Admin, Author at தேசிய முரசு - Desiya Murasu

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா
தமிழகத்தில் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் இன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. தொடங்குவதற்கும், ஆட்சியில் செயல்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்கள் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தி அவர்களும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவை அன்றைய அரசியலில் உருவான திருப்புமுனைகளால் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். புகழைப் பரப்புகிற முயற்சியில் சைதை துரைசாமி அவர்கள் ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. அவரோடு அரசியலில் பயணித்தவருக்கு அத்தகைய உரிமை உண்டு. ஆனால், இன்று தினத்தந்தியில் அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரையில் ‘திருப்பூர் குமரன் மனைவி இராமாயி அம்மாள் வறுமையில் வாடிய போது காங்கிரஸ் கட்சி உதவி செய்ய முன்வராமல் அவரை மறந்துவிட்டதாக’ குற்றம்சாட்டி எழுதியிருக்கிறார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., திருப்பூர் குமரன் மனைவிக்கு நிதியுதவி செய்ததைப் பற்றிக் குறிப்பிடும் போது, தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை ஏன் சீண்டிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. 1967இல் ஆட்சியை காங்கிரஸ் கட்சி இழந்த பிறகு முதலமைச்சர்களாக இருந்த கலைஞரும், எம்.ஜி.ஆரும் இதுபோன்ற உதவிகளை நிறையச் செய்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் குறிப்பிடும் போது காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மறைந்த எம்.ஜி.ஆருக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செய்த உதவிகளைக் கணக்கிடுகிற போது, எம்.ஜி.ஆர். செய்த இத்தகைய உதவிகள் பொருட்படுத்தக்கூடியது அல்ல. எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரைப் பார்க்க பிரதமர் இந்திரா காந்தி தனி விமானத்தில் அவசர அவசரமாக சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இந்திரா காந்தி பயணித்த காரின் பின்னே அ.தி.மு.க. அமைச்சர்கள் சோகமே உருவாய் அவர்களது கார்களில் அணிவகுத்து வந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்போலோவில் எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து விட்டு அவருக்கு உரிய சிகிச்சைகளை செய்வதோடு, தேவைப்பட்டால் வெளிநாட்டில் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். பிறகு, எம்.ஜி.ஆருக்கு வெளிநாட்டுச் சிகிச்சை தேவைப்பட்டதால் விமானத்தையே மருத்துவமனையாக்கி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அவரை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாகப் பயணிக்க வைத்து, மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

அதைப்போலவே இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற 1984 தேர்தலில் அமெரிக்க மருத்துவமனையிலிருந்தே வேட்புமனு தாக்கலில் கையொப்பமிட்டுத் தேர்தலில் நிற்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்தவர் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி. அத்தகைய நன்றிப் பெருக்கை வெளிப்படுத்துகிற வகையில் தான் சென்னை கத்திப்பாரா சந்திப்பில் பண்டித ஜவஹர்லால் நேரு சிலை திறப்பு விழாவில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தியை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கட்டித் தழுவி கண்ணீர் மல்க உரையாற்றியதை சைதை துரைசாமி மறந்திருக்க முடியாது. தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா படுகொலை செய்யப்பட்டது மருத்துவமனையில் இருந்த போது எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படவில்லை. உடல்நலம் தேறிய சூழலில் ராஜிவ்காந்தி பிரதமராகப் பொறுப்பேற்று முதல் முறையாக சந்திக்கிற போது, எம்.ஜி.ஆர். எந்தளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். தமது உயிரைக் காப்பாற்றிய இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜிவ்காந்தியுடன் எம்.ஜி.ஆர். சந்தித்த காட்சி அங்கு கூட்டத்தில் திரண்ட மக்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. அத்தகைய நன்றி உணர்ச்சிமிக்க உறவுகளை வைத்திருந்ததை எல்லாம் மறந்துவிட்டு திருப்பூர் குமரன் மனைவிக்கு செய்த நிதியுதவியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்துவது எந்தவகையில் நியாயம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியலில் பெற்ற வெற்றிகள் எந்தளவிற்கு சாத்தியமாகியிருக்கும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். புகழைப் பாடுங்கள். அதற்காக காங்கிரசை இழிவுபடுத்தாதீர்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

The post எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்: இலங்கை மலையக தமிழர்களின் 200 ஆண்டு வலியை 20 கோடி பேரிடம் சேர்த்த பொக்கிஷம்
இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தையும் அவர்களது வலியையும் வெளிப்படுத்தும் வகையில் 2 மாதங்களுக்கு முன்பு யூட்யூப்பில் வெளியான ‘எஞ்சாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த பாடலை எழுதி, பாடிய சென்னையைச் சேர்ந்த இளைஞர் அறிவு இது குறித்து காணொலி விவாதத்தில் பங்கேற்றார். அதில், இலங்கை மலையக சமுதாய இளைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர். அந்த காணொலி விவாதத்தில், அனைவரையும் கட்டிப்போட்ட ஒரே நபர், இலங்கை மலையக சமுதாயத்தினரின் வரலாற்றுடன் தொடர்புடைய அறிவுவின் பாட்டி வள்ளியம்மா.

வள்ளியம்மா பாட்டியை குறிப்பிட்டு அந்த பாடலில் வரி வரும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யூட்யூப்பில் வெளியான இந்த பாடலை உலகம் முழுவதும் இருந்து 20 கோடி பேர் பார்த்ததின் மூலம், வள்ளியம்மா பாட்டியின் கதை 20 கோடி பேரிடம் சென்றடைந்திருக்கிறது.

இலங்கை தேயிலைத் தோட்டங்களில் உழைத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களில் ஒருவராக வள்ளியம்மா இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் நெற்றி வியர்வை சிந்த உழைத்த அந்த பெண்மணி, சொந்தமாக நிலம் கூட இல்லாத நிலையில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். வள்ளியம்மா பாட்டியைப் போன்று ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர். மீதமிருந்த ஆயிரக்கணக்கானோர், அங்கேயே தங்கியிருந்து தேயிலை பறித்து, அதன் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப உதவினர்.

இந்த பாடலுக்கு வள்ளியம்மா என்று பெயரிடப்பட்டாலும், மலையக தமிழர்களின் கதையைச் சொல்லத் தொடங்கும் ஒரு தீப்பொறியாக இருக்கக் கூடும் என்று இந்த விவாதத்தில் பங்கேற்ற தோட்ட உரிமைகள் மற்றும் பாலின பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பணிபுரியும் கண்டியைச் சேர்ந்த ஆர்வலர் சவும்யா விலாஷிணி முத்துலிங்கம் குறிப்பிட்டார். இலங்கை தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி அறிய தமிழகம் என்றுமே ஆர்வமாக இருந்ததில்லை என்பதை அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ”2008 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகள் பெங்களூருவில் படித்தேன். இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, இந்தியாவில் உள்ள தமிழர்கள் அதனை ஆர்வமுடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்திலும், அதற்குப் பின்னரும் மலையக தமிழர்களை இந்தியத் தமிழர்கள் கண்டுகொள்ளாததைக் கவனித்தேன். அவர்களது கவனம் எல்லாம் யாழ்ப்பாண தமிழர்கள் மீதே இருந்தது.

எனது பார்வையில், இது இலங்கைக்குள் காணப்பட்ட சமூக பாகுபாடு மற்றும் அலட்சியத்தின் மற்றொரு வெளிப்பாடாகும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் வாழ்ந்த அந்நாட்டுத் தமிழர்கள், இந்தியத் தமிழர்களை மரியாதைக்குறைவாக நடத்தினார்கள். நில உரிமை மற்றும் வீடுகள் விஷயத்தில் அங்கு குடியேறிய மலையக தமிழர்களை, இலங்கைத் தமிழர்கள் பாகுபாடாக நடத்தினர்.

இலங்கையின் அழகிய மலை நாட்டில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற, தமிழக தமிழர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர் ஆங்கிலேயர்கள். அப்போதிலிருந்து தமிழ் சமூகத்தின் வரலாறு இரண்டு நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது.

மலையகத் தமிழர்கள் நிலையற்றவர்களாக ஆக்கப்பட்டனர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இருந்தபோதிலும், ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைத்துக் கொண்டே, நியாயமான கூலிக்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைத் தீவின் சிறுபான்மை தமிழர்களின் வெவ்வேறு குழுக்களின் சமூகப் பிரச்சினைகள், மலையக தமிழர்களின் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இது ஓர் அரசியல் என்கிறார் சவும்யா விலாஷினி முத்துலிங்கம். இது குறித்து அவர் கூறும்போது, ” இலங்கையிலோ அல்லது தமிழகத்திலோ மக்கள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் வீரப் போராட்டமாகக் கருதப்படுவதில்லை. சுயமரியாதையை இழந்த உங்கள் தட்டில் வைக்கப்படும் உணவை முக்கியமானது என்று என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.

இந்த காணொலி விவாதத்தில் பேசிய அறிவு சாதிய அரசியலைச் சுட்டிக்காட்டினார். தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவில் அவரது படைப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இவை தன் குடும்பத்துடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் விளக்கினார்.

இது குறித்து அவர் கூறும்போது, ” சாதி இல்லை என்று இன்று சொல்பவர் கூட, ஒரு சாதிய நிலையிலிருந்து தான் சொல்ல முடியும். எங்கள் காலடியின் கீழ் கிடக்கும் மண், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையின் வரலாற்றுக்குச் சாட்சியாக இருக்கிறது. சாதிகளுக்கு ஆதரவாக இருக்கப் போகிறோமா? அல்லது சமத்துவத்துடன் வாழப்போகிறோமோ? என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி.

கூத்துக் கலைஞர்களாகவும் தினக்கூலி தொழிலாளர்களாகவும் எங்கள் குடும்பம் நடத்திய போராட்டத்தை மறக்க முடியாது. நாங்கள் வந்த சமுதாயம் எங்களை சாதிய அடையாளப்படுத்துகிறது. இவை அனைத்தும் அரசியல் காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையிலிருந்து எங்களால் அரசியலை வெளியே தூக்கி எறிந்துவிட முடியாது” என்றார்.

மலையக தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினரான மயில்வாகனன் திலகராஜா கூறும்போது,” தமிழர்கள் வாழும் தமிழகம், மலேசியா அல்லது யாழ்ப்பாணத்தை விட, மலையகத்தில் சாதி ரீதியான வன்முறை குறைவாகவே இருந்தது. தோட்டத் தொழிலாளராக இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய வள்ளியம்மாவை, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர் என்று சாதிய குழுவைப் போலவே முத்திரை குத்தப்பட்டுள்ளது. கே.ஏ. குணசேகரன், ரா.வினோத், தமிழ்மகன் மற்றும் முகமது யூசுப் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் மலையகத் தமிழர்கள் பற்றியும் அவர்கள் வாழ்க்கை பற்றியும் எவ்வளவோ எழுதியுள்ளார்கள். எனினும். அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தான் இன்றைக்குக் கோடிக்கணக்கானோரைச் சென்றடைந்திருக்கிறது.

‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த பாடல் மூலம் முற்போக்கு அரசியலை முன்னெடுக்க அறிவு முயன்றிருக்கிறார். இந்த பாடலில் வள்ளியம்மாவை பற்றிக் குறிப்பிட்டது முக்கியமானது. எனினும், வள்ளியம்மாவை போன்றோரின் கதைகளும், இலங்கையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக தமிழர்களின் கதைகளும் விரிவாகப் பேசப்பட வேண்டும். அந்த கதாபாத்திரங்கள் பேசக்கூடிய முழுமையான திரைப்படம் நமக்குத் தேவை.

இலங்கைக்குள்ளும், இந்தியாவுக்குத் திரும்பியோர் மத்தியிலும் சாதி எவ்வாறு விளையாடியது என்ற கதை பெரிதாகச் சொல்லப்பட வேண்டும். எங்கள் மக்களில் சிலர் திரும்பி வந்தது, தோட்டங்களைத் தற்காலிகமாக விட்டு வந்ததாக அர்த்தம். அந்த சமயம் சாதி வேறுபாடுகள் உடைத்தெறியப்பட்டன. மேலும், இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் வரலாற்று ரீதியாக நில உரிமைகள், வீட்டு வசதி மற்றும் நல்ல சம்பளத்துக்காக அணி திரட்டியிருப்பது, சாதி அடையாளத்தை விட வலுவான வர்க்க அடையாளத்தை உருவாக்கியிருப்பதாக அர்த்தம். எங்கள் மக்களின் கதைகளை நீங்கள் சொல்லும்போது, இதையும் சேர்த்துச் சொல்லுங்கள். மலையகத் தமிழர்கள் பற்றிய நல்ல திரைப்படம் வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்” என்றார்.

The post ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்: இலங்கை மலையக தமிழர்களின் 200 ஆண்டு வலியை 20 கோடி பேரிடம் சேர்த்த பொக்கிஷம் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இந்தியாவின் இளம் பிரதமர் ராஜிவ் காந்தி : பல பிறந்தநாள் கொண்டாட வேண்டிய தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
Translated article by Praveen Davar published in National Herald on 21 May 2021.

Rajiv Gandhi (1944-1991): The youngest PM of India

Praveen Davar

40 வயதில் இளம் பிரதமரான ராஜிவ் காந்தி அவர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 1991 மே 21 ஆம் தேதி 47 ஆவது வயதில் இன்னுயிர் ஈந்தார்…

படுகொலை செய்யப்பட்டபோது, ராஜிவ் காந்தி பிரதமராக இல்லை. எனினும், புதுடெல்லியில் நடந்த அவரது இறுதிச் சடங்கில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் இது குறித்து எழுதும்போது, ” ராஜிவ் காந்தியின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சாதாரண ஆண்கள் மற்றும் பெண்களுடன் சேர்ந்து 63 நாடுகளின் உலகத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அந்த அளவுக்கு 5 ஆண்டுகள் பிரதமராக இருந்த காலத்தில் உலகத் தலைவராக ராஜிவ் காந்தி உருவெடுத்தார். பிரதமராக இருந்த காலத்தில் நாட்டை ஒன்றுபட்ட பாதையில் கொண்டு செல்லவும், நவீன இந்தியாவை உருவாக்கவும் ராஜிவ் காந்தி பாடுபட்டார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதுவரும், ராஜிவின் தாய்வழி மாமாவுமான பி.கே.நேரு, தன் இளம் வயதில் பெரும் பகுதியை அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்தில் செலவிட்டவர். ஜவஹர்லால் நேருவுடன் ஒப்பிட்டு, ராஜிவ் காந்தியை இவ்வாறு எழுதுகிறார்…

” நேருவையும், ராஜிவையும் அறிந்த எவருக்கும், தன் தாத்தாவையே நினைவுபடுத்துவார். அதே கம்பீரத் தோற்றம், வசீகரம், மரியாதை, கருத்தியல், அருமையான நடத்தை மற்றும் கருணையில் அப்படியே நேரு போலவே ராஜிவ் காந்தியும் இருந்தார். நேருவைப் போலவே இந்தியாவின் அன்புக்குரியவராகவும் ராஜிவ் திகழ்ந்தார்.

இதெல்லாம் வெளித்தோற்றம். ஆனால், நேருவின் மரபணுக்கள் அப்படியே ராஜிவிடம் இருந்தன. நாட்டுப்பற்று, சுயநலமற்ற போக்கு, அர்ப்பணிப்பு மற்றும் அவரது நடத்தை ஆகியவை அப்படியே அவரது தாத்தா நேருவை பிரதிபலித்தன. அவரது தாத்தா எப்படி பூஜிக்கப்பட்டாரோ, அதேபோல் ராஜிவும் பூஜிக்கப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராக (1984-89) ராஜிவ் காந்தி பல சாதனைகளைப் படைத்துள்ளார். அந்த சாதனைகள் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாக இருந்தன. எல்லைகள் பாதுகாக்கப்பட்டன. லட்சக்கணக்கானோர் வறுமைக் கோட்டிலிருந்து உயர்த்தப்பட்டனர். வலுவான மதச்சார்பற்ற, சகிப்புத்தன்மையுடைய மற்றும் இரக்கமுள்ள மனிதராக ராஜிவ் திகழ்ந்ததால், வெளிநாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்தது.

துரதிஷ்டவசமாக, இந்த செல்வாக்கு இன்றைக்கு தகர்க்கப்பட்டுவிட்டது.

ராஜிவ் காந்திக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராகவும், அதன்பிறகு பிரதமராகவும் ஆன பி.வி. நரசிம்மராவ், தொலைநோக்கு பார்வை கொண்ட சிறந்த தலைவர் என ராஜிவ் காந்தியை பாராட்டினார். தொடர்ந்து அவர் கூறும்போது, ” புறநிலை மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை ராஜிவ் காந்தியின் மிகப் பெரிய குணங்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். எந்தவொரு விஷயத்தையும் உணர்வுப்பூர்வமாகப் பார்க்கும் திறன் அவரிடம் இருந்தது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது, அவர் கவுரவம் பார்த்தது கிடையாது. அவரைப் பொறுத்தவரை இந்தியா எப்போதும் முதலிடம் பிடித்தது. உலக அமைதிக்கான முன்னணி இயக்கமாக அவர் இந்தியாவை காட்சிப்படுத்தினார். இது, இந்தியாவை தொழில்நுடப் முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தியது” என்றார்.

4 பிரதமர்களின் அமைச்சரவையில் அங்கம் வகித்த முதுபெரும் தலைவர் சி.சுப்பிரமணியன் கூறும்போது, ” திறந்தவெளி பொருளாதார போட்டி ஏற்பட்டுள்ள சூழலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நவீன முறைகளை ஏற்றால் மட்டுமே இந்தியாவுக்கு எதிர்காலம் உண்டு என்பதில் ராஜிவ் காந்தி நம்பிக்கையாடு இருந்தார். மக்களின் நலன்களுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் சரியான முடிவுகளைப் பெறுவதற்கும் தொடங்கிய தொழில்நுட்ப பணிகள், அவர் மூளையில் உதித்த துணிச்சலான கண்டுபிடிப்புகள். தனது தாத்தா கற்பனை செய்ததைப் போலவே, நாட்டு மக்களின் வாழ்க்கையிலும் விஞ்ஞான அணுகுமுறைகள் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஜமன்லால் பஜாஜின் பேரன் தொழிலதிபர் ராகுல் பஜாஜ், ” சுதந்திர இந்தியாவில் நவீன இந்தியாவை உருவாக்கிய முதல் நபராக நேரு இருந்தார். இரண்டாவது நபராக ராஜிவ் காந்தி திகழ்ந்தார். 1991 ஜூலை முதல் அடுத்து வந்த காங்கிரஸ் அரசால் செயல்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் ராஜிவ் காந்தி விரும்பிய மற்றும் திட்டமிட்டதின் நேரடி விளைவு என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொழில்நுட்பம் மற்றும் வறுமை ஒழிப்புக்கு இடையேயான உறவை, பிரதமர் என்ற நிலையில் ராஜிவ் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். நாடுகளுக்கிடையேயோ அல்லது நாட்டுக்குள்ளேயோ வறுமை இடைவெளி இருந்தால், நிச்சயம் தொழில்நுட்ப இடைவெளி இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி மூலமே நம் மக்களின் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் இந்தியா வளர்ச்சி கண்டது. வறுமையை ஒழிப்பதே தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

முன்னாள் ராணுவ தளபதியாகவும், ஜம்மு காஷ்மீர் ஆளுநராகவும் பணியாற்றிய ஜெனரல் கிருஷ்ணா ராவ் கூறும்போது, ” நாட்டின் ஆணிவேராக இருக்கும் பிரச்சினைகளான வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை மற்றும் பின்தங்கிய நிலையை வலுவாக எதிர்கொள்ளாவிட்டால், அமைதியையோ அல்லது வளர்ச்சியையோ காண முடியாது என்பதை ராஜிவ் காந்தி தெளிவாக அறிந்திருந்தார்” என்கிறார்.

பொருளாதார நிபுணர் ஏ.எம். குஷ்ரோ குறிப்பிடும்போது, ” ராஜிவ் காந்தி ஆட்சிக் காலத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்களான ஐ.ஆர்.டி.பி, என்.ஆர்.இ.பி மற்றும் நேரு வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட ஆகியவை வலுப்பெற்றிருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. அதோடு, கிராம பஞ்சாயத்துக்கு புதிய பொறுப்புகளும் கூடுதல் நிதி ஆதாரத்தையும் ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினார். பஞ்சாயத்து ராஜ் சட்டம் தவிர்த்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி புரட்சியில் ராஜிவ் காந்தி சிறந்து விளங்கினார். இதன்மூலம் உள்நாட்டில் சாதனைகளைப் படைத்தார் ” என்றார்.

ராஜிவ் அமைச்சரவையில் அமைச்சராகவும், பின்னர் மக்களவை சபாநாயகராகவும் இருந்த சிவ்ராஜ் பாட்டீல் எழுதும்போது, ” ஒட்டுமொத்த வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி, கணினி மயமாக்கல் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் வளர்ந்த பல நாடுகளை விட இந்தியாவை முன்னிலைக்குக் கொண்டு வந்த ராஜிவ் காந்திக்கு, இன்றைக்கு இந்தியா கடன்பட்டிருக்கிறது. வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச உறவுகள் போன்றவற்றில் ராஜிவ் காந்தியின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் டி.என். கவுல் கூறும்போது, ”வெளியுறவுக் கொள்கையில் ராஜிவ் காந்தியின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. ரொனால்டு ரீகன், மிக்கைல் கோர்பச்சேவ், மார்க்ரெட் தாட்சர், ராபர்ட் முகாபே, ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க மற்றும் பல நாடுகளின் தலைவர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட முறையிலிருந்த நட்பு சிறந்தது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். சீனா, அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுடனான உறவுகளை மேம்படுத்த அவரால் முடிந்தது. முழுமையான அணு ஆயுதக் குறைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையில், ராஜிவ் காந்தியின் உரை முக்கியமானது. அணுசக்தி படுகொலை மூலம் சுய அழிவு அச்சுறுத்தலிலிருந்து உலகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், நடைமுறை, எதார்த்தமான போக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.

பா.ஜ.க. எம்.பி.யாகவும், பின்னர் வாஜ்பாய் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்த ஜஸ்வந்த் சிங் எழுதும்போது, ” மூன்றாம் உலக நாடுகளிலிருந்து எளிதாகப் பேசக்கூடிய ஒருவரை உலகத் தலைவர்கள் பெற்றிருந்தார்கள். பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் நினைவுகளும் மரபுகளும் ராஜிவ் காந்தி மூலம் உயிர்ப்புடன் இருந்தன.

ராஜிவ் காந்தி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த குர்ஷித் ஆலம் கான் தமது இரங்கல் செய்தியில், ” நவீனம், ஜனநாயகம் மற்றும் உண்மையான மதச்சார்பின்மையின் அடையாளமாக ராஜிவ் காந்தி திகழ்ந்தார். ஒருவருடைய தேசப்பற்றை அவர் சார்ந்திருக்கும் மதத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று ராஜிவ் நம்பினார். அழிவு சக்திகளும், பிரிவினைவாத மற்றும் வகுப்புவாத சக்திகளும் நாட்டில் தோன்றும் போதெல்லாம், அவர் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தார். தன் கொள்கையில் உறுதியுடன் இருக்க, எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார். இறுதியில், அவர் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தார்” என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். பல விசித்திரங்கள் கடவுளால் அரங்கேறிக் கொண்டிருப்பது உண்மைதான்.

பி.வி.நரசிம்ம ராவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவாண் தமது இரங்கல் செய்தியில், ”பல பிறந்த நாட்களை கொண்டாட வேண்டிய இதுபோன்ற மனிதனுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்துவது எங்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை” என, தன் வலியை வரிகளால் வெளிப்படுத்தினார்.

கட்டுரையாளர்: பிரவீன் தபார். ( முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். தற்போது அரசியல் விமர்சகராகவும் கட்டுரையாளராகவும் இருக்கிறார்.)

The post இந்தியாவின் இளம் பிரதமர் ராஜிவ் காந்தி : பல பிறந்தநாள் கொண்டாட வேண்டிய தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும் – தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை (21.05.2021)
குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது சமூகத்தில் தவறான பிரதிபலிப்பையும், முன்னுதாரணத்தையும் உருவாக்கி விடும். எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டு 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு மேல் முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேருக்கு மட்டுமே தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனைக் காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை. ஏனெனில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உண்டு. அந்த 19 பேரைப் போல இந்த 7 பேரையும் குற்றமற்றவர்கள் என்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருந்தால் அதனை யாரும் எதிர்க்கப் போவதில்லை.

ஆனால், இந்த 7 பேரும் குற்றவாளிகள் என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அவர்கள் சட்ட ரீதியாகப் போராடி நீதிமன்ற தீர்ப்பு மூலம் விடுதலை பெற்றால் அதனைக் காங்கிரஸ் கட்சி எதிர்க்காது. ஆனால், 7 பேர் விடுதலைக்காக அரசியல் அழுத்தம் கொடுப்பதை ஏற்க முடியாது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ பேர் சிறைகளில் இருக்கும்போது, இந்த 7 பேருக்காக மட்டும் அமைச்சரவை தீர்மானம், ஆளுநரிடம் கோரிக்கை, போராட்டங்கள் என்று அரசியல் அழுத்தம் கொடுப்பது ஏன்? சிறையில் இருப்பவர்களில் இந்த 7 பேர் மட்டும்தான் தமிழர்களா?

தமிழக சிறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு ஆதரவளிக்கக் காங்கிரஸ் தயாராக உள்ளது. இந்த 7 பேருக்கும் மட்டும் சிறப்புக் கருணை காட்டுவதை ஏற்க முடியாது.

நீதிமன்ற தீர்ப்புக்குப் புறம்பாக சில குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது, வருங்காலங்களில் பல்வேறு குழுக்கள் அல்லது விரும்பத் தகாத சக்திகள், கொலைக் குற்றவாளிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்க வழி ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. காவல் துறை போன்ற விசாரணை அமைப்புகளும், நீதிமன்றங்களும் தேவையில்லை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி விடும்.

சட்டப்படி குற்றவாளிகள் என்று எந்த நீதிமன்றம் தண்டித்ததோ, அதே நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எனவே, 7 பேர் விடுதலையைச் சட்ட ரீதியாக அணுக வேண்டுமே தவிர, அரசியல் ரீதியாக அணுகக் கூடாது என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.

The post எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்வது, நீதிமன்றம் எடுக்கும் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும் – தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை (21.05.2021) appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் மனப்பூர்வமாக வாழ்த்துகிறது – தலைவர் கே.எஸ்.அழகிரி
கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றி, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியை தி.மு. கழகத் தலைவரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவருமான தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்திட தமிழக மக்கள் அமோக ஆதரவுடன் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று கட்சியிலும், ஆட்சியிலும் நிர்வாக முத்திரைகளைப் பதித்த பெருமை அவருக்கு உண்டு. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றத்தை உறுதி செய்கிற வகையில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைத்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

இத்தகைய வெற்றியை ஈட்டுவதற்காகத் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிக மிக வித்தியாசமான, எவரும் இதுவரை செய்யாத வகையில் புரட்சிகரமான முறையில் பரப்புரை மேற்கொண்டதற்கு இன்றைக்குப் பலன் கிடைத்திருக்கிறது. தமிழக மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஈடு கொடுக்கிற வகையில் மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்குக் காங்கிரஸ் கட்சி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தை வழிநடத்திய முதுபெரும் தலைவர்களான பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில் இன்றைக்கு ஆறாவது முறையாக தி.மு.க. தலைமையில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சி அமைக்க இருக்கிறார். அவர் எதிர்கொள்ள இருக்கிற சவால் மிக்க பணிகளை மிகச் சிறப்பான முறையில் தீர்வு கண்டு மிகப் பெரிய வெற்றியை பெறுவார் என்ற   நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.

கடந்த மக்களவை தேர்தலில் இந்தியாவின் பிரதமராக திரு. ராகுல்காந்தி அவர்களை முன்மொழிந்து தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய பெருமை திரு. ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. அதேபோல, சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேண்டும் என வலியுறுத்திக் கூறியது, இன்றைக்குத் தமிழக மக்களின் பேராதரவோடு நிறைவேறியிருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாக அமைந்ததாலும், நீண்டகாலமாக நல்லிணக்கமும், சரியான புரிதலோடும் செயல்பட்ட காரணத்தாலும் இன்றைக்கு 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

தமிழகத்திற்கான  விடியல் இன்று தொடங்கியிருக்கிறது. இந்த விடியலின் மூலம் தமிழக மக்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கிற அனைத்து பின்னடைவுகளுக்கும் தீர்வு காண்கிற வகையில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியில் ஈடுபட வேண்டிய பொறுப்பும், கடமையும் அவருக்கு இருக்கிறது.  அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிற ஆற்றலும், அனுபவமும் மிக்க  திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழகம் தலைநிமிர்ந்து பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறத் தோளோடு தோள் நின்று செயல்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பாக மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் மனப்பூர்வமாக வாழ்த்துகிறது – தலைவர் கே.எஸ்.அழகிரி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனாவினால் 2 லட்சம் பேர் பலியானதிற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை முன்கூட்டியே கணிக்காமல் தவறான அணுகுமுறையை மேற்கொண்டதால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியானதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக இதோ காரணங்கள் :

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்துள்ளவர்களுக்குத் தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு போடுமா ? மாநில அரசு போடுமா ? 45 வயதிற்கு மேற்பட்டோருக்குத் தான் மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசி போடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஏன் முன்பதிவு செய்கிறது ?

முன்பதிவை மத்திய அரசு செய்தால் மாநில அரசு எந்த வகையில் தடுப்பூசி போட முடியும் ? கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு குழப்பத்திற்கு மேல் குழப்பம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது விடிவு ஏற்படப் போகிறது ?

கொரோனா தொற்றின் ஒருநாள் எண்ணிக்கை 3.8 லட்சம். ஒருநாள் இறப்பு மூன்றாவது நாளாகத் தொடர்ந்து 3 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. உலகத்தில் கொரோனாவினால் இறப்பவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர். உலக நாடுகளில் இந்தியா கொரோனா இறப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது.

கொரோனாவிலிருந்து மக்கள் உயிரைக் காக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 186 கோடி டோஸ்கள் தேவை.

தற்போது இரண்டு தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதோ மாதத்திற்கு 1.20 கோடி டோஸ்கள் மட்டுமே. 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 35 கோடி மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு 70 கோடி தடுப்பூசிகள் தேவை.

தற்போது இந்தியாவில் 15 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1 டோஸ் போட்டவர்கள் 12.12 கோடி. இரண்டு டோஸ் போட்டவர்கள் 2.36 கோடி மட்டுமே.

18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் போட தேவைப்படுகிற 186 கோடி தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க. அரசு எப்போது கொள்முதல் செய்யப்போகிறது ? எப்போது போடப் போகிறது ? மக்களின் உயிரைக் காக்க ஒரே பாதுகாப்பு கவசமாக இருக்கிற தடுப்பூசி போடுவதற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் அல்லாமல் வேறு திறமைமிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கவில்லை ?

மக்கள் உயிருக்காகப் போராடுகிற நேரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி தயாரிக்கிற ஏகபோக உரிமையை அனுமதித்தது ஏன் ? இந்திய மக்களின் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இருந்தால் தடுப்பூசி உற்பத்தியைக் கடந்தகால அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கி அம்மை, போலியோ, காலரா ஆகியவற்றை ஒழித்ததைப் போல இப்போதும் தடுப்பூசி உற்பத்தியை வழங்கி கொரோனாவை ஒழிப்பதில் ஏன் அக்கறை செலுத்தவில்லை ?

இந்திய மக்கள் அனைத்து சுகங்களையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலத்தைப் பற்றி கற்பனை கூட செய்ய முடியாமல், என்றைக்கு நமக்கு கொரோனா தொற்று வருமோ, எப்போது நமது உயிர் பறிக்கப்படுமோ? என்ற அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.

136 கோடி மக்களையும் ஒருசேர மரணப் பயத்தில் ஆழ்த்தியதற்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டு குறைந்தபட்சம் மத்திய பா.ஜ.க. அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும் ?

The post கொரோனாவினால் 2 லட்சம் பேர் பலியானதிற்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் உடனடியாக பதவி விலக வேண்டும்! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

மத்திய அரசே! 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடு! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
முக்கிய அம்சங்கள்:

மத்திய அரசே 100 சதவிகித தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு சரிசமமாக விநியோகம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு உரிய தீர்வாக அமையும்.

45 வயது மேற்பட்ட 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போட 60 கோடி டோஸ்கள் தேவைப்படுகின்றன. இதில் 12 கோடி டோஸ்கள் ஏற்கனவே போடப்பட்டுள்ளன. மேலும் ஏறக்குறை 50 கோடி டோஸ் தேவைப்படுகின்றன.

18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் கடந்தகால அரசுகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல, இன்றைய மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடிக்குக் கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே, அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போட முடியும். மாநில அரசுகளின் தலையில் சுமையை ஏற்றாமல், மத்திய அரசே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச தடுப்பூசி போட வேண்டும்.

கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து ஜனநாயக செயல்பாடுகள் முடங்கிய நிலையில், மத்திய அரசுக்குத் தெளிவு ஏற்படுத்துகிற வகையில் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்திலும், பீதியிலும் இருக்கும் போது சரியான வழிகாட்டுதலை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உணர்த்தியிருக்கிறது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு 50 சதவிகிதமும், மாநில அரசுகள் 50 சதவிகிதமும் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தவிர்த்து, மத்திய அரசே 100 சதவிகித தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்குச் சரிசமமாக விநியோகம் செய்யலாம் என்று கூறியிருப்பது, இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு உரிய தீர்வாக அமையும்.

ஒரு தடுப்பூசிக்கு மூன்று விலைகள் நிர்ணயம் செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தடுப்பூசி ரூ.185 விலையில் விற்கும் போது, இந்தியாவில் ரூ.400, ரூ.600, ரூ.1,200 என்று விற்பது எந்த வகையில் நியாயம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. அதேபோல, தடுப்பூசி விலையை நிர்ணயிக்கிற உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏன் வழங்கியது என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. ‘இதற்கெல்லாம் என்னால் உடனடியாக பதிலளிக்க முடியாது, கால அவகாசம் தேவை’ என்று மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியிருக்கிறார். இதன்மூலம் இந்திய மக்களை அச்சுறுத்துகிற கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு எத்தகைய தடுமாற்றத்துடன், தெளிவான அணுகுமுறை இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

கொரோனா என்பதைப் பேரிடராகக் கருதி, போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு உரிய முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே 4 மாதங்கள் விரயமாகி உள்ளன. தடுப்பூசி உற்பத்தியை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதோடு, கூடுதலாகப் பல நிறுவனங்களுக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம். அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கியிருக்கலாம். இன்றைக்கு சீரம் நிறுவனம் மாதம் 6 கோடி தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனம் 1 கோடி தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்கின்றன. ஜூலை முதல் உற்பத்தியைக் கூட்டுவதாக உறுதி செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறது. இந்நிலையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

45 வயது மேற்பட்டவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதென மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போட 60 கோடி டோஸ்கள் தேவைப்படுகின்றன. இதில் 12 கோடி ஏற்கனவே போடப்பட்டுள்ளன. மேலும் ஏறக்குறை 50 கோடி டோஸ் தேவைப்படுகின்றன. இந்நிலையில், புதிய தடுப்பூசி கொள்கையின்படி 18 வயதிற்கு மேற்பட்ட 63 கோடி பேருக்குத் தடுப்பூசி போட வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் இரண்டு டோஸ்கள் போட 120 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உடனடியாக தேவைப்படுகின்றன.

மத்திய அரசு கொள்முதல் விலையான ரூ.150 விலையில் கூட, தயாரிப்பு நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச லாபம் இருக்கிறது. தற்போது தடுப்பூசி கொள்கையின்படி மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.34,400 கோடியும் செலவாகும். இதன்மூலம் மொத்தம் ரூ.42,000 கோடி தான் செலவாகும். ஏற்கனவே, 2020-21 பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் கடந்தகால அரசுகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல, இன்றைய மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும். தனியார் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து இதற்கான நிதியை ஏற்றுக் கொண்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி உடனடியாக தடுப்பூசி போட்டு கொரோனாவின் பிடியில் சிக்கி உயிருக்காகப் போராடுகிற மக்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை பிரதமர் மோடி புரிந்து கொண்டு ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடிக்குக் கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே அனைத்து மக்களுக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி போட முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. பிரதமர் மோடி நினைத்தால், அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போட முடியும். இதை செய்வதன் மூலம், இந்திய மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

The post மத்திய அரசே! 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடு! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

இந்தியாவின் ஜனநாயக திருவிழாவும் மருந்து நிறுவனங்களின் லாபமும் : கோடுகளில் தெறிக்கவிட்ட கார்ட்டூனிஸ்ட்கள்
கொரோனா பரவலையடுத்து போடப்படும் தடுப்பூசிகள் குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் உயிரோட்டமுள்ள கார்ட்டூன்கள்:

1.(ஜனநாயக திருவிழா)

மருத்துவனைத் தொடர்பானவற்றையும் இணைத்து வாக்குப்பதிவு இயந்திரத்தை கார்ட்டூனாக வரைந்துள்ளார் சதீஷ் ஆச்சார்யா. கொரோனா ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் போது, பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதை தம் கார்ட்டூனில் இப்படி சுட்டிக்காட்டியுள்ளார்.

2.(நீங்கள் எதிர்மறையாக எண்ணும்போது மருத்துவம் நேர்மறையான செய்தியை தரும்)

ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா ஹோஸாபலே சமீபத்தில் அளித்த பேட்டியில், தேச விரோத சக்திகள் கொரோனா சூழலை நம்பகமற்ற மற்றும் எதிர்மறையாக மாற்றுகின்றன. இதனை ஊடகங்களில் நேர்மறையான விஷயம் என்று கூறுகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார். இதனைக் கேலி செய்யும் வகையில் இ.பி. உன்னி இந்த கார்ட்டூனை வரைந்துள்ளார்.

3.(தடுப்பூசி / தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்)

சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி விலையை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் உயர்த்தியதை நேர்த்தியான காட்டூன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பி.மஹ்மூத்.

4.(சார், உங்களைப் பற்றி ஆஸ்திரேலிய கார்ட்டூனிஸ்ட் கார்ட்டூன் வரைந்துள்ளார்…!ஹலோ அக்சய் குமார் ஜி…நீங்கள் கார்ட்டூனும் வரைவீர்களா?)

‘இறந்த யானையின் மீது சவாரி’ என மோடி பற்றி ஆஸ்திரேலிய நிதி மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, அலோக் நிரந்தர் வரைந்த கார்ட்டூன்.

5.(ஒவ்வொரு ஓட்டும் எண்ணப்படும்/ வாக்காளர்கள் அல்ல)

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை விமர்சித்து சுஹாயில் நக்ஸ்பந்தி வரைந்த கார்ட்டூன்.

The post இந்தியாவின் ஜனநாயக திருவிழாவும் மருந்து நிறுவனங்களின் லாபமும் : கோடுகளில் தெறிக்கவிட்ட கார்ட்டூனிஸ்ட்கள் appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

கொரோனாவை விட கொடிய வைரஸ் பா.ஜ.க.: மக்கள் உயிரோடு விளையாடும் கொடுமை!
கொரோனா பரவல் குறித்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு 414 நாட்கள் ஆகிவிட்டன. ’21 நாட்கள் பொது முடக்கம் கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொள்வதற்கு அவசியம்’ என்று பிரதமர் மோடி அறிவித்து 389 நாட்கள் ஆகிவிட்டன. இதற்கு இடைப்பட்ட காலத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. பின்னர் குறைந்து மீண்டும் தற்போது இரண்டாவது அலையில் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் தற்போது 1 கோடியே 93 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முதலில் உருவான கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட, தற்போதைய பாதிப்பு இது இருமடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வளவு நாட்களைக் கடந்து வந்தும், கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? இதனைத் தடுக்க விஞ்ஞான ரீதியாக பலன் தரும் வகையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்? ஏற்கெனவே நாம் பெற்ற அனுபவம் அல்லது பொது விஷயங்களின் அடிப்படையில் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்குப் புரிதல் இல்லை. வெளிப்படையான ஆபத்தான கருத்துக்களைக் கூறும் பா.ஜ.க.வினர், ஒரு தொற்று நோய் பரவும் சூழலில், என்ன சொல்லக் கூடாது என்பதை எல்லாம் பற்றிக் கவலைப்படவில்லை.

கடந்த 2 மாதங்களாக பா.ஜ.க.வினர் பேசிவரும் 9 விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:

தொற்று நோயின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

கடந்த மார்ச் 7 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தபோது, கொரோனா தொற்றிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தவிர யாரும் கூறவில்லை.

Union health minister Harsh Vardhan standing to attention while speaking to Prime Minister Modi in this file photo from 2014

இது தொடர்பாக ஹர்ஷ் வர்தன் கூறும்போது, ” கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வரும் இறுதி ஆட்டத்தில் இருக்கிறோம். இந்த நிலையைக் கடக்க நாம் 3 வழிகளைப் பின்பற்றுவது அவசியம்: கொரோனா தடுப்பூசி விஷயத்தில் அரசியல் செய்யாமல், தடுப்பூசிகளின் பின்னால் இருக்கும் விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சரியான நேரத்துக்கு நமது அன்புக்குரியவர்களையும் சுற்றத்தாரையும் கொரோனா தடுப்பூசி போட வைக்க வேண்டும்” என்றார்.

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக ஆரம்பக் கட்டத்திலேயே சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்து விட்டார். இதன்படி பார்க்கும் போது, கொரோனா வைரசின் உருமாற்றம் எதிர்வரும் வாரங்களில் அழிவை ஏற்படுத்தும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்பதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. கொரோனா முதல் அலையால் கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெருமளவு தொற்று அதிகரித்ததை எதிர்கொண்ட அனுபவம் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ளது. ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள போதுமான தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் இல்லை என்பது தான் உண்மை. ஆனால், பொருந்தாத தடுப்பூசி இலக்கை வைத்துக் கொண்டு இரண்டாவது அலையைச் சமாளித்துவிடலாம் என்று நினைத்துத் தான், ஹரித்துவாரில் கும்பமேளா மற்றும் ஏப்ரல் மாதம் வரை தேர்தல் பிரச்சாரத்தையும் அரசு முன்னெடுத்துச் சென்றது.

தற்போது போடப்படும் தடுப்பூசி இலக்கின்படி, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த இலக்கில் 70 சதவிகிதத்தை மட்டுமே எட்ட முடியும். தேவை மற்றும் வினியோகத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றால், இதுவரை கொரோனாவுக்கு எதிரான ஆட்டம் முடியவில்லை என்பதை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக்சிஜன் தேவை கட்டுக்குள் உள்ளது: மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல்

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் வினியோகத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதையடுத்து, மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறியதே ஆக்சிஜன் பற்றாக்குறைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார் ப்யூஸ் கோயல்.

இது குறித்து அவர் கூறும்போது, ” மருத்துவ ஆக்சிஜன் தேவையை மாநில அரசுகள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். வினியோக நிர்வாகத்தைப் போல், தேவை குறித்த நிர்வாகமும் முக்கியம். கொரோனா பரவலுக்கு மாநில அரசுகளே காரணம். அவர்கள் தங்கள் பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்தால், நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு பெரும் சவாலாக இருக்கும். நாங்கள் மாநில அரசுகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். அவர்கள் தான் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதையும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதையும் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல இடங்களில் ஆக்சிஜன் அதிக அளவில் பயன்படுத்துவதோடு வீணாக்கப்படுகிறது” என்றார்.

ப்யூஸ் கோயலின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. #TooMuchOxygen என்ற ஹேஸ்டேக்குடன் ட்விட்டரில் பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு ஆளாவோருக்கு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நுரையீரல் செயல்பாடும் பாதிக்கும். அந்த நேரத்தில் நுரையீரல் செயல்பாட்டின் சுமையைக் குறைக்கக் காற்றிலிருந்து வாயுவை வடிகட்டி செலுத்த வேண்டும். இவ்வாறு பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 130 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவை.

இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 162 ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவுகளைத் தொடங்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை 11 ஆக்சிஜன் உற்பத்தி பிரிவுகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. இதில், 5 பிரிவுகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

2020 மே மாதம் பியூஸ் கோயல் கூறும்போது, ” 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தான், கொரோனாவிலிருந்து மீண்ட முதல் நாடாக இருக்கும்” என்று பெருமைப் பட்டுக் கொண்டார்.

இவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததில்லை: பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இது போன்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை என்று குறிப்பிட்டார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், இவ்வாறு கூட்டம் கூடுவது மோசமானது என்பது பிரதமருக்குத் தெரியவேண்டாமா? மக்கள் மீது நாட்டின் பிரதமருக்கு அக்கறை வேண்டாமா?

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது,” கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மக்கள் கூட்டத்தைத் தான் பார்க்கிறேன்” என்றார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததைப் பற்றி அவர் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

கடந்த சில வாரங்களாக, தொடர்ந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார். அதே பிரதமர் தான், நாட்டில் பரவும் கொரோனா சூழ்நிலை குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறார். கூட்டத்தைக் கூட்டி கொரோனா பரவலுக்குக் காரணமாக இருந்துவிட்டு, பின்னர் கொரோனாவை தடுப்பது குறித்து ஆய்வு செய்வது முரண் இல்லையா?

கொரோனா முடிந்துவிட்டதால் முகக்கவசம் தேவையில்லை: ஹிமந்தா பிஸ்வா ஷர்மா

கொரோனா முடிந்துவிட்டதால் முகக்கவசங்களை இனி அணியத் தேவையில்லை என்று அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா முடிவு செய்கிறார். இப்போது தான் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

”அசாமில் கொரோனா கிடையாது. அதனால் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் நான் மக்களுக்கு தெரிவிக்கிறேன்” என்கிறார் ஷர்மா. இதற்கு கடும் கண்டனங்கள் வந்தபிறகும், தன் நிலையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. அசாமில் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதால், நீண்ட காலத்துக்கு முகக்கவசம் அவசியம் இல்லை என்று மீண்டும் சொல்கிறார். அசாமில் தற்போது 5 ஆயிரத்து 268 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அன்னை கங்கையின் ஆசியால் கொரோனா இருக்காது : தீரத் சிங் ராவத்

கொரோனா வைரசின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த உத்தராகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவில் மக்கள் பங்கேற்ற ஆக வேண்டும் என்பதால் தான், கொரோனா அச்சுறுத்தலை அவர் பொருட்படுத்தாமல் பேசி வருகிறார்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் கும்பமேளா நடத்துவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அப்போதும், கும்பமேளாவை ரத்து செய்ய மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தார். அதற்கான காரணத்தைக் கூறும்போது, ”அன்னை கங்கை பாயும் இங்கு கொரோனா இருக்காது” என்றார்.

இந்நிலையில், கும்பமேளாவில் கலந்து கொண்ட ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கும்பமேளாவில் கலந்து கொண்டுவிட்டு, அகமதாபாத்துக்குத் திரும்பிய 34 பேரில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியே கும்பமேளாவில் கலந்து கொண்டிருந்தாலும், அன்னை கங்கை நிச்சயம் காப்பாற்றியிருக்க மாட்டாள் என்பது தான் உண்மை. கும்பமேளா நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, எல்லோரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விளம்பரங்கள் மூலம் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, கும்பமேளாவில் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று இப்போது கூறுகிறார்.

கடுமையாக உழைக்கும் பா.ஜ.க. தொண்டர்களை கொரோனா தாக்காது : கோவிந்த் படேல்

குஜராத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சராக இருக்கும் கோவிந்த் படேல், கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களை கொரோனா தாக்காது, அதனால் தான் பா.ஜ.க. தொண்டர்கள் கொரோனா பாதிக்காமல் பத்திரமாக இருக்கிறார்கள் என்கிறார்.

இப்படிச் சொன்ன கோவிந்த் படேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போர் உலகத்தை ஈர்த்துள்ளது: மோடி

மற்றொரு வெற்றிக் கொண்டாட்டத்துக்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த முறை மோடியைத் தவிர யாரும் நடனம் ஆடி வெற்றியைக் கொண்டாடப் போவதில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் பேசிய மோடி, ”கொரோனா பரவல் தொடங்கியபோது, இந்தியாவின் நிலையைப் பார்த்து உலகமே கவலைப்பட்டது. இன்றைக்கு கொரோனாவுக்கு எதிரான போரைப் பார்த்து உலகமே வியந்துள்ளது. உலகளாவிய நன்மைகளை மேம்படுத்துவதில் இந்தியா மனித மைய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது” என்றார்.

இரண்டே மாதத்தில் உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தாக ‘கொரோனில்’: ஹர்ஷ் வர்தனும் நிதின் கட்கரியும் ஆதரவு

ஆயுர்வேத வியாபாரியும் யோகா குருவுமான ராம்தேவ் கடந்த பிப்ரவரி மாதம் ‘கொரோனில்’ என்ற ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும், நிதின் கட்கரியும் இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கொரோனில் மருந்துக்கு ஆதரவாகப் பேசினர்.

தமது பதாஞ்சலி நிறுவனத்தில் தயாராகும் ஆயுர்வேத மருந்தான கொரோனில் கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் ராம்தேவ் கூறினார். இதனை உடனே மறுத்த உலக சுகாதார அமைப்பு, ‘ராம்தேவ் சொல்வது பொய்’ என்று கூறி அவரது முகத்திரையைக் கிழித்தது.

கொரோனில் மருந்து விற்பனை தொடக்க விழாவில் பேசிய ஹர்ஷ் வர்தன், ‘ஆயுர்வேத தயாரிப்புகள் அதிகரிப்பதைப் பார்க்கும் போது, ஆயுர்வேதத்தை மக்கள் ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது’ என்றார்.

கொரோனில் ஆயுர்வேத மருந்துக்குப் பின்னால், விஞ்ஞானம் இருக்க வேண்டும். இரண்டு அமைச்சர்களை வைத்துக் கொண்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை சிக்கல் நிறைந்தது. இது போன்ற மருத்துகளுக்கு அரசு ஆதரவைத் தெரிவிப்பது ஆபத்தானது.

வயதானவர்கள் சாகட்டும்: பிரேம் சிங் படேல்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. அமைச்சர் பிரேம் சிங் படேல் கூறும்போது, ”இந்தியாவில் தொற்றால் நிகழும் இறப்புகளுக்கு உதவ முடியாது. ஏதாவது ஒரு வகையில் தினமும் மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனாவிலிருந்து பாதுகாப்பதைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். வயதானவர்கள் எப்படியும் இறக்கத்தான் போகிறார்கள்” என்ற மனிதநேயமற்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது எவ்வளவு ஆபத்தான கருத்துகளை பா.ஜ.கவினர் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனாவை விட இவர்கள் மிகவும் கொடியவர்கள்!

The post கொரோனாவை விட கொடிய வைரஸ் பா.ஜ.க.: மக்கள் உயிரோடு விளையாடும் கொடுமை! appeared first on தேசிய முரசு - Desiya Murasu.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
முக்கிய அம்சங்கள்:

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் 25 பேரும், ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருப்பது காலம் கடந்த நடவடிக்கை.

காணொலிக் கூட்டத்தை நேரலையாக ஒளிபரப்பிய தில்லி முதலமைச்சரைக் கண்டித்ததில் காட்டிய வேகத்தை, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதில் பிரதமர் மோடி காட்டவில்லை.

கொரோனா பிடியில் சிக்கியிருக்கும் மக்களைக் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு இணைந்து செயல்பட வேண்டும்.

கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடுகிற முதன்மை பொறுப்பு மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பலமுறை வலியுறுத்தி வந்தன. இந்த அழுத்தத்தின் காரணமாக அனைத்து மக்களுக்கும் இலவசமாக மாநில அரசுகளின் மூலம் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இது காலம் தாழ்ந்த அறிவிப்பாகவே கருத வேண்டியிருக்கிறது.

அதேபோல, தலைநகர் டெல்லியில் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் 510 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பலமுறை மத்திய சுகாதாரத்துறையை வலியுறுத்தியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தான் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, நேற்று இரவு தலைநகர் டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 20 பேர் பலியாகி இருக்கிற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களின் நேரடி பார்வையில் இருக்கும்போதே இத்தகைய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடியிடம் காணொலி கூட்டத்தில் ஆக்சிஜன் கேட்டுக் கெஞ்சிப் பேசியதைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்த கோரிக்கையைப் பரிவுடன் பரிசீலிக்காமல் காணொலி கூட்டத்தை ஒளிபரப்பியது குறித்து அவர்மீது கடும் கண்டனத்தைப் பிரதமர் மோடி வெளிப்படுத்துவதில் தான் கவனம் செலுத்தினார். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறைக்குப் பரிகாரம் காண எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் தில்லியில் 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பாகும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு 15 மாத காலத்தில் பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ளச் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை. இந்திய மக்கள் அனைவரும் அச்சத்திலும், பீதியிலும் இருந்து விடுபட உரிய மருத்துவச் சிகிச்சைகளை வழங்க மத்திய பா.ஜ.க. அரசு தோல்வியடைந்து விட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு, ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலை, விற்பனையைத் தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமே ஒப்படைத்தது, தடுப்பூசியை வாங்குவதற்குச் சந்தையில் ஆரோக்கியமற்ற போட்டி, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்போது ஏற்றுமதி இவை எல்லாமே பா.ஜ.க. அரசு எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவாகும்.

எனவே, கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் மக்களைப் பாதுகாப்பதை தலையாய நோக்கமாகக் கொண்டு, பொறுப்புணர்வோடு இப்பிரச்சினையைக் கையாள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

The post ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லியில் ஒரே நாளில் 45 பேர் பலி! பிரதமர் மோடி அவர்களே, மக்கள் உயிரை காப்பாற்ற தவறியது ஏன்? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on தேசிய முரசு - Desiya Murasu.