”ரபேல் விமான முறைகேட்டை அம்பலப்படுத்தியதால், ‘தி இந்து’ நாளிதழ் பெருமளவு விளம்பர வருவாயை இழந்தது என்றும், அதற்காக ஒருபோதும் வளைந்து கொடுக்கமாட்டேன்” என ‘தி இந்து’ இயக்குனர் என்.ராம் தெரிவித்துள்ளார்.
கடும் விமர்சனத்துக்கிடையே முதல்கட்டமாக 5 பிரெஞ்ச் ரபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலாவை வந்தடைந்தன. இந்த விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனை புலனாய்வு செய்து வெளிப்படுத்தியதால், செய்தி நிறுவனங்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, ‘தி இந்து’ நாளேடு மத்திய அரசின் நேரிடை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில், ‘வயர்’ இணைய இதழில் செய்தியாளர் மிட்டல் முகர்ஜியுடன், ‘தி இந்து’ என்.ராம் நடத்திய உரையாடலின் விவரம்:
ரபேல் விவகாரத்தை புலனாய்வு செய்து வெளியிட்டதற்காக, எங்களுக்கு பெரிய அளவில் விளம்பர இழப்பு ஏற்பட்டது. இருந்தாலும், இந்த சவால்களை எல்லாம் மீறி பத்திரிக்கையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். நான் ஒருபோதும் வளைந்து கொடுக்கமாட்டேன்.
பிரான்ஸ் டஸால்ட் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 36 விமானங்களை 7.8 பில்லியன் டாலருக்கு இந்திய பாதுகாப்புத் துறை வாங்கியது தொடர்பாக தி இந்துவில் தொடர்ந்து புலனாய்வு அறிக்கைகளை வெளியிட்டோம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளுக்கு இது கடினமான நேரமாகும்.
சுதந்திரமாக செயல்படுவதா? அல்லது ஏற்கனவே இருப்பதை வைத்து காலம் தள்ளுவதா? என்பதை பத்திரிக்கைகள் முடிவு செய்யும் நேரம் இது. அரசு விளம்பரங்களை நிறுத்தி, தங்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைள் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.
சமீபத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் மூத்த ஆசிரியராக இருந்த குணசேகரனை, டெல்லியில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதையும், ஆசிரியர் குழுவில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவரிடம் இருந்து பறித்ததையும் உதாரணமாக கொள்ளலாம்.
இந்தியாவின் அரசியல் சாசன நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சில முக்கிய தீர்ப்புகள் வருத்தத்தை ஏற்படுத்தின. அதேபோல், வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வாக்குகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் மத்திய அரசின் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுவதற்கு மற்றொரு உதாரணம் ராஜஸ்தான். இவர்களிடம் உள்ள அதிகப் பெரும்பான்மை, எமர்ஜென்ஸி போல் மாறும் என்று நான் நம்புகின்றேன்.
இவ்வாறு என்.ராம் குறிப்பிட்டார்.
தங்களின் தேசிய பற்று போராட்டம்
வெல்லட்டும்
காங்கிரஸ் ஆட்சி அமையட்டும்
சதிகார பேர்வழிகள் தீகார் செல்லும்
நிலை வரும்.
நன்றி!
போபோர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்று அநியாயமாக ராஜீவ்காந்திமேல் சேறு வாரி இறைத்ததும் இதே இந்து பேப்பர்தான்! தற்போது உண்மையாக நடந்த ரபேல் ஊழலை கோர்ட் ஒத்துழைப்பு இல்லாததால் நிரூபிக்க முடியவில்லை!
அமீத் மோடி இந்தியாவின் உயர்பதவிக்கு வருவதற்கு பத்திரிக்கைகளும், ஊடகங்களும் தான் காரணம். அமீத் மோடியின் மத்தியரசு ஊடகங்களையும், பத்திரிக்கை நிறுவனங்களையும் தனது கைப்பாவையாக வைத்துள்ளது என்பது நாடறியும். இந்நிலையில் மத்தியரசின் ஊழல்கள், அடக்குமுறைகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்களின் குரல்வளையை நெறிப்பது தான் தலையாயப் பணியாக கொண்டுள்ளுனர்….
இச்சூழலில் தங்களின் கட்டுரை மிக மிக அருமை.
இந்து என்.ராம் அவர்களுக்கு நன்றி. தலைவர் ப. சிதம்பரம் வழக்கிலும் மத்திய அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தார். ஆனால் பெரும்பாலான பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி சேனல்களும் தவறெனத் தெரிந்தும இந்த அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இந்து தமிழ் பத்திரிகை உட்பட.