”ஹத்ராஸ்…”
– பெயரை உச்சரித்தாலே குலை நடுங்குகிறது.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்குக்குத் தடை விதிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? இறப்புக்காகத் துக்கப்படுவது ஓர் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறதா? கொல்லப்பட்ட பெண்ணின் உடலைக் கூட தொட்டுப் பார்க்கப் பெற்றோருக்கு அனுமதியில்லை. சத்தமாக அழுவதற்கு அனுமதியில்லை. நெஞ்சுக்குள் போட்டு துக்கத்தை அடைத்துக் கொண்டு, சப்தமே வராமல் எவ்வளவு நாளைக்குத் தான் அமைதியாக அழ முடியும்?. இத்தகைய கெடுபிடிகளைத் தான் ஹத்யாஸில் அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர்.
இதுபோன்ற கெடுபிடிகள் காஷ்மீரிலும் நடைபெறுவதுண்டு. தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்படும் ராணுவ வீரர்களின் உடல்களை, குடும்பத்தாரிடம் கொடுப்பதில்லை. மனிதர்கள் என்பதைத் துக்கம் தான் வெளிப்படுத்துகிறது. ஆனால் உத்தரப்பிரேத மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் அதிகாரிகள் காட்டிய கெடுபிடி, மனிதாபிமானத்தின் மீது காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடுமையாகக் கொலையுண்ட தன் மகளின் நெற்றியில் கடைசியாக ஒரு தடவை முத்தமிடப் பெற்ற தாய் தவித்தாள். அதற்குக் கூட மனிதாபிமானமற்ற அதிகாரிகள் ஒத்துக்கொள்ளவில்லை. அந்தப் பெண்ணின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் நேரே சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதன்மூலம், மகளுக்கு இறுதிச் சடங்கு செய்ய குடும்பத்தாரை அனுமதிக்கவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் பாதுகாப்பற்ற மாநிலம் என்றே இதன்மூலம் அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பி, நாட்டின் கவனத்தை ஒருங்கிணைப்பதாக, அந்தப் பெண்ணின் தியாகம் அமையவில்லை. ஒரு மரணம் நிகழ்ந்ததையே அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால், அந்தப் பெண்ணின் உடலை இரவோடு இரவாக எரிக்க காவல் துறையினர் முடிவு எடுத்திருக்கிறார்கள்.
சாட்சியங்களை அழிப்பதே காவல் துறையினரின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. பாலியல் வன்கொடுமையே நடக்கவில்லை என இப்போது சொல்கிறார்கள்.
துக்கத்தின் சக்தியைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பெண்ணின் மரணம் ஏற்கனவே டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், இறுதிச் சடங்கு அரசியல் ஊர்வலமாக மாறிவிடுமோ என்று அதிகாரிகள் அச்சப்பட்டனர்.
இந்த நடவடிக்கை அவர்களுக்கு பெரும் பலனைக் கொடுத்திருக்கலாம். இதேபோன்ற மரணங்கள் தொடர்ந்தால், அவர்களுக்கு இழிவான விளைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, வீரர்கள் இறப்பால் ஏற்படும் துக்கம், ஒரு தேசிய சடங்காக மாறுகிறது. ஆனால், சமத்துவ துக்கம் எச்சரிக்கைக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. தேசத்தின் துக்கம் ஒரு காட்சியாக இருந்தாலும், சமத்துவத்தின் துக்கம் வெறுமையின் தருணமாகவே உள்ளது. கண்ணீர் விட்டு அழுவதன் மூலமே, ஆழமான பிரதிபலிப்பாக இறந்தவர்களுடன் உண்மையான உரையாடலை நடத்த வாய்ப்பு ஏற்படும்.
இது போன்ற துக்கம் சமூக தவறுகளைப் பற்றிய விழிப்புணர்வால் நிரப்பப்படுகிறது. மீண்டும் இது போன்ற துயரமான சம்பவங்கள் நிகழ அனுமதிக்கக் கூடாது என்பதை இத்தகைய விழிப்புணர்வுகள் உறுதி அளிக்கின்றன.
துக்கமும் சோகமும் ஆழமான மனிதநேயத்துடன் பின்னிப்பிணைந்தவை. அவை, தொடுவதையும், ஒருங்கிணைப்பதையும், ஒருவருக்கொருவர் பற்றிக்கொள்வதையும் பற்றியது. அவை, உண்மையான ஒற்றுமையின் உருவகம். உண்மையான காதல் மற்றும் உண்மையான துக்கம் தவிர, உருமாறும் அரசியலைக் கொண்டிருக்கவில்லை.
துக்கத்தைப் பொறுத்தவரை, நாம் குறைவாகப் பேசுகிறோம். நிறைய பகிர்ந்து கொள்கின்றோம். மனிதாபிமான துக்கம் என்பது, மனிதனாக இருப்பதன் அர்த்தத்தை விரிவுபடுத்துகிறது.
அதனால் தான் ஹத்ராஸ் பெண்ணின் மரணத்துக்குத் துக்கம் அனுசரிப்பது, தீங்கு விளைவிக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போரைப் புதுப்பிக்க உதவும். இந்து சமூகத்தின் ஆதிகால மனிதனின் கருத்தாக்கத்தைச் சிதைக்க நம்மை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்.
(கட்டுரையாளர்: பிரமா பிரகாஷ். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார்.)