சாவித்திரி கண்ணன், Author at தேசிய முரசு - Desiya Murasu

பீகார் தேர்தல் – தந்திரத்தால் சாதித்த வெற்றி!
பீகார் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றிக் கோட்டைத் தொட்டது எப்படி என்று பார்த்தால், பாஜகவின் அரசியல் தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகத் தான் பார்க்கிறேன்.

தேர்தலுக்கு முந்திய கள ஆய்வில் எல்லோருக்கும் தெரிய வந்தது என்னவென்றால், ’மகாபந்தன்’ எனப்படும் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்பதே! லாலுவுவின் மகன் தேஜஸ்வி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.அவரும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்றது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மூன்றுமுறை ஆட்சி கட்டிலில் இருந்துவிட்ட நிதீஸ்குமார் மீதான சலிப்பு சற்று பீகார் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் சொல்லப்பட்டது! அதே சமயம் பாஜக மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்று எந்த ஒரு செய்தியும் வரவில்லை!

நிதீஸ்குமார் மீது அதிருப்தி என்றால்,அது அவரை மட்டும் பாதிக்குமாம்! அவரோடு சேர்ந்து ஆட்சி புரிந்த பாஜகவை அது கொஞ்சம் கூட பாதிக்காதாம்! பீகாரில் மூன்றாவது இடத்தில் இருந்த பாஜக தன் கூட்டாளியை மட்டும் பலவீனப்படுத்திவிட்டு தான் முதல் இடத்திற்கு வந்துவிட்டது. முதல் இடத்தில் இருந்த நிதீஸின் ஐக்கிய ஜனதா தளம் இந்த முறை மூன்றாவது இடத்திற்கு பாஜகவால் தள்ளப்பட்டுவிடும் என்று நான் அறம் இணைய இதழில் அனுகூல சத்ருவாக நிதீஸை அழித்து வளரும் பாஜக என்று எழுதி இருந்தேன்!

நிதீஸ்குமாரின் கீழ் துணை முதல்வராக பா.ஜ.கவின் சுசில் குமார்மோடியை இது நாள் வரை பயிற்சி பெற வைத்ததன் மூலம்  அவரையே தற்போது முதல்வராக்கி விட்டு நிதீஸ்குமாரின் முக்கியத்துவத்தை பா.ஜ.க குறைத்துவிட வாய்ப்புள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் பாஜகவுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி நிதீஸை தேய்பிறையாக்கி, பாஜகவை வளர்பிறையாக்கிய வரலாறு என்பது மக்கள் நம்பிக்கையை கூடுதலாக வென்றெடுத்து பாஜக பெற்றதல்ல, அது முழுக்க,முழுக்க தந்திரத்தால் கட்டமைக்கப்பட்டது! இதற்கு தனி நபர் யாரும் உரிமை கொண்டாடமுடியாது! அது பாஜகவின் பின்பு இயங்கும் ஆர்.எஸ்.எஸ் வகுத்து கொடுத்த செயல்திட்டம்!

வெற்றிக்கு வித்திட்ட இரண்டு சூழ்ச்சிகள்

பீகாரில் முஸ்லீம் வாக்குகள் அதிகம். லாலு கட்சிக்கு முஸ்லீம் வாக்கு வங்கி மிகப் பெரிய பலம்.ஆகவே அதை உடைக்க வேண்டும். எனவே செல்வாக்கான AIMIM தலைவர் ஓவைசியை மிரட்டி, ஆர்.ஜே.டியுடன் சேரவிடாமல் தனித்து நிற்கச் செய்தனர்! இதன் மூலம் 24 இடங்களில் ஆர்.ஜே.டீக்கு வர வேண்டிய இஸ்லாமிய வாக்குகள் அப்படியே பிரிந்து ஓவைசிக்குப் போனது! இதன் மூலம் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள சீமாஞ்சல் என்ற மிகப் பெரிய பகுதியிலேயே பாஜக வெற்றி பெற முடிந்தது! அங்கே மகாபந்தனுக்கு வெற்றி பிரகாசமாயிருந்த முஸ்லீம்கள் அதிகமான தொகுதியிலேயே அது தோல்வியை தழுவியது!

பீகாரில் தலித் வாக்கு வங்கி என்பது வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கும் அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த தலித்து கட்சிகளை மகாபந்தன் கூட்டணிக்குள் செல்லவிடாமல் தடுத்தது. மாயாவதியின் கட்சியான பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தலித் கட்சிகள் தனியே களம் கண்டன! அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் நெருங்கிய கூட்டாளியான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தியை கூட்டணியில் இருந்து வெளியேற்றி தனியே நிற்க செய்தனர் – அதுவும் நிதீஸ் கட்சி நிற்கும் இடங்களில் மட்டும் நின்று அவர்கள் நிதீஸை தோற்கடிப்பார்களாம்! பாஜக நிற்கும் தொகுதியில் பாஜகவை ஆதரிப்பார்களாம்! இந்த மோசடிக்கு தன்னையே பலிகடாவாக்கிக் கொண்டு பாஜகவை வெற்றி பெற வைத்துள்ளார் சிராஜ்பாஸ்வான். இவரை கூட்டணிக்குள் வைத்திருந்தால் லோக் ஜனசக்திக்கும் கணிசமான தொகுதிகள் கிடைத்திருக்கும்.ஐக்கிய ஜனதாதளமும் நல்ல வெற்றியை ஈட்டியிருக்கும்! ஆனால், ஒரு தலித் கட்சியை அரவணைத்து அழிக்க வேண்டும் என்பது தானே பாஜகவின் திட்டம்! ஒரே ஓரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று, தன்னையும் அழித்துக் கொண்டு, 30 இடங்களில் நிதீஸின் ஐக்கிய ஜனதா தளத்தின் தோல்விக்கு காரணமாயிற்று, இந்தக் கட்சி!

ஆக, முதல் திட்டத்தின் மூலம் முஸ்லீம் வாக்குவங்கியை பிரித்து மகாபந்தனுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளிலேயே அவர்களை மண்ணைக் கவ்வ வைத்தார்கள்!

இரண்டாவது திட்டத்தின் மூலம் கூடவே தங்களுக்கு நெருக்கமாக உள்ள நீதிஸை பலமிழக்க வைத்துவிட்டு தாங்கள் முன்னுக்கு வந்து விட்டனர்!

இத்துடன் முகேஷ் சஹினிஸ் என்ற சினிமா பிரபலத்தின் புதிய கட்சிக்கு வாய்ப்பளித்து வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டனர்!

இந்த தேர்தலில் எதிர்பாராத ஒரு நிகழ்வு என்னவென்றால், பீகாரில் இடதுசாரிகளுக்கு ஒரு வலுவான தளம் ஏற்பட்டுள்ளது. சி.பி.எம்,சி.பிஐ, சி.பி.எம் மார்க்சிஸ்ட்,லெனிஸ்ட் கட்சிகள் 29 தொகுதிகளில் நின்று கணிசமான இடங்களை வென்றுள்ளனர்.

காங்கிரஸின் பலவீனம் என்ன?

காங்கிரஸ் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க தவறியது. இதற்கு பீகார் காங்கிரஸ் தலைமையும் முயற்சிக்கவில்லை. தேசிய காங்கிரஸ் தலைமையும் முயற்சிக்கவில்லை. மாகாபந்தன் கூட்டணியில் தனக்கு 70 சீட்டுகளை உறுதிபடுத்திக் கொண்ட காங்கிரஸ் அதில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போனது. கூட்டணிக்குள் ஏதாவது வலுவான இஸ்லாமிய மற்றும் தலித் கட்சியை உள்ளுக்கு இழுத்து நிற்க வைத்து தன் தொகுதிகளில் கொஞ்சம் விட்டுத் தந்திருந்தால் சுமார் 45 இடங்களில் அது வெற்றி உறுதியாக வெற்றி பெற்று இருக்கும்! காங்கிரஸின் செய்ல்பாடில்லாத தேக்க நிலைக்கு மாறக பாஜக இமைப்பொழுதும் சோராமல் இயங்கி வருவது குறிப்பிட தக்கதாகும்!

மிகப் பெரும்பாலோர் ஓட்டுமெஷினில் ஏதாவது சூட்சுமம் செய்து வெற்றி பெற்று இருப்பார்களோ என்ற கோணத்தில் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். அதற்கு வாய்ப்பு இல்லாமலில்லை! ஆயினும் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தான் தோன்றுகிறது. எனினும், அது குறித்தும் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

The post பீகார் தேர்தல் – தந்திரத்தால் சாதித்த வெற்றி! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்!
உலக பொருளாதார அறிஞர்களில் முக்கியமானவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் தனது 88வது பிறந்த நாளை மிக அமைதியாக எதிர்கொண்டார்!

இந்த நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட தன் பிறந்த நாளில் போஸ்டர்கள், பேனர்கள், விழாக்கள் என ஆர்ப்பாட்டமாக  எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம்.

மன்மோகன் சிங் எளிமையானவராக இருப்பதால் ஊடகங்களும் அவரது பிறந்த நாளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை! ஆனால், அவர் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான முன்னோடி என நான் கருதுகிறேன்!

அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி ஒரு சம்பிரதாய வாழ்த்தை டிவிட்டரில் தெரிவித்தார்!

சிதம்பரமோ, ’’மன்மோகன் சிங்கிற்கு பாரதரத்னா விருது தந்து கௌரவிக்க வேண்டும்’’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்கள் வாழ்த்தினர். ஆனால், இவர்களைவரைக் காட்டிலும் ராகுல்காந்தியின் வாழ்த்து மனதைத் தொடுவதாக இருந்தது!

’’மன்மோகன்சிங் போன்ற பிரதமர் இல்லாததை நாடு ஆழமாக உணர்கிறது. அவர் நேர்மை, கண்ணியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உதாரணமானவர்! ’’ என ராகுல்காந்தி கூறியுள்ளார். இது வெற்றுப் புகழ்ச்சியில்லை!

இந்தியாவின் சக்தி வாய்ந்த நிதி அமைச்சராக ஐந்தாண்டுகள் பணியாற்றிப் பல அதிரடி பொருளாதார மாற்றத்திற்கு வித்திட்டவர், பத்தாண்டுக் காலம் பிரதமராக இருந்தவர் என்ற வகையில் அவர் மீது இது வரை ஒரு சின்ன ஊழல் குற்றச்சாட்டு கூட எழுந்ததில்லை! அப்பழுக்கற்ற நேர்மையாளராகத் தன்னை உறுதியாகக் கட்டமைத்துக் கொண்டவர் மன்மோகன் சிங்! பல ஆயிரம் கோடிகளைச் சுலபமாகச் சம்பாதிக்கக் கூடிய இடத்தில் அவர் இருந்தார்! அவர் கேட்காமலே அவருக்குக் கொட்டித்தரப் பல பெருந்தொழில் அதிபர்கள் காத்திருந்தனர். ஆனால், அந்த எண்ணத்தில் அம்பானிகளோ, அதானிகளோ, டாட்டாக்களோ, பிர்லாக்களோ அவரை நெருங்கக் கூட முடியாத ஒரு நெருப்பு வளையத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் அவர் கட்டமைத்திருந்தார். அதனால் தான் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான நரசிம்மராவ் அவர்களே மன்மோகன்சிங்கை பூரணமாக நம்பி அவரது புதிய பொருளாதாரத் திட்டங்கள், அணுகுமுறைகள் அத்தனையையும் ஆதரித்தார்.

அதே போல நரசிம்மராவ் அவர்களையடுத்து காங்கிரஸின் பிரதமராகும் வாய்ப்பு  சோனியாகாந்திக்கு இருந்தும், அதை ஏற்காமல் தவிர்த்து, ’’இதற்கு இன்னார் தான் பொருத்தமானவர்’’ என சோனியா புத்திசாலித்தனமாக ஒரு முடிவு எடுத்து மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்! இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானது அதுவே முதல் நிகழ்வாகும்.

அப்போதும் பலர், ’’சும்மா பேருக்குத் தான் சிங் பிரதமர்! ஆனால், அதிகாரமெல்லாம் சோனியா தான்! கூடிய விரைவில் மன்மோகனை தகுதி இறக்கம் செய்துவிட்டு சோனியா பிரதமராகலாம் எனப் பேசினர். ஆனால், கடைசி வரை அது நடக்காதது மட்டுமல்ல, அடுத்த முறையும் முழு ஐந்தாண்டுகள் டாக்டர். சிங் தான்  பிரதமராகச் செயல்பட்டார்!

அப்போது பாஜகவும், அவர்களின் ஆதரவாளர்களும், ’’சிங் அதிகாரமற்றப் பிரதமர். சோனியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்’’ என்ற பிரச்சாரத்தைப் பரப்பினர்! ஆனால், அது முற்றிலும் பொய் என்பது மட்டுமல்ல, மன்மோகன்சிங், தன்நிகரற்ற சுதந்திர மனிதராக இயங்கினார் என்பது அன்றைய அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும்!

கட்சி அரசியலிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, அரசு நிர்வாகத்தில் மட்டுமே முழுமையான கவனத்தைச் செலுத்தியதால் மன்மோகன் மீது அப்படியொரு தோற்றம் உருவானது. அரசியல் தொடர்பான சிக்கல்களோ, கவலைகளோ மன்மோகனுக்கு தராமல் சோனியா காந்தியும் அவரை பாதுகாத்தார். இதன் மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் டாக்டர். சிங்கின் தொண்டு முழுமையாகப் பயன்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கருதியது. எனவே, அரசியல் சூதுவாது இல்லாதவராக அவரும் தன் இயல்பு படியே செயல்படமுடிந்தது.

மன்மோகன்சிங் பற்றி மேலதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அவர் இன்றைய பாகிஸ்தானில் இருக்கின்ற மேற்கு பஞ்சாபில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். பல மைல்கள் நடந்து சென்று பள்ளிக் கல்வியை கற்றவர்! சிம்னி விளக்கு ஒளியில் படித்து அறிவை வளர்த்தவர்! சிறந்த மாணவனாகத் திகழ்ந்த அவர் உலக புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரம் படித்தார்!

பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலையில் டாக்டரேட் முடித்தார்! பஞ்சாப் பல்கலையிலும், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையிலும் பேராசிரியராக வேலை பார்த்தவர். அதன் பிறகு நிதி அமைச்சகம், வெளி நாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஆலோசகராக இருந்தவர்! ரிசர்வ் வங்கியின் இயக்குநர், ஆளுனர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

மன்மோகன் சிங் அடம்ஸ்மித், ஆசியமணி… உள்ளிட்ட பல முக்கிய உலக விருதுகளைப் பெற்றவர்.

மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சியின் முக்கிய சாதனையாக தகவல் பெறும் உரிமைச் சட்டம், வன உரிமைகள் அங்கீகரிப்பு சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம்,எட்டு ஐ.ஐ.டிக்கள், ஏழு ஐ.ஐ.எம்கள் முப்பது மத்திய பல்கலைகள் என உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியது, ரயில்வே துறையை லாபகரமாக்கியது, தனி நபர் வருமானத்தை 250% அதிகரித்தது உள்ளிட்டவற்றைக் கூறலாம்!

தற்போதைய அரசின் தவறான பொருளாதார போக்குகளை, தவறுகளை உடனுக்குடன் சிங் சுட்டிகாட்டி விமர்சிக்கிறார்!  இந்த 88 வயதிலும் தன்னை சுறுசுறுப்பாக, தெளிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் பற்றற்றவராக வாழ்வதும் ஒரு காரணமாயிருக்கலாம்!

(பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன்  அறம் ஆன்லைனில் பதிவு செய்தது.)

The post இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஜெயகாந்தனும், கலைஞரும்!
ஒரு மாலை நேரம் ஜெயகாந்தன் இல்லம் சென்றேன்.” தோழர், முன்பு ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்று துக்ளக்கில் எழுதினீர்கள். அது 1973 ல் எழுதினீர்கள். அதற்கு பின்பு எவ்வளவோ அரசியல் அனுபங்கள் ஏற்பட்டிருக்குமல்லவா? அதை நீங்கள் எழுதலாமே என்றேன். உடனே அவரிடமிருந்து வேகமாக ஒரு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என நான் எதிபார்க்கவில்லை.

“ஆமாம், நல்ல யோசனை! சோவிடம் பேசட்டுமா?” என்றவர், செல்போன் எங்கே என சுற்றும்,முற்றும் பார்த்து, தேட தொடங்கியதும், தோழர், ஒரு நிமிஷம்,துக்ளக்கில் நீங்க இப்ப எப்படி எழுத முடியும்..? என்றேன்.

”ஏன்..?  என்றார்.

“இல்ல தோழர், முன்பு நீங்கள் துக்ளக்கில் எழுதிய கால கட்டத்தில் நீங்களும், சோவும் காமராஜரை ஆதரிப்பவர்களாக இருந்தீர்கள். ஆனால், இன்றோ, சோ ப ஜ கவை ஆதரிப்பவராகவும், ஜெயலலிதாவை ஆதரிப்பவராகவும் உள்ளாரே..!”

”சரி, அப்ப எந்த பத்திரிகையில் எழுதாலாம்?”
தற்போதுள்ள அரசியல் பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றில் எழுதலாம், ஜுனியர் விகடன், நக்கீரன், குமுதம்  ரிப்போட்டர்.. இவற்றில் ஒன்றில் எழுதலாம் என்றேன்.

ஒரு சில வினாடி யோசித்தவர்,அப்ப நக்கீரனிலேயே எழுதிடுறேன். கோபாலிடம் பேசிடுறேன்.” என்றவர் அவரே,தன் செல்போனில், நக்கீரன் கோபலுக்கு போன் போட்டார். “கோபால் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.ஒன்றுமில்லை. சாவித்திரி கண்ணன் ஒரு யோசனை சொன்னார். அது சம்மந்தமாத்தான்! நாளை மாலை வாங்களேன். ம்.. வந்திடுறீங்களா.. சரி” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

“அப்ப நாளைக்கு நீங்களும் வந்திடுங்களேன்”என்றார்.
சரி தோழர்” என்று சொல்லி நானும் விடை பெற்று வெளியே வந்தவுடன், நக்கீரன் கோபாலிடமிருந்து போன் வந்தது .
என்னதம்பி, என்ன விஷயம்? ஏன் ஜெயகாந்தன் கூப்பிடுகிறார்?” என்றார்.

விஷயத்தை சொன்னவுடன், அவர் மகிழ்ச்சியுடன்,”ரொம்ப நல்லது.எதுக்கும் நாளைக்கு நீயும் வந்திடு, கண்ணா..! மனுஷர், ரொம்ப கோபக்காரர் பாத்துக்க, நீயும் வந்திட்டா நல்லா இருக்கும்.” என்றார்.

அடுத்த நாள் மாலை நானும், அண்ணன் நக்கீரன் கோபலும் ஒன்றாகவே ஜெ கே வீட்டிற்கு சென்றோம். தோழர் எழில்முத்துவும் அங்கிருந்தார்.

எங்களைவரவேற்ற ஜெ கே “ கோபால், சாவித்திரி கண்ணன் சொன்னார், நல்ல யோசனையா பட்டது. உங்க பத்திகையிலே என் அரசியல் அனுபவங்களை தொடராக எழுதலாம்னு தோணுச்சு”
உடனே கோபால்,” ரொம்ப சந்தோசம் அண்ணே”. முதல்ல இரண்டு இஷ்யூவிலே நீங்க எழுதுறீங்க என்று விளம்பரம் செய்துடறேன்..!” என்றதோடு, ஒரு நல்ல தொகையை கவரில் வைத்து ஜெயகாந்தனிடம் கொடுத்து, நான் உங்களுக்கு வேற என்ன செய்யனும்’ என்றார்.

“ நான் சொல்லச் சொல்ல எழுதுவதற்கு ஒருவரை ஏற்பாடு செய்யுங்கள்.. சாவித்திரி கண்ணனுக்கு சவுரியப்படுமானாலும் சரி தான்” என்றார். நான் பணிவாக, இல்லை தோழர், எனக்கு சவுரியப்படாது. நம்ம, எழில்முத்துவை எழுத வைத்து கொள்ளுங்கள் என்றேன்.

அதன்படி எழில்முத்துவிற்கும் ஒரு சம்பளம் தருவதாக கோபால் ஒத்துக் கொண்டார். நக்கீரன் கோபாலும் மிகுந்த உற்சாகத்தோடு விளம்பங்கள் செய்தார். நாட்கள் உருண்டோடிக் கொண்டே இருந்தது. ஆனால், ஜெ கே எதையுமே எழுதித் தரவில்லை. நக்கீரன் கோபால் என்னிடம், ‘’கண்ணா, என்னன்னு கொஞ்சம் கேட்டு சொல்லேன்” என்றார்.

நான் ஜெ கே வீட்டிற்குச் சென்றேன்.”என்ன தோழர், எதுவும் எழுதலையா?” என்றேன். “இல்லை கண்ணன் , இப்ப இருக்கிற சூழல்ல, நான் எதும் எழுதினா நல்லா இருக்காது ” என்றார்.
ஏன் தோழர் இப்படி சொல்றீங்க?” என்றேன்.

“அந்த காலத்துல நான் தி.மு.க. வையும், கருணானிதியையும் ரொம்ப கடுமையா விமர்சித்து தான் அதிகம் பேசி, செயல்பட்டுள்ளேன். இப்ப அதை நினைவு கூர்வதில், எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை ” என்றார்.

நான் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவரை பாத்த வண்ணம் இருந்தேன். இன்றைக்குள்ள நிலையில் கருண நிதி பற்றியும், தி.மு.க. பற்றியும் என் மதிப்பீடு மாறியுள்ளது.. அரசியல் சூழல்களின் மாற்றம் ஒரு காரணம் என்றாலும், காலமும் நம்மை பக்குவப்படுத்தி விடுகிறது தானே..” என்றார்.  நீங்க சொல்றது சரி தான் தோழர். அப்ப நான் கோபால் கிட்ட சொல்லிவிடுகிறேன் என்று கூறி விடை பெற்றேன்.

நக்கீரன் கோபால் அண்ணனை சந்தித்து ஜெ.கே. கூறியதை அப்படியே கூறினேன். வேறு யாராயிருந்தாலும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் நிச்சயம் வெளிப்படுத்தி இருப்பார்கள்.

ஆனால், கோபால் அவர்கள், நான் பேசியதை உள் வாங்கி கொண்டு, ஒரு நிமிடம் அமைதி காத்துவிட்டு, “அவர் சொல்றதும் சரி தான்…’ என்றார்.  ஆம், எந்த திமுகவையும், கலைஞரையும் தீவிரமாக, ஆக்ரோஷமாக ஜெயகாந்தன் தாக்கி விமர்சித்தாரோ, அந்த திமுக வின் தலைவர் கருணாநிதியை கடைசி காலத்தில் நேசித்தார். அதற்கு பிராமணியத்தின் மீதான அவரது பிரேமை சற்று விலகியதும் ஒரு காரணமாயிருக்கலாம்!

(சாவித்திரி கண்ணன் எழுதி aramonline.in இணையத்தில் வெளிவந்த கட்டுரை. Link – https://aramonline.in/327/kalaignar-and-jayakanthan/)

The post ஜெயகாந்தனும், கலைஞரும்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நல்லது தான் காங்கிரஸுக்குள் உருவாகியிருக்கும் இந்தக் கலகம்!
’’கலகத்தில் பிறப்பது தான் நீதி! மனம் கலங்காதே, மதி மயங்காதே!’’ என்ற கண்ணதாசன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது! சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், தற்போது காங்கிரசில் நடந்து கொண்டிருப்பது கொள்கைப் போர்! ’யெஸ், ஐடியாலாஜிகல் வார்!’ இன்றைக்கு பாஜகவின் ஆறாண்டு கால ஆட்சியிலே எத்தனையெத்தனை அழிவுகளை, சோதனைகளை நாடு சந்தித்துக் கொண்டுள்ளது. ஜனநாயக அமைப்புகளும், பண்புகளும் சிதைக்கப்பட்டுக் கொண்டுள்ளன!

காஷ்மீர் கைவிலங்கிடப்பட்டுள்ளது!

சுற்றுச் சூழல் சூறையாடப்பட்டுக் கொண்டுள்ளது!

கல்வித்துறை காவிமயமாவது மட்டுமல்ல,அது எளியவர்களுக்கு எட்டா கனியாக்கப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்த மசோதா மக்களை கூறுபோட்டு விலக்கம் செய்கிறது.

பொதுத்துறை அமைப்புகள் தனியாருக்கு பொலிகிடா விருந்துகளாக்கப்படுகின்றன!

அனைத்து வகையிலும் பாஜக மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுக் கொண்டுள்ளது.

வெறுப்பு, வன்மம், துவேஷம் இவற்றை கொண்டு மட்டுமே தன்னுடைய ராஜ்ஜியத்தை பாஜக அரசு கட்டமைத்துக் கொண்டுள்ளது.

இவற்றுக்கு எதிராக ராகுல் காந்தி என்ற ஒரு தனி மனிதன் மட்டுமே கம்பு சுழற்றும் அவலம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தொடர்வது…? தலைமைக்கு கடிதம் எழுதிய அந்த 23 தலைவர்கள் தங்கள் பங்களிப்பாக இது நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தனர்?

ராகுல் காந்தி தலைமை பொறுப்பிலிருந்து விலகியதற்கே இவர்களும், இவர்களை போன்றவர்களும் உள்கட்சிக்குள் ஒத்துழைப்பு கொடுக்காதது தானே காரணம்…!

தொண்டு செய்யும் இளைஞர்களை, எளிய குடும்ப பின்னணியில் இருந்து வருபவர்களை தூக்கிவிட முயற்சித்த அவருக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள்?சோனியா உடல் நலன் குன்றிய நிலையில், அவரவர் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டியதை விட்டுவிட்டு, கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன?

எழுதிய கடிதம் பொதுவெளிக்கு போகலாமா? பொதுவெளிக்கு போனால் அது யாருக்கு சாதகமாகும் என்று பழம்தின்று கொட்டை போட்ட பழம்பெரும் தலைவர்களுக்கு தெரியாதா? இதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன? என்ற கேள்வி பாமரனுக்கும் தோன்றக்கூடியது தானே!

அந்தரங்க சுத்தியோடு தலைமையிடம் பேசியிருக்க வேண்டியவைகளை அம்பலத்தில் தோரணம் கட்டிப் போட்டதுடன், நிரூபிக்க முடியுமா? என்று சவால் வேறு விடுகிறார்களே!

ஏன் இவர்களுக்கு இவ்வளவு கோபம்? கட்சிக்குள் விவாதித்ததை மீண்டும் பொதுவெளிக்கு வந்து டுவிட்டரில் கபிள்சிபில் வெளியிட்டது ஏன்? அதன் பிறகு ’’ராகுல் விளக்கத்தினால் எடுத்துவிட்டேன்’’ என்று மீண்டும் காட்டிக் கொடுக்கிறாரே…!

ஆட்சியில் இல்லாவிட்டாலும், பதவியில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியை மக்கள் பேரியக்கமாக தமிழகத்தில் உயிர்ப்போடு வைத்திருந்தார் காமராஜர். எந்த தலைவர்களையும் நம்பி இயக்கம் நடத்தவில்லை காமராஜ். மாறாக இளம் தளபதிகளையும், பெரும் தொண்டர் படைகளையும் நம்பித் தான் களம் கண்டார்.

’’நேரு குடும்பத்தவரே தான் மீண்டும்,மீண்டும் தலைவராவதா? ’’ என்ற எதிர்கட்சிகளின் கேள்வி அர்த்தமற்றது. காங்கிரசை அழிக்கும் நோக்கிலானது.

காங்கிரசுக்கு இன்றைய நிலையில் ராகுலைவிட்டால் வேறு யாரையுமே தலைமைக்கு சிந்தித்தும் பார்க்கமுடியாது என்பது தான் யதார்த்தம்! அவர் தலைவராவதற்கு அல்லது தலைவராக செயல்படுவதற்கு ஊறுவிளைவிப்பவர்களை உடனே வெளியேற்றினால் தான் காங்கிரஸ் உருப்படும்.

அதிகாரம், பதவியை சுவைப்பதற்கென்று மட்டுமே கட்சியில் உள்ளவர்கள் வெளியேறும் நேரம் வந்துவிட்டது!

கொள்கை உறுதியோடு மக்கள் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு மேலேற்றிவிடுவது ஒன்று தான் தீர்வு!

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)

The post நல்லது தான் காங்கிரஸுக்குள் உருவாகியிருக்கும் இந்தக் கலகம்! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இன்னும் என்ன பாக்கியிருக்கு காவு கொடுக்க?
நிருபர்: எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்கிறதே பாஜக? பாஜகவுடன் கூட்டணி உண்டா? கூட்டணி என்றால் யார் தலைமை?

எடப்பாடியார்: எலெக்சனுக்கு இன்னும் ஏழட்டு மாசம் இருக்கு? கூட்டணி பற்றி இப்ப பேச அவசியமேயில்லை’’.

