இமாச்சலப்பிரதேசத்தில் மணாலி-லே பகுதியில் உள்ள லாஹாவ்-ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதியை இணைக்கும் வகையில் 9.10 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த குகைப் பாதைக்குக் கடந்த 2010 ஜூன் 28 ஆம் தேதி காங்கிரஸ் ஆட்சியில் சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். தேசிய ஆலோசனை குழுத் தலைவர் என்ற முறையில் அவர் அடிக்கல் நாட்டினார்.
6 ஆண்டுகளில் இந்த குகைப் பாதையைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மலையைக் குடைந்து குதைப் பாதை அமைக்கப்பட்டதால், சாலைப் பணி நிறைவடைய 10 ஆண்டுகளாகிவிட்டது.
இந்தக் குகைப் பாதைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த குகைப் பாதை மூலம் இமாச்சலப்பிரதேசத்தின் மணாலி- லடாக்கின் லே நகருக்கு இடையேயான பயண நேரம், 4 மணி நேரம் வரை குறையும். குளிர் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்போது, லாஹாவ்- ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதிகளில் 6 மாதங்கள் வரை போக்குவரத்து தடைப்படும்.
இனிமேல் போக்குவரத்து எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறும். இந்தப் பாதையில் தினசரி 3 ஆயிரம் கார்கள் மற்றும் 1500 லாரிகள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.
”இந்த குகையைத் திறந்து வைக்க வரும் பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பார்கள்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த குகைப் பாதையைப் பிரதமர் திறந்து வைத்தபோது பாதுகாவலர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஜீப்பில் நின்றவாறு, பிரதமர் கையசைத்துக் கொண்டே வந்தார். அப்போது குகைக்குள் யாருமே இல்லை.
இத்தகைய செயல் சமூக வலைத்தளங்களின் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மோடி சிறந்த நடிகர் என ஏராளமானோர் ட்விட் செய்திருந்தனர். ஏற்கனவே ஒருமுறை, படகு சவாரியின் போது ஆளே இல்லாத திசையை நோக்கி பிரதமர் மோடி கையை அசைத்து ‘போட்டோ’ எடுத்துக் கொண்டது, கடும் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.