• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

பி.எம். கிசான் திட்டம் ரூ.110 கோடி மோசடி! 6 லட்சம் போலி பயனாளிகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை தேவை! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

by Admin
12/09/2020
in ஏவுகணைகள்
0
பி.எம். கிசான் திட்டம் ரூ.110 கோடி மோசடி! 6 லட்சம் போலி பயனாளிகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை தேவை! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரே மாதிரியான முறைகேடு நடைபெற்றுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், அதிகாரிகள் பங்கேற்புடன் முதல்முறையாக நடந்த மிகப் பெரிய ஊழல் இதுதான். தமிழகத்தில் ஏற்கனவே நடந்த ஊழல்கள் எல்லாம் அரசியல்வாதிகள் தொடர்புடையவைகளாக இருந்தன. இந்த ஊழலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களுக்கு  தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது.

ஆனால், உள்ளூர் ஆளுங்கட்சியினருக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த முறைகேட்டில் ஊழல் அதிகாரிகள், விவசாயத் துறையில் உள்ள தற்காலிக ஊழியர்கள், இன்டெர்நெட் மையங்களின் உரிமையாளர்கள், சில இடங்களில் ஏஜெண்டுகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தில் 6 லட்சம் போலி பயனாளிகளை சேர்த்து ரூபாய் 110 கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆனால், முதலமைச்சரோ இந்த ஊழலுக்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி மத்திய அரசின் மீது பழி போடுகிறார். பிரதமர் உழவர் திட்ட உதவித் தொகை வழங்குவதற்கு பயனாளிகளை அடையாளம் காண இணைய வழியை கையாண்டது தான் இந்த ஊழலுக்கு காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசின் மீது மாநில முதலமைச்சரே குற்றம் சாட்டுவதால் ரூபாய் 110 கோடி மெகா ஊழலில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நேரத்திலும், இந்த முறைகேட்டை ஆட்சியாளர்களும் மறுக்கவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமரின் உழவர் உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதை ஆன்லைன் முறைக்கு மத்திய அரசு மாற்றியதால், கொரோனா காலத்தில் அதனை அதிகாரிகள் சரிபார்க்க முடியவில்லை என்று ஊழலை மூடிமறைக்க முயற்சி செய்கிறார். ஆனால், இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதை மறுக்க முடியவில்லை.

இந்த  முறைகேடு செய்யப்பட்ட பணத்தில் பாதி அளவு திரும்ப மீட்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவது அவ்வளவு எளிது என்று தெரியவில்லை. லாக் இன் பாஸ்வேர்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஒரே மாதிரியாக முறைகேடு நடந்துள்ளதை மத்திய விவசாயத்துறையும் ஒத்துக் கொண்டுள்ளது. எனினும், இதுபோன்ற முறைகேடு நாட்டின் வேறு எந்த பகுதியிலும் நடைபெறவில்லை என்றும் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 5 லட்சத்து 85 ஆயிரம் போலிப் பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய  விவசாயத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் வங்கிக் கணக்கில் போடப்பட்ட ரூ.2 ஆயிரம் நிதியை அரசு திரும்ப எடுத்துக் கொண்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் போலி பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. இந்தியாவிலேயே, பிரதமர் பெயரால் நடைமுறையில் உள்ள பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் மிகப் பெரிய மோசடி நடந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

ஏற்கனவே, உதவித் தொகை பெறும்போது அளித்த ஆதார் ஆதாரத்தின் அடிப்படையில், ஆவணங்களை திருட இத்தகைய முறைகேட்டில் இன்டெர்நெட் மையங்கள் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுவே கிராமந்தோறும் முறைகேடு நடத்த எளிதாகிவிட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் மட்டும் 11 ஆயிரம் போலிப் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் அ.தி.மு.க.வினர் சம்மந்தப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. வருவாய்த்துறை, விவசாயத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் கூட்டு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற வாய்ப்பு இல்லை.

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. பிரதமர் உழவர் உதவி திட்ட மோசடியைப் போல தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியில் கட்டப்படுகிற தொகுப்பு வீடு கட்டுவதிலும் மெகா மோசடி நடைபெற்றுள்ளது. வீடு, கழிவறை கட்டும் திட்டத்தின் பயனாளிகள் கிராமசபை கூட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில், பாஸ்வேர்ட் மூலமாக விவசாயிகள் பெயரில் திருத்தம் செய்து மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 2016 முதல் 2019 வரை கட்டப்பட்ட வீடுகளுக்காக ரூபாய் 5170 கோடி மாநில அரசின் பங்குத் தொகையுடன் மொத்தம் 8 ஆயிரத்து 968 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக வீடுகள், கழிவறைகள் கட்டுவதில் நடைபெற்ற மோசடியில் உள்ளுர் ஆளுங்கட்சியினர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எனவே, பிரதமர் உழவர் உதவி திட்ட மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை தொடங்கியிருக்கிறார்கள். இந்த விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா ? மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பப் பெற முடியுமா ? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்காமல், மத்திய புலனாய்வுத்துறை விசாரிப்பது ஒன்றே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே பரிந்துரை செய்ய வேண்டும்.

Tags: PM Kisan schemeTamil Nadu
Previous Post

பீகார் தேர்தலுக்கு தயாராகும் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை வழக்கு: நடிகை ரியா கைது பின்னணி

Next Post

அனைவரையும் அரவணைத்து பதவி: சோனியா காந்திக்கு 'டெலிகிராப்' பத்திரிகை புகழாரம்

Admin

Admin

Next Post
அனைவரையும் அரவணைத்து  பதவி: சோனியா காந்திக்கு ‘டெலிகிராப்’ பத்திரிகை புகழாரம்

அனைவரையும் அரவணைத்து பதவி: சோனியா காந்திக்கு 'டெலிகிராப்' பத்திரிகை புகழாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp