1944 ஆம் ஆண்டு ! ஆகஸ்டு திங்கள் 20 ஆம் நாள்! இந்திரா காந்தி ஃபெரோஸ் காந்தி தம்பதியருக்கு ராஜிவ் காந்தி தலைமகனாகப் பிறந்தார். ராஜிவின் பாட்டனாரான பண்டித ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்டத்தின் காரணமாக அப்பொழுது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பேரனைப் பார்க்கும் ஆவல் தாத்தாவுக்கு! மகனைத் தந்தைக்குக் காட்டும் ஆவல் அன்னை இந்திராவுக்கு ஒருநாள் அதிகாலை, ஜவஹர்லால் நேரு, கோவிந்து வல்லபபந்த் ஆகியோரைச் சிறையிலிருந்து போலீஸ்காரர்கள் ஒரு வேனில் ஏற்றிச் செல்லும்போது, தொலைவில் ஒரு தெருவிளக்கு கம்பத்தின் அடியில் இந்திரா காந்தியும் ஃபெரோஸ் காந்தியும் தங்கள் பச்சிளம் குழந்தை ராஜிவை வெளிச்சத்தில் சற்றே தூக்கிக் காட்டினார்கள். வேன் நின்ற ஒருசில நிமிடங்களில் பேரனை அருகில் சென்று பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் தொலைவிலேனும் பார்த்தோமே என்ற மகிழ்ச்சி மறுபுறம்.
சிறைக்குத் திரும்பியவுடன் நேரு நெகிழ்ச்சியுடன் எழுதினார். ‘என் பிரியமுள்ள இந்து, உன் மகனைப் பார்த்தேன் நம் குடும்பத்திற்குரிய அந்த ரோஜா நிறத்தையும், ஒளிவீசும் கண்களையும் கண்டேன்! அருகில் வந்து பார்க்க இயலவில்லை என்றாலும், அந்தப் பிஞ்சு முகத்தின் அழகில் நம் குடும்பத்தின் சாயலை முழுமையாகக் கண்டேன்” என்று கவிதை நயத்தோடு எழுதியிருந்தார்.
ராஜிவ், இந்தியாவுக்காகவே பிறந்தார், வாழ்ந்தார், மடிந்தார்.
அழுத்தமான பதிவு அண்ணா 🌿🍃
நன்றி!