ஒட்டுமொத்த இந்திய மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் ட்ரென்டாகியிருக்கிறது. #ModiFailsIndia என்ற ஹேஸ்டேக்கில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.
கொரோனாவையும், பொருளாதாரத்தையும் மோடி அரசு சரியாக கையாளாத காரணத்தால், இந்தியா பெரும் துயரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாடு முழுவதும் 15 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. வேலை இழந்த லட்சக்கணக்கானோர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அதிருப்தியும், கோபமும் சமூக வலைதளங்களில் ஆக்ரோஷமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது .#ModiFailsIndia என்ற ஹேஸ்டேக் தான் சமீபத்திய ட்ரென்டிங்காக உள்ளது. இந்த ஹேஸ்டேக்கின் கீழ் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ட்வீட் செய்து, மோடி அரசின் மீதான தங்கள் கோபத்தை நேரிடையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
சமீபகால வரலாற்றில், இந்தியா தற்போது மிகவும் கடினமான சூழலை சந்தித்து வருகிறது. 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு, தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மோடியின் தவறான நிர்வாகத்தால் கொரோனா வைரஸ் பரவி, நாடு முழுவதும் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. அதேபோன்று, திட்டமிடாத ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து, சொந்த தொழிலை இழந்து வறுமையில் தவிக்கின்றனர்.
மோடி அரசின் தவறான கொள்கைகள் மக்களை கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. மோடி அரசு தங்களுக்கு துரோகமும், மோசடியும் செய்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர். இந்த கோபத்தின் வெளிப்பாடே, டிவிட்டரில் ட்ரென்டாகியிருக்கும் #ModiFailsIndia
மோடி ஆட்சியில் தாங்கள் சந்தித்த கொரோனா பாதிப்பு, வேலையிழப்பு, கொடூர கொலைகள் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை குறித்த விமர்சனங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதையும் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தேசிய பிரச்சினையான சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 குறித்து காங்கிரஸ் எழுப்பியுள்ள கேள்விகளை சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளனர். புதிய விதி சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்வதோடு, நமது மண்ணை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு இலவச பாஸ் கொடுத்தது போல் ஆகிவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
சில ட்வீட்களின் முக்கிய சாராம்சம்:
- 10 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து காங்கிரஸ் உயர்த்தியது. ஆனால், 6 ஆண்டுகளில் மோடி ஆட்சி 40 கோடி மக்களை வறுமையின் பிடியில் சிக்க வைத்துள்ளது.
- பெட்ரோல், டீஸல் மீதான வரி இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது.
- எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அரசியல் சாசனத்தை துச்சமாக மதிப்பது
இப்படி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ட்விட்டர் மட்டுமின்றில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் மோடி அரசுக்கு எதிரான மக்களின் கோபம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.