விவசாயத்துறையில் நிலையான சீர்திருத்தமும், அளவிடக்கூடிய தொழில்முறையும் தேவை என தொழிலதிபர் பர்னிக் சிட்ரன் மைத்ரா வலியுறுத்தியுள்ளார். உலக அளவிலான ஆலோசனை நிறுவனமான ஆர்த்தூர் டி.லிட்டில் நிறுவனத்தின் தெற்காசிய, இந்திய நிர்வாக பங்குதாரரான பர்னிக் சிட்ரன், ‘ தி இந்து ‘ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டியளித்தார். இதில் நிலைத்தன்மை, விவசாயிகளின் வருமான இழப்பு, விவசாய உற்பத்திக்கான நல்ல விலை, மதிப்புக் கூடுதல், விவசாய தொடர்புச் சங்கிலி மற்றும் நிர்வாகம் தொடர்பாக விவாதிக்கிறார்.
கேள்வி: இந்திய விவசாயத்துறை இப்போது எங்கே நின்று கொண்டிருக்கிறது?
பர்னிக் சிட்ரன் மைத்ரா: விவசாயத் துறையில் நாடு பெரிய அளவிலான முன்னேற்றங்களை கண்டுள்ளது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு மகசூல் அதிகரித்துள்ளது. மேலும், மதிப்பின் அடிப்படையில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராகவும் மாறியிருக்கிறோம். எனினும், இந்த துறை அதன் திறனில் 50 முதல் 60 சதவீதம் மட்டுமே உணர முடிகிறது. ஏபிஎம்சி எனப்படும் விவசாய உற்பத்தி சந்தைக் குழு மற்றும் இடைத் தரகர்களால் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான விலை நிர்ணயம் பாதிக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை உள்ளிட்ட சில பொருட்களை தவிர்த்தும், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை தவிர்த்தும், விவசாயிகளின் விலை நிர்ணயம் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, 15 முதல் 50 சதவீதம் குறைவாகவே உள்ளது. தற்போதையை உணவு தயாரிப்பு மதிப்புக் கூட்டு, பெரும் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் 100 முதல் 300 சதவீதம் வரை இருந்தாலும், தயாரிப்பைவிட 10 சதவீதம் குறைவாகவே உள்ளது.
கேள்வி: விவசாயம் செய்வது நிலையான தொழிலாக எவ்வாறு மாறும்?
பர்னிக் சிட்ரன் மைத்ரா: விவசாயத் துறையில் 52 சதவீதம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவர்களின் பங்கு வெறும் 14 சதவீதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இவர்களது வருமானத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள தொழிலாளர்களை ஒப்பிடும்போது, விவசாயத் தொழிலாளர்களின் வருமானம் சராசரியாக 60 முதல் 70 சதவீதத்துக்கு குறைவாகவே உள்ளது
உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்துதலில் உபரி உழைப்பு தேவைப்படும் சூழலில், விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதலின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 20 சதவீதமாக உயர வேண்டும்.
விவசாயத்துறை, ஆண்டுதோறும் 5 சதவீதம் வளரவேண்டும். அப்போதுதான் வரலாற்று சிறப்பு மிக்க வகையில், வளர்ச்சி இரட்டிப்பாகும்.
கேள்வி: விவசாயிகளுக்கான போதுமான ஊதியத்தை நாம் எவ்வாறு உறுதிப்படுத்துவது?
பர்னிக் சிட்ரன் மைத்ரா: குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளுக்கான ஊதியத்தை அதிகரிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 3 மாநிலங்களில் இந்த முறையை தொடர முடியவில்லை. இது உணவு பணவீக்கம் மற்றும் பெரிய அளவிலான பொருளாதார உறுதியற்ற தன்மையை தூண்டுவதாக அமைந்துவிட்டது.
இதற்கான மாற்று வழிகளும் உள்ளன. அவர்கள் பெரும்பாலான நுகர்வோரைப் பெறவும், சேமிப்பகத்துக்காக தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் விநியோக ஒருங்கிணைப்பு தளங்களை உருவாக்குவதன் மூலமும், சிறந்த விலையை பெற்றுத் தருவதன் மூலமும் வருவாயை பெருக்கலாம். பதப்படுத்தப்பட்ட மற்றும் பாக்கெட் உணவுகளின் ஒரு பகுதியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வழி உள்ளது.
கேள்வி: விவசாயத்துறையை சீரமைக்க ஏதாவது ஆலோசனைகள் உண்டா?
பர்னிக் சிட்ரன் மைத்ரா: விவசாயத் துறையில் சீர்திருத்தம் செய்ய 5 அம்ச திட்டத்தை நாடு பின்பற்ற வேண்டும். விஞ்ஞான ரீதியான விவசாயம் மூலம் நிலையான வளர்ச்சி பெற முக்கியத்துவம் தரவேண்டும்; கொள்கை மாற்றங்கள் மூலம் விவசாயிகளுக்கான உற்பத்திப் பொருள் வருவாயை அதிகரிக்க விவசாய சந்தையை மேம்படுத்தவேண்டும்; உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க ஒருங்கிணைந்த விவசாய ஏற்றுமதி திட்டத்தை செயல்படுத்தி, மதிப்புக் கூட்டலை 10 முதல் 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும்; விவசாயிகளின் உற்பத்தி அமைப்புகள் மூலம், நேரடி சந்தையை ஊக்குவிக்க வேண்டும்; விவசாயத் துறை சீர்திருத்தத்துக்காக தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
( நன்றி: தி ஹிந்து )