டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 12 ஆம் தேதி விவேகானந்தர் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கூடாரமாகிவிட்டது என, ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், விவேகானந்தர் சிலையைப் பிரதமர் திறந்து வைத்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நேரு சிலையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் விவேகானந்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவியதன் மூலம், இந்தப் பல்கலைக்கழகம் விவேகானந்தரின் கொள்கைகளை நிலைநிறுத்தும் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். இது நேருவின் கொள்கைகளுக்கு முரணானதாக இருக்கும் என்பது அவர்களது எண்ணம்.
சுவாமி விவேகானந்தா மற்றும் அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய, நேருவின் சொந்த அபிமான மற்றும் நுண்ணறிவு எழுத்துகளிலிருந்து இந்த அனுமானம் எவ்வளவு தவறு என்று புரியும்.
முஸ்லிம் நண்பருக்கு விவேகானந்தர் எழுதிய கடிதத்தை, ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற புத்தகத்தில் கோடிட்டுக் காட்டும் நேரு, நமது தாய் நாடு இந்துயிசம் மற்றும் இஸ்லாம் என்ற 2 மாபெரும் அமைப்புகளின் சங்கமம் என்றும், வேதாந்தம் என்ற மூளையும், இஸ்லாம் என்ற உடலும் மட்டுமே நம் ஒரே நம்பிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே காலத்தில் வாழ்ந்த சுவாமி தயானந்தாவைப் பற்றிக் கூறும்போது, வங்காளத்தில் அப்போது பலதரப்பட்ட நபர்கள் வாழ்ந்தார்கள் என்றும், அவர்களது வாழ்க்கை ஆங்கிலம் கற்றுத் தரப்பட்ட புதிய பள்ளிகளில் செல்வாக்கு செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் எளிமையானவராக இருந்தார். அவர் கல்விமான் இல்லை. ஆனால், நம்பிக்கையுள்ள மனிதன். இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் இல்லாதவர். சைதன்யா மற்றும் ஏனைய இந்திய முனிவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர். மதத்தைப் பொருத்தவரை, இன்னும் பெருந்தன்மை ஏற்படவில்லை. அவரோ, சுயமயமாக்கலைத் தேடினார். முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுடன் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அனைத்து குறுங்குழுவாதத்தையும் எதிர்த்து, அனைத்து வழிகளும் உண்மையை நோக்கியே அழைத்துச் செல்கின்றன என்பதை வலியுறுத்தினார்.
அவரைப் பார்த்தவர்கள், அவரது ஆளுமையால் கவரப்பட்டிருந்தார்கள். அவரை நேரில் பார்க்காதவர்கள், அவரது கதைகள் மூலம் கவரப்பட்டிருந்தார்கள். இவ்வாறு கவரப்பட்டவர்களில், ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை மற்றும் இவரது தலைமை சீடர் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கதையை எழுதிய ரோமெய்ன் ரோலண்ட் என்பவரும் ஒருவர்.
தனது சகோதர சீடர்களுடன் இணைந்து ”ராமகிருஷ்ணா மிஷன் ஆஃப் சர்வீஸ்” என்ற அமைப்பை விவேகானந்தர் உருவாக்கினார். கடந்த காலத்தில் வேரூன்றிய, இந்தியாவின் பாரம்பரியத்தின் பெருமை நிறைந்த விவேகானந்தர், வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிய அணுகுமுறையில் இன்னும் நவீனமானவர். இது இந்தியாவின் கடந்த காலத்துக்கும் அவரது நிகழ்காலத்துக்கும் இடையிலான ஒரு வகையான பாலமாக இருந்தது. அவர் ஒரு சிறந்த மனிதராக இருந்தார். கண்ணியம் நிறைந்தவர். தன்னைப் பற்றியும் தன் பணி குறித்தும் உறுதியாக இருந்தார். அதேநேரத்தில், ஒரு மாறும் மற்றும் உமிழும் ஆற்றலும், இந்தியாவை முன்னோக்கித் தள்ளும் ஆர்வமும் நிறைந்தவராக இருந்தார்.
உணர்ச்சிவயப்படுதல், சடங்குகள் பற்றிய அர்த்தமற்ற விவாதங்கள், குறிப்பாக உயர் சாதியினரைத் தொட்டால் தீட்டு என்ற நிலையைக் கண்டித்தார். நம் மதம் அடுக்களையில் இருக்கிறது. சமைக்கும் பாத்திரம் தான் நம் கடவுள். ஆனால், நமது மதம் மட்டும், நான் பரிசுத்தம், என்னைத் தொடாதே என்கிறது என்று சாடுகிறார் விவேகானந்தர்.
ஆனால், அவர் மீண்டும், மீண்டும் சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் தேவை மற்றும் மக்களை உயர்த்துவது குறித்து வலியுறுத்தினார். செயலின் சுதந்திரம் மற்றும் சிந்தனை என்பது வாழ்க்கையின் ஒரே நிலை, வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு என்றார். அவை இல்லாத இடத்தில் மனிதன், இனம், தேசம் ஏதும் இல்லை என்றும்,இந்தியாவின் ஒரே நம்பிக்கை மக்களிடமிருந்துதான் என்றும், உயர் வகுப்புகள் உடல் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் இறந்துவிட்டன என்றும் குறிப்பிட்டிருந்தார்.
விவேகானந்தர் ஒரு முறை எழுதும்போது, நான் ஒரு சோசலிஸ்ட். ஏனெனில் இது ஒரு சரியான அமைப்பு என்று நான் நினைக்கிறேன். ஒன்றும் இல்லாததற்கு அரை ரொட்டி எவ்வளவோ பரவாயில்லை. மற்ற முறைகள் எல்லாம் லட்சியத்தை அடையத்தான் முயற்சி செய்கின்றன. புதுமைக்காக இந்த முயற்சியைச் செய்யட்டும் என்று கூறுகிறார்.
பல விசயங்களை விவேகானந்தர் பேசியிருக்கிறார். அவரது உறுதியான பேச்சில் பயமிருக்காது, வலுவானதாக இருக்கும்.
சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதங்களிலேயே முக்கியமானது, 1898 ஆம் ஆண்டு ஜூன் 10 ம் தேதி தனது முஸ்லிம் நண்பருக்கு எழுதியதுதான். அதில்…உண்மை என்பது அத்வைதம். மதம் மற்றும் சிந்தனையின் கடைசி வார்த்தையாகும். மேலும், அனைத்து மதங்களையும், பிரிவுகளையும் அன்போடு பார்க்கக் கூடிய ஒரே நிலை. இது அறிவொளி பெற்ற எதிர்கால மனிதக் குலத்தின் மதம் என்று நாங்கள் நம்புகிறோம்…மறுபுறம் எங்களது அனுபவம் என்னவென்றால், எந்தவொரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் சமத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தகைய போக்கு இஸ்லாம் மற்றும் இஸ்லாத்தில் மட்டும் இருப்பது பாராட்டத்தக்கது. வேதாந்த மூளை மற்றும் இஸ்லாம் உடலுடன் வெல்ல முடியாத எதிர்கால பரிபூரண இந்தியா என் மனதில் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் ”நேருவின் தி டஸ்கவரி ஆஃப் இந்தியா” புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டுரையாளர் : ம்ருதுலா முகர்ஜி. (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் முன்னாள் இயக்குநர்.)