அய்யோ பரிதாபம்…..!’’பாஜகவுடன் கூட்டணி இல்லை’’ என்று சொல்லவும் முடியவில்லை. ’’எந்த ஒரு கூட்டணி ஏற்பட்டாலும் அதற்குத் தலைமை அதிமுக தான்’’ என உறுதிபடுத்தவும் துணிவில்லை என்றளவுக்கான அவலம் தமிழகத்தை ஆளுகின்ற – தமிழகத்தின் மிகப் பெரிய கட்சி என்று நம்பப்படுகின்ற – அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது! அதாவது கட்சியைக் கூட காவு கேட்டு, தற்கொலைக்கு நிர்பந்திக்கப்படும் நிலையிலும் எதிர்த்துப் பேசத் துணிவற்ற அதிமுகவின் பரிதாபத்திற்குரிய நிலைமையை பார்த்தும் ஏனோ எனக்கு எள்ளளவும் வருத்தமேற்படவில்லை!ஏனென்றால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் எல்லாம் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய வாய்ப்பளிக்காமல் அனைத்தையும் அலேக்காக அள்ளி பாஜக அரசு வடமாநிலத்தவர்களுக்கே மொத்தமாக தந்த போது இபிஎஸுசும்,ஒபிஎஸுசும் வருத்தப்படவேயில்லை.

தபால் ஆபிஸில் கூட தமிழ் தெரியாத வடமாநிலத்தார் வந்து ஆக்கிரமித்த போது இந்த இருவரும் பதை பதைக்கவில்லை! தமிழக ரயில்வேயில் கடைநிலை ஊழியர் வேலை உட்பட மொத்தமாக வட மாநிலத்தவர் கபளிகரம் செய்த போதும் இவர்கள் கவலைப்படவேயில்லை!துறைமுகப் பணிகளில், காண்டிராக்டுகளில், லைசென்சில் என அனைத்திலும் தமிழர்களை துச்சமாகக் கருதி அவர்கள் துடைத்தெரிந்த போதும், இவர்கள் துயரப்படவில்லை!

விமான நிலையங்கள் விலைபேசப்படும் சூழல்கள் நெருங்கி வருவது குறித்து இவர்கள் விழித்தெழவில்லை..!மருத்துவ கல்வி தமிழர்களுக்கு மறுக்கப்பட்டது போல, ’’ஆரம்ப கல்வி தொடங்கி உயர் கல்வி வரை இனி கல்வியே ஏழைகளுக்கு எட்டா கனி தான்’’ என பாஜக அரசு சட்டம் கொண்டு வந்த போதும் இவர்கள் எதிர்க்கவில்லை!தமிழகத்தின் வரிவருவாய் அனைத்தையும் ஜீ.எஸ்.டியாக வசூலித்துக் கொண்டு தமிழகத்திற்கான பங்கை திரும்பத் தரமறுத்த பாஜக அரசிடம் உரிமை கேட்டு சண்டையிட நெஞ்சில் உரமில்லை!’’ஸ்டெர்லைட் ஆலை மூடுவதில் சட்டமன்றத்தை கூட்டிக் கொள்கை முடிவு எடுக்காதே…’’ என்ற பாஜகவின் கட்டளையை பணிவுடன் ஏற்றதில் வெட்கமில்லை!

இப்படித் தமிழகத்தின் பல நலன்களையெல்லாம் பதறாமல் பாஜகவின் காலடியில் காவு கொடுத்த அதிமுக அரசுக்கு, தற்போது கட்சியையும் காவு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது! தாங்கள் ஊழல்களில் திளைத்து கொள்ளையடிக்க, ஆட்சியாளர்கள் தமிழகத்தையே நரபலியிட துணிந்த பிறகு இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கிறது இவர்களிடம் கட்சியைத் தவிர!எதிரிகளிடம் தாயகத்தைக் காவு கொடுத்த துரோகிகள் நிலைபெற்று வாழ்ந்ததாக சரித்திரமில்லை.

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)

The post இன்னும் என்ன பாக்கியிருக்கு காவு கொடுக்க? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

எஸ்.பி.பி உடல் நிலை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறைகள் கவலையளிக்கிறது.
எஸ்.பி.பி இந்த தேசத்தின் அரிய இசை பொக்கிஷமாவார்!

கலைஞரோ,ஜெயலலிதாவோ இன்று பதவியில் இருந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகத்திடம் நேரடியாக பேசி இருப்பார்கள்!

இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சும்மா போனில் விசாரித்ததோடு சரி! அதை வைத்து பேசி வருகிறார்.

இதுவே எஸ்.பி.பி ஆந்திரா,அல்லது தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அந்த மாநில முதல் மந்திரிகள் மிகுந்த அக்கறை காட்டியிருப்பார்கள்!

“ எனக்கு சாதாரண பாதிப்பு தான்  இரண்டு நாளில் வந்துவிடுவேன் ” என்று சொல்லிச் சென்ற ’பாடும் நிலா’ கவலை தரும் நிலைக்கு போனது எப்படி? என்பது அவரது கோடானுகோடி ரசிகர்களின் மனதில் விடை தெரியாத கேள்வியாக உறுத்திக் கொண்டே உள்ளது!

எஸ்.பி.பி சேர்ந்தது முதல் தான் அந்த மருத்துவமனையின் பெயரே வெளியே தெரிய வந்தது! உண்மையிலேயே அவர்கள் நல்ல மருத்துவம் கூட தரலாம்! எனக்குத் தெரியாது!

பொதுவாக சில தனியார் மருத்துவமனைகள் தங்கள் பெயரை விளம்பரப்படுவதற்காக இந்த மாதிரி வி.வி.ஐ.பி பேஷண்டுகளை பயன்படுத்திக் கொள்வார்கள் என கேள்விபட்டுள்ளேன். பணத்திற்கு பணமுமாச்சு! இலவசமாக பெரிய விளம்பரமுமாச்சு!

இல்லாத நோய்களை பெரிதுபடுத்தி, தேவையில்லாத டெஸ்டுகள்,மருந்துகள் என செலவுகள் செய்ய வைத்து, எல்லாவற்றிலும் ஓவர் டோஸ் தந்து சாதரண நோய்களைக் கூட சிக்கலாக்கிவிடும் அனுபவங்களை நம்மில் பலர் தனியார் மருத்துவமனை விஷயத்தில் கண்டுள்ளோம் தானே!

எனவே, இந்த மாதிரி நேரங்களில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை உயர் அதிகாரி மருத்துவ குழுவுடனோ அல்லது சுகாதாரத்துறை அமைச்சரே மருத்துவ குழுவுடன் நேரடியாக விசிட் செய்தோ விவரங்களை கேட்டறியலாம்!

எஸ்.பி.பி.குடும்பத்தாருடன் பேசி நமது ஜி.ஹெச்சில் சிறப்பு மருத்துவம் தர வாய்ப்பிருந்தால் பரிசீலிக்கலாம்! ஏனெனில் தற்போது எல்லா நவீன மருத்துவ உபகரணங்களும் ஜி.ஹெச்சில் உள்ளன! மிகச் சிறந்த அனுபவமுள்ள மருத்துவர்கள் ஜி.ஹெச்சில் தான் உள்ளனர். இதோ தற்போது தலைவர்.நல்லகண்ணுவிற்கு நல்ல சிகிச்சை தரப்படுகிறது! அவர் நான்கைந்து நாட்களில் வீடு திரும்ப உள்ளாராம்!

எல்லோரும் எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்யத் தான் முடிகிறது. ஆனால்,பிராக்டிகலாக ஏதாவது செய்வது என்பது அரசாங்கத்தின் கைகளில் தான் உள்ளது!

“ எங்கேயும்,எப்போதும் சங்கீதம்…, சந்தோஷம்…!’’ என்று 16 மொழிகளில் பாடித் திரிந்த அந்த பாடும் குயிலை எத்தனை நாள் படுக்கையில் வைத்திருக்க போகிறார்களோ…?

ஸ்ரீபதி பண்ரதாரத்யுல பாலசுப்பிரமணியம் (எஸ்.பி.பி) அவர்களே, நீங்கள் மீண்டெழுந்து வந்து பாட வேண்டுமென்பது கூட இல்லை! ஏனெனில், பத்து பிறவிகள் எடுத்து பாடி சாதிக்க வேண்டியவைகளை (42,000 பாடல்கள்) நீங்கள் இந்த ஒற்றை பிறவியில் சாதித்து காட்டிவிட்டீர்!

“ பாடும் போது நான் தென்றல் காற்று..’’ எனப் பாடிய உங்கள் கந்தர்வ குரல் காற்றின் திசை எங்கும் நாளும்,நாளும் பயணபட்ட வண்ணமுள்ளது. இன்னும் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் அந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்..!

நீங்கள் குணமடைந்து புன்னகைத்தாலே போதும்! உங்கள் சுவாசமே ஒரு சங்கீதம் தான்! “ பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன..’’ என ’பாடும் நிலா’ குணமடைந்து வெளிவரும் போது, பாடக் காத்திருக்கும் கோடானுகோடி ரசிகர்களில் ஒருவனாக இந்த விண்ணப்பத்தை தமிழக அரசுக்கு வைக்கிறேன். சற்று நேரடியாக அக்கறை காட்டுங்கள்!

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)

The post எஸ்.பி.பி உடல் நிலை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறைகள் கவலையளிக்கிறது. appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நான் நினைத்தது போலவே எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன…!
பிரசாந்த் பூசன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நூறு சதவிகித உண்மை என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்த நிலையில், ’அவர் ஒருவர் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டால் போதும் தங்கள் மீதான கறைகள் மறைந்துவிடும்’என அந்த நீதிபதிகள் நினைப்பது நகைப்பிற்குரியது.

பிரசாந்த் பூசனிடம் மீண்டும்,மீண்டும் நீதிபதிகள், ’’மன்னிப்பு கேள்’’ என்று கேட்டதை ’எங்களை மன்னித்துவிடு’ என்று கெஞ்சியதாகவே மக்கள் புரிந்து கொள்வார்கள்!

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் சம்மந்தப்பட்ட நீதிபதிகள் தாங்களாகவே வந்து தங்கள் தலையை கொடுத்து சிக்கிக் கொண்டு, இப்போது எடுக்கவும் முடியாமல்,விட்டுவிடவும் முடியாமல் தவிக்கின்றனர்.

முக்கியமாக ஓய்வு பெற்ற நான்கு தலைமை நீதிபதிகள் மீது பிரசாந்த் பூசன் ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டியிருந்தார். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் அருண் மிஸ்ரா மீதும் ஏற்கனவே குற்றம் சொல்லியிருந்தார்!( ராஜஸ்தான் எம்.எல்.ஏக்களை சபாநாயகர் நீக்கிய வழக்கில் இவர் தான் தடை விதித்து எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தவர்)

குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியாக வந்து விசாரிக்க கூடாது என்ற தார்மீக நெறிகளையாவது அவர் மதிக்க வேண்டாமா?

பிரசாந்த் பூசன் தெரிவித்த கருத்து என்ன?
கடந்த ஆறு ஆண்டுகளில் தேசத்தின் ஜனநாயகத்தை அழிப்பதில் முந்தைய நான்கு தலைமை நீதிபதிகள் பங்கு வகித்தனர் என்பது தான்!

அது குறித்த விரிவான விளக்கத்தை நீதிமன்றம் பிரசாந்த் பூசனிடம் கேட்டு பெற்றிருக்க வேண்டாமா?

மாறாக, ’’நீ எப்படி எங்க ஆட்கள் மீது குற்றச்சாட்டு வைக்கலாம்’’ என்ற கோணத்தில் விசாரித்தால், இது நியாயமற்றது என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படுமா…? இல்லையா?

அந்த மனுஷன் என்னவோ மனசு தாங்காமல் டிவிட்டரில் பதிவிட்டார்.அதை அப்படியே விட்டிருந்தால் ஏதோ சில ஆயிரம் பேர் பார்த்ததோடு விவகாரம் முடிந்திருக்கும். ஆனால்,விதி யாரைவிட்டது.

’’நாங்கள் சுப்ரீம் கோர்டு நீதிபதிகளாச்சே எங்களையே சொன்னால் விடுவோமா? எங்கள் அதிகாரத்தை காட்டுகிறோம்’’ என்று இறங்க போய் இன்று ஒட்டுமொத்த ஊடகங்களிலும் பிரசாந்த் பூசன் எழுதியது வெளியாகிவிட்டது!

இப்போது நாட்டு மக்களில் பெரும்பாலானோர் ’’பிரசாந்த் பூசன் நம்ம நினைத்தை தான் பேசியிருக்கார். ஆகா,அவரை நாம் கைவிடக் கூடாது ஆதரிக்க வேண்டும்’’என்ற நிலைமைக்கு வந்துவிட்டனர்.

ஏராளமான முன்னாள் நீதிபதிகளே பிரசாந்த்பூசனை ஆதரிக்கின்றனர். வக்கீல்கள் நாடெங்கும் பிரசாந்த் பூசனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள்!

உண்மைக்கு இருக்கும் வலிமையின் வெளிப்பாடுகளே இவை!

நீதிபதி சொல்கிறார்,’’ ஆ.. நீதிபதிகளை பற்றியும், நீதிமன்றத்தை பற்றியுமான மரியாதையை பிரசாந்த் பூசன் சீர்குலைக்கிறார்!’’

உச்ச நீதிமன்றம் என்பது ஒரு தனி மனிதனால் மரியாதையை சீர்குலைத்துக் கொள்ளும் அளவுக்கு பலவீனமானதா? நீதிமன்றத்தின் மீதான மரியாதையான தோற்றம் மக்களுக்கு அதில் நீதி வழங்கும் நீதிபதிகள் மூலமாகத் தானே உருவாக முடியும்.

அந்த பீடத்தில் இருப்பவர்களுக்கே அந்த பொறுப்பு இருக்காது என்றால் – நீதிபதிகள் தங்கள் நடத்தைகளின் மூலமாக அதை சிதைப்பார்கள் என்றால் – வெளியில் இருப்பவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்று எப்படி அவர்கள் எதிர்பார்க்கலாம்?

ஒரு முன்னாள் நீதிபதி பேசியுள்ளார். ‘’பிரசாந்த் பூசனை கடுமையாக தண்டிக்க வேண்டும்.இல்லையென்றால், நீதிமன்றத்திற்கு யாரும் பயப்படமாட்டார்கள்’’

நீதிமன்றத்திற்கு மக்கள் பயப்பட வேண்டும் என்ற கருத்தே பிழையானது. நீதிமன்றத்தை நினைக்கையில் மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டுமேயன்றி, பயமாக உணரலாகாது!

ஆனால், நடைமுறையில் தங்கள் தீர்ப்புகளின் மூலம் உச்ச நீதிமன்றம் மக்களை அச்சப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதற்கு சிறந்த உதராணம் வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இந்த உச்ச மன்றம் தானே மூடப்பட்ட ஆலையை 100 கோடி அபராதம் விதித்து திறந்து கொள்ளலாம் என 2011 ல் தீர்ப்பளித்தது!

பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல் நலனுக்கு பெரும் கேடு செய்யும் ஒரு ஆலையை அபராதப் பணம்கட்டி திறந்து கொள்ளலாம் என்ற தீர்ப்பை தொடர்ந்து தானே மீண்டும் மக்கள் பாதிப்புக்கு உள்ளானதும், போராட்டம் இடையறாது நடந்து 13 உயிர்கள் பலியானதும்!

ஊரடங்கு நேரத்தில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் சாராயக் கடைகளை திறக்கும் தைரியத்தை தமிழக அரசுக்கு தந்தது எந்த நீதிமன்றம்?

தண்டனையைக் காட்டி தங்கள் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்கு உச்ச நீதிமன்றத்தை ஆளாக்கியது யார்?

பிரசாந்த் பூசனை தண்டிக்க முன்றால், இன்னும் ஆயிரக்கணக்கான பிரசாந்த் பூசன்கள் தோன்ற அது வழிவகுக்கும் என்பதால் தானே, ’மன்னிப்பு கேள் ’என்று அவகாசம் தந்து கெஞ்சுகிறீர்கள்..!

பிரசாந்த் பூசன் தெளிவுபடுத்திவிட்டார்.

நான் வைத்த விமர்சனத்தை நீதித்துறை சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும்.

நான் கடமையைச் செய்தேன்.அதனால்,கருணையை கோரவில்லை!

மன்னிப்பு கேட்க அவகாசம் தருவது நேரத்தை வீணடிப்பது ஆகும்! ஆகவே, தண்டனை தாருங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.

அப்போதும் நீதிபதி சொல்கிறார்; உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யுங்கள் பிரசாந்த் பூசன்’’

பிரசாந்த் பூசன் கூறுகிறார்; நான் கூறிய குற்றசாட்டுகள் தொடர்பாக நீதிபதிகள் தங்களை மறுபரிசீலனை செய்து கொள்வது தான் சரியாக இருக்கும்!

சபாஷ்,உண்மைக்கான் உறுதிப்பாடே இது! என்ன முடிவு என தெரிய நாடே காத்திருக்கிறது. நீதிபதிகள் தங்களை நேர்படுத்திக் கொண்டால் நாடே அதற்கு நன்றிகாட்டும்!

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)

The post நான் நினைத்தது போலவே எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன…! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இன்னும் எத்தனை அழிவுகளை சந்திக்க இருக்கிறோமோ..?
இன்னும் எத்தனை அழிவுகளை சந்திக்க இருக்கிறோமோ..? அதில் எத்தனை எளிய மனிதர்களை பலி கொடுக்கப் போகிறோமோ…?

மூணாறு மலைச் சரிவில் சுமார் 80 தொழிலாளர்கள் புதைந்து போன நிலையில் இன்னும் பாதி உடல்கள் கூட மீட்கப்படவில்லை!

மனிதர்களின் பொருளாதாரப் பேராசைகளால் மலைகளெல்லாம் சூறையாடப்பட்டு உருவானவை தாம் தேயிலைத் தோட்டங்கள்!

எத்தனையெத்தனை ஆயிரம் அபூர்வமான மூலிகை செடிகள்,மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டும், விலங்குகள், பறவைகளின் வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டும் இயற்கையை பலி கொடுத்து உருவானவை இந்த தேயிலை தோட்டங்கள்….!

முதன்முதலில் 1832 ல் நீலகிரி மலையின் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலை பயிட்ட பிரிட்டிஷார்,பிறகு கேரளாவில் மூணாறில் 1890ல் சுமார் 1,37,000 ஏக்கரில் தேயிலை தோட்டத்தை ஸ்தாபித்தனர்! அன்று முதல் இன்று வரை முதல் தரத் தேயிலையை வெளி நாட்டுக்காரன் தான் அனுபவிக்கிறான் என்பதை விடவும், நம் நாட்டின் உணவு கலாச்சாரமும் அல்லவா முற்றிலும் மாறிப் போனது!

செம்பருத்தி பூ,ஆவாரம் பூ…போன்ற எத்தனையெத்தனையோ இயற்கையான மலர்களை பறித்து காய்ச்சி வடிகட்டி கருப்பட்டி கலந்து குடித்த நம் ஆரோக்கியமான பாரம்பரிய இயற்கை தேனீர் கலாச்சாரம் நம்மிடமிருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டதே…!

இந்த தேயிலை தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்கள் நிலையோ மிகப் பரிதாபகரமானது! அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்யும் போது ரத்தத்தை உறிஞ்சும் அட்டைக் கடி,விஷப் பாம்புக் கடி,யானை, சிறுத்தைகளின் தாக்குதல்களில் உயிரிழக்கும் தொழிலாளர்கள் அனேகம்! கொட்டும் மழை,கடும் பனி,அடிக்கடி நிலச்சரிவு என்ற துயரங்கள் வேறு! இதில் செத்துமடிவது கேட்பாரற்ற ஏழைகள்!

இவர்களின் கைகள் தேயிலை தளிர்களை பறித்துப் பறித்து ரணமாகி,ஒருவிதமாக காய்ந்து முரடாக இருக்கும்! குறைந்த கூலி,கடின வேலை என்ற நிலையில் பலர் தாக்குபிடிக்கமுடியாமல் வேலையை விட்டு சென்றாலும் பசிக் கொடுமையின் விளைவாய் கோடீஸ்வர எஸ்டேட் முதலாளிகளுக்கு கூலிஆட்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள்!மேலும் இவை சுற்றுலா தளங்களாகவும் மாறியதையடுத்து அங்கே ஏராளமான கட்டிடங்கள் தாறுமாறாக அதிகரித்துவிட்டன.

கண்ணைப் பறிக்கும் இந்த தேயிலை தோட்ட அழகுகளுக்கு பின்னால், நாம் கவனிக்க தவறிய கண்ணீரை வரவழைக்கும் துயரங்களின் சாட்சி தான் சமீபத்திய இந்த மலைச் சரிவு மரணங்கள்!

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)

The post இன்னும் எத்தனை அழிவுகளை சந்திக்க இருக்கிறோமோ..? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இ பாஸ் ஒரு இமாலய மோசடி!
இத்தனைக்குப் பிறகும் எப்படி அசைந்து கொடுக்காமலும் இசைந்து நடக்காமலும் இருக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்…?

இ பாஸ் என்பது இரக்கமில்லாமல் நடத்தப்படும் இமாலய மோசடி!

உயர் நீதி மன்றம் கண்டித்துவிட்டது!

மத்திய அரசு விலக்கச் சொல்லிவிட்டது!

எதிர் கட்சித் தலைவரும் தன் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டார்!

தற்போது மனித உரிமை ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் மக்கள் இந்த அரசை மக்கள் சபித்து,வயிறெரிந்து பதிவிட்டுக் கொண்டுள்ளனர்!

இத்தனைக்குப் பிறகும் இ பாஸை நிர்பந்திப்பது கொரோனா பெயரிலான கட்டப் பஞ்சாயத்து அல்லது பகல் கொள்ளை!

நிராகரிக்கப்பட்ட இ-பாஸ்

தமிழக பா.ஜக இதில் தலையிட்டாலாவது சற்று விமோசனம் கிடைக்கலாமோ என்னவோ.. ஆனால்,ஏனோ,அவர்களுக்கு மனமில்லை! இ பாஸ் மறுக்கப்பட்டால் தான் என்ன?

கம்யூனிஸ்டு தலைமைகள் கூட ’கம்’மென்று மவுனம் சாதிக்கின்றனவே! என்ன ஆயிற்று அவர்களுக்கு?

ரஜினி தன்னளவுக்கு போக,வர இ பாஸ் வாங்க முடிகிறதே..அது போதும் என அமைதி காக்கிறார்!

டிவிட்டரில் மட்டுமே அரசியல் நடத்தினால் போதும் என்று அடைபட்டு கிடக்கும் கமலின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றதா எனத் தெரியவில்லை!

கொரானாவின் பெயரால் நடக்கும் கொடூரங்களுக்கும், கொள்ளைகளுக்கும் அளவில்லாமல் போய்விட்டதே! பேரழிவு காலத்தில் மக்களிடம் ஆனவரை கொள்ளையடித்து ஆட்சியாளர்களும்,அதிகாரிகளும் திளைப்பதை தடுத்து நிறுத்த முடியாமல் நாதியற்றுவிட்டதே இந்த நாடு!

தினசரி விமானங்கள் இயக்கப்படலாம்! அதில் வசதிமிக்கவர்கள் சென்று வரலாம்.ஆனால்,சாதாரண மனிதர்கள் பயணிக்கும் பேருந்துகளுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும் மட்டும் அனுமதி மறுப்பாம்!

கெடுபிடிகள்,அடி,உதைகள்,அபராதங்கள்…இந்த அனுபவங்களை பெற்றவர்கள் தக்க பாடங்களை தக்க நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு புகட்டுவார்கள் என்பது சர்வ நிச்சயம்!

சாவுக்கு போகக் கூட மறுக்கபட்டவர்கள் எல்லாம் இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்கசமயம்பார்த்திருக்கிறார்கள்!

பிழைக்க வழியின்றி தடுக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்த ஆட்சியின் அஸ்த்தமத்திற்கு அடிகோலுவார்கள்.

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)

The post இ பாஸ் ஒரு இமாலய மோசடி! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

உச்சநீதிமன்ற ஊழல் நீதிபதிகளின் பாஜக ஆதரவு போக்குக்கு எதிராகப் போராடும் பிரஷாந்த் பூஷன்
உச்ச நீதிமன்றத்தின் ஊழல் நீதிபதிகளுக்கு பிரசாந்த் பூசண் எப்போதுமே ஒரு சிம்ம சொப்பனமாகத் தான் இருந்து வந்துள்ளார்!

தந்தை சாந்தி பூசன் வழியில் கடந்த 30 ஆண்டுகளாக நீதித் துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை உத்திரவாதப்படுத்த அயராது பாடுபட்டு வருபவர் பிரசாந்த் பூசண்!

தற்போது இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது! மூன்று நீதிபதிகள் அமர்வு இதை விசாரிக்கிறது! இதற்கு இவருடைய இரண்டு டிவிட்டர் பதிவுகள் காரணம்!

நான் எம்ர்ஜென்சி காலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற செயல்பாடுகளைப் பார்க்கிறேன்! தற்போது நமது நீதித் துறை அரசிடம் சரணாகதி அடைந்ததைப் போல எந்தக் காலத்திலுமே நடந்ததில்லை. பெரும்பாலான நீதிபதிகள் அரசியல் சட்டத்தையும்,மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்போம் என்று கூறி உறுதிமொழி எடுத்ததை முற்றிலும் மறந்துவிட்டனர்.

இந்தியாவின் சமீபத்திய ஆறாண்டுகளை வருங்கால வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் யாரேனும் ஆய்வு செய்யும் போது இந்த காலகட்டத்தில் ஜனநாயகம் சிதைக்கப்பட்டது போல எமர்ஜென்சி காலத்தில் கூட நடக்கவில்லை எனச் சொல்வார்கள்! அதுவும் ஜனநாயகத்தை காப்பாற்றும் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டே முடங்கி இருக்கிறது.அதிலும் குறிப்பாக கடைசியாக பொறுப்புக்கு வந்த நான்கு தலைமை நீதிபதிகளின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்குரியது.

இந்த கருத்து ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது! காரணம் அவர் கூறிய ரஞ்ஞன் கோகாய்,தீபக் மிஸ்ரா, ஜெகதீஸ் சிங் கேகர் மற்றும் தற்போதைய நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆகியோரின் செயல்பாடுகள் மக்கள் பார்த்து நொந்தது தான்!

ஏற்கனவே பூசண், ’’இது வரையிலான சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகளில் சுமார் 16 பேர் ஊழல் கறை படிந்தவர்கள்’’ என்று கூறியது சர்ச்சையானதை நினைவு கூர்கிறேன்! அப்போது கிருஷ்ண ஐயர் அவர்கள், ’’பிரசாந்த் பூசன் கூறியிருப்பது தொடர்பாக ஒரு தனி விசாரணை நடத்தி உண்மையை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்’’ என்று கூறி ஆதரித்தது கவனத்திற்குரியது.

இப்படி சொல்வதற்கான துணிச்சல் பிரசாந்த் பூசண் ஒரு நேர்மையாளராக நெருப்பை போல வாழ்வதால் வருகிறது. மிகவும் எளிமையான வாழ்க்கை வாழும் பிரசாந்த் பூசண் இது வரை பல நூறு பொது நல வழக்குகளை மக்களுக்காக நடத்தியவர்! அவர் தன் வழக்கறிஞர் தொழிலில் 75% பணம் வாங்காத வழக்கிலும்,25% மட்டுமே கட்டணம் பெற்றும் வாதாடுகிறார். அதுவும் பாதிக்கப்பட்டவர் நேர்மையானவர் என்பதை நன்கு உறுதிபடுத்திக் கொண்டே ஆஜராவார்!

இந்தியாவில் மக்கள் குறை கேட்பு ஆணைய உருவாக்கத்திலும்,ஊழலை ஒழிக்க கொண்டு வரப்பட்ட ’ஜன்லோக் பால் மசோதா’ உருவாக்கத்திலும் பூசண் பங்கு குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டும்,தங்கள் சொத்து விபரங்களை பதவி ஏற்புக்கு முன்னும், பதவிக்கு பின்னும் தெரியப்படுத்த வேண்டும் என்ற வழக்கில் ஆஜராகி வென்றவர்.

சமீப காலமாக நமது நீதிமன்றங்கள் அரசின் செயல்பாடுகள் பலவற்றை மக்கள் நலன் பாராமல் ஆதரித்து வருவது தொடர்பாக நம் அனைவருக்குமே கடும் மன வருத்தம் இருக்கிறது. கொரானா காலத்தில் டாஸ்மாக் திறக்க அனுமதித்தது தொடங்கி ராஜஸ்தான் எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததில் தலையிட்டது வரை அனைவரும் பார்த்து வருகிறோம்.

அரசியல் சீரழிந்தாலும் கூட நீதிதுறை நேர்மையாக இருந்தால் அது ஒரளவு குறைந்தபட்ச நிம்மதியை நமக்கு ஏற்படுத்தும். ஆனால்,அதுவும் சறுக்கும் போது மக்கள் மன்றத்தில் இருந்து இப்படியான விமர்சனங்கள் வருவது தவிர்க்க முடியாது.

பிரசாந்த் பூசணுக்கு இந்தியா முழுமையிலும் உள்ள ஜனநாயக சக்திகள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கு வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வண்ணம் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யதக்க வகையில் நடக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் சமூக ஆர்வலர்களிடம் வெளிப்பட்டுள்ளது.

பிரசாந்த் பூசணை முன்னாள் நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ராம்பால், கோபாலகெளடா,கங்குலி உள்ளிட்ட ஏழு பேரும்,ஏராளமான வழக்கறிஞர்களும் ஆதரித்து உள்ளனர்! பத்திரிகையாளர்கள் அருண்ஷோரியும், என்.ராமும் ஆதரித்துள்ளனர். நாமும் வலுவாக ஆதரிப்போம்.

பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் முகநூலில் பதிவு செய்தது.

The post உச்சநீதிமன்ற ஊழல் நீதிபதிகளின் பாஜக ஆதரவு போக்குக்கு எதிராகப் போராடும் பிரஷாந்த் பூஷன் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.