தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கோயம்புத்தூர், கருமத்தம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு மற்றும் ஏர் கலப்பை பேரணி தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துகிற வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பார்ப்போர் வியக்கும் வண்ணம் மாநாட்டு பந்தல், மூவர்ண பதாகைகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான மேடையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவெல்ல பிரசாத், டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி., சி.டி. மெய்யப்பன், கிறிஸ்டோபர் திலக், மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் டாக்டர் கே. ஜெயக்குமார், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், ஜே.ஜி. பிரின்ஸ், ஆர். கணேஷ், வி.எஸ். காளிமுத்து, சசிகாந்த் செந்தில், ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா மற்றும் தமிழக காங்கிரசின் முன்னோடிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.
தமிழக காங்கிரஸ் வரலாற்றில் புதிய எழுச்சியை ஏற்படுத்திய கோவை மாநாட்டின் ஏற்பாடுகளை செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி. மனோகரன் அனைவரும் வியக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வரை வி.எம்.சி. மனோகரனை பாராட்டி மகிழ்ந்தார்கள். அவரது கடுமையான உழைப்பை அங்கீகரிக்கிற வகையில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தமிழகத்தில் வகுப்புவாத அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேல் யாத்திரை நடத்தும் பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிக்கிற வகையில் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் வகுத்த வியூகத்தின் அடிப்படையில் ஏர் கலப்பை பேரணி கோவையில் மிக கம்பீரமாக நடைபெற்றது. மாநாட்டில் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் உரை தேசிய சக்திகளின் சங்கநாதமாக முழங்கியதை கேட்டு மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் எழுச்சி பெறுகிற வகையில் அமைந்தது.
தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் சங்கநாதம்
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டத்தால் விவ சாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள் ளது. விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்று வாய் வழியாக சொல்லும் மத்திய அரசு அதை ஏன் சட்டத்தில் கொண்டு வரவில்லை.
கடன் தள்ளுபடி
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் ரூ.75 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. அதேபோல் தமிழ கத்தில் தி.மு.க. அரசு ரூ.7 ஆயி ரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. தற்போதைய மத் திய, மாநில அரசுகள் எத் தனை கோடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்துள் ளது என்று கூற முடியுமா? காங்கிரஸ் கட்சி இந்து மதத் துக்கு எதிரானது போலவும், பா.ஜ.க. இந்து மதத்தை காப் பது போலவும் தவறாக சித்த ரிக்கப்படுகிறது. –
ஆன்மிகம் என்பது வேறு, மதம் என்பது வேறு. ஆன்மி கத்துக்கு குறிப்பிட்ட கடவுள் என்பதில்லை . ஆனால், மதம் என்பது குறிப்பிட்ட கடவுள், கொள்கை மீது நாட்டம் செய் வது. தன்னுடைய இறை வழி பாடு மட்டுமே சிறந்தது என்று தோன்றுவது மதம். உண்மை யில் கடவுள் பக்தி இருந்தால் வேலை விடுத்து முருகனை தான் தூக்கி செல்ல வேண் டும்
வெற்றி கூட்டணி
காங்கிரஸ், தி.மு.க. சண்டையிட்டுக்கொள்வதாக சில ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சில வேறுபாடுகள் இருந்தா லும் கொள்கை ரீதியாக மத சார்பற்ற என்ற கோட்பாட் டில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் நாங்கள் இணை கிறோம். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நெடுஞ்சான் கிடையாக அமித் ஷாவிடம் விழுந்தது போல் விழ வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்களா?.
எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. நாங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ எங் களுக்கு தேவையான தொகுதி களை கேட்டுப்பெறுவோம். சட்டசபை தேர்தலில் போட் டியிடுகிற இடத்தில் காங்கிரஸ் கட்சியையும், போட்டியிடாத இடத்தில் தோழமை கட்சிகள் வெற்றி பெறுவதற்கும் தொண் டர்கள் பணியாற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஏழை, எளிய மக்களுக்கு எதி ராக ஆட்சி நடத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ், சஞ்ஜய் தத் கைது
மாநாட்டு இறுதியில் ஏர் கலப்பைகளை சுமந்து கொண்டு கே.எஸ்.அழகிரி தலைமையில் பேரணியாக புறப்பட்டனர். அப்போது போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் கோஷ மிட்டபடியே முன்னேறிச் சென்றனர். இதனால் போலீ சாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைய டுத்து தடுப்புகளை கடந்து பேரணியாக புறப்பட்டதால் கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.