எம்.மலைமோகன், Author at தேசிய முரசு - Desiya Murasu

ஆளே இல்லாத கடையில் ‘டீ’ ஆற்றிய பிரதமர் மோடி: குகைப் பாதை திறப்பு விழாவில் உச்சக்கட்ட நகைச்சுவை
இமாச்சலப்பிரதேசத்தில்  மணாலி-லே பகுதியில் உள்ள லாஹாவ்-ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதியை இணைக்கும் வகையில் 9.10 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த குகைப் பாதைக்குக் கடந்த 2010 ஜூன் 28 ஆம் தேதி காங்கிரஸ் ஆட்சியில் சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். தேசிய ஆலோசனை குழுத் தலைவர் என்ற முறையில் அவர் அடிக்கல் நாட்டினார்.

6 ஆண்டுகளில் இந்த குகைப் பாதையைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மலையைக் குடைந்து குதைப் பாதை அமைக்கப்பட்டதால், சாலைப் பணி நிறைவடைய 10 ஆண்டுகளாகிவிட்டது.

இந்தக் குகைப் பாதைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த குகைப் பாதை மூலம் இமாச்சலப்பிரதேசத்தின் மணாலி- லடாக்கின் லே நகருக்கு இடையேயான பயண நேரம், 4 மணி நேரம் வரை குறையும். குளிர் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்போது, லாஹாவ்- ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதிகளில் 6 மாதங்கள் வரை போக்குவரத்து தடைப்படும்.

இனிமேல் போக்குவரத்து எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறும். இந்தப் பாதையில் தினசரி 3 ஆயிரம் கார்கள் மற்றும் 1500 லாரிகள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.

https://twitter.com/annaverbee/status/1312636949119733760

”இந்த குகையைத் திறந்து வைக்க வரும் பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பார்கள்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த குகைப் பாதையைப் பிரதமர் திறந்து வைத்தபோது பாதுகாவலர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஜீப்பில் நின்றவாறு, பிரதமர் கையசைத்துக் கொண்டே வந்தார். அப்போது குகைக்குள் யாருமே இல்லை.

இத்தகைய செயல் சமூக வலைத்தளங்களின் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மோடி சிறந்த நடிகர் என ஏராளமானோர் ட்விட் செய்திருந்தனர். ஏற்கனவே ஒருமுறை, படகு சவாரியின் போது ஆளே இல்லாத திசையை நோக்கி பிரதமர் மோடி கையை அசைத்து ‘போட்டோ’ எடுத்துக் கொண்டது, கடும் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

The post ஆளே இல்லாத கடையில் ‘டீ’ ஆற்றிய பிரதமர் மோடி:  குகைப் பாதை திறப்பு விழாவில் உச்சக்கட்ட நகைச்சுவை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சிறப்பு ரயிலில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் விவரம்: பதில் தர மறுக்கும் ரயில்வே அமைச்சகம்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களில பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்தவர்கள் விவரங்கள் இருந்தபோதிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அதனை வெளியிட மத்திய அரசு மறுத்துள்ளது.

கடந்த ஜுன் 13 ஆம் தேதி மனித உரிமைகள் ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகத்துக்கு அளித்த விண்ணப்பத்தில், பொது முடக்கத்தையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில், எத்தனை பேர் இறந்தார்கள்? அவர்களது பட்டியல் வேண்டும் என கேட்டிருந்தார்.

கடந்த ஜுலை 7 ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் அவருக்கு அளித்த பதிலில், இது குறித்த தகவல் மாநில காவல் துறையிடம் இருப்பதால், அவர்களிடமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது.

அதேசமயம், காங்கிரஸ் எம்பி., உத்தம் குமார் ரெட்டி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சகம்,  மாநில அரசுகள் அளித்த தகவல்களின்படி, செப்டம்பர் 9 ஆம் தேதி வரை, சிறப்பு ரயில்களில் பயணம் செய்த 97 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்த ரயில்வே அமைச்சகம்,  87 உடல்களை மாநில காவல்துறை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. இதில் 51 பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கிடைத்துள்ளன. மாரடைப்பு, இதயக் கோளாறு, மூளை ரத்தக்கசிவு, நாள்பட்ட நோய்கள், நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோய் காரணமாக இறந்துள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியது.

கேள்வி இதுதான்:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர் கேட்ட கேள்விக்கு ரயில்வேத்துறை அமைச்சகம் ஏன் தகவல் தரவில்லை?. மாநில காவல் துறையிடம் தகவல் அறிந்துகொள்ளுமாறு கூறியது ஏன்?.

இது பற்றி பரத்வாஜ் கூறும்போது, நோயின் பெயர்கள், இறப்பு நடந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களின் எண் மற்றும் பெயர், இறந்த தேதி…இதெல்லாம் பதில் இல்லை.

வெளிப்படைத்தன்மையுடன் ரயில்வே அமைச்சகம் பதில் அளிகாதது ஏன்? நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கும் முன்பே, ரயில்வே அமைச்சகம் தேவையான ஆவணங்களை வைத்திருந்தது. நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கும் பாஜக அரசு, மக்களுக்கு பதில் அளிக்காமல் மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்று குற்றம் சாட்டினார்.

சிறப்பு ரயில்களில் 80 புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக கடந்த மே 30 ம் தேதி  ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்குப் பதில் அளித்த ரயில்வே வாரியத் தலைவர் விகே யாதவ், ஊடகச் செய்தியை ஒத்துக் கொண்டார். எண்ணிக்கையை மட்டும் உறுதி செய்ய வேண்டியுள்ளதாகவும்  தெரிவித்தார். சில வாரங்கள் கழித்து பேட்டியளித்த அவர், சிறப்பு ரயில்களில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் உறவினர்கள் ரயில்வே இழப்பீடு வழங்கும் தீர்ப்பாயம் மூலம் இழப்பீடு கோரலாம் என்று அறிவித்தார்.

ஆனால், இதுவரைக்கும் சிறப்பு ரயில்களில் பயணித்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததாக அறிகிறோம். அவர்களது குடும்பத்தினர் நிலைமை என்னவாகும்?. சிறப்பு ரயிலில் இறந்தவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றால், இறந்தவரின் உறவினர்கள் இழப்பீடு கோர முடியாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மறுத்தால், தன் குடிமக்களிடம் இருந்து அரசு தப்பி ஓடப் பார்க்கிறது என்று தான் அர்த்தம்.

The post சிறப்பு ரயிலில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் விவரம்: பதில் தர மறுக்கும் ரயில்வே அமைச்சகம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

உத்தரப்பிரதேசத்தில் வீதியில் இறங்கிப் போராடும் இளைஞர்கள்: வேலை உத்தரவாதம் அளிக்க தலித் அமைப்புகள் கோரிக்கை
கெரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வேலை இழந்தோருக்கு, வேலை உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப  இழப்பீடு வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுமாறு தலித் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பொது முடக்கத்தின்போது, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர்.   இதனையடுத்து, தலித் மற்றும் பழங்குடியின அமைப்புகள் மேற்கண்ட கோரிக்கையை கையில் எடுத்துள்ளன. இதுவரை தங்கள் சமுதாயத்தவர்களுக்காக குரல் கொடுத்து வந்த இந்த அமைப்புகள், தற்போது அனைத்து படித்த இளைஞர்களுக்கும் வேலை உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப இழப்பீடு வழங்குவது குறித்த சட்டத்தை இயற்ற கோரிக்கை வைத்திருப்பது மாறுபட்டதாக இருக்கிறது.

தேசிய தலித் மற்றும் ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏற்கனவே, பெரும் வேலையில்லாத திண்டாட்டத்தை நாடு சந்தித்துக் கொண்டிருந்தது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு, இது பன்மடங்கு அதிகமாகிவிட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் விரக்தியிலும், மன அழுத்தத்திலும் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, வரும் மழைக்காலக் கூட்டத் தொடரின்போது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உத்தரவாதம், தகுந்த வேலை கிடைக்காவிட்டால் அதற்கான இழப்பீடு தருவது தொடர்பாக சட்டம் இயற்றவேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இது குறித்து, இந்த கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் அசோக் பார்தி கூறும்போது, ”2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டத்தின்படி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உத்தரவாதம் அளிக்க வழிவகை செய்யும் சட்ட நகலை மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளோம். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதவுள்ளோம்.” என்றார்.

அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை மட்டுமே இதுவரை இந்த அமைப்புகள் கோரி வந்தன. இட ஒதுக்கீட்டிலிருந்து அனைவருக்கும் வேலை உத்தரவாதம் என்ற கோரிக்கைக்கு எத்தனை தலித் அமைப்புகள் உடன்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பார்தி, ”இட ஒதுக்கீட்டுக்கு எதிரான எங்கள் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  வேலையே இல்லை என்றால், இட ஒதுக்கீடும் இல்லாமல் போய்விடும்.  இட ஒதுக்கீடு என்ற காரணத்தை வைத்துக் கொண்டு, நீண்ட காலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பதை உயர் சாதி அதிகாரிகள் ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் கோரிக்கையில் எஸ்.சி., எஸ்.டி.யினரும் அடங்குவர்.  கொரோனாவினால் 14 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பெரிய அளவிலான வேலை இழப்பு அமைப்பு சாரா நிறுவனங்களில் தான் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தினக்கூலிகளாக உள்ளனர். தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

மாதச் சம்பளம் பெறும் படித்தவர்கள் வேலை இழந்தபின் மாற்று வேலை கிடைக்கவில்லை. அந்த வகையில் 2 கோடியே 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.  2020 மார்ச் மாதம் வரை 8 கோடியே 60 லட்சம் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் இருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்த எண்ணிக்கை 6 கோடியே 50 லட்சமாக குறைந்துள்ளது.  மத்திய அரசின் தரவுகளின்படி, ஏற்கனவே 11 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து விட்டது” என்றார்.

” கொரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற சோகச் சம்பமும் நடந்தேறியது. அவர்கள் படும் துயரம் சொல்லிமாளாது. கொரோனா நோய் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை உத்தரவாதம் அவசியமாகிறது. பொதுமுடக்கமும், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பும் தனிப்பட்ட நபரின் வாழ்வாதாரத்தை பெரும் பாதித்துள்ளதாக,” ஏஐஏஎம் அமைப்பின் நிர்வாக தலைவர் ராகேஷ் பஹதூர் கூறுகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் பலர், சாதி, மதம் கடந்து வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கி விட்டார்கள். இந்த சூழ்நிலையில் தான், நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப இழப்பீட்டு உத்தரவாதம் அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற கோரிக்கை வைத்ததன் மூலம், பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்கள்  இந்த அமைப்புகள்.

The post உத்தரப்பிரதேசத்தில் வீதியில் இறங்கிப் போராடும் இளைஞர்கள்:   வேலை உத்தரவாதம் அளிக்க தலித் அமைப்புகள் கோரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு நாங்கள் கடன் வாங்குவதா?: மத்திய – மாநில உறவு பாதிக்கும் என நிதி அமைச்சர்கள் எச்சரிக்கை
ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கும் என்பது மாநில நிதி அமைச்சர்களின் அச்சமாக உள்ளது.

மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக் கொள்ள 2 வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அவ்வாறு மாநிலங்கள் கடன் வாங்கினால், ஒரே நாடு, ஒரே வரி சீர்திருத்தம் என்பதில் பாதிப்பு ஏற்படும். ஜிஎஸ்டி குழுவின் உடன்படிக்கையை மீறி, பற்றாக் குறையை ஈடு செய்யாவிட்டால், மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும்.

அரசியல் சாசனத்தில் 101 ஆவது திருத்தம் தேசிய அளவில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை விதிக்க சட்ட அங்கீகாரம் அளிக்கிறது. ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உள்ளூர் அளவிலான மறைமுக வரிகளை விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கியதால், ஜிஎஸ்டியை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்வது சாத்தியமானது.

2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், ரூ. 65 ஆயிரம் கோடி அளவுக்கு மட்டுமே இழப்பீட்டு நிதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் எந்தவொரு வருவாய் குறைவையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், இதற்கான ஒரு தீர்வை வகுக்க வேண்டியது ஜிஎஸ்டி கவுன்சில் தான் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியது.

ரூ. 2 .35 லட்சம் கோடிகள் வருவாய் குறைவு இருக்கும் நிலையில், வெறும் ரூ. 97 ஆயிரம் கோடிகள் மட்டுமே வருவாய் குறைவு என மத்திய அரசு வாதிட்டது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 38 லட்சம் கோடிகள் வருவாய் குறைவு என்பது கடவுளின் செயலால் ஏற்பட்டது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

முதல் யோசனையாக, மாநிலங்களின் கடன் பத்திரங்களை சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் ரூ. 97 ஆயிரம் கோடிகள் திரட்டுவது, இவ்வாறு வாங்கும் கடனுக்கான வட்டியை மத்திய அரசு ஏற்பது, ஒரு பகுதியை மானியம் மூலம் மத்திய அரசு தாங்கிக் கொள்வது போன்ற வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இரண்டாவதாக, கடன் பத்திரங்களை மாநில அரசுகளே விற்று, ஒட்டுமொத்த ரூ. 2 .35 லட்சம் கோடிகள் ரூபாயை திரட்டிக் கொள்வது, வட்டியை மாநில அரசுகளே செலுத்துவது, ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியிலிருந்து அடிப்படை செலவுகளை மட்டும் தருவது என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

இது குறித்து கேரள நிதி அமைச்சர் டிஎம்.தாமஸ் ஐசக் கூறும்போது, ”ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்கள் தியாகம் செய்ய முடியாது என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு வழங்க, மத்திய அரசுதான் கடன் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால், நிதிச்சுமை அதிகரித்துவிடும் என்றும் மத்திய அரசு அஞ்சுகிறது. குறைந்தபட்சம் கடன் பெறுவதற்கான அங்கீகாரத்தை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இது ஒன்றே உத்தரவாதமாக இருக்கும்” என்றார்.

தெலங்கானா மாநில நிதி அமைச்சர் டி. ஹரிஸ் ராவ் கூறும்போது, ”மத்திய அரசு கடன் வாங்கினால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றால், மாநிலங்கள் கடன் வாங்கினால், பொருளாதாரம் வீழ்ச்சியடையாதா? மத்திய அரசால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். அதோடு, சர்வதேச முதலீட்டையும் கவர முடியும். அப்படி இருக்கும் போது, மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு மாநில அரசுகள் எப்படி கடன் வாங்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

The post ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு நாங்கள் கடன் வாங்குவதா?: மத்திய – மாநில உறவு பாதிக்கும் என நிதி அமைச்சர்கள் எச்சரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நீட், ஜெ.இ.இ. தேர்வை தள்ளிவைக்காவிட்டால் பா.ஜ.க-வுக்கு ஓட்டு இல்லை; ட்விட்டரில் கொந்தளித்த மாணவர்கள்
நீட் மற்றும் ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்காவிட்டால், பா.ஜ.கவுக்கு எங்கள் ஓட்டு இல்லை என்ற மாணவர்களின் எச்சரிக்கை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்தினால், மாணவர்கள் பாதிக்கக்கூடும் என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். இதனால், இந்த தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்றும், இல்லையேல், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் நாடு முழுவதும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 7 முதலமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில், இரு நுழைவுத் தேர்வுகளையும் தள்ளிவைக்க பிரதமரிடம் நேரில் முறையிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

மாணவர்களின் உயிரே முக்கியம் என்பதை  புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்காவில் பள்ளிகளை திறந்ததால், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

எனினும், செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு முரண்டு பிடித்து வருகிறது ”நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்காவிட்டால் பா.ஜ.க-க்கு எங்கள் ஓட்டு இல்லை” என்ற ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் ட்ரெண்டாகியுள்ளது.

https://twitter.com/AnupamNegi3/status/1298880516083445761

குறிப்பாக, விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் இருந்துதான் இத்தகைய எச்சரிக்கை பதிவுகள் அதிக அளவில் ட்ரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

பீகார் தேர்தலில்  ஓட்டுப் போடும் உரிமை எங்களுக்கும் கிடைத்துவிடும். ஆனால், மாணவர்களின் ஓட்டுகள் பா.ஜ.க.வுக்கு கிடைக்காது என்று பல மாணவர்கள் ட்விட்டரில் எச்சரித்தனர்.

எனினும், நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைத்தால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், அந்த ஆண்டுக்கான முழுப் படிப்பையும் கற்க வேண்டியதை மாணவர்கள் இழப்பார்கள் என்றும் மத்திய உயர் கல்வித்துறை செயலர் அமித் காரோ மற்றும் தேசிய தேர்வு ஏஜென்ஸி தலைவர் வினீத் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது மாணவர்கள் மத்தியில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதில் அளித்துள்ள மாணவர்கள், இப்போது இருக்கும் இக்கட்டான சூழலில். தீபாவளி வரையிலாவது நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த பிரதியூம் என்ற மாணவரின் ட்விட்டர் பதிவில், முரண்டு பிடித்தால் பீகார் தேர்தலில் பா.ஜ.க.வை புறக்கணிப்போம். நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை எழுதும் மொத்தம் 25 லட்சம் மாணவர்களில், 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். எங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரையும் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போட வேண்டாமென்று வலியுறுத்துவோம் என எச்சரித்துள்ளார்.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறும்போது, ” கொரோனா தொற்றால் பெரும் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவது மாபெரும் தவறு. நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாவிட்டால், பாஜகவுக்கு வரும் காலத்தில் பேராபத்து ஏற்படும். பாதிப்பை இந்திய மக்கள் அமைதியாக ஏற்பார்கள், ஆனால், அதனை நீண்ட காலம் நினைவில் வைத்திருப்பார்கள்” என்று எச்சரித்தார்.

The post நீட், ஜெ.இ.இ. தேர்வை தள்ளிவைக்காவிட்டால் பா.ஜ.க-வுக்கு ஓட்டு இல்லை; ட்விட்டரில் கொந்தளித்த மாணவர்கள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

பணம் மட்டும் வேண்டும், கேள்வி கூடாதா?: நீடிக்கும் பிஎம் கேர்ஸ் மர்மம்
கொரோனாவை எதிர்த்துப் போராடவும், அதனால் பாதிக்கப்பட்டோருக்கு உதவவும், கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் நிதி ( பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதி) உருவாக்கப்பட்டது.

பெரிய கார்பரேட் நிறுவனங்களும், அரசின் பொதுத் துறை நிறுவனங்களும் பல கோடி ரூபாயை பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளித்துள்ளன. மக்களும் தங்கள் சிறிய சேமிப்பிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு நிதியளித்தனர். இந்த நிதிக்கு பிரதமர் தலைவராக இருப்பதால், நம்பிக்கை வைத்து நிதி அளித்தனர்.

நல்ல நோக்கத்துக்காக நாம் அனுப்பிய பணம் பயன்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாம் அளித்த பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்? என்று தெரிந்து கொள்ளவும் விரும்புகின்றோம்.

ஆனால், பிஎம் கேர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில், பின்வரும் 3 நடவடிக்கைகளுக்காக ரூபாய் 3 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் அரசு மருத்துவமனைகளுக்கு 50 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகள் வாங்க ரூபாய் 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு.

தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.

இதில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 எவ்வாறு செலவு செய்யப்பட்டது?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு, வெளிப்படைத்தன்மை குறித்த ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் கேள்வி எழுப்பியிருந்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து நிதி பயன்படுத்தப்பட்டதற்கான வழிகாட்டு முறைகளை தயவுசெய்து தாருங்கள்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரத்தை தாருங்கள்.

இது தொடர்பாக அமைச்சகத்தின் தொடர்புகள் மற்றும் இது தொடர்பான குறிப்புகள் அடங்கிய நகல்களை   தாருங்கள்.

இவ்வாறு எழுப்பப்பட்ட 3 கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி அனுப்பப்பட்ட மனுவை, பிஎம் கேர்ஸ் நிதியின் தலைமை அலுவலகமான பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அனுப்பியது.

இதற்கு பதில் அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம், பிஎம் கேர்ஸ் நிதி என்பது அரசு அமைப்பு தொடர்புடையதல்ல. மத்திய, மாநில அரசுகள் முதலீடு செய்து நடத்தும் நிறுவனமும் அல்ல. இதன் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்று தெரிவித்தது.

இதே போன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சமூக செயற்பாட்டாளர் நீரஜ் ஷர்மா அனுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

எனினும், கடந்த 2007  ஆம் ஆண்டு அப்போதைய தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா கூறும்போது, ”அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எந்த நடவடிக் கையையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை உண்டு” என்று தெரிவித்திருந்தார்.

அவர் கூறியதுபோல், பிரதமர் அலுவலகம், தேசிய தகவல் மையம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகியவை அரசு அமைப்புதான்.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க இவர்கள் கடமைப்பட்டுள்ளனர். ஆனால், இன்று வரை பிஎம் கேர்ஸ் நிதி குறித்து பதில் தர மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் நிதி அரசு அமைப்பின் வருகிறதா? அல்லது இல்லையா?  என்று, சமூக செயற்பாட்டாளர் லோகேஸ் பத்ரா, நேரிடையாக கேள்வி எழுப்பினார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட இந்த கேள்விக்கு 30 நாட்களுக்குப் பிறகும் பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் வரவில்லை.

இதில் கேள்வி என்னவென்றால், பிஎம் கேர்ஸ் நிதி ஆரம்பித்தது முதல், அதன் தலைமையிடமாக பிரதமர் அலுவலகம் தான் இருந்து வருகிறது. பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பான ஆவணங்களை பிரதமர் அலுவலக ஊழியர்களோ அல்லது பிஎம் கேர்ஸ் நிதிக்கு நேரிடையாக தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களோ தான்  பராமரித்து வந்திருக்க வேண்டும்.

ஒருவேளை பிஎம் கேர்ஸ் நிதியை பிரதமர் அலுவலகம் பராமரிக்காமல் இருந்திருந்தால், அது குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்க வேண்டும்.

ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதிலை பெற முடியவில்லை.

“கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்பட்ட பணம், எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? என்று தெரிந்து கொள்ளும் உரிமை, நிதியை கொடுத்த இந்திய குடிமக்களுக்கு இல்லையா? “

இந்திய மக்கள் எழுப்பும் கேள்விக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அல்ல, மனசாட்சியின் படி பதில் அளிக்குமா பிரதமர் அலுவலகம்?

The post பணம் மட்டும் வேண்டும், கேள்வி கூடாதா?:  நீடிக்கும் பிஎம் கேர்ஸ் மர்மம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

நோயிலும் தில்லுமுல்லு; சாவிலும் தில்லுமுல்லு : கொரோனா குளறுபடியை அம்பலப்படுத்தும் மருத்துவர்கள்
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்புகள் அரசு சொல்வதை விட 5 மடங்கு அதிகம் இருக்கும் என, பொது சுகாதாரத்துறையின் மீது அக்கறையுள்ள 2 மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்  ஹேமந்த் ஷெவாடே மற்றும் இந்திய கோவிட் – 19 உயர்மட்ட ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினர் மருத்துவர் கிரிதர கோபால் ஆகியோர் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை தி இந்து நாளேட்டில் வெளியிட்டனர்.

அதில் கூறியிருப்பதாவது:

கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை அரசு தரப்பு 5 என்று சொன்னால், உண்மையான உயிரிழப்பு 29 ஆக உள்ளது.

கடந்த ஜுலை 31 ஆம் தேதி வரை கொரோனா தொற்றால் நாடு முழுவதும் 35 ஆயிரத்து 747 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 லட்சம் பேருக்கு 26 பேர் உயிரிழந்ததாக அர்த்தம். ஆனால், எதார்த்தத்தில் பார்க்கும்போது, இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 939 ஆக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, 10 லட்சம் பேரில் 138 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, மும்பை, சென்னை மற்றும் அதன் சிறு நகரங்கள், இந்திய கிராமங்கள் என தொற்று பரவியபின் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் சுகாதார வசதி இல்லாததாலும், தகுதியான மருத்துவர்கள் இல்லாததாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.

கொரோனாவினால் வீடுகளில் நிகழும் உயிரிழப்புகள்,  கொரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

மேலும், பல நகரங்களில் கொரோனாவினால் உயிரிழப்பு நிகழ்ந்தாலும்,வேறு நோய்களால் உயிரிழந்ததாக காரணம் கூறுகிறார்கள். கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படும் நிலைதான் உள்ளது. இதனால் தான் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இத்தகைய உயிரிழப்புகளின் மருத்துவ அறிக்கை தனித்துவமானதோ அல்லது அசாதாரணமானதோ அல்ல.

காசநோய் என்பது ஒரு பொதுவான மற்றும் பரவலான நோயாகும். அங்கு, குறைவான உயிரிழப்புகள் காட்டப்பட்டது ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்தியாவில் காசநோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், உலக சுகாதார அமைப்போ, இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் காசநோய்க்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவித்தது.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். எனினும், கூடுதலாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த தரவுகள் அரசிடம் இல்லை. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைக்க முடியாது. விரைவில் அல்லது பின்னர் ஒரு நாள், விழிப்போடு இருக்கும் ஊடகங்கள் மற்றும் சுறுசுறுப்பாக இயங்கும் மக்களால் இந்த உண்மை வெளிப்படும்.

இந்தியாவில் 22 சதவிகித உயிரிழப்புகளுக்கு மட்டுமே மருத்துவரின் சான்று கிடைக்கிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் உயிரிழப்பு விகிதம் 5 சதவிகிதமும், பீகார் மாநிலத்தில் 2.4 சதவிகிதமும் மட்டுமே உயிரிழப்புகள் கணக்கில் காட்டப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் தங்களுக்கு கொரோனா இருப்பது தெரியாமலேயே ஏராளமான மக்கள் இறந்து போகிறார்கள்.

மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும்.கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைத்துக் கணக்கிடப்படுவதுதான் உண்மை. இந்த நாடுகளில் உயிரிழப்புகளை பதிவு செய்வதும் இல்லை. மருத்துவரின் சான்றிதழும் அநேகமாக தவிர்க்கப்படுகிறது.

இந்தியாவில் குறைவான உயிரிழப்புகள் வயது குறித்த புள்ளிவிவரங்களுடன் விளக்கப்படுகிறது. ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைவிட, வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகம் இருந்தும், உயிரிழப்பு எண்ணிக்கை அந்த நாடுகளைவிட குறைவாகக் காட்டப்படுகிறது.

உதாரணத்துக்கு, பிரேசிலில் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்கள் சரிபாதியாக உள்ளனர். வைரஸ் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அங்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. பிரேசிலில் 10 லட்சம் பேருக்கு 543 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்தியாவிலோ 10 லட்சம் பேருக்கு 42 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்கு காட்டப்படுகிறது. இந்தியாவில் உள்ள வயது புள்ளிவிவரம் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பிரேசிலோடு ஒப்பிட்டு விளக்க முடியாது.

The post நோயிலும் தில்லுமுல்லு; சாவிலும் தில்லுமுல்லு : கொரோனா குளறுபடியை அம்பலப்படுத்தும் மருத்துவர்கள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இழந்த வேலை வாய்ப்புகள் மீட்டெடுக்கப்படுமா?: சிஎம்ஐஇ ஆய்வில் விளக்கம்
மத்திய அரசின் சுதந்திரமான அமைப்பான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் பொருளாதார சமிக்ஞைகள் மற்றும் அளவீடுகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கொரோனா காலத்தில்  மாத ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளில் பெரும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  2020 ஏப்ரல் முதல் ஜுலை மாதம் வரை, 1 கோடியே 80 லட்சத்து 9 ஆயிரம் பேர் வேலை  இழந்துள்ளனர்.

பொது முடக்கத்துக்குப் பிறகு, மாத ஊதியம் பெறுவோரின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த ஏப்ரலில் 1 கோடியே 70 லட்சத்து 7 ஆயிரம் பேரும், மே மாதத்தில் 1 லட்சம் பேரும் வேலை இழந்துள்ளனர். அதேசமயம், கடந்த ஜுன் மாதம் 30 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால், 50 லட்சம் பேர்   மீண்டும் வேலை இழந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சிஎம்ஐஇ தலைவர் மகேஷ் வியாஸ் கூறும்போது, ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, கடந்த ஏப்ரலில் 1 கோடியே 70 லட்சத்து 7 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர். ஆனால், ஜுலை மாதத்தில்  1 கோடியே 80 லட்சத்து 9 ஆயிரம்  மாதந்தோறும்  ஊதியம் பெறுவோர் வேலை இழந்துள்ளனர்.

மாத ஊதியம் பெறுவோருக்கான வேலை வாய்ப்பு எளிதில் பறிபோகாது. ஒருவேளை  பறிபோனால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம். ஊதியம் பெறும் வேலைகள் கடந்த ஆண்டு சராசரியைவிட, நடப்பாண்டில் 1 கோடியே 90 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது, கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 22 சதவிகிதம்  குறைவாக உள்ளது.முறைசாரா மற்றும் மாத ஊதியம் பெறாத ஊழியர்களிடையே வித்தியாசம் உள்ளது.  வேலை இழந்த மாத ஊதியம் பெறாதவர்களின் எண்ணிக்கை ஜுலை மாதத்தில் 30 கோடியே 17 லட்சத்து 6 ஆயிரத்திலிருந்து 30 கோடியே 25 லட்சத்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதாவது, 2.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றார்.

பொது முடக்கம் தொடங்கியதும், கடந்த ஏப்ரல் மாதம் தினக் கூலி தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

ஏப்ரல் மாதத்தில் 10 கோடியே 21 லட்சத்து 5 ஆயிரம் பேர் வருவாயை இழந்தனர். இவற்றில் முறைசாரா பணிகளும் அடங்கும். மொத்தமுள்ள வேலை வாய்ப்புகளில், இந்த பிரிவினர் மட்டும் 32 சதவிகிதம் உள்ளனர். ஆனால், ஏப்ரல் மாதத்தில் இவர்கள் தான் 75 சதவிகிதம் பாதிக்கப்பட்டதாக சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் முறைசாரா பணிகளில் 91 லட்சத்து 2 ஆயிரம் பேர் வேலையிழந்தனர். மே மாதத்தில் 1 கோடியே 40 லட்சத்து 4 ஆயிரம் பேர் மீண்டும் வேலைவாய்ப்பை பெற்றனர். ஜுன் மாதம் 4 கோடியே 4 லட்சத்து 5 ஆயிரம் பேரும், ஜுலை மாதத்தில்  கூடுதலாக 2 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மீண்டும் வேலை வாய்ப்பை பெற்றனர் என்று அந்த புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.

இழந்த வேலை மீண்டும் கிடைத்தாலும், ஆரோக்கியமற்ற மற்றும்  ஊதியத்தை இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, மீண்டும் கிடைக்கும் வேலை என்பது திருப்திகரமாக இருக்காது என்பதே உண்மை.

