சி.கே.மதிவாணன், Author at தேசிய முரசு - Desiya Murasu

பா.ஜ.க.வின் ஆறாண்டு ஆட்சி வேதனைகள்! மக்கள் விரோத ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி!
எழுபதாண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யாததை பிரதமர் மோடி ஐந்தாண்டுகளில் செய்து முடித்து விட்டதாக அமித்ஷா பெருமிதம் அடைந்துள்ளார். அவர் சொல்வது உண்மை தான். ஆனால் அதில் பெருமிதம் கொள்வதற்கு எதுவுமில்லை. மாறாக அவமானப் படுவதற்கான காரணங்களே உள்ளன.

இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு GDP சரிந்து அதளபாதாளத்தில் மைனஸ் 23% என்ற அளவில் உள்ளது.

இந்திய பொருளாதாரம் இதுவரை சந்திக்காத பொருளாதார சீரழிவை சந்தித்து உள்ளது.

இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துடனும் நமது நாட்டுக்கு பகை உறவே தற்பொழுது உள்ளது.

அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் , ஊடகங்கள் தேசவிரோத செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுவது; சிறையில் அடைப்பது என கருத்து சுதந்திர உரிமையை இந்திய மக்களுக்கு தர மறுக்கிறது மோடி அரசு.

தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், ராணுவம், ரிசர்வ் வங்கி, நாடாளுமன்றம் , வருமானவரித்துறை, அமுலாக்கத்துறை, தலைமை தணிக்கை அலுவலகம், சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளின் சுயேட்சையான செயல்பாடு வரலாறு காணாத வகையில் முடக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இரண்டு குஜராத்தி முதலாளிகளான முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகியோரிடம் ரயில்வே துறை, ராணுவ தளவாட உற்பத்தி துறை, தொலைத்தொடர்பு துறை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு மத்திய அரசால் ஒப்படைக்கப்படுகின்றன.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து வாபஸ் பெறப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் மக்களின் உரிமைகளை- நடமாட்டத்தை மத்திய அரசு முடங்கியுள்ளது. தொலைத் தொடர்பு வசதிகூட அம்மாநில மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் வாதிகள் விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்கிறது. இந்தி மொழியை பிற மாநில மக்களின் மீது திணிக்க இடையறாத முயற்சி மத்திய அரசால் செய்யப்படுகிறது.

மத உணர்வும் சாதிய உணர்வும் திட்டமிட்டு வளர்க்கப் படுகிறது. மத்திய அரசால் பரப்பப் படுகிறது. இதனால் இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு மதநல்லிணக்கத்தை அரசே சீர்குலைக்கிறது. சிறுபான்மை மக்களும் – தலித் மக்களும் எப்போதுமே பயத்துடன் வாழும் அவலநிலை கடந்த ஐந்தாண்டுகளாக நாட்டில் நிலவுகிறது.

The post பா.ஜ.க.வின் ஆறாண்டு ஆட்சி வேதனைகள்! மக்கள் விரோத ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் ஆற்றல் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு!
பெருமதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

இன்றைய (03/09/20) தமிழ் இந்து நாளிதழில் வெளியான தலையங்கம் படித்தேன். பாராட்டுக்கு உரிய நடுநிலையான அலசல். ஆனால் நுணிப்புல் மேய்ந்த கதையாக உள்ளது. இன்றைய அரசியல் சூழலில் காங்கிரஸ் மட்டுமல்ல எந்த எதிர்க் கட்சியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக செயல்பட முடியாத ஜனநாயக அவலம் நம் நாட்டில் தொடர்கிறது. திட்டமிட்டு மத்திய அரசு எதிர்க் கட்சிகளின் குரலை அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒடுக்குகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முடிய நாடு முழுவதும் வியாபித்திருக்கும் ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ் மட்டுமே. அதன் தலைமை மட்டுமே ஊசலாட்டம் இன்றி மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் உறுதிபட வைக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சியினை இல்லாமல் செய்துவிட ஆளுங்கட்சி முனைவதில் அர்த்தமுண்டு. இந்த நெருக்கடியான நிலையில்- சூழலில் சில காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு உட்கட்சி பூசலுக்கு வழிவகுப்பது மிகவும் தவறான நிலைப்பாடு.

காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்வியால் துவண்டு போன அந்த தலைவர்கள் கட்சியின் ஆதாரக் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளவும் தயாராகி விட்டனர். அவர்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எப்படியோ ஆளும் கட்சியாக ஆகிட வேண்டும். இதற்காக நேருவின் வழியிலிருந்து தடம்மாறி மோடி வழியில் பயணித்தாலும் தவறில்லை என்பது 23 தலைவர்களின் எண்ணம்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு இன்றுள்ள சூழலில் இராகுல் காந்தி தான் சிறப்பான தகுதி பெற்றவராக இருப்பார். வேறு எவருக்கும் அத்தகைய தகுதி – திறமை நிச்சயமாக இல்லை.ஆனால் அவர் தலைவர் பதவியை ஏற்க வற்புறுத்துபவர்கள் முதலில் அவர் ஏன் இராஜினாமா செய்தார் என்பதை திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைமை கட்டமைப்பில் தேவையான மாற்றங்களை செய்யாமல் வெறுமனே மறுபடியும் தலைவர் பதவியை  ஏற்க இராகுல் காந்திக்கு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுப்பது வீண்வேலை. கட்சிக்குள் தேர்தல் நடத்திக் தான் பொறுப்புகளுக்கு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும் என்பது ஒரு கவைக்குதவாத வாதம். 2004 ல் வாஜ்பாய் அரசை தேர்தலில் தோற்கடித்து சோனியா காந்தி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தி 2014 முடிய பத்தாண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வழிநடத்திய காலத்தில் காங்கிரசில் உட்கட்சி தேர்தல் நடந்ததா? இல்லையே ! சிங்கம் காயப்பட்டு நடமாட முடியாத நிலையில் சிறு நரி கூட சிங்கத்தின் முன் சென்று சேட்டைகள் செய்ய முனைவது போல வேரற்ற சில தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை கைப்பற்ற நடத்த முயன்று தோற்றுப் போனதை மறைக்க தாங்கள் உட்கட்சியில் ஜனநாயகத்திற்காக போராடுவதாக காமெடி செய்வதை ரசிக்க முடியவில்லை.

( சி.கே.மதிவாணன், 30/ தெற்கு தெரு, வி.பி.காலனி, அயனாவரம், சென்னை – 600023, மொபைல். 9444712675.)

The post காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் ஆற்றல் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

உச்ச நீதிமன்றம் போகும் பாதை பெரும் அச்சமூட்டுகிறது !
நம் நாட்டில் சாமானிய மக்கள் தங்களின் துயரங்களை துடைத்தெறிய- அநியாயங்களை அகற்றிட எப்போதும் நம்பிக்கையுடன் அணுகுவது நீதிமன்றங்களைத் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் மத்திய அரசின் தவறுகளை தட்டிக் கேட்பதற்கு பதிலாக அவற்றிற்கு துணை போவதாக உள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்றம் அரசின் கைப்பாவையாக செயல் படுகிறதோ என்று அச்சம் பலருக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றும் இன்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

பி எம் கேர்ஸ் நிதி : இது பிரதமர் கோவிட்-19 நோயினை எதிர்த்து போராடுவதற்காக புதிதாக உருவாக்கிய நிதி. இதற்கு பலரும் தாராளமாக நன்கொடை வழங்குகின்றனர். ஆனால் இந்த நிதியின் வரவு செலவு கணக்கு பகிரங்கமாக இல்லை என்பது மட்டுமல்ல இதற்கு யார் தணிக்கை செய்வது என்பதும் மூடு மந்திரமாக உள்ளது. இது குறித்து நேற்று அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அரசின் நிலையை அப்படியே ஆமோதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நிதி நிர்வாகத்தில் இருக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை – தணிக்கை முறை என்பதைக் கூட அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் வலியுறுத்தி கூறாதது மிகவும் கவலை அளிக்கிறது.‌

நடிகர் சுசாந்த் தற்கொலை குறித்த விசாரணை : இது குறித்து சம்பவம் நிகழ்ந்த மும்பை காவல்துறை விசாரணை நடத்திவரும் வேளையில் அரசியல் ஆதாயம் பெறும் உள்நோக்கத்துடன் சம்பந்தமே இல்லாமல் பீகார் மாநிலத்தின் பா.ஜ.க.கூட்டணி அரசு இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்ய முனைகிறது. நடிகர் சுசாந்த் பல வருடங்களாக வசிக்கும் வீடு மும்பையில் தான் உள்ளது. அந்த வீட்டில் தான் அவர் தற்கொலையும் நிகழ்ந்தது. எனவே இது குறித்து மும்பை போலீஸ் விசாரணை செய்வது தான் முறையானது. இதில் பீகார் மாநிலத்தின் காவல்துறை மூக்கை நுழைத்தது தவறு. இந்த அழகில் பீகார் மாநிலத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த தற்கொலை வழக்கை மத்திய சி.பி.ஐ . காவல்துறை விசாரணை செய்யும் என தடாலடியாக அமீத் ஷா அறிவித்தது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. இது குறித்த தீர்ப்பை நேற்று வழங்கிய உச்சநீதிமன்றம் மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரணை சரியே என தீர்ப்பளித்தது. இது ஒரு அப்பட்டமான நெறி பிறழல் என்பதில் சந்தேகமில்லை. நம் நாட்டில் மாநில அரசுகளுக்கு உள்ள சுயாட்சி உரிமையை பறிக்கும் மத்திய அரசின் இந்த தவறை உச்சநீதிமன்றம் ஆதரிப்பது மாபெரும் தவறு. மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே சி.பி.ஐ. சம்பந்தப்பட்ட மாநில குற்றம் குறித்து விசாரணை செய்ய முடியும்.இதனை மீறியுள்ளது இன்றைய தீர்ப்பு.

இது மட்டும் அல்ல. இதுபோன்ற பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகளை சுட்டிக் காட்ட முடியும்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு குறித்த வழக்கை ஓராண்டாக விசாரணைக்கு ஏற்க மறுக்கிறது உச்சநீதிமன்றம்.

பாபர் மசூதி இடிப்பு தவறு என்றும் அதனை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற அதே சமயத்தில் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு அளித்தது.

ரஃபேல் போர் விமானங்கள் வாங்க நடந்த பேரத்தில் முறைகேடு எதுவும் இல்லை என பிரதமர் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய உச்சநீதிமன்றம் அந்த பேரத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து மெளனம் சாதித்தது .

சி.பி.ஐ. இயக்குனரை மத்திய அரசு நள்ளிரவில் மாற்றல் செய்து உத்தரவு பிறப்பித்ததுடன் அவருக்கு மாற்றாக வேறு ஒருவர் விடியற்காலையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டதை எல்லாம் உச்ச நீதிமன்றம் கண்டிக்க குரலின்றி மெளனமானது.

உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி ஒருவர் மீது ஒரு பெண் ஊழியர் பாலியல் பலாத்காரப் புகார் செய்ததை விசாரித்து அந்த பெண் கூறிய புகார் ஆதாரமற்றது என உச்சநீதிமன்றமே தீர்மானித்தது. ஆனால் பொய்ப் புகார் கூறிய அந்த பெண் ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் உச்சநீதிமன்றம் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதி பணிஓய்வு பெற்றதும் அந்த பெண்மணியை மீண்டும் பணியில் அமர்த்திக் கொண்டது உச்ச நீதிமன்றம். இதற்கு அர்த்தம் என்ன ? அந்த பெண் நிரபராதி என்றால் அந்த தலைமை நீதிபதி தவறிழைத்தாரா ?

உச்ச நீதிமன்றம் அதன் மாண்பை காப்பாற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டியது இந்திய நாட்டின் எதிர்காலத்திற்கு மிக மிக தேவை.

(ஆதித்ய கிஷோர்)

The post உச்ச நீதிமன்றம் போகும் பாதை பெரும் அச்சமூட்டுகிறது ! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

சீனாவின் சதுரங்க ஆட்டம் : இந்தியாவுக்கு ‘செக்’ ?
சில நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டின் நாடாளுமன்றம் சீனாவுடன் ஒரு நீண்ட கால ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அங்கீகரித்தது. இதன் மூலம்  400 பில்லியன் டாலர்  வரை ஈரானுக்கு சீனா உதவி செய்யும். ( ஒரு பில்லியன் = 100 கோடி; ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு  ரூ. 75.)

இந்திய ரூபாயில் 4000 x 75= 30,0000 கோடிகளாகும். அதாவது, முப்பது லட்சம் கோடிக்கு சமம்.

இந்தியாவின் மிக நெருக்கமான நட்பு நாடாக நீண்ட நெடுநாட்களாக இருந்த ஈரான் இப்போது சீனாவுடன் கரம் கோர்த்ததற்கு காரணம் என்ன ? இதில் ஈரானின் தவறேதுமில்லை. பெரியண்ணன் அமெரிக்காவுக்கு அஞ்சி ஈரானுடன் உறவு கொள்ளவோ, – உதவி செய்யவோ  இந்தியா  பயந்து ஒதுங்கிக் கொண்டதால் வேறுவழியின்றி அந்த நாடு உதவிக் கரம் நீட்டிய சீனாவிடம் புகலிடம் அடைந்து விட்டது. இது இந்தியாவுக்கு பல வகைகளில் பேரிழப்பாகும்.

2003 ல் பா.ஜ.க.வின் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஈரான் நாட்டுடன் ஒரு உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி இந்தியா  400 மில்லியன் டாலர்  மதிப்பில் ஈரானின்  ‘சபாஹர்’ துறைமுகத்தை நவீனப்படுத்தி, பின்னர் அங்கிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையில் உள்ள ஈரானிய நகரான ‘ஜஹேடான்’ வரை  628 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே லைன் மற்றும் ரோடு நிர்மாணிப்பது  என முடிவானது. இதனால் இரு நாட்டுக்கும் நன்மையே. மூன்றாவதாக ஆப்கானிஸ்தான் நாடும் இதனால் பயன் பெற்றிருக்கும்.

அண்டை நாடான பாகிஸ்தானுடன் நமக்கு நல்லுறவு இல்லாத நிலையில் நமது பொருட்களை ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு பாகிஸ்தான் வழியாக தரைவழியாக அனுப்ப அந்த நாடு அனுமதி மறுக்கும் சூழலில் இந்த உடன்பாடு இந்தியாவுக்கு மிகப் பெரிய சாதகம். ஆனால் பெரியண்ணன் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாதே என்ற அச்சத்தால் இந்த உடன்பாட்டை அமல்படுத்துவதில் வேண்டும் என்றே காலதாமதம் செய்து இந்தியா  இழுத்தடித்தது.

பொறுமை இழந்த ஈரான் சீனாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டது. இதனால் சீனாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்தியாவின் மிக விசுவாசமான நீண்ட கால நட்பு நாடான ஈரானை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் இழுத்துக் கொண்டது. அதுமட்டுமின்றி அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஈரான் நாட்டின் பெட்ரோல் சீனாவுக்கு  மலிவான விலையில்  கிடைக்க வழி ஏற்பட்டது.

அமெரிக்காவின் பொருளாதாரத்  தடை மற்றும் அழுத்தம் காரணமாக நொடிந்து போயிருந்த ஈரானுக்கு சீனா அளித்த பொருளாதார உதவி அந்த நாட்டை பெரும் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றி உள்ளது. தவிர,  நீண்ட காலமாக தாமதமான சபாஹர் துறைமுக நவீனமயமும் விரிவாக்கும் இனி சீனாவின் ஒத்துழைப்போடு நிறைவேறும்.

இதனிடையே, கடந்த 2018 மே மாதத்தில் ஈரான் நாட்டுடன் அமெரிக்கா கையெழுத்திட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தை  அமெரிக்க  அதிபர் டொனால்ட்  டிரம்ப்  தன்னிச்சையாக ரத்து செய்து விட்டார். கூடவே ஈரான் நாட்டின் முதுகெலும்பை முறிக்கும் அளவுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்தார். அதுமட்டுமின்றி,  பிற நாடுகளும் அமெரிக்காவின் தடையை அமலாக்க வேண்டும். மீறினால் அந்த நாட்டின் மீதும் அமெரிக்கா தடை விதிக்கும் என பேட்டை ரெளடி போல் மிரட்டினார். இந்த மிரட்டலுக்குப் பயந்த பல நாட்டு தலைவர்களில்  நமது  56 அங்குலம்  விரிந்த மார்பு கொண்ட பிரதமரும் அடங்குவார்.

ஈரானில் அபரிமிதமாக கிடைப்பது எண்ணெய் வளம் தான். இந்த எண்ணெய் விற்பனை மூலமாகவே அந்நாட்டின் பொருளாதாரம் நிற்கிறது. எனவே அமெரிக்க மிரட்டலுக்கு பயந்து பல நாடுகள் ஈரானிலிருந்து பெட்ரோல், கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதால்  அதன்  பொருளாதாரம்  சிதைந்தது. உற்ற நண்பனாக விளங்கிய இந்தியாவும் கைவிட்டது. உதாரணத்திற்கு,  இந்தியா  2019-20 ல் ஈரானிலிருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் வெறும் 1.7 மில்லியன் டன். ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில் இறக்குமதி செய்ததோ  23.9 மில்லியன் டன் .

அமெரிக்க மிரட்டலுக்குப் பயந்து தனது நீண்டகால நண்பனை  இந்தியா கைகழுவியது. இதனால் இந்திய நலன்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. ஆனால், நெருக்கடியில் சிக்கித் தவித்த ஈரானுக்கு  கை கொடுத்து சீனா தனது நண்பனாக்கிக் கொண்டது. இந்த உடன்பாட்டின் மூலம் சீன நாட்டின் நலன்களையும் அது மேம்படுத்திக் கொண்டது. இந்தியாவை வல்லரசாக்குவோம் என வெற்றுக் கூச்சல் போட்டால் போதாது. அமெரிக்காவின்  அடாவடியை ,- மிரட்டலை  எதிர்த்து  நிற்கும் துணிச்சல் வேண்டும்.

மோடி அரசின்  இந்த  தவறை, – தேவையின்றி நமது நட்பு நாடான ஈரானை நமது எதிரி நாடான சீனாவின் மடியில் தள்ளிவிட்டதைப் பற்றி நம் நாட்டின் அறிவார்ந்த ஊடகங்கள்  விவாதம் செய்ய மாட்டார்கள்; விமர்சனம் செய்ய‌ மாட்டார்கள்.  ஏற்கனவே சீனா  நமது அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றுடன் நல்லுறவை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இப்போது அந்த பட்டியலில் ஈரான் நாடும் சேர்ந்திருக்கிறது. மொத்தத்தில் நம் நாடு தனிமைப் படுத்தப்பட்டு உள்ளது. சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தானது.

(பொதுச் செயலாளர்,தொழிலாளர் கல்வி மையம், தமிழ்நாடு )

The post சீனாவின் சதுரங்க  ஆட்டம் :         இந்தியாவுக்கு  ‘செக்’ ? appeared first on தேசிய முரசு - Desiya Murasu.