தை சுற்றியிருந்த பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பல வளர்ச்சிப் பணிகள் என் தந்தையின் மூலமாக நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் என் தந்தை சென்னைக்கு வரும் போதெல்லாம் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும், பிறகு புதிய சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும் ஏதாவது ஒரு அறையில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி அவர் தங்கிய அறை 205 இல் பார்வர்ட் பிளாக் தலைவர் மதுரை திரு. ஏ. அய்யண்ணன் அம்பலம், 210 அறையில் எங்கள் பகுதியை சேர்ந்த மேலவை உறுப்பினர் திரு. வி. வெங்கா மற்றும் 227 அறையில் மேலவை காங்கிரஸ் உறுப்பினரும், மிகச் சிறந்த சிந்தனையாளருமான பூதலுர் திரு. எம். ஆறுமுகசாமி ஆகியோரின் அறைகளில் ஏதாவது ஒன்றில்தான் தங்குவார். எப்பொழுது வந்தாலும் குறைந்தது ஒருவார காலம் தங்கிவிட்டு போவார். அப்படி அறை எண்.227 இல் தங்கும்போது தான் தியாகி திரு. எஸ்.ஏ. ரஹீம், திரு. ஏ.ஆர். மாரிமுத்து, திரு. தஞ்சை ராமமூர்த்தி, திரு. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், திரு. கே. ஜெகவீரபாண்டியன் மற்றும் இன்றைய காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி ஆகியோருடன் 1970களில் என் தந்தைக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அவர்கள் எல்லோரும் அந்த அறையில் அமர்ந்து தீவிரமான அரசியல் கொள்கை பறிமாற்றங்களை விவாதங்கள் மூலம் நிகழ்த்துவார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்தே உணவு அருந்துவார்கள். அதையெல்லாம் பல நேரங்களில் கூட இருந்து உன்னிப்பாக கவனித்திருக்கிறேன்.

அதைத் தொடர்ந்து சென்னை மாநில கல்லூரியில் எம்.ஏ., படித்த போதும், சட்டக் கல்லூரியில் படித்தபோதும் வெளியில் அறை எடுத்து தங்கி தான் படித்தேன். அப்போது, பெரும்பாலான நேரங்களில் சோசலிச சிந்தனையாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் பூதலூர் திரு. எம். ஆறுமுகசாமி அவர்கள் பேசுவதை மணிக்கணக்கில் கேட்டு அவரோடு உணவருந்தி, நாள் முழுவதையும் கழிப்பது எனது வழக்கமாகவும் இருந்தது. அத்தகைய சந்திப்புகள் தான் இன்றைக்கு என்னை அரசியல் ரீதியாக அறிவுபூர்வமாக வளர்த்திருக்கிறது.

என் தந்தைக்கு எப்பொழுதுமே பிறருக்கு உதவி செய்கிற சேவை மனப்பான்மை உண்டு. அவருக்கு மிக நெருங்கிய நண்பரான கும்பகோணம் தியாகி எஸ்.ஏ. ரஹீம் ஒருமுறை என் தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது, ‘சிபாரிசுகளை ரெட்டியார் வலிய ஏலத்தில் எடுப்பார்’ என்று கிண்டலாக குறிப்பிடுவார். சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வருகிற அறிமுகமில்லாத ஒருவர் தனக்கு இந்த அதிகாரியிடம் வேலை நடக்க வேண்டுமென்று கூறினால், என் தந்தை உடனே அந்த அதிகாரி எனக்கு மிகவும் வேண்டியவர், நீங்கள் என்னோடு வாருங்கள் என்று சொல்லி, அந்த அதிகாரியிடம் நேரில் அழைத்துச் சென்று அந்த பணியை தனது சொந்த செலவிலேயே முடித்து கொடுக்கிற இயல்பு கொண்டவராக இருந்தார். மணியக்காரராக பணியாற்றியதால் வருவாய்த்துறையில் நிறைய தொடர்பு உள்ளவர். அமைச்சர்களால் முடியாததை அதிகாரிகள் மட்டத்திலேயே முடித்து கொடுக்கிற ஆற்றல் பெற்றவராக இருந்ததால் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார்.

என் தந்தை 18 வயதில் கதராடை அணிய ஆரம்பித்தார். 91 வயது வரை கதர் துணியைத் தவிர வேறு ஆடையை அணிந்ததில்லை. சலவை செய்த உடையை அணிவதில் மிகுந்த கவனத்தை செலுத்துவார். மிகுந்த கம்பீர உடைத் தோற்றத்தோடு மிடுக்காக வலம் வந்து கொண்டிருந்த அவர், பரவலாக பலதரப்பட்ட மக்களிடம் நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்றார். என் வீட்டில் நடைபெற்ற எனது திருமணம் உட்பட 3 திருமணங்கள் சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்திருந்த ஆபட்ஸ்பரி(Abbotsbury) திருமண மண்டபத்தில் தான் நடந்தது. சாதாரண விவசாய குடும்பத்தைச் சார்ந்த என் தந்தை சக்தியை மீறி பரந்த அரசியல் நட்பு, தொடர்பு காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருமணத்திற்கு வருவார்கள் என்பதால் அந்த காலத்தில் ஆபட்ஸ்பரி திருமண மண்டபத்தில் தான் எங்கள் குடும்ப திருமணங்கள் நடைபெற்றது.

என் தந்தை வாழ்ந்த காலத்தில் அவரால் சென்னையில் சொத்து எதுவும் வாங்க முடியவில்லை. அதற்குரிய வருமானத்தை விவசாயத்தில் சம்பாதிக்க முடியவில்லை. அதைப்போலவே, எம்.ஏ., பி.எல். படித்து வழக்கறிஞராக பணிபுரிந்து சம்பாதிக்க வேண்டிய தொழிலை கைவிட்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர காங்கிரஸ் ஊழியராக இருக்கிற என்னால் சென்னை நகரத்தில் என் பெயரில் குண்டுமணி சொத்து கூட இல்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. சொத்து சேர்க்க வேண்டுமென்று தீவிர முயற்சி எதையும் செய்ததும் இல்லை. இன்றைக்கு எனக்கு இருக்கிற ஒரே சொத்து காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் களத்தில் ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக, தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் சிறப்பாக பங்கேற்கிறார் என்ற பாராட்டுகளையும், நன்மதிப்பையும் தமிழகம் முழுவதும் பெற்றதையே பெருமையாக கருதுகிறேன். மாற்றுக் கட்சியினரின் நன்மதிப்பையும் நிரம்பவே பெற்றுள்ளேன்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் தமிழக அரசியலில் நான் வெளியிட்ட ஜவஹர்லால் நேரு, காமராஜர் உள்ளிட்ட பல நூல்கள் என் வாழ்நாளுக்கு பிறகும் எனது பெயரை நிச்சயம் ஒலித்துக் கொண்டிருக்கும். இன்னும் இதைப்போல சாதிக்க வேண்டிய பணிகள் சில உள்ளன. இதுவே எனது வாழ்வின் இலக்கு!

எனவே, என் வாழ்வின் லட்சியம் என்று எதைக் கருதினேனோ அதை நோக்கிய எனது பயணம் 70 வயதிற்குப் பிறகும் இன்னும் வேகமாக பயணித்துக் கொண்டிருப்பேன் என்பதை என் தந்தையின் நினைவுநாளில் உறுதியோடு கூறுகிறேன். காங்கிரஸ் கட்சியில் இறுதி மூச்சு வரை எனது பணிகளை தொடருவேன்.

‘போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே’

என்று எனக்கு பிடித்த கவிஞர் கண்ணதாசன் வரிகளை நினைவுபடுத்தி என் தந்தையின் நினைவுநாளில் எனது மனம் திறந்த கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துகள்.

அன்பன்,
ஆ. கோபண்ணா

குறிப்பு : எனது தந்தை திரு. ஆதிராகவ ரெட்டியார் அவர்களின் மேலே உள்ள நிழற்படங்கள் மூலம் அவரது காலச்சுவடுகளை அறிந்து கொள்ளலாம்.

The post எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நாற்பதாண்டு நண்பர் தலைவர் அழகிரி – ஆ. கோபண்ணா
இனிய நண்பர்களே,

1969 இல் ஏற்பட்ட காங்கிரஸ் பிளவிற்குப் பிறகு அருமை நண்பர் அழகிரி அவர்கள் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். ஆனால், நானோ பெரு;தலைவர் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். அக்காலகட்டங்களில் சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்கியிருந்த எனது தந்தைக்கும், மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த க. ஜெகவீரபாண்டியன் அவர்களுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த நட்பிற்குக் காரணமாக இருந்தவர் பூதலூர் எம். ஆறுமுகசாமி. அவர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்தார். அவர்களோடு நண்பர் அழகிரிக்கு ஏற்பட்ட நட்பு காரணமாக என் தந்தையோடும் பழகுகிற வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அந்த வகையில் எனக்கும் நண்பர் அழகிரி 1970-களில் அறிமுகமானார்.  1970-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்காக நான் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது அழகிரியும் அங்கே படித்து கொண்டிருந்தார்.

அண்ணமலை பல்கலைக் கழகத்தில் எனது படிப்பை முடித்து விட்டு 1980-களில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக எம்.பி. சுப்பிரமணியம் அவர்கள் பொறுப்பு வகித்த போது, நண்பர் அழகிரியோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அந்த காலகட்டங்களில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஜெகவீரபாண்டியன், கே.எஸ். அழகிரி, திண்டிவனம் ஜெயகோபால், அரியலூர் ஜி. ராஜேந்திரன் இப்படி பலரது நட்பு எனக்கு ஏற்பட்டது.

ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக  எனக்கும், இன்றைய காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்களுக்கும் மிகமிக நெருக்கமான நட்பு இருந்தது. முற்போக்கு சிந்தனையும், செயல் திறனும் கொண்ட அவரோடு நானும் இணைந்து ஒரே அரசியல் பாதையில் பயணித்திருக்கிறேன். ஏற்றத்தாழ்வுகளை, எதிர்ப்புகளை  இணைந்தே எதிர்கொண்டிருக்கிறோம். 1984-களில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பழநியாண்டி அவர்கள் இருந்த போது, அவரது தலைமையின் கீழ் பணியாற்றுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரித்து அவர்கள் மூலமாக அன்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த ஜி.கே. மூப்பனார் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்பை பெற்ற பிறகு மிகத் தீவிரமான அரசியல் ஈடுபடுகிற சூழ்நிலை உருவானது. இதனால் வழக்கறிஞர் தொழிலில் இருந்து விலகி, முழுநேர அரசியல் ஊழியராக மாறினேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பழனியாண்டி அவர்களோடு இணைந்து பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஏ.ஆர். மாரிமுத்து, சோ. பாலகிருஷ்ணன், உ. சுப்பிரமணியம், என். ராமசாமி உடையார், எஸ்.ஜி. விநாயகமூர்த்தி ஆகியோரோடு அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பும், இணைந்து பணியாற்றுகிற சூழலும் ஏற்பட்டது. அந்த காலகட்டங்களில் நண்பர் அழகிரி அவர்களுக்கும், எனக்கும் அரசியல் ரீதியாக மிகமிக நெருக்கமான நட்பு உருவானது. அவர் சென்னை வருகிறபோதெல்லாம் நாங்கள் இருவரும் இணைந்தே இருப்பது ஒரு நடைமுறையாகவே இருந்தது. 1980, 1984 பொதுத்தேர்தல்களில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, பிறகு மறுக்கப்பட்டது. அதேபோல, 1989 லும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலின் மூலமாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று அவரது திறமையைத் தமிழகம் அறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவரது அரசியல் வாழ்க்கை என்பது எதிர்நீச்சலாகவே இருந்தது. தடைகளை தகர்த்து, உயர்நிலைக்கு வந்த பெருமை அவருக்கு உண்டு.

நண்பர் அழகிரி இளமைப் பருவம் முதல் நல்ல சிந்தனையும், செயல் திறனும் மிக்கவராக விளங்கியவர். அற்புதமான சொற்பொழிவாளர். தங்கு தடையின்றி மணிக் கணக்காகப் பேசக் கூடியவர். ஆழமான, சிக்கலான கருத்துக்களை தமது வாதத் திறமையால் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலைப் பெற்றவர். இதனால் சட்டமன்றத்தில் தமது பேச்சுவன்மையாலும், வாதத் திறமையாலும் அனைவரும் வியக்கும் வகையில் ஜொலிக்க ஆரம்பித்தார். இவரது சட்டமன்ற பணியைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது என்ற வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் நண்பர் அழகிரி. ஒருமுறை சட்டமன்றத்தில் அழகிரி உரையாற்றிக் கொண்டிருந்த போது, வசந்த மண்டபத்தில் இருந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வேகமாக சட்டமன்றத்திற்கு உள்ளே நுழைந்தார். அப்போது, ஒலிபெருக்கி மூலமாக, ‘அழகிரியின் அழகான தமிழ் பேச்சைக் கேட்க சட்டமன்றத்திற்குள் ஓடோடி வந்தேன்’ என்று குறிப்பிட்டதை எவரும் மறந்திட இயலாது. அந்தளவிற்கு தி.மு. கழக தலைவர் கலைஞர், பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட அனைவரது பாராட்டுக்களையும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பெற்றவர் அழகிரி.

ஒருமுறை பேராசிரியர் அவர்களை நண்பர் அழகிரியுடன் நான் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது, ‘நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்ட போது, ‘கீரப்பாளையம்’ என்று நண்பர் அழகிரி கூறினார். அதைக் கேட்டதும், ‘கீரப்பாளையத்தில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சம்மந்தத்தை தங்களுக்குத் தெரியுமா?’ என்று வினவினார். உடனே, அழகிரி அவர்கள், ‘அவரது மகன் தான் நான்’ என்று சொன்னதும், பேராசிரியர் அடைந்த மகிழ்ச்சிக்கும், அதிர்ச்சிக்கும் எல்லையே இல்லை. உடனே பேராசிரியர் அவர்கள் உங்கள் உரையைக் கவனித்த போது, அதில் சமூக நீதியின் தாக்கம் அதிகமாக இருப்பதை என்னாலே காண முடிந்தது. அதற்குக் காரணம் உங்கள் தந்தையினுடைய பாதிப்பு தான் என்று குறிப்பிட்டார். அதில் கூட திராவிட இயக்கத்தினர் சொந்தம் கொண்டாடி பெருமைப்படுகிற அளவிற்கு நண்பர் அழகிரியின் உரைகள் அமைந்திருந்தன. இவற்றையெல்லாம் மிக மிக அருகிலிருந்து ரசித்து மகிழ்ந்தவன் நான்.

ஒரு காலகட்டத்தில் நண்பர் அழகிரியின் அரசியல் உயர்வே என்னுடைய உயர்வு என்று கருதி பழகிய காலங்கள் உண்டு. சட்டமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அவர்களோடு மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றியவன். அந்த காலகட்டங்களில் நண்பர் அழகிரியும் அந்த நட்பு வட்டத்திற்குள் இருந்தவர். இன்றைக்கும் அந்த பசுமையான நட்பு மலரும் நினைவுகளாகவே இருக்கின்றன.

நீண்ட நெடிய நண்பராக இருந்த அழகிரி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றபோது மிகுந்த மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர் தலைவராக வருவார் என்று நினைத்துப் பார்க்க முடியாத சூழலில், தலைவராக வந்து என்னைப் போன்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கியவர் நண்பர் அழகிரி. அவர் தலைமைப் பொறுப்பை ஏற்று ஏறத்தாழ 21 மாதங்கள் உருண்டோடி விட்டன. நான் தூங்குகிற நேரம் தவிர, முழுநேரமாகத் தலைவர் அழகிரி அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் சம்பந்தமான பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். முழுநேரமாக இயக்கப் பணிகள் ஆற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியவர் தலைவர் அழகிரி. நண்பர் அழகிரி, தலைவர் அழகிரியாக வந்தது முதற்கொண்டு எனக்குப் பொறுப்புகளும், கடமைகளும் அதிகரித்து விட்டன. அந்த வாய்ப்பை பயன்படுத்தி பணிகளைச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தலைவர் அழகிரி மூலமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு அரிய வாய்ப்பாக இதை கருதி, என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன்.

நீண்டகால நண்பரான தலைவர் அழகிரி அவர்களுடைய பிறந்தநாள் விழா தொண்டர்களின் விழாவாக இன்றைக்கு நடைபெற்றிருக்கிறது. இனி வருகிற காலங்களிலே அவரது தலைமையில் தீவிரமாக செயல்பட்டு மே 2021 இல் நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிற அளவிற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நான் ஒரு விதியை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைமை யாரைத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கிறதோ, அவரது தலைமையை ஏற்றுக் கொண்டு அவர் மூலமாக, அவர் இட்ட பணிகளைச் செய்து முடிக்கிற வகையில் எனது கட்சிப் பணிகளை நான் அமைத்துக் கொண்டுள்ளேன். அந்த வகையில் எனது நீண்டகால நண்பர், காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அதனால் எனக்குக் கூடுதல் சுமையும், நம்பகத்தன்மையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி, தமிழக காங்கிரஸ் கட்சியை தலைவர் அழகிரி தலைமையில் வளர்த்தெடுப்பதே எனது நோக்கம் என்று அவரது பிறந்தநாளில் உறுதியேற்க விரும்புகிறேன். இதைப்போன்ற உறுதியை அனைத்து காங்கிரஸ் நண்பர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை செய்வதன் மூலம் ஒளிமயமான எதிர்காலம் காங்கிரஸ் கட்சிக்குக் காத்திருக்கிறது.

சமீபகாலமாக கொரோனா தொற்று கடுமையாக இருக்கிற சூழலில் அதைக் கடுகளவும் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் கட்சியின் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என அடிக்கடி பங்கேற்று தலைவர் அழகிரி அவர்கள் செயல்பட்டு வருவதை மாற்றுக் கட்சியினர் என்னிடம் பலமுறை வியந்து பேசியிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் கூட தலைவர் அழகிரி இப்படிச் செயல்படுகிறாரே, அவரது உடல் நலத்தைப் பார்க்கச் சொல்லுங்கள் என பலர் என்னிடம் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் தமக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சமீபத்தில் நடந்த திருவண்ணாமலை விவசாயிகள் மாநாடு, தேனியில் தடையை மீறி நடந்த விவசாயிகள் பேரணி ஆகியவற்றில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிறுத்துகிற பணியில் சாதனை படைத்தவர் தலைவர் அழகிரி. இதைச் சொல்வதற்குக் காரணம் தமிழக காங்கிரசின் 50 ஆண்டுகால அரசியலை நாள்தோறும் கூர்ந்து கவனித்தவன் என்ற அடிப்படையிலேயே இதைக் கூறுகிறேன். எந்தவித பாரபட்சமின்றி இந்த கருத்தைக் கூறுவதில் நான் பெருமைப்படுகிறேன். தனிப்பட்ட முறையில் அவரை புகழ்ந்து பேசி பலன்களை அடைய வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அதற்கு அவசியமும் இல்லை.

என் வாழ்நாளில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக ஆக வேண்டுமென்று நினைத்து அரசியலில் ஈடுபட்டதில்லை. அதற்கான முயற்சியில் நான் எப்போதும் விலகியே இருந்து வருகிறேன். எனவே, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, வாராது வந்த மாமணியைப் போல தலைவர் அழகிரி காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் வலிமை பெற வேண்டுமென்றால் தலைவர் அழகிரி தலைமையில் ஒன்றுபட்டு பணியாற்றினால் ஒளிமயமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது.

அருமை காங்கிரஸ் நண்பர்களே, தலைவர் அழகிரி தலைமையில் இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்றுவோம். வெற்றிகளைக் குவித்து, சாதனைகளைப்  படைப்போம்.

அன்பன்,
ஆ. கோபண்ணா

The post நாற்பதாண்டு நண்பர் தலைவர் அழகிரி – ஆ. கோபண்ணா appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சளி, காய்ச்சல் கொரோனா அறிகுறியா?: மருத்துவர்கள் விளக்கம்
அன்புடையீர்,

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கொரோனா, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயின் உண்மை தன்மையை தெளிவுபடுத்துகிற வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தொலைக்காட்சி ஊடகங்கள் கொரோனா தொற்றுக் குறித்து பரபரப்பாக வெளியிட்ட செய்திகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் வளர்த்திருக்கிறது. மக்கள் தன்னம்பிக்கை இழந்து கொரோனா நோயை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போதோ, செல்பேசியில் பேசும் போதோ கொரோனா பற்றிய பேச்சே ஆக்கிரமித்து கொள்கிறது. கொரோனாக்கு தீர்வு காண நிறைய மருத்துவமுறைகள் கூறப்படுகின்றன. ஆனால், கொரோனா பற்றிய சரியான புரிதல் இன்று வரை பொதுமக்களுக்கு ஏற்படவில்லை.

இந்நிலையில் நம்பகதன்மை மிக்க பி.பி.சி நிறுவனம் கொரோனா குறித்து மிகத் தெளிவான ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரையை ‘இந்து’ குழுமத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் திரு என். ராம் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதை நான் ரீட்விட் செய்ததோடு, அக்கட்டுரையை மொழி பெயர்த்து தேசியமுரசு டாட் காமில் வெளியிட வேண்டுமென்று முடிவு செய்தேன். அதன்படி, பி.பி.சி. யில் வெளிவந்துள்ள கட்டுரையின் தமிழாக்கம் இங்கே வெளியிடப்படுகிறது. இக்கட்டுரை அச்சத்திலிருக்கும் மக்களுக்கு சரியான புரிதலையும், நம்பிக்கையையும் தரும் என்று நம்புகிறேன்.

பி.பி.சி. இல் வெளிவந்துள்ள கட்டுரையின் தமிழாக்கம்:

சளி, காய்ச்சல் மற்றும்  கொரோனாவுக்கு  வெவ்வேறு  வைரஸ்  காரணமாக இருந்தாலும், அறிகுறி ஒரே மாதிரியாகவே உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோருக்கு,  கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி இருக்கும்.

உடலில் அதிக வெப்பம்.

புதிதாகத் தொடர்ந்து இருமல் இருப்பது.

நுகர்தல் அல்லது சுவையில் மாற்றம் அல்லது இழப்பு.

எனவே, வரும் மாதங்களில் பின்பற்றவேண்டிய மற்ற விசயங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? காய்ச்சல் என்றாலே கொரோனா என்று அர்த்தமா?

உடலின் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37.8 சென்டிகிரேடுக்கு  மேல் இருப்பதையே குறிக்கிறது. ஏதாவது தொற்றுடன் உடல் போராடும்போது தான் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படும்.  கொரோனா வைரஸ் மட்டுமல்ல, பிற வைரசுகளுக்கும்  இதேதான் காரணமாக இருக்கிறது.

உடல் வெப்பநிலையை அளவிட  தெர்மாமீட்டரைப்  பயன்படுத்தலாம். இத்தகைய வசதி இல்லை என்றால், நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதிகளைத் தொட்டுப் பார்த்து வெப்பநிலையை அறிந்து கொள்ளலாம்.

காய்ச்சல், கொரோனா வைரஸ் போல் தோன்றினாலும், இது வேறு காய்ச்சலாகவோ அல்லது வெவ்வேறு தொற்றுகளாகவோ இருக்கலாம்.

இருமல் எப்படி வருகிறது?

உங்களுக்கு சளியோ அல்லது காய்ச்சலோ இருந்தால், மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து நிச்சயம் இருமலும் இருக்கும்.

வழக்கமாகக் காய்ச்சல் திடீரென வரும். உடல் வலி, குளிர், தலைவலி, அயர்வு, தொண்டை வலி, இருமலுடன் ஜலதோஷம் இருக்கும். கடும் சளியை விட மோசமானதாக இருக்கும்.

கொரோனா வைரஸ் என்றால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து இருமல் இருக்கும். 24 மணி நேரத்துக்குள் இதுபோன்று 3 அல்லது அதற்கு மேற்பட்ட தடவை  இருமல் வரும்.

தொடர்ந்து இருமல் இருந்தால், நீங்கள் கொரோனா வைரஸ்  பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

நுகர்தல் மற்றும் சுவையில் ஏற்படும் மாற்றம் என்றால் என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான முக்கிய அறிகுறி என்பதால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சளி அல்லது சாதாரண காய்ச்சலிலிருந்து கொரோனா  வைரசால் ஏற்படும் நுகர்தல் இழப்பு வித்தியாசமானதாக இருக்கும்.

கொரோனாவால் நுகரும் உணர்வை இழக்கும் போது, இறைச்சி மீது பெட்ரோல் வாசம் வரும்.

கொரோனா வைரசின் முக்கிய அறிகுறிகள்:

காய்ச்சல்                                             –    பொதுவானது

இருமல்                                                 –     பொதுவானது

சுவை, நுகரும் உணர்வு இழப்பு  –     உடனே

சோர்வு                                                  –     சில சமயங்களில்

தலைவலி                                             –    சில சமயங்களில்

மூக்கு ஒழுகுதல்                                –    எப்போதாவது

தொண்டை வலி                                –    எப்போதாவது

தும்மல்                                                  –    இருக்காது

குறைவான சுவாசம்                        –    சில சமயங்களில்

வயிற்றுப் போக்கு                            –    சில சமயங்களில்,        குறிப்பாகக் குழந்தைகளுக்கு.

தும்மல் இருந்தாலே கொரோனா வைரசா?

கொரோனா வைரசுக்குத் தும்மல் ஓர் அறிகுறி அல்ல. காய்ச்சல், இருமல் அல்லது நுகர்தல் மற்றும் சுவை இழப்பு இல்லாதவரைப்  பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கை, முகம், மற்றும் இடைவெளி ஆகியவை கொரோனா வைரஸ் மற்றும் மற்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க உதவுகின்றன.

தொடர்ந்து கைகளைக் கழுவ வேண்டும்

சமூக இடைவெளி சாத்தியம் இல்லாதபட்சத்தில், முகக்கவசம்  அணிய வேண்டும்.

உங்கள் குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்களிடம் இருந்து தொலைவில் இருக்க வேண்டும்.

மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு எவ்வாறு ஏற்படுகிறது?

குளிர்காலத்தில் பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகளுக்கும், வேலை பார்க்கும் இடங்களிலிருந்து வீட்டுக்குத் திரும்புவோருக்கும் சளி இருக்கும்.தொடர்ந்து மூக்கு ஒழுகினால், கொரோனா வைரஸ்  பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என  ஸ்காட்லாந்தின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவைக் கண்காணிக்கச் செயலியை பயன்படுத்தும் மக்கள் தெரிவித்துள்ள ஆலோசனையில்,  குழந்தைகளுக்குக் குறைந்த அளவில் சுவாசப் பிரச்சினை ஏற்படுவதாகவும், பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தோல் தடிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உடல் சுகவீனம் என்றால் என்ன?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெவ்வேறு வகையான அறிகுறிகள் தென்படுகின்றன. கொரோனா அறிகுறிகளில் சில இல்லாமல் இருந்தாலும், தொற்று இருக்கும்.

குறைந்தது 2 வாரங்களில் கொரோனா வைரசுக்கான அறிகுறி தெரியும். ஆனால், வழக்கமாக 5 நாட்களில் தெரியும்.

கொரோனா வைரஸ் பாதிப்பில், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதை உணரலாம்.

சுவாசிப்பதில் பிரச்சினை இருந்தால், மருத்துவரை இணையத்திலோ அல்லது நேரடியாகவோ சந்திக்கலாம்.

கொரோனாவை புரிந்து கொள்வோம்.
அச்சத்தைத் தவிர்ப்போம்.
நம்பிக்கையை வளர்ப்போம்.

அன்பன்
ஆ. கோபண்ணா

The post சளி, காய்ச்சல் கொரோனா அறிகுறியா?:  மருத்துவர்கள்  விளக்கம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்! வெற்றி கொள்வோம்! அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நம்பிக்கை!
இனிய நண்பர்களே,

மத்தியில் அமைந்த பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகவும், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றவும், தமிழக காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக வலிமைப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். இதனடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு 9 பொதுச் செயலாளர்களையும், 17 பொறுப்பாளர்களையும் மாநில வாரியாக நியமித்திருக்கிறார்.

இந்த நியமனத்தின் மூலமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா பொறுப்பாளராக கர்நாடக மாநில முன்னாள் பிரதேச காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த திரு. குண்டுராவ் அவர்களது மகன் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களை தமிழகத்தின் பொறுப்பாளராக நியமித்திருப்பது மிக மிக பொருத்தமானதாகும். தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தைச் சேர்ந்த திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் தமிழக அரசியலை நன்கு அறிந்தவர். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற காந்திநகர் தொகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாக்காளர்களாக உள்ளனர். அவர்களின் பேராதரவைப் பெற்றவராக திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் விளங்கி வருகிறார். அவரது நியமனத்திற்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சி புதிய பொலிவையும், வலிமையையும் பெறும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

அகில இந்திய காங்கிரசின் தமிழக பொறுப்பாளரான திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களை செப்டம்பர் 21 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. அழகிரி அவர்களுடன் சமீபத்தில் பெங்களுர் சென்று தமிழக காங்கிரஸ் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினோம். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி, செயல் தலைவர்கள் திரு. மயூரா ஜெயக்குமார், திரு. மோகன் குமாரமங்கலம் மற்றும் திரு. டி.என். முருகானந்தம், திரு. பொன். கிருஷ்ணமூர்த்தி, திரு. டி. செல்வம் ஆகியோருடன் இணைந்து நானும் சந்தித்து உரையாடினோம்.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த செப்டம்பர் 24, 25 ஆகிய இரு நாட்களில் சென்னைக்கு வருகை புரிந்து சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களோடு கலந்துரையாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் நாளான 24.9.2020 அன்று காலை 11 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அவரது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு செய்தியாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பும், ஆதரவும் இருந்தது.

அதைத் தொடர்ந்து மாலையில் காங்கிரஸ் கட்சியினரோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அடுத்தநாள் காலையிலும், மாலையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டங்களின் மூலம் தமிழக காங்கிரஸ் கட்சியினரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆரோக்கியமான உரையாடல் நடைபெற்று 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான செயல் திட்டம் வகுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநில முதலமைச்சர் வி. நாராயணசுவாமி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபோது.

வருகிற 2021 சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கும் இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளன. உடனடியாக தமிழக காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக சீரமைக்கிற பணியை மேற்கொள்கிற வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த முடிவின்படி, கட்சி சீரமைப்பு நடவடிக்கைகள் எடுத்து முடிந்த பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முதற்கட்டமாக வாக்குச்சாவடி குழுக்களை அமைப்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு தேர்தல் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது வாக்குச்சாவடி குழுக்கள் தான்.

தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10 உறுப்பினர்கள் உறுதி செய்யப்பட வேண்டும். அத்தகைய பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடிக்கப்பட வேண்டும். அதேபோல, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்படும். வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கப்பட்ட பிறகு கொள்கை பிரச்சார பாத யாத்திரைகள், தொகுதி அரசியல் மாநாடுகள் ஆகியவை நடத்தப்பட வேண்டுமென்று தலைவர் அழகிரி திட்டமிட்டிருக்கிறார். இதனை செயல்படுத்துவதற்கு திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறார்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை எதிர்த்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டு ராவ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது.

திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களுடைய வருகை தமிழக காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற வைத்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிற திரு. கே.எஸ். அழகிரி அவர்களைப் பற்றி திரு. தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்டு பேசும் போது, ‘பஞ்சாயத்து தலைவராக, பஞ்சாயத்து யூனியன் தலைவராக, இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, மக்களவை உறுப்பினராக, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக என, தமது கடுமையான உழைப்பின் மூலம் படிப்படியாக பதவிகளைப் பெற்று இன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக உயர்ந்திருக்கிறார் என்றார். நிறைந்த அரசியல் அனுபவமும், செயல் திறனும் உள்ளவராக இருப்பதை என்னாலே அறிய முடிகிறது. எந்த நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதில் மிகுந்த தெளிவுள்ளவராக அவர் இருக்கிறார். அவரது சிறப்பான தலைமையின் மூலம் தமிழக காங்கிரஸ் கட்சி நிச்சயம் வலிமை பெறும் என நம்புகிறேன்’ என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டார். அவரது உரை குழுமியிருந்த காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த கரவொலியையும், பேராதரவையும் பெற்றது. இதன்மூலம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மிகத் தெளிவான செய்தியை வழங்கியிருக்கிறார்.

“தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைவராக நியமிக்கப்பட்ட ஒருசில மாதங்களிலேயே அவர் விரைவில் மாற்றப்படுவார், புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற வதந்திகளை பரப்புவது காங்கிரஸ் கட்சியில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதவி வகிக்கிற திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் குறித்து இதுவரை, இத்தகைய வதந்திகள் வெளிவராமல் இருப்பதே தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் மிகப்பெரிய சாதனை” என்று அனுபவமும், ஆற்றலுமிக்க தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் ஆகியோர் குறிப்பிட்டது பலத்த கரவொலியையும், வரவேற்பையும் பெற்றது. இந்தப் பின்னணியில் செப்டம்பர் 25 ஆம் தேதி மாலை நடைபெற்ற கூட்டத்தில் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள், “வருகிற சட்டமன்றத் தேர்தலை தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களது தலைமையில் தான் சந்திக்கப் போகிறோம்” என்ற தெளிவுபடுத்தியது அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தை வழங்கியது. தமிழக காங்கிரசுக்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி ஏற்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிய சகாப்தத்தை திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் தொடங்கியிருக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டு ராவ் அவர்கள் சின்னமலையின் அமைந்துள்ள அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து பல கட்ட போராட்டத்தை தமிழக காங்கிரஸ் மேற்கொள்ள இருக்கிறது. இந்த போராட்டங்களின் மூலமாக விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிற பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், அதை எதிர்க்க துணிவற்ற அ.தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுகிற வகையிலும் தமிழக விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிற வகையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அறிவித்திருக்கிறார். இத்தகைய போராட்டங்களின் மூலம் விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் கிளர்ந்து எழுந்ததற்கு ஈடாக தமிழகத்திலும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதற்காக வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக மாவட்ட, வட்டார, நகரங்களில் நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, வடசென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

விவசாயிகளுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (24.09.2020) மாலை 7.07 மணிக்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக அத்துறையின் தலைவர் திரு ஜெ.எம்.எச். ஹசன் மௌலானா அவர்கள் தலைமையில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்த்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டு ராவ் எம்.எல்.ஏ., தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் திருமதி ஜெபி மேத்தர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், திரு சி.டி.மெய்யப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., திரு மயூரா எஸ்.ஜெயக்குமார், திரு மோகன் குமாரமங்கலம், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்! வெற்றி கொள்வோம்! அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நம்பிக்கை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த காங்கிரசுக்கு தேவை ராகுல் தலைமை! மதவாத சக்திகளை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்!
இனிய நண்பர்களே,

20 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்று 2004 இல் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் அன்னை சோனியா காந்தி. தம் மீது திணிக்கப்பட்ட பிரதமர் பதவியை மறுத்து அந்த பதவிக்கு தகுதியானவராக பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தியவர். அதன்மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று சாதனை படைத்தவர். காங்கிரஸ் தலைவராக அன்னை சோனியா காந்தியும், பிரதமராக மன்மோகன் சிங்கும் மிகுந்த நல்லிணக்கத்தோடு பணியாற்றியதால் மத்தியில் 10 ஆண்டுகாலம் நிலையான ஆட்சியை காங்கிரஸ் கட்சி வழங்கியது. இதற்கு கூட்டணி கட்சிகளும் ஒத்துழைத்தன. இத்தகைய சாதனைகளைப் படைத்தவர் அன்னை சோனியா காந்தி.

கடந்த 2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைமைப் பொறுப்பிலிருந்து ராகுல்காந்தி விலகுவதென முடிவெடுத்தார். அதைத் தொடர்ந்து  இடைக்கால தலைவராக அன்னை சோனியா காந்தி பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். உடல் நலிவுற்ற நிலையிலும் காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டுக்கோப்புடன் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய பெரும் சுமையை அவர் ஏற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்கிற வகையில் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட  23 பேர் கடிதம் எழுதினார்கள். காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால், 23 பேர் எழுதிய கடிதம் குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அன்னை சோனியா காந்தி தொடர்ந்து 6 மாதத்திற்கு தலைவராக நீடிக்கழ வேண்டுமென்று கோரினார்கள். அதற்குள்ளாக அகில இந்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு மீண்டும் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டுமென்கிற கருத்தையும் வலியுறுத்தினார்கள். கடிதத்தில் கையொப்பமிட்ட எவருக்கும் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் எந்த ஆதரவும் இல்லை.

மக்களவை தேர்தலை சந்திக்காமலேயே காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளைப் பெற்றவர்கள் காங்கிரஸ் தலைவருக்கு தேர்தல் நடத்த வேண்டுமேன்று கோரிக்கை விடுத்திருப்பது அனைவருக்கும் வியப்பாகவே இருந்தது. மக்கள் எவரை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர முடியும். சோனியா காந்தி தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதனால் காங்கிரசின் தலைவராக 20 ஆண்டுகாலம் தொடர்ந்து பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் செல்வாக்கு பெற்ற ராகுல்காந்தி தலைமை பொறுப்புக்கு வந்தார். ஆனால் 2019 மக்களவை தேர்தலில், ‘மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எவரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை, பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து தன்னந்தனியாக போராடினேன்’ என்று தமது கடிதத்தில் கூறி, காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார்.

தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலகினாலும், மீண்டும் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்த நேரத்தில் தான் 1998 இல் அன்னை சோனியா காந்தி பொறுப்பேற்றார். அதேபோல, உடல் நலிவுற்றிருக்கிற அன்னை சோனியா காந்தி வகிக்கிற தலைமை பொறுப்பை விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் என்பதே நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் விருப்பம் மட்டுமல்ல, பொதுமக்களின் விருப்பமும் கூட.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாக அமைப்பை அன்னை சோனியா காந்தி சீரமைத்திருக்கிறார். செயற்குழுவிற்கு 22 உறுப்பினர்களை நியமித்ததோடு, நிரந்தர அழைப்பாளர்களாக 26 பேரும், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு துணைபுரிகிற வகையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறும் வரை செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய சீரமைப்பு நடவடிக்கையின்படி பொதுச்செயலாளர்களாக 9 பேரும், மாநில பொறுப்பாளர்களாக 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா மாநில பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த கர்நாடக முதலமைச்சர் குண்டுராவ் அவர்களின் புதல்வராவார். இவர் ஏற்கனவே கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். கட்சி செயல்பாடுகளில் மிகுந்த அனுபவம் உடையவர். இவரது நியமனத்தின் மூலம் தமிழகத்தில் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமையும், புத்துணர்ச்சி பெறுகிற வகையில் இவரது வழிகாட்டுதல் துணைபுரியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  தமிழக காங்கிரஸ் கட்சியில் நிகழ்த்த வேண்டிய சீரமைப்புப் பணிகள் மிக விரைவாக நடத்தி முடிப்பதற்கு தினேஷ் குண்டுராவ் நியமனம் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, தமிழகத்தில் இருந்து தெலங்கானா மாநில பொறுப்பாளராக மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ஒரிசா மாநில பொறுப்பாளராக மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும்.

இந்தியாவை கடந்த 6 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையில் ஆண்டு கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகத்திற்கு விரோதமாக எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படுவதை முடக்குவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் மூலம் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. இதை எதிர்கொள்ள முடியாமல் மனஉளைச்சலில் காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட முடியாமல் முடங்கி விடுவார்கள் என்று பா.ஜ.க. கனவு காண்கிறது. ஆனால், பா.ஜ.க.வின் அடக்குமுறையை எதிர்த்து சிறை சென்ற டி.கே. சிவகுமார், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, கர்நாடகத்திலும் மத்தியபிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் வெற்றி பெறுவதை தடுக்கிற வகையில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் கடைபிடித்த உத்திகளின் அடிப்படையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுக் கொண்டால் மிகப்பெரிய எதிர்ப்பு சக்திகளின் வடிவமாக அவர் திகழ்ந்து விடுவார் என்று பா.ஜ.க. கருதுகிறது. அவர் தலைவராவதை தடுக்கும் வகையில் ஏதாவது ஒரு வகையில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை பா.ஜ.க. செய்து வருகிறது. இதற்கு ஊடகங்கள் துணை போகின்றன. காங்கிரஸ் தலைவர்களிடையே சந்தேகங்களையும், கருத்து வேறுபாடுகளையும் வளர்ப்பதற்கு கட்டுக்கதைகள் ஊடகங்கள் மூலமாக நாள்தோறும் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. பா.ஜ.க.வின் இத்தகைய காங்கிரசை முடக்கும் உத்திகளுக்கு வலு சேர்க்கின்ற வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலரே செயல்படுவது மிகுந்த வேதனையைத் தருகிறது. இத்தகைய நிலையை உருவாக்குகிற வகையில் செயல்படுகிறவர்களை காங்கிரஸ் கட்சியில் இருந்து களையெடுக்கப்படுகிற காலம் வெகு தொலைவில் இல்லை.

எனவே, 136 ஆண்டுகால பாரம்பரியமிக்க மகோன்னதமான காங்கிரஸ் பேரியக்கத்தை காப்பாற்றுவதற்கும், பா.ஜ.க. ஆட்சியை தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்கும் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும். அவர் பொறுப்பேற்பதில் ஒருசில மாதங்கள் காலதாமதம் ஆகலாம். ஆனால், காங்கிரஸ் தலைமையை ஏற்பதை அவர் தட்டிக்கழிக்க முடியாது. நேரு பாரம்பரியத்தில் வந்தவர்கள் இதுவரை நாட்டையும், காங்கிரஸ் கட்சியையும் காப்பாற்றுவதற்கு செய்த தியாகங்கள் வார்த்தைகளால் வடிக்க இயலாதவை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தியும் தங்களை பலியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உயிர்த் தியாகம் செய்த நேரு பாரம்பரியப் பின்னணியில் வளர்ந்த தலைவர் ராகுல்காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைமை பொறுப்பை என்றைக்கு ஏற்கிறாரோ, அதுவே பா.ஜ.க. ஆட்சிக்கு விடப்படுகிற சவாலாக அமையும். விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டு, ராகுல்காந்தி தலைமை ஏற்கிற மகிழ்ச்சியான காலம் விரைவில் வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

அன்பன்,
ஆ. கோபண்ணா

The post பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த காங்கிரசுக்கு தேவை ராகுல் தலைமை! மதவாத சக்திகளை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தலைவர் ராகுல் அவர்களே! தயக்கம் வேண்டாம்! காங்கிரஸ் தலைமை ஏற்க வாருங்கள்!
இனிய நண்பர்களே,

காங்கிரஸ் வரலாற்றில் மிக சோதனையான ஒரு காலகட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே முழுமையான அளவில் இயங்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் விரிவுபடுத்தப்பட்ட செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 24, திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அன்னை சோனியா காந்தி தலைமையில் காணொளிகாட்சி மூலமாக நடைபெற்றுள்ளது. இதில் 53 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டம் குறித்து, ஊடகங்களிலே பரபரப்பான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அன்னை சோனியா காந்தி தலைமை நீடிக்குமா ? புதிய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பங்கேற்பாரா? நேரு குடும்பத்தை தவிர்த்து வேறு எவராவது புதிய தலைவராக பொறுப்பேற்பார்களா ? என்கிற கேள்விகள் ஊடகங்கள் மூலமாக எழுப்பப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, முன்னணித் தலைவர்களாக கருதப்படுகிற குலாம்நபி ஆசாத், கபில்சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 பேர் அன்னை சோனியா காந்திக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி எழுதிய கடிதம் ஊடகங்களில் கசியவிட்டதுதான் முக்கிய காரணமாகும். இந்த கடிதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிற நேரத்தில் தொடர்ந்து நேரலையாக தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் முடங்கி விட்டதாகவும், கட்சித் தலைமையை முழுநேரமாக பணியாற்றக் கூடியவர் ஏற்க வேண்டும் என்கிற கருத்து அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அன்னை சோனியா காந்தி அவர்களை இக்கடிதம் மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் மத்திய அமைச்சர்களாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லாதவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாகவும் பதவி வகித்தவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களை விமர்சனம் செய்ததை காங்கிரஸ் கட்சியினர் எவரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அதன் காரணமாகத் தான் காங்கிரஸ் முதலமைச்சர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 50 செயற்குழு உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் சோனியா காந்தி தலைவராக நீடிக்க வேண்டும், அவரது உடல்நிலையைப் பொறுத்து காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்கிற வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று செயற்குழுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை ஏற்று உடனடியாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை கூட்டி, லட்சோபலட்சம் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்கிற வகையில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்கிற ஏகோபித்த முடிவிற்கு அவர் தம்முடைய விருப்பத்தை அவசியம் தெரிவிக்க வேண்டுமென எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கடந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஜூலை 2019 இல் தலைமை பொறுப்பிலிருந்து ராகுல்காந்தி விலகினார். கடந்த ஓராண்டு காலமாக தலைமைப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், பா.ஜ.க. அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக நாள்தோறும் கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார். ஏதோ ஒரு வகையில் நரேந்திர மோடியை எதிர்க்கிற தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டு வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்விலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரையை கேட்டவர்கள் காங்கிரஸ் தலைமையை ஏற்பதற்கு இவரை விட தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதை உறுதி செய்வார்கள். அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி ஆற்றிய உரை, நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து அனைவரையும் உற்சாகமடைய வைத்தது. மகாகவி பாரதியின் வரிகளில் சொல்வதென்றால் ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்று கூறியதோடு, இதன்மூலம் ‘பள்ளத்தில்விழுந்து கிடக்கும் குருடரெல்லாம் விழிபெற்று பதவி கொள்வர்’ என்று பாடியதைத் தான் இங்கு நினைவுகூற வேண்டியிருக்கிறது.

ராகுல் காந்தியின் உரையைக் கேட்ட 1600க்கும் மேற்பட்ட மாநாட்டுப் பிரதிநிதிகள் உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது உணர்ச்சிமிகு உரையைக் கேட்டவர்கள்  இவ்வுரையினால் எவரும் ஈர்க்காமல் இருக்க முடியாது என்று கூறுவது மிகவும் பொருத்தமானதாகும்.

நாட்டு மக்களிடம் ராகுல் காந்திக்குக் கிடைத்த வரவேற்பைச் சகித்துக்கொள்ளாத வகுப்புவாத, சீர்குலைவு சக்திகள் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூற முற்பட்டுள்ளன. வாரிசு அரசியலை காங்கிரஸ் கட்சி வளர்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 136 கோடி மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் வாரிசு அரசியல் எப்படிச் சாத்தியமாகும் என்பதை பார்க்க மறுக்கும் குதர்க்கவாதிகள் ஆதாரமற்ற, நியாயமற்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்பதரை ஆண்டுகள் சிறைக்குள் அடைப்பட்டுக் கிடந்த ஜவஹர்லால் நேருவைத்தான், மகாத்மா காந்தி ‘என்னுடைய வாரிசு என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும், ‘என்னுடைய வாரிசு ராஜாஜியோ, பட்டேலோ அல்ல’ என்று தெளிவு படுத்தினார். தொடர்ந்து காந்தியடிகள், ‘எனக்குப் பின்னால் என்னுடைய பாஷையை ஜவஹர்லால் நேருதான் பேசுவார்’ என்று அறிவித்தார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பிரதமராக 1947இல் ஜவஹர்லால் நேரு தேர்வு செய்யப்பட்டு 16 ஆண்டு காலம் அப்பொறுப்பிலிருந்து 1963இல் நம்மைவிட்டு பிரிந்தார்.

நேருவுக்குப் பிறகு யார்? என்று உலகமே எழுப்பிய கேள்விக்கு நேரு உயிரோடு இருந்தபோதே தெளிவான விடையைக் கொடுத்து விட்டுதான் சென்றார். அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமரா ஜர் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்களிடம் உடல் நலிவுற்று தமக்கு ஏதாவது நேர்ந்தால் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியைத் தேர்வு செய்யுங்கள்’ என்று சொல்லியிருந்தார். அதனடிப்படையில் பிரதமரானவர்தான் லால்பகதூர் சாஸ்திரி. ஆனால், துரதிருஷ்டவசமாக ரஷ்ய நாட்டில் தாஷ்கண்டில் திடீரென உடல்நலக் குறைவால் அவர் மரணமடைய நேரிட்டதால், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.

நேருவுக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கு விடை கண்ட காமராஜர்தான், லால்பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கும் விடை கண்டார். அவரது விடை தேடும் முயற்சியின் காரணமாகத் தான் நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமராகத் தேர்வு பெற்றார்.

அன்று இந்திராவைப் பிரதமராக்கியது காங்கிரஸ் தலைவர் காமராஜரே தவிர, நேரு அல்ல; தமக்குப்பின் பிரதமராக நேரு பரிந்துரை செய்தது லால்பகதூர் சாஸ்திரியைத் தானே தவிர, இந்திரா காந்தியை அல்ல! வரலாற்றின் உண்மை நிலை இவ்வாறு இருக்க, இதில் எங்கே இருக்கிறது வாரிசு அரசியல்? அதேபோல அன்னை இந்திரா படுகொலைக்குப் பிறகு பிரதமரானவர்தான் ராஜிவ் காந்தி. பிரதமர் பதவியேற்றவுடன் நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்து 543 இடங்களில் 414 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மக்களின் அமோக ஆதரவுடன்தான் பிரதமரானார் ராஜிவ் காந்தி. ராஜிவ் காந்தியை வெற்றி பெறச் செய்து பிரதமராக்கியது இந்திய ஜனநாயகமே தவிர, வேறல்ல. இதில் எங்கே இருக்கிறது வாரிசு அரசியல் ?

1991 இல் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் அரசியலே வேண்டாம் என்று 7 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நின்ற அன்னை சோனியாவுக்கு வாரிசு அரசியலில் நம்பிக்கை இருந்ததாக எவராவது கூற முடியுமா? தமது கணவர் ராஜிவ் காந்தி எந்த மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடினாரோ, அத்தகைய சக்திகள் 1998 இல் மத்தியில் ஆட்சி அமைத்ததும் நாட்டை மதவாத சக்திகளிடமிருந்து விடுவிக்க, காங்கிரஸ் தலைமையை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டவர்தான் அன்னை சோனியா.

அதேநேரத்தில், 2004 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தமக்கு அமோக ஆதரவு இருந்தும் பிரதமர் பதவியை மறுத்து, பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன் சிங்கை அப்பதவியில் அமர வைத்தவர் அன்னை சோனியா காந்தி.

இந்திய அரசியல் வரலாற்றில் அன்று காந்திஜி பதவியை மறுத்து பிரதமராக ஜவஹர்லால் நேருவைத் தேர்வு செய்தார். அதேபோல, சோனியா காந்தி பிரதமர் பதவியை மறுத்து டாக்டர் மன்மோகன் சிங்கைப் பிரதமராக்கினார்.

அன்று காந்தியடிகள் பதவியை மறுத்தார். அவரையொட்டி பதவியை மறுத்த பெருமை அன்னை சோனியாவுக்கே உண்டு. பதவி மறுப்பாளர்களை நமது நாடு என்றும் போற்றிப் பாராட்டி ஆதரித்து வருவது வரலாற்றுப் பெருமைமிக்க நிகழ்வுகளாகும்.

அன்னை சோனியாவின் தியாகப் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கிற வகையில் இளந்தலைவர் ராகுல் காந்தியும், பிரதமராக ராஜீவ்காந்தி பொறுப்பு வகித்த 1989 ஆம் ஆண்டிற்கு பிறகு 2014 வரை மத்திய காங்கிரஸ் ஆட்சியில் எந்த அமைச்சர் பதவியையும் ஏற்காமல் 25 ஆண்டுகளாகக் கட்சிப் பணியாற்றி, பயிற்சி பெற்ற சிறந்த தலைவராக உருவாகி இருக்கிறார். அதனால்தான் 135 ஆண்டு பாரம்பரிய பழமையான இந்திய தேசிய காங்கிரசுக்கு 50 வயது நிரம்பிய ராகுல்காந்தி அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரும், நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய சுதந்திர வரலாற்றில் வகுப்புவாத பா.ஜ.க., அசுர பலத்தோடு மக்களவையில் 303 இடங்களில் வெற்றி பெற்று மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை எதிர்க்கிற வல்லமையும், ஆற்றலும் மிக்கத் தலைவராக ராகுல்காந்தி விளங்கி வருகிறார். நரேந்திர மோடிக்கு மாற்று ராகுல்காந்தியே தவிர, வேறு எவரையும் இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்திய நாட்டிற்காக தங்களது வாழ்க்கையை மட்டுமல்ல, உயிரையும் தியாகம் செய்த பாரம்பரியத்திலிருந்து வந்த ராகுல்காந்திக்கு தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தக் கூடிய தகுதியும், திறமையும் இருக்கிறது.

கடந்த மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு தம்மை பொறுப்பாக்கிக் கொண்டு தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அவர் உழைத்ததைப் போல மற்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முழுமையாக உழைக்கவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. அதை வெளிப்படுத்துகிற வகையில் ‘தன்னந்தனியாக வகுப்புவாத பா.ஜ.க.வை தேர்தலில் எதிர்த்து போராடினேன்’ என்று தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டதில் நியாயம் இல்லை என்று கூற முடியாது. அவரது மன வருத்தத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை புரிந்து கொண்டு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடந்த ஓராண்டு காலத்தில் செயல்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக அன்னை சோனியா, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை விமர்சனம் செய்கிற வகையில் 23 பேர் கடிதம் எழுதி, ஊடகத்தில் வெளியிட்டது அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தியின் மனதை கடுமையாக புண்படுத்தியிருக்கிறது. இத்தகைய விமர்சனம் செய்தவர்களை எந்த காங்கிரஸ் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த கடிதம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்.

எனவே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினரின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிற நேரு பாரம்பரியத்தில் வந்த அன்னை சோனியாவும், தலைவர் ராகுலும் காங்கிரசை பாதுகாக்கிற வகையில் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும். காங்கிரசை காப்பாற்றுவதன் மூலம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி கொள்கைகளை பாதுகாத்து இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க தொடர்ந்து செயல்படுவதே அனைவரது எதிர்பார்ப்பாகும். இதை நிறைவேற்றுகிற வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும்.

தலைவர் ராகுல் அவர்களே! தயக்கம் வேண்டாம்! காங்கிரஸ் தலைமை ஏற்க வாருங்கள்!

அன்பன்,
ஆ. கோபண்ணா

The post தலைவர் ராகுல் அவர்களே! தயக்கம் வேண்டாம்! காங்கிரஸ் தலைமை ஏற்க வாருங்கள்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கின்னஸ் சாதனை படைத்த தமிழ்நாடு காங்கிரஸ்!
இனிய நண்பர்களே,

இந்திய விடுதலைப்  போராட்டத்திற்கு 1920 முதல் மகாத்மா காந்தி தலைமையேற்று சத்தியம், அகிம்சை என்ற தத்துவங்களின் அடிப்படையில், ‘சத்தியாகிரகம், ஒத்துழையாமை’ என்ற போராட்ட திட்டங்களை கடைப்பிடித்து  பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.  ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், இறுதியாக 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தப்பட்டு 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது.

இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு தான் பொறுப்பேற்கவேண்டும் என்று தேசப்பிதா காந்தியடிகள் எடுத்த முடிவின்படி முதல் பிரதமராக தேர்வு பெற்று மூவண்ண தேசிய கொடியை ஏற்றி வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். விடுதலைப்  போராட்ட காலத்தில் கைராட்டை பொறிக்கப்பட்ட மூவண்ணக் கொடியின் கீழ்தான் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மூவண்ணக் கொடியின் பெருமையை காக்க திருப்பூர் குமரனைப்போல் பலர்  போராடி உயிரை துறந்திருக்கிறார்கள். அந்த மூவண்ணக் கொடியில் இருந்த ராட்டைக்கு பதிலாக அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு இந்தியாவின் தேசியக் கொடியாக பிரதமர் நேரு அறிமுகப்படுத்தி விளக்கமான உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரநாளை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் இந்தியாவின் பிரதமர் கொடியேற்றுவது வழக்கமாகும். அந்த வகையில், 1947 முதல் 1963 வரை 16 முறை தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்றி சாதனை படைத்தவர் நவ இந்தியாவின் சிற்பி பிரதமர் நேரு.

மகாத்மா காந்தி அவர்களின் 150 வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாடுகிற தருணத்தில், அவரது நினைவை போற்றுகிற வகையில்  150 அடி உயரத்தில் சத்தியமூர்த்தி பவனில் கொடிக் கம்பம் அமைத்து தேசிய கொடியையும், காங்கிரஸ் கொடியையும் அதற்குரிய தருணங்களில் பட்டொளி வீசி பறக்க விடவேண்டும் என்று தலைவர் கே.எஸ்.அழகிரி விரும்பினார். அவரது விருப்பத்தின்படி கடந்த ஆண்டு செப்டம்பரில் 150 அடி உயர கொடிக் கம்பத்திற்கு அடிக்கல் நடப்பட்டது. அதற்கான விழாவில் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.

சர்வதேச தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 150 அடி உயர கொடிக் கம்பத்தை அமைக்கும் பணி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் ஆர்.மனோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணியை தமது சொந்த பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அனைவரும் பாராட்டுகிற வகையில் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.

தலைவர் ராகுல் காந்தி அவர்களை அழைத்து பிரம்மாண்டமான நிகழ்ச்சியின் மூலமாக 150 அடி உயரத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி பட்டொளி வீசி பறக்க செய்ய வேண்டும் என்று தலைவர் கே.எஸ்.அழகிரி தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் உள்ள பொது ஊரடங்கினால் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டதால் கொடியேற்று விழாவில் தலைவர் ராகுல் காந்தி அவர்களால் பங்கேற்க முடியவில்லை.  நீண்டகாலமாக 150 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு அதில் கொடி ஏற்றப்படாமல் இருப்பது குறித்து ஊடகங்களில் வெளிவந்த விமர்சனங்களுக்கு முடிவு கட்டவேண்டும் என்கிற வகையில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றி கோலாகலமான முறையில் விழாவை நடத்தவேண்டும் என்று தலைவர் அழகிரி முடிவெடுத்தார். அதன்படி நிகழ்ச்சி நிரல்கள் திட்டமிடப்பட்டன.

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் வாகா என்கிற இடத்தில் 367 அடி உயரத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. அதைப் போல,  இன்னும் இரு இடங்களில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. ஆனால் உலகத்திலேயே எந்த ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்திலும் 150 அடி உயரத்தில் கட்சிக் கொடிகள் பறக்கவிடப்பட்டதில்லை. இதன் அடிப்படையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக் கம்பத்தை அமைத்து தேசிய கொடியையும் காங்கிரஸ் கொடியையும் ஏற்றி உலக கின்னஸ் சாதனையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி படைத்திருக்கிறார். இதன்மூலம் உலக வரலாற்றிலும், காங்கிரஸ் வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகிற வகையில்  தலைவர் கே.எஸ்.அழகிரி புதிய சரித்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.

150 அடி உயரத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 30 அடி அகலம் 20 அடி உயரம் கொண்ட தேசியக்  கொடியை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் பொத்தானை அழுத்தியபோது கொடிக் கம்பத்தின் உச்சியை அடைவதற்கு 11 நிமிடங்கள் பிடித்தது. 150 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏறுகிறபோதும் உச்சியை அடைந்த பிறகு பட்டொளிவீசி பறப்பதைப்  பார்த்து பரவசமடைய ஆயிரம் கண்கள் வேண்டும். கொடிக் கம்பத்தை சுற்றி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் உணர்ச்சிப் பெருக்கோடு அண்ணாந்து பார்த்து ஆனந்த பரவசமடைந்தனர். அவர்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு மகிழ்ச்சியை அடைந்திருக்க மாட்டார்கள்.

தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றியது தேசியக் கொடியாக இருந்தாலும் அது காங்கிரஸ் கொடியிலிருந்து வடிவமைக்கப்பட்டதால் இரண்டையும் வேறுபடுத்தி தேசபக்தியுள்ளவர்கள் பார்க்க மாட்டார்கள். மூவண்ண ராட்டைக்கொடி விடுதலைக்காக போராடிய கொடி. அசோக சக்கரம் பொறித்த  சுதந்திர இந்தியாவின் கொடி. ஒரு நாட்டிற்கு அடையாளம் அரசியல் சாசனம்,கொடி, தேசிய கீதம் தான். அந்த வகையில் உலக நாடுகளால் நாம் யாரென்று அறிய நம் தேசிய கொடியே நமக்கு அடையாளம். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கொடியை  ஏற்றி, தலைவர் கே.எஸ்.அழகிரி  பார்போற்றும் சாதனையை செய்திருக்கிறார்.

நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை நமது கொடி குறித்து பல பாடல்களை உணர்ச்சிப் பெருக்கோடு இயற்றியுள்ளார். சுதந்திரப் போராட்ட காலத்தில் அந்த பாடல்களை பாடாத தேசபக்தர்களே இருந்ததில்லை. அதில் ‘கொடி பறக்குது’ என்ற தலைப்பில் அவர் பாடிய பாடலை, சென்னை தொலைக்காட்சிக்கு நான் தயாரித்து அளித்த ‘கொடியின் கதை’ என்ற ஆறு வார தொடருக்கு தொடக்கப் பாடலாக (Title Song) புகழேந்தி இசையில் பாடகர் மனோ பாட இடம்பெற செய்தேன்.

கொடி பறக்குது கொடி பறக்குது
கொடி பறக்குது பாரடா!
கோணலற்ற கோலில் எங்கள்
கொடி பறக்குது பாரடா!

சிறைகிடந்து துயரமடைந்த
தேசபக்தர் நட்டது
தீரவீர சூரரான
தெய்வபக்தர் தொட்டது

முறைகடந்து துன்பம்வந்து
மூண்டு விட்ட போதிலும்
முன்னிருந்து பின்னிடாமல்
காக்கவேண்டும் நாமிதை!

வீடிழந்து நாடலைந்து
வினையிழந்த நாளிலும்
விட்டிடாத தேசபக்தர்
கட்டிநின்று காத்தது

மாடிழந்து கன்றிழந்து
மனையிழக்க நேரினும்
மானமாக நாமுமிந்தக்
கொடியைக் காக்க வேண்டுமே!

மனமுவந்திங் குயிர்கொடுத்த
மானமுள்ள வீரர்கள்
மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது!

தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின்மானம் ஆன இந்தக்
கொடியையென்றும் தாங்குவோம்!

இந்த பாடல் இயற்றி 90 ஆண்டுகள் நெருங்குகிற இக்காலகட்டத்திலும் இதை படிக்கிறபோது உணர்ச்சி வயப்படாதவர்களே இருக்க முடியாது. இன்றைக்கும் உணர்ச்சியை தூண்டுகிற வகையில் அன்றே பாடல் எழுதிய நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மகாகவி பாரதியின் வரிகளின்படி 150 அடி உயரத்தில் “ஓங்கிவளர்ந்ததோர் கம்பம்! அதன் உச்சியில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்குது பாரீர்! கொடிக் கம்பத்தில் கீழ் நின்ற தேசிய வீரர் பெருந்திருக் கூட்டம் பார்த்து பரவசமடைவதை பாரீர்”. என்று போற்றுகிற அளவிற்கும் அந்த விழா சிறப்பாக அமைந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் டி.யசோதா, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன் மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், கே.வீரபாண்டியன் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உள்ளிட்ட   காங்கிரஸ் நிர்வாகிகள், துறைகளின் தலைவர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் எழுச்சிமிக்க உரை காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய வெளிச்சத்தையும், உணர்ச்சியையும் வழங்கியது. தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விரைவில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று உறுதிமிக்க குரலில் அவர் கூறினார். அதை அங்கே திரண்டிருந்த பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கரவொலி மூலம் வரவேற்றனர்.

வழக்கறிஞர் அணுகுண்டு ஆறுமுகம் மீண்டும் நூற்றுக்கணக்கானவர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைகிற விழா நடைபெற்றது. இவ்விழாவில், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தலைவர் அழகிரி வரவேற்றார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்துவதற்கு பொன்.கிருஷ்ணமூர்த்தி, டி.செல்வம், எம்.எஸ்.திரவியம் ஆகியோரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி கொடிக் கம்பத்தை சுற்றி சுவர் எழுப்பி அதில் பளிங்கு கற்கள் பதித்து கல்வெட்டில் பெயர்களை பொறித்து மிகச்  சிறப்பாக அமைக்கிற பணியை டி.செல்வம், எம்.எஸ்.திரவியம் ஆகியோர் செய்திருந்தனர். பொன் கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. மேலும் பான்ட் வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி  மிகச் சிறப்பாக அமைவதற்கு காரணமான  பொன்.கிருஷ்ணமூர்த்தி, டி.செல்வம், எம்.எஸ்.திரவியம் ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்.  சேவாதள தலைவர் குங்ப்பூ விஜயன் தலைமையில் சேவாதள அணிவகுப்பு மரியாதை ஏற்கப்பட்டது. அதேபோல சத்தியமூர்த்தி பவன் மேலே புதிய பெயர் பலகை பொலிவுடன் அமைக்கப்பட்டது. இதை சிறப்பாக வடிவமைத்த ஓவியர் இரா.ஜெயசீலன் அனைவரது பாராட்டையும் பெற்றார்.

அருமை நண்பர்களே,
தமிழக காங்கிரஸ் வரலாற்றில் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவன் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. உலக கின்னஸ் சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அனைவரும் ஒருங்கிணைந்து  கட்டுப்பாட்டோடு 10 மாதங்கள் கடுமையாக உழைத்தால், மே 2021 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் கட்சி சாதனைகளைப் படைக்கும். அதற்கான கால்கோல் விழாவாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

அன்பன்,
ஆ.கோபண்ணா

The post கின்னஸ் சாதனை படைத்த தமிழ்நாடு காங்கிரஸ்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் விழிப்புணர்வு பெறுமா?
இனிய நண்பர்களே,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளராக 58 வயது நிரம்பிய துடிப்புமிக்க அருமை நண்பர் ராஜீவ் தியாகி தமது வீட்டிலிருந்து தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்த செய்தி கேள்விபட்டதும் மிகுந்த மனஉளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பலமுறை சிரித்த முகத்துடன் அவர் வலம் வந்ததை பார்த்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்காக தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வினரோடு போராடியிருக்கிறார். பா.ஜ.க.வினரை கருத்து மோதலில் வீழ்த்துகிற ஆற்றல்மிக்கவராக அவர் விளங்கினார். ராஜிவ் தியாகி உயிரிழப்புக்கு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பாட்ராவும் ஆஜ் தக் நெறியாளரும்தான் பொறுப்பாகும். மறைந்த ராஜிவ் தியாகிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைநகர் தில்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகிக்கு நேர்ந்த சோகத்தைக் கண்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தோடு இருக்கின்றனர். தமிழகத்தில் தொலைக்காட்சி ஊடகங்களில் நடைபெறுகிற விவாதங்களில் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சி விவாதங்களில் வரம்புமீறி அநாகரீகமாக பேசுபவர்களை நெறியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில ஊடகங்களில் இத்தகைய சூடான விவாதங்களின் மூலம் டி.ஆர்.பி. ரேட்டிங் கூடுவதற்கு உதவுவதால் அதை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் ஊடக வெளிச்சம் பெற வேண்டும் என்பதற்காக அதில் பங்கேற்பவர்கள் எல்லாவிதமான அவமானங்களையும் தாங்கிக் கொள்வதற்கு ஒருசிலர் தயாராக உள்ளனர். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவரை ஒருவர் மிக தரக்குறைவான இழிவான வார்த்தைகளில் திட்டிக் கொண்டதை பார்த்த அனைவருமே முகம் சுளித்தனர். தமிழக தொலைக்காட்சி விவாதங்கள் படுபாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பது குறித்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது.

அக்காலகட்டங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர்களாக ஜென்ராம், மு. குணசேகரன், கார்த்திகைசெல்வன், கார்த்திகேயன், சிகாமணி, தியாகச்செம்மல், நெல்சன், விஜயன், செந்தில், ஹரிஹரன், அசோகவர்ஷினி போன்ற பலருடன் பங்கேற்று விவாதங்களை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளனர். இவர்களில் எவருமே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக எப்பொழுதுமே நான் கருதியது கிடையாது. புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் நிறைய கலந்து கொண்டிருக்கிறேன். அந்த விவாதங்கள் ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் நடைபெற்றதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அதேபோல, சன் நியூஸ், நியூஸ் 18, தந்தி டிவி, நியூஸ் 7 ஆகிய தொலைக்காட்சி விவாதங்களில் ஆரோக்கியமான விவாதங்களை நான் பார்த்திருக்கிறேன்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது 2004 முதல் 2014 வரை தொடர்ந்து பல்வேறு விவாதங்களில் பங்கேற்று வந்திருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின் மீது பா.ஜ.க. உள்ளிட்ட எவராவது குற்றச்சாட்டு எழுப்பினால் அதற்கு கோபப்படாமல் அமைதியாக, ஆதாரப்பூர்வமாக எனது வாதங்களின் மூலம் குற்றச்சாட்டுக்களை மறுத்து பேசியிருக்கிறேன். எந்த இடத்திலும் இந்தியாவை ஆளுகிற கட்சியைச் சேர்ந்தவன் என்கிற ஆணவத்தோடு ஒருநாள் கூட நான் விவாதத்தில் பேசியது கிடையாது.

என்னைப் பொறுத்தவரை தொலைக்காட்சி விவாதங்கள் என்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு கருத்து மோதலே தவிர, தனிப்பட்ட தாக்குதலுக்கு அங்கே இடமில்லை. அக்காலங்களில் தொலைக்காட்சி விவாதங்கள் முடிந்ததும் பங்கேற்ற பா.ஜ.க. உள்ளிட்ட நண்பர்களோடு சுமூகமாகவே நான் விடை பெற்றிருக்கிறேன். எவரிடத்திலும் பகை பாராட்டியது கிடையாது.

ஆனால், சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்கள் தரம் தாழ்ந்து தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்த காரணத்தினாலும், விவாதத்தில் பங்கேற்க தரம் குறைந்தவர்கள் அழைக்கப்படுவதாலும் காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும், கடந்த ஓராண்டு காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதை நான் தவிர்த்து வருகிறேன். ஒரு தொலைக்காட்சி விவாதம் என்று நான் அழைக்கப்பட்டால் அதற்காக குறிப்புகள் தயாரிக்க ஒருமணி நேரத்திற்கு மேலாக நான் செலவிடுவேன். அதற்கு பிறகு தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு மணி நேரம், பயண நேரம் ஒரு மணி நேரம் என ஏறத்தாழ மூன்று மணி நேரத்தை செலவழிக்க வேண்டிய நிலை இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக நமது கருத்துக்களை தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும், காங்கிரஸ் கொள்கைகளை நிலை நிறுத்த வேண்டும், விமர்சனங்களுக்கு எதிராக கேடயமாகவும், வாளாகவும் பணியாற்றி தமிழக மக்களின் பரவலான பாராட்டையும், அன்பையும் நான் பெற்றிருக்கிறேன். தமிழக தொலைக்காட்சி ஊடகங்களில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் ஆணவத்தோடு பேசுவதை பார்த்து வருகிறேன். அத்தகைய சூழலின் காரணமாக விவாதங்களில் கடும் மோதல் ஏற்படுகிறது. தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடைபெறுகிறது. இதைப் போன்ற தாக்குதலின் உச்சகட்டத்தினால் தான் இன்றைக்கு ராஜீவ் தியாகியை காங்கிரஸ் கட்சி இழந்திருக்கிறது. அதைப் போன்ற நிலை எவருக்கும் ஏற்படக் கூடாது.

எனவே, தொலைக்காட்சி விவாதங்களை சில நெறிமுறைகள், கட்டுப்பாடுகளோடு நடத்துவதற்கு தொலைக்காட்சி நெறியாளர்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். இதன்மூலமே தொலைக்காட்சி விவாதங்கள் ஆரோக்கியமாகவும், மக்கள் முகம் சுளிக்காத வகையிலும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். தொலைக்காட்சி விவாதங்களில் அதிகளவில் பங்கேற்றவன் என்ற முறையில் இதை உரிமையோடு கூற விரும்புகிறேன். ராஜீவ் தியாகியின் மரணத்தின் மூலம் அபாய சங்கு ஊதப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தொலைக்காட்சி ஊடகங்கள் விழிப்புணர்வு பெறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

அன்பன்,
ஆ. கோபண்ணா

The post தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் விழிப்புணர்வு பெறுமா? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சூட்டிய பெயர்கள் போதும்!
இனிய நண்பர்களே,

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று தொடங்கப்பட்ட desiyamurasu.com இணைய இதழில் நாள்தோறும் ஆதியின் கடிதம் எழுதவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் கடுமையான பணிச் சுமையின் காரணமாக ஆதியின் பதில்கள் எழுதுகிறபோது ஆதியின் கடிதம் எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால் தி.மு.கழக தலைவர் கலைஞர் அவர்கள் தமது 90 ஆவது வயதில் கூட முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு நாள் தோறும் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் 67 வயதான எனக்கு தொடர்ந்து எழுத முடியவில்லை. நாள்தோறும் ஆதியின் கடிதம் மூலமாக காங்கிரஸ் நண்பர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாட விரும்புகிறேன்.

இன்று காலையில் பத்திரிகைகளை படித்ததும் தமிழ்நாடு கலைப்பிரிவு தலைவர் அருமை நண்பர் சந்திரசேகர் கைபேசியில் தொடர்புகொண்டு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை வைப்பதென முதலமைச்சர் முடிவு செய்தது குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இப்பிரச்சினை குறித்து ஆதியின் கடிதம் மூலமாக கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

பொதுவாக தலைவர்களின் பெயரை சூட்டுவது தவறல்ல. நாடு விடுதலை அடைந்தவுடன் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்களின் பெயர் சாலைகள், பூங்காக்கள் புதிய நகரங்களுக்கு சூட்டப்பட்டன. அதற்கு பிறகு டாக்டர் அம்பேத்கார், தந்தை  பெரியார், முத்துராமலிங்க தேவர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோர் பெயர்கள் சூட்டப்பட்டன. இந்த பின்னணியில் இப்பிரச்சினையை பார்க்கிறபோது புதிதாக பெயர்கள் சூட்டுவது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் தருகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கொண்டு வந்ததாக முழு பூசணிக்காயை  சோற்றில் மறைக்கிற வகையில் உண்மைக்குப் புறம்பான கருத்தை கூறியிருக்கிறார். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு  கூட்டணி ஆட்சியின் முடிவால் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் நிதி உதவியுடன் ரூபாய் 14,600 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்பட்டன.  இன்றைய சூழலில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களை சூட்டுவது ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த’ கதையாகிவிடும் என தமிழக அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.

1977 ஆம் ஆண்டு  எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பல்கலைக்கழகங்கள், மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு அரசியல் கட்சித்  தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் பெயர் சூட்டப்பட்டது. அண்ணாவின் பெயரை திண்டுக்கல் மாவட்டத்திற்கும், பெரியார் பெயரை ஈரோடு மாவட்டத்திற்கும் சூட்டப்பட்டது. அப்பொழுதே அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அவரை பெயரை ஏன் சூட்டவில்லை என்று  சர்ச்சை எழுந்தது. அதில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு இருக்கிற தயக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. மேலும் போக்குவரத்து கழகத்திற்கு தலித் தலைவர் வீரன் சுந்தரலிங்கம் பெயர் சூட்டப்பட்ட போது அதற்கு எதிராக விருதுநகர், தேனி மாவட்டங்களில் கலவரம் ஏற்பட்டது. மேலும் இமானுவேல், புலித்தேவன் ஆகியோர் பெயரை சூட்டவேண்டும் என்று கோரிக்கையும் எழுப்பப்பட்டது. இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் தாயார் சத்தியா பெயரில் கூட போக்குவரத்துக்கழகத்துக்கு பெயர் சூட்டப்பட்டது.

பிற்காலத்தில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தபோது மோசமான விளைவுகளை உருவாக்குகிற வகையில் மாவட்டங்களுக்கு ஏற்கனவே சூட்டப்பட்டிருந்த பெயர்களை நீக்கிவிட்டு சில சமுதாய தலைவர்களின் பெயரை சூட்டினார். இதன்மூலம் வாக்கு வங்கியை விரிவுபடுத்திக்கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். அதேபோல போக்குவரத்துக் கழகங்களுக்கு சமுதாயத் தலைவர்களின் பெயரை சூட்டினார். இதனால் தென் மாவட்டங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் ஆணையை நிறைவேற்றுவதற்கு தடையாக  தேர்தல் வந்த நிலையில் பெயர் சூட்டுகிற ஆணைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்நிலையில், 1996 இல் கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்தபோது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றுக்கு கடந்த ஆட்சி காலத்தில் சூட்டப்பட்ட பெயர்களை நீக்குகின்ற முடிவை 01.01.1997 அன்று எடுத்து அறிவித்தார்.  இதன்மூலம் தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தார். தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் ஏற்பட வழிவகுத்தார்.

தற்போது முதலமைச்சர் எடப்பாடி பெயர் சூட்டுகிற அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஒரு கடிதத்தின் மூலம் பாரீஸ் என்ற பெயரை மாற்றி டாக்டர் அம்பேத்கார் பெயரையும், விமான நிலைய மெட்ரோ நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  பெயரையும் சூட்டவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்திருக்கிறார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் புதிய கோரிக்கைகளை முன்வைப்பதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பெயர்களை  சூட்டிய பிரச்சினைகளினால் தமிழகத்தில் எப்படி ஜாதிக் கலவரம் மூண்டதோ , அதே போல மீண்டும் அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை உருவாவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழி வகுத்திருக்கிறார். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சூழலில் தமிழகத்தில் பெயர் சூட்டும் பிரச்சினையால் புதிய கோரிக்கைகள் எழுவதற்கும், அது மறுக்கப்பட்டால் கடுமையான போராட்டங்கள் எழுவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், சர்வதேச விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரையும், மத்திய அரசு தான் சூட்டியது. இதேபோல பல விமான நிலையங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் சூட்ட ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. அப்படியே பெயர் சூட்டினாலும்  மக்கள் புழக்கத்திற்கு அந்த பெயர்கள் வராது. கோயம்பேடு மெட்ரோ என்று தான் கூப்பிடுவார்களே தவிர ஜெயலலிதா மெட்ரோ என்று கூப்பிடமாட்டார்கள். தமிழக மக்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டிருக்கிறபோது ஏற்கனவே ஊர்பெயர்களை சுத்த தமிழ் பெயர் என மாற்றுவதாக கூறி கடும் சர்ச்சைகளில் தமிழக அரசு சிக்கிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அந்த முயற்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த பின்னணியில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் சூட்டுகிற முயற்சியை தமிழக முதலமைச்சர் கைவிடுவது நல்லது. இதில் கவனம் செலுத்துவதை விட கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுகிற முயற்சியில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

The post சூட்டிய பெயர்கள் போதும்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஆதியின் கடிதம்
இனிய நண்பர்களே, வணக்கம்.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தமிழ்நாட்டில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,496.  சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,291. இதில் கவலை தருகிற விஷயம் என்னவென்றால் இறப்பு விகிதம் கூடிக்கொண்டே போவதுதான்.

மத்திய, மாநில அரசுகளின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள வேண்டிய சுகாதாரத்துறை மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாகும். ஆனால், நரேந்திர மோடி அரசு, முடிவுகளை எடுத்து மாநில அரசுகள் மீது திணித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளிடையே கொரோனாவை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த செயல்திட்டம் இல்லாத காரணத்தால் தமிழகத்தில் 0.8 சதவிகிதமாக இருந்த இறப்பு விகிதம் 1.4 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 500 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 60, 70 பேர் இறந்து போகின்றனர். தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,167. சென்னையில் மட்டும் 1,318.  இதனால், தமிழக மக்கள் அச்சம், பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா நோய் சென்னை மாநகரில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவினால் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் விளைவுகள் கடுமையாக இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.

தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்ட பிறகு, செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தோம். சுகாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் திறமையாக செயல்படக்கூடியவர். கொடுத்த பணியை வெற்றிகரமாக முடிப்பவர். ஆனால், சென்னை மண்டலத்தை பல பகுதிகளாக பிரித்து சில அமைச்சர்களிடம் பொறுப்பு ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. தொடக்கத்தில் வேகமாக பணியாற்றிய அமைச்சர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் அவர்களை களத்தில் பார்க்க முடியவில்லை. கொரோனாவை எதிர்கொள்ளவேண்டிய முழுப் பொறுப்பு சுகாதாரத்துறை செயலாளரிடம் குவிந்திருக்கிறது. அதனால், தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கும், சென்னை பெருநகர மாநகராட்சி சுகாதாரத்துறைக்கும் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

சென்னை பெருநகர மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடந்த ஜுன் 11 முதல் ஜுலை 5 வரை கொரோனா தொற்று காரணமாக இறந்த 290 பேர் மாநில இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. கடந்த மார்ச் முதல் ஜுன் 10 ஆம் தேதி வரை 256 பேரின் மரணம் ஏற்கனவே மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளது. ஆக மொத்தம் 546 பேரின் மரணம் மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படாதது தமிழக சுகாதாரத்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கு  ஒர் உதாரணமாகும். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை சேர்க்கிற போது தற்போதுள்ள இறப்பு விகிதம் 1.6 சதவிகிதத்திலிருந்து 2.3 சதவிகிதமாக உயர்ந்து விடுகிறது.

மேலும்  மரணமடைந்த 290 பேரது பெயர்கள் விடுபட்டது குறித்து உறுதி செய்ய சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை பல்வேறு இடங்களில் உள்ள சுடுகாடு, இடுகாடு ஆகியவற்றில் விசாரணை செய்தது. இதனையடுத்து,  290 மரணங்கள் ஜுன் 11 முதல் ஜுலை 5 வரை நிகழ்ந்ததாக தமிழக சுகாதாரத்துறைக்கு மாநகராட்சி மருத்துவ அதிகாரி உறுதிப் படுத்தி கடிதம் எழுதியிருக்கிறார். இந்த 290 பேரில் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா முதல் தொற்று மார்ச் மாதத்தில் ஒன்றாகவும், அடுத்த 61 நாளில் 5 ஆயிரமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 23 நாட்களில் 25 ஆயிரத்து 872 ஆக உயர்ந்தது. கடந்த 12 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த உயர்வுக்கு காரணம் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியதுதான் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 17 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரமாக உயர்ந்து இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்த நிலையில் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

பொது ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. மக்களிடையே இருக்கிற அச்சத்தைப் போக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை செய்வதற்கே அச்சப்படுகிற நிலையில் மக்கள் இருக்கிறார்கள். கொரோனா தொற்று சிகிச்சை மூலம் தீர்வு காணமுடியும் என்கிற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உரிய மருந்துகளை தமிழக அரசு இலவசமாக விநியோகம் செய்யவேண்டும். இதன்மூலம் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கமுடியும்.

கொரோனாவை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடுகளில் வியட்நாம் முதன்மை நிலையில் இருக்கிறது. சீன எல்லையில் அமைந்துள்ள ஏறத்தாழ 10 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 தான். இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. பொருளாதார வளர்ச்சி கூட 4.1 சதவிகிதமாக இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. வியட்நாமில் 10 ஆயிரம் பேருக்கு எட்டு மருத்துவர்கள் தான் உள்ளனர். ஆனால் இந்தியாவை விட அதிகமாக இருந்தாலும் 22 ஆக உள்ள பிரேசில் நாட்டை விடவும், 26 ஆக உள்ள அமெரிக்க நாட்டைவிடவும் வியட்நாமில் குறைவான மருத்துவர்கள் தான் உள்ளனர். அந்த வகையில் வியட்நாம் போன்ற நாடுகள் கொரோனாவை எதிர்கொண்டு வெற்றி பெறுகிற போது இந்தியாவினால் முடியாதது ஒன்றும் அல்ல.

கொரோனாவின் முதல் தொற்று மார்ச் மாதத்தில் கேரளாவில் தென்பட்டதும் தொலைநோக்குப் பார்வையுடன் உரிய நடவடிக்கைகளை எடுக்க மோடி அரசு தவறிவிட்டது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி 4 மணி நேர அவகாசத்தில் பொது ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். பணமதிப்பு நீக்கம் எப்படி முன் திட்டமிடல் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்டதோ, அதைப் போலவே பொது ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது.  பொது ஊரடங்கினால் வேலைவாய்ப்பிழந்த 13 கோடிக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும், குடியிருக்கிற இடத்தில் வாழ்வாதாரத்தை இழந்தும் அவர்கள் சந்தித்த துன்பத்திற்கு அளவேயில்லை. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி செய்யாத காரணத்தினால் நூற்றுக்கணக்கான மைல்கள் நெடுஞ்சாலைகளில் குடும்பத்தோடு மூட்டை, முடிச்சுகளை தலைகளில் சுமந்து கொண்டு அகதிகளைப் போல நடந்தே சென்றனர். இந்த நடைப் பயணத்தின் போது, விபத்து, மனஉளைச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக 160 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதைப்பற்றியெல்லாம் மோடி அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.

எனவே, கொரோனா தொற்று என்பது இந்தியாவை மட்டும் பாதிக்கிற நோயல்ல. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மத்திய,  மாநில அரசுகள் அறிவியல் ரீதியாக சிந்தித்து எவ்வளவு விரைவாக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப் படுகின்றதோ, அப்பொழுதுதான் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும்.

The post ஆதியின் கடிதம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.