இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் இன்று 13./9/2020 காலமாகிவிட்டார்.
கடந்த 14 நாட்களாக கே.தங்கவேல் அவர்களின் உடல்நிலை பற்றி அனுதினமும் கேட்டறிந்து சரியாக தூங்க முடியாமல் சாப்பிட இயலாமல் தவித்து வந்தேன். இரவு சிபிஎம் மாநில மாநில குழு உறுப்பினர் தோழர் கே.காமராஜரிடம் விசாரித்தேன். நம்மை விட்டு தோழர் கே. தங்கவேல் போய்விட்டார் என்பதை ஏற்க முடியவில்லை. 1975முதல் அவரோடு 45 ஆண்டு காலம் நட்பு அமைதியானவர்!அடக்கமானவர்! எளிமையானவர்!
நேர்மையானவர்! அன்பு நிறைந்தவர்! மிகச் சிறந்த பண்பாளர்! சமநிலையோடு மனிதர்களை நேசித்தவர்! என்று பன்முகத்தன்மையோடு வாழ்ந்த பெருமகனார்! என்னோடும், மங்கலம் பகுதி காங்கிரஸ் நண்பர்களோடும், உணர்வு ரீதியாக நட்பு கொண்டவர். நானும் கே.தங்கவேலும் சந்திப்பதும், உரையாடுவதும் நடந்துகொண்டே இருந்தது.8.8.2020 தேதியன்று பரணி நடராஜ் அலுவலகத்தில் மதிய உணவை மூவரும் ஒன்றாக சாப்பிட்டோம். அப்போது நான் உங்களைப் போன்ற சேவைக்கான அரசியலுக்கு வரும் தலைவர்கள் மிக குறைவு ஆகிவிடுவார்கள் என கூறியபோது அதை மறுதலித்து காலத்திற்கு ஏற்ற வகையில் நிறைய தன்மையுடன் வருவார்கள் என கூறினார் உறுதிபடக் கூறினார்.
இதுவே எனக்கு கடைசி சந்திப்பு ஆகிவிட்டது. 29.8.2020 சனிக்கிழமை 11மணிக்கு கைபேசியில் கே.தங்கவேல் உடன் பேசினேன் மருத்துவ பரிசோதனைக்கு செல்கிறேன்
பிறகு பேசுகிறேன் என கூறினார். அந்த அன்பு குரலை இனி என்னால்கேட்கமுடியாது கொரோனா ஊரடங்கில் வாரத்தில் இரண்டு முறை என் செல்பேசியில் பேசுவார் எனது உடல்நிலையை கருதி கவனமாக இருக்கும்படி அடிக்கடி கூறுவார்…
14.1. 2018 தேதி பழ. நெடுமாறன் எழுதிய இரண்டு நூல்களின் அறிமுக விழாவை மங்கலம் காமராஜர் நினைவு மன்றம் நடத்தியதில் தோழர் கே சுப்பராயன் எம்.பி. அவர்களும்
தோழர் கே. தங்கவேல் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், நாடாளமன்ற தேர்தல் பிரச்சார துவக்க மாகவும் சிறப்பாக இருந்ததாக கே.தங்கவேல் பாராட்டினார்.கட்சி அரசியலில் சித்தாந்தத்தை தெளிவாக கடைபிடித்து “சொத்து” “சுகம்” என்ற பற்று இல்லாமல் நேர்மையான அரசியலுக்கு அடையாளமாக வாழ்ந்த பெருமகனார்!
என் ஊண் உணர்வுகளில் இரண்டரக் கலந்து வாழ்ந்த கே.தங்கவேல் அவர்களின் மரணம் என் குடும்பத்திற்கும் மங்கலம் பகுதி சக தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்!……..
இந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் கதி கலங்கி நிற்கிறேம்…..
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் ,அவரது நண்பர்களுக்கும், எங்கள் கண்ணீர் அஞ்சலி!
கண்ணீர் அஞ்சலி!! கண்ணீர் அஞ்சலி!!!
மிகுந்த வருத்தத்தோடு
வே.முத்துராமலிங்கம்
முன்னாள் தலைவர் மங்கலம் ஊராட்சி
காமராஜ் நினைவு மன்றம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மங்கலம் A.G. புத்தூர் திருப்பூர்.