• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

by ஆ. கோபண்ணா
21/07/2020
in ஆதியின் கடிதம்
11
ஆதியின் கடிதம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இனிய நண்பர்களே,

50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் முழுநேர ஊழியராகப் பணியாற்றி பல பொறுப்புகளையேற்று கட்சியின் வளர்ச்சிக்காக என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். ஒருமுறை போட்டியிட்ட பிறகு தேர்தல் அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து விட்ட நிலையில் கட்சிப் பணிகளில் முழுக் கவனம் செலுத்தி வருகிறேன்.

கடந்த 1988 இல் நவசக்தி நாளேட்டை 13 மாதங்களும், பிறகு நவசக்தி வாரஇதழாக 3 ஆண்டுகளும் நடத்தியிருக்கிறேன். 2008 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரை 8 ஆண்டுகாலம் தேசிய முரசு என்கிற மாதமிருமுறை இதழை என் சொந்த பொறுப்பில் மிகுந்த ஈடுபாட்டோடு நடத்தி வந்தேன். மத்திய காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை விரிவாக வெளியிட்டு பரப்புரை செய்தேன். இலங்கை தமிழர் பிரச்சனையில் துணிவுடன் கருத்துக்களை கூறினேன். ஒரு கட்டத்தில் தேசிய முரசு நிறுத்த வேண்டிய நிலையேற்பட்டது. தொடர்ந்து எனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு தொலைக்காட்சி ஊடகங்கள் பேரூதவியாக இருந்தன. மிகுந்த தயாரிப்போடு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று மாற்றாரின் வாதங்களை கருத்துமோதல் மூலம் வென்றெடுப்பதில் பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறேன். தொலைக்காட்சி ஊடகத்தினால் தமிழகம் தழுவிய அளவில் பலரது நன்மதிப்பையும் பெற்றேன்.

இந்நிலையில், desiyamurasu.com என்கிற இணைய இதழை பெருந்தலைவர் பிறந்தநாளில் தொடங்கியிருக்கிறேன். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற அவதூறு பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு எனது சக்தி முழுமையும் செலவிடுவேன். இந்தப் பணியை சிறப்பாக செய்வதற்கு எனது 40 ஆண்டுகால நண்பரும், தமிழக காங்கிரஸ் தலைவருமான கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், முன்னோடிகள் ஆகியோரின் பேராதரவு எனக்குக் கூடுதல் வலிமையை நிச்சயம் தரும் என்று நம்புகிறேன். என்னால் தொடங்கப்பட்டுள்ள இந்த இணைய இதழை தமிழக காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஆதரித்து ஒத்துழைக்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.

இன்றைய அரசியல் சூழலில், இந்திய தேசிய காங்கிரஸின் இடைக்கால தலைவராக திருமதி சோனியா காந்தி அவர்கள் பொறுப்பு வகித்து வருகிறார். ஏற்கனவே, 19 ஆண்டுகாலம் காங்கிரஸின் தலைமையை ஏற்று, அதில் 10 ஆண்டு காலம் மத்தியில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை வழிநடத்தியிருக்கிறார். பிரதமர் பதவி அவர் மீது திணிக்கப்பட்ட போது,  அதை மறுத்தலித்தவர் அன்னை சோனியா காந்தி.   1989 க்கு பிறகு நேரு பாரம்பரியத்தைச் சேர்ந்த அன்னை சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ ஆட்சியில் எந்த ஒரு பதவியையும் ஏற்றுக் கொண்டதில்லை. இத்தகைய பெருமையும், சிறப்பும் இந்திய அரசியலில் எவருக்குமில்லை. தியாகம் செய்வதற்காகவே பிறந்த குடும்பம் தொடர்ந்து தியாகம் செய்து கொண்டிருக்கிறது. ஆனாலும், அவர்கள் மீது வகுப்புவாத, பிற்போக்கு சக்திகள் அவதூறுச் சேற்றை நாள்தோறும் அள்ளித் தெளித்து வருகிறார்கள்.   இதற்கு என்ன காரணம்? பா.ஜ.க.விற்கும், நரேந்திர மோடிக்கும் நன்றாகவே தெரியும். அவர்களை வீழ்த்துகிற அவர்களை வீழ்த்துகிற வலிமையும், சக்தியும் அன்னை சோனியாவுக்கும், ராகுல்காந்திக்கும் மட்டுமே உண்டு என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்களையும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் குறிவைத்துத் தாக்கி வருகிறார்கள்.

2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, ராகுல்காந்தி அவர்கள் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க. கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியை முற்றிலும் அழித்துவிடவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு கர்நாடகத்திலும், மத்தியப்பிரதேசத்திலும் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். ஆனாலும் பா.ஜ.க.வின் பதவி வெறி தீரவில்லை. தற்போது ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். இத்தகயை  எதேச்சதிகார  பா.ஜ.க.வை எப்படி எதிர்கொள்ளவது? யார் தலைமையில் பா.ஜ.க. வை சந்திப்பது?

உடல்நலக்குறைவைக் கூட பொருட்படுத்தாமல் காங்கிரஸ் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இடைக்கால தலைவராக அன்னை சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். இன்றைய சூழலில் நரேந்திர மோடியின் ஜனநாயக விரோத, பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க ஆற்றல் மிக்க தலைமை காங்கிரஸ் கட்சிக்கு தேவை. அத்தகைய தகுதியும், திறமையும்  மக்கள் தலைவராக பரிணமித்திருக்கிற ராகுல் காந்திக்கு அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. அவர் தலைமைப் பொறுப்பை ஏற்பதை காலம் தாழ்த்துவதில் அவருக்கே உரிய சில நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், 135 ஆண்டுகள் நிரம்பிய இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற மகோன்னதமான மாபெரும் இயக்கத்தை உயிரோட்டமாக வலிமையுடன் வைத்திருக்கிற மிகப் பெரிய பொறுப்பு அவருக்கு மட்டுமே இருப்பதை எவரும் மறுக்கமுடியாது.

அன்னை இந்திரா காந்தி 1984 இல் படுகொலை செய்யப்பட்ட போது, பிரதமராக ராஜீவ்காந்தி பதவியேற்க கூடாதென்று அவரது காலை கட்டிப்பிடித்து கதறி அழுதவர் அன்னை சோனியா காந்தி. ‘உங்கள் தாயை கொன்றதை போல உங்களையும் கொன்று விடுவார்கள். பிரதமர் பதவி நமக்கு வேண்டாம்’ என்று கதறினார். இந்த நேரத்தில் பதவியேற்பு விழாவிற்கு நேரமாகி விட்டது என்று பி.சி. அலெக்ஸான்டர் அருகில் வந்து கூறியதும், Sorry, Please leave me என்று கூறி சோனியாவின் கரங்களை உதறி விட்டு, பிரதமர் பதவியை ஏற்றவர் ராஜிவ்காந்தி. அன்னை சோனியா காந்தி எதற்காக கதறி அழுதாரோ, எதை தடுக்க முயன்றாரோ, எது நடக்கக்கூடாதென்று அஞ்சினாரோ, அது 1991 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு விட்டது. நன்றி கெட்ட விடுதலைப்புலிகளால் 1991 தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மண்ணில் கோழைத்தனமாக ஒரு பெண்ணைப் பயன்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். அன்னை இந்திராவின் படுகொலையைப் பார்த்த சோனியா காந்தி, ராஜிவ் காந்தியின் படுகொலையையும் பார்க்க வேண்டிய சோகம் நிகழ்ந்தது. அதையும் தாங்கிக் கொண்டு அரசியலில் இருந்து விலகி, குடும்பத்தாருடன் அமைதியாக வாழ விரும்பினார்.

ஆனால், 7 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி வலுவிழந்து சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த  மூத்த தலைவர்கள் எல்லாம்  அன்னை சோனியா காந்தியை காங்கிரஸ் தலைமையை ஏற்க வலியுறுத்தினர். அவர்களை வீழ்த்துகிற வலிமையும், சக்தியும் தலைமையை ஏற்க வேண்டுமென வலியுறுத்தினர். அப்போது கூட அன்னை சோனியாவிற்கு அரசியலில் நுழைய விருப்பமில்லை. ஆனால் காங்கிரஸ் இயக்கத்திற்காவும், நாட்டிற்காகவும் இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் தங்களது உயிரை  பறிகொடுத்தார்களோ, அந்தக் காங்கிரஸ் கட்சியையும், நாட்டையும் காப்பாற்றுகிற பொறுப்பை தட்டிக்கழித்து விடக்கக்கூடாது என்று கருதிய அன்னை சோனியா காந்தி காங்கிரஸின் தலைமைப் பொறுப்பையேற்றார். 4 மாநிலங்களில் மட்டுமே இருந்த காங்கிரஸ் ஆட்சியை 14 மாநிலங்களில் கொண்டுவர காரணமாக இருந்தார். 1998 லிருந்து 2004 வரை மத்தியில் நடைபெற்ற பா.ஜ.க.வின் வாஜ்பாய் ஆட்சியை அகற்றி சாதனை படைத்தார். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு எப்போதெல்லாம் சோதனை ஏற்படுகிறதோ, அதிலிருந்து மீட்டு பாதுகாக்கிற பொறுப்பை நேரு பாரம்பரியம்  தட்டிக்கழித்தது கிடையாது. அந்த தலைமை  பொறுப்பையேற்று வெற்றியை ஈட்டிய பெருமை நேரு பாரம்பரியத்திற்கு உண்டு.

அதே வகையில் இன்றைக்கு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸின் தலைமைப் பொறுப்பையேற்று முழுநேரப் பணியாக கருதி செயல்படுகிற ஆற்றல்மிக்க தலைமையின் மூலமே பா.ஜ.க. வையும், நரேந்திர மோடியையும் எதிர்கொள்ள முடியும். ஜெய்ப்பூரிலும், தலைநகர் டெல்லியில் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய எழுச்சிமிகு சங்க நாதத்தை கேட்டவர்கள் அனைவருக்கும் பா.ஜ.க. வையும், நரேந்திர மோடியையும் அரசியல் களத்தில் வீழ்த்துகிற பேராண்மை அவருக்கு மட்டுமே இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறார்கள். எனவே, அந்த நம்பிக்கையை காப்பாற்றுகிற வகையில் காங்கிரஸ் கட்சியை வலிமைமிக்க இயக்கமாக, எழுச்சிமிக்க அமைப்பாக செயல்படுத்துவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அவர்கள் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்.  ராகுல் காந்தி தலைமை  மட்டுமே நரேந்திர மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுகிற ஆற்றலும், வலிமையும் இருக்கிறது. நாட்டிற்கு இன்று ஏற்பட்டிருக்கிற சோதனையிலிருந்து இந்தியாவை மீட்க மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களே, காங்கிரஸ் தலைமையை ஏற்றிடுக, இந்தியாவை தீய சக்திகளிடமிருந்து மீட்டிடுக என்று லட்சோபலட்சம் தொண்டர்களின் குரலாக உங்களை உரிமையோடு அழைக்கிறோம்.

வாருங்கள், வாருங்கள் தலைமை ஏற்க வாருங்கள். இந்தியாவையும், காங்கிரஸையும் காப்பாற்றுங்கள்.

அன்பன்

ஆ. கோபண்ணா

Previous Post

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை தமிழக மீட்பு நாளாக கொண்டாடுவது ஏன்?

Next Post

காமராஜரின் ஆட்சிமுறை

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
காமராஜரின் ஆட்சிமுறை

காமராஜரின் ஆட்சிமுறை

Comments 11

  1. N.shajahan says:
    2 years ago

    உங்கள் அடுத்த கட்ட சோசியல் மீடியாவை நோக்கி மக்களுக்கு உண்மை செய்திகளை உடனுக்குடன் வழங்க வேண்டும், தேசிய முரசு, முரசு கொட்டட்டும் .வெற்றி பெற வாழ்த்துகள் 💐

    Reply
  2. பி.ஜே. ரவி says:
    2 years ago

    ஆசிரியர் கோபண்ணா அவர்களின் முயற்சிகள் வெற்றி அடையட்டும், சிக்கலான நேரத்தில் இணைய இதழை தொடங்கி இருக்கிறீர்கள். வெல்க

    Reply
  3. R.A.Kumaresan says:
    2 years ago

    தேசிய முரசு டாட்காம் வெற்றி நடை போட எம் வாழ்த்து பிரார்த்தனைகள்

    Reply
  4. சைதை K விஜய் says:
    2 years ago

    வாழ்த்துக்கள்.. அருமை அண்ணன் திரு. கோப்பண்ண அவர்களே.. உங்கள் முயற்சி நிச்சயம் தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்…

    வாழ்த்துக்கள்…

    Reply
  5. Vijayarajan says:
    2 years ago

    Good luck and tons of best wishes. God bless you in whatever you do. This is my heartiest wish for DESIYA MURASU

    Success comes only to those who believe in themselves and are prepared to win. Good Luck Without a doubt, you will continue to have success in all areas.

    Don’t be afraid of moving forward. I believe that the future is bright for DESIYA MURASU.

    Reply
    • A. Gopanna says:
      2 years ago

      Thank you for your hearty wishes!

      Reply
  6. டாக்டர்.அ.சேவியர் says:
    2 years ago

    தேசிய முரசு டாட்காம் வெற்றி பெற என் வாழ்த்துகள்

    Reply
  7. S. A. VASU says:
    2 years ago

    தங்களின் சீரிய முயற்சிக்கு எங்களது ஆதரவு என்றுமே உண்டு. தங்களின் இப்பணி சிறப்பான வெற்றியடைய நாங்கள் துணை நிற்போம். வாழ்க காங்கிரஸ்….வெல்க காங்கிரஸ்.

    Reply
  8. Vinod says:
    2 years ago

    சார்… ஐந்தாவது பத்தியில் ‘2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று’ என்பதற்குப் பதிலாக ‘2004 மக்களவைத் தேர்தல்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மாற்றவும். நன்றி.

    Reply
    • A. Gopanna says:
      2 years ago

      நன்றி ! திருத்தம் செய்ய பட்டுள்ளது

      Reply
  9. George melkiure says:
    2 years ago

    வாழ்த்துக்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com