நவ இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அரிய நிழற்ப்படங்களுடன் முதலில் ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் நூலை வெளியிட வேண்டுமென முடிவு செய்தேன். அதற்காக 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தலைநகர் தில்லியில் நேரு நினைவு நூலகம் மற்றும் இந்திய அரசின் புகைப்படப் பிரிவின் மூலமாக 7,000 படங்களை விலை கொடுத்து வாங்கி சேகரித்தேன். இதில் 700 அரிய நிழற்படங்களைக் கொண்டு நவீன வடிவமைப்பில் Jawaharlal Nehru – An Illustrated Biography என்ற நூலை எழுதி, தயாரித்தேன்.
அந்நூலுக்கு அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் அணிந்துரை எழுத வேண்டுமென்று விரும்பினேன். இதற்காக அவரை புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு. வி. நாராயணசாமி அவர்களுடன் சேர்ந்து சந்தித்து நூலின் பிரதியை வழங்கினேன். அந்நூலை முழுவதும் பார்த்த 20 நிமிடங்களுக்குப் பிறகு ‘இந்நூல் மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. அணிந்துரையும் எழுதுகிறேன், நூலை வெளியிடதயாராக இருக்கிறேன்’ என்று கூறினார். அதன்படி அவர் எழுதிய அணிந்துரையுடன் நூல் வெளியீட்டு விழா 27 மே 2018 அன்று தலைநகர் தில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் நடைபெற்றது.
இந்நூலை குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி வெளியிட, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் டாக்டர் அமீத் அன்சாரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்து குழும தலைவராக இருந்த திரு. என். ராம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் திரு. ப. சிதம்பரம், திரு. ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. டி. ராஜா மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
என் வாழ்க்கையில் அன்று மறக்க முடியாத நாளாகும். இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்த திரு. பிரணாப் முகர்ஜி அவர்களை என்றும் நன்றியோடு நினைவு கூர்வேன். அதேநேரத்தில், எனது ஆங்கில நூலுக்கு அவர் எழுதிய அணிந்துரையின் தமிழாக்கத்தை கீழே வழங்கியிருக்கிறேன். அதில், ஜவஹர்லால் நேரு குறித்து வெளிவந்த நூல்களிலேயே கருத்து ரீதியாகவும், நிழற்படத்தின் அடிப்படையிலும் இதுவரை இன்நூலைப் போல வெளிவந்ததில்லை என்று அவர் கூறியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அங்கீகாரமாக கருதுகிறேன். திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் வழங்கிய அணிந்துரையின் தமிழாக்கம் :-
” இந்திய தேசம் பெற்றுள்ள உயரிய தலைவர்களில் பண்டிட் ஜவஹர்லால் நேருவும் ஒருவர். அவர் மிகச்சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர்.உலக அரங்கில் முக்கியமான பங்கினை ஆற்றக்கூடிய வலிமைமிக்க, ஒற்றுமையான ஜனநாயக இந்தியாவைப் பற்றி அவர் கனவுகண்டார். வறுமை ஒழிப்பிற்கும், இளைஞர்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பதற்குமென விதியை எதிர்கொள்ளும் ஒரு வாய்ப்பினை (Tryst with destiny) அவர் நமக்கு அளித்தார்.
மாணவனாக இருந்த நாள்களில் இருந்தே எனக்கு அகத்தூண்டுதல் அளிப்பவவராக அவர் இருந்துவந்தார். அரசியல், தேசியம், உலக வரலாறு, வாழ்க்கைத் தத்துவம், இவை பற்றிய அவரது எழுத்துக்கள் என்னுடைய பொது வாழ்விற்கும், அரசியல் வாழ்விற்குமான மனநிலையை உருப்பெறச் செய்தன. நேருவிடமிருந்தும், அவருடைய போதனைகளிலிருந்தும் கற்றுக் கொண்டு, நம்முடைய இளைஞர்கள் இந்தியாவின் பெருமை மிகுந்த வரலாற்றை நன்கு அறிந்தவர்களாக ஆக முடியும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.
காங்கிரஸ் தலைவர் ஆ.கோபண்ணா அவர்கள் உருவாக்கியிருக்கும் ‘ஜவஹர்லால் நேரு – விளக்கப்படங்களுடன் கூடிய வாழ்க்கை வரலாறு’ எனும் நூல் பண்டித நேரு அவர்களின் கொள்கைகள், அவரது தலைமை, மனித குலத்திற்கு முழுமையான அவரது அர்ப்பணிப்பு, அவரது தியாகங்கள், நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைப்பதற்கு தடுமாற்றமில்லாத அவரது அர்ப்பணிப்பு ஆகியவை பற்றிய முழுமையான காட்சியை அளித்து அனைத்து வாசகர்களுக்கும் சத்தும், சாறும் உள்ள ஒரு வழிகாட்டியாக சேவைபுரியும் என்று நான் நம்புகிறேன்.
பொதுவாகவே, விளக்கப்பட வாழ்க்கை வரலாற்று நூல்கள் படங்கள் பற்றிய ஆழமும், விரிவும் உள்ள விளக்கங்களை அளிக்கத் தவறி விடுகின்றன. இதன் காரணமாக படிப்பவர்களுக்கு தெளிவற்ற தகவல்களே கிடைக்கின்றன. ஆனால், இந்தப் புத்தகம் படங்கள், அதற்கான விளக்கங்கள் ஆகிய இரண்டிலுமே ஊக்கம் தளராத வகையில் சிறப்புற அமைக்கப்பட்டு, வரலாற்று முக்கியத்துவம் உடைய கால வரிசை முறைப்படியான படத்தொகுப்பையும், நன்கு ஆராயப்பட்டு, செயல்திறத்துடன் தெளிவாகப் பேசக்கூடிய கட்டுரைகளையும் கொண்டதாகவும், பண்டிட் நேருவின் வாழ்க்கை, அரசியல் பயணம் ஆகியவை பற்றிய நுணுக்கமான விவரங்களையும் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.
ஜவஹர்லால் நேருவின் ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து திருப்புமுனையாக அமைந்த அவரது அரசியல் வெற்றிகள் வரை தனிச் சிறப்புமிக்க படங்கள், கவனமாக கைத்திறத்துடன் எழுதப்பட்டிருக்கும் விவரக்குறிப்புகள் ஆகியவற்றின் ஊடாக வரலாற்றின் அரிய நிகழ்வுகளுக்குள் வாசகர்களை இந்தப்புத்தகம் அழகுற அழைத்துச் செல்கிறது.
நேருவின் ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து (நவம்பர், 1889) தொடங்கி அவரது இறுதிப்பயணம் வரை இந்த நூல் பத்து வாழ்க்கைக் கட்டங்களைக் கொண்டதாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பண்டிட்ஜியின் வரலாற்றுப் பதிவுகள் நிறைந்த வாழ்க்கை இதில் 33 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. நேருவின் சிந்தனைகளான மதச்சார்பின்மை, வெளிநாட்டுக்கொள்கை, அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அவரது பங்கு ஆகியவை பற்றிப் பேசும்பகுதிகள் பெருந்தகைமையுடன் சொல்லப்பட்டிருப்பதை நான் மெச்சுகிறேன்.அறிவியலைப் பரப்புவதில் நேரு கொண்டிருந்த நம்பிக்கை, சுதந்திரமான இளைய இந்தியாவை தொழில்நுட்ப வளர்ச்சிப்பாதையில் கொண்டு செலுத்துவதற்கு அவருக்கிருந்த விடா முயற்சி ஆகியவற்றிற்கு சமமான உத்வேகம் தரப்பட்டுள்ளது.
தேசத்தில் அறிவியல் முன்னேற்றத்தைக் கொண்டு வருவது என்ற தன் இலக்கை அடைவதற்கு நேரு ஒரு பிரதமராக எப்படியெல்லாம் முயன்று உழைத்தார் என்பதை இந்தப்புத்தகம் சொல்வன்மையோடும், படங்கள் வாயிலாகவும் வெளிக் கொணர்ந்துள்ளது.
பக்ரா நங்கல் அணை கட்டப்பட்ட போது அந்த இடத்திற்கு நேரு தனிப்பட்ட முறையில் சென்றதையும், ஆரம்பகட்ட உருவாக்கத்தில் இருந்து வந்த பல்வேறு அறிவியல் அமைப்புகளுக்கும் அவர் சென்று வந்த படங்களையும் பதிவிட்டிருப்பதன் மூலம் இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் நினைவு உரிய விதத்தில் போற்றப்பட்டிருப்பதோடு, ஒரு அரசியல் தலைவராக ஒரு தனிப்பாங்குடன் நேரு செயலாற்றியதில் நம்முடைய ஆர்வத்தை மீண்டும் எழுப்புகிறது..
அனைத்திற்கும் மேலாக, நேரு மறைந்தபோது தேசத்தின் மன உணர்வுகளை இதுவரை எந்த ஒரு புத்தகமும் செய்திராத அளவிற்கு சிறப்பாக இந்த புத்தகம் சிறைபிடித்திருக்கிறது. நேரு உடல்நலக்குறைவு அடைந்தது, உடல்நலம் தேறி விடுமுறையைக் கழிப்பதற்காக சென்றது, உயிரிழந்தது, இறுதிச்சடங்கு, அவரது சாம்பல் இந்தியா முழுவதும் வலம் வந்தது ஆகிய ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாக வளர்ச்சி பெற்ற படிநிலைகளைப் பற்றிய நேர்முக வர்ணனைகளை . படங்களும் அவற்றோடு இணைந்திருக்கும் உரைகளும் வழங்குகின்றன.
என்னைப் பொறுத்தவரை இந்தப் புத்தகம் பழைய நினைவுகளின் பயணம். எளிய வாழ்க்கை வாழ்ந்து, ஏழைகள், விளிம்புநிலை மக்கள் ஆகியோருக்கான சமத்துவம், ஒப்புரவு என்ற ஒற்றை இலக்கிற்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பண்டித நேரு போன்ற உன்னதமான ஆளுமைகளின் காலத்தை இந்தப் பதிவுகள் எனக்கு நினைவூட்டுகின்றன. ஒரு அரசியல் மெய்ஞானியான அவர் வகுப்புவாதத்திற்கு எதிராகத் துணிவுடன் நின்றார்.
போற்றத் தகுந்த இந்தப்பணியைச் செய்து அதன் மூலம் இத்தகைய நினைவுகளைக் கிளர்ந்தெழ வைத்ததற்கு திரு. கோபண்ணாவிற்கு எனது நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்புத்தகம் பண்டித நேரு பயணித்த பாதையைப் பின்பற்றி நமது இளைஞர்கள், தேச நிர்மாணத்திற்கு தங்களது பங்களிப்பை செய்வதற்கு இந்தப் புத்தகம் ஊக்கம் அளிக்க வேண்டும் என்பது என் அவா.”
பிரணாப்முகர்ஜி
3 நவம்பர், 2017
10 ராஜாஜி மார்க், புதுதில்லி – 110 001.
திரு கோபண்ணா அவர்களுக்கு நேரு குடும்பத்தின் மீதுள்ள மிகுந்த பாசம் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள புகைப்படத்தில் காணலாம். அந்தளவு ஒவ்வொரு புகைப்படமும் எங்கும் கிடைக்காத வகையில் தேடி எடுத்தவை. இன்னும் ஏராளமான அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் அவரிடம் உள்ளன.
Shri. Pranab Mukherjee writing the foreword to the unique pictorial book ‘Jawaharlal Nehru – An Illustrated Biography’, edited and published by Mr. A. Gopanna is an acknowledgement of his sheer dedication to bring out the publication amid various difficulties. Pranab Da’s demise instantly reminded me of his gracious foreword to Mr. Gopanna’s book.
Equally memorable Sir, if I may point out on this occasion, Mr. Pranab Mukherjee, despite some reported differences with former Finance Minister, P Chidambaram, wrote a wonderful foreword to Shri Chidambaram’s book, published in 2018, titled ‘Speaking Truth to Power. My Alternative View” – a collection of his political essays and views. Pranab Da in that foreword to PC’s book wrote: “At a time when politics has increasingly become acrimonious, with people ready to abandon argument for innuendo, Chidambaram’s columns reinforce the importance of civility in public discourse and that criticisms must be directed towards policies and not personalities.” This memory also popped up as I happened to review Mr. Chidambaram’s book for the ‘Deccan Chronicle’.
It may be equally worth recalling here Sir, as a tribute to Pranab Babu, another incident in Tamil Nadu after he became President of India in July 2012. The Diamond Jubilee Celebrations of the Tamil Nadu Legislative Assembly was slated for November 30, 2012, when Ms. J. Jayalalithaa was the Chief Minister. The opposition DMK led by Kalaignar M Karunanidhi had then decided to “boycott” that function as, Kalaignar had said, “we have not been accorded due respect” by the ruling party in organising that function. Pranab Da had been invited as the Guest of Honour for that function in the Assembly, but for the DMK which played a key role in his Presidential election, to keep away from that event was painfully ironic, arising out of compulsions of State politics.
Pranab Da, coming to know of these developments, on his touch down in Chennai that day for the function, first drove straight to Mr. Karunanidhi’s CIT Nagar residence, greeted him, spent some time with the DMK patriarch and then went to the Assembly for the celebrations, sidestepping protocol.
Pranab Da’s statesman-like gesture that day demonstrated classical Tamil poet Saint Thiruvalluvar’s dictum that a discourtesy is gracefully returned with courtesy. In his thought-provoking speech in the Assembly that day, Mr. Mukherjee aptly described the State Assemblies as “cradles where great leaders are born.” One felt like sharing these memories on this occasion.
Yours sincerely,
M.R. Venkatesh / Sept 3, 2020