The post இழந்த வேலை வாய்ப்புகள் மீட்டெடுக்கப்படுமா?: சிஎம்ஐஇ ஆய்வில் விளக்கம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தேசிய கல்விக் கொள்கையில் அரசியல் நோக்கம்: முன்னாள் துணைவேந்தர் ஷ்யாம் மேனன் குற்றச்சாட்டு
கற்பித்தல் மற்றும் கல்வி முறையை மறுசீரமைப்பதைவிட, குறிப்பிட்ட மொழிக்கு முக்கியத்துவம் மற்றும் இன்னும் சில அம்சங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. இதுகுறித்து, டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான ஷ்யாம் மேனன் ‘ஃப்ரண்ட் லைன்’ இதழுக்கு அளித்த நேர்காணல்:

” தேசிய கல்விக் கொள்கையில் கற்பித்தலை விட அரசியல் பின்புலமே அதிகம் உள்ளதா?”

இதற்கு பதில் அளிக்கும் முன்பு, இந்த கொள்கையில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சிக்கிறேன். கல்வி என்பது மாநில அரசின் வரம்புக்குட்பட்டது.  தேசிய கல்விக்  கொள்கை எதைக் கண்டுவிடப்போகிறது. இதில், மத்திய அரசின் அரசியல் நோக்கம் மட்டுமே உள்ளது. பெரிய அளவில் மாநில அரசுகளால் மட்டுமே அமல்படுத்த முடிந்த கல்விக் கொள்கையை, தேசிய கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு கையில் எடுத்துள்ளது தீங்கு விளைவிப்பதாகவே அமையும்.  இன்றைய காலக் கட்டத்தில் இதனை தேசிய கல்விக் கொள்கை என்று அழைப்பது கூட கடினமான ஒன்றுதான். இந்த புதிய கல்வி கொள்கை விவாதிக்கப்படவும் இல்லை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவும் இல்லை. மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தால் ஆய்வு செய்யப்பட்டதா? என்று கூட என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்த புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வேண்டாமா? நாடாளுமன்றத்தில் இந்த கொள்கை வைக்கப்பட்டிருந்தால், மாநிலங்களில் இதனை எளிதில் செயல்படுத்த முடியும்.

” கல்வி தொடர்பான முந்தைய கொள்கைகளுடன் ஒப்பிடும்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை எவ்வாறானது? விஞ்ஞான மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை இந்திய பாரம்பரிய மதிப்புடன் மாற்ற விரும்புகிறதா?”

புதிய கல்விக் கொள்கை முந்தைய தேசிய கல்விக் கொள்கையைவிட முற்றிலும் மாறுபட்டது என்று கூறிவிடமுடியாது. 1968 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட புதிய கொள்கையில் இடம்பெற்ற பல முக்கிய அம்சங்கள் 2020 தேசிய கல்விக் கொள்கையிலும் இடம்பெற்றுள்ளன. ஜனநாயகம், சோஷலிசம் மற்றும் மதச் சார்பின்மை ஆகியவை 2020 தேசிய கல்விக் கொள்கையில் காணாமல் போயிருக்கின்றன.

” தேசிய கல்விக் கொள்கையில் கற்பிக்கும் மொழி குறித்து பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. 5 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும், அதற்கு மேலும் தாய் மொழி தவிர மற்றொரு மொழி அவசியம் கற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை கற்பிக்காததன் தாக்கம் எவ்வாறு இருக்கும்?”

அவர்கள் சொல்வதுபோல், தாய்மொழி தவிர, ஆங்கிலம் இல்லாத வேறு மொழியை கற்பிப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே சாத்தியமாகும்.  நடுத்தர வர்க்கத்தினர் நலனுக்கு எதிராக  புதிய கல்விக் கொள்கை இருக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான பொதுவான பள்ளிகள் அமைப்பது என்பது எதார்த்தமானதாக மாற முடியாது.

” புதிய கல்விக் கொள்கையில் சாதி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிடாதது கவலை அளிப்பதாக இல்லையா?”

தேசிய கல்விக் கொள்கை 2020, சமத்துவம் என்ற விசயத்தில் கவலை அளிப்பதாக உள்ளது. இது இந்திய சமுதாயத்திலும் அதன் வரலாற்று வேர்களிலும் உள்ள மகத்தான சமத்துவமின்மையை ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் கல்வியை ஒரு நெறிமுறை அர்த்தத்தில் சாத்தியமான சமநிலையாக கருதவில்லை. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.

” உயர் கல்வியில் சீர்திருத்தம் செய்துள்ள நிலையில் எம்.பில் படிப்பையும், ஓராண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்பையும் ரத்து செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன?”

சில படிப்புகளை நீக்குவதன்மூலம் புதிய கல்வித் திட்டங்களை உருவாக்க முடியும். கல்வித் திட்டங்களில் சிலவற்றை புதிதாக உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். ஆராய்ச்சிப் படிப்புக்கு முன் எம்.பில் படிக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு தேசிய கொள்கை குறுகிய நிர்வாக சிந்தனையில் இருக்கக் கூடாது. எனினும், திறனுடன் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில் எம்.பில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்.

” கொரோனா பாதிப்புக்குப் பிறகு சில பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளன. நிலைமை இப்படியிருக்கும் போது, தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த நிதி எங்கிருந்து வரும்?”

தேசிய கல்விக் கொள்கை 2020- ஐ செயல்படுத்த கல்விக்கான பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.  கல்விக்கான பொது நிதியை அதிகரிக்க முந்தைய தேசிய கொள்கைகளில் செய்யப்பட்ட உறுதிப்பாட்டை இந்த கொள்கை வலியுறுத்துகிறது. முதலீடு விசயத்தில் தான் மாநிலங்களை தேசிய கல்விக் கொள்கை கூட்டாண்மைக்கு அழைக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து முதலீடுகளை அதிகரித்து 6 சதவீத ஜிடிபி-ஐ எட்ட வேண்டும். ஆனால் இது எப்படி சாத்தியம் ஆகும் என்றோ, எவ்வளவு சீக்கிரம் நிகழும் என்றோ தெரியாது. கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்ட கல்விக்கான பொதுச் செலவுகள் விகிதாச்சார அடிப்படையிலும் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து, அடுத்த சில ஆண்டுகளுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். இந்த நிலையில் கல்விக்கான நிதி அடுத்த சில ஆண்டுகளுக்கு குறைவாகவே ஒதுக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கையில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய இளைஞர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வாய்ப்பு தர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். மானியம் அல்லது மத்திய அரசின் திட்டங்களின் மூலம் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்த கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும். ஆனால், இதை எல்லாம் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருக்குமா? இந்த கேள்விக்கு இப்போதைக்கு விடை கிடைக்காது.

The post தேசிய கல்விக் கொள்கையில் அரசியல் நோக்கம்: முன்னாள் துணைவேந்தர் ஷ்யாம் மேனன் குற்றச்சாட்டு appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மருந்து தயாரிப்பில் 67 சதவீதம் சீனாவை சார்ந்துள்ள இந்தியா: ஆய்வறிக்கையில் தகவல்
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லையில் சீனப் படைகள் ஊடுருவியபின், அதனைத் தடுத்த இந்திய ராணுவ வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

சீனப் படைகள் இன்னும் இந்திய எல்லைக்குள்ளேயே இருப்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை உறுதி செய்தாலும், பிரதமர் மோடி ஊடுருவல் இல்லை என முரண்பட்ட தகவலை அளித்து வருகிறார்.

இதற்கிடையே, சீன செயலிகளை மோடி அரசு தடை செய்தது. சீனப் பொருட்களையும் ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என, பா.ஜ.க. வினர் போராட்டம் நடத்தினர்.

எனினும், சீனாவுடனான வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்வது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்தது. குறிப்பாக, மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் சீனாவையே இந்தியா சார்ந்திருப்பதால், இது சாத்தியமில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

மருந்து தயாரிப்புக்கான வேதியியல் மூலக்கூறுகளை சீனாவிலிருந்தே இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. வணிக உறவை உடனே முறித்துக் கொண்டால், இத்தகைய மூலக்கூறுகளை இந்தியாவில் உடனே உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனவும் அவர்கள் கோடிட்டுக் காட்டினர்.

கொரோனா பாதிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் சீனாவுடனான மோதல் ஆகியவற்றால் மருத்துவத் துறையில் ஏற்படப் போகும் பாதிப்பு குறித்து மத்திய அறிவியல் அமைச்சக ஆலோசனை குழுவான, ‘தொழில்நுட்ப தகவல் முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில்’ ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

சீனாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, நம்மிடம் போதிய கட்டமைப்பு இல்லாத வேதியியல் தொழில்துறையை மேம்படுத்த மத்திய அரசு சிந்தித்து வருகிறது.

குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்புடன், குறைந்த செலவில், வேதியியல் பொருட்களை தயாரிப்பதற்கான கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை. சீனாவிலிருந்து கிடைக்கும் விலைக்கு அதிகமாக வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தால், அதனை உற்பத்தியாளர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரைப்பான் மற்றும் வேதியியல் பொருட்களின் இந்திய தயாரிப்பு விலையை விட சீன தயாரிப்பு 15 சதவீதம் குறைவாக உள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஆகிய மருந்துகளைப் பொறுத்தவரை, சீனாவையே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

முக்கிய மருந்துகளை தயாரிப்பதை இந்தியா நிறுத்திவிட்டது. 2008 ஆம் ஆண்டு இந்திய மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி 42 சதவீதமாக இருந்தது.  ஆனால் 2018 ஆம் ஆண்டு 20 சதவீதமாக குறைந்தது.

அஸ்கார்பிக் ஆசிட், அஸ்பார்டேம் மற்றும் ரிபாம்பிஸின், டோக்ஸிசைக்ளின், டஜோபாக்டம் ஆசிட் போன்ற மருந்துகள் தயாரிப்பை இந்தியா நிறுத்திவிட்டது.

மருந்து தயாரிப்புக்கான 67 சதவீத வேதியியல் மூலக்கூறுகளுக்கு சீனாவையே சாரந்து இருக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் இத்தாலிக்கு அடுத்ததாக, சீனாவை சார்ந்திருக்கும் நாடு இந்தியாவாகும்.

இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மருந்து தயாரிப்பில் 67 சதவீதம் சீனாவை சார்ந்துள்ள இந்தியா: ஆய்வறிக்கையில் தகவல் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.