அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகம் ஊட்டுகிற வகையில் தினேஷ் குண்டுராவ் அவர்களின் செயல்பாட்டின் காரணமாக தமிழகத்தில் காங்கிரஸ் எழுச்சி பெற்று வருகிறது. தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரி ஆகியோர் வகுக்கிற அரசியல் வியூகத்தின் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் பீடுநடை போட்டு வருகிறது.
கோவையில் நடைபெற்ற விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டில் தினேஷ் குண்டுராவ் அவர்கள் ஆற்றிய உரை :
மக்கள் பிரச்சினைக்காக போராடுவதே காங்கிரஸின் கொள்கை. மதத்துக்காக கட்சி நடத்தவில்லை. பேரிடர் காலத்தில், மக்களிடம்கருத்து கேட்காமல் வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மாநிலங்களை வஞ்சிக்கும் மத்தியஅரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். ஆட்சி மாற்றத்துக்காக காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.