ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையோடு முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க.வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி., எச். வசந்தகுமார், எம்.பி., டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்.பி., மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவராஜசேகரன், கே. வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் உரத்த குரலில் எழுப்ப, அதை அனைவரும் பின்தொடர்ந்தனர்.
எழுச்சிமிக்க முறையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து கிண்டி எம்.ஆர்.சி. கிளப்பில் தங்க வைத்து 4 மணி அளவில் விடுதலை செய்தனர். சைதாப்பேட்டை, அமரர் ராஜீவ்காந்தி சிலைஅருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எம்.ஏ. முத்தழகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் உ. பலராமன், டி.என். முருகானந்தம், கு. செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பொன். கிருஷ்ணமூர்த்தி, இராம. சுகந்தன் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கேற்று கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
ஆர்பாட்ட காட்சிகள்