• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி! தமிழக அரசே! தடுத்து நிறுத்த நடவடிக்கை எடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை

by Admin
01/12/2020
in ஏவுகணைகள்
0
முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி! தமிழக அரசே! தடுத்து நிறுத்த நடவடிக்கை எடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மேகதாது போன்ற பிரச்சினைகளில் பா.ஜ.க. ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் தமிழக – கேரள எல்லையில்  முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது.  தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் விவசாயத்திற்கு நீர்ப்பாசன வசதிகளை முல்லைப் பெரியாறு அணை மூலம் நீண்டகாலமாக விவசாயிகள் பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி இந்த அணைக்குப் பதிலாக  ரூ. 1,000 கோடி செலவில் புதிய அணை கட்ட வேண்டுமென்று தொடர்ந்து கேரள அரசு கூறி வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கேரள அரசு தொடர்ந்து புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளையும், விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கிற பணிகளையும் தீவிரமாக செய்து வருகின்றது. இது விவசாயிகள் மத்தியில் கடும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே உச்சநீதிமன்றமும், பல்வேறு வல்லுநர் குழுக்களும், நிபுணர்களும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து பலமாக இருக்கிறது என ஒருமுறைக்கு பலமுறை சான்றளித்த பிறகும், கேரள அரசும், அரசியல் கட்சியினரும் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக செயல்படுவது இரு மாநிலங்களுக்கிடையே இருக்கிற நல்லுறவை சீர்குலைத்து வருகிறது.

மேலும், முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்காகக் கேரள அரசு பசுமை தீர்ப்பாயத்திடமும், மத்திய நீர்வளத்துறையிடமும் அனுமதி பெற்று நில அளவீடு செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் கேரள அரசுக்கு ஆதரவாகச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையைத் தயார் செய்ய மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதியாகும். கூட்டாட்சி தத்துவத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவு தமிழகத்தின் நீர்ப்பாசன உரிமைகளைப் பறிக்கிற செயலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகக் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள அரசிற்கு வழங்கிய தாக்க மதிப்பீட்டு வரைவிற்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த எடுத்த முயற்சிகளுக்குக் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், அதற்குத் தீங்கு விளைவிக்கிற வகையில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான முயற்சிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆதரவாகச் செயல்படுவதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாகக் கேரள அரசு புதிய அணை கட்டுகிற முயற்சியை முற்றிலும் தடுக்கிற வகையில், மத்திய அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு தமிழக முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

Tags: KeralaMullaperiyar damTamil Nadu
Previous Post

அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணம்: 6 ஆண்டுகளுக்குப் பிறகு கேள்வி எழுப்பும் குடும்பத்தினர்

Next Post

விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்

Admin

Admin

Next Post
விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்

விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp