• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

பூனா ஒப்பந்தம்! உண்மை நிலை என்ன? – அ .அண்ணாமலை

by Admin
02/10/2020
in தேசிய அரசியல்
0
பூனா ஒப்பந்தம்! உண்மை நிலை என்ன? – அ .அண்ணாமலை
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

தம்முடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒளிவுமறைவும் இல்லாமல் வாழ்ந்த காந்தியடிகளையும், அவர் தலைமையில் நடந்த சமுதாய மாற்றத்திற்கான மாபெரும் முயற்சிகளையும் மறைக்கத் தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சமூகப் பிரச்சினையை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தும் போது, இந்தநிலை ஏற்படத்தான் செய்யும். நானும் பலருடன் இதுபற்றி விவாதித்திருக்கிறேன்.

“பூனா ஒப்பந்தம் எங்களுக்குப் பெருந்தீங்கு விளைவித்துவிட்டது” என்று கூறும் பலருக்குப் பூனா ஒப்பந்தத் தைப் பற்றிச் சரியான புரிதல் இல்லை . அது சம்பந்தமான தகவல்களே தெரியவில்லை . அது மிகவும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் நடந்ததைத் தெரிந்துகொண்டு பின்னர் விமர்சிக்கலாம். தெரிந்துகொள்ளாமலே விலக்கித் தள்ளுவதால் யாருக்கு நன்மை?

காந்தியடிகள் உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னரும், உண்ணாவிரதம் இருக்கும்போதும் தம்முடைய கரு த்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். இங்கும் “நான் தனித் தொகுதிகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறேன், இடஒதுக்கீட்டை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கவில்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த உண்ணாவிரதம் தொடங்கக் காரணமாக அமைந்தது, 1931இல் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாடு. மாநாட்டின்போது, தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதிகள் வழங்கவேண்டும் என்று அம்பேத்கர் , இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் ஆங்கில அரசாங்கத்திடம் கேட்கிறார்கள். அப்போது மதச் சிறுபான்மையினருக்குத் தனித் தொகுதிகள் வழங்குவதற்கு ஆங்கில அரசாங்கம் திட்டமிடுகிறது.

ஆங்கில அரசு, இரண்டாவது வட்டமேஜை மாநாட்டிற்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த விதத்தையும், அதில் கலந்து கொண்டவர்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலே, ஆங்கில அரசாங்கத்தின் சூழ்ச்சி, மறைமுகத் திட்டம் எல்லாம் புரியும்.

“இந்தியா என்ற நாடு, தனித்தனிப் பிரிவுகளாக, குழுக்களாகப் பிரிந்துதான் கிடக்கிறது. அவற்றை ஒற்றுமை ப்படுத்தவே முடியாது. ஆகவே, ‘ஒட்டுமொத்த இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டும்’ என்று காங்கிரஸ் கேட்பது நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கை” என்பதைத் தெரிவிப்பதற்காகக் கூட்டப்பட்டதுதான் இரண்டாவது வட்டமேஜை மாநாடு.

வட்டமேஜை மாநாட்டின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட காந்தியும், காங்கிரஸ் தலைவர் களும் “நாங்கள் வெறுங்கையுடன் திரும்பி விட்டோம்” என்று அறிவித்துவிட்டார்கள். சில நாள்களுக்குப் பின்னர், தாழ்த்தப்பட் ட மக்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற் கிணங்க, தனித்தொகுதிகளை உள்ளடக்கிய ஆணையை ஆங்கில அரசாங்கம் வெளியிட்டது.

“இது நம்மிடையே பிரிவினையை வளர்க்கும். மதச் சிறுபான்மையினருக்குத் தனித்தொகுதி என்பதை ஏற்று க்கொள்ளலாம். ஏனென்றால், அவர்கள் காலங்காலமாக அந்த மதத்தில்தான் இருக்கப் போகிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள், அந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டியவர்கள். அது நிரந்தரமான அமைப்பு ஆகாது. தீண்டாமை என்பது அநீதி! ஆகவே, அதைப் போக்கவேண்டும். அடி அடியோடு அகற்ற ப்படவேண்டும். அதற்குத் தனித்தொகுதி தீர்வாகாது” என்பதுதான் காந்தியடிகளின் நிலைப்பாடு.

பன்னெடுங்காலமாகப் பழகிவந்த ஒரு பழக்கத்தை அடியோடு அகற்றுவதற்கு இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டார் காந்தியடிகள். ஒட் டுமொத்த இந்து சமுதாயத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி விட்டார். ஒரே ஒருவர் எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால், இந்தியா முழுவதிலும் ஆயிரக்கணக்கான கோயில்கள், தீண்டத் தகாதவர்களென்று கருதப்பட்டவர்களுக்காகத் திறந்துவிடப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவே மின்சாரம் பாய்ச்சப் பட்டது போல உணருகிறது.

காந்தியடிகள் உண்ணாவிரதம் குறித்து எழுதிய கடிதத்திற்குப் பதில் எழுதிய ஆங்கில அரசாங்கம், “பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் முரண்பாடான கோரிக்கைகளைப் பரிசீலித்து, திறந்த மனத்துடன் அரசாங்கம் செய்த முடிவை மாற்றுவதற்கு, அந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பேசி உடன்பாட்டுக்கு வரவேண்டும். அப்பொழுது தான் அரசாங்கத்தின் முடிவை மாற்றுவது சாத்தியப் படும். இதுதான் உங்கள் கடிதத்திற்கு எம்முடைய பதில்” எ ன்று பிரிட்டிஷ் பிரதமர் மெக்டொனால்டு கூறிவிட்டார்.

முரண்பாடான கருத்துகளைக் கொண்டவர்கள், ‘உட்கார்ந்து பேசி, ஓர் உடன்பாட்டுக்கு வரமுடியாது’ என் று மிகவும் நம்பிக்கையோடு, இந்த உறுதிமொழியை ஆங்கில அரசுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக இருந்த எம்.சி.இராஜா இதுபற்றிப் பேசும் பொழுது, “ஒருமனதான உடன் படிக்கை (கருத்து) என்று பேசுவது இந்தியர்களைப் பிரித்து வைக்கிற தந்திரம். தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டுத் தொகுதி முறையை ஆதரிக்கிறார்கள். ‘ரிசர்வேஷன் உள்ள கூட்டுத் தொகுதிகள் நடைமுறைக்குச் சாத்தியமில்லை’ என்று பிரதமர் ஏன் கூறுகிறார்? பிரதமரின் தீர்ப்பு, எங்களைச் சமூகத்திலிருந்து பிரிக்கிறது. அரசியலில் தீண்டத் தகாதவர்களாகச் செய்கிறது.

சாதி இந்துக்கள் எங்கள் வாக்குகளைக் கேட்டு வருவார்கள் என்பதால், “இன ஒதுக்கல்       கிடையாது’ என்று பிரதம மந்திரி கூறுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆம், அவர்கள் எங்கள் வாக்குகளைக் கேட்பார்கள். ஆனால், நாங்கள் அவர்களுடை ய வாக்குகளைக் கேட்டுப் போகத் தேவையில்லை. இது பொதுவான குடியுரிமை ஆகுமா?” என்று அழுத்தமாக வாதிட்டிருக்கிறார்.

காந்தியடிகளின் உண்ணாவிரதம், இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்த ஒரே நபர் காந்தியடிகள்தாம்!

இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பின் தலைவர்கள் என்ற அனைத்துச் சார்பாரும் இதிலிருந்து ஒதுங்கியிருக்க முடியவில்லை. கூடி விவாதிக்கிறார்கள். இருசாராரும் விட்டுக்கொடுக்கிறார்கள். முடிவாக, ஓர் உடன்பாட்டுக்கு வருகிறார்கள். அந்த உடன்பாடு, காந்தியோடு கலந்தாலோசித்ததால்தான் ஏற்படுகிறது.

ஆங்கில அரசு, எது நடக்காது என்று நினைத்ததோ, அது நடந்து விட்டது. எது நடக்கவேண்டும் என்று நினைத்ததோ, அது நடக்கவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் அன்றைய தினம் இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்டது.

இந்த உடன்படிக்கையின் விவரங்களின்படி, தனித்தொகுதிகள் என்ற முறையில் தேர்தல்கள் நடைபெறும். தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் வாக்களித்து, நான்குபேரை வேட்பாளர்களாகத்
தேர்வு செய்வார்கள். இந்த முதனிலைத் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்ற இந்த நான்கு நபர்கள், இத்தொகுதித் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களாக இருப்பார்கள். இந்தத் தொகுதியின் எல்லா வாக்காளர்களும் சேர்ந்து இவர்களுள் ஒருவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த உடன்பாட்டின்படி மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டன. (மக்கள் தொகை அடிப்படையில் மாநில வாரியாக) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அம்பேத்கர் கேட்ட இடங்கள், பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய இடங்கள், உடன்படிக்கையின்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் என்ற மூன்றையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

மாகாண சட்டசபைகளில் 71 இடங்கள் என்பதற்கு மாறாக, 148 இடங்கள் கிடைத்தன. ஆனால், இரட்டை வாக்குரிமை மாற்றியமைக்கப்பட்டு, தனித் தொகுதி என்னும் ஒதுக்கீட்டு முறை ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த உடன்பாட்டை ஆதரித்து. செப்டம்பர் 27ஆம் நாளன்று பம்பாயில் நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கர் பேசும்போது:

“தலைசிறந்த மனிதருடைய உயிரைக் காப்பாற்றவேண்டும். அதேசமயத்தில், என் சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கவேண்டும். எல்லாருடைய ஒத்துழைப்புடன் மகாத்மாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. எதிர்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருடைய நலன்களுக்கு அவசியமான பாதுகாப்பையும் அமைத்தோம். சமரசப் பேச்சுவார்த்தைகள் மகாத்மா காந்தியால்தான் வெற்றியடைந்தன. அவரைச் சந்தித்துப் பேசிய பொழுது. அவருக்கு ம் எனக்கும் உள்ள பொதுவான அம்சங்களை நினைத்து நான் மிகவும் வியப்படைந்தேன்.

வட்டமேஜை மாநாட்டில் எனக்கு எதிரான நிலையெடுத்தவர். என் உதவிக்கு வந்தார். மாற்றுத் தரப்புக்கு அல்ல என்பது எனக்கு வியப்பளிக்கிறது. சிக்கலான நிலையிலிருந்து என்னை விடுவித்ததற்காக நான் காந்திஜிக்கு நன்றி செலுத்துகிறேன். காந்திஜி வட்டமேஜை மாநாட்டில் இந்த நிலையை எடுக்கவில்லை என்பதைப் பற்றி நான் வருந்துகிறேன். அன்று அவர் என் கருத்தை அனுதாபத்தோடு பரிசீலித்திருந்தால், இந்த அக்னிப் பரீட்சையைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால், அவை கடந்த கால விஷயங்கள்.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ‘தாழ்த்தப்பட்ட பிரிவினர் எல்லாரும் இந்த உடன்பாட்டை ஆதரிக்கிறார்களா?’ என்ற கேள்வியைப் பத்திரிகைகள் எழுப்பியுள்ளன. என்னைப் பொருத்தமட்டில், என் தலைமையிலுள்ள கட்சியைப் பொருத்தமட்டில், நாங்கள் உடன்பாட்டை ஆதரிக்கிறோ ம். இங்கு வந்திருக்கிற எனது நண்பர்கள் சார்பிலும் உடன்பாட்டுக்கு ஆதரவை அறிவிக்கிறேன். இதைப் பற்றிச் சந்தேகம் வேண்டாம். இந்து சமூகம் இந்த உடன்பாட்டைப் புனிதமாகக் கருதவேண்டும். கௌரவமான உணர் ச்சியுடன் இதை அமலாக்க வேண்டும்” .

அம்பேத்கரின் பேச்சு மிகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது.

அன்றைய சூழலில், தேசிய இயக்கம், இந்து அமைப்புகள், தாழ்த்தப்பட்ட அமைப்பு ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் அனைவரும், உட்கார்ந்துபேசி ஓர் உடன்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் ஓவ்வொரு குழுவினரும் எவ்வளவு தூரம் போராடியிருப்பார்கள், விட்டுக்கொடுத்திருப் பார்கள்? இந்தியச் சமூகம் எவ்வளவு சிக்கல்களைக் கொண்டது என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், எதிர்கால இந்தியச் சமூகத்தையும், அதனுடைய வளர்ச்சி யையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த உடன்படிக்கை. இவையெல்லாம் 1932இல் முடிந்து விட்டன.

ஆனால், 1945இல் அம்பேத்கர் எழுதிய தம்முடைய புத்தகத்தில் (What Congress and Gandhi have done for untouchables), இந்த உடன்படிக்கை யையும். காந்தியையும், காங்கிரஸையும், இந்த உண்ணாவிரதத்தையும் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

“இந்த உண்ணாவிரதத்தில் எந்தப் புனிதமும் கிடையாது. இந்த உண்ணாவிரதம் தீண்டத்தகாதவர்களின் நன்மைக்காக இருக்கவில்லை. ஆதரவற்ற மக்களுக்கு, ஆங்கில அரசாங்கத்தால் கிடைத்த சட்ட ரீதியான பாதுகாப்பைப் பறிக்க இவர் எடுத்துக்கொண்ட மோசமான வழிமுறை” என்று விவரித்திருக்கிறார்.

காந்திஜியைப் பற்றியும் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் பற்றியும் இன்றைய தலைமுறையினர் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு இதுதான் அடிப்படையாக அமைந்துள்ளது.

ஆனால், இதே அம்பேத்கர் 1954 இல் BBCக்கு ஒரு பேட்டி அளிக்கிறார். அதில், “பூனா ஒப்பந்தத்தில் தங்களை நிர்பந்தப்படுத்தினார்களா” என்று அவரிடம் கேட்கிறார்கள்.

அதற்கு அம்பேத்கர், “என் மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. நான் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறினேன். காந்தி அதை ஒப்புக்கொண்டார் (I dictated Gandhi). மாளவியா மற்றும் சில தலைவர்கள் ‘ஏதாவது செய்ய முடியுமா?’ என்று கேட்டார்கள். நான் ‘தனித்தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன். ஆனால், ஒரு மாற்றுத் திட்டத்தை அவர்களுக்குக் கொடுத்தேன். தனித்தொகுதி என்பதை இது போல மாற்றிக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அதன்படி தேர்தலில் தாழ்த்தப்பட்ட வ குப்பின் சார்பாக நிற்கும் வேட்பாளர்கள், முதலில் தங்களுக்குள் ஓட்டளித்து நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வே ண்டும். அது ஒரு முதன்மைத் தேர்தல் போல (Primary Election). இந்த நான்கு பேரும் தேர்தலில் நிற்பார்கள். இந்த நால்வரில் சிறந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். நீங்களாக ஒருவரை நிறுத்தக்கூடாது. இந்த முறை மூலம்தான் பாராளுமன்றத்தில் எங்களுடைய குரலை ஒலிக்க முடியும்’ என்றேன். பிறகு, காந்தி இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காந்தி ஏற்றுக்கொண்டார். ஆனால், இதன் பலனை 1937இல் நடந்த ஒரேயொரு பொதுத்தேர்தலில்தான் அனுபவித்தோம். (But we have benefitted in only one election in 1937)” என்று கூறினார்.

ஆக, பூனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் எவ்வாறு தயாரானது. அதில் நடந்த விஷயங்கள் என்ன என்பதைப் ப ற்றி அம்பேத்கரே குறிப்பிட்டுள்ளார். இதைப் படிப்பவர்கள், இந்த வரலாற்று உண்மைகளைச் சீர்தூக்கிப் பார்க் கவேண்டும். இதில் முக்கியமான ஒன்றை நாம் கவனிக்கத் தவறுகிறோம். அன்று ஓட்டுரிமை யாருக்கு இருந்தது ? சொத்து வைத்திருந்தவர்களுக்கும் படித்த, வசதி படைத்தவர்களுக்கும் மட்டுமே! வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமையைப் பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கவில்லை. அப்படி எடுத்துக்கொண்டால், எத்தனை சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஓட்டுரிமை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

சைமன் கமிஷன் முன்னர் அம்பேத்கர் கொடுத்த வாக்குமூலத்தில், “வயது வந்தோருக்கான வாக்குரிமையோடு எங்களுக்கென்று இடஒதுக்கீடு வேண்டும் (We claim reserved seats, if accompanied by adult franchise)” என்றார்.

“வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை இல்லையென்றால்…” என்று கேட்கப்பட்டது. “அப்போது எங்களுக்கென்று தனித்தொகுதி வேண்டும் என்று கேட்போம்” என்றார்.

ஆக, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கினால், இடஒதுக்கீடு போதும் என்பதே சைமன் கமிஷன்முன் அம்பேத்கரின் நிலைப்பாடு.

பூனா ஒப்பந்தத்திலும் நடந்தது அதுதான். இதில் குறை சொல்வதென்றால், யாரைக் குறை சொல்வது?

1945இல் காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதவர்களுக்கு என்ன செய்தது’ என்று எழுதிய அம்பேத்கருக்கு மக்களே தீர்ப்பளித்தார்கள். 1946 இல் நடந்த தேர்தலில் அம்பேத்கரின் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆங்கில அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகப் பாபு ஜெகஜீவன்ராம் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.

வங்காளத்திலிருந்து அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பேத்கரின் பதவி, கிழக்குப் பாகிஸ்தான் பிரிவினையினால் காலாவதியாகி விட்டது. பம்பாய் சட்டமன்றத்தின் மூலமாகக் காங்கிரஸ் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட    எம். ஜெயகரை ராஜினாமா செய்ய வைத்து, அம்பேத்கரை அந்த இடத்திலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கச் செய்து. அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக்கி, இந்திய அரசியலமைப் புச் சட்டத்தை எழுதும் குழுவுக்குத் தலைவராகவும் நியமித்தது காங்கிரஸ் பேரியக்கம்!

“தீண்டத்தகாதவர்களுக்குக் காங்கிரஸ் என்ன செய்தது?” என்று கேள்வி கேட்பவர்களுக்கு இதுவே பதிலாக அமையும்.

“நேரு ஒரு பிராமணர். அவருடைய எந்த எழுத்திலும் தீண்டாமையைப் பற்றி எழுதவேயில்லை” என்று எழு திய அம்பேத்கரைத் தம்முடைய அமைச்சரவையில் சட்ட அமைச்சராக்கி அலங்கரித்தார் பண்டித ஜவஹர்லால் நேரு.

கிராமத்தில் உள்ள படிப்பறிவில்லாத ஏழைகளும் கூலிகளும் காந்திக்குப் பின்னால் அணிவகுத்து நின்று. அ ன்றைக்குச் சொன்ன செய்தியைத்தான். தாழ்த்தப்பட்ட பிரிவினருடைய தலைவர் எம். சி. இராஜாவும் கூறினார். . ‘தாழ்த்தப்பட்ட பிரிவினரைக் காந்திதான் காப்பாற்ற முடியும். இந்தப் பிரச்சினையில் உலகத்தின் கவனத்தைத் திருப்பியதற்காக அந்தப் பிரிவினர் அவருக்கு நன்றிக்கடன் பாராட்டுகிறார்கள்” என்றார்.

தீண்டாமை விலக்கு என்பது ஏதோ 1931இல் காந்தி எடுத்துக்கொண்ட விஷயமல்ல. அவருடைய பிள்ளைப் பருவத்தில் இருந்தே அதுபற்றித் தீவிரமான கருத்தைக் கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில், தீண்டத்தகாதவரின் கழிவுப் பானையைச் சுத்தம் செய்ய மறுத்த மனைவியையே “வெளியே போ…!” என்று சொன்னவர். நிறவெறி காரணமாகக் கேவலப்படுத்தப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் பட்ட வேதனையை, தென்னாப்பிரிக்காவில் நிறவெறி காரணமாக அனுபவித்தவர் காந்தியடிகள். ஆகவேதான் இந்தியாவிற்கு வந்தவுடன் தீண்டாமை விலக்குக்காகப் பாடுபட்டார்.

தம்முடைய எழுத்துக்கள் ‘நவஜீவன் அறக்கட்டளை’க்குச் சொந்தம் என்று உயில் எழுதிய காந்தி, அதில் வரும் வருமானத்தில் 25 சதவிகிதத்தை ஹரிஜன சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.இன்றும் ஹரிஜன சேவைக்காக அவ்வாறே பயன்படுத்தப்படுகிறது. காந்தி சமாதியில் இருக்கும் உண்டியலில் சேரும் பணம் முழுக்க அவரின் விருப்பப்படி ஹரிஜன சேவைக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது. இப்படிச் செத்தும் கொடுத்த சீதக்காதி’ போன்ற காந்தியை நாம் ஏற்றுக்கொண்டு அவர் வழிநடப்பதுதான் இந்திய ஒருமைப்பாட்டுக்கும். ஜாதியற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவதற்கும் அடித்தளமாக அமையும் என்பதை ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறோம்?

(இயக்குநர், காந்தி கல்வி நிலையம்)

Previous Post

பெருந்தலைவர் புகழ்பாடிய நடிகர் திலகம்!

Next Post

பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை துணிவுடன் எதிர்த்த ராகுல் காந்தி!

Admin

Admin

Next Post
பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை துணிவுடன் எதிர்த்த ராகுல் காந்தி!

பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை துணிவுடன் எதிர்த்த ராகுல் காந்தி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp