சிறிதளவு அறிவு ஆபத்தானது; சிறிதளவு வாசிப்பும் அதைவிட அதிக ஆபத்தானது.
தான் விரித்த வலையிலேயே பாஜக மாட்டிக் கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, பா.ஜக—-ஆக இருந்தது. அந்த கட்சி தற்போது வரை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்தும் —- கட்சியாக உள்ளது. சரக்கு மற்றும் சேவைகளை அவர்கள் சுரண்டியதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அத்தகைய நிலைமையை மாற்றியமைப்பது பசுமைப் புரட்சியின் (இந்திரா காந்தி முன்னோடியாக திகழ்ந்தார்) மூலமும், தாராளமயமாக்கல் (பி.வி.நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்கால் அறிமுகப்படுத்தப்பட்டது) மூலமும் தொடங்கப்பட்டது.
இன்று நமது விவசாயிகளின் விவசாய விளைபொருள் உற்பத்தி மிகையாக உள்ளது. குறிப்பாக, அரிசி மற்றும் கோதுமை உற்பத்தி அதிக அளவில் உள்ளது. நமது விவசாயிகளின் பலத்துடன், அடுத்து வந்த காங்கிரஸ் அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து, ஒவ்வொரு செங்கலாக எடுத்து வைத்து உணவு பாதுகாப்பு முறையை கட்டமைத்தது. நமது உணவு பாதுகாப்பு முறையின் 3 தூண்களாக குறைந்தபட்ச ஆதரவு விலை, பொது கொள்முதல் மற்றும் பொது விநியோக முறை ஆகியவை உள்ளன.
2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்ட அனைத்தும், மேற்கண்ட முறைகளின் அடித்தளக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது தான். தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்த வாக்குறுதியை, பிரதமரும் பாஜக செய்தி தொடர்பாளர்களும் வேண்டுமென்றே, தீங்கு விளைவிக்கும் நோக்கோடு சிதைத்தனர்.
- உள்ளீட்டு அணுகுதல், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், விவசாய உற்பத்தி நிறுவனங்கள், அமைப்புகளை மேம்படுத்துதல்.
- கூடுதல் அடிப்படை கட்டமைப்பு மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், விவசாய சந்தைகளை நிறுவுவது.
விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை பெரும்பாலான கிராமங்களுக்கும், சிறிய நகரங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை மற்றும் சுதந்திரமான சந்தை.
பல சந்தைகளை அணுகுவதும்,விரும்பியதை தேர்வு செய்வதும் விவசாயிகளுக்கு தேவையாக இருக்கிறது. இவற்றை எல்லாம் விவசாயிகளுக்கு வழங்க காங்கிரஸ் உத்தேசித்து இருந்தது.
அதன்பிறகு, விவசாய உற்பத்தி மற்றும் மார்க்கெட் கமிட்டி சட்டத்தை ரத்து செய்வது மற்றும் விவசாய உற்பத்தியில் சுதந்திரமான சந்தை வர்த்தகம் இயற்கையான தொடர்ச்சியாக இருக்கும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
நமது வாக்குறுதி தெளிவாக இருக்கும்போது, மோடி அரசு கார்பரேட்களிடமும் வர்த்தகர்களிடமும் சரணடைந்துள்ளது. தயவுசெய்து அதனை கவனியுங்கள்:
- விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்காக தனியார் கொடுக்கும் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருக்கக் கூடாது என்று 2 விவசாய மசோதாக்களிலும் கிடையாது. ஏன் இந்த பிரிவை சேர்க்கவில்லை?
- ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று, ஆயிரக்கணக்கான மாற்றுச் சந்தையை உருவாக்காமல் விவசாயிகளை அணுகக்கூடியதாக உள்ளது. - விவசாயிகளுக்கும் தனியார் கொள்முதல் செய்வோருக்கும் இணையான பேரம் பேசும் அதிகாரத்தை இந்த மசோதா வழங்குகிறது. சிறு விவசாயிகள் விளைபொருட்களை வாங்கும் தனியாரின் கருணைப் பார்வையை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.
- விவசாயிகளுக்கும் விளைபொருளை வாங்கும் தனியாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டால், இந்த மசோதாவின்படி, எந்த ஒரு விவசாயியும் வலுவாகவோ அல்லது பொருட்களை வாங்குவோரிடம் போராட முடியாத அளவுக்கு அதிகாரத்துவமிக்கதாக உள்ளது. இதனால், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
- நமது உணவு பாதுகாப்பு 3 தூண்கள் இந்த மசோதாவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்களை ஒவ்வொரு நிலையிலும் எதிர்க்க காங்கிரஸும் எதிர்கட்சிகளும் கைகோர்க்க வேண்டும். தற்போதைய வடிவத்திலிருந்து அவை சட்டமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விவசாயிகள் பின்னே இருக்கப் போகிறீர்களா? அல்லது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் பாஜகவின் பின்னே நிற்கப்போகிறீர்களா? என்ற நிலையை ஒவ்வொரு கட்சியும் எடுக்க வேண்டும்.