• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஆதியின் பதில்

ஜெ.யின் நினைவு இல்லம்! அரசு பணம் ரூ.100 கோடியா?

by ஆ. கோபண்ணா
30/07/2020
in ஆதியின் பதில்
0
ஜெ.யின் நினைவு இல்லம்!                              அரசு பணம் ரூ.100 கோடியா?
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டு, நினைவு இல்லமாக தமிழக அரசு அறிவித்திருக்கிறதே ?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அந்த வீடு நினைவு இல்லமாக ஆக்கப்பட்டிருக்கிறது. வாரிசுகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஏறத்தாழ ரூபாய் 68 கோடி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஜெயலலிதா தரப்பில் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய ரூபாய் 36 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக ஆக்குவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ளன.

ஒரு முதலமைச்சராக இருந்தவர், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றவர். பிறகு மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர். உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிற போது அவர் உயிரோடு இல்லை. ஆனால், ஊழல் வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிற்கு நான்கு ஆண்டு தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட போது முதல் குற்றவாளியான ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்பியிருக்க மாட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய தண்டனை மரணத்தினால் தவிர்க்கப்பட்டது.

இந்தப் பின்னணி கொண்ட ஒருவருக்கு தமிழக அரசு மக்களின் வரிப் பணத்தில் இருந்து ரூபாய் 100 கோடி செலவு செய்து நினைவு இல்லம் எழுப்ப வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது. இப்பிரச்சினை குறித்து ‘ஜூனியர் விகடன் கழுகார் பதில்கள்” என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய கருத்தை துணிவுடன் கூறி, ஊடக தர்மத்தை காப்பாற்றிய ஜூனியர் விகடனை பாராட்டுகிறோம்.
கேள்வி : ‘ஜெயலலிதா வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய 36 கோடி ரூபாயை கோர்ட்டில் தமிழக அரசு கட்டியிருப்பது எந்த சட்டப்படி நியாயம்
பதில் : எந்த தர்மப்படியும் கூட நியாயமற்ற செயலே, கோடி கோடியாக கொள்ளை அடித்த வழக்கில் சிக்கியவர் ஜெயலலிதா. இவருடைய தோழியான சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி, அண்ணன் மகன் சுதாகரன் என்று நான்கு பேருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு, இறுதியில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள்ளாக இறந்து போனதால் வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் தப்பியவர் ஜெயலலிதா. அடுத்து, வருமான வரியை செலுத்தாத குற்றத்தையும் புரிந்திருக்கிறார். அந்த தொகையை அரசாங்கமே செலுத்துகிறது என்றால், ‘நாங்கள் குற்றவாளிகளின் கூடாரம்” என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எழுத்தாளர், பேச்சாளர் பழ. கருப்பையா சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘அரசியலில் விளங்காமல் போய் விட்டேன்” என்று அலுத்துக் கொண்டிருக்கிறாரே ?

பழ. கருப்பையா போன்ற பல ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்கள் தங்களது விருப்பம் போல் கொள்கைகளையும், பாதைகளையும் அடிக்கடி மாற்றிக் கொண்டு தங்களை தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். அரசியல்வாதிக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது நிலையான கொள்கை. எந்த கொள்கையை ஏற்றுக் கொள்கிறோமோ, அதில் இறுதி மூச்சு வரை இருந்து அதற்காக வாழ வேண்டும். அப்படி வாழாத பழ. கருப்பையா போன்றவர்கள் எவ்வளவு சொற்பொழிவாற்றல் திறமை இருந்தாலும் எந்த கட்சியிலும் நீடிக்க  முடியாமல் அரசியலில்  ஜொலிக்க முடியாமல் போய் விடுகிறார்கள். இவர்களுடைய சொற்பொழிவை ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி கேட்பதனாலேயே நாம் எதை செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அதீத கற்பனையே இவரைப் போன்றவர்களின் வீழ்ச்சிக்கு காரணம்.

சமீபத்தில் ஜூனியர் விகடனுக்கு பழ. கருப்பையா அளித்த பேட்டியில் எனக்கு பிடித்த பகுதி : ‘சட்டமன்ற உறுப்பினர் ஆனது குறித்தோ, அங்கு பேசுவது குறித்தோ எனக்கு எந்த வகை புல்லரிப்பும் எப்போதும் ஏற்பட்டதில்லை. ஜெயலலிதா முதல்வராக சபையில் பேசும் போது ஏற்படும் இடைவெளிகளில், ஒருவகை ஓசை ஒழுங்குடன் மேசையை தட்டுவார்கள் உடன் உறுப்பினர்கள். நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து அருகில் இருக்கும் உறுப்பினர்கள், ‘எல்லாமே கேமராவில் பதிவாகிக் கொண்டிருக்கிறது. அம்மா அதை போட்டுப் பார்பார்கள், நீ ஒழிந்தாய் … “ என்று அச்சுறுத்துவது உண்டு. எது எதற்குத் தான் ஒருவன் ஒழிவான் என்று கணக்கே இல்லாமல் போய் விடுகிறது”. இதை படித்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஜெயலலிதாவை முற்றிலும் அறிந்த ஒருவர், அந்த கட்சியின் செயல்பாடை புரிந்த ஒருவர், இதையெல்லாம் அந்த கட்சியில் சேர்ந்த பின்னர் தான் இவருக்கு தெளிவு வந்திருக்கிறது என்றால் இவரைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
தங்கள் அலமாரிகளில் அதிகமாக குவித்திருக்கும் புத்தகங்களை அதிகமாக படித்த காரணத்தால், அதிகமாக குழப்பம் ஏற்பட்டு எதிலும் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ ?

ஏ.பி.வி.பி. மாணவர் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக வழக்கு பதிவாகி, சமரசம் செய்யப்பட்டது உண்மையா ?

தமிழ்நாடு NSUI தலைவர் என். அஸ்வத்தாமன், பாதிக்கப்பட்ட ஸ்ரீமதியின் உறவினர் பாலாஜி விஜயராகவன், நரேஷ்குமார்.

உண்மை இல்லை. சாலைகளில் சிறுநீர் கழிப்பதை பார்த்தாலே அனைவரும் முகம் சுளிப்பார்கள். ஆனால், பா.ஜ.க.வின் மாணவர் தலைவரோ, ஒரு பெண்ணின் வீட்டு வாசலின் முன்பாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் சிறுநீர் கழித்திருக்கிறார். இதைவிட  ஓர் அரசியல் அநாகரீகம், அகங்காரம், ஆணவம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆனால், இந்த சம்பவத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை நாங்கள் திரும்பப் பெறவில்லை என்று வழக்கில் சம்மந்தப்பட்ட பாலாஜி சீனிவாசன் சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை புரிந்து தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் என். அஸ்வத்தாமன் மற்றும் நரேஷ்குமார் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் பா.ஜ.க. மாணவர் தலைவரின் முகமூடி கிழித்தெறியப்பட்டிருக்கிறது. இதை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் அஸ்வத்தாமன் மற்றும் நரேஷ்குமார் உள்ளிட்டவர்களை பாராட்டுகிறோம். 

இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக மக்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் குறையும் என்று சிகாகோ பல்கலைக் கழக ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளதே ?

உலகத்திலேயே மாசு காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட இடங்களில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் 24.8 கோடி வடமாநில மக்களின் ஆயுளில் 8 ஆண்டுகள் குறையும் என்று ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் சராசரியாக 5.2 ஆண்டுகள் ஆயுள் குறையும் என்று ஆய்வு உறுதி செய்கிறது.

இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மத்திய அரசு புதிதாக சட்டம் இயற்ற முனைந்திருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு சுற்றுச்சூழலை தாரை வார்க்கிறது. இதனால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதோடு, இந்திய மக்களின் ஆயுட்காலமும் குறையப் போகிறது. ஒருபக்கம் கொரோனா நோயினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் மக்கள், காற்று மாசுபடுவதால் தங்களது ஆயுளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. அரசு கவலைப்படுமா என்ன ?

வகுப்புவாத இந்துத்வா கொள்கையுள்ள 15 பேர், 18 அடி உயர வேல் சின்னம் கொண்ட டிஜிட்டல் பேனரை கோவையில் வைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனரே ?

தமிழகத்தில் தாமரை மலர்வதற்காக எடுத்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. பல மாதங்களாக தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி நிரப்பப்படாத நிலையில் முன் அனுபவம் இல்லாத ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார். இதனால் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. அங்கே ஒரு மௌனப் போர் நடக்கிறது. இதனை சரிகட்ட புதிய பதவிகள் வாரி வழங்கப்படுகின்றன.

பா.ஜ.க.வை வளர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த சூழலில், கந்தசஷ்டி கவச சர்ச்சையை பயன்படுத்தி, கட்சியை வளர்க்கும் முயற்சியில் பா.ஜ.க. தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதி தான் கோவையில் நிறுவப்பட்ட 18 அடி உயரம் கொண்ட வேல் டிஜிட்டல் பேனர்கள். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்காக கருப்பர் கூட்ட தலைவர் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதற்குப் பிறகும் கந்த சஷ்டி கவசத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என பா.ஜ.க.வினர் நினைத்தால்,  தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணில் எக்காலத்திலும் எடுபடாது.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு பாடம் புகட்டுவேன் என்று  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மிரட்டியிருக்கிறாரே ?

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக கருதப்படுகிற மாயாவதி வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட பா.ஜ.க.வுக்கு தான் பாடம் புகட்ட வேண்டுமே தவிர, காங்கிரஸ் முதலமைச்சருக்கு அல்ல. இத்தகைய போக்கு காரணமாகத் தான் உத்தரபிரதேச அரசியலில் அவர் செல்வாக்கு சரிந்து வருகிறது. அதனால் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த ஆறு பேரும் கூண்டோடு காங்கிரசில் சேர்ந்து விட்டார்கள். இதற்காக காங்கிரஸ் மீது கோபப்பட்டு என்ன பயன் ?

கிரிமிலேயர் வருமான வரம்பை உயர்த்த மத்திய அரசு மறுத்து வருகிறதே ?

இடஒதுக்கீட்டை எதிர்த்து நடைபெற்ற இந்திரா சகானி வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இடஒதுக்கீடு செல்லும் என்று கூறிய அதே நேரத்தில், அதில் கிரிமிலேயர் முறை அமல்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரை செய்திருக்கிறது. இதை மத்திய அரசு பல்வேறு அளவுகோலுடன் செயல்படுத்தி வருகிறது.

கிரிமிலேயர் வருமான வரம்பை ஆண்டுக்கு ரூபாய் 15 லட்சம் முதல் 20 லட்சமாக உயர்த்த வேண்டுமென்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. கடந்த பல ஆண்டுகளாக வருமான வரம்பு ரூபாய் 8 லட்சமாக இருக்கிறது. இந்த வரம்பை உயர்த்த வேண்டுமென்று அனைத்து கட்சிகளும் கோரி வருகின்றன. பொதுவாக பிற்படுத்தப்பட்டோர் என்றால், சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களாகவே கருதப்படுவார்கள். எனவே, இவர்களுக்கு பொருளாதார அடிப்படையிலான அளவுகோல் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பின்படி இன்றைய கால சூழலுக்கு ஏற்ப வருமான வரம்பை ரூபாய் 20 லட்சமாக உயர்த்த வேண்டும். இதை சமூகநீதியில் அக்கறை இல்லாத மத்திய அரசு செய்யுமா என்பது கேள்விக்குறி.

கொரோனா பாதிப்பில் இந்தியா 15 லட்சத்தை கடந்திருக்கிறதே ?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவதாக பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்ற முடியாத நிலையில் கொரோனா பாதிப்பை 15 லட்சம் பேருக்கு கொடுத்து உலகத்தில் இரண்டாவது இடத்தை இந்தியாவுக்கு பெற்று சாதனை படைத்திருக்கிறார் பிரதமர் மோடி. எவ்வளவு பொறுத்தமான சாதனை பார்த்தீர்களா ?

பொறியியல் கல்லூரிகளில் 2.63 லட்சம் மாணவர்களை சேர்க்க,  தமிழக அரசுக்கு  அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அனுமதி வழங்கியிருக்கிறதே ?

தமிழகத்தில் உள்ள 500 கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேறி வருகிறார்கள். படித்து விட்டு வெளியே வருகிற மாணவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு தகுதியும், தரமும் இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. எந்த வேலையும் கிடைக்காமல் இவர்களில் பலர் டெலிவரி பணியில் சேர்ந்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 85 லட்சம் பட்டதாரிகள் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக வேலை வாய்ப்புகள் முழுமையாக இழந்த நிலையில் புதிதாக படித்து வருகிற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இவர்களின் வேலை வாய்ப்பை பெருக்குகிற வகையில் தொலைநோக்குப் பார்வை எடப்பாடி அரசுக்கு இருக்கிறதா ? எடப்பாடி அரசைப் பொறுத்தவரை தொலைநோக்கு என்பது வருகிற மே 2021 தேர்தல் வரை தான். அதில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன இலவசங்கள் கொடுக்கலாமோ, அதை வழங்கி வாக்குகளை பறிக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம். வேலை வாய்ப்பை பெருக்க அவர்களிடம்  எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை, நிதியும் இல்லை.

பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை 74 சதவிகிதமாக உயர்த்த முடிவெடுத்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறாரே ?

ஏன் 74 சதவிகிதம் ? 100 சதவிகிதமாக அறிவிக்கலாமே ? அப்படி அறிவித்தால் தானே ‘மேக் இன் இந்தியா” கொள்கைக்கு பெருமை சேர்க்கும் ? இந்தியாவின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட துறைகளில் அந்நிய முதலீட்டை வரம்பு மீறி அனுமதிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு பேராபத்தாக முடியும்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் தானே ?

இந்தியாவில் நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அதற்கு உதாரணமாக உத்தரபிரதேசம், மதுரா நீதிமன்றத்தில் பரத்பூர் ராஜா மான்சிங் படுகொலை செய்யப்பட்டதில் 11 காவல்துறையினருக்கு 35 ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நீதிமன்றத்தின் காலதாமதம் நாடு முழுவதும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. இதைப் பற்றி மேலும் ஒரு செய்தியின் மூலம் 1950 இல் பதிவு செய்யப்பட்ட 77 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பது தெரிகிறது. இத்தகைய நிலையில் நீதிமன்ற தீர்ப்புகள் தாமதிக்கப்படுவது நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும்.

எனவே, விரைவாக வழக்குகள் முடிக்கப்பட்டு தண்டனை வழங்குவதன் மூலமே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, குற்றங்கள் குறைய வாய்ப்புகள் ஏற்படும். இதுகுறித்து உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும்  தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

சமீபகாலமாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பதில் மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறதே ?

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரி வருவாய்கள் கடுமையாக குறைந்த நிலையில் நிதி பற்றாக்குறையில் சிக்கி தவித்து வருகிறது. தெளிவான பொருளாதார கொள்கை இல்லாத காரணத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் 23 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. 2020-21 ஆம் ஆண்டில் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க நிர்மலா சீதாராமன் இலக்கு நிர்ணயித்திருக்கிறார். வேலை வாய்ப்பை பெருக்குவதற்கும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதோ இல்லையோ, பொதுத்துறை பங்குகளை விற்க இலக்கு நிர்ணயிப்பதில் பா.ஜ.க. அரசு தீவிரமாக இருக்கிறது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக் கடன் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறதே ?

ஏற்கனவே தவறான பொருளாதார கொள்கை காரணமாக வாராக் கடன் கடந்த 6 ஆண்டு காலத்தில் கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த மார்ச் 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி விலகிய  போது மொத்த வாராக் கடன்கள் 3.8 சதவிகிதமாக இருந்தது. இதன் மொத்த தொகை ரூபாய் 2 லட்சத்து 16 ஆயிரத்து 739 கோடி. இது கடந்த செப்டம்பர் 2019 இல் 9.1 சதவிகிதமாக உயர்ந்து, வாராக் கடனின் மொத்த தொகை ரூபாய் 9 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
தற்போது மத்திய ரிசர்வ் வங்கி ஜூலை 2020 பொருளாதார நிலைத்தன்மை குறித்த அறிக்கையில் 20 வருடங்களில் இல்லாத அளவிற்கு வாராக் கடன் 14.7 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக அபாய சங்கு ஊதியிருக்கிறது.

அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்  வெளியிட்டுள்ள பட்டியலில் கடன் செலுத்தாதோர் 2498 பேரை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் ரூபாய் 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி பாக்கி இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மேலும் உதாரணமாக பாரத ஸ்டேட் வங்கி ஆவணத்தின்படி நடப்பாண்டில் ரூபாய் 1 லட்சத்து 23 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 8 ஆயிரத்து 969 கோடி தான் கடன் வசூல் செய்திருக்கிறது.

இந்த நிலையில் கடன் வசூலில் பின்னடைவு ஏற்பட்டால் வங்கிகளின் வளர்ச்சி குன்றி, திவாலான நிலைமைக்கு சென்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இதன் காரணமாகத் தான்  குறு, சிறு, நடுத்தர தொழிலுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரூபாய் 3 லட்சம் கோடியில் ரூபாய் 1 லட்சத்து 23 ஆயிரம் கோடி அனுமதி வழங்கப்பட்டு, அதிலும் ரூபாய் 68 ஆயிரத்து 311 கோடி தான் வழங்கப்பட்டிருக்கிறது. இதே நிலை தான் அனைத்து வங்கிகளிலும் உள்ளது. இதை மூடி மறைக்கவே 10 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கிற முயற்சியில் நிதியமைச்சகம் ஈடுபட்டிருக்கிறது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதே ?

தமிழக அரசு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 25 லட்சம், அ.தி.மு.க. சார்பில் ரூபாய் 25 லட்சம், ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை என எவ்வளவு நிதியுதவி செய்தாலும் அநியாயமாக காவல்துறையினரால் கொல்லப்பட்ட உயிர்களை மீண்டும் பெற முடியாது. சாத்தான்குளம் படுகொலைக்கு பிறகும் தென்காசியில் வனத்துறை காவலர்களால் விவசாயி தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். காவல்துறை மரணங்கள் தொடர் கதையாகி வருகின்றன. சாத்தான்குளம் சம்பவத்தால் தமிழக அரசு பாடம் கற்றதாக தெரியவில்லை. எனவே, இவற்றையெல்லாம் மூடிமறைக்க தமிழக அரசு செய்கிற முயற்சிகள் மக்களிடம் எந்த அனுதாபத்தையும் ஏற்படுத்தாது.

Previous Post

ஆளுநரா? ஆடுநரா?: ராஜஸ்தான் விவகாரத்தில் காங்கிரஸ் விளாசல்

Next Post

ஏழை எளியவர்களை புறக்கணிக்கும் புதிய கல்வி கொள்கை ! தலைவர் கே.எஸ். அழகிரி கடும் எதிர்ப்பு !

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
பாடத்திட்டங்களில் வகுப்புவாத கொள்கைகளை புகுத்தாதே – தலைவர் கே.எஸ். அழகிரி

ஏழை எளியவர்களை புறக்கணிக்கும் புதிய கல்வி கொள்கை ! தலைவர் கே.எஸ். அழகிரி கடும் எதிர்ப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com