ஆதியின் பதில் - தேசிய முரசு - Desiya Murasu

127 அரசு அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் யாருடையது? அமைச்சர்களுடையதா? அதிகாரிகளுடையதா? உண்மை தெரிந்தாக வேண்டும்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கட்டுக்கட்டாக பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளனவே ?

கடந்த இரண்டு மாதங்களில் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ. 6.96 கோடி ரொக்கமும், 7 கிலோ தங்கமும், 10 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மட்டும் ரூ. 25 லட்சம், மாசு கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டிலிருந்து ரூ. 3.25 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

தமிழகத்தில் அரசு அதிகாரிகளிடமும், அலுவலகத்திலும் எவ்வளவு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இது ஏதோ அதிகாரிகள் மட்டத்தில் நடப்பதாக யாரும் கருத முடியாது. இதற்கு மேலாக அமைச்சர்களின் ஆசியோடு, ஆதரவோடு தான் இத்தகைய லஞ்ச லாவண்யங்கள் நடைபெற முடியும். இதுவரை 33 அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இத்தகைய ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கிற அமைச்சர்கள் குறித்து விசாரிக்காமல் அதிகாரிகளிடம் விசாரிப்பதால் என்ன பயன் ஏற்படப் போகிறது ? தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் நடைபெற்று வருகிற அராஜக ஊழல் ஆட்சி அகற்றப்பட்டாலொழிய மக்களுக்கு விமோசனம் இல்லை.

15 நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 100 வரை பா.ஜ.க. அரசு உயர்த்தியிருக்கிறதே ?

மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்தது முதல் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது அதற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைப்பதில்லை. அதற்கு மாறாகக் கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை விலை ரூ. 72.42. இதில் மத்திய – மாநில அரசுகளின் வரி ரூ. 42.47. அதேபோல, டீசல் விற்பனை விலை ரூ. 82.34. இதில் மத்திய – மாநில அரசுகளின் வரி ரூ. 51.98. கலால் வரி விதிப்பின் மூலமாகக் கடந்த ஆறரை ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் ரூபாய் 9 லட்சம் கோடியை வருவாயாகப் பெற்றிருக்கிறது.

மக்கள் மீது சுமையைக் குறைக்க அன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஆண்டுதோறும் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் கோடி பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையைக் குறைப்பதற்காக மானியம் வழங்கியிருக்கிறது. ஆனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமை ஏற்றுகிற மக்கள் விரோத அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்.

மதுரைக்கு அருகில், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 2019 இல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லையே ?

எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தமிழக அரசு கையகப்படுத்திய 180 ஏக்கர் நிலத்தை இதுவரை மத்திய அரசிடம் வழங்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் அமையும் இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டதைத் தவிர, எந்த பணிகளும் நடைபெறவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஜப்பான் நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வருமா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளனவே ?

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இருந்த போது ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தார். இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினர் அவர்மீது இருபதிற்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளைத் தொடுத்தனர். இதை எதிர்கொள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் அடக்குமுறையை வீரத்துடன் எதிர்கொண்டவர் இளங்கோவன். அன்று தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் ஆதாரமில்லாத காரணத்தால் இன்றைக்கு நீதிமன்றங்கள் ரத்து செய்து வருகின்றன. இது தலைவர் ஈ.வி.கே.எஸ். அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சி அமைக்கப் போவதாக ரஜினியும், கமலும் கூறியிருக்கிறார்களே?

அ.தி.மு.க. வை நிறுவிய எம்.ஜி.ஆரின் ஆட்சி என்று கூறாமல், இன்றைய அ.தி.மு.க. வினர் அம்மாவின் ஆட்சி நடப்பதாகவே கூறுகிறார்கள். ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்கவே அ.தி.மு.க.வினர் அஞ்சி நடுங்கினார்கள் என்பதை எவரும் மறந்திட இயலாது. அ.தி.மு.க.வினரே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை மறந்துவிட்ட நிலையில் ரஜினியும், கமலும் அவர் மறைந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கிப்பிடிப்பது ஏனோ?

தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம் என்று கூறி புதிய அவதாரம் எடுத்திருக்கிற ரஜினிகாந்த் மனைவி மீது அவமதிப்பு வழக்குத் தொடுக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்திருக்கிறதே?

ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் சார்பாக நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்கள். இதில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான வாடகை பாக்கித்தொகை 1 கோடியே 99 லட்சம் ரூபாய். இதைச் செலுத்தத் தவறிய லதா ரஜினிகாந்த் மீது தான் அந்த இடத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தலையிட்டு கடுமையான நிலை எடுத்து எச்சரித்துள்ளது.

ஆஸ்ரம் பள்ளி இருக்கும் உரிமையாளருக்கு உரிய வாடகை செலுத்தாமல் சண்டித்தனம் செய்கிறவரை மனைவியாகப் பெற்றிருக்கிற ரஜினிகாந்த், ‘அதை மாத்துவோம் இதை மாத்துவோம்’ என்கிறாரே, எதை மாற்றப் போகிறார்? முதலில் மனைவியின் போக்கை மாற்றட்டும். பிறகு சமூகத்தை மாத்துவது குறித்து ரஜினி சிந்திப்பது நல்லது. ஊருக்கு உபதேசம் செய்கிற ரஜினி முதலில் தனது மனைவிக்கு செய்யட்டும்.

சமஸ்கிருத மொழியில் கட்டாயமாகச் செய்தி வாசிக்க வேண்டுமென்று மத்திய பா.ஜ.க. அரசின் பிரச்சார் பாரதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளதே?

கட்டாயமான சமஸ்கிருத ஒளிப்பரப்புக்கான உத்தரவு இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட மொழியை மத்திய பா.ஜ.க. அரசு திணிக்க முயல்வதை எவரும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கும் போது வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்? அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளைப் புறக்கணிப்பது நியாயமா? 14 ஆயிரம் பேர் மட்டுமே அறிந்த மொழிக்குக் கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்குவது அவசியம் தானா? சமஸ்கிருத கலாச்சாரத்தை இந்திய மக்கள் மீது திணிக்க முயலும் மோடி அரசின் சுயரூபம் வெளிப்பட்டு வருகிறது.

The post 127 அரசு அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் யாருடையது?  அமைச்சர்களுடையதா? அதிகாரிகளுடையதா?  உண்மை தெரிந்தாக வேண்டும். appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் பா.ஜ.க.அரசு! கொரோனா காலத்தில் 18 கோடி குடும்பங்களை பாதிக்கும் மோடி அரசின் கொடூர நடவடிக்கை!
சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்கிற முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறதே ?

மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் மானியமாக 26.12 கோடி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒரே விலை என்ற அடிப்படையில் முடிவு செய்திருக்கிறது. நடப்பு மாதத்தில் 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.594 ஆக உள்ளது. இந்த விலையானது மானிய சிலிண்டர், மானியம் இல்லாத சிலிண்டர் ஆகிய இரண்டிற்குமான ஒரே விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மானிய சிலிண்டர் வாடிக்கையாளர்களின் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படுவது இல்லை. விலையை ஒன்றாக வைத்ததன் மூலம்  வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறத

மத்திய அரசின் மானிய ரத்து முடிவால் 26.12 கோடி வாடிக்கையாளர்களில் 18 கோடி பேருக்கு மானியம் இனிமேல் கிடைக்காது. குறைந்த ஆண்டு வருமானம் பெறக் கூடிய 8 கோடி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் மத்திய அரசுக்கு மானியத்திற்கு என ஒதுக்கப்பட்டதில் ரூபாய் 20 ஆயிரம் கோடி வரை மிச்சமாகும் எனக் கூறப்படுகிறது. இத்தகைய போக்கு காரணமாக 18 கோடி சமையல் எரிவாயு மானியம் பெறுகிற குடும்பங்கள் குறிப்பாக, பெண்கள் பாதிக்கப்படுகிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் போராட வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநில அரசு ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியை தெலுங்கு மொழி வழியில் இருந்து ஆங்கில மொழி வழி கல்விமுறைக்கு மாற்றியதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறதே ?

ஆந்திர மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் அரசாணைக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ‘பிள்ளைகள் ஆங்கில வழி கல்வி முறையை பயில்வதிலும், அதன்மூலம் சிறப்பான வாய்ப்புகள் பெறுவதையுமே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதனால் தான் ஆந்திர அரசு இந்த முற்போக்கான கொள்கை முடிவை எடுத்திருக்கிறது’ என கூறப்பட்டிருந்தது.

பொதுவாக, தாய்மொழி வழிக் கல்வி தான் மிகச் சிறந்தது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. தமிழகத்தில் ஒரு காலத்தில் தமிழ் மொழி வழிக் கல்வி தான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை இருந்தது. ஆனால், கல்லூரி புதுமுக வகுப்பில் ஆங்கில வழி கல்விமுறை புகுத்தப்பட்டது. அதேபோல, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளும் ஆங்கில வழி கல்வி மூலமாகவே போதிக்கப்பட்டது. ஏறத்தாழ 11 ஆண்டுகாலம் தமிழ் வழியில் படித்து விட்டு, திடீரென கல்லூரி படிப்பை தொடங்கும் போது ஆங்கில வழிக் கல்வி புகுத்தியதன் விளைவாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் எண்ணிலடங்காதவை. அவர்களுடைய எதிர்காலம் என்பது ஆங்கில மொழியின் அடிப்படையில் தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் ஆங்கில மொழி கல்வியில் சிறப்பாக பயில முடியாத காரணத்தினால் அடைந்த பாதிப்புகளுக்கு அளவே இல்லை. அதனால் தான் தமிழகத்தில் தமிழ் வழி பாடத் திட்டத்தில் சேர்த்திட பெற்றோர் விரும்புவதில்லை.

பெரும்பாலான மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்ப்பதற்கு காரணமே ஆங்கில மொழி வழிக் கல்வி படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும், எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்று கருதுகிறார்கள். இத்தகைய எதார்த்த நிலையை புதிய கல்விக் கொள்கையை தயாரித்தவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை பார்க்கிற போது  மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. எனவே, எதார்த்தத்திற்கும், வாழ்க்கை நடைமுறைக்கும் தொடர்பில்லாமல் கல்வி முறை இருப்பது குறித்து ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ., டி. ராஜாசிங்கிற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்திருக்கிறதே ?

இந்தியாவில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முகநூல் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழில் வெளியான கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதை தேசிய முரசு டாட் காம் தமிழாக்கம் செய்து வெளியிட்டது. அக்கட்டுரையில் ராஜாசிங் பற்றிய குறிப்பும் இருந்தது. அந்த அடிப்படையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி முகநூல் நிறுவனத்திடம் புகார் கூறியது. அது தொடர்பாக நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதற்காக ராஜா சிங்கிற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்திருக்கிறது. அதேபோல, அபாயகரமானவர்கள் பட்டியலில் ராஜாசிங் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதைவிட ஒரு அவமானம் பா.ஜ.க.விற்கு இருக்க முடியாது.

தெலங்கானா மாநில சட்டமன்ற உறுப்பினரான டி. ராஜாசிங் தமது முகநூல் பதிவில், ‘முஸ்லீம்கள் அனைவரும் துரோகிகள். ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் சுட்டுத் தள்ள வேண்டும்’ என்று கூறி, மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கிற வகையில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
அந்த வகையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவும் முகநூலில் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கிற வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவரது பதிவுகளுக்கு முகநூல் நிறுவனம் தடை விதிக்க வேண்டும். அத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் தமிழகத்தின் அமைதி சீர்குலைந்து விடும் என்பதை முதலமைச்சர் எடப்பாடி சிந்திக்க வேண்டும்.

சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு என அனைத்து நாளேடுகளிலும் பிரதானமாக செய்தி வெளிவந்துள்ளதே ?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை அளிக்கப்பட்ட போது ஜெயலலிதா உயிரோடு இல்லை. ஆனால், சசிகலாவும், மற்றவர்களும் பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சிறையில் இருந்து வெளிவருகிற செய்தியை நாளேடுகள் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன என தெரியவில்லை. இந்திய விடுதலைக்காக செக்கிழுத்த வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாள் செப்டம்பர் 5. அவரைப் பற்றி ஒரு நாளேடு தவிர மற்ற எதிலும் எந்த குறிப்பும் இல்லை. ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரின் விடுதலை குறித்து இவ்வளவு முக்கியத்துவம் வழங்குவது எந்த வகை பத்திரிகை தர்மம் ?

கடன் தவணை செலுத்துபவர்களை வாராக் கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே ?

வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களின் மாத தவணையை கொரோனாவால் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதைமீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடமிருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகக் கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதில் மத்திய அரசின் போக்கை கடுமையாக கண்டித்திருக்கிறது.  மத்திய அரசின் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, ‘வங்கித் துறை, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அதை வலுவிழக்கக் செய்யக் கூடாது, வங்கிக் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது, சில தளர்வுகளை அளிக்கலாமே தவிர, விவசாயக் கடன் உள்ளிட்டவற்றிற்கு தவணைக்கு அவகாசம் வழங்க முடியுமே தவிர, வட்டியை தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை’ என்று கூறியது செய்தியாக வெளிவந்துள்ளது. கொரோனாவினால் மக்களும், தொழில் நிறுவனங்களும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிற வேளையில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக உள்ளது. ஆனால், மத்திய அரசு கடனுக்கான வட்டி செலுத்துவதை தள்ளி வைக்க முடியுமே தவிர, தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறியது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு நிவாரணங்களை வழங்கலாம். கொரோனா என்பது எவரும் எதிர்பார்க்காதது. இத்தகைய பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூபாய் 3 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், இதுவரை அதில் 36 சதவிகிதமான ரூபாய் 1.11 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டிருக்கிறது. வங்கிகளின் கடுமையான நிபந்தனை காரணமாக மீதி நிவாரணத் தொகையை பெற முடியவில்லை. கொரோனா நோயை விட கொடுமையான அணுகுமுறையை மத்திய நிதியமைச்சகம் கையாண்டு வருவதால் அனைத்து தொழில்களும் நலிவடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பலமுறை குற்றச்சாட்டாக கூறியும், மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக உரையாற்றியதற்காக டாக்டர் கஃபீல்கானை பணியில் இருந்து யோகி ஆதித்யநாத் அரசு தற்காலிக நீக்கம் செய்திருக்கிறதே ?

டாக்டர் கஃபீல்கான் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் உரையாற்றியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி யோகி ஆதித்யநாத் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பேச்சில் எந்தவிதமான தேசவிரோதமான கருத்துக்களும் இல்லை என்று கூறி, 7 மாதத்திற்கு பிறகு அலகாபாத் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இது பேச்சுரிமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்
ஏற்கனவே கோரக்பூர் மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக  பணி செய்த அவரை உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு தற்காலிக பணி நீக்கம் செய்து பழிவாங்கியது. தற்போது சிறையில் இருந்து விடுதலை பெற்ற அவர், பணியில் திரும்பவும் சேர்த்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் ஆதித்யநாத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். இல்லையெனில், உயர்நீதிமன்றத்தை நாடுவதென முடிவு செய்திருக்கிறார்.

உத்தரபிரதேச பா.ஜ.க. அரசால் பழிவாங்கப்பட்ட டாக்டர் கஃபீல்கான் அவர்களது தாய், மனைவி ஆகியோரிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள், டாக்டர் கஃபீல்கானோடு நீங்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகை புரிந்தால் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உறுதி கூறுகிறேன் என்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை ஏற்று டாக்டர் கஃபீல்கான் உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது ஜெய்பூரில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் பாதுகாப்பில் தங்கி உள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்கிற நிலையில் பிரியங்கா காந்தி இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏறத்தாழ 2.5 கோடி இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் பா.ஜ.க. அரசில் டாக்டர் கஃபீல்கான் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னால், நமது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ? ஆனால், நீதியும், நியாயமும் டாக்டர் கஃபீல்கான் பக்கம் இருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.

The post சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் பா.ஜ.க.அரசு! கொரோனா காலத்தில் 18 கோடி  குடும்பங்களை பாதிக்கும் மோடி அரசின் கொடூர நடவடிக்கை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

வங்கிக் கடன் தவணையை நிறுத்தி வைக்கப்பட்ட காலத்தில் வட்டியை வசூலிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்! பிரதமர் கிசான் திட்டத்தில் ரூபாய் 1000 கோடி முறைகேடு!
வங்கிக் கடன் தவணையை நிறுத்தி வைக்கப்பட்ட காலத்திற்கும் வங்கிகள் விதித்த வட்டியை வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியிருக்கிறதே ?

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் பொது முடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணையை வசூலிப்பதை மார்ச் முதல் மே வரை மூன்று மாதங்கள் வங்கிகள் நிறுத்தி வைப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. மேலும், ஆகஸ்ட் வரை மூன்று மாதங்கள் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த ஆறு  மாத தவணைகளும் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், நிறுத்தி வைப்பு காலத்திற்கு உரிய வட்டியும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன.

இதன்மூலம் கடனுக்கான மாதத் தவணையில் அசலுடன் வட்டியையும் சேர்த்து தான் வங்கிகள் வசூலிக்கின்றன. வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ‘கடன் பெற்றவர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தீர்வு காண வேண்டும், ரிசர்வ் வங்கியை காரணம் காட்டி மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது, ரிசர்வ் வங்கியின் பின்னால் மத்திய அரசு ஒளியக் கூடாது, இது தொடர்பாக ஒரு வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தன. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மத்திய அரசு எவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

பிரதமர் கிசான் திட்டத்தில் ரூபாய் 1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வெளி வந்திருக்கிறதே ?

விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கிசான் திட்டத்தை பிரதமர் மோடி 2018 டிசம்பரில் அறிவித்தார். ஒவ்வொரு ஏழை விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூபாய் 6,000 வங்கிக் கணக்கில் மூன்று தவணையாக தலா ரூபாய் 2,000 என வரவு வைக்கப்பட்டது. இதில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் போலி பயனாளிகள் முறைகேடாக பணம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூபாய் 1,000 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, தமிழக வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 20 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ரகசிய வங்கி குறியீட்டு எண்ணை பயன்படுத்தி 38,000 போலி விவசாயிகளின் பெயரில் வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, முறைகேடு நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் சில உயர் அதிகாரிகளும் சம்மந்தப்பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் இன்னும் பல மாவட்டங்களில் நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டர் முறைகேட்டிற்கு ஒத்துழைக்க மறுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதே ?

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், தமிழ்நாடு பைபர் நெட் கழகத் தலைவராகவும் பதவி வகித்தவர் சந்தோஷ் பாபு, ஐ.ஏ.எஸ். இவர் பதவி வகித்த காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தும் மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.1815 கோடி ஒதுக்கியது. தமிழகத்தில் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். அதற்கு கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி ரூ.2,000 கோடி மதிப்பில் டெண்டர் அறிவிப்பு வெளியானது.

தமிழக மூத்த அமைச்சர் ஒருவரின் நெருங்கிய நிறுவனத்திற்கு டெண்டர் அளிப்பதற்காக டெண்டர் விதிகளை தளர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபுவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், டெண்டரில் திருத்தம் செய்ய அவர் மறுத்து விட்டார். இதில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து மத்திய அரசின் தலையீட்டின் பேரில் பாரத் நெட் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தற்போது, இந்த பிரச்சினையில் சந்தோஷ் பாபு, ஐ.ஏ.எஸ். ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைச்சர்களுக்கு இசைவாக, ஊழலுக்கு துணை போகிற வகையில் தான் பெரும்பாலானவர்கள் செயல்படுவார்கள். ஆனால், அவர்களுக்கு விதிவிலக்காக துணிச்சலுடன் தமது பதவியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபுவை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது ஏன் ?

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 480 இல் இருந்தது, 458 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 73 ஆயிரத்து 360 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால், இந்த ஆண்டு 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 மாணவர்கள் தான் விண்ணப்பம் செய்துள்ளனர். இறுதி எண்ணிக்கையில் மேலும் இது குறையும் என்று தெரிகிறது.

அதனால் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர, கல்வியின் தரம் கூடவில்லை. இதற்கு காரணம் சில பொறியியல் கல்லூரிகளைத் தவிர பெரும்பாலான கல்லூரிகளால் வணிக நோக்குடன் இதை ஒரு தொழிலாகவே நடத்தப்படுகிறது. அதனால், லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்களில் உணவு டெலிவரி பணியில் ஈடுபடுகிற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை. அதனால் வேலை வாய்ப்பும் இல்லை.

புதிய கல்விக் கொள்கை ஏற்கனவே நடைமுறையில் இருந்த கல்வி முறையை முற்றிலும் மாற்றி அமைக்கிற வகையில் அமைந்துள்ளதே ?

அரசமைப்புச் சட்ட உறுப்பு 45-ன்படி 6 வயது முதல் கல்வி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. அதேபோல, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. இதில் தொடக்க கல்வி 5 ஆண்டுகளும், அதையொட்டி பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் கல்வி பயிலுகிற முறை இருந்தது. ஆனால், இந்த முறைகளை முற்றிலும் புரட்டி போட்டு விட்டு, அதிரடியாக 3 வயது முதல் பள்ளியில் சேர்த்து பாடங்களை போதிக்கிற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 6 வயது 3 வயதாக குறைக்கப்பட்டுள்ளது. இது 1966 இல் கோத்தாரி குழு வழங்கிய பரிந்துரைகளுக்கு நேர் எதிராக இருக்கிறது. இக்குழு 10 பிளஸ்  2 என்ற முறையை அமல்படுத்தியது. அதற்கு மாறாக, தற்பொழுது 5 பிளஸ்  3 பிளஸ் 4 என்கிற முறையை புகுத்தியிருக்கிறது. இதில் 3 வயதில் தொடங்கி 5-வது வகுப்பு வரையிலும், பிறகு, 3 ஆண்டுகள், தொடர்ந்து 4 ஆண்டுகள் என கல்வி முறையை புகுத்துகிறது. ஒரு குழந்தையின் இளமைப் பருவத்தில் 3 வயதிலேயே பள்ளியில் சேர்ப்பது பெற்றோருக்கு எவ்வளவு சுமையாக இருக்கும் என்பதை பாஜ.க. ஆட்சியாளர்கள் உணருவதாக தெரியவில்லை. பொதுவாக, புதிய கல்விக் கொள்கை என்பது கிராமப்புற மாணவர்களையும், ஏழை, எளியோர்களையும் புறக்கணிக்கிற கொள்கையாகவே இருக்கிறது.

நடப்பு ஆண்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மோசடிகள் அதிகரித்துள்ளதே ?

முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் மட்டும் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதன் ரூபாய் மதிப்பு 159 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.  இந்த மோசடிகள் குறித்து ஆர்.பி.ஐ. தகவலின்படி 50 நிறுவனங்கள் 76 சதவிகித மோசடிகளை செய்துள்ளன. இதனுடைய மதிப்பு மொத்த மோசடியில் 98 சதவிகிதமாகும். இந்த வகையில், ஏற்கனவே வங்கி மோசடிகளில் ஈடுபட்ட நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா போன்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டார்கள். தற்போது மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கப் போகிறதா ? அல்லது வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல பாஸ்போர்ட் அனுமதி வழங்கப் போகிறதா ?

தமிழ்நாட்டில் இரண்டாவது, மூன்றாவது தலைநகரமாக மதுரையும், திருச்சியும் வருவதற்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறதே ?

கொரோனா தொற்றில் சிக்கி பொருளாதாரப் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிற மக்களின் பிரச்சினையை தீர்ப்பதை விட்டுவிட்டு இத்தகைய தலைநகர் பிரச்சினைகள் அவசியமா என தெரியவில்லை. ஏற்கனவே ஆந்திரபிரதேச மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் புதிய தலைநகரமாக அமராவதி பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா பாணியில் பழிவாங்கும் அரசியல் மேற்கொள்கிற ஜெகன்மோகன் ரெட்டி, அமராவதி மட்டும் தலைநகரமாக இல்லாமல் கர்னூல், விசாகப்பட்டிணத்தையும் கூடுதல் தலைநகரங்களாக உருவாக்குவதற்கு திட்;டமிட்டார். ஆனால், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தற்போது இருக்கும் நிலை தொடர வேண்டும் என்று புதிய தலைநகரம் உருவாக்கும் முயற்சிக்கு தடை விதித்திருக்கிறது.  இந்த தடையை நீக்க உச்சநீதிமன்றமும் மறுத்து வருகிறது. மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக முதலமைச்சராக வந்தவர்கள் அதில் கவனம் செலுத்தாமல் புதிய தலைநகரங்களை உருவாக்குவதனால் என்ன பயன் ஏற்படப் போகிறது ? ஏற்கனவே சிக்கலில் இருக்கிற நிர்வாகம் மேலும் இடியாப்ப சிக்கலாக மாறுவதற்குத் தான் இந்த தலைநகர் மாற்றங்கள் பயன்படும்.

ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு 50 சதவிகித வரம்பு இருப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதே ?

1992 ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்திரா சகானி வழக்கில் மொத்த இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேலே செல்லக் கூடாது என்று வரம்பு விதித்தது. கடந்த 30 ஆண்டுகளாக 50 சதவிகித வரம்பு இருந்தாலும் தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களில் 50 சதவிகித வரம்பை மீறி, இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. பின்தங்கிய சமுதாயத்தினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்பது தான் நியாயமானதாகும். அதற்கு மாறாக நீதிமன்றங்கள் 50 சதவிகித வரம்பில் கடுமையாக இருப்பது சமூகநீதிக்கு எதிரானதாகும்.

The post வங்கிக் கடன் தவணையை நிறுத்தி வைக்கப்பட்ட காலத்தில் வட்டியை வசூலிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்! பிரதமர் கிசான் திட்டத்தில் ரூபாய் 1000 கோடி முறைகேடு! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அன்னை சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 பேர் யார், யார்? கடிதம் எழுதியவர்களின் நோக்கம் என்ன?
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 பேர் யார், யார் ?

குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சசிதரூர், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், பி.ஜே. குரியன், ரேணுகா சவுத்ரி, மிலிந்த் தியோரா, அஜய் சிங், தன்கா, ஜிதின் பிரசாதா, புபீந்தர் சிங் ஹூடா, ராஜேந்தர் கவுல் பட்டால், வீரப்ப மொய்லி, ப்ரித்விராஜ் சவுகான், ராஜ்பப்பர், அர்விந்தர் சிங் லவ்லி, கௌல்சிங் தாகூர், அகிலேஷ் சிங், குல்தீப் சர்மா, யோகானந்த் சாஸ்திரி, சந்திப் தீக்ஷித் ஆகியோரே அந்த 23 பேர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நீண்டகாலமாக மாநிலங்களவை உறுப்பினர்களாகவும், மத்திய அமைச்சர்களாகவும் பணியாற்றியவர்கள். அன்னை சோனியாவின் கருணையால் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள்.

கொரோனா தொற்று இருக்கிற சூழலில், அன்னை சோனியா உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நேரத்தில், அவரை புண்படுத்துகிற வகையில் 23 பேர் கடிதம் எழுதியதை எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கடிதம் எழுதியதை விட அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டு தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு 23 பேர் கடிதம் உதவியிருக்கிறது. இதைத் தவிர, காங்கிரஸ் கட்சிக்கு இந்த கடிதத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. இந்த கடிதத்தை எழுதுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

கடந்த ஓராண்டு காலத்தில் கட்சி வளர்ச்சிக்கு இவர்களது பங்களிப்பு என்ன என்பதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். அமரர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த அன்னை சோனியா காந்தியை வலியுறுத்தி அழைத்து வந்து, காங்கிரஸ் தலைமையை ஏற்க வைத்து, மத்தியில் பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி அமைந்து, அதில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, உடல் நலிவுற்றிருக்கிற நேரத்தில் இப்படி ஒரு கடிதம் எழுதலாமா ? கடிதம் எழுதுவதில் ஏன் இந்த அவசரம்?

அன்று காங்கிரஸ் தலைமையை சோனியா காந்தி ஏற்க மறுத்திருந்தால், இன்று காங்கிரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதை 23 தலைவர்களும் அமைதியாக, மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை வழங்குகிற உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்பத் திரும்ப ஒத்தி வைப்பது ஏன் ?

நாடு முழுவதும் ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கிறார்கள். அவரது துணிவை பாராட்டுகிறார்கள். அதற்கு காரணம் அவர் ஒரு நேர்மையான போராளி. இந்தப் பின்னணியில் தான், பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கிக் கொண்டு வருகிறது. ஆனால், பிரசாந்த் பூஷன், ‘நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, எனது மனசாட்சிப்படி நான் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை’ என்று துணிவுடன் கூறியிருக்கிறார். இதையொட்டி அவருக்கு தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் தயங்குகிறது என்பதையே வழக்கு ஒத்திவைப்புகள் உணர்த்துகின்றன.

தி.மு. கழக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதே ?

கடந்த 2013 இல் தடை விதிக்கப்பட்ட குட்கா, தமிழகத்தில் பரவலாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. இதுகுறித்து 2017 இல் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்தன. குட்கா தொழிலில் ஈடுபட்டுள்ள மாதவராவ் சம்மந்தப்பட்ட 30  இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், ரூபாய் 250 கோடி வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், காவல்துறை தலைமை அதிகாரி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் தமிழக அமைச்சர் பி.வி. ரமணா மற்றும் சில சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. மேலும், வருமான வரி சோதனையில் சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு ரூ.39.91 கோடி வழங்கியதற்கான ஆதாரங்களும் சிக்கின. ஆனால், 20 மாதங்களாக சி.பி.ஐ. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதில் பா.ஜ.க.வின் தலையீடு இருக்குமோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.

இந்தப் பின்னணியில் தான் தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை தடுக்கப்படவில்லை என்பதை அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு உணர்த்துகிற வகையில் எதிர்கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்கள் குட்கா போதைப் பொருளை சட்டப் பேரவைக்குள் கொண்டு வந்து சபாநாயகர் முன்னிலையில் காட்டினார்கள். இது அவை உரிமையை மீறுவதாக கூறி 21 எம்.எல்.ஏக்கள் மீது நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதை உயர்நீதிமன்றம் செல்லாது என அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அ.தி.மு.க.வின் பழிவாங்கும் செயலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முடிவு கட்டியிருக்கிறது.

மத்திய அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு ரத்து செய்ய மறுப்பது ஏன் ?

இ-பாஸ் முறை தொடருவதால் ஆளுங்கட்சி இடைத் தரகர்களின் வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த அ.தி.மு.க. அரசு முன்வராதது வியப்பொன்றும் இல்லை.

டி.டி.வி. தினகரன் சமீபகாலமாக எங்குமே தென்படவில்லையே ஏன் ?

தொலைக்காட்சி ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதில் வல்லவராக விளங்கிய டி.டி.வி. தினகரன் 150 நாட்களுக்கும் மேலாக எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. தம்மை தேர்ந்தெடுத்த ஆர்.கே. நகர் தொகுதியைக் கூட எட்டிப் பார்க்கவில்லை. ஒருவேளை கொரோனா பயத்தினால் தம்மை பாதுகாத்துக் கொள்ள வீட்டிற்குள் முடங்கி இருக்கிறாரோ என்னவோ ? ஒருவேளை சசிகலா விடுதலைக்கு வியூகம் வகுக்கிறாரா ? யாம் அறியோம் பராபரமே!

உச்சநீதிமன்றத்திற்கு பாராட்டு என துக்ளக் தலையங்கம் எழுதியுள்ளதே ?

எல்லோரும் தெற்கே சென்றால், துக்ளக் மட்டும் வடக்கே செல்வது வழக்கம். பிரசாந்த் பூஷன் வழக்கில் ஜனநாயக உணர்வு உள்ள அனைவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சிக்கிற போது, அவர்களுக்கு வக்காலத்து வாங்க துக்ளக் முயற்சிக்கிறது. எப்போதுமே துக்ளக் வழி, தனிவழி தான். வெகுஜன அரசியலுக்கும், துக்ளக்கிற்கும் எப்போதுமே சம்மந்தம் இருந்தது இல்லை.

பா.ஜ.க.வில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை சேர்ந்த செய்தி நாளேடுகளில் முக்கியத்துவமாக வெளிவந்துள்ளதே ?

அவர் சாதாரண அண்ணாமலையாக இருந்தால் செய்தி முக்கியத்துவம் பெற்றிருக்காது. அவர் ‘சிங்கம் அண்ணாமலை’. எனவே, பரபரப்புடன் செய்தி வெளியாகி இருக்கிறது. விரைவில், கமலாலயத்தில் சிங்கம் நுழைய உள்ளது. பாதுகாப்பாக இருப்பது பா.ஜ.க.வினருக்கு நல்லது.

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு ஒரே கலாச்சாரம், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே நீட் தேர்வு என பா.ஜ.க. அரசு அதிகாரக் குவியலுடன் ஒற்றை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தி வருவது நாட்டிற்கு நல்லதா ?

பா.ஜ.க. ஆட்சி நடப்பதே நாட்டிற்கு நல்லதல்ல. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற ஆட்சியை மோடி நடத்தி வருகிறார். இதில் ஒரே நாடு, ஒரே பணியாளர் தேர்வு என்பதை சேர்த்துக் கொள்ள வேண்டும். அரசமைப்பு சட்டப்படி மோடி ஒரு பிரதமர். ஆனால், செயல்பாட்டின்படி ஒற்றை ஆட்சியை நடத்தும் சர்வாதிகாரியாகவே செயல்படுகிறார். முன்பு மோடியுடன் அமித்ஷா மட்டும் தெரிந்தார். இப்போது மோடி மட்டுமே தெரிகிறார். இந்தியா எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

The post அன்னை சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 பேர் யார், யார்? கடிதம் எழுதியவர்களின் நோக்கம் என்ன? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனாவை கண்டு கடுகளவும் கவலை கொள்ளாமல் தேர்தல் பணியைத் தொடங்கி வைத்த தலைவர் கே.எஸ்.அழகிரி! அரசியல் கட்சிகளின் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு காங்கிரஸ்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் நிலையில் கூட, தேர்தல் பிரச்சாரத்தை  துவக்கியிருக்கிறாரே?

2021 மே மாதத்தில் நடக்கவிருக்கிற சட்டமன்ற தேர்தலுக்கு 9 மாதங்களுக்கு முன்பாகவே, தேர்தலுக்கான வாக்குச்சாவடி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குழுவை ஆய்வு செய்கிற பணியை திருப்பூர், கோவை மாவட்டங்களில் அமரர் ராஜீவ் காந்தி பிறந்த நாளன்று தொடங்கியிருக்கிறார். நாள்தோறும் காலையிலும், மாலையிலும் செயல்தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கோபி, தென்னரசு ஆகியோர் துணையோடு வாக்குச்சாவடி தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று செயல்திட்டத்தையும் வகுத்திருக்கிறார்.

கொரோனா தொற்று பரவல் குறித்து கடுகளவும் கவலை கொள்ளாமல், காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்திவருகிற தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் பணியை காங்கிரஸ் கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் பாராட்டி பேசி வருகிறார்கள். தமது உடல்நிலையைக் கூட துச்சமென நினைத்து, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக  தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிற கே.எஸ். அழகிரி அவர்களின் துணிவை எல்லோருமே பாராட்டத்தான் செய்வார்கள்.

ஆன்லைன் வகுப்புகளில் பயில அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா?

நிச்சயமாக கிடைக்காது. நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கிற வாய்ப்புகள் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் 65 சதவிகித பேரிடமும், கிராமப்புறங்களில் 44 சதவிகித பேரிடமும் மட்டுமே இணைய தள வசதி உள்ளது. கிராமப்புற மாணவர்களிடையே இணைய சேவை, ஸ்மார்ட் போன், லேப்டாப் வசதிகள் இல்லை. கிராமப்புறங்களில் பெரும்பாலும் செல்பேசிக்கான சிக்னல் கிடைப்பதில்லை. இந்நிலையில், கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறப்பதன் மூலமே மாணவர்கள் முறையான கல்வி பயில முடியும். எனவே, ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி பயில்வதற்கு பெரும்பாலான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் உள்ளிட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனரே?

தோழர் நல்லக்கண்ணுவை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியாகி இருப்பது மனதிற்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது. ‘புன்னகை மன்னன்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கும் அளவிற்கு எப்பொழுதும் சிரித்த முகத்தோடு இயக்கப் பணியாற்றி வந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் எச். வசந்தகுமார், சேவை மனப்பான்மையோடு, கட்சிப் பணியாற்றி வரும் ரூபி மனோகரன் உள்ளிட்டவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டுமென மனதார வாழ்த்துகிறோம். நம்மைப் போன்றவர்களின் வாழ்த்துகள் நிச்சயம் பயனளிக்கும்.

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதே?

தேர்தல் நடைமுறைகளை வெளியிடுவது மிக, மிக சுலபம். ஆனால், வருகிற சட்டமன்ற தேர்தலில் பணநாயகத்தை ஒழித்து, ஜனநாயகத்தை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்பதற்கு எந்த குறிப்பும் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளில் இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு  இது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.

கொரோனா நோய் தொற்றுக் காரணமாக இந்திய பின்னலாடை ஏற்றுமதி கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறதே?

பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், இந்திய அளவில் 2019 – 20 ஆம் ஆண்டில் ரூ 53,145 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், கடந்த 4 மாதங்களில் ரூ 9,342 கோடிக்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் திருப்பூரில் ரூ 24,750 கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றது. ஆனால், நடப்பு நிதியாண்டில் முதல் 4 மாதங்களில் ரூ 4,324 கோடிக்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது.  பொதுவாக, பின்னலாடை நுகர்வு குறைந்துள்ளதே இதற்கு காரணம்

திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாகவும் பின்னலாடை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் உரிய தீர்வு காண மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சென்னை மாநகரத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் அதிக அளவில் பரவி வருகிறதே?

சென்னை மாநகரத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த எண்ணெயை சிகரெட்டில் பயன்படுத்தி, போதைப் பொருட்களாகப் பயன்படுத்துகிறார்கள். அதைப் போல, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு கோடி மதிப்புள்ள கஞ்சாவும், ஆவடியில் 15 டன் குட்காவும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, காவல்துறை உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில், குட்கா, கஞ்சா அதிகளவில் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிற தலைநகரமாக சென்னை மாநகரம் மாறி வருவதற்கு காவல்துறையினரின் அலட்சியப் போக்குத்தான் காரணமாகும்.

கொப்பரை தேங்காய்க்கான  மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளை பாதித்துள்ளதே?

தமிழகத்தில் ஏறத்தாழ 4.40 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு கிலோவிற்கு ரூபாய் 99.60 வழங்கி வருகிறது. இதை கிலோவிற்கு 130 ரூபாயாக  வழங்க வேண்டுமென  மத்திய அரசை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தேங்காய் போன்ற விளை பொருள்களுக்கு நியாயமான குறைந்தபட்ச விலை கொடுக்கவும், அதை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதை மோடி அரசு பரிசீலிக்க வேண்டும்.

தூய்மையான நகரங்களில் முன்னணி வரிசையில் இருந்த சென்னை மாநகரம் பின்னுக்கு தள்ளப்பட்டது ஏன்?

இந்தியாவில் தூய்மையான நகரங்களின் வரிசையில் கடந்த ஆண்டு 61 வது இடத்திலிருந்த சென்னை மாநகரம் நடப்பாண்டில் 312 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் இந்த தகவல் வெளியிடப் பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு 12 வது இடத்திலிருந்து 10 வது இடத்திற்கு இறங்கியுள்ளது.  சென்னை மாநகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் பணியில் சென்னை மாநகராட்சி முழு தோல்வி அடைந்து விட்டதையே இது காட்டுகிறது.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலித் பஞ்சாயத்து தலைவர் ஆகஸ்டு 15 அன்று தேசிய கொடியேற்றுவதற்கு பல தடைகள் போடப்பட்டுள்ளது எதைக் காட்டுகிறது ?

சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகளாகியும், கிராமப்புறங்களில் தீண்டாமை கொடுமை ஒழியவில்லை என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. திருவள்ளூர் மாவட்டம், ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவர் திருமதி வி. அமிர்தம் தேசியக் கொடியை ஏற்றுவவதற்கு, ஊராட்சி துணைத்தலைவரும், செயலாளரும் சேர்ந்து பல தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த தடைகளை முறியடித்து தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வி. அமிர்தம் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பெரிதும் துணை நின்ற மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் மனதார பாராட்டுகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கையாகும்.

கரும்பு கொள்முதல் விலையை மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தியிருக்கிறதே?

2019 – 20 சந்தை ஆண்டில் கரும்புக்கு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 275 ஆக உள்ளது. இதைக் குவிண்டாலுக்கு 10 ரூபாய் உயர்த்தி, 285 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. இந்த விலையை பெற வேண்டுமெனில், கரும்பிலிருந்து சர்க்கரை பிழி திறன் 10 சதவிகிதமாக இருக்கவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் பிழி திறன் 8.5 சதவிகிதம் தான். இதன்படி, தமிழகத்தில் ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூபாய் 285 க்கு பதிலாக ரூபாய் 260 தான் கிடைக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலையை கிலோவிற்கு ரூபாய் 10 உயர்த்தியும் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 25 நஷ்டம்தான் ஏற்படுகிறது.  எனவே, சர்க்கரை பிழி திறன் அளவை 10 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக குறைக்க வேண்டும். மேலும், கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டுமென்பதே கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாகும்.

The post கொரோனாவை கண்டு கடுகளவும் கவலை கொள்ளாமல் தேர்தல் பணியைத்  தொடங்கி வைத்த தலைவர் கே.எஸ்.அழகிரி! அரசியல் கட்சிகளின் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு காங்கிரஸ்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பி.எம். கிசான் திட்டம்: 30,000 போலி பயனாளிகள்! ரூ. 1000 கோடி முறைகேடு!
பி.எம். கிசான் பயனாளிகளில் 30 ஆயிரம் தகுதியற்றவர்கள் ரூபாய் 2 ஆயிரம் பெற்றுள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளதே ?

ஏழை விவசாயிகளுக்கான இந்த திட்டத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஏறத்தாழ ரூபாய் ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போது தற்காலிகமாக பி.எம். கிசான் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பரவலாக இத்தகைய முறைகேடுகள் நடந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை அதிகாரியின் வங்கிக் குறி எண் திருடப்பட்டு போலி பயனாளிகளுக்கு ரூபாய் 2 ஆயிரம் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 1.79 லட்சம் பேர் கடலூர் மாவட்டத்தில் ரூபாய் 2 ஆயிரம் பயனாளிகள் பெற்றுள்ளனர்.  இதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதால் விவசாய துணை இயக்குநர் மூலமாக விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. பொதுவாக தமிழக அரசின் திட்டங்கள் பயனாளிகளிடம் போய்ச் சேருவதற்கு முன்பாக ஆளுங்கட்சியின் ஆதரவான இடைத்தரகர்கள் மூலம் நடத்தப்படுகிற பகல் கொள்ளைக்கு பி.எம். கிசான் பயனாளிகள் போர்வையில் ஊழல் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஊழல் கறை மேலும் படிந்துள்ளதையே  இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அன்னை சோனியா காந்தி வலியுறுத்தியிருக்கிறாரே ?

சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை ஒழித்துக்கட்டுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். வளர்ச்சி என்ற போர்வையில் சுற்றுச்சூழலை அடிக்கடி தியாகம் செய்ய முடியாது. முன்னேற்றம் தேவை தான். ஆனால், அத்துமீறாத வகையில் அதற்கு எல்லை இருக்க வேண்டும். இந்த பா.ஜ.க. அரசு கடந்த 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை அழித்து விட்டது. எனவே, சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் வரைவு அறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தெளிவான கருத்துக்களோடு வலியுறுத்தியிருக்கிறார். எதிர்கட்சிகளின் கருத்தை எப்போதும் புறக்கணிக்கிற மோடி அரசு, சுற்றுச்சூழல் விஷயத்திலாவது பரிசீலனை செய்யுமா ?

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு விதித்த தடையை மீறப்போவதாக இந்து முன்னணி அறிவித்திருப்பது சரியா ?

பா.ஜ.க. ஆதரவு பெற்ற ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற வகுப்புவாத சக்திகள் தடையை மீறுவதை தங்களது கொள்கையாக கொண்டுள்ளனர். கொரோனா தொற்று காலத்திலும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுத்தி வழிபடுவோம், தடையை மீறுவோம் என்று இந்து முன்னணி அறிவித்திருப்பது சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதற்கு சமமாகும்.

கொரோனா பரவலை தொடர்ந்து பொது இடங்களில் சிலைகளை வைக்கவோ, விநாயகர் ஊர்வலங்கள் நடத்தவோ விதிக்கப்பட்டிருக்கிற தடையை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளில் மிகச் சிறப்பாக கொண்டாடலாம். இதை தவிர்த்து விட்டு கொரோனா பரவலைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. பொது ஊரடங்கு தடையை மீறுவோம் என்று கூறுவதை விட ஒரு அராஜக செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

நடிகர் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு தொடுத்துள்ளதே ?

பாவம்! வழக்கு தொடுத்த கவலையை விட நமக்காக தமிழக பா.ஜ.க.வினர் எவரும் ஆதரவாக ஒரு வார்த்தை கூட கூறவில்லையே என்கிற அதிர்ச்சி தான் அவரை வாட்டிக் கொண்டிருக்கிறது. ஊடக வெளிச்சத்திற்காக அதிகபிரசங்கித்தனமாக பேசுபவர்கள் இவரைப் போன்ற மாரிதாஸ், கிஷோர் கே. சாமி போன்றவர்களை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவர்களின் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டால் மதநல்லிணக்கம் சீர்குலைந்து  பெங்களூருவில் ஏற்பட்ட கலவரத்தைப் போல தமிழகத்திலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் கொரோனாவை ஒழிக்க தெளிவாக வழிமுறைகளை கூறியுள்ளாரே ?

புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமியை சந்தித்து விட்டு பத்திரிகையாளர்களிடம் கொரோனாவை ஒழிப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன. அதில் ஒன்று அதிகமாக பரிசோதிப்பது, மற்றொன்று தொடர்புகளை கண்டறிவது, மூன்றாவது நோயாளிகளை தனிமைப்படுத்துவது என்று கூறியிருக்கிறார். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும் அவர் கூறுகையில் பொது ஊரடங்கு என்பது கொரோனாவை ஒழிப்பதற்கு நிரந்தர அணுகுமுறையாக இருக்க முடியாது என்று  தெளிவுபடுத்தியதோடு, வீட்டில் தனிமைப்படுத்துவது குடும்பத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களை பாதிப்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 140 நாட்கள் ஆகியும் கொரோனா தொற்று அதிகரித்து பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு மக்கள் வாழ்வாதாரம் குன்றியது தான் இதுவரை நிகழ்ந்திருக்கிறது. எனவே, பொது ஊடரடங்கு குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமநீதியை உருவாக்கியுள்ளதாக அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றிருக்கிறதே ?

பிரதமர் ஜவஹர்லால் நேரு எடுத்த முயற்சியால் 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமைச் சட்டம் அன்றைய மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி இச்சட்டத்தில் 2005 ஆம் ஆண்டில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து 2016, 2018 ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்தப் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சில கருத்துக்களை நீதிபதிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து தினத்தந்தி நாளேடு எழுதிய தலையங்கத்தில், ‘ஒரு மகள் எப்போதுமே ஒரு அன்பான மகளாகவே இருப்பாள். ஒரு மகன் அவனுக்கு திருமணம் ஆகி, மனைவி கிடைக்கும் வரை மகனாக இருப்பார். ஆனால், ஒரு மகள் தன் வாழ்நாள் முழுவதும் மகளாகவே இருப்பாள்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டதை வெளியிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் ஆண், பெண் என்ற வித்தியாசத்திற்கு, பாகுபாட்டிற்கு ஒரு முடிவு கட்டப்பட்டிருக்கிறது.

ஆனால், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை குறித்து கேரளாவில் 1975லும், ஆந்திரபிரதேசத்தில் 1986லும், தமிழ்நாட்டில் 1989 லும், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 1994 லும் சட்டங்கள் இயற்றி முன்னோடி மாநிலங்களாக திகழ்கின்றன. இதன்மூலம் பெண்கள் தற்சார்புடன் வாழ தந்தையின் சொத்தில் சமஉரிமை பெற மிகப்பெரிய வாய்ப்பு சட்டத்தின் முன் கிடைத்திருக்கிறது. பல குடும்பங்களில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை மறுக்கப்பட்டு வந்த அநீதியை உச்சநீதிமன்றத்தில் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது.

அசோக் கெலாட் ஆட்சி கவிழும் என்று பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் இன்னும் பிதற்றிக் கொண்டிருக்கிறாரே ?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 200 இடங்களில் காங்கிரஸ் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது அசோக் கெலாட் ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கட்சியைச் சேர்ந்த 17 பேர் ஆதரிக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க. வெற்றி பெற்ற இடங்களோ 72. அசோக் கெலாட், சச்சின் பைலட் கருத்து வேறுபாடுகளை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று பா.ஜ.க. சதித்திட்டம் தீட்டி பகல் கனவு கண்டது. ஆனால், இந்த சதியை தலைவர் ராகுல்காந்தியும், பிரியங்காவும் உரிய நேரத்தில் தலையிட்டு சச்சின் பைலட் மற்றும் 18 சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசி சுமூகமான சூழலை ஏற்படுத்தியுள்ளனர். இன்றைக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வெற்றிச் சின்னங்களை தமது கைகளை உயர்த்தி ஊடகங்களுக்கு காட்டியுள்ளனர்.

கர்நாடகா, கோவா, மத்தியபிரதேசத்தில் குதிரைபேர அரசியல் நடத்தி, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.விற்கு ராஜஸ்தானில் சரியான பாடம் புகட்டப்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வின்  முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக 509 செவிலியர்கள் பாதிக்கப்பட்டதோடு, 20 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளதே ?

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் இந்த நாடே பாராட்ட வேண்டும், போற்ற வேண்டும். தங்களது உயிரை துச்சமென கருதி, கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இவர்களுக்கு மத்திய – மாநில அரசுகள் ஊக்கத்தொகையாக நிறைய வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள், தங்குவதற்கு வசதி, உணவு ஆகியவற்றை எவ்வித தடையுமின்றி வழங்க வேண்டும். கொரோனா நோயாளிகள் மீது எந்தளவு அக்கறை காட்டுகிறோமோ, அதற்கு சற்றும் குறையாமல் இவர்களிடம் காட்ட வேண்டும். உயிரிழந்த 20 செவிலியர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக பெருமளவில் வழங்குவதற்கு மத்திய – மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற கோபால் தாசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதே ?

80 வயதான கோபால் தாசுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்த இவருக்கு தொற்று ஏற்பட்டதால் மோடி தனிமைப்படுத்தப்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ராம பிரானின் கருணையும், அன்பும் கோபால் தாசுக்கு கிட்டாதது அனைவருக்கும் ஏமாற்றத்தையே தருகிறது.

இந்திய தாய்க்கு பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றிருக்கிறாரே ?

இந்தியத் தாய் என்பதை விட, தமிழகத்தைச் சேர்ந்த கும்பகோணத்தில் பிறந்த தாய்க்கு பெண்ணாக பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக முதல் கருப்பரும், பெண்ணாகவும் இருப்பதும் இவரே. 55 வயதான இவர் அமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்திருக்கிறார். இதன்மூலம் அமெரிக்க மக்களின் ஆதரவை பெற்றதோடு, தமிழக மக்களின் வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு யார் முதலமைச்சர் என்பது குறித்து அ.தி.மு.க.வில் உச்சகட்ட மோதல் ஆரம்பித்து விட்டதே ?

தமிழக அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் எடப்பாடிக்கு ஆதரவாகவும், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் போன்றவர்கள் அதை எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை முருகனை பார்த்து சிரித்தார் என்ற பாவத்திற்காக அந்த பதவியில் இருந்து அன்று செல்வாக்கு கொண்டவராக கருதப்பட்ட சசிகலாவால் நீக்கப்பட்டார். அதற்கு பிறகு உச்சநீதிமன்றம் சசிகலாவிற்கு தண்டனை அளித்து சிறைக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டதும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக சசிகலா தேர்வு செய்தார். அந்த வகையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே அரசியல் விபத்தின் மூலமாகவே முதலமைச்சர் ஆனார்கள். இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என்ற அதிகாரத்தை கையில் வைத்திருப்பதால் ஆட்சியின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் காரணமாக அ.தி.மு.க.வில் செயற்கையான ஒற்றுமை நிலவுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க உச்சக்கட்ட மோதல்களை காணலாம். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட்டதும் அக்கட்சி பல கூறுகளாக சிதறிப்போகிற நிலை ஏற்படும். அத்தகைய சூழலில் அ.தி.மு.க. மீண்டும் சசிகலாவின் கைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம். இது நடக்காது என்று எவரும் கூற முடியாது.

The post பி.எம். கிசான் திட்டம்: 30,000 போலி பயனாளிகள்! ரூ. 1000 கோடி முறைகேடு! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ராஜஸ்தானில் பா.ஜ.க.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடித்த தலைவர் ராகுல், பிரியங்கா!
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதே ?

கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தை, தலைவர் ராகுலும், பிரியங்காவும் இணைந்து ராஜ தந்திரத்துடன் முறியடித்துள்ளார்கள். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைய மாநிலத் தலைவராக இருந்து கடுமையாக உழைத்த சச்சின் பைலட்டின் மனக்குறைகளை போக்குவதற்கு பிரியங்காவின் முயற்சி நல்ல பலனை கொடுத்துள்ளது. ஜோதிர் ஆதித்ய சிந்தியாவைப் போல, சச்சின் பைலட் சந்தர்ப்பவாதி அல்ல. காங்கிரஸ் தலைமை மீதும், கொள்கைகள் மீதும் அளவற்ற பற்று கொண்டவர்.

முதலமைச்சர் அசோக் கெலாட் வரம்பு மீறி விமர்சனம் செய்திருந்தாலும் காங்கிரஸ் கட்சி மீதோ, தலைமை மீதோ எத்தகைய விமர்சனத்தையும் சச்சின் பைலட் செய்ததில்லை. நேற்று தொலைக்காட்சி ஊடகங்களில் அளித்த பேட்டியில் ஒரே ஒரு பா.ஜ.க. தலைவரிடம் கூட நாங்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று பகிரங்கமாக கூறியதன் மூலம், அவர் ஓர் அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர் என்பதை நிரூபித்திருக்கிறார். இதன்மூலம் தலைவர் ராகுல், பிரியங்கா முயற்சி சரித்திரம் படைத்திருக்கிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேச ஆட்சி கவிழ்ப்பில் வெற்றி பெற்ற பா.ஜ.க., ராஜஸ்தானில் முறியடிக்கப்பட்டதற்காக தலைவர் ராகுலும், பிரியங்காவும் நாட்டு மக்களின் பாராட்டை பெற்று வருகிறார்கள்.

மத்திய அரசு அவசியமில்லை என தெரிவித்த பின் இ-பாஸ் முறையை தமிழக அரசு தொடருவது ஏன் ?

கடந்த நான்கு மாதமாக ஊரடங்கினால் தொழில்கள் முடங்கி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ்  வழங்கப்பட்டு வருகிறது. இ-பாஸ்  வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனால் பலர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், சென்றவர்கள் திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். உயர்கல்வி பயில இருக்கும் மாணவ – மாணவிகளின் பெற்றோர் கல்லூரியில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட முடியவில்லை. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான தனிமனித உரிமை தடுக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான தனிமனித உரிமை மீறல் என்றும், இ-பாஸ்  திட்டம் தேவையா என்றும் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மக்கள் படும் துன்பங்களை எதிர்கட்சிகள் எதிரொலித்தால் ஆட்சியாளர்கள் பதில் சொல்வதில்லை. இது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். தற்போது தமிழக அரசை நீதிமன்றங்களும், மனித உரிமைகள் ஆணையமும் தான் இயக்கிக் கொண்டிருக்கின்றன.

பா.ஜ.க.வில் பிரபல ரவுடி இணைந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே ?

தமிழக பா.ஜ.க.வின் தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்ட பின், கட்சிப் பதவிகளை புதுமுகங்களுக்கு வாரி வழங்குவது குறித்து அக்கட்சியில் நீண்டகாலமாக இருப்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்சித் தலைவராக இருப்பவரே அக்கட்சிக்கு புதுமுகம். அவருக்கு பழைய முகங்களை தெரியாது. இந்நிலையில், பிரபல ரவுடியை கட்சியில் இணைத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக தமிழக பா.ஜ.க. தலைமை நிலையமான கமலாலயம் பதவிகள் வழங்கும் நிலையமாக மாறிவிட்டது. பதவிகள் தான் வழங்கலாமே தவிர, கட்சியை வளர்க்க முடியாத நிலையில் புதிய தலைவர் திணறிக் கொண்டிருக்கிறார்.

இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் சமூக நீதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதே ?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவு கடந்த 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கான கட்ஆப் மதிப்பெண்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் மதிப்பெண் 95.34. பத்து சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உரியோருக்கு 90 மதிப்பெண்கள். இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்தவர்களை விட 5.34 மதிப்பெண்கள் குறைவாக பெற்றவர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மை தேர்வில் பொருளாதாரத்தில் முன்னேறிய உயர் வகுப்பினர் தேர்வு பெற்றுள்ளனர். இதனால் சமூக நீதிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய போக்கு நீடிக்குமேயானால் பின்தங்கிய சமுதாய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

பொது ஊரடங்கு காலத்தில் ஜூம் செயலி அனைவரையும் இணைக்கும் பாலமாக விளங்கி வருகிறதே ?

ஒட்டுமொத்த உலகையே முடக்கிப் போட்டுள்ள கொரோனாவால் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் கட்சிகள், சமூக ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் கருத்துப் பரிமாற்றங்களை செய்து வருகிறார்கள். அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியாவில் ஜூம் செயலி அதிக வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் ஏற்பாடு செய்த தியாகி சின்ன அண்ணாமலை நூற்றாண்டு விழா காணொலி காட்சியை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். சாதாரண காலங்களில் ஆயிரம், இரண்டாயிரம் பேரை திரட்டுவது எவ்வளவு கடினமானது என்பதை சிந்தித்துப் பார்த்தால் ஜூம் செயலி நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப் பிரசாதமாகும்.

தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு அடுத்து ‘ட்ரோன்” புரட்சி தான் எதிர்காலத்தில் உலகை ஆளப் போவதாக கூறப்படுகிறதே ?

அண்மை காலமாக திருமண நிகழ்ச்சிகளிலும், காவல்துறை கண்காணிப்பிற்கும், கிருமி நாசினி தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு உரம், மருந்து தெளிப்பதற்கு பெருமளவில் ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் ராணுவ பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லாத குட்டி விமானங்கள் இன்று ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. எதிர்காலத்தில் மிகப் பெரிய புரட்சியை ட்ரோன் ஏற்படுத்தப் போகிறது. சமீபத்தில் நாட்டை உலுக்கிய வெட்டுக்கிளி தாக்குதலை முறியடிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ட்ரோன் தொழில்நுட்பம் அறிந்தவர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.

சமீபத்தில் புகைப்படக் கலைஞர் எல். ராமச்சந்திரன் தொகுத்த சென்னை முதல் மெட்ராஸ் வரை என்ற புகைப்பட நூலை பார்த்து வியப்படைந்தேன். கொரோனா காலத்தில் ட்ரோன் தொழில்நுட்ப கேமரா மூலம் சென்னையில் உள்ள பழமைவாய்ந்த கட்டிடங்கள் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளன. இதைப் போல, புகைப்பட தொகுப்பு நூலை என் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை. புகைப்படக் கலைஞர் எல். ராமச்சந்திரன் மற்றும் காண்டீபன் உள்ளிட்ட நண்பர்கள் இந்நூலை வெளியிட இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி. ஊக்கப்படுத்துவது நமது கடமை.

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அவர்களின் பதவிக் காலம் முடிவதற்குள் வருமா ?

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, தற்போதைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக பகிரங்கமாக வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் தனபாலிடம் தி.மு.க. மனு அளித்தது. அதன்மீது நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சபாநாயகரின் முடிவே இறுதியானது எனக் கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என்று உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து மூன்று மாதங்கள் ஆகியும் சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முறையிடப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகர் மற்றும்  ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான் சபாநாயகருக்கு ஒரு நீதியையும், தமிழக சபாநாயகருக்கு ஒரு நீதியையும் வழங்குவது ஏன் என்று தெரியவில்லை. ராஜஸ்தான் சபாநாயகருக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. ஆனால், தமிழகத்தில் தலையிட முடியாது என்று கூறுகிறது. 2017 பிப்ரவரியில் நடந்த ஒரு நிகழ்வு குறித்து 2020 ஆகஸ்ட் வரை மூன்றரை ஆண்டுகளாக நீதிமன்றங்களுடன் தி.மு.க. போராடிக் கொண்டிருக்கிறது. கட்சி மாறி வாக்களித்தவர்களுக்கு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி சபாநாயகர் தண்டனை வழங்க மறுக்கிறார். கட்சிமாறிகளுக்கு உச்ச நீதிமன்றமும் தண்டனை வழங்கவில்லை என்றால், இதை எங்கே போய் சொல்வது ?

தமிழக ஆளுநரிடம் முதலமைச்சருக்கு எதிராக மனு வழங்கினார்கள் என்பதற்காக டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக சபாநாயகர் பதவி நீக்கம் செய்தார். ஆனால், சட்டப் பேரவையில் அ.தி.மு.க. கொறடா பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய மறுக்கிறார். இந்த பாரபட்சத்தை கேட்க நீதிமன்றங்கள் முன்வராததை நீதி தேவன் மயக்கம் என்று தான் கூற வேண்டும்.

இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை மற்ற நாடுகளுடன் அதிகரித்து வருவது ஏன் ?

இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதல்களுக்கு பிறகு பா.ஜ.க.வினரால் அதிகமாக ஓங்கி ஒலிக்கும் குரல் தற்சார்பு இந்தியா. ஆனால், முக்கியமான 9 நாடுகளுடன் இந்தியா வர்த்தக பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. சீனாவுடன் பற்றாக்குறை ரூபாய் 3 லட்சத்து 64 ஆயிரத்து 875 கோடி. சவுதி அரேபியாவுடன் ரூபாய் 1 லட்சத்து 54 ஆயிரத்து 650 கோடி. ஈராக் ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 950 கோடி. தென்கொரியா ரூபாய் 81 ஆயிரத்து 75 கோடி. மொத்தமாக 9 முக்கிய நாடுகளோடு வர்த்தக பற்றாக்குறை ரூபாய் 8 லட்சத்து 52 ஆயிரத்து 750 கோடி. மோடியின் தற்சார்பு வெறும் முழக்கமாக இருக்கிறதே தவிர, நடைமுறையில் செயலில் இல்லை என்பதையே வர்த்தக பற்றாக்குறை படம் பிடித்து காட்டுகிறது.

டிஜிட்டல் இந்தியா ஆமை வேகத்தில் நகருவது ஏன் ?

பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நம்மை விட சிறிய நாடுகள் பராமரிக்கும் வேகம் கூட இந்தியாவிடம் இல்லை என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. டிஜிட்டல் இன்டர்நெட் வேகத்தை ஆய்வு செய்ததில் 138 நாடுகளில் 129-வது இடத்தில் இந்தியா உள்ளது. இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியாவா ?

The post ராஜஸ்தானில் பா.ஜ.க.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடித்த தலைவர் ராகுல், பிரியங்கா! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து போராடும் ஜாம்பவான்கள்!
பிரசாந்த் பூஷன் மீதான  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறதே?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே சமீபத்தில் நாக்பூரில் ஆளுநர் மாளிகையில் விருந்தினராக தங்கியிருந்த போது அவரது நண்பரான உள்ளூர் பா.ஜ.க. தலைவர் சோன்பா முசாலேவின் மகன் ரோஹித் சோன்பாஜி கொண்டு வந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் மகிழ்ச்சியுடன் ஏறி உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது பத்திரிகை செய்தியாயிற்று. இதைப் பார்த்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உள்ளூர் பா.ஜ.க. தலைவரின் விலை உயர்ந்த பைக் ஒன்றில் முக, தலைக்கவசம் இன்றி தொற்று நோய் காலத்தில் தலைமை  நீதிபதி பயணம் செய்கிறார். ஆனால் உச்ச நீதிமன்றத்தை பூட்டி வைத்துள்ளார்.’ என்று பதிவிட்டார்.

இந்த தகவல் சில நிமிடங்களில் வைரலானது. இதை பார்த்த நீதிமன்றம், பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாமாகவே முன் வந்து பதிவு செய்தது. இந்த சூழலில் தான் மூத்த பத்திரிகையாளர் என். ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் மூவரும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளனர். அதில் 1971 ஆம் வருட நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் உள்ள பிரிவு 2 உட்பிரிவு (1) (சி) அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதன் மூலம் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு என்ற போர்வையில் நீதிமன்றங்களை விமர்சனமே செய்யக் கூடாது என்று கூறுவது அடிப்படை உரிமையான பேச்சு உரிமைக்கு எதிரானது என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தை களங்கப்படுத்துவது என்பது ஒவ்வொரு நீதிபதியின் கண்ணோட்டத்தை பொறுத்தது. எனவே பிரசாந்த் பூஷன் பதிவிட்டுள்ள பதிவை பார்த்து ரசிக்க வேண்டுமேயொழிய அதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நினைப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயல். மிகப் பெரிய அளவில் அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் எதை கண்டிக்க வேண்டுமோ அதை கண்டிக்காமல்,  இதுபோன்ற விஷயங்களில் மிகுந்த அக்கறை காட்டுவது அதனுடைய மாண்பை பாதிக்கவே செய்யும்.

நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா மரணம் தொடர்பான செய்திகள் மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளதே?

இலங்கையைச் சேர்ந்த அங்கொடா லொக்கா என்ற தாதா தமிழகத்திற்கு சட்டவிரோதமாக எப்படி வந்தார்? தமது பெயரை பிரதீப் சிங் என்று எப்படி மாற்றிக் கொண்டார்? அவருக்கு ஆதார் அட்டை எப்படி கிடைத்தது? பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட அங்கொடா லொக்கா பெங்களூரூ, சென்னை, கோவை போன்ற பல இடங்களில் சுற்றியுள்ளான்.  2017 ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான். பிறகு ஜாமினில் வெளிவந்து தலைமறைவாகி விட்டான். நீதிமன்றம் அவனுக்கு எப்படி ஜாமீன் வழங்கியது? லொக்காவுக்கு அடைக்கலம் கொடுத்தவர் வழக்கறிஞர் சிவகாம சுந்தரி.

போதைப்  பொருள் மற்றும் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இந்த விசாரணையை சரியாக  நடத்தியிருந்தால் ஆரம்பத்திலேயே அவனை கைது செய்திருக்க முடியும். தனது உருவ அமைப்பை மாற்றிக் கொண்டு தமிழகத்தில் குறிப்பாக கோவையில் அவன் தங்கியிருந்தது இப்போது அம்பலமாகியுள்ளது. தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. சர்வதேச குற்றவாளிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருவது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

பெட்ரோல்–டீசல் விலை உயர்வினால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்களே?

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 1 பீப்பாய் 45.72 அமெரிக்க டாலர். இந்த நிலையில் கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல் பெட்ரோல் – டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் ஏற்றியது எந்த வகையில் நியாயம்?
சர்வதேச சந்தையில் விலை குறையும் போது நியாயமாக பெட்ரோல் – டீசல் விலையை குறைத்திருக்க வேண்டும்.

2014 ஆம் வருடம் மே மாதம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது 1 லிட்டர் டீசல் விலை ரூ. 66.02.  அன்றைக்கு எண்ணெய் கம்பெனிகள் அரசுக்கு கொடுத்த விலை ரூ. 50.05. இன்று டீசல் விலை ரூ. 68.22. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்கிற விலை ரூ.18.78 தான்.  அன்று மத்திய கலால் வரி 1 லிட்டருக்கு ரூ. 4.04. இன்றைக்கு ரூ 31.83 ஆக உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டில் பெட்ரோல் – டீசல் விற்பனையில் கலால் வரியில் மட்டும் ரூ 17 லட்சம் கோடி வருமானத்தை பெற்றிருக்கிறது. 2016 லிருந்து பெட்ரோல் 247 சதவிகிதமும், டீசல் விலையில் 296 சதவிகிதமும் மத்திய அரசு கலால் வரியாக உயர்த்தியிருக்கிறது. இந்த நிலையில் லாரி ஓட்டுனர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டு பல பொருட்களின் விலை உயர்கிறது. பெட்ரோல் – டீசல் விலை உயர்வு மூலம் மக்கள் மீது இருக்கும் சுமையை குறைக்காமல் பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம் 28 ஆண்டு கால சபதத்தை நிறைவேற்றியிருக்கிறார். எனவே ராம பிரானுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி,  அவர் அமைத்த ராம ராஜ்ஜியத்தை நாட்டு மக்களுக்கு வழங்கும் வகையில் மக்கள் மீது இருக்கும் சுமையை எப்போது இறக்கப் போகிறார்?

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதே?

தமிழகத்தில் ஆங்காங்கே கொலை, கொள்ளை, பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடக்க ஆரம்பித்துள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கெடுபிடி இருந்தாலும் அதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்களே தவிர ரவுடிகளுக்கோ, கூலிப்படையினருக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களுடைய குற்றச் செயல்கள் தங்கு தடையின்றி நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் 57 கொலைகள், 168 கொள்ளைகள், 149 திருட்டுகள், வழிப்பறிகள், 29 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சென்னை மாநகரத்தில் தற்போது ரவுடிகளின் எண்ணிக்கை 7650 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை சென்னை மாநகரத்தில் 679 கிலோ கஞ்சா பிடிப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூபாய் 68 லட்சம். அதுபோல 700 கிலோ குட்கா  பிடிக்கப்பட்டுள்ளது. இதை கடத்தி விற்பவர்கள் என்று 183 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் கணக்கே இது என்றால் கணக்கில்  வராத கஞ்சா, குட்கா டன் கணக்கில் இருக்கும் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் கூறுகிறது. தமிழகத்தில் குற்றச் செயல்களை ஒழிக்கவேண்டுமென்றால் அதில் தமிழக அரசுக்கு அக்கறை இருக்கவேண்டும். அதைத் தொடர்ந்து காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும். அதைப் போலவே நீதிமன்றமும் இத்தகைய குற்றச் செயல் புரிந்தவர்களுக்கு  கடுமையான தண்டனை கொடுக்க முன்வர வேண்டும். இதன் மூலமே தமிழகத்தில் குற்றச் செயல்கள் குறைய வாய்ப்பு ஏற்படும்.

காஷ்மீர் அவலங்களுக்கு எப்போது முடிவு வரும்?

‘அன்பே வா’ திரைப்படத்தில் . ‘காஷ்மீர், பியூட்டிபுல் காஷ்மீர்’ என்று எம்.ஜி.ஆர் பாட்டு பாடுவார். சுற்றுலாவிற்கு பெயர் போன இடம். காஷ்மீர் ஆப்பிள் உலகப் புகழ் பெற்றது. இந்தியாவில் 75 சதவிகித ஆப்பிள் உற்பத்தி காஷ்மீரில் தான் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 2019 இல் அரசமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு தனி அந்தஸ்தை இழந்து 70 லட்சம் காஷ்மீர் மக்கள் வெளியுலகத்திற்கு தொடர்பில்லாமல் சிறையில் இருப்பதைப் போல வாழ்ந்து வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். 4ஜி இணைய தள சேவை இன்னும் வழங்கப்பட வில்லை. தேசப் பாதுகாப்பு காரணமாக இந்த சேவை தரப்படவில்லை என மத்திய அரசு கூறுகிறது. ஊடகங்களும், பத்திரிகைகளும் முடக்கப்பட்டுள்ளன. தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 500 க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் 200 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதற்கு ஒரே காரணமாக கூறப்படுவது தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதே.

ஓராண்டு காலம் ஊரடங்கு நீடிப்பதால் வர்த்தகம், சுற்றுலா, சேவைத் துறைகள், விவசாயம், கட்டுமானம், தொழில்துறை, போக்குவரத்து, கைவினை என பல்வேறு துறைகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. ஏறத்தாழ ரூபாய் 20 ஆயிரம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக காஷ்மீர் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு கூறுகிறது.  காஷ்மீர் மாநில மக்கள் தற்போது சந்தித்து வரும் துன்பங்களிலிருந்து எப்போது விடிவு வரும் என்று தெரியவில்லை.

சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதே?

மீனவர் அமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து உள்ளாட்சி அமைப்புகளின் இணைய தளங்களில் வெளியிட முடியுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது. மத்திய அரசை பொறுத்தவரை மும்மொழி கொள்கைகளை திணிக்க முயற்சிக்கிறது. மாநில மொழிகளை புறக்கணிக்கிறது. மத்திய அரசின் இத்தகைய அறிக்கைகளை கடந்த காலங்களில் தமிழாக்கம் செய்கிற பணியை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகை தகவல் மையம் (றிமிஙி) செய்து வந்தது. இப்போது பத்திரிகை தகவல் மையம் ஏன் தமிழாக்கம் செய்யவில்லை? சுற்றுச்சூழல் அறிக்கையை தமிழாக்கம் செய்தால் அனைவரும் படித்து புரிந்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராட ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சமா?

புதிய தேசிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவின் அடித்தளம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளாரே?

ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஆட்சியில் இருந்து நிறைவேற்றுகிற பிரதமர் மோடி மக்களை மத, மொழி ரீதியாக பிளவு படுத்துகிற புதிய கல்விக் கொள்கையை புதிய இந்தியாவின் அடித்தளமாக கருதுவதில் வியப்பு ஒன்றுமில்லை. குஜராத் மாநிலத்தில் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி 11 ஆண்டுகாலம் முதலமைச்சராக மோடி இருந்தார். அதே குஜராத் பாணியை பின்பற்றி கடந்த 6 ஆண்டுகாலமாக பா.ஜ.க.வின் பதுங்கு திட்டங்களை (பிவீபீபீமீஸீ கிரீமீஸீபீணீ) ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறார். கோல்வாக்கர் கண்ட கனவை மோடி நிறைவேற்றி வருகிறார். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மத, சாதி, இன, மொழி வேறுபாடுகளை கடந்த இந்திய கலாச்சார பண்புகளை சீர்குலைப்பதில் தற்காலிகமாக மோடி வெற்றி பெறலாம். ஆனால் நிரந்தரமாக வெற்றி பெற முடியாது.

கொரோனா தொற்று 20 லட்சத்தை தாண்டிவிட்டதே?

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தலைவர் ராகுல், “ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் 20 லட்சத்தை எட்டும் என்று ஏற்கனவே கணித்திருந்தேன். அதன்படி 7 ஆம் தேதியே 20 லட்சத்தை கடந்து விட்டது. 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன . மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அச்சமும், பாதுகாப்புமின்மையும் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ளதை விட 4 மடங்கு பொருளாதார பாதிப்பு அதிகரிக்கப் போகிறது. பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கசப்பான செய்திகள் வரப்போகின்றன” என்று மிகத் துல்லியமாக எதிர்கட்சி தலைவர் மதிப்பீடு செய்துள்ளார். இதையெல்லாம் பிரதமர் மோடி கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் உதாசீனம் செய்வாரேயானால் பேரழிவிலிருந்து இந்தியாவை காப்பாற்ற முடியாது.

அயோத்தியில் புதிய மசூதி கட்ட அழைத்தால் பங்கேற்க மாட்டேன் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளாரே?

அயோத்தியில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தொலைக்காட்சியில், ‘அயோத்தியில் நடைபெறவுள்ள மசூதி அடிக்கல் நாட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் ‘ஒரு முதலமைச்சர் என்பதை விட ஒரு யோகி என்ற முறையில் இந்த கேள்வியை எழுப்பினால், நான்  ஓர் இந்து என்ற காரணத்தால் அங்கு போக மாட்டேன்’ என்று கூறினார். பா.ஜ.க. சார்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் உத்திர பிரதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு மட்டுமல்லாமல் அந்த மாநிலத்தில் உள்ள மூன்றரை கோடி இஸ்லாமியர்களுக்கும் சேர்த்துதான் அவர் முதலமைச்சர்.

மேலும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஓர் இந்து என்ற முறையில் எனது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கு முழு உரிமை இருக்கிறது. மசூதிக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு நான் அழைக்கப்பட்டால் பெரும்பாலான மக்களுடைய மதச் சார்பின்மை அச்சுறுத்தலுக்கு ஆளாகும்’ என்று கூறியிருப்பது குறித்து எவரும் அதிர்ச்சி அடையாமல் இருக்கமுடியாது. காந்தி, நேரு கண்ட இந்தியா இப்போது எங்கே போய் கொண்டிருக்கிறது?

இலங்கையில் நடைபெற்றுள்ள தேர்தல் தீர்ப்பு கூறும் செய்திகள் என்ன?

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ராஜபக்ஷே கட்சி மூன்றில் இருபங்கு இடத்தை பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 71 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளனர். இதில் ராஜபக்ஷேயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 18 இல் வெற்றி பெற்றிருக்கிறது. ராஜபக்ஷே கட்சி  68 லட்சம் (ஏறத்தாழ 60 சதவிகித வாக்குகள்) வாக்குகள் பெற்றிருக்கிறது.

இந்த தேர்தலை பொறுத்தவரை 4 முறை பிரதமர் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கே கட்சியும், மைத்ரி பாலா சிரிசேனா கட்சியும் படுதோல்வி அடைந்திருக்கின்றன.

முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தமிழர்கள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு மாகாணத்தில் 6 இடங்களையும், கிழக்கு மாகாணத்தில் சிறிய தமிழ் கட்சிகள் 4 இடங்களிலும் மொத்தம் 10 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன . இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமாக மலையகத் தமிழர்கள் கட்சியையும் சேர்த்து 25 தமிழர்கள் தேர்வு பெற்றிருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாமல் பல்வேறு குழுக்களாக பிரிந்த காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் தோல்வியை சந்தித்திருக்கிறது.

இந்த வெற்றி குறித்து  கருத்து கூறிய ராஜபக்ஷே, ‘தேர்தல் உத்திகளை கையாள்வதில் பிரதமர் மோடியின் கட்சியான பா.ஜ.க.வை பின்பற்றியதாக’ கூறியிருக்கிறார். இந்தியாவில் பெரும்பான்மை பேரின வாதத்தை முன்வைத்து மோடி வெற்றி பெற்றுள்ளதை போல இலங்கையில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இதன் மூலம் மோடி வழியில் ராஜபக்ஷே சென்று கொண்டிருப்பது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் நல்லதல்ல. இந்தியாவுக்கும் நல்லதல்ல.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இயக்குநர் ஆசாத் கிஷோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. தற்போது ஒரு மாதம் கழித்து ரத்து செய்யப்பட்டுள்ளதே?

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்திய மேலாண்மை கழகம்,  இந்திய தொழில்நுட்ப கழகத்தைப் போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்டது தான் அறிவியல் தொழில்நுட்பத்துறை. அந்த பொறுப்பில் மிகச்சிறப்பாக பணியாற்றிய ஆசாத் கிஷோருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்புகள் கடுமையான அவதூறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன. அறிவியல் ரீதியாக பிரச்சனைகளை அணுகுவதில் ஆர்.எஸ்.எஸ் க்கு உடன்பாடில்லை. அந்த அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைக்கு எதிராக செயல்படுவதாக கூறி ஆசாத் கிஷோர் 5 ஆண்டு பதவி நீடிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்ட தொல்லைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்படும் பா.ஜ.க. ஆட்சியில் எங்கே நீதி கிடைக்கப் போகிறது?

The post உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து போராடும் ஜாம்பவான்கள்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

அயோத்தியில் பாபர் மசூதி இருக்க வேண்டும்! ராமர் கோயிலும் கட்ட வேண்டும் என்பதே அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியின் நிலை! அதுவே காங்கிரஸின் நிலை!
முக்கியமான நாட்டு நடப்புகள் குறித்து நாள்தோறும் ஆதியின் பதில்களை படியுங்கள் – ஆதி.கோபண்ணா.

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றும் போது சமூக நல்லிணக்கம், இந்தியாவின் ஒற்றுமை, மக்களிடையே பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவது குறித்து குறிப்பிட்டுள்ளாரே ?

பொதுவாக பிரதமர் மோடியின் பேச்சுக்கும், செயலுக்கும் எப்போதும் சம்மந்தம் இருந்ததில்லை. தமது உரையில் ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டதாக கூறுகிறார். இத்தகைய முயற்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் ஈடுபட்டதில்லை. மகாத்மா காந்தி எந்தளவிற்கு ராம பக்தராக இருந்தார் என்பதும், வகுப்புவாத சக்திகளால் ஏவிவிடப்பட்ட நாதுராம் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்ட போது கடைசியாக உதிர்த்த வார்த்தை ‘ஹேராம்”. காந்தியடிகள் வழிவந்த காங்கிரஸ் கட்சி இந்து மதத்தின் மீதும், ராமபிரான் மீதும் உண்மையான பக்தி கொண்ட இயக்கமாகும்.

ஆனால், 1984  இல் விஷ்வ இந்து பரிஷத்தும், 1989 இல் பா.ஜ.க.வும் முதல் முறையாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றின. அதுவரை ராமர் கோயிலைப் பற்றி பா.ஜ.க. நினைத்துப் பார்த்தது கிடையாது. அதன்மூலம் மத உணர்வுகளை தூண்டி, மக்களை பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே பா.ஜ.க. ராம பிரானை கையில் எடுத்தது. இதன்மூலம் 1984 இல் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்த பா.ஜ.க., அடுத்து வந்த ஒவ்வொரு மக்களவை தேர்தலிலும் தனது எண்ணிக்கையை பெருக்கி அரசியல் ஆதாயம் பெற்றது.

இந்நிலையில் சமூக நல்லிணக்கம் பற்றியும், மக்களின் ஒற்றுமை குறித்தும் மோடி பேசுகிறார். ஆனால், பாரதிய ஜனதா கட்சியில் 303 மக்களவை உறுப்பினர்களில் 14 கோடி இஸ்லாமியர்களுக்கோ, 2 கோடியே 40 லட்சம் கிறிஸ்தவர்களுக்கோ ஒரு பிரதிநிதித்துவம் கூட வழங்கியது கிடையாது. இந்த நிலையில் சமூக நல்லிணக்கம் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் என்ன உரிமை இருக்கிறது ? அரசியல் ஆதாயத்திற்காக ராம பிரானை கையில் எடுத்தார்கள். அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடி ஆட்சியில் அமர்ந்து பலனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராம பிரானை ஒரு கடவுளாக பார்க்கிறது. அவர் மீது மிகுந்த பக்தியையும், மதிப்பையும் வைத்திருக்கிறது.  எந்த காலத்திலும் ராம பிரானை அரசியல் ஆதாயத்திற்கு மகாத்மா காந்தி  பயன்படுத்தியதில்லை. காந்தியடிகளின் வழிவந்த காங்கிரஸ் இயக்கத்தின் கருத்துக்களைத் தான் தலைவர் ராகுல்காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் வலியுறுத்தி இருக்கிறார்கள். ராமர் மீது பக்தி கொள்வதற்கும் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் உள்ள வேறுபாட்டை யார் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அயோத்தியில் பாபர் மசூதியும் இருக்க வேண்டும்! ராமர் கோயிலும் கட்ட வேண்டும் என்பதே அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியின் நிலை! அதுவே காங்கிரஸின் நிலை!

அயோத்தி பிரச்சினை குறித்து வழக்கு தொடுத்த மறைந்த இக்பால் அன்சாரியின் மகன் அசீம் அன்சாரி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறாரே ?

அசீம் அன்சாரி கலந்து கொண்டது இஸ்லாமியர்களுக்கே உரித்தான சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது. அசீம் அன்சாரி அளித்த பேட்டியில், ‘பாபர் மசூதிக்காக வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தீர்ப்பின்படி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று கூறியிருக்கிறார். இத்தகைய பெருந்தன்மையை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினரிடம் எதிர்பார்க்க முடியுமா ?

தமிழக பா.ஜ.க.வினர் ராமர் கோயில் பூமிபூஜை நடந்த வேளையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி இருக்கிறார்களே ?

பா.ஜ.க.வின் கொண்டாட்டம் குறித்து வந்த செய்தியை விட, கு.க. செல்வம் காவி துண்டு அணிந்து ராமர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதைத்தான் ஊடகங்கள்  முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக  வெளியிட்டிருக்கின்றன. இனி தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்ப்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. கட்சி மாறி கு.க. செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன் கட்சி வளர்க்கிற வேலையை அவர் பார்த்துக் கொள்வார். அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க. வந்த கு.க. செல்வத்திற்கு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வாய்ப்பு கொடுத்தது,  தி.மு. கழக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. அந்த பெருந்தன்மைக்கு தகுதியற்றவர் என்பதை கு.க. செல்வம் நிரூபித்து விட்டார்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடம் சரியாக ஒதுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளதே ?

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கல்வி பெறுவது சட்டமாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற நடைமுறை தமிழகத்தில் முழுமையாக பின்பற்றப்படவில்லை. 2014-முதல் 2019 வரை 70.31 சதவிகித இடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளனன. ஏறத்தாழ 30 சதவிகித இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன . தற்போது கொரோனா தொற்றை காரணமாகக் கூறி தனியார் பள்ளிகள் 25 சதவிகித இடங்களை நிரப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. அதேபோல, தமிழக அரசு 25 சதவிகித மாணவர்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கிறது. எனவே, தமிழக அரசு தலையிட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்துவதோடு, கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவிகித இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனயாக எடுக்க வேண்டும்.

ஹிரோஷிமா, நாகாசாகி பேரழிவு நடந்து 75 ஆண்டுகள் கடந்து விட்டதே ?

உலக மனிதகுல வரலாற்றில் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 6, 1945 அன்று ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா, நாகாசாகியில் முதல் அணுகுண்டு வீசப்பட்டதனால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல இரண்டாவது குண்டு வீச்சில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஜப்பான் மீது அமெரிக்கா மேலும் ஓர்  அணுகுண்டை வீசுவதற்கு தயாரான நிலையில் ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு அணு ஆயுதங்களின் அபாயம் குறித்து அனைத்து நாடுகளும் கவலையை வெளிப்படுத்தி வருகின்றன. பாதுகாப்பின் பெயரில் பல நாடுகள் அணு ஆயுத பரிசோதனைகள் மேற்கொண்டாலும் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என்ற உடன்படிக்கையில் வடகொரியா தவிர அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டு இருக்கின்றன. கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் அணு ஆயுதம் இல்லாத அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு உலக நாடுகள் அனைத்தும் இந்நாளில் சூளுரை ஏற்க வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லீம்கள் சகிப்புத்தன்மையுடன் ஆதரவு வழங்கியுள்ளனரே ?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பூமிபூஜையில் பிரதமர் கலந்து கொண்டதும், அதை மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்ததும் எவரும் மறந்திட இயலாது. அதேபோல, உச்சநீதிமன்ற ஆணையின்படி இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக ராம ஜென்ம பூமி வளாகத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள தனிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் பாபர் மசூதியை முஸ்லீம் வக்பு வாரியம் கட்ட திட்டமிட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி எடுத்த அக்கறையைப் போல பாபர் மசூதி கட்டுவதற்கும் அக்கறை எடுப்பாரா ? பாபர் மசூதி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பாரா ? அதை மத்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்புமா ? இதுவே மதச்சார்பற்ற சக்திகளின் கோரிக்கையாகும்.

இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளாரே ?

குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் மட்டும் என்கிற திட்டத்தை ஊக்குவிக்கவும், அதை மீறுபவர்களுக்கு சில சலுகைகளை மறுக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. 2048 இல் இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உலகில் சராசரியாக சதுர கிலோ மீட்டருக்கு 20 பேர் வாழ்கிறார்கள் என்றால், இந்தியாவில் சதுர கிலோ மீட்டருக்கு 419 பேர் வாழ்கிறார்கள். 1950 இல் 20 பேராக இருந்தது, 2020 இல் 419 பேராக உயர்ந்து 350 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் 1951 இல் அறிமுகப்படுத்தப்பட்ட குடும்ப கட்டுப்பாடு திட்டம் மீண்டும் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டிய நிலை இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மக்கள் தொகை. இதை புரிந்து கொண்டு மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post அயோத்தியில் பாபர் மசூதி இருக்க வேண்டும்! ராமர் கோயிலும் கட்ட வேண்டும் என்பதே அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியின் நிலை! அதுவே காங்கிரஸின் நிலை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

உச்சநீதிமன்ற தீர்ப்பை சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட 20 கோடி இஸ்லாமியர்களை போற்றுகிறோம்! பாராட்டுகிறோம்!
முக்கியமான நாட்டு நடப்புகள் குறித்து நாள்தோறும் ஆதியின் பதில்களை படியுங்கள் – ஆதி.கோபண்ணா

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றிருக்கிறதே ?

இந்தியாவின் வகுப்புவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை, ஜனசங்கம், பா.ஜ.க., ஆகிய அமைப்புகள் நீண்ட நெடுங்காலமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்களை தொடர்ந்து கோரிக்கையாக எழுப்பி வந்தன. அதில் ஒன்றன் பின் ஒன்றாக பா.ஜ.க.விற்கு இருக்கிற பெரும்பான்மை பலத்தில் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் மூலமாக நிறைவேற்றி வருகிறது.

மக்களிடையே அன்பை போதிக்கும் கடவுளாக கருதப்பட்ட ராமபிரானுக்கு கோயில் கட்டுவதில் அனைவருமே விருப்பம் கொண்டுள்ளனர். ஆனால், பாபர் மசூதியை இடித்து, கலவரம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்குப் பிறகு அந்த இடத்தில் அன்பை போதித்த ராமபிரானுக்கு கோயில் கட்டுவதை உண்மையான ராம பக்தர்கள் விரும்புவார்களா என்று தெரியவில்லை.  500 ஆண்டுகளுக்கு முன்பு ராமர் கோயில் கட்டியதற்கான ஆதாரம் இல்லை. 500 ஆண்டுகாலமாக இருக்கிற பாபர் மசூதியை இடித்தது சட்டப்படி குற்றம். ஆனால், மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் இன்று ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட 20 கோடி சிறுபான்மை இஸ்லாமியர்களை மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவரும் போற்றிப் பாராட்டுவார்கள்.

கோயம்பேடு சந்தை கடந்த மே மாதம் முதல் திறக்கப்படாமல் இருக்கிறதே ?

சென்னை கோயம்பேடு சந்தையில் 1 லட்சத்து 50 ஆயிரம் மொத்தம் மற்றும் சில்லரை வியாபார வணிகர்கள் தொழில் செய்து வருகின்றனர். ஏறத்தாழ 20 ஆயிரம் மொத்த மற்றும் சில்லரை வியாபார கடைகள் உள்ளன. சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசை, மாதவரம் பகுதிகளுக்கு மாற்றப்பட்டதில் பல்வேறு சிரமங்களை வணிகர்கள் எதிர்கொண்டனர். நூற்றுக்கணக்கான டன் காய்கறிகள், பூக்கள் அழுகி நாசமாகிற நிலை ஏற்பட்டது. ஏறத்தாழ 50 ஆயிரம் குடும்பங்கள் நம்பியுள்ள கோயம்பேடு சந்தையை உடனடியாக திறக்கவில்லை எனில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிவுடன் ஏற்று உடனடியாக கோயம்பேடு சந்தையை திறக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தி.மு. கழக சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் பா.ஜ.க.வில் சேரப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளதே ?

அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்த இவர், தற்போது பா.ஜ.க.வில் சேருவதில் வியப்பொன்றும் இல்லை. ஏற்கனவே, பா.ஜ.க.வில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேதாரண்யம் வேதரத்தினம், ஆற்காடு சீனிவாசன் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறி விட்டார்கள். நயினார் நாகேந்திரன் மனஉளைச்சலுடன் எந்த கட்சியில் சேருவது என்று முடிவெடுக்காமல் குழம்பிக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க.வில் கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிற நேரத்தில் அக்கட்சியில் சேரும் கு.க. செல்வத்தின் எதிர்காலம் கேள்விற்குறியாகவே இருக்கும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதின் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாரே ?

பண்பாளர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் விரைவில் குணமடைந்து உடல் நலம் பெற வேண்டுமென வாழ்த்துகிறோம். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தேனி முருகேசன், நெல்லை சங்கரபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மௌலானா ஆகியோர் விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துகிறோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் அரியலூரில் தொடங்கி வைத்துள்ளாரே ?

காங்கிரஸ் பேரியக்கத்தில் தலைவர் கே.எஸ். அழகிரி தொடக்கி வைத்த உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் வெற்றிகரமாக அமைய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் முன்னோடிகள் உறுப்பினர் படிவங்களையும், அடையாள அட்டைகளையும் அதற்குரிய தொகையை செலுத்தி பெற்று வருகின்றனர். இந்தப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை உறுதி செய்கிற வகையில் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் வெற்றிகரமாக நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் பணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஆர். தாமோதரன், பொதுச்செயலாளர் கீழானூர் ராஜேந்திரன் பொன். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கையின்படி மூன்றாவது மொழியை படிப்பது தமிழக மக்களின் எதிர்காலத்திற்கு நல்லது என்று மிகுந்த கவலையோடு தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் கூறியிருக்கிறாரே ?

புதிய கல்விக் கொள்கையின்படி மூன்றாவது மொழியை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தில் இருமொழி தான் ஏற்கப்படும் என்று பா.ஜ.க. தவிர அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் கூறிவிட்டன. இதற்குப் பிறகும் மூன்றாவது மொழியாக இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் படிக்கலாம் என்று கூறுகிறார். பல மொழிகளை படித்து தமிழர்கள் பன்மொழிப் புலவர்களாக மாற வேண்டும் என்று முருகன் விரும்புகிறாரா ? மேலும் நாம் மூன்றாவது மொழியை படித்தால் மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழை மூன்றாவது மொழியாக  ஏற்றுக் கொள்வார்கள் என முருகன் கூறுவது காதில் பூ சுற்றுகிற வேலையாகும். எதைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்குமோ, அந்த மொழியைத் தான் மாணவர்கள் படிப்பார்கள். எனவே, மூன்றாவது மொழி குறித்து பா.ஜ.க. பேசுவதை தமிழ்நாட்டில் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பொருளாதாரப் பேரழிவிலிருந்து எப்போது மீள்வது ?

பொருளாதாரப் பேரழிவிலிருந்து இந்தியாவை மீட்பதை விட, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் தான் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் இந்த நிலையில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் நடத்தியிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள முன்னேறிய 12 மாநிலங்களில் மொத்த கொரோனா பாதிப்பில் 85 சதவிகிதத்தினர் அடங்குவார்கள். இதில் 40 சதவிகிதத்தினர் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடகா, ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. கொரோனா நோய்ப் பரவலை தடுக்காமல் பொருளாதாரப் பேரழிவில் இருந்து இந்திய மக்களை காப்பாற்றுவதற்கு பிரதமர் மோடி என்ன தந்திரம் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இதுவரை பா.ஜ.க. அரசின் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை. எனவே, பொருளாதாரப் பேரழிவிலிருந்து இந்தியா மீள்வது எப்போது என்று எவராலும் உறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் வழக்கு தொடுத்திருக்கிறாரே ?

இவ்வழக்கில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது ? இதில் உறுதி செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் ? பலியானோர் எத்தனை பேர் ? போன்ற தகவல்களை தமிழக சுகாதாரத்துறை முழுமையாக வெளியிடவில்லை. இதனை நாள்தோறும் வெளியிட வேண்டுமென்றும், இதில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என்று நம்புகிறோம்.

The post உச்சநீதிமன்ற தீர்ப்பை சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட 20 கோடி இஸ்லாமியர்களை போற்றுகிறோம்! பாராட்டுகிறோம